Wednesday, July 24, 2024

MALAYALEE FROM INDIA (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ சோனி லைவ்

                   

    

2022 ம் ஆண்டு ஜனகனமன   என்ற லீகல் த்ரில்லர் படத்தை இயக்கிய  டி  ஜோ ஜோஸ்  ஆண்ட்டணி இந்த முறை காமெடி டிராமாவை கொடுத்திருக்கிறார் லோ பட்ஜெட்டில் உருவான இப்படம் 19  கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்துள்ளது .1/5/2024 ஆர்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இப்படம்  இப்போது சோனி லைவ்  ஓடிடி  யில்  5/7/24 முதல் காணக்கிடைக்கிறது .தமிழ் டப்பிங்கில் ஒளிபரப்பாகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன் ஒரு வெட்டித்தண்டம்  . படிச்சுட்டு சும்மா வீட்டில் உக்கார்ந்து அம்மா உழைப்பில் சொகுசாக வாழ்பவன் .எப்போப்பாரு கிரிக்கெட்டு , கட் சி , அரசியல் , வெட்டி அரட்டை என  வாழ்பவன் . இது பத்தாதுன்னு  இவன் கெட்ட கேட்டுக்கு ஒரு தலைக்காதல் வேற .இவன் கூடவே ஒரு நண்பன் சுத்திட்டு இருக்கான் .என்னால நீ  கெட்டே , உன்னால நான் கெட்டேன்  என இருவரும்  தண்டமாக வாழ்ந்து வருகிறார்கள் 



இப்படி  ஜாலியாகபோய்க்கொண்டிருக்கும்  இவனது   வாழ்க்கையில் ஒரு  திருப்பம்   நிகழ்கிறது .இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கட்  மேட்சில்  இந்தியா தோற்ற போது முஸ்லீம்  சிறுவர்கள் பட்டாசு வெடிக்க  நாயகன் அங்கே  தலையிட்டு  பெரிய மதக்கலவரம்  வெடிக்கிறது 


 இனி இவன் இங்கே  இருந்தால் இவன்  உயிருக்கே  ஆபத்து என அவசரம் அவசரமாக  நாயகனை  அவனது மாமா  பாரின்  அனுப்பி விடுகிறார் சொந்த மண்ணில் ஜெயிக்காதவனா  வெளிநாட்டில் போய் ஜெயிக்கப்போகிறான்   என  நாம் நினைக்கும்போது  நாயகனின் வெளிநாட்டு வாழ்க்கையில்  ஒரு திருப்பம் நிகழ்கிறது . அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள்தான்  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  நிவின் பாலி  முதல்  பாதியில் காமெடியாகவும் , கடைசி 30 நிமிடங்களில்  சென்ட்டிமென்ட் டச் உடனும்  நடித்திருக்கிறார் . அறிமுகம் ஆகும்போது  ஒல்லியாக இருந்தவர் இப்போது செம வெயிட்  போட்டு இருக்கிறார் . தமிழ் நாட்டில்  இதே  போல  வடிவேலு , விஜய் சேதுபதி உட்பட பலரை சொல்லலாம் . நல்ல மார்க்கெட் , சம்பளம்  கிடைத்ததும்  உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்தாமல் கண்டபடி புல் கட்டு  , ட[புள் கட்டு கட்டுவது  ஓவராக  தண்ணி அடிப்பது   என தோற்றப்பொலிவை இழக்கிறார்கள் 


நண்பன் ஆக  தயான் சீனிவாசன்  கலகலப்பான காமெடி  நடிப்பு .நாயகி ஆக அனஸ்வரா ராஜன் அழகாக வந்து போகிறார் . இவருக்கு அதிகக்காட்சிகள் இல்லை 


பாரினில் நாயகனுக்கு ஹையர்   ஆபிஸராக தீபக் ஜதி ஆரம்பத்தில்  வில்லன்  போலவும்  , பின்  உணர்ச்சி மிக்க நடிப்பிலும்  கலக்குகிறார் 


ஜேக்ஸ் பிஜோய் இசையில் எட்டு பாடல்கள் . அவற்றில் ஐந்து பாடல்கள் இனிமை .பின்னணி இசை கச்சிதம் ஸ்ரீ ஜித்  சாரங்கின் எடிட்டிங்கில்  படம் 158  நிமிடங்கள் ஓடுகின்றன 


சுதீப் எல்மோன் ஒளிப்பதிவு அருமை .குறிப்பாக பாலைவனக்காட்சிகள் அழகு 

சாறிஸ் முகமதுவின் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருப்பவர் டி  ஜோ ஜோஸ்  ஆண்ட்டணி


சபாஷ்  டைரக்டர்

1   படத்தின் முதல் பாதியை வேலை கிடைச்சிடுச்சு (1990)  பாணியில்  காமெடியாகக்கொண்டு போனது ,பின் பாதியை ஆடு ஜீவிதம் (2024)  கதையை பட்டி டிங்கரிங் செய்த லாவகம்  அருமை . வர  வர எல்லா  மாநிலங்களிலும்  அட்லிகள் பெருகி வருகிறார்கள் 


2   சீரியஸ் ஆக போன ஆடுஜீவிதம்  கதையை  காமெடியாக மாற்றிய விதம் அருமை 


3   நாயகன் - வில்லன்  இருவருக்குமான புரிதல் ஏற்பட்ட பின்   இந்து முஸ்லீம் ஒற்றுமை , இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை குறித்த  காட்சிகள்  மனதைத்தொ ட்டன 

  ரசித்த  வசனங்கள் 

1   சங்கு பீச்  கடல் ஆகிடுச்சு 


ஆல்ரெடி  அது கடல் தானே ?


ஐ மீன் மக்கள் கடல்  


2  ஒய் ஆர் யு லேட்? 


 ஒரு  பொண்ணுக்கு 1008 பிரச்சனைகள் ,இருக்கும். அதை எல்லாம்  கேட்கக்கூடாது 


சாரி , இனி கேட்கலை 


 என்னடி பிரச்சனை ?


 சும்மாடி 


3    எனக்கு உங்கள்ல  பாதி வயசு தான்  இருக்கும்,என்னை விட்டுங்க  அண்ணா .லவ் எல்லாம்  வேண்டாம் 


4  தேன் , நெய்  இரண்டும்  நல்லதுதான் ஆனால் இரண்டும் சேர்ந்தால் விஷம் , அதுபோலத்தான்  மதமும்  அரசியலும் . அபாயம் 


5  நம்ம கேரளா மாநிலத்தை கடவுளின்  தேசம்னு     எதனால கொண்டாடறாங்க ? சாத்தான்கள் இங்கே இல்லையா? இருக்காங்க, ஆனால் அவங்களை எங்கே வைக்கணுமோ   அங்கே வெச்சிருக்கோம் அதனால 


6 பாலைவனத்தில் விவசாயமா? யாருமே இல்லாத  கடைல யாருக்குடா  டீ  ஆத்தறே ?


7  அவன்  கொடுமை தாங்க முடியலைன்னா சாப்பாட்டில்  விஷம் வெச்சு கொன்னுடு 


 விஷம்  கிடைச்சா நானே சாப்பிட்டு  செத்துடுவேன் 


8  நரகத்தில் வாழ்ந்து என்னபிரயோஜனம் ?


9   நான் ஊருக்கு திரும்பி வரும்போது எனக்கு ஒரு பரம்வீர சக்ரா விருது ரெடி பண்ணி வை 


 அது செத்துப்போனவங்களுக்குத்தர்றது 


 அப்போ  அசோக சக்ரா விருது ?


 அதுவும் தான் 


10  குரானின் முதல்  வார்த்தை என்ன  தெரியுமா? படிங்க . என்பதுதான் . ஆயுகத்தை எடுங்க  என்பதல்ல 


11  மதம் ஒரு  ராஜ்ஜியத்தை  ஆளும் சக்தியா  மாறினா அந்த ராஜ்ஜியம்  அழிநது  விடும் 


12 ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  அவரது  வாழ்க்கையை  மாற்றி  அமைக்கக்கூடிய  ஒருவர்  வருவார் 


13   படி , உணர் , நீ  வெற்றி பெறுவாய் - இதுதான்  தாரக  மந்திரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பாஸ்போர்ட் விசா எடுக்க எவ்ளோ டைம் தேவைப்படும்? ஆனா     வெட்டியா சுத்திட்டு இருக்கும் நாயகன் ஒரு  கட்டத்தில் தலைமறைவான வாழ்க்கை வாழும்போது  அவரது உறவினர்  ஒரே நாளில் எல்லாம்  ரெடி பண்ணிடறார் . இது எப்படி ? அவர் சைன் எல்லாம்  பண்ணத்தேவை இல்லையா? 


2  நாயகன் - வில்லன்  இருவருக்கும் எப்படி புரிதல்  வருகிறது  என்பதை விளக்கமாகக்காட்டவில்லை 


3 நாயகனை போலீஸ்  தேடிக்கொண்டிருக்கிறது . தலைமறைவாக  இருக்கும் நாயகனுக்கு பாஸ்போர்ட்  ரெடி ஆகிறது .பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் போலீஸ் தானே செய்யணும்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி கலகலப்பு , பின் பாதி லேடிஸ்க்கு  பிடித்த சென்ட்டிமெண்ட்  காட்சிகள் . பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 


Malayalee from India
Directed byDijo Jose Antony
Written bySharis Mohammed
Produced byListin Stephen
Starring
CinematographySudeep Elamon
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
company
Distributed byMagic Frames
Release date
  • 1 May 2024
Running time
158 minutes
CountryIndia
LanguageMalayalam
Box officeest.₹18.37 crore[1]

Tuesday, July 23, 2024

HOT SPOT -ஹாட் ஸ்பாட் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (ஆந்தாலஜி டிராமா) @ அமேசான் பிரைம் , , ஆஹா தமிழ்

               


        என்னதான் வித விதமாக   வாய்க்கு ருசியாக  டிபன் சாப்பிட்டாலும் தமிழனுக்கு புல்  மீல்ஸ்  சாப்பிட்டால் தான்  ஒரு  திருப்தி . அதே போல   சிறுகதைகளின்  தொகுப்பு , அல்லது குறும்படங்களின்  தொகுப்பு  எனில் அவ்வளவா  அவன் ரசிப்பதில்லை . ஒரு  முழுப்படம் பார்த்த திருப்தியை அது  தருவதில்லை  என  நினைக்கிறான். இந்த  நிலை மாற  வேண்டும். . அனைவரும் அதை வரவேற்க வேண்டும் .


  இந்தப் படத்தில்   ஒன்றுக்கொன்று  சம்பந்தம் இல்லாத நான்கு குறும்படங்களை இணைத்திருக்கிறார்கள் .29/3/2024  அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது அமேசான் பிரைம் ,   , ஆஹா தமிழ்   ஆகிய ஓடி டி  தளங்களில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 1  ஹேப்பி மேரீடு லைப் - திருமண்ம் ஆன பின் பெண் தான் கணவன் வீட்டுக்குப்போகிறாள் . ஆண்  ஏன்  மனைவி வீட்டுக்குப்போகக்கூடாது  . ஆண்  தான் பெண்ணுக்குத் தாலி   கட்டுகிறான் , ஏன் ஒரு  பெண் 

 ஆணுக்குத்தாலி கட்டக்கூடாது  என்ற கேள்வியை படம் எழுப்புகிறது . முதல் கேள்விக்கு பதில்  வீட்டோட  மாப்பிள்ளை என  அவனை யாரும் மதிக்க  மாட்டார்கள் .இரண்டாவது கேள்விக்கு பதில்  தண்ணி அடிக்க தன  தாலியை தானே கழட்டி  அடமானம் வைத்து விடுவான் . எனக்கு இந்தக்கதை கான்செப்ட்டே பிடிக்கவில்லை . ஆனால் பெண்கள் கை  தட்டி ரசிப்பார்கள்



2 கோல்டன் ரூல்ஸ் -   நாயகன் , நாயகி இருவரும் காதலிக்கிறார்கள் . தங்கள் பெற்றோரிடம் சொல்லும்போது தான் ஒரு உண்மை   தெரிய வருகிறது . இருவரும் பெரியப்பா - சித்தப்பா  வாரிசுகள் .அதாவது  இருவரும் அண்ணன் - தங்கை முறை சொந்தம் . இதற்குப்பின்  என்ன முடிவெடுக்கிறார்கள்   என்பது  க்ளைமாக்ஸ் . இதுவும் எனக்குப்பிடிக்கவில்லை . 12  நிமிடப்படம் தான் 


3    தக்காளி சட்னி -  நாயகன் - நாயகி இருவரும் காதலர்கள் . இருவருமே வேலைக்குப்  போகிறவர்கள் . ஒரு  கட்டத்தில்  நாயகனுக்கு  வேலை போகிறது .காதலியிடம் செலவுக்குப்பணம்  வாங்கி சமாளிக்கிறான் . பணத்துக்கு சிரமப்படும் போது  நாயகனுக்கு ஒரு ஆபர் வருகிறது .கேபிள் சங்கரின் நான் ஷர்மி வைரம் நாவலில் வரும் நாயகன் போல ஆண்  விலை மகன் ஆகும் வாய்ப்பு . கரும்பு தின்னக்கூலியா? ரன்பது போல  நாயகன் அந்த வேலையை செய்கிறான் . அவன் வாழ்க்கையில்  இரு திருப்பங்கள்  வருகின்றன . ஒரு முறை  ஹோட்டலுக்குப்போனபோது  கஸ்டமராக அவனது அம்மாவே  அங்கே  இருக்கிறாள்  . அடுத்து நாயகன் இப்படிப்பட்ட தொழில் தான்  செய்து வருகிறான் என்பது தெரிந்த நாயகி  எடுக்கும் வித்தியாசமான முடிவு . இந்தத்தொகுப்பில் இந்தக்கதை தான் மெய்ன்  கதை போல , அதிக நீளமும்  இதுதான் 



4  நாயகன் , நாயகி  இருவரும் இரு குழந்தைகளுக்கு  பெற்றோர் . 8 வயது சிறுமி . 5 வயது சிறுவன் . இருவரையும்  டி வி ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க வைக்கிறார்கள் . இருவருமே புகழ் பெறுகிறார்கள் . வசதியும் கிடைக்கிறது .  குழநதைகள் வயதுக்கு மீறிய  வசனம் பேசி நடிப்பது அப்பாவுக்குப்பிடிக்கவில்லை . 

  பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் . என மகளை   எனக்குப்பார்த்துக்கத்தெரியும்  என்கிறாள் . ஆனால் விபரீதமான சம்பவம் நடக்கிறது . இதை பெற்றோர் எப்படி எதிர் கொண்டனர் என்பது மீதி கதை 


முதல் கதையில் ஜோடியாக ஆதித்யா  பாஸ்கர் - கவுரி ஜி கிஷன்  நடித்திருக்கிறார்கள் . இதில் கவுரி நல்ல அழகு , நடிக்க அதிக வாய்ப்பில்லை . நாயகன் வசனம் பேசும் இடங்கள் எல்லாம்  டிராமா பார்ப்பது போல இருக்கிறது . நாயகிக்கு  2 இடங்களில் தான் க்ளோப் ஷாட் , நாயகனுக்கு 37 இடங்களில் க்ளோப் ஷாட் ,. என்ன கொடுமை சார் இது ? 


இரண்டாவது கதையில் ஜோடியாக சாண்டி - அம்மு அபிராமி நடித்திருக்கிறார்கள் . அதிக வாய்ப்பில்லை . வந்த வரை ஓகே 


3 வது கதையில் ஜோடியாக   சுபாஷ் - ஜனனி அய்யர்  நடித்திருக்கிறார்கள் .இருவருமே நல்ல நடிப்பு ,குறிப்பாக  ஜனனி  நாயகனை மடக்கும் க்ளைமாக்ஸ் காட்சி குட் 


4 வது கதையில் ஜோடியாக    கலையரசன் -சோபியா  நடித்திருக்கிறார்கள் .இருவருமே நல்ல நடிப்பு ,குறிப்பாக கலையரசன் கண்களைக்கலங்க வைக்கும் உணர்ச்சிகரமான நடிப்பு   . டி வி ஷோக்கள் நடத்துபவர்கள் , ரசிப்பவர்கள் இரு தரப்புக்கும் செப்பல் ஷாட் 


சதீஷ் ரகுநாதன் வான்  இசை குட். 3 சின்னசின்ன பாடல்கள் . பின்னணி இசை ஓகே ரகம் . கோகுல் பெனாய் ஒளிப்பதிவு  சராசரி தரம் எடிட்டிங்க் முத்தையன் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் விக்னேஷ் கார்த்திக் . சமூக அக்கறை  தெரிகிறது . ஆனால் எதற்கும்  சரியான தீர்வு சொல்லாமல்  முடிவை நம்மிடமே விடுகிறார் 

சபாஷ்  டைரக்டர்


1     நான்கு தனித்தனிக்கதைகளையும்  இணைக்க கையாண்ட யுக்தி மிக எளிமை என்றாலும்  அருமை 


2  முதல் இரண்டு கதைகளில் செயற்கையான நாடகத்தனம்  தெரிந்தாலும்  3 வது , 4 வது கதைகளில் அழுத்தமான முத்திரையைப்பதித்தது 


3   கலையரசன் , ஜனனி , அம்மு அபிராமி  மூவரின் அருமையான  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1   புகுந்த வீட்டில் பெண்கள் ராணி மாதிரி வாழ்கிறார்கள்< ஆனால் பிறந்த வீட்டில்  ராணியாகவே வாழ்கிறார்கள்


2  ஒரு விஷயத்தை முதல் தடவை யாராவது செய்யும் வரை எல்லாமே பிராக்டிக்கலாக  முடியாத விஷயம் தான் 


3  ஒரு  மாற்றத்தை முதல்  முறை யாராவது  கொண்டு வரவேண்டும் , அது ஏன் நானாக இருக்கக்கூடாது ?


4   என் சம்சாரம்   டீ  போட்டா  அது  காபி மாதிரி  நல்லாருக்கும் 


5  ALL IS FAIR IN LOVE AND WAR 


6   நாம யாரையாவது கொலை  பண்ணினா  அதுக்கு  ஜெயில்  தண்டனை, ஆனா  கோழி , ஆடு  வெட்டினா  அது  கொலை  இல்லை  நம்ம சவுகரியத்துக்கு  மாத்திக்கிட்டோம் 



7  நம்ம  சைஸ்க்கு ஏத்த  மாதிரி சட்டை போடுவது போல நம்ம இஷ்டத்துக்கு சட்டத்தை  உருவாக்கிக்கிட்டோம் 




8   நேத்து நைட்  பிக்பாஸ் பார்த்தியா?ஏன் புரியாத  மாதிரி பேசறே? 


9    சமூகத்த்தில் 16  வயசுக்கீழே  உள்ள சிறுவர்கள் வேலை செய்தால்   அது குழந்தை தொழிலாளர் சட்டப்படி தவறு . ஆனா டி வி ஷோக்களில் நடிக்கலாம் ? 


10 குழந்தைகளின்  அழகே அவங்களோட  வெகுளித்தனம் தான் , அதை நாசம் பண்ணிடாதீங்க 



11  குழந்தைகளை  அவங்க வயசுக்கு மீ றிய பாத்திரங்களில்  டி வி ஷோக்களில் நடிக்க வைப்பது  ரேப்பிஸ்ட் கிட்டே  கூட்டிக்கொடுப்பதற்கு  சமம், அதை செய்யாதீங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இப்ப எல்லாம்  பெண் வீட்டார் தான் கண்டிஷன் போடுகிறார்கள், அவர்கள் வைத்ததுதான் சட்டம் . அது தெரியாமல் இன்னும் பெண்  உரிமை  அது இது என வசனம்  வேற 


2  ஒரே ஊரில் இருக்கும்  அக்கா - தங்கை  இருவரும்  25  வருடங்களாக பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காதது எனோ? 


3    ஆண்  விலைமகன்   என தெரிந்தும் காதலனை  மணக்கத்தயாராக இருக்கும் நாயகி .. 


4   டி வி  சுடேஷனில்  கரண்ட் போய் விட்டால்  ஜெனரேட்டர் இருக்கும் .அது போக அங்கே அவ்ளவ் கூட்ட நெருக்கடியில் ரேப் நிகழ வாய்ப்பில்லை 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் கதை பெண்களுக்குப்பிடிக்கும் .இரண்டாவது கதை வேஸ்ட் . 2 , 4  இரண்டும் குட் . ரேட்டிங் 2.5 / 5 


பகிரலை
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்விக்னேஷ் கார்த்திக்
எழுதியவர்விக்னேஷ் கார்த்திக்
உற்பத்திகே.ஜே.பாலமணிமார்பன்
சுரேஷ் குமார்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுகோகுல் பெனாய்
திருத்தியவர்முத்தையான் உ.
இசைசதீஷ் ரகுநாதன்
வான்
உற்பத்தி
நிறுவனங்கள்
KJB டாக்கீஸ்
ஏழு வாரியர் படங்கள்
வெளிவரும் தேதி
  • 29 மார்ச் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, July 22, 2024

MANDAGINI ( 2024) -மந்தாகினி - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா) @அமேசான் பிரைம்




 500 கோடி  , 700 கோடி  செலவில் எடுக்கப்படும்   பிரம்மாண்டமான படங்கள் எல்லாம்  டப்பா  ஆகும்போது  லோ பட்ஜெட்டில்  எடுக்கப்படும்  படங்கள் ஹிட் ஆவது மகிழ்ச்சி .முன்னணி ஹீரோக்கள் படங்கள்  ஹிட் ஆனால் அவரது சம்பளம் தான்  உயரும் , ஆனால் லோ பட்ஜெட்  படங்கள் ஹிட் ஆனால்  ஆரோக்கியமான சினிமாக்கள் மேலும் உருவாகும், திரைக்கதை ஆசிரியர்களுக்கு  மரியாதை  கிடைக்கும் 

வெறும்  3 கோடி பட்ஜெட்டில் உருவான  இப்படம்  கமர்ஷியலாக ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல்  விமர்சன  ரீதியாகவும்  பாராட்டுதல்களைக்குவித்தது .24/5/24   அன்று  திரை அரங்குகளில்   ரிலீஸ் ஆன  இப்படம்  இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு சராசரி மிடில்கிளாஸ் இளைஞன். பெற்றோர் நிச்சயித்த  திருமணம்  நடக்கிறது .கல்யாண  விழாவில் நடக்கும் காமெடி களேபரங்கள்  முதல் பாதி படம்  கலகலப்பாக   நகர்த்துகிறது .முதல் இரவு நடக்க இருக்கும்போது நாயகனின் நண்பர்கள் உனக்கு தைரியம் வர வேண்டுமானால்  சரக்கு அடிக்க வேண்டும்  என  தவறாக  வழி  காட்டுகிறார்கள் .நாயகனுக்காக மிக்ஸ் பண்ணி வைத்திருந்த காக்டெயில் சரக்கை  தவறுதலாக  அவன்  மனைவி  குடித்து விடுகிறாள் 



போதையில்   என  காதலனைப்பார்க்கணும் , அவன் கிட்டேயே  கூட்டிட்டுப்போ  என்கிறாள் . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் கதை 



கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த  7 நாட்கள் கதையையே காமெடியாக   எடுத்தால் எப்படி  இருக்கும்? அதுதான் இப்படத்தின் கான்செப்ட் 



நாயகன்   ஆக அல்தாபி சலிப்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .ஆல்ரெடி பிரேமம் , சகாவு , தோல்வி எப் சி போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தவர் தான் , இதில் நாயகன்  ஆக  பிரமோஷன் .அப்பாவித்தனமான    முகம் இவருக்கு  கை கொடுக்கிறது 


நாயகி ஆக அனார்கலி மரிக்கா அமர்க்களப்படுத்தி இருக்கிறார் .குறிப்பாக மப்பில் உளறும் காட்சிகள் அருமை 


நாயகனின் அம்மாவாக நடித்தவர் அட்டகாசமான உடல் மொழி  , நடிப்பு , அதிலும்  சரக்கு அடித்து விட்டு காட்டும்  கெத்து  தியேட்டரில் கைதட்டலை  அள்ளி  இருக்கும்  


நாயகனின் மாமாவாக வரும் ஜாபர் இடுக்கு காமெடிக்கு 


மீதி  உள்ள அனைத்துக்  கேரக்டர்களும்   கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கின்றனர் 


பிபின் அசோக் இசையில் இரு பாடல்கள் மெலோடி .பிஜிஎம் குட் 

ஷிஜு எம் பாஸ்கர் ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை 

எடிட்டிங்க் ஷிரில். 2 மணி நேரம் ஓடுகிறது 

திரைக்கதை ஷிஜு எம் பாஸ்கர் + ஷாலு .இயக்கம் வினோத் லீலா 


சபாஷ்  டைரக்டர்


1   96 படத்தில் வரும் விஜய் சேதுபதி - த்ரிஷா போல  படம் முழுக்க ஒரு ஜோடி  உலா வருவதும்  காதலை சொல்லாமல் மென்று முழுங்கும்  இதயம்  பட முரளி போல அந்த ஆள்   கடைசி வரை   தான் யார் என்று சொல்ல  முடியாமல் தவிப்பதும்  நல்ல காமெடி 


2   நாயகனின் அம்மா சரக்கு அடித்து விட்டு நாயகியை , தோழி களை , ஜீப்பில் ஏற்றி செல்லும்போது டிராபிக் போலீசில் மாட்டுவதும் . அந்த இன்ஸ்பெக்ட்டர் நாயகனின் அம்மாவிடம் டிரைவிங்க் படித்தவராக இருப்பதும்  அங்கே நடக்கும் உரையாடல்கள் , சம்பவங்கள்  செம  கலக்கல்ஸ் 


3    என் காதலன்  என்னை மோசம்    பண்ணிட்டான்      என்று உளறும் நாயகி  அந்த பிளாஸ்பேக்கை   சொல்லும் வரை பதைபதைப்பாக இருப்பதும் , சொன்ன பின்  காமெடியாக மாறுவதும் நல்ல திரைக்கதை உத்தி 


ரசித்த  வசனங்கள் 


   1  என்ன? பாத்ரூமில் உட்கார்ந்து சரக்கு அடிக்கறே? அப்போ  இது   அவுட் கோயிங்க் இல்லை ? இன் கமிங்க்? 


  2 என்ன அங்கிள் ?நீங்களே ஜோக் அடிச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க , வேற யாரும் சிரிச்ச மாதிரி   தெரியலையே? 


3  அத்தை நகையை எங்கே வைக்கணும்?இடம் இல்லை ? 

அதுக்காக பிரிட்ஜில் வைக்கறதா? 


4 என்னதான்  இருந்தாலும் நயன் தாரா  செஞ்சது சரி இல்லை 


ஒரு  நடிகைன்னா அழகை ,இளமையை பாதுகாக்கணும், அதனாலதான் அவங்க சரோகசி முறையை  தேர்நதெடுத்தாங்க , வாடகைத்தாய்   என்பதை சரோகசி  என சொல்வார்கள் 


என்னது ? சரோஜினி சேச்சியா? 


5    சாரி , டியர் , முதல் இரவு அறைக்கு வர லேட்  ஆகிடுச்சு , நீ எப்போ  வந்தே? 


நான்  இங்கே வந்து 25  வருஷம் ஆகிடுச்சு 


ஓ , காமெடி ? நல்ல சென்ஸ் ஆப் ஹியூமர் 


6   முதல்  இரவில்   எல்லா பொண்டாட்டிங்களும் புருஷன் கிட்டே  " உங்களுக்கு ஏதாவது லவ் மேட்டர்  உண்டோ?"னு கேப்பாங்க .நாம உண்மையை உளறிக்கூடாது . ஆனா அவங்களா அவங்களோட லவ் மேட்டர்   சொன்னா நமக்கு அது போனஸ் 


7   பெரிய மெக்கானிக் மாதிரி வண்டிக்குக்கீழே  என்ன பார்க்கறே ? அந்த வண்டி ஆணா ? பெண்ணா?ன்னா? 


8 சரக்கு அடிக்கலாம்னு வந்தேன் , எங்கே கிளம்பிட்டீங்க ? 


கல்யாண வீட்டில் பிரச்சனை , அதை சரி பண்ண   நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம் 


ஓகே , சரி பண்ணிட்டு வாங்க , அப்புறமா அடிக்கலாம், ஐ ஆம் வெயிட்டிங் 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 காமெடி கதை ,பேமிலி டிராமா  என  முடிவு செய்த பின்  படம்  முழுக்க  தண்ணி அடிக்கும்  காட்சிகள்  ஓவர் . மது பானக்கடை  படத்தில் கூட  இவ்ளோவ்   சரக்குக்காடசிகள் இல்லை 

2   என்னதான் ஆண்களுக்கு இணையா பெண்களும் முன்னேறி வருகிறார்கள் என்றாலும்  திருமண வீட்டில்  பெண்கள் கூட சரக்கு  அடிப்பது போல காட்சி  வைக்கணுமா? 

3  ஒரு கம்பெனியில் பல வருடங்களாக வேலை செய்யும் ஆள் அந்த கம்பெனியில் இருந்து நிற்பதாக முடிவெடுத்தால் தீபாவளி போனஸ் வாங்கிய பின்தான்  நிற்பான் . அது மாதிரி தான் பெண்களை ஏமாற்றும் ஆண்களும் . . வில்லனின் டார்கெட்  பணம் மட்டும் தான் என்பது  போலக்காட்டியது நம்ப முடியவில்லை . காதலியை அனுபவிக்காமல் பணத்தை / நகையை மட்டும் அபேஸ் செய்வது ஏனோ? 

4  நாயகியின் காதலன் திடீர்  என்  இரவு நேரத்தில்  நாயகியின் வீட்டுக்கு முன்  வந்து   சில வேண்டுகோள்கள் விடுப்பது , அதை  நாயகி கேட்பது , அதைத்தொட ர்ந்து நடக்கும் சம்பவங்கள் நம்பும்படி இல்லை 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தண்ணி அடிக்க சேர்ந்த கூட்டம்னு டைட்டில் வெச்சிருக்கலாம் ,காமெடிப்படத்தை விரும்புபவர்கள் பார்க்கலாம், ஒரே நாளி ல்   நடக்கும் கதை . ரேட்டிங்க்  3/5 


Mandakini
First look poster [1]
Directed byVinod Leela
Written byShiju M Bhaskar
Shalu
Produced bySanju Unnithan
Starring
CinematographyShiju M Bhaskar
Edited bySheril
Music byBibin Ashok
Distributed bySpire Productions
Release date
  • 24 May 2024
CountryIndia
LanguageMalayalam
Box office3 crores

Monday, July 15, 2024

TEENZ (2024) - டீன்ஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் ஹாரர் த்ரில்லர் )

                        


எதிர்பார்ப்புடன் போய்  ஏமாறும் படங்களை  விட  எந்த வித  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  போய்  சுமாராக  இருந்தாலும்  ஆறுதல் அளிக்கும்  படங்கள்  சில  உண்டு. அது  மாதிரி தான்   இரா  பார்த்திபனின்  இந்தப்படமும் .   கமல் ஹாஸன் - இரா  பார்த்திபன்   காம்பினேஷனே  புதுசா  இருக்கே? என  யோசித்தால்   ஆல்ரெடி  ஒரு  மோதல்  நடந்திருக்கிறது . 1989 ல்   அபூர்வ  சகோதரர்கள் , புதிய  பாதை  இரண்டுமே  ஒரே  நாளில்  ரிலீஸ்  ஆகி  பிரம்மாண்ட  வெற்றியைப்பெற்றிருக்கின்றன  அந்த  செண்ட்டிமெண்ட்  காரணமாகத்தான்  இந்தப்படத்தை  இந்தியன் 2   உடன்  வெளீயிடும்  எண்ணத்தைத்தந்திருக்க  வேண்டும், 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஸ்கூல்  படிக்கும்  மாணவ  மாணவிகள்   ஒரே  கிளாசில்  ஒன்றாகப்படிப்பவர்கள்   ஒரு  நாள்  ஸ்கூலுக்குக்கட்  அடித்து  விட்டு  ஒருவனின்  பாட்டி  ஊருக்கு   செல்ல  முடிவெடுக்கிறார்கள் . போகும்  வழியில் ஒருவர்  பின்  ஒருவராக  ஐந்து  பேர்  காணாமல்  போகிறார்கள் 


பிள்ளை  பிடிப்பவர்கள்  வேலையா?  பேய்  செய்த  வேலையா? என்று  நாம்  யோசிக்கும்போது   ஏலியன்சின்  வேலை  என்பதை  ட்விஸ்ட்  ஆக  பின்  பாதியில்  சொல்லி  இருக்கிறார்கள் 


  பின்  பாதியில்   வானவியல்  ஆராய்ச்சியாளராக   அல்லது  விஞ்ஞானி ஆக   ஆர்  பார்த்திபன்  வருகிறார். அதிக  வேலை  இல்லை . ஒரே  ஆறுதல்  தொண  தொண  என  பேசாமல்  அடக்கி  வாசித்தது 


13  சிறுவர்  சிறுமிகளாக  நிஜ  மாணவர்களே  நடித்திருப்பதால்  யதார்த்தம்  கொப்புளிக்கிறது 


யோகி  பாபு  மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  வந்து 10  நிமிஷம்  மொக்கை  போடுகிறார் (இப்போதெல்லாம்  இவர்  வரும்போது  சிரிப்பு  வருவதில்லை  எரிச்சல்  தான்  வருகிறது ) 


டி  இமானின்  இசையில்  இரு  பாடல்கள்  சுமார்  ரகம் ,  பின்னணி  இசை  பரவாயில்லை 


கேவ்மிக்  ஆரியின்  ஒளிப்பதிவு  குட் , குறிப்பாக இன்ட்டர்வெல்  பிளாக்  சீன்  அழகு 

  2  மணி  நேரம்  படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் 



சபாஷ்  டைரக்டர்


 1  நாளை  உனது  நாள் (1984)  படத்தின்  திரைக்கதையை   சாமார்த்தியமாக   அஞ்சலி (1990)  ஓப்பனிங்  காட்சியுடன்  அட்லி  வேலை  செய்து  திரைக்கதை  அமைத்த  விதம் 


2    இண்டர்வெல்  பிளாக்  காட்சியின்  போது  ஆயிரக்கணக்கான  ஆடுகள் மாடுகள் பறவைகள் கிராஃபிக்சில்  அணீவகுக்கும்  காட்சி 


4    மலைப்பாம்பிடம்  இருந்து  ஆட்டை  விடுவிக்கும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1    அந்த    அணுவைக்கூட  இரண்டாகப்பிரித்துவிடலாம்,  ஆனால்  இந்த  அனுவை    என்னிடம்  இருந்து பிரிக்க  முடியாது 


2  காலண்டர்லயே  மண்டை  காயற  டே  மண்டே


3  எறா  மீன்  சாப்பிடாத  பிராமின்  யாராவது  இருக்காங்களா? 


4   எடுத்துக்காட்டு  , எடுத்துக்காட்டு    ஐ  மீன்  நீ ஒரு  நல்ல  எடுத்துக்காட்டு  


5  மேஜிக்மேன்  எல்லாவற்றையும்  மறைய  வைக்கிறார், ஆனால்  என் சம்சாரத்தை  அப்படி  மறைய  வைக்க  முடியலையே? ( வெ  சீதாரமன் 1978ல்  கல்கியில்  எழுதிய  ஜோக் ) 


6   காலைல  சாப்பிட்டு  எனக்குப்பழக்கமே  இல்லை . காரணம்  வறுமை 


7  சாண்ட்விச்சுக்கு  ஏன்  ரெண்டு பக்கம்  இருக்குன்னு  தெரியுமா? இப்படி  ரெண்டு  பேரும்  பகிர்ந்து  சாப்பிடத்தான் 


8  அப்பா , அம்மாவை  நான்  பார்த்ததில்லை, அவர்  உருவில் கடவுளையே  பார்த்தேன் 


9  இவன்  என்ன  கடவுளுக்கே  பவுன்சர்  மாதிரி  கூடவே  வர்றான் ?


10  மிஸ்  கிட்டே  இருந்து   தப்பிச்சுட்டான், ஆனா  பிஸ்  அடிக்கறதுல  மாட்டிக்கிட்டான் 


11  லெமன்     மாலை  போட்ட எமன்  மாதிரி  துரத்திட்டு வர்றா னே? 


12   நீ  யாரு ?


 ஆஸ்ட்ரோ  பிசிஸ்ட்

 என்னது ? ஆஸ்ட்ரே  பிஸ்னெஸ்சா?  


13  வண்டியை  விட்டு   இறங்கு 


 மப்பு  இறங்குனதாலதானே  கேட்கறேன் ? 


14   சைலண்ட்டா  வரனும் 


 ஆஆஆ   சைலன்சர்ல  கால்  வெச்சுட்டேன் 


15  பைக்கிற்கே  கிக்  தேவைப்படும்போது  லைஃப்க்கு  தேவைப்படாதா? 


16  என்னுடைய  153  வருட  ஆராய்ச்சியில்.... \


 அய்யய்யோ  நீங்க  பேயா? 


 என்  அப்பாவோட 82  வயது  ஆராய்ச்சி , என்னோட  71  வருட  ஆராய்ச்சி  ஆக  மொத்தம் 153  வருடம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  க்ளைமாக்சில்   ஏலியன்  ஆல்ரெடி  ஐந்து  மாணவர்களை  கபளீகரம்  செய்திருக்கிறது . யாராவது  ஒரு  நபர்  ஏலியன்சிடம்  போக  சம்மதம்  தெரிவித்தால்   அந்த  5  பேரை  விடுவிப்பதாக  சொல்வது  என்ன  லாஜிக்? அதற்கு   ஐவரில்  ஒருவரை  எடுத்துக்கொண்டு  மீதி  நால்வரை  விடுவிக்கலாமே? 


2   வயிற்று  வலியால்  துடிக்கும்  ஒரு  ஆள்  தற்கொலை  செய்யும்  முன்  தற்கொலை  விளக்கக்கடிதம்  எல்லாம்  எழுதிட்டு  இருக்க  முடியுமா? 


3  இடைவேளை  வரை  ஒவ்வொரு  மாணவனும்  காணாமல்  போகும்போது  எல்லோரும் போடும்  அலறல்  ஒரு  கட்டத்தில் கடுப்பாகுது 


4  ரணகளத்துல  என்ன  கிளுகிளுப்பு  வேண்டிக்கிடக்கு  என்பது போல   இந்தக்கதைக்கு  அந்த   டீன் ஏஜ்  லவ்  போர்சன்  தேவை  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சிறுவர்களுக்கான  ஒரு  சயின்ஸ்  ஃபிக்சன்  படம். 600  கோடி  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படத்திலேயெ ரசித்த  வசனங்கள்  15  தான் , இதில் 16  இருக்கு , அதுக்காகவே  பார்க்கலாம், ரேட்டிங்    2. 5 / 5 

Saturday, July 13, 2024

இந்தியன் 2 ( தமிழ் ) - 2024 - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

     



             

  இயக்குநர் ஷங்கருக்கு  ஒரு  ராசி  உண்டு , அவரது படங்களின்  டைட்டில்  “ ”ன்”  என்ற  எழுத்தில்  முடிந்தவை  எல்லாம்  மெகா  ஹிட் . உதா - ஜெண்டில் மேன் , காதலன், இந்தியன் , முதல்வன் , அந்நியன் , எந்திரன் .  அவரது  இந்த  “ ”ன்”   செண்ட்டிமெண்ட்டை  மீறி  வந்த  படங்கள்  எல்லாம்  சுமார்  அல்லது  மீடியம்  ஹிட்  உதா  பாய்ஸ் , ஜீன்ஸ் , ஐ .  டூ பாயிண்ட் ஓ .    சிவாஜி  ,ன்  வரிசையில் சேராத  மெகா  ஹிட் . நண்பன்  3  இடியட்சின்  ரீமேக் என்பதால்  அது  கணக்கிலேயே  வராது . . தமிழில் மெகா ஹிட்  ஆன  முதல்வன்  படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன  நாயக்  தோல்வி ,    இந்த  பட்டியலில்  இல்லை .  இப்போது  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  இந்தியன்  2  எந்த  கேட்டகிரியில் சேரப்போகிறது  என்பது  மில்லியன்  டாலர்  கொஸ்டின் 


ஷங்கர் அளித்த பேட்டியில்  என்  திரை  உலக வாழ்க்கையில் முதன் முதலாக  ஒரு  படத்துக்கு மூன்று  வசனகர்த்தாக்களை  (திரைக்கதைக்கும்)   பயன்படுத்தி  இருக்கிறேன்  என்று  சொன்னபோதே  அடேங்கப்பா  , ஒரு  பாலகுமாரனோ , ஒரு  சுஜாதாவோ   செய்ய  வேண்டிய  ஒரு  அரிதான வேலையை  மூவர்  பங்கு  போடும்போது  அதன்  தரம்  எந்த  அளவுக்கு  உயர்ந்து  இருக்கும்  என்ற  எதிர்பார்ப்பில்  தான்  படம்  பார்த்தேன் . ஏ ஆர்  ரஹமான்  , சுஜாதா , கவுண்டமணி செந்தில்  காமெடி  இல்லாமல்  ஷங்கர்   சமாளித்தாரா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  யூ ட்யூப்  போராளி. தன்  நண்பர்கள் மூவருடன் சேர்ந்து சமூக  அவலங்களைப்படம்  பிடித்து  மக்கள்  பார்வைக்குக்கொண்டு  சென்று  லைக்ஸ்  வாங்குபவர் . ஆனால் பாதிக்கப்பட்ட  ஆட்கள்  அரசியல்  செல்வாக்கும், பணபலமும்  உள்ளவர்களாக  இருப்பதால் போலீசை  ஏவி  ஈசியாக  நாயகன்  அண்ட் கோ வை  லாக்கப்பில்  தள்ளி  விடுகிறார்கள் .


  நம்மால  இது  ஆகாது . இந்தியன்  தாத்தா  மாதிரி  ஒருவர்  அல்லது  இந்தியன்  தாத்தாவே  வந்தால்  தான்  சரி  வரும்  என  நினைத்து ட்விட்டரில் கமான் இந்தியன்  என  ஹேஸ்டேக்  ஆரம்பிக்க  அது  ஹிட் ஆகி  எங்கேயோ  இருக்கும்  இந்தியன்  தாத்தா  பார்வைக்குப்போகிறது 


 அவரும்  வருகிறார். அவங்கவங்க  வீட்டில் இருக்கும்  குப்பைகளை  சரி  செய்தால்  நாடு  சுத்தமாகும்  என்கிறார். இதனால்  நாயகன்   தன்  அப்பாவை , நாயகனின்  நண்பர்கள்  அவரவர்  வீட்டில்  இருக்கும்  அம்மாவை , அண்ணனை , மாமாவை  இப்படி  நெருங்கிய  உறவினர்களை தப்பு  செய்பவர்களை  சாட்சியுடன்  போலீசில்  மாட்டி  விட  குடும்பத்தில்  கலகம்  உண்டாகிறது . இந்த  எல்லாப்பிரச்சனைகளும்  இந்தியன்  தாத்தாவால்  தான்  வந்ததன  என  இப்போது  கோ பேக்  இந்தியன்  என  ஹேஸ்டேக்  போடுகிறார்கள் , இதற்குப்பின்  என்ன  ஆனது  என்பது  மீதி   திரைக்கதை 


  நாயகன்  ஆக  சித்தார்த்  நடித்திருக்கிறார். அருமையான  நடிப்பு . அப்பாவை  போலீசில்  மாட்டி  விட்டதும்   அம்மா  தற்கொலை  செய்து  கொள்வதால்  மனம்  உடைந்து  கதறும்  காட்சியில்   உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார் 


   அவரது   நண்பர்களாக   ப்ரியா  பவானி சங்கர் , ஜெகன்   கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் . அவரது  காதலியாக  ரகுல் ப்ரீத்தி சிங்க்  இரு  காட்சிகளில்  வருகிறார் . 


இந்தியன்  தாத்தாவாக   கமல்  தான்  பாவம்  கம்பீரம்  இல்லாமல்  வருகிறார். முதல்  பாகத்தில்  அவர்  வரும்  ஒவ்வொரு  சீனும்  செம  கெத்து , ஆனால்  இதில்  பார்க்கவே  பரிதாபம் வரவைக்கும்  ஒப்பனை . அதில்  ஒரு  வாசகம்  சொன்னாலும்  திருவாசகம்  போல  சொல்வார் காரணம்  வசனம்  சுஜாதா . இதில்  லொட  லொட  என  பேசிக்கொண்டே  இருக்கிறார், காரணம்  வசனம்  ஜெயமோகன் 


  சிபிஐ  ஆஃபிசர்  ஆக  வரும்  பாபி  சிம்ஹா  24  மணி  நேரமும்  கூலிங்க்  கிளாஸ்  போட்டு  வரும்  கேரக்டர் . அவரது  உதவியாளர்  ஆக  விவேக் 


 இவர்கள்  போக  மனோபாலா , எஸ்  ஜெ  சூர்யா ,  நெடுமுடி வேணு , டெல்லி  கணேஷ் , மனோபாலா , ரேணுகா  என  ஒரு  நட்சத்திரப்பட்டாளமே  நடித்துள்ளன 


  இசை  அனிரூத். படத்தின்  மிகப்பெரிய  மைனஸ்  இவர்  தான் .  முதல்  பாகத்தில்  ஏ  ஆர்  ஆர்  பிஜிஎம்மில்  பின்னி  எடுத்திருப்பார். இதில்  க்ளைமாக்சில்  மட்டும்  பிஜிஎம்  சுமாராக  இருக்கிறது 


தாத்தா  வர்றார்  என்ற  ஒரே  ஒரு  பாடல்  மட்டும் ஹிட்  பாட்டு 


 ரவிவர்மனின்  ஒளிப்பதிவு  அட்டகாசம். சிட்டிசன் , தசாவதாரம்  ஆகிய  படங்களீல்  எ3ப்படி  கெட்டப்கள்  எல்லாம்  நகைப்புக்கு  உரியதாய்  ஆனதோ  அதே  போல்  இதில்  கமல்  வரும்  ஐந்து  விதமான  கெட்டப்களும்  சுமார்  தான் 


 ஒரே  ஒரு  காட்சியில்  சேனாபதி  வேட்டி  சட்டையில்  வரும்போது  கெத்தாக  இருக்கிறார் 


ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்  படம்  3  மணி  நேரம்  ஓடுகிறது . இரண்டே கால்  மணி  நேரமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்


சபாஷ்  டைரக்டர்


1    அரசியல்வாதிகளின்  இலவசத்தால்  தான் மக்கள்  கெடுகிறார்கள்  என்று  சொல்லி  அதிமுக  ஆட்சியில்  இலவசமாகக்கொடுக்கப்பட்ட   டேபிள்  ஃபேன் , கிரைண்டர் , மிக்சி  இவற்றை  எல்லாம்  காட்டி  திமுக  ஆட்சியில்  கொடுக்கப்பட்ட  (கலைஞர்) டிவி யைக்காட்டாமல்  விட்ட  சாணக்கியத்தனம்   (  ஏன்  எனில்  தயாரிப்பு  ரெட் ஜெயண்ட்  மூவிஸ்) 


2    விஜய் , அஜித்  படங்களில்  எல்லாம்  அனிரூத்தின் பிஜிஎம்  பிரமாதமாகப்பேசப்பட்டதால்   ட்ரெண்டுக்கு  ஏற்றபடி  அவரை  புக்  பண்ணி  விட்டு   அது  ஒர்க்  அவுட்  ஆகாததால்  முதல்  பாகத்தின்  ஏ ஆர்  ஆர்  பிஜிஎம்மை  பல  இடங்களில்  யூஸ்  செய்த  சாமார்த்தியம் 


3  இரண்டாம்  பாகத்தை  முடிக்காமல்  ஜவ்வு  இழுப்பாய்  இழுத்து  மூன்றாம்  பாகம்  வரை  கொண்டு  போன  லாவகம்  ( டபுள்  வருமானம் ) 


4     ஷூட்டிங்  நடக்கும்போதே  இறந்து  போன  கலைஞர்கள்  ஆன   விவேக்  , மனோபாலா , நெடுமுடி வேணு   ஆகியோர்  போர்சனை   ஏ ஐ  டெக்னாலஜி  மூலம்  பிசிறிலில்லாமல்  முடித்தது 


5      முதல்  பாகத்தில்  வர்மக்கலை  பெரிதாகப்பேசப்பட்டதால்   அந்த  ஒரு  விஷயத்தை  வைத்தே  நான்கு  புதுப்புது  கோணத்தில்  கொலைகள்  செய்யும்  காட்சியை  வைத்து  ஒரு  மணி  நேரம்  இழுத்தது


6    பிரபல  கார்ட்டூனிஸ்ட்   ஆர்  கே  லட்சுமணின்   சாகா  வரம்  பெற்ற   சாமான்யன் கேரக்டரை  படம்  முழுக்க  உலாவர விட்டது 


7  உலக  நாயகன்  கமல்  என  டைட்டிலில்  பெயர்  வரும்போதும்  , இந்தியன்  2  டைட்டில்  வரும்போதும்   கையாணட  உத்தி  அருமை 


6   நெடுஞ்சாலை  ஓர   மட்டமான ஹோட்டல்களில்  பஸ்  சை   நிறுத்தி  பஸ்  கண்டக்டர்  ,,  டிரைவர்  இருவரும்  கமிஷன்  வாங்கிக்கொண்டு   செய்யும்  அட்டூழியங்கள்  , கொடுமைகளை  காட்சிப்படுத்திய  விதம் 


9  2017 ஆம்  ஆண்டு  டூ  2023  ஆம்  ஆண்டு   7  வருடங்கள்  கிடப்பில்   இருந்த  படம்  என்றாலும்  அதிக  டேமேஜ்  இல்லாமல்  கண்ட்டினியூட்டி  மிஸ்  ஆகாமல்  கரை  சேர்த்த  விதம் 


10   மக்களுக்கு  விஜய்  மல்லய்யா  மேல்  இருக்கும்  வெறுப்பைப்பயன்படுத்தி  அவர்  கேரக்டரை  வில்லனாகக்காட்டிய  விதம் 


  ரசித்த  வசனங்கள்   (  ரைட்டர்  ஜெயமோகன் , கபிலன்  வைரமுத்து , லட்சுமி சரவணக்குமார் ) 


1      பார்த்துப்போடா   நாயே 


 பாத்ரூம்ல  போடா  (  ஓப்பனிங்  சீனில்  என்ன  ஒரு  தத்துவம் ) 


2    நான்  காமன் மேன் , ஓட்டுப்போடும்  மிஷின் 


3   முன்னாடி  எல்லாம்  3  லட்சம்  ஊழல் ,   5  லட்சம்  ஊழல்  என்று  தான்   பேசுவோம், இப்போ 1000 கோடி  ஊழல்  என  பேச  ஆரம்பித்து  விட்டோம் 


4   நீங்க  எல்லாம்  கரப்ட்டட், கரப்பான்  பூச்சிகள், அணுகுண்டே  போட்டாலும்  அழிக்க  முடியாது 


5     எலக்சன்ல   வோட்  சேஞ்ச்  இல்லை  எக்சேஞ்ச் 


6   என்ன    நக்கலா ?


 இல்லை  நிக்கல் , தாய்வான்  50  ரூபா  காயின்  (  இந்த   வசனம்  சுஜாதாவின்  எந்திரன் டயலாக் )


7   கழிப்பறைல   எழுதிட்டு  இருந்தவங்க  எல்லாம்  இப்போ ஃபேஸ்புக்ல  எழுதிட்டு  இருக்காங்க   (  இந்த  டயலாக்கை  ரைட்டர்    ஜெயமோகன்  தான்  எழுதி  இருப்பார் ) 


8   என்ன  கர்மம்  சார்  இது ?


 கர்மம்  இல்லை  வர்மம்  ( இந்த  டயலாக்  அதிதி  சங்கர்  ஆக  இருக்கலாம் , அவர்  தான்  மேடைகளில்  மொக்கை  ஜோக்  சொல்வார் ) 


9   எல்லாரும்  குடும்பத்துக்காக  எதை  வேண்டுமானாலும்  விட்டுக்கொடுப்பாங்க, ஆனா  குடும்பத்தை  யாரும்  விட்டுக்கொடுக்க மாட்டாங்க 


10  லஞ்ச   ஒழிப்புத்துறைக்கே  லஞ்சமா? எத்தனை  இந்தியன்  வந்தாலும்  திருந்த  மாட்டீங்க 


11   ஈ  சேவை  மையம்  ல  வேலை  செய்யும்  கொசு


12    என்ன  கால்ல  சுளுக்கா ?


 இல்லை  நான்  கூட ........  (  டபுள்  மீனிங் ) 


13   நீ  சாப்பிட்டதால  வெயிட்  போடலை , பலரது  சாபத்தால தான் வெயிட்  போட்டிருக்கே 


14    சின்ன  வயசுல  பொய்  சொல்லாதே , திருடாதே  என  சொல்லிக்கொடுத்துட்டு  இப்போ   அதை  எல்லாம் செஞ்சாதான்  வாழ  முடியும்  என  சொன்னால்  எப்படி ? 


15  வீட்டை  சுடுகாடு  ஆக்கிட்டு  நாட்டை  வளமாக்கி  என்ன  பண்ணப்போறோம்? ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பலமான  வில்லன்  கேரக்டர்  இல்லாதது .  இந்தியன்  தாத்தாவுக்கு  ஆபத்து  வருமோ  என்ற  பதைபதைப்பே  படம்  முழுக்க  இல்லாதது  


2   சித்தார்த்  அண்ட்  கோவின்  குடும்பங்களில்  நடக்கும்  சம்பவங்களால்  அவர்கள்  மனம்  மாறுவது  ஒரு  நெகடிவ்  வைப்ரேசனை  எழுப்பியது  பின்னடைவு 


3   முதல்  பாகம்  போல  கவுண்டமணி  செந்தில்   காமெடி  டிராக்கோ , நகைச்சுவையோ மருந்துக்குக்கூட  இல்லாதது .  இரண்டு  நாயகிகள்  படத்தில்  இருந்தும்  ஒரு  டூயட்  கூட  இல்லாதது 


4  முதல்  பாகத்தில்  கமலுக்கு  மணீஷா , ஊர்மிளா  என  இரு  ஜோடிகள்  உண்டு , அது  போக  சுகன்யா . இரண்டாம்  பாகத்தில் கமலுக்கு  ஜோடியே  இல்லை  டூயட்டும்  இல்லை 


5  க்ளைமாக்சில்  ஒத்தை   வீல்   சைக்கிள்  மாதிரி  எதுலயோ  கமல்  எஸ்கேப்  ஆகும்  காட்சி  அநியாய   நீளம்  35  நிமிடங்கள் 


6  எல்லாவற்றையும்  விடக்கொடுமையானது  இந்த  மொக்கையான   15  டயலாக்சை  எழுத  மூவருக்கு  தலா  ரூ 25  லட்சம்  , ஆக  மொத்தம்  75  லட்சம்  சம்பளமா? அய்யோ 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   - கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம், இதுல  அடல்ட்  கண்ட்டெண்ட்  தான்  குறைச்சலா?  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரிலீஸ்  அன்று  வந்த  நெகடிவ்  விமர்சனங்கள்  போல படம்  அவ்ளோ  மொக்கையாக  எல்லாம்  இல்லை . பரவாயில்லை , ஆனால்  முதல்  பாகம்  போல்  10 %  கூட  இல்லை . ஆனந்த  விகடன்  மார்க்  43   குமுதம்  ரேங்க்கிங்  சுமார்   . அட்ரா  சக்க  ரேட்டிங்  2.5 / 5 


 ஈரோடு   சண்டிகாவில்  படம்  பார்த்தேன். இவ்ளோ  நெகடிவ்  விமர்சனங்கள்  வந்தும்  தியேட்டரில் 240  பேர்  ஆடியன்சாக  பார்த்தது  ஆச்சரியம்  கமல்  ஃபேன்ஸ்  ராக்கிங் 


Indian 2
Theatrical release poster
Directed byS. Shankar
Written byS. Shankar
Dialogues byB. Jeyamohan
Kabilan Vairamuthu
Lakshmi Saravana Kumar
Screenplay byS. Shankar
Story byS. Shankar
Produced by
Starring
CinematographyRavi Varman
Edited byA. Sreekar Prasad
Music byAnirudh Ravichander
Production
companies
Distributed bysee below
Release date
  • 12 July 2024
Running time
180 minutes[a]
CountryIndia
LanguageTamil
Budget150 crore[b]

Friday, July 12, 2024

அஞ்சாமை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (மெலோ டிராமா )

 


  நீட் விலக்கு ரகசியம் எனக்குத்தெரியும்  என்று சொன்ன அரசியல்வாதிகள்  கடைசி வரை அந்த ரகசியத்தை வெளியிடாமலேயே  கமுக்கமாக இருக்கும் சூழலில் ஒரு அறிமுக இயக்குநர்  அவரளவில் நீட் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுள்ளார் . சொல்ல வந்த கருத்தை   சிறப்பாக  காட்சிப்படுத்திய விதத்தில் கவனம் ஈர்க்கிறது  ஒரு டாக்டர்தான்  படத்தின் தயாரிப்பாளர்  என்பது கூடுதல் சுவராஸ்யம் 


7/6/2024  முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இபபடம் நல்ல வரவேற்பைப்பெற்றது .இந்த வாரக்கடைசியில் ஓடிடியில் வெளி வர வாய்ப்பிருக்கிறது 

                     


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு சிறுவன் ,அவனது அப்பா  ஒரு பூ வியாபாரி , அம்மா,தங்கை என ஒரு அழகிய குடும்பம் . நாயகனுக்கு  நீட் தேர்வில்  பங்கு பெற ஆசை .விண்ணப்பிக்கிறான் . தமிழ் நாட்டில் இருக்கும்  அவனுக்கு வட மாநிலம் ஆன ஜெய்ப்பூரில் தேர்வு மையம்  ஒதுக்கப்படுகிறது . அப்பாவுடன்  கிளம்புகிறான் .போகும் வழியில் பல டென்ஷன்களுடன்  கடந்தவன்  எப்படியோ  ஒரு வழியாகத்தேர்வு  எழுதி விடுகிறான் .ஆனால் அதீத மன அழுத்தத்தின் காரணமாக  அவனது அப்பா மாரடைப்பில் மரணம் அடைகிறார் 


தன அப்பாவின்  மரணத்துக்குக் காரணம்  இவர்கள் தான்  என சிலரின் மீது போலீசில் புகார் கொடுக்கிறான் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது . பின் என்ன ஆனது ?அவனுக்கு நீதி கிடைத்ததா? என்பது மீதி  கதை 


நாயகன் ஆக கிருத்திக் மோகன் நடித்திருக்கிறார். உணர்ச்சிகரமான நடிப்பு . அப்பாவாக  விதார்த் அருமையான  குணச்சித்திர நடிப்பு இவருடையது . திறமை இருந்தும்  , நல்ல கதைத்தேர்வு அறிவு இருந்தும் ஏனோ அந்த  அளவு சோபிக்காமல் போன  நல்ல  நடிகர்களில் விதார்த்தும் ஒருவர்.( இன்னொருவர்  அருண் விஜய்) 


அம்மாவாக வாணி போஜன் கச்சிதம் . நாயகனுக்கு உதவும் போலீஸ்  ஆஃபீசராக , பின்  வக்கீலாக  மாறும்  ரகுமான் பொருத்தமான  தேர்வு 


நீதிபதி ஆக வரும்  பாலச்சந்திரன்  பல இடங்களில்  சபாஷ் போட வைக்கிறார் .


ராம் சுதர்சனின்  எடிட்டிங்கில் படம் 121  நிமிடங்கள்  ஓடுகின்றது , ஆனால்  பின்  பாதியில் காட்சிகள்  நீளம் /


கார்த்திக்கின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்ணைக்கவர்கின்றன


பாடலக்ளுக்கான  இசை  ராகவ் பிரசாத் .பரவாயில்லை . பின்னணி இசை கலாசந்திரன் . குட் 


கதை , வசனம், இயக்கம்  சுப்புராமன். சமூகத்தின் மேல்  அக்கறை  கொண்ட ஒருவரால் தான்  இது போன்ற  படம்  இயக்க  முடியும்    


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  தன்  அப்பாவுடன்  ரயிலில்  பயணிக்கும்  காட்சிகள்  நாமே  அவர்களுடன்  பயணிப்பது  போல  ஒரு  உணர்வு  உருவாவது  இயக்கத்திற்க்குக்கிடைத்த  வெற்றி 


2  விதார்த்தின்  கேரக்டர்   டிசைன்  அருமை . அவர்  மன அழுத்தத்துக்கு ஆளாவது, மிகக்களைப்பாக உணர்வது  அனைத்தையும்  மனதுக்கு  நெருக்கமாக படமாக்கி  இருப்பது  அருமை 


3  வசனம்  பல  இடங்களில்  சமூக சீர்திருத்தப்பார்வையில்  அமைந்திருக்கிறது 



  ரசித்த  வசனங்கள் 


1   ஒரு அப்பா 100 வாத்தியார்களுக்கு சமம் 


2 செடி வளரும்போது ஆடு , மாடு மேயும் ,அதே செடி வளர்ந்து மரம் ஆன பின்  அதன் நிழலில் அதே ஆடு மாடு வந்து இளைப்பாறும் 


3 பணம்  இருப்பவர்களுக்கு ஒரு சட்டம்,இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்


4  சில விஷயங்களில்  தரப்படும் இழப்பீடு என்பது நடந்த தப்பை  மறைப்பதற்கான லஞ்சம் 



5  கல்வியைகஷ்டப்பட்டு தான் படிக்கணுமா? 


6 இந்த மீடியாக்காரங்க முக்கியமான  செய்தியை சின்னதாதான் போடுவாங்க 


7“சிலம்பம் கத்துட்டு வந்து கத்தி சண்ட போன சொன்னா எப்டி?”, “தகுதித் தேர்வுதான் முடிவென்றால், எதற்கு பள்ளிப் படிப்பு


8  ரயிலில் எதற்கு ரிசர்வேஷன், அன்ரிசர்வேஷன், ஏசி என பாகுபாடு? தகுதித் தேர்வை போல எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான சீட்டை ஒதுக்க வேண்டியது தானே


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அவ்ளோ  செலவு  பண்ணி  தேர்வுக்குத்தயார்  ஆகிறவர்கள்  ரயிலில் போகும்போது  ரிசர்வ்  பண்ணியோ , தட்காலில்  புக்  செய்தோ  போகாமல்  அன் ரிசர்வ்டு  கம்பார்ட்மெண்ட்டில்  பயணிப்பது ஏன்?


2   தேர்வு  நடக்கும்  நாள்  அன்று  தான்  போய்ச்செருவது  போல  கிளம்பனுமா? ஒரு  நாள்  முன்பே  போகலாமே?  லாட்ஜில்  தங்க  பணம்  இல்லை   எனில்  அரசாங்க பூங்காவில் , ரயில்  நிலையத்தில்  தங்கி  சாவகாசமாக  போகலாமே? கடைசி  கட்ட  நெருக்கடியில்  ஏன்  போக  வேண்டும் ?


3   ஒரு  எக்சாம்  நடக்கிறது ,  அதற்கான  ரூல்ஸ்  என்ன  என்பது  அறிவிக்கப்பட்டிருக்கிறது , அதை  ஃபாலோ  பண்ண  வேணாமா? சிவப்பு  சட்டை  அணிந்து  வந்து   அதை  அணியுக்கூடாது  என்பது  தெரியாது  என  ஒரு  மாணவன்  குறை  சொல்வது  சரி  இல்லை . படிச்சவன்  தானே?  ரூல்ஸ்  தெரியாம  ஏன்  வர்றே? என  கேட்கத்தோன்றுகிறது 


4  எக்சாம்  நடக்கும்போது  லேட்டாக  வந்த  விதார்த்  ஒருவர்  காலில்  விழுவது  எல்லாம்  டிராமா  பார்ப்பது  போல்  உள்ளது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சில  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  தரமான  படம்  தான் , பார்க்கலாம்  ரேட்டிங்  3 . 5 


அஞ்சாமை
Anjaamai
இயக்கம்எஸ். பி. சுப்புராமன்
தயாரிப்புஎம். திருநாவுக்கரசு எம்டி
கதைஎஸ். பி. சுப்புராமன்
இசை
  • பாடல்கள்:
  • இராகவ் பிரசாத்
  • பின்னணி இசை:
  • கலாசந்திரன்
நடிப்புவிதார்த்
வாணி போஜன்
ரகுமான்
கார்த்திக் மோகன்
ஒளிப்பதிவுகார்த்திக்
படத்தொகுப்புஇராம் சுதர்சன்
கலையகம்திருச்சித்திரம் புரொடக்சன்சு
விநியோகம்டிரீம் வாரியர் பிக்சர்சு
வெளியீடு7 சூன் 2024
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்