Friday, January 29, 2016

நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில்-எஸ் ஜே சூர்யா அதிர்ச்சி

1  தமிழகத்தை காக்க தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்: கலைஞர் # ஹலோ அழகிரி அண்ணே ,ஸ்டாலின் அண்ணே கேட்டுச்சா?உங்க.2 பேருக்கும் தான்=============
2 பொதுத்துறை வங்கியில் இருப்பு வைக்கப்பட்ட தமிழக அரசு பணம் 20 கோடி சுருட்டல்: # சுருட்டு வியாபாரி யாராவது சுருட்டிட்டுப்போய்ட்ட்னா?
===============3 பொன்குடத்திற்கு பொட்டு வைத்த அளவுக்கு அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது: ஜெ #,ஸ்டிக்கர் பொட்டு வேணா நிறைய இருக்கு. ஆனா பொன் குடத்தைக்காணோம்!
============4 நக்மாவுக்குபாட்சாவை தெரிந்தஅளவுக்கு ஜல்லிக்கட்டுபற்றி தெரியவில்லை:இளங்கோவன்- # தமிழர்கள் கிட்டே உங்க பாச்சா எதுவும் பலிக்காது
============5 என்ன அவதூறு என்று அவர்களுக்கும் தெரியவில்லை; எங்களுக்கும் தெரியவில்லை!

-கலைஞர் # உள்ளே போங்க தலைவரே ! ஜட்ஜ்க்கு தெரியும்னு நினைக்கேன்

=============

6 ஜெ தொடர்ந்த அவதூறு வழக்கில் நானே நேரில் சென்று ஆஜராவதென முடிவு செய்துள்ளேன்- கலைஞர் # பினாமியை அனுப்புனா ஜட்ஜ் கிட்டே மாட்டிக்குவாரு


============

7 நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே - உதயநிதி.# ஒரு கல் ஒரு கண்ணாடியை பாராட்னப்ப நன்றி சொன்னீங்களே? அது வாபசா?

============

8 மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவது உறுதி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தகவல் # தம்பி, வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா வரச்சொல்


===============

பச்சை தமிழகம் புதிய கட்சியை தொடங்கினார் சு ப. உதயகுமார் #  இந்தக்கட்சிக்கு அழைப்பு விடும் முதல் ஆள் நம்ம தானைத்தலைவராத்தான் இருக்கும் பாரு


==================


10 பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு ஒப்புதல் . சார்பா 1 அப்பா சார்பா 1 பார்த்து வெச்சிருக்காங்களாம்.ஜமாய்===========11 ரஜினியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்: சிவகார்த்திகேயன்..# கமல்ஹாசனைப்பாத்த பின்புதான் லவ்மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு அடிச்சு விடுங்க==========12 பியூட்டி கிரீம் உபயோகித்து அழகாக மாறிய ஒரு பெண்ணைக் கூட நான் பார்த்ததில்லை: கொந்தளிக்கும் பாபா.# சாமியார்க்கு எதுக்கு அழகிகள் முகாம்?
===========
13 கணவனின் கள்ளக்காதலியை அடித்து உதைத்து பாலத்தில் இருந்து தள்ளிவிட்ட பெண்: # ஏம்மா.கையோட புருசனையும் தள்ளி விட்டுஇருக்கலாமில்ல?
===========
14 நீதிக்கு தலைவணங்க நான்எப்போதுமே தயங்கியதில்லை-கருணாநிதி# சும்மா ஒரு வணக்கம் போட்டு வைப்போம்.காசா?பணமா?,மொமெண்ட்
============15 பாக்குறவங்களோட பார்வைக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சனா,

என் பார்வையை நான் மறந்துடுவேன்- # பதிலே சொல்ல முடியலைன்னா எப்டி கதை சொல்வீங்க?


===================


16 குஷ்பு வீட்டில் சுங்கத்துறை இலாகா
சோதனை .# மதகஜராஜாவை இன்னும் ரிலீஸ் பண்ணலையேன்னு சுந்தர் சி மேல் விஷால்க்கு கடுப்பு போல

============


17 மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை; ‘அம்மா அழைப்பு மையம்’ திட்டம்-ஜெ # அம்மா என்றழைக்காத உயிரில்லையேன்னு ரஜினியே பாடிட்டாரே?


================

18  சட்டசபையில் மதுவிலக்கு விவகாரத்தை பேசுவோம் -ஸ்டாலின் # எப்டி? உங்களுக்குள்ளேயே ரகசியமாப்பேசிக்குவீங்களா?சத்தமாப்பேசுனா அவைவிலக்கு தான்


==================

19 நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது; இஸ்ரோ தலைவர் பேட்டி  # எஸ் ஜே சூர்யாவை முதல்ல அனுப்புவாங்களோ?


==================

20  மதுரை அருகே பாலமேடு கிராமத்துக்கு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தச் சென்ற சீமான் கைது # எல்லாரும் பார்த்துக்குங்க  நானும் ரவுடிதான்


===================

0 comments: