Saturday, February 07, 2026
Friday, February 06, 2026
BANK OF BHAGYALAKSHMI (2025)-கன்னடம்/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் காமெடி ட்ராமா)@அமேசான் பிரைம்
கார்வண்ணனின் பாலம் (1990),கே பாக்யராஜ் நடித்த ருத்ரா(1991),செல்வா நடித்த கோல்மால் திரைப்படம். (1998) ஆகிய படங்களை நினைவுபடுத்தும் திரைக்கதை அம்சம் கொண்ட காமெடி டிராமா இது.
பாலம் சீரியசான படம் என்றாலும் கதை ஒரே பாலத்தில் நடக்கும்.அதே போல ஒரே வங்கியில் முழுக்கதையும் நடக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
கர்நாடகா மாநிலத்தில் சட்டசபைத்தேர்தல் இன்னமும் சில நாட்களில் நடை பெற இருக்கிறது.வாக்காளர்களுக்குப்பணப்பட்டுவாடா செய்ய ஒரு கட்சி திட்டம் தீட்டுகிறது.அரசியல்வாதிகளின் கறுப்புப்பணம் ஒரு கிராமத்தில் உள்ள வங்கியின் பாதாள அறையில் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது
நாயகனும்,அவனது நண்பர்கள் நான்கு பேரும் சில்லறைத்திருடர்கள்.சின்ன சின்னத்திருட்டாக செய்து போர் அடித்து விட்டதால் ஒரு வங்கிக்கொள்ளை நிகழ்த்தத்திட்டம் போடுகிறார்கள்.கடை வீதியில் பொம்மைத்துப்பாக்கிகள் வாங்கிக்கொண்டு ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் கொள்ளை அடிக்க உள்ளே நுழைகிறார்கள்.
ஆனால் வங்கியில் பணம் இல்லை.லாக்கரிலும் நகைகள் எதுவும் இல்லை. அனைவருக்கும் ஏமாற்றம்.உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வேன் வாடகைக்குக்கூட கட்டுபடி ஆகவில்லை என கவுண்டமணி புலம்புவது போல நாயகனின் நிலைமை.
வங்கியை சுற்றி போலீஸ் ரவுண்ட் கட்டி விட்டது.ஊர் மக்கள் வெளியே திரண்டு நிற்கிறார்கள்.இப்போது நாயகன் எதேச்சையாக வங்கியில் ஒரு சுரஙக அறை இருப்பதைக்கண்டு பிடிக்கிறான்.அங்கே கோடிக்கணக்கான பணக்குவியல் இருப்பதைக்கண்டு மலைக்கிறான்.
மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் வருவது போல் நாயகனும் ,நண்பர்களும் பணத்தைக்கண்டு குதூகலித்துக்கொண்டாடிக்கொண்டு இருக்க பேங்க் மேனேஜர் சாமார்த்தியமாக சுரஙக அறையை மூடி லாக் செய்து விடுகிறார்.
நாயகி அந்த பேங்க்கில் அக்கவுண்ட்டண்ட் ஆகப்பணி புரிபவர்.நாயகனை முதன் முதலாக அன்று தான் பார்க்கிறார்.நாயகனுக்கு நாயகியைக்கண்டதும் காதல்..ஆனால் நாயகிக்கு நாயகனை சுத்தமாகப்பிடிக்கவில்லை.
ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் நாயகி நாயகனுக்கு உதவுகிறார்.எதற்கு? நாயகன் பணத்துடன் தப்பிக்க முடிந்ததா? அரசியல்வாதிகள் திட்டம் என்ன ஆனது?என்பதை எல்லாம் மீதித்திரைக்கதையில் விளக்கி இருக்கிறார்கள்.
நாயகன் ஆக தீட்சித் ஷெட்டி நடித்திருக்கிறார்.காமெடி செய்வது,காதலிப்பது ,போலீசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என அவருக்குப்பல வேலைகள்.கச்சிதம்.
நாயகி ஆக பிருந்தா ஆச்சர்யா நடித்திருக்கிறார்.தோற்றத்தில் தில் பட லைலா +இது நம்ம ஆளு ஷோபனா சாயலில் இருக்கிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.சில இடஙகளில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது..
கன்னடத்தில் பிரபல காமெடியன் ஆன சாது கோகிலா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆக கொஞ்சம் சிரிப்புக்காட்டினாலும் அவருக்குக்காட்சிகள் அதிகம் இல்லை.
கொள்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் விஸ்வநாத் மண்டாலிகாவிடம் போலீஸ் தோரணை,கெத்து ,உடல் மொழி எதுவுமே இல்லை.போதாக்குறைக்கு போலீஸ் கட்டிஙக் ஹேர் ஸ்டைலும் இல்லாமல் கடுப்படிக்கிறார்.
ஸ்ருதி ஹரிஹரன் கெஸ்ட் ரோலில் வருகிறார்
மற்ற அனைவரும் சராசரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்
ஜூடா சாந்தி தான் இசை.2 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை ரொம்பவே சுமார்தான்.
ஒளிப்பதிவு அபிசேக் ஜி காசர்கோட்.பரவாயில்லை ரகம்
தேஜாசின் எடிட்டிஙகில் படம் 142 நிமிடஙகள் ஓடுகிறது.
கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிசேக் மஞ்சு நாத்
சபாஷ் டைரக்டர்
1 ஒரே வங்கி லொக்கேசனில் 10 பேரை வைத்து முழுப்படத்தையும் முடித்த சாமார்த்தியம்
2 ராபரி திரில்லர் படத்தில் சாமார்த்தியமாக காதலை. நுழைத்த விதம்
3 முதல் பாதியில் ஒர்க் அவுட் ஆன காமெடி சீக்வன்ஸ்
ரசித்த வசனங்கள்
1தீப்பெட்டி இருந்தாதான் பீடி ,சிகரெட்க்கு மதிப்பு.ரவுடி ,திருடன் இருந்தாதான் போலீஸ்க்கு மதிப்பு
2 அது ரப்பர்ஸ் இல்லை.ராபர்ஸ்
3 லாக்கரை ஓப்பன் பண்ணு
அது ஆல்ரெடி ஓப்பன் ல தான் இருக்கு
4 இந்தத்துப்பாக்கி ரேஷன் கடைல வாங்குனதா?
5. கொள்ளையர்கள் என்ன டிமாண்ட் பண்ணி இருக்காஙக?
பிச்சைக்காரப்பசஙக.சாப்பாடு வேணுமாம்.
6 தூங்கிட்டு இருந்த சிங்கத்தைத்தட்டி எழுப்பினா என்ன ஆகும்?
ஒண்ணும் ஆகாது,சிங்கம் எந்திரிக்கும்
7 நான் சிங்கம் இல்லை,கரடி.என் காதலி சொல்வா
8 எனக்கு இன்ஸ் டா வில் 10 லட்சம் பாலோயர்ஸ் இருக்காஙக
அவ்ளோ பேரா வேலை வெட்டி இல்லாமல் இருக்காஙக ?
9 நான் கேஷியர்
இந்த பேங்க்ல கேஷே இல்லை.எதுக்கு கேசியர்?
10 என் பேரு கனகராஜ் தான் என்பது உனக்கு எப்படித்தெரியும்?
இந்தக்கனகராஜை சீண்டாதீங்கன்னு நீங்கதானே பஞ்ச் டயலாக் பேசுனீங்க?
11 இந்தத்துப்பாக்கி விலை ரூ 30,000 தானா? ரொம்ப சீப்பா இருக்கே?
ஒரு நாள் வாடகை
12 பேங்க் கொள்ளை ஏன் நியூஸ் ல வர்லை ?
இப்ப யாரு நியூஸ் பார்க்கறாங்க?எல்லாம் ரீல்ஸ் தான் பார்க்கறாங்க
13 ஒரு போலீசை விட ,லாயரை விட அதிகமா யோசிச்சாதான் பிரஸ் ரிப்போர்ட்டர் ஆக முடியும்
14 மக்கள் பணம் சம்பாதிக்கக்கஷ்டப்படறாங்க.பணக்காரஙக பணத்தைப்பாதுகாக்கக்கஷ்டப்படறாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கோடிக்கணக்கான பணத்தைப்பதுக்கி வைக்கும் அரசியல்வாதிகள் அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளே செய்து வைக்கவில்லையே? பேங்க் மேனேஜரே அபேஸ் செய்தால் என்ன செய்வாங்க?
2 முதல்வர் லெவலில் அந்தக்கறுப்புப்பணத்தில் சம்பந்தம் இருக்கும்போது ஒரு சாதா இன்ஸ்பெக்டர் மட்டும் டீல் செய்வது நம்ப முடியவில்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி காமெடி ,கலாட்டா,பின் பாதி ராபரி திரில்லிங் என பரபரப்பாகப்போகிறது.பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.25 /5
| Bank of Bhagyalakshmi | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Abhishek Manjunath |
| Written by | Abhishek Manjunath |
| Screenplay by | Abhishek Manjunath |
| Story by | Abhishek Manjunath |
| Produced by | H. K. Prakash |
| Starring | Dheekshith Shetty Brinda Acharya |
| Cinematography | Abhishek G. Kasaragod |
| Edited by | Tejas R |
| Music by | Judah Sandhy |
Production company | |
Release date |
|
Running time | 142 minutes |
| Country | India |
| Language | Kannada |
Thursday, February 05, 2026
THE BIG FAKE (2026)- ஆங்கிலம்-சினிமா விமர்சனம் (க்ரைம் ட்ராமா)@நெட்பிளிக்ஸ்
1970 களில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது. ஆண்ட்டோனியோ டோனி சிச்சியாரெல்லி 1948ல் இத்தாலியில் பிறந்தான்.1970ல் இவன் சின்ன சின்ன க்ரைம்களில் ஈடுபட்டான்.அவனது வாழ்க்கை சம்பவங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சம்பவங்கள் தான் இதன் திரைக்கதை.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மிகச்சிறந்த ஓவியன்.பென்சில் டிராயிங்க்,பெயிண்ட்டிங்க் உட்பட பல்வேறு ஓவியத்திறமை கொண்டவன்.இவன் வீடு முழுக்க ஓவியங்களாலும்,பெயிண்ட்டிங்க்ஸ் கலெக்சன்களாலும் நிரம்பி இருக்கும்.ஆனால் இவ்வளவு திறமை இருந்தும் இவனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்ற மனக்குறை இவனுக்கு உண்டு.
நாயகி ஒரு ஆர்ட் கேலரி வைத்திருக்கிறாள்.ஒரு முறை நாயகன் வீட்டுக்கு வருகிறாள்.அவனது அசாத்தியமான ஓவியத்திறமை கண்டு வியக்கிறாள்.
ஒரு புகழ் பெற்ற ஓவியத்தைக்காட்டி இதே போல் போலியாக ஒரு ஓவொயத்தை வரைந்து தர முடியுமா? எனக்கேட்கிறாள்.குரு சிஷ்யன் படத்தில் ரஜினி காமெடியாக சொல்வாரே?இதெல்லாம் ஒரு பூட்டா?ஜூ ஜூபி மேட்டர் என்பாரே அதே போல் நாயகன் அசால்ட் ஆக அச்சு அசலாக அந்த ஓவியத்தை வரைந்து தருகிறான்.
நாயகி பிரமித்து விடுகிறாள்.லட்சக்கணக்கான ரூபாய் விலைக்கு அது சேல்ஸ் ஆகிறது.நாயகிக்கு அந்தப்பணத்தில் 30% கிடைக்கிறது.நாயகனுக்கு அவள் 10% தருகிறாள்.
பின் இதுவே வழக்கம் ஆகிறது.புகழ் பெற்ற ஓவியங்களின் மாதிரியை நாயகி தர நாயகன் அதை வரைய இருவரும் செல்வத்தில் கொழிக்கிறார்கள்.
நாயகன் நாயகியிடம் நாம் திருமணம் செய்து கொள்வோமா?எனக்கேட்கிறான்.ஆனால் நாயகி எனக்குக்காதல் ,திருமணம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை என நாயகனின் காதலை நிராகரிக்கிறாள்.
ஆனாலும் இருவரும் நெருக்கமாகப்பழகுகின்றனர்.நாயகி கர்ப்பம் ஆகிறார்.
இந்த மாதிரி வாழ்க்கை சுமூகமாகப்போய்க்கொண்டிருக்கும்போது ஒரு கேங்க்ஸ்டர் கும்பல் நாயகனை அணுகுகிறது.போலியான டாகுமெண்ட்ஸ்,போலி பாஸ்போர்ட் போன்றவை தயாரிக்க நாயகனின் உதவியை நாடுகிறது.
நாயகனின் போக்கு நாயகிக்குப்பிடிக்கவில்லை.நாயகனை விட்டுப்பிரிகிறாள்.
புது கேங்க்ஸ்டர் குழுவின் சகவாசத்துக்குப்பின் நாயகனின் நெருங்கிய நண்பன் கொலை செய்யப்படுகிறான்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக பியட்ரோ காஸ்ட்டலிட்டோ பிரமாதமாக நடித்திருக்கிறார்.அவரது கெட்டப்பும் ,உடல் மொழியும் அருமை.
நாயகி ஆக ஜூலியா மைக்கேலினி அழகுப்பதுமையாக வருகிறார்.பிரேக்கப் செய்து பிரியும் காட்சியில் சோக நடிப்பை வழஙகி இருக்கிறார்.
வில்லன்களாக ,நண்பர்களாக நடித்த அனைவருமே அவரவர் பாத்திரஙகளை சரியாக ஏற்று நடித்திருக்கிறார்கள்.
எமானுவேல் பாஸ்குட் தான் ஒளிப்பதிவு.அந்தக்கால கலர் டோனை சரியாக செட் செய்து இருக்கிறார்.
பின்னணி இசை ,எடிட்டிஙக்,ஆர்ட் டைரக்சன் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் குட்
ஸ்டெபனோ லோடோவிச்சி தான் இயக்கம்
சபாஷ் டைரக்டர்
1 உண்மைக்கதை என்பதால் காட்சிகளில் ஒரு நம்பகத்தன்மை
2 க்ரைம் ட்ராமாவாக இருந்தாலும் நட்பு,காதல் செண்ட்டிமெண்ட் சீன்கள் நிறைத்து வைத்தது
ரசித்த வசனங்கள்
1 அன்பு தான் வலிமையான ஆயுதம்
2 புரளி என்பது பேய் மாதிரி.தரைல நிக்காம சுத்திக்கிட்டே இருந்தாதான் நம்புவாஙக
3 மறுபடி எதுக்கு இங்கே வந்திருக்கே?
உன் கிட்டே மன்னிப்புக்கேட்க
உலகில் உள்ள எல்லா மன்னிப்புகளையும் கொண்டு வந்து கொட்டினாலும் பத்தாது
4 இந்த ஒரிஜினல் டிராயிங்க் மாதிரியே வரைய முடியுமா?
ஒரிஜினலை விட சிறப்பா வரைவேன்
5. உன் கார் எங்கே?
காரா? என் கிட்டே சைக்கிள் தான் இருக்கு.
அப்போ திருட்டு பயம் இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியுடன் உண்மையான காதலில் இருப்பதாக சொல்லும் நாயகன் இன்னொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருப்பது எப்படி?
2 நாயகன் ,,நாயகி பிரிவுக்குப்பின் திரைக்கதை படுத்து விடுகிறது.நம்மைப்படுத்தி எடுக்கிறது
3 வில்லன் கும்பல் நாயகனைக்கொலை செய்ய வாய்ப்புக்கிடைத்தும் அவன் கைகளை மட்டும் தாக்கி ஓவியம் வரையாமல் செய்வது நம்ப முடியவில்லை.எதுக்கு இரக்கம் காட்டனும்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - உண்மை சம்பவங்கள் கொண்ட க்ரைம் ட்ராமா ரசிகர்கள் பார்க்கலாம்.ஒரே ஒரு 18+ காட்சி இருக்கிறது.ரேட்டிங்க் 2.25 /5
Wednesday, February 04, 2026
VALATHU VASHATHE KALLAN (2026) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் திரில்லர் )
திரிஷ்யம் (பாபநாசம் ) படத்தின் மெகா ஹிட்டுக்குப்பின் அதன் இயக்குனர் ஜீத்து ஜோசப்க்கு ஒரு பிராண்ட் வேல்யூ உருவாகி விட்டது . அவர் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் க்காக கை தட்டும் ஒரு ஆடியன்ஸ் க்ரூப் உருவாகி விட்டது . அப்படிப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் லேட்டஸ்ட் ஆக 30/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் வலது வசத்தே கள்ளன் ( நம் அருகிலேயே திருடன் ). கேரளாவில் மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படம் ஆங்கில சப் டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டர் . இவர் ஊழல் கறை படிந் தவர் . பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் ஸ்டேசனில் வந்து புகார் கொடுக்கும்போது குற்றம் செய்தவர் செல்வாக்கு மிக்கவர் ஆக இருந்தால் அவரிடம் லஞ்சம் பெற்று அவரைக்காப்பாற்றி விடுபவர் . வில்லனுக்கு ஒரு மகன் இருக்கிறான் . அவன் அப்பா பேச்சைக்கேட்காமல் , அப்பாவை மதிக்காமல் வளர்பவன். வில்லனின் மனைவி குழந் தையைப்பிரசவித்தவுடன் இறந்து விடுவதால் ஒரு வித வெறுப்புடன் தான் வில்லன் தன மகனை வளர்க்கிறான்
நாயகன் தன மனைவி , மகள் உடன் ஒரு சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வருகிறான் . நாயகனின் மகள் காணாமல் போக அது பற்றி புகார் தர நாயகன் போலீஸ் ஸ்டேஷன் வருகிறான் .அங்கே வில்லனைப்பார்க்கிறான் . தன மகள் காணாமல் போனதற்கு வில்லன் எதோ ஒரு வகையில் காரணம் என்பதை நாயகன் கண்டு பிடிக்கிறான் .
வில்லனின் மகனைக்கடத்தி ஒரு இடத்தில் அடைத்து விட்டு வில்லனுக்கு ஒரு வீடியோ அனுப்புகிறான் . அதில் நீ இதுவரை செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆகி விட் டால் உன் மகனை உயிருடன் பார்க்க முடியும் என தகவல் அனுப்பி விட்டு நாயகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்.
இதற்குப்பின் வில்லன் தன மகனை உயிருடன் மீட்டானா? என்பது மீதி திரைக்கதை
வில்லன் ஆக பிஜூ மேனன் படம் முழுக்க பிரேம் பை பிரேம் தன வில்லத்தன நடிப்பால் நம் மனதை ஆக்ரமிக்கிறார் .மகனிடம் அவர் வைத்திருக்கும் பாசம் , அவன் அடங்காமல் இருப்பது எல்லாம் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது
நாயகன் ஆக ஜோ ஜூ ஜார்ஜ் கெஸ்ட் ரோலில் வருகிறார் . சிறிது நேரமே வந்தாலும் நம் மனதில் தங்கி விடுகிறார் . நாயகனின் மனைவி ஆக லீனா கச்சிதம் மற்ற அனைத்துக்கேரக் டர்களும் கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள்
விஷ்ணு ஷியாமின் இசை கனகச்சிதம் . குறிப்பாக பின்னணி இசையில் டெம்ப்போ ஏற்றுகிறார் .சதீஷ் குருப்பின் ஒளிப்பதிவு அருமை . வி எஸ் விநாயக்கின் எடிட்டிங்கில் படம் 135 நிமிடங்கள் ஓடுகிறது . இடை வேளை க்குப்பின் வரும் ஒரு மணி நேரம் ஸீட் எட்ஜ் திரில்லர் தான் . கதை , திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் ஜீத்து ஜோசப்
சபாஷ் டைரக்டர்
1 பிள்ளை வளர்ப்பு எப்படி இருக்கணும் என்ற நல்ல மெசேஜ் சொல்லப்பட் ட விதம்
2 ஓப்பனிங்க் சீனில் போலீஸ் ஸ் டே சனில் பாதிக்கப்பட் ட மாணவி தன அம்மாவுடன் வந்து புகார் கொடுக்க வர வில்லன் பழியை அந்த மாணவி மீதே சுமத்தி கேஸை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பும் சீன பரபரப்பு
3 பொதுவாக பெண் குழ ந்தைகளை எப்படிப்பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். இதில் அந்த குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று பேரண்ட்டிங்க் பற்றி சொன்ன விதம் அருமை
4 படத்தின் பெரும்பாலான காட் சிகள் ஒரே ஒரு போலீஸ் ஸ் டேசனில் நடப்பதாக சொல்லப்பட்டு இருப்பதால் லோ பட்ஜெட் படம் இது
5 கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதிகாரிக்கு ஒரு பிரச்சனை என்றதும் எப்படி சக போலீஸ் ஆபீசர்ஸ் ஒத்துழைப்பு தருகிறார்கள் எனக்காட்டிய விதம்
ரசித்த வசனங்கள்
1 பெற்றவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் பிள்ளைகள் இப்போது அபூர்வம்,
2 பிள்ளை வளர்ப்பு ரொம்ப முக்கியம் , கண்டிக்க வேண்டிய வயதில் கண்டித்து நம் கட்டுப்பாட்டில் பிள்ளைகளை வளர்க்கணும்
3 குற்றவாளிகளில் இரு வகை , மூளை பிசகுவதால் பிறக்கும்போதே குற்றவாளிகளாகப்பிறப்பவர்கள் . சந்தர்ப்ப சூழ் நிலைகளால் குற்றவாளிகளாக ஆக்கப்படுபவர்கள்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் விஷம் குடித்து விட்டதாக சொன்னதும் வில்லன் உடனே அவனை ஆஸ்பிடலில் அட்மிட் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . வில்லனின் மகனை நாயகன் அடைத்து வைத்த இடம் நாயகனுக்கு மட்டுமே தெரியும் . அப்படி இருக்க நாயகனை சாக விடலாமா?போலீஸ் ஸ்டேசனில் அத்தனை போலீஸ் இருந்தும் யாரும் ஆம்புலன்சுக்கு போன் செய்ய முயற்சிக்க வில்லை ., இது ஏன் ?
2 வில்லனின் மகன் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டு அவனிடம் ஒரு பேசிக் மாடல் செல் போன் இருப்பது எல்லாம் 2010ம் ஆண்டில் வெளிவந்த பரீடு(BURRIED) ஹாலிவுட் படத்தில் இருந்து எடுத்த்திருக்கிறார்கள்
3 கதையில் பாதிக்கப்பட்ட நல்லவர்கள் எல்லாரும் கொலை செய்யப்படுகிறார்கள் , அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள் . இது நெகடிவ் எனர்ஜி யைப்பரப்புவது போல் இருக்கிறது
4 வில்லனின் மகனின் உயிருக்கு ஆபத்து , அவனை எப்படிக்காப்பாற்றப்போகிறார்கள் ?என்பது தான் பின் பாதி திரைக்கதையின் விறுவிறுப்பு .ஆனால் வில்லனும் கெட்டவன் , வில்லனின் மகனும் கெட்டவன் என்பதால் நமக்கு அதில் ஆர்வம் இல்லை
5 க்ளைமாக்சில் போன் நெம்பர்ஸை வைத்து வில்லன் கண்டு பிடிக்கும் ஒரு விஷயம் 2001 ல் வெளி வந்த எ பியூட்டிபுல் மைண்ட்( A BEAUTIFUL MIND ) படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இருக்கிறார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - திரிஷ்யம் லெவலுக்குப்பிரமாதமான படம் எல்லாம் இல்லை என்றாலும் டீசண்ட் ஆன ஒரு க்ரைம் திரில்லர் என்ற அளவில் பார்க்க வேண்டிய படம் தான் இது ., ரேட்டிங்க் 3 / 5
Theatrical release poster | |
| Directed by | Jeethu Joseph |
|---|---|
| Written by | Dinu Thomas Eelan |
| Produced by | Shaji Nadesan |
| Starring | |
| Cinematography | Satheesh Kurup |
| Edited by | V. S. Vinayak |
| Music by | Vishnu Shyam |
Production companies |
|
| Distributed by | Goodwill Entertainments |
Release date |
|
Running time | 135 minutes[1] |
| Country | India |
| Language | Malayalam |
Tuesday, February 03, 2026
THE RIP (2026)-அமெரிக்கன் மூவி-சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் திரில்லர் @நெட் பிளிக்ஸ்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன்,நாயகி,நாயகியின் காதலன் ,நாயகனின் தம்பி ,வில்லன் இவர்கள் அனைவரும் அரசுப்பணியில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் பணி பிரிகிறார்கள்.நாயகி தான் அந்த டீமின் கேப்டன்.
ஒரு வீட்டில் 2 கோடி டாலர் மதிப்பிலான கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாயகிக்கு தகவல் கிடைக்கிறது.நாயகி தனியாக அந்த இடத்துக்குப்போக முயல்கையில் அந்தப்பணத்தைக்களவாட திட்டம் போட்ட வில்லன் இன்னொரு ஆளின் உதவியோடு நாயகியைக்கொலை செய்து விடுகிறான்.
விசாரணை நடக்கிறது.நாயகன் ,நாயகியின் காதலன் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கின்றனர்.உடன் பணிபுரியும் நபர் தான் வில்லன் என்பதும் அந்த வில்லன் யார் என்பதும் இருவருக்கும் தெரியாது.
இறக்கும் முன் நாயகி நாயகனுக்கு பணம் இருக்கும் இடம் பற்றி செல்போனில் தகவல் அனுப்பு இருந்தாள்.அதன் அடிப்படையில் நாயகன் தலைமையில் ஒரு டீம் களம் இறஙகுகிறது.அந்த டீமில் வில்லனும் இருப்பது யாருக்கும் தெரியாது.
அந்த குறிப்பிட்ட வீட்டை முற்றுகை இட்ட அந்த டீம் அங்கே ஒரு பெண் மட்டும் தனிமையில் இருப்பதைப்பார்க்கிறார்கள்.அவளிடம் விசாரித்தால் அவளுக்கு விபரம் எதுவும் தெரியவில்லை.இது என் பாட்டி வீடு.அவர் இறந்து விட்டார் ,நான் தான் இப்போது தனியாக இருக்கிறேன் என்கிறாள்.
வீட்டை சோதனை இட்ட போது பண்டல் பண்டல் ஆக கறுப்புப்பணம் பிடிபடுகிறது.
இப்போது நாயகன் யார் வில்லன் என்பதைக்கண்டு பிடிக்க ஒரு ட்ரிக் செய்கிறான்.அந்த ட்ரிக் என்ன?அதில் நாயகன் வெற்றி பெற்றானா? என்பது மிச்சம் மீதித்திரைக்கதை.
நாயகி ஆக கெஸ்ட் ரோலில் வருகிறார் லினா எஸ்கோ.இவர் இயக்குநர் கம் தயாரிப்பாளரும் கூட (இந்தப்படத்துக்கு அல்ல).
நாயகன்,வில்லன் ,நாயகியின் காதலன் மூவர் நடிப்பும் கச்சிதம்.நாயகனுக்கும்,நாயகியின் காதலனுக்கும் நடக்கும் ஆக்சன் சீக்வன்ஸ் அருமை.மற்ற அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கறுப்புப்பணம் இருக்கும் வீட்டில் வசிக்கும் பெண்ணாக வருபவர் இந்தியப்பெண்ணின் சாயலில் இருப்பது வியப்பு.
மைக்கேல் மெக்ரேல் + ஜோ காமன் இருவரும் இணைந்து கதை எழுத ஜோ காமன் தனித்து திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு ஜான் மைக்கேல்.பெரும்பாலான படக்காட்சிகள் இரவு நேரத்தில் வருவதால் கேமராமேனுக்கு சவாலான வேலைதான்.
க்ளிண்ட்டன் சார்ட்டர் தான் இசை.பின்னணி இசையில் தேவையான விறுவிறுப்பைக்கொடுத்து இருக்கிறார்.
கெவின் ஹலெ வின் எடிட்டிஙகில் படம் 113 நிமிடஙகள் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 ஒரே வீட்டில் ஒரே இரவில் நடக்கும் கைதி பட டைப் கதை என்பதால் சுவராஸ்யம் கூடுகிறது.அனேகமாக லோகேஷ் கனகராஜ் இதை பட்டி டிங்கரிங் செய்ய வாய்ப்புண்டு
2. வில்லன் யார் என்பதை அறிய நாயகன் பிடிபட்ட பணத்தின் மதிப்பை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேறான தொகையைக்கூற வில்லன் மாட்டும் சீன் குட் ஐடியா
3 கிட்டத்தட்ட 2 மணி நேரப்படம் என்றாலும் எங்கும் போரடிக்கவில்லை
ரசித்த வசனங்கள்
1அதிகாரிகளே திருடர்களாக இருப்பதுதான் பெரும்பாலும் நடக்குது.
2 குட்டையைக்குழப்பி தூண்டிலைப்போட்டால் மீன் சிக்கும்
3 இன்னும் ஒரு சூரிய உதயத்தைப்பார்ப்பதற்காக வாழ் ( இதே டைப் டயலாக்கை அமரர் சுஜாதா தில்சே (உயிரே) படத்தில் எழுதி இருப்பார்.நீ பார்க்கும் கடைசி சூர்யோதயம் இது தான்.
4 எல்லாப்போலீசாரோட மூளையும் ஒண்ணுதான்.நாங்க ஏதோ தப்புப்பண்ணிட்டோம்னு எங்களையே நம்ப வைக்கற மாதிரி பண்றீஙக
5 பிரார்த்தனைகள் ,நல்ல எண்ணங்கள் இவற்றைப்பணமா மூத்த முடியுமா?
6 எங்க மேல நம்பிக்கை இல்லையா?
பணத்து மேல நம்பிக்கை இல்லை
7 ஒரு போலீசைக்கொல்ல பெரிய விலை கொடுக்கனும்
8 பொய் சொல்வது ஒரு கலை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங ஷாட்டில் நாயகியை இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தும்போது நாயகி தப்ப வழி பார்க்காமல் செல் போனில் உயர் அதிகாரிக்கு மெசேஜ் அனுப்புகிறாரே?பாதுகாப்பான இடத்தில் ஒளிந்த பின் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?
2 கறுப்புப்பணம் பிடிபட்டதும் நாயகன் சக ஊழியர்கள் அனைவரிடமும் செல் போனை வாங்கிக்கொள்கிறான்.அப்போது வில்லன் ஒரு செல்போனைத்தந்து விட்டு ரகசிய போனை பதுக்கி வைக்கிறான்.நாயகன் எல்லோரையும் செக் செய்திருக்கலாமே?எக்ஸ்ட்ரா போன் யாரிடமாவது இருக்கிறதா?என? (வில்லனைப்பிடிக்க அது தான் டிராப் எனில் ஹவுஸ் ஓனர் ஆன அந்த லேடியிடம் போன் வாங்கி இருக்கத்தேவை இல்லையே?அவள் தான் கட்டப்பட்டு இருக்கிறாளே?)
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+ அடல்ட் கண்டெண்ட் எதுவும் இல்லை.வார்த்தைப்பிரயோகஙகளில் மட்டும் எல்லை மீறல் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மெதுவாக நகரும் க்ரைம் ஆக்சன் திரில்லர்.வீச்சு குறைவு,பேச்சு அதிகம்.ஆனால் போர் அடிக்கலை.பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.75 /5
| The Rip | |
|---|---|
Release poster | |
| Directed by | Joe Carnahan |
| Screenplay by | Joe Carnahan |
| Story by |
|
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | Juan Miguel Azpiroz |
| Edited by | Kevin Hale |
| Music by | Clinton Shorter |
Production company | |
| Distributed by | Netflix |
Release date |
|
Running time | 113 minutes[2] |
| Country | United States |
| Language | English |
| Budget | $100 million[3] |
Monday, February 02, 2026
SARVAM MAYA (2025)-சர்வம் மாயா -மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ரொமாண்டிக் காமெடி ட்ராமா)@ஜியோ ஹாட்ஸ்டார்
25/12/2025 அன்று வெளியாகி மெகா ஹிட் ஆகி 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த இந்தப்படம் நிவின் பாலிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.இப்போது 30/1/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிஙகில் கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு வசதியான நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவன் . அப்பா பூஜை , புனஸ்காரம் என்று இருக்க , 18 வது வயதில் அம்மா திடீர் என இறந்து விட்டதால் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகன் ஆகிறான் .குடும்பத்தைப்பிரிந்து நகரத்துக்கு வருகிறான் கிதார் வாசிக்கும் கலையைக்கற்று சினிமாவில் சாதிக்கும் ஆசையை வளர்த்துக்கொள்கிறான் . ஆனால் சான்ஸ் கிடைக்கவில்லை . ஒரு கட்டத்தில் வருமானத்துக்காக சொந்த ஊருக்கு திரும்ப வருகிறான் . இரண்டு மாதங்கள் இங்கே இருந்தாக வேண்டிய சூழல் .
அப்போது ஒரு வீட்டில் ஒரு பையனுக்குப் பேய் பிடித்து விட்டது எனவும் . அந்தப்பேயை ஓட்ட வேண்டும் எனவும் நாயகன் அழைக்கப்படுகிறான் . அங்கே போய் பூ ஜை செய்யும்போது பாதியிலேயே திடீர் என அந்தப்பையனுக்கு குணம் ஆகி விடுகிறது . நாயகன் வீட்டுக்குத்திரும்பி விடுகிறான் .
ஆனால் அன்று இரவில் இருந்து நாயகன் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் உருவாகிறது . நாயகன் வீட்டில் அவனது அறையில் ஒரு இளம் வயது பெண் பேய் அவன் கண்களுக்குத்தெரிகிறது .
வழக்கமான பேய்கள் போல அது அவனை பயமுறுத்தவில்லை , கோர முகம் கா ட்ட வில்லை , ஒரு தோழியைப்போல பழகுகிறது
ஆரம்பத்தில் தயங்கிய நாயகன் பின் அந்தப்பெண் பேயுடன் சகஜமாகப்பழகி ஆரம்பிக்கிறான் . அந்தப்பெண் பேய்க்கு தன பெயர் என்ன? தான் எதனால் இறந்தோம் என்பது தெரியவில்லை
உன்னிடத்த்தில் என்னைக்கொடுத்தேன் படத்தில் கார்த்திக் ரோஜாவுக்கு பாடகி ஆக உதவுவது போல அந்தப்பெண் பேய் நாயகன் சினிமாவில் கிடாரிஸ்ட் ஆக உதவுகிறது
சினிமாவுக்கு கிடார் வாசிக்க மும்பை போகும் சூழலில் நாயகனுக்கு ஒரு பெண்ணின் நட் புக்கிடைக்கிறது . அது காதலாக உருமாறும் வேளையில் அந்தப்பெண் பேய்க்கு பொஸசிவ்னெஸ் வருகிறது . ஐ லவ் யூ சொல்கிறது .
அந்தப்பெண் பேயின் முன் கதை என்ன? நாயகன் என்ன முடிவு எடுத்தான் ? என்பது மீதித்திரைக்கதை
சபாஷ் டைரக்டர்
1 பயமுறுத்ததும் பேய் , காமெடிப்பேய் வரிசையில் ஒரு பீல் குட் ரொமாண்டிக் பேய் கேரக்ட்டர் அருமை
2 முதல் 30 நிமிடங்கள் மெதுவான திரைக்கதையில் அனைத்துக்கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்து அவர்களோடு ஆடியன்ஸுக்கு எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம்
3 யாரம் எதிர்பாராத க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
ரசித்த வசனங்கள்
1 பொதுவாக சிடுமூஞ்சிகளாக இருக்கும் அப்பாக்கள் அறுபது , எழுபது வயசுல பாசத்துக்கு ஏங்குவாங்க
2 பணம் இன்னைக்கு வரும் , நாளைக்குப்போகும்
நாளைக்குப்போக இன்னைக்கு இன்னமும் பணம் வரலையே?
3 நம்மை நல்லபடியா பார்த்துக்கறதுக்கும்,நம்ம கிட்டே அன்பு காட்டிடவும் ஒரு ஆள் வேணும்
4 கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு பார்க்கிற பொண்ணுங்க எல்லாரும் அழகாக இ ருப்பதாத்தான் தோணும்
5 நல்ல தூக்கத்தை விட சிறந்த மருந்து வேற எதுவும் இல்லை
6 பெரியப்பா , என் ரூமுக்கு ஒரு பெண் பேய் வருது
அடுத்த டைம் வந்தா என் ரூம்க்கு அனுப்பு , பேச்சுத்துணைக்கு ஆகும்
7 ஒருத்தரோட பிரச்சனை பண்ணிட்டு அப்படியே மெயிண்ட் டெ யின் பண்றது கஷ்டம் ஆகிடும்
8 உன் குரல் அருமை , நீ மட்டும் சாகாம இ ருந்திருந்தா பெரிய ஸ்டார் ஆகி இருக்கலாம்
அதுதான் செத்துட் டே னே , இனி ஸ் டார் ஆகறதுதான் பாக்கி
9 பயம் இருப்பது நல்லதுதான் , பயம் இருப்பதால் தான் மனித குளம் இந்த அளவு அசுர வளர்ச்சி அடைஞ்சிருக்கு
10 பேயை இவ்ளோ பக்கத்தில் பார்த்துட்டு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லைன்னு சொன்னா எப்படி ?
உன் கேள்வில யே பதிலும் இருக்கு. நான் இன்னமும் கடவுளை நேரில் பார்க்கலையே ?
11 பிரிவு ஒரு பயங்கரமான வலி தான் , ஆனா அதைக்கடந்துதானே போயாகணும் ?
12 நாம் நேசித்த ஒருத்தர் நம்ம வாழ்க்கையை விட்டுப்போகும்போது நம்ம மனசைத் தெளிவா வெச்சுக்கறது முக்கியம்
13 உங்களுக்கு இந்தப்பேய் ,பிசாசு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு நினைச்சேன்
நம்பிக்கை இல்லை , ஆனா பயம் உண்டு
14 உன்னை மாதிரி சிங்கிளா சுத்தறவங்க தான் ரொம்ப ரொமாண்டிக்கா இருப்பாங்க
15 நீ அவளை லவ் பண்றியா ?
மியூஸிக் தான் என் ஒரே லவ்
மண்ணாங்கட்டி , அதை ஒரு ஓரமா வை
16 நான் எப்படி உன்னை லவ் பண்ண முடியும்?, நீ ஒரு பேய் , உன்னை தொடக்கூட முடியாது
லவ் ஈஸ் நாட் ஒன்லி பிசிக்கல் டச் , எமோஷனல் கனெக்ட்
17 பொதுவா ஒரு ஆத்மாவுக்கு மோட்சம் கிடைக்கணும்னா அது அனுபவிக்கும் தூக்கத்துல இருந்து அதுக்கு விடுதலை கிடைக்கனும்
=============================================================
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் கண்களுக்குமட்டும் அந்தப்பெண் பேய் எதனால் தெரிகிறது என்பதற்கு க்ளைமாக்சில் விடை கிடைக்கிறது , ஆனால் அந்தப்பெண் பேயின் அம்மா, அப்பாவுக்கு காட்சி அளித்து ஆறுதல் சொல்லாதது ஏன் ?
2 கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன் மீண்டும் எப்படிக்கடவுளை நம்புகிறான் என்பதற்கு விளக்கம் இல்லை
3 காதலில் பிரேக்கப்பில் சோகம் ஆகும் இரண்டாம் நாயகி கால அவகாசம் எடுத்துக்கொள்ளாமல் திடீர் என நாயகனுடன் காதலில் விழுவது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13 + குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரு பீல் குட் ரொமாண்டிக் மூவியைப்பார்க்க விரும்புபவர்கள் அவசியம் பார்க்கலாம் .. ரேட்டிங்க் 3.25 / 5
| Sarvam Maya | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Akhil Sathyan |
| Written by | Akhil Sathyan |
| Produced by | Ajayya Kumar Rajeev Menon |
| Starring | Nivin Pauly Riya Shibu Aju Varghese Janardhanan Preity Mukhundhan |
| Cinematography | Sharan Velayudhan |
| Edited by | Akhil Sathyan Rathin Radhakrishnan |
| Music by | Justin Prabhakaran |
Production companies | Firefly Films Akhil Sathyan Films |
| Distributed by | Central Pictures |
Release date |
|
Running time | 146 minutes[1] |
| Country | India |
| Language | Malayalam |
| Box office | ₹145.30 crores[2] |
Sunday, February 01, 2026
மாய பிம்பம் (2026)-தமிழ்-சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)
100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ நடிக்க ,பிரம்மாண்டமான இயக்குநர் இயக்க ,பெரிய கம்பெனி தயாரிப்பாக வரும் பல படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் ,எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுப்பின் ரிலீஸ் ஆன பின் டப்பா ஆவதுண்டு.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குநர் இயக்கும் படங்கள் சத்தம் இல்லாமல் வெளிவந்து நம் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்த வைப்பதுண்டு.அப்படிப்பட்ட எளிமையான ,தரமான நல்ல படம் தான் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் மூன்று நண்பர்களில் ஒருவன் தான் நாயகனுக்கும்,இந்த திரைக்கதைக்கும் வில்லன்.
நாயகன் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவன்.நாயகியை முதன் முதலாக ஒரு பஸ்சில் பார்க்கிறான்.இரண்டாவது சந்திப்பில் சாதா ஆட்டோவை ஷேர் ஆட்டோ ஆக்கி இருவரும் பயணிக்கிறார்கள்.மூன்றாவது சந்திப்பில் நாயகியைப்பார்த்து பின் தொடரும் வேகத்தில் நாயகன் ஒரு விபத்தை சந்திக்கிறான்.
லேசான அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கும் நாயகனை ,நாயகி அடிக்கடி வந்து சந்திக்கிறாள்.முதல் பாதி முழுக்க நாயகன்,நாயகி, இருவரின் சந்திப்பு ,நண்பர்கள் கலாட்டா என படம் ஜாலியாகப்போகிறது.
நாயகனின் ஒரு நண்பன் தான் வில்லன் என்று முதல் பத்தியில் சொன்னேனே?அவன் பெண்களைப்பார்க்கும் பார்வை வேறு.பெண்களைப்பற்றி நண்பர்களிடத்தில் செய்யும் கற்பிதங்களும் வேறு.
திருமணம் ஆன பெண்,ஆகாத பெண் யாரைக்கண்டாலும் இது சுலபமாக மடஙகி விடும்,இது கிறஙகி விடும் என்று தவறாக வழி நடத்துகிறான்.
நண்பனின் தவறான வழி காட்டலின் படி நாயகன் ,நாயகியைத்தனிமையான ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக நடக்க முயல நாயகி அதிர்ச்சி அடைந்து நாயகனை விட்டு விலகி ஓடுகிறாள்.
இடை வேளை.
விருமாண்டி படத்தில் ஒவ்வொருவர் கோணத்திலும் ஒரே கதை புதுப்புது கோணத்தில் சொல்லப்படுவது போல பின் பாதியில் நாயகியின் பார்வையில் கதை நகர்கிறது,முதல் பாதியில் நடந்த நாயகன்- நாயகி சந்திப்புகள் நாயகியின் கோணத்தில் சொல்லப்படுகிறது.
இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உடன் படம் முடிகிறது.
நாயகன் ஆக புதுமுகம் ஆகாஷ் நாகராஜன் இயல்பான ,அமைதியான நடிப்பில் மனம் கவர்கிறார்.பின் பாதியில் நாயகியின் டைரியைப்படித்து குற்ற உணர்ச்சியில் குமுறும்போது முகத்தில் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்துகிறார்.
நாயகி ஆக வரும் புதுமுகம் ஜானகி சீனிவாசன் கல்லுக்குள் ஈரம் அருணா போல் முக சாயல்,நந்திதாதாஸ்,அர்ச்சனா போல் திராவிட நிறம்,கண்களாலேயே கதை சொல்கிறார்.இவருக்கும் வசனஙகள் குறைவு.ஆனால் நடிப்பு மிக பாந்தம்
வில்லன் ஆக அதாவது நாயகனின் நண்பர்களில் ஒருவராக ஹரி நடித்திருக்கிறார்.கவனிக்க வைக்கும் நடிப்பு.
நாயகனின் பெற்றோர் ,நாயகியின் அம்மா ,நண்பர்கள் என அனைவரின் நடிப்பும் அருமை.புது முகங்கள் போலவே தெரியவில்லை.
ஒளிப்பதிவு எட்வின்.கச்சிதமான கேமரா கோணஙகள்.நாயகியைக்ளோசப்பில் காட்டும் போது ரசனை.
எடிட்டர் வினோத் தின் எடிட்டிஙகில் படம் 135 நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் கொஞ்சம் மெதுவான திரைக்கதை.
இசை நந்தா.ஒரு பாடல் செம ஹிட் ஆகி இருக்கிறது.பின்னணி இசையும் கச்சிதம்
கதை,திரைக்கதை ,இயக்கம், தயாரிப்பு என அனைத்தும் கே ஜே சுரேந்திரன்
சபாஷ் டைரக்டர்
1 கதை நடக்கும் கால கட்டம் 2005 என்பதால் ஆடை வடிவமைப்பு,ஹேர் ஸ்டைல்,உடல் மொழி என அனைத்திலும் காட்டிய கவனம்
2 நாயகி,நாயகன் உட்பட புதுமுகஙகள் அத்தனை பேரின் யதார்த்தமான நடிப்பு
3 யாரும் எதிர்பார்க்காத பிரமாதமான க்ளைமாக்ஸ்
ரசித்த வசனங்கள்
பல வசனஙகள் ஜாலியாக ,கிண்டலாக ரசிக்கும்படி இருந்தாலும் அனைத்துமே பெண்களை கிண்டல் செய்யும் ,குறைத்து மதிப்பிடும் வசனஙகளே
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 என்னதான் ஒரு ஆள் தூண்டி விட்டாலும் நாயகன்,நாயகி இடம் ஸ்டெப் பை ஸ் டெப் ஆக முன்னேறாமல்,ஐ லவ் யூ கூட சொல்லாமல் திடீர் என அணைப்பது நம்ப முடியவில்லை
2 நாயகனின் நண்பன் ஆக வரும் வில்லன் ஏதோ ஒரு பெண்ணிடம் செமையாக மாத்து வாங்குவது போல் ஒரு சீன் வைத்து இருக்க வேண்டும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அனைத்துத்தரப்பினரும் ரசிக்க வேண்டிய மனதுக்கு இதமான ஒரு நல்ல படம்.ரேட்டிங்க் 3/5
| Maayabimbum | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | J. K. Surendar |
| Written by | J. K. Surendar |
| Produced by | J. K. Surendar |
| Starring |
|
| Cinematography | Edwin |
| Edited by | Vinoth |
| Music by | Nandha |
Production company | Self Start Productions |
Release date |
|
Running time | 145 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |



.jpg)
