Monday, January 25, 2016

உங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க

ஜல்லிக்கட்டு சபரிமலைக்கு
தடையும் உடையும் தமிழனுக்கே
என்று மாறிப்போனது பஜனைகள்

===============

2 பன்னு-ன்னா உங்க மனசுல என்ன தோணுது?

காதல் பண்ணு-னு கால் ஃபார் பண்ற மாதிரி


=============


3  டியர், என் கஷ்டத்தை உங்க கிட்டே எப்படி விளக்கறதுன்னே தெரியலை


 முதல்ல பாத்திரத்தை விளக்கு ( துலக்கு)அப்புறமா பொரணி பேசறதுல கலக்கு


===============

தலைவரே! பகுத்தறிவுக்கொள்கை உள்ள நீங்க ஏன் ராமானுஜர் சீரியல் எடுக்கறீங்க?

எப்டியாவது பணம் சம்பாதிக்கனும் என்பதே என் முதல் கொள்கை

===========

5 எம் பி யைப்பார்த்து முதுகெலும்பை உடைப்பேன்னு சொன்னீங்களா?

அவர் தான் கட்சியின் BACK BONEனு சொன்னாங்க


================


6 திமிங்கலம் 1 = டியர்.உன் முதுகுல ஏதோ ஒட்டி இருக்கே?

திமி 2= கரையோரம் ஒதுங்கினேன்.அம்மா ஸ்டிக்கர் ஒட்டி நடுக்கடல்ல.விட்டுட்டாங்க


=============

7 தெறி படத்துல ஹீரோயின் பேரு மஞ்சுளா ன்னு எப்டி சொல்றே?

ஹீரோ பேரு விஜய்குமார்.அப்போ ஹீரோயின் பேரு மஞ்சுளா தானே?


============

8 சார்.உங்க புதுப்படம் சத்ரியன் படத்தோட தழுவல் னு சொல்றாங்களே?

அது உண்மையா இருந்தா சத்"தெறி"யன் னு தான் டைட்டில் வெச்சிருப்பேன்?

===========

9 டாக்டர்.ரோஜா இதழை தினமும் கன்னத்துல தேய்ச்சுக்கிட்டா முக அழகு கூடுமாமே?

ஆமா.ஆனா ஆர் கே செல்வமணி அதுக்கு ஒத்துக்க மாட்டாரே?

===========

10 டியர்.நான் வைக்கும் முதல் பொங்கல் இதுதான்.எப்டி இருக்கு என் கன்னிப்பொங்கல்?

ரொம்ப கண்ணிப்போய் இருக்கே?நெய் ஊத்தலையா ?

=============


11 என்ன கீரை கொடுத்தீங்க பசு சோர்வா இருக்கு ?

அரைக்கீரை.
அட கஞ்சப்பிசினாரி.முழுக்கீரையும் கொடுத்தா என்ன?

=============

12 தலைவரே! எலக்சன் டைம்ல எதுக்கு மெக்கானிக் ஷாப்,மினரல் வாட்டர் கடை , கூரியர் சர்வீஸ் ஓப்பன் பண்ணுனீங்க?


மக்களுக்காக என்ன சர்வீஸ் பண்ணுனீங்க?ன்னா பைக்சர்வீஸ் , வாட்டர் சர் வீஸ்,கூரியர் சர்வீஸ்னு சமாளிக்கலாமே?

=


============

13 டாக்டர்.எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்கு.அது எப்போ விழிக்கும்?னு சொல்ல முடியுமா?


நீங்க தூங்குனா அது எந்திரிச்சுக்கும்னு நினைக்கறேன்


=============

14 எனக்கு 40% வாக்கு வங்கி இருக்கு.

தலைவரே! தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.66 கோடி.உங்க ட்விட்டர் பாலோயர்ஸே.10,000 பேர்தான்.கணக்கு உதைக்குதே?

==================

15 டியர்! என் பிரிவைத்தாங்கும் சக்தி இருக்கா உங்க கிட்டே?

90 கிலோ வெயிட் இருந்த உன்னையே தாங்கிட்டேன்.உன் பிரிவைத்தாங்க மாட்டேனா?


==============

16 டாக்டர்! என் புருசன் டெய்லி சரக்கு அடிச்சு ஆல்ஹகாலிக் பர்சன் ஆகிட்டாரு.

அப்போ டெய்லி FANTA.குடிக்கச்சொல்லுங்க.FANTASTIC PERSON ஆகறாரா பார்ப்போம்

===========


17 உன் ஆளு  மொடாக்குடிகாரனா இருப்பான்னு சந்தேகப்படறியா? ஏண்டி?

 ராவோடு ராவா ஊரை விட்டு ஓடிடலாமா?ன்னு கேட்கறான்===================


18  நான் ரசித்த முதல் ஆண் நீயே!!என் அன்பே!!💕

 அடிப்பாவி! அப்போ 2 வது  3 வதுன்னு லிஸ்ட் நீளுமா?


==================


19 உங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க. டவுன்லோடிக்கிறேன் :))

 மிஸ்! ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க? நானே ஒரு பாட்டுப்பாடறேன்,ரெடியா?


=====================


20  டியர்!Cap sleeve blouse போட்டுக்கிட்டா எனக்கு  நல்லாருக்குமா?

நல்லாருக்கும், ஆனா GAPல பார்க்கறவங்க க்ளாப்ஸ் அடிப்பாங்க, பரவால்லியா?


===========================

0 comments: