Sunday, July 15, 2018

தமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்

Image result for tamil padam 2.0 posterதன் மனைவியைக்கொண்ண வில்லனை ஹீரோ பழி வாங்கும் அரதப்பழசான கதைதான், ஆனா பல ஹிட் படங்களை நக்கல் அடிச்சு திரைக்கதை அமைச்சிருக்காங்க , இதுல காமெடி என்னான்னா மற்ற படங்களை நக்கல் அடிச்சு சீன் வைக்கறவங்க தன் படத்தை மத்தவங்க நக்கல் அடிக்காதவாறு சாமார்த்தியமா திரைக்கதை அமைக்காம மொக்கை போடறாங்க 


ஹீரோவா சிவா , இவர் கிட்டத்தட்ட தெலுங்கு ஹீரோ மகேஷ் மாதிரி , இடியே விழுந்தாலும் ஒரே ரீ ஆக்சன் தான் , அது  சில இடங்களில் தான் பிளஸ், 


வில்லனா சதீஷ் , காமெடியனாவே மொக்கை போட இன்னும் பழகனும், இதுல வில்லன் ரோல் வேற , ஆனா கெட்டப் வேணா நல்லாருக்கு

 நாயகியா ஐஸ்வர்யா மேனன், காய்ச்சல் வந்த கரகாட்டக்காரன் கனகா மாதிரி  இருக்கு , மொக்கை ஃபிகர் , டூயட் சீன்ல கவர்ச்சி காட்டறப்போ கழுத்து எலும்பு எல்லாம் தெரியுது , முடியல 

பாடல்கள் மொக்கை . படத்துல உருப்படியான வசனங்கள்னு பார்த்தா பொதுவா ஒரு நல்ல படத்துக்கு 20 வசனங்களும், மீடியமான சுமார் ரகபடங்களுக்கு 10 வசனங்களும் , ஃபிளாப் படத்துக்கு 5 நல்ல வசனமாவது தேறும், இதுல 3 வசனம் தான்

ட்ரோல் பண்றதுல முதல் பாகம் அளவு 2 வது பாகம் வர்ல


ஏ செண்ட்டர் ல மட்டும் தான் 25 நாள் ஓடும் 


Image result for iswarya menon hot

ட்ரோல் சீன்ஸ்


ஓப்பனிங் சீன்" விஷால் ,கமல் ட்ரோல் ,ஆம்பள ,தேவர் மகன்


தமிழிசையை கலாய்க்கறாங்க,ஸ்டாலின் வீட்ல ரெய்டு கன்பர்ம்


ரஜினி யை கலாய்க்கறாங்க,ஒரு"பாட்டு பூரா


=


சத்ரியன் பட ட்ரோல்


கமல் நடிச்ச விக்ரம் படத்துல வரும் "யார் அந்த டேவிட் பிள்ள?" ட்ரோல்


ரகசிய பதவி ஏற்பு விழா கலக்கல் காமெடி,OPS ட்ரோல்டு


விண்ணைத்தாண்டி வருவாயா? ஓமணப்பெண்ணே ட்ரோல்டு


ரெமோ ,பர்த்டே பங்க்சன் ட்ரோல்டு


பில்லா அஜித் நயன் ஸ்விம்மிங் பூல் சீன் ட்ரோல்டு


10 சிவாஜி "பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல" ட்ரோல்டு


11 விக்ரம் வேதா "ஒரு கத சொல்லட்டுமா"? ட்ரோல்டு12 குருதிப்புனல் "பயம்னா என்ன?னு தெரியுமா? "ட்ரோல்டு


13 ஹாலிவுட் ஸ்பீடு பஸ் பயணிகள் காப்பாற்றும் சீன் ட்ரோல்டு


14 16 வயதினிலே "இது எப்டி இருக்கு?" ட்ரோல்டு


15 துப்பாக்கி "மொட்டை மாடி தற்கொலை சீன் ட்ரோல்டு


16 முத்து "விடுகதையா இந்த வாழ்க்கை" ட்ரோல்டு


17 சிம்பு ,தனுஷ் ட்ரோல்டு

எவண்டி உன்னை பெத்தான்?
அட்ரா அவள வெட்றா அவள18 வாரணம் 1000 நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ட்ரோல்டு


19 "நீ பற்ற வைத்த நெருப்பு" ட்ரோல்டு20  வேட்டையாடு விளையாடு டெட்டாடி சீன்"ட்ரோல்டு

21 இடைவேளை வரை ஓகே,பி,சி சென்ட்டர் ரசிகர்களுக்கு"புரியறது சிரமம்,எல்லா தமிழ்ப்படங்களையும் பாத்தவங்களுக்குதான் படம்"புரியும்22 ஒருத்தனை அழிக்கனும்னா முதல்ல"அவன் கிட்ட இருக்கற பவரை அழிக்கனும்


23  தர்ம யுத்தம் ops சமாதி சீன் ட்ரோல்டு


24  ஜிப்சி யம்மா கில்மாப்பட சீன் ட்ரோல்டு


25 த டெர்மினேட்டர் ஜட்ஜமெண்ட் டே பாதரச சீன்"ட்ரோல்டு
]

26 பாகுபலி ,24 , ஏழாம்"அறிவு" ட்ரோல்டுImage result for iswarya menon hot
23 

நச் டய;லாக்ஸ்

ஏன் சோகமாயிட்ட?அவ என்ன அல்பாயுசுலயா போய்ட்டா?அமெரிக்காதானே போனா?


எவ்ளோ ஓவராப்போனாலும்"மறுபடி நாம சரக்கு அடிக்கறதில்லயா? அதுமாதிரிதான் காதலும்


3  money money money


அய்யா ,கூப்ட்டீங்களா?
யாருடா நீ?
கெட் அவுட் (மங்காத்தா ட்ரோல்டு)
என் பேரு மணி
ஹெச் ராஜா ட்ரோல்டு


எங்க வந்தீங்க?
சோறு போடறதா சொன்னாங்க போடல,யூ ஆன்ட்டி இந்தியன்


சில படங்கள் ட்ரெய்லர் பிரமாதமா இருக்கும்,படம் மொக்கையா இருக்கும் ,சிலது ட்ரெய்லர்"மொக்கையா இருக்கும்.படம் பிரமாதமா இருக்கும்


சதீஷ் = என் கிட்ட நடிச்சு ஏமாத்திட்ட இல்ல


சிவா = உனக்கு நடிக்கத்தெரியாது,எனக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாதுநாளைல இருந்து "வடசென்னை"யை நீங்கதான்"பாக்கனும்


ஓ,ஏற்கனவே அத பாத்துட்டு இருந்த "வெற்றிமாறன்"?
அவரு "விசாரணை" ல தூக்கி போட்ரலாம்


இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி = அதிமுக வை சினிமா ஹீரோக்களை கலாய்த்த உங்களால் ஏன் திமுக வை கலாய்க்க முடியல? திண்டுக்கல் ஐ லியோனி பக்கா திமுக , அவரோட மாப்பிள்ளை தான் நீங்க என்பதாலா? தயாரிப்புன் தரப்பே திமுக என்பதாலா?

Image result for iswarya menon hot

 தமிழ்ப்படம் 2 − ஆன் லைன்"பிரபலங்கள் பலரும்"சிலாகித்தது போல்"படம் பிரமாதம் எல்லாம் இல்லை,ஓகே"ரகம்.பிட் பிட்டா பாத்த மாதிரி இருக்கு,முழுப்படம்"பாத்த பீலிங்க்"வர்ல.முதல் பாகத்துக்கு கீழே தான்,விகடன்,41 ,ரேட்டிங்க் 2.5 / 5.ஏ சென்ட்டர்ல தான் ஓடும்

Saturday, July 14, 2018

பெஸ்ட் ஆப் இலக்கு

இணையவாதிகள் கவனத்துக்கு திருட்டுக்கும் கொள்ளைக்கும் வித்யாசம் இருக்கு.கொஞ்சமா திருடுனா அது திருட்டு.கோடி கோடியா அடிச்சா/திருடுனா அது கொள்ளை


==============


2 நான் தனிமைல இருக்கேன்
எனக்கு ஆறுதல்"சொல்ல யாரும்"இல்ல என்னை புரிஞ்சிக்கிட்டவங்க"யார் இருக்கா? மனம்,விட்டு அழ ஒரு மடி வேணும் இந்த மாதிரி FB ல ஸ்டேட்டஸ் போடறதெல்லாம் ஒரு டெக்னிக் தான்.(இன்ட்டர்)நெட் னாலே வலை தான்.அதுலயே இன்னொரு வலை


===========


3 டாக்டர்,வெள்ளை முடிக்கு எதாது தீர்வு இருக்கா?. அதிகமாகிட்டே போகுது. டை அடிக்க வெச்சிடும்போல..
டை கெமிக்கல்.சைடு எபக்ட்.இயற்கை வழி மருதாணி பெஸ்ட்.அஜித் ,ரஜினி மாதிரி இயற்கையை ஏத்துக்கிட்டு அப்டியே விட்டா நல்லது,விஜய்மாதிரி யூத் ஆக காட்டிக்க டை அடிச்சா பின் விளைவுகள்"i am waiting"


============


4 மழையை,இயற்கை"வளங்களை போட்டோ/வீடியோ அப்டேட் பண்றவங்க காருக்குள்ள உக்காந்துட்டு கார் கண்ணாடி வழியா காட்ற நோக்கம் கார் இருக்குங்கறதை காட்டத்தானே?டவுட் டேவிட்


==============


5 பொம்பள ஷோக்கு கேட்குதா?னு சில பெருசுங்க கிராமத்துல சக பெருசுங்களை கிண்டல் பண்றப்ப லேடீஸ் ஜோக்ஸ் னு நினச்ட்டேன்


============


6 பேஸ்புக் லைவ் பேட்டி ல ஜெ தீபா பிரமாதமான மேக்கப்.இந்த மாதிரி திரட்டி சுத்தற மாமன் பொண்ணுங்கதான் அலங்காரமா இருப்பாங்க

==========


7 டாக்டரா இருக்கற/ஆகப்போற பொண்ணுங்க கிட்ட நெட் தமிழன் dr dr னு மென்சன் போடறப்ப அவங்க டாக்டர்னுதான் தன்னைக்கூப்பிடறாங்கனு நம்பி புளகாங்கிதப்படுவாங்க.அவன் மனசுக்குள்ள டியர்னு நினச்சுதான் கூப்பிடுவான்


============


8 உன்னை எல்லாம் எவ்வளவு
பெரிய ரௌடினு நெனச்சேன் பொம்பள புள்ள ஸ்மைலி ரிப்ளை போட்டதுக்கு ஆனந்த கண்ணீர் வடிச்சிட்டு இருக்க? என்னமோ போ. ஏம்மா மின்னல்.எத்தனை டைம் சொல்றது?இதெல்லாம் ஆம்பளைங்களோட டெக்னிக்,இது புரியாம வாழ்வினிது அல்வா இனிது ன்னுட்டு


============


9 உடல் ஆரோக்யத்துல நமக்கே அக்கறை வேணும்.காதலி சொன்னதுக்காக 10 வருசமா சரக்கு அடிச்சுப்பழகுன குடியை விட்டேன் னு"சொல்றவங்களை நம்பி காதலி போனா எதிர்காலத்தில் இவரை,விட அழகான பொண்ணு சொன்னார் னு இவரை விட மாட்டார்னு என்ன நிச்சயம்? ஆண்கள் சைக்காலஜி


===========


10 சீக்கிரம் அழுக்கு ஆகவும் கூடாது,அப்டியே ஆனாலும் வெளில தெரியக்கூடாது.எல்லா கலர் சர்ட்டுக்கும் மேட்ச் ஆகனும்.ஆண்களுக்குக்கிடைத்த வரப்பிரசாதம்தான் கறுப்புக்கலர் பேண்ட்


================


11 இண்ட்டர்வ்யூலயோ,போட்டியிலோ பங்கேற்பவர்கள்கிட்டே பெஸ்ட் ஆப் லக் சொல்வதை விட பெஸ்ட் ஆப் இலக்கு என்பதே சரி


==============


12 பிரித்விராஜ் −பார்வதி யின் my story நடிகை காஞ்சனமாலாவின் உண்மைக்கதை என்றாலும் இப்பதான் ரிலீஸ் ஆன சாவித்ரி (மகாநதி தெலுங்கு /நடிகையர் திலகம்)யின் கதையும் ஒரு நடிகையின் கதை என்பதால் எடுபடுவது சிரமம்.கேப் விட்டு வந்திருக்கலாம் .அது போக மாய நதி என்று ஒரு மலையாளம் இதே கதை


=============


13 நடைபயிற்சிக்கு இயற்கை அளித்த இலவச பூமிப்பரப்பு கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தந்திருந்தாலும் நம்மாளுக ஜிம்ல பணம் கட்டி டிரட்மில்லில்தான் நடப்பேன்னு அடம் பிடிக்கறாங்க


================


14 டாக்டர் , Coconut milk குடிச்சா Hair white ஆகாது...னு சொல்றாங்களே ,அது உண்மையா?
அது உண்மையா இருந்தா தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கேரளாவில் பெண்களுக்கு முடியே நரைக்கக்கூடாதே?


===============


15 நீ விஐபி ஆக என்ன வழியோ அந்த வழியில் செல்.அரசியல்,சினிமா விஐபி களுடன் நின்று போட்டோ எடுத்து பெருமைப்படாதே!


================


16 கேரளா−கோட்டயம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.காலை 5 மணி யிலிருந்து இரவு 7 வரை தொடர் மழை.மழைநீர் சேகரிப்பு மிகச்சிறந்த வகையில்.விவசாயிகளுக்கு கொண்டாட்டம்


==============


17 இந்த வார ரிலீசில் பலராலும் சிலாகிக்கப்படும்/எதிர்பார்க்கப்படும் தமிழ்ப்படம் 2 வை விட யாராலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படாத கடைக்குட்டி சிங்கம் ஹிட் ஆகிடும் என எதிர்பார்க்கிறேன்

==============18 மழை வந்தால் காதலர்களுக்கு,புதுமணத்தம்பதிகளுக்கு கொண்டாட்டம்,ஆனால் சாலையில் பயணிப்பவர்களுக்கு திண்டாட்டம்,விபத்துக்கள் அதிகம் நிகழ வாய்ப்பு.குடிசை மக்களுக்கு உள்ளே புகுந்த மழைநீரை இரைத்து வெளியே ஊற்ற வேண்டிய அவலம்

===============19 கேரளா வில் எந்த ஹோட்டல் ,மெஸ் போனாலும்"குடிக்க சீரகத்தண்ணீர்தான்,நோய் எதிர்ப்பு சக்தி ,காய்ச்சல் தவிர்ப்புக்கு உகந்தது.சுடுதண்ணீர் + சீரகம் ஜீரணத்துக்கும் நல்லது

=============


20 கேரளாவில் கிணறு ,நீர்த்தொட்டிகளுக்கு கொசு வலை போர்த்துகின்றனர்,நல்ல ஐடியா=============


கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

Image result for kadai kutty singam


ஹீரோவுக்கு அத்த பொண்ணு , மாமன் பொண்ணு , அக்கா பொண்ணுங்க மட்டும் கிட்டத்தட்ட 6 இருக்கு, இந்த முறைப்பொண்ணுங்கள்ல யாரைக்கட்டுவாருனு எல்லாரும் அடிதடி போட்டுட்டு இருக்கும்போது ஹீரோ பார்த்தேன் ரசித்தேன் லைலா மாதிரி ஒரு  பஸ் ஃபிகரை லவ்வறாரு, இதை வெச்சே இடைவேளை வரை ஓட்டிடறாங்க , படமும் ஜாலியா கலகலப்பா போகுது


 அதுக்குப்பின் தான் இயக்குநருக்கு சறுக்கல், பின் பாதியில் ஹீரோ அந்த முறைப்பொன்னுங்களோட அம்மாக்களை கரெக்ட் பண்ண வேண்டிய சூழல், அதாவது அவங்களை சமாதானப்படுத்தனும். ஓவர் செண்ட்டிமெண்ட் உணர்ச்சிக்குவியல், வலிய திணிக்கப்பட்ட சீரியல்  காட்சிகள்


ஹீரோவா பருத்தி வீரன் கார்த்தி , அசால்ட்டா ஜெயிக்கிறார், இதே போல் ஆல் இன் ஆல் அழகுராஜாவில்  3 பொண்ணுங்களோட கும்மாளம் போட்டிருக்கார். இதுல யும் ஜாலி பட்டாசுதான் , பின் பாதியில் பாசக்குளம்


ஹீரோயினா சாயிஷா,. செழுமை பத்தலை. பாவமா இருக்கு, ஹீரோயின்னா பார்த்தா கிளுகிளுப்பு வரனும்


காமெடிக்கு சூரி
 ஓக்கே ரகம்

சத்யராஜ் அப்பா கேரக்டர், அசால்ட் பண்ணிட்டார்


 படத்தின் பெரும் பலம் வசனங்கள் , விவசாயத்தைப்போற்றும் பிரமாதமான வசனங்கள் ட்விட்டர் , வாட்சப் , பேஸ்புக்னு ஆங்காங்கே உருவி இருக்காங்க, இருந்தாலும் ஓக்கே 


வில்லன் தண்டம்

ஒளிப்பதிவு பிரம்மாண்டமான ரேக்ளா சீனுக்கே பாஸ் மார்க் வாங்கிடுது, இசை  ஓக்கே ரகம்


 ஃபேமிலி ஆடியன்சுக்கு பிடிக்கும்

Image result for kadaikutty singam heroine


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பெண் குழந்தைகளா தொடர்ந்து பிறப்பதால் 3 சம்சாரம் கட்றாரு ங்கற தவறான முன்னுதாரணத்துடன் கதை ஆரம்பிக்குது


ஆண் குழந்தை பிறக்கலை னு 3 சம்சாரம் கட்றவரு அதே காரணத்துக்காக தன் சம்சாரம் 3 புருசன கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?


ரேக்ளா ரேஸ் சீன் தமிழ் சினிமா ல பிரம்மாண்டமா காட்னது கடைசியா "உழவன் மகன்" ல ,அதுக்கு அடுத்து இப்ப தான் கிராபிக்ஸ் இல்லாத நிஜ ரேக்ளா


சின்னக்கவுண்டர் ,எஜமான் படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளி விட்டு கிராமத்து செண்ட்டிமெண்ட்ஸ்

ஹீரோயின் டயலாக் பேசும்போது செயற்கை தட்டுதே?

கோவில் ல விளக்கு வைக்கும் சாதா சீனைக்கூட பிரம்மாண்டமா காட்னது
ஆடி வெள்ளி
சிநேகிதியே
குங்குமச்சிமிழ்
தேவதை

அழகன் (கோழி கூவும் நேரம் ஆச்சு)் ,சத்ரியன் (மாலையில் யாரோ மனதோடு பேச) ல பானுப்ரியா வை கிளுகிளுப்பா பாத்துட்டு வயசான லேடியா பாக்க சங்கட்டமா இருக்காது?


ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க இருந்தும் அவங்கள கட்டாம மனசுக்குப்பிடிச்ச பொண்ணை கட்ட போராடும் ஹீரோவின் கதைதான்,ரொம்ப சாதா கதை,திரைக்கதை தான் காப்பாத்துது  (இடைவேளை)

நாயகி சாயிஷா நைட்டி போஸ்ல கனகா மாதிரி இருக்கு,தமிழர்களுக்கு பிடிக்காத நோஞ்சான் பிகர்


10 பின் பாதி ஓவர் செண்ட்டிமெண்ட் காட்சிகள் ,முடியல.ஆனா பெண்களுக்குப்பிடிக்கும்

11 சீரியல் ஓடீட்டிருக்கு.தியேட்டர்ல பொண்ணுங்க கண்ல தண்ணி
Image result for kadaikutty singam heroine
நச் டயலாக்ஸ்


எல்லாருக்கும் பத்திரிக்கைல பேருக்குப்பின்னால பட்டம் இருக்கு?எனக்கு இல்ல?

நீங்க படிக்கலையே?
டாக்டர்க்கு Dr னும் ,எஞ்சினியருக்கு Er னும் போடறீங்க,எனக்கு விவசாயி னு பட்டம் போடலாமில்ல?


ரிடையர்மெண்ட்டே இல்லாத ஒரே தொழில் விவசாயம் தான்,விவசாயத்தோட பாரம்பர்யத்தைக்கூட சொல்லிப்புரிய வைக்க வேண்டி இருக்கு
சொத்து சேர்க்கறது மட்டும் சேமிப்பு இல்ல,சொந்தத்தை சேர்த்து வைப்பதும் சேமிப்பு தான்


யார் வீட்ல வேணா பொண்ணு கட்டலாம்,சொந்தத்துல மட்டும் பொண்ணு கட்டக்கூடாது


விவசாயி களோட கஷ்டம் புரியனும்னா ஒரு நாள் விவசாயி யா வாழ்ந்து பாருங்க,இல்ல விவசாயி கூட இருந்து பாருங்க


இதுக்கு முன்னால இந்த பிகரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே?

அழகான பொண்ணுங்களை எங்கே பார்த்தாலும் எங்கேயோ பாத்த மாதிரி தான் இருக்கும்


நல்ல நெல்லும் நல்ல சொல்லும் ஒண்ணு.நல்ல இடத்துல விதைச்சா 100 மடங்கு பெருகும்


ஒரு விவசாயி செத்தா எதிர்காலத்துல லட்சம் பேர் சாவான்


விவசாயி க்கு பொண்ணு தர யோசிக்கறாங்க.அதிகமா படிச்சு அதிகமா சம்பாதிக்கறவனை விட விவசாயிதான் சிீறந்தவன் னு உணரும் காலம் வரும்

10 பலத்தை காட்றவன் பலசாலி இல்லை,தன் பலவீனம் என்ன?னு மத்தவங்களுக்கு காட்டாம இருக்கறவன் தான் பலசாலி

11 நாம ஆரோக்யமா இருக்கறவரை தெரியாது
உடம்பு சரி இல்லாம படுக்கும்போதுதான் சொந்தக்காரங்க மகிமை தெரியும்


12 மத்தவங்களை அழ வைக்கறவன் தானும் ஒரு நாள் அழுவான்

13 கோபம் மனசுல இருந்தா கொட்டீட்டுப்போயிடுங்க,ஏன்னா கோபம் குப்பை மாதிரி


14 சூழ்நிலை சில சமயங்கள்ல பிரச்சனைகளை தானா சரி பண்ணிக்கும்

15 விவசாயிங்க யாராவது அந்தக்கூட்டத்துல இருந்தா வெளில வந்துடுங்க
ஏன்?
ஏற்கனவே அரசு விவசாயி வயித்துல அடிச்சிடுச்சு ,நான் வேற அடிக்கனுமா? ( இந்த வசனத்து ல சென்சார் "அரசு" ம்யூட்

16கடைக்குட்டி சிங்கம் @ கேரளா,கோட்டயம் அனுசுரா
950 கெபாசிட்டி
465 அட்டெண்டெண்ஸ்


சி பி கமெண்ட் - கடைக்குட்டி சிங்கம் − விவசாயத்தை தூக்கிப்பிடிக்கும் முற்போக்குத்தனமான வசனங்கள் ,ஜாலி யான முன்பாதி,ஓவரான பேமிலி செண்ட்டிமண்ட,பிற்போக்குத்தனமான ் காட்சிகள் பின் பாதி,பெண்களுக்குப்பிடிக்கும்.பி & சி ல கல்லா கட்டும்,விகடன் 42 , ரேட்டிங் 2.75 / 5

Friday, July 13, 2018

கங்கைல குளிச்சா பாவம் எல்லாம் போய்டுமா?

"பரு"வ அழகிக்கு சிறந்த உதா சாய்பல்லவி


==========


2 பொருளின் தள்ளுபடி தொகையை அப்பொருளின் விலைபோல் அச்சிடப்படுவது ஏமாற்றா?நுட்பமா?
மக்களின் அறியாமையைப்பயன்படுத்தும் மார்க்கெட்டிங்க் டெக்னிக்


============


3 குருவே!அன்பை மறைப்பதில் பெண்கள் எல்கேஜி.. ஆண்கள் பிஎச்டி. என்பது உண்மையா?
ஆண்களின் அன்பு முட்கள் நிறைந்த பலாப்பழத்தில் உள்ள சுளை போல பெண்கள் அன்பு கிலாக்காய் போல===========


4 டாக்டர் ,பசிக்கு அல்வா சாப்பிட்றது
வரமா சாபமா...? அல்வா சாப்பிடறது உடல் நலனுக்கு கெடுதல்,ஏன்னா அதுல அஸ்கா சர்க்கரை இருக்கு,அதுல கெமிக்கல் கலந்திருக்கு,அதை விட கெடுதல் அல்வா குடுப்பது


==========


5 வாட்சப்பில் உலா வரும் "ஷேர் மார்க்கெட் முதலீடு செய்ய ஆள் பிடிச்சுத்தந்தா கமிஷன்,வட்டி அனைத்தும் வதந்தி,பொய்,நம்பி விடாதீர்கள்.மோடி தந்த 15 லட்ச டெபாசீட் வாக்குறுதி போல இது


=============


6 அடிச்சுப்போட்டது மாதிரி அசதியா இருக்கு என புலம்பத்தகுதியானவர்கள்
கூலித்தொழிலாளிகள் சுமைதூக்கிகள் விவசாயிகள் புரோட்டா புரோட்டா மாஸ்டர்


===============


7 Respected sir ,
here i sent "unfaithful"(2002) dvd . your's faithfully Cps


============


8 அழகான பொண்ணுங்க பணத்துக்கும்,சொத்துக்கும்,நிலபுலன்களுக்கும் ஆசைப்பட்டு கழுத்தை நீட்ற மூஞ்சிகளைப்பாத்தா லாங்க் ஷாட்ல நமக்கே வாமிட் வர்ற மாதிரி இருக்கு,க்ளோசப்ல எப்டி சகிச்சுக்கறாங்களோ?பாவம்


===========


9 குருவே!கங்கைல குளிச்சா பாவம் எல்லாம் போய்டுமா?
பல பாவிங்க டெய்லி அங்க வந்து குளிக்கறாங்க,அவங்க பாவம்/ அழுக்கு ஒட்டாம இருந்தாலே அதிசயம்


=============


10v நோட்டீஸ் எதிரொலி - சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டர் நீக்கம் வரும் ,எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சே பரபரப்புக்காக எதுனா பண்ணிட்டு இருக்கறவங்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச தண்டனை தரனும்


============


11 மாமிசப் பிரியரானாலும்
ஏதோவோர் பிராணி துடிக்கையில் நம் இதயமும் சேர்ந்து துடிக்கிறது! அப்டி துடிக்கறது உண்மைன்னா அசைவத்துல இருந்து சைவத்துக்கு மாறனும்.நூத்துல ஒருத்தர் மாறுனதுண்டா?


==============


12 இந்த லைக் பண்றவங்க தொல்லை தாங்கல... எல்லாத்தையும் லைக்கிட்டே இருக்கானுங்க
பொண்ணுங்களை லைக் பண்ணாதான் பிகு பண்றாங்க,பொண்ணுங்க FB ல போடற ஸ்டேட்டஸ்க்குக்கூட லைக் போடக்கூடாதுன்னா எப்டி?


==============


13 பிரபல எழுத்தாளர் சுபா அவர்கள் நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு வசனம் எழுதுனதுக்கான சம்பளம் வெறும்"ஒரு லட்சம்தான்னு ஒரு பேட்டி ல சொல்லி இருந்தார்.100 படங்களுக்கு வசனம் எழுதுனாலும் அதிகபட்சம் 1 கோடி சம்பாதிக்கலாம். ஒண்ணே முக்கால் லட்சம் கோடி சம்பாதிக்கனும்னா......


==========14 திருப்பூர்ல டையிங்க் மாஸ்டர்கள் ,கட்டிங்க் மாஸ்டர்கள் சர்வசாதாரணமா மாத சம்பளம் ரூ 50,000 −60,000 வாங்கறாங்க (கல்வித்தகுதி 10th ,12th).அனுபவ அறிவு முக்கியம்கறதுக்கு நல்ல எ.கா (தீபாவளி போனஸ் 2 மாச சம்பளம்)


==============


15 கடன்அன்பைமுறிக்கும்" அறிவிப்புபலகை வைக்க கூடாத இடங்கள்
1 பேங்க் லோன் செக்சன் 2 பைனான்ஸ் கம்பெனி 3 சீட்டுக்கம்பெனி 4 அடகுக்கடை


================


16 சிவகார்த்திகேயன் ன் புது கெட்டப் தர்மதுரை ரஜினி போல் நல்லாதான் இருக்கு,ஆனா சி கா வின் ப்ளஸ் வரு. வாலி. சங்கம் போல் ஜாலி லுக்தான்.அவர் மாஸ் ஹீரோ இமேஜ்க்கு ஆசைப்பட்டு தன் ஒரிஜினலை இழக்கப்போகிறார்.இதே தவறை சந்தானமும்.


==============


17 வடிவேலு,சந்தானம் இவர்களிடம் மக்கள் ரசித்தது காமெடியைத்தான்,ஹீரோயிசத்தை அல்ல.வழி மாறியதால் அவர்களுக்குப்பின்னடைவு.சி.கா வுக்கு காதல்,காமெடி,கலாட்டா நல்லா செட் ஆகிடுச்சு.இவராவது பாதை மாறாமல் இருந்தால் தேவலை (ரெமோ,சயின்ஸ் பிக்சன் பிலிம் போல் பரீட்சார்த்த முயற்சி அப்பப்ப ok)


==============


18 படைப்பை மட்டும் பாருங்க, படைப்பாளி நமக்கு வேண்டப்பட்டவனா? நமக்கு மொய் வைக்கறானா?இல்லையா?இதெல்லாம் பார்த்துட்டு இருந்தா அரசியல்வாதிகளுக்கும் , நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்,

==============


19 குருவே! இங்கு தொடர்ந்திருக்க மகிழ்ந்திருக்க நட்பு லவ் க்ரஷ் இன்னும் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது .னு ஒரு கருத்து நிலவுதே , அது உண்மையா? அதெல்லாம் எதுவுமே இல்ல, நம்ம கருத்தை வெளிப்படுத்தும் இடம் தான் இது, யாரையும் சார்ந்திருக்க அவசியம் இல்லை


==============


20 குழந்தையும் தெய்வமும் ஒண்ணு. ரெண்டு பேருமே கைல வச்சிருந்தும் நம்ம கேக்குறத தர்றதே இல்லை.
எப்பவும் கொடுத்துப்பழகுங்க, அன்பை, அரவணைப்பை, பக்தியை, உங்களுக்கு வர வேண்டியது தானா வந்து சேரும்


=================