Friday, January 01, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 1/01/2016 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

1 மாலை நேரத்து மயக்கம்


புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'மாலை நேரத்து மயக்கம்'. கதையை செல்வராகவன் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தைப் பின்னணியில் இருந்து செல்வராகவன் இயக்கியுள்ளார் என்கிற வதந்திகளுக்கு, இயக்குநரும் செல்வராகவனின் மனைவியுமான கீதாஞ்சலி செல்வராகவன் ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:


இந்தப் படத்துக்காக எந்தளவுக்கு நான் உழைத்துள்ளேன் என்று எனக்குத்தான் தெரியும். பல இரவுகள் தூங்காமல் நானும் என் குழுவினரும் உழைத்துள்ளோம். இந்நிலையில் அத்தனைப் பெருமையையும் அவருக்கு அளிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இந்த வதந்தியினால், நாங்கள் இந்தப் படத்துக்கு எந்தவிதத்திலும் பங்களிப்பு செய்யவில்லை என்றாகிறது. ஆனால், இந்தப் படம் உருவாக நாங்கள் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். இந்தப் படத்துக்கு அவர் கதை அளித்ததற்காக நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக பின்னணியில் இருந்து அவர்தான் இந்தப் படத்தை இயக்கினார் என்று சொல்வது நியாயமேயில்லை என்றார்.
வாலிப ராஜா


சந்தானம், சேது, விஷாகா, விடிவி கணேஷ், சீனிவாசன் இணைந்து நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா கரன்சியை அள்ளியது. அதே கூட்டணிதான் வாலிபராஜாவிலும். கூடுதலாக சித்ரா லட்சுமணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உள்ளனர்.
"இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்" என்றார் சாய் கோகுல் ராம்நாத். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.
சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். 
அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.

சந்தானம், சேது, விஷாகா, விடிவி கணேஷ், சீனிவாசன் இணைந்து நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா கரன்சியை அள்ளியது. அதே கூட்டணிதான் வாலிபராஜாவிலும். கூடுதலாக சித்ரா லட்சுமணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உள்ளனர்.
"இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்" என்றார் சாய் கோகுல் ராம்நாத். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.
சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். 
அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.




‘தற்காப்பு’

புதிய கோணத்தில் போலீஸ் கதை ‘தற்காப்பு’
போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் தற்காப்பு. போலீசுக்கும் போலீசுக்கும் மோதல், போலீசுக்குள் போலீஸ் என்று போகிற கதை இது. காக்கிச் சட்டை அணிந்து பணியாற்றும் முன் போலீசுக்குள்ள கடமை பொறுப்புகளைப் பேசுகிற படம்தான் இது.

இதில் நாயகனாக சக்தி வாசுவும், நாயகிகளாக வைஷாலி, அமிதா நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி தோன்றுகிறார். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய எஃப்.எஸ். ஃபைசல் இசை அமைக்கிறார். ஆர்.பி.ரவி இயக்கி உள்ளார். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். கினெடாஸ் கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் ஆர்.பி.ரவி கூறியதாவது:
இன்றைக்கு ஒரு போலீசால் நியாயமாக நேர்மையாக இருக்க முடியாத சூழல் இருக்கிறது . ஏன் போலீஸ் நல்லவனாக இருக்க முடியவில்லை?அவர்கள் இருப்பதில்லையா? இருக்க விடுவதில்லையா? காரணம் அமைப்பா, சமூகமா, மக்களா? எல்லாவற்றையும் அலசுகிறது இப்படம். இந்தப் படத்தில் அரசியல் உள்ளது. அரசியல்வாதிகள். இல்லை. ஏன் கரை வேட்டியுடன் கூட ஒருவர் படத்தில் வரமாட்டார்கள்.ஆனாலும் அரசியல் உள்ளது என்கிறார்.

பேய்கள் ஜாக்கிரதை’. 


தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களும் தற்போது பாடகர்களாகவும் உருமாறி வருகின்றனர். சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் பாடகர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் களமிறங்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் சரணிடம் இணை இயக்குனராக பணியாற்றி, தெலுங்கில் சில படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக தமிழில் இயக்கும் புதிய படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா, ஜான் விஜய், ‘பிளாக்’ பாண்டி ஆகியோரும் நடிக்கின்றனர்.


இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலை தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடியதோடு மட்டுமில்லாமல், இப்படத்தில் அந்த பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளனர். போட்டி பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை கவிஞர் விவேகா எழுத, மரிய ஜெரால்டு என்பவர் இசையமைத்திருக்கிறார். மாஸ்டர் அசோக்ராஜா நடனம் அமைத்திருக்கிறார். இப்பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’


எந்த பிரச்சினை பற்றி பேசினாலும், அதில் நான்கு பேருடைய கருத்து என்ன? என்பதை பற்றியும், அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்பதை பற்றியும் கவலைப்படும் சமுதாயம் இது. இதே கருத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். புதுமுகம் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக புதுமுகம் தேவிகா மாதவன் நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர்–நடிகைகள் பலர் பங்கு பெறுகிறார்கள். மாதவன் டைரக்டு செய்கிறார். இவர், சிதம்பர ரகசியம், பரமபதம் ஆகிய டி.வி. தொடர்களை இயக்கிய நாகாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

படத்தை பற்றி இவர் கூறும்போது, ‘‘துன்பங்கள் வருவது இயற்கை. அதையும் மீறி சிரிக்க வேண்டும் என்பதுதான் மனித வாழ்க்கை. சமீபத்திய இயற்கை சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு இந்த படம் சிறந்த மருந்தாக அமையும்’’ என்றார்.





6  
கோடை மழை-
DPP_1783‘கோடை மழை’ என்னும் பெயரில் புதுப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இதில் கண்ணன் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் களஞ்சியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கதிரவன் இயக்கியிருக்கிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு சாம்பசிவம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் கதிரவன் பேசும்போது, ‘கோடை மழை’ எனக்கு முதல் படம். நான் பிரபு தேவாவிடம் உதவியாளராக பணிப்புரிந்திருக்கிறேன். நாயகன் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் கோடை விடுமுறையில் தன் ஊருக்கும் வரும்போது, மழை காலத்தில் ஊருக்கு வரும்போது, கதை உருவாக்கப்பட்டிருப்பதால் ‘கோடை மழை’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். களஞ்சியம் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
படத்தில் நெகட்டிவ் ரோல் கிடையாது. காதல் இருந்தாலும் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்திருக்கிறேன். 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நாளை இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது. 1ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
நான் சங்கரன் கோவில் ஊரில் பிறந்தவன். இந்த ஊரில் அதிக பேர் ராணுவத்திலும், போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள மக்களின் கதையை எடுக்க ஆசைபட்டேன். அதன்படி ‘கோடை மழை’ படத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என்றார்.



7    கரையோரம்

Nikesha Patel is looking forward to the release of Karaiyoram, directed by JKS. Interestingly, the film is being made in two other languages — Alone (Kannada) and Leela (Telugu). Nikesha says, “In the movie, due to a misunderstanding with my family, I spend a night at a friend’s beach house and realise that I am trapped there without any way of escaping. Things get tougher as I have no means of communicating with the outside world. That’s what makes the film thrilling.” The director says the film is meant to thrill rather than scare. Nikesha, Iniya and Simran (she plays a cop), who are common to all the three languages, play the lead roles.

Karaiyoram a Thriller Tamil Movie Revolves Around a Beach Resort

8  அழகு குட்டி செல்லம்-இயக்குநர் சார்லஸ்


நகைச்சுவை நடிகர்களில் தனக்கு என்று தனிபாணியை கடைபிடிப்பவர் கருணாஸ். நந்தா படத்தில் இவர் நடித்த ‘லொடுக்குபாண்டி’ கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த கருணாஸ் தற்போது நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் குணச்சித்ர வேடங்களில் நடித்து இருக்கிறார். இதில், கருணாசுடன் அவரது மகன் கென் நடித்திருக்கிறார். இந்த படத்தில் 5 சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் செய்யும் குறும்பும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. இவர்களில் ஒருவராக கருணாஸ் மகன் கென் நடித்திருக்கிறார். இதுபற்றி சிறுவன் கென்னிடம் கேட்டபோது, ‘‘இந்த படத்தில் நடிக்கும் 5 சிறுவர்களில் நானும் ஒருவன். டைரக்டர் சார்லஸ் சார் எங்களை மிகவும் சிரமப்பட்டு நடிக்க வைத்தார்.
எங்களிடம் மிகவும் அன்பாக பழகினார். படப்பிடிப்பின் போது நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்தோம். கலகலப்பாக பழகினோம். படப்பிடிப்புக்கு போனது சுற்றுலா சென்றது போல இருந்தது. எனது அப்பா நடிக்கும் படத்தில் நானும் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் எங்கள் மீது அக்கறை காட்டினார்கள். இந்த படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். டைரக்டர் சொன்னபடி நடித்தேன். நான் தொடர்ந்து நடிப்பது பற்றி அப்பா தான் முடிவு செய்வார்’’ என்று சொல்லிட்டு கள்ளமில்லாமல் சிரித்தார் கென்.







9   மீனாட்சி காதலன் இளங்கோவன்




தற்கொலை செய்து கொண்ட காதலர்களுக்கு நண்பர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முயலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு தயாராகியுள்ளது ஒரு படம்.
காதல் அல்லது பேய், இந்த இரண்டிற்கும் தமிழ் சினிமாவில் எப்போதுமே மவுசு உண்டு. காதலில் பலவகைகளை நம் இயக்குநர்கள் படம் பிடித்து காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்ப்புகளால் தற்கொலை செய்து கொள்ளும் காதலர்களுக்கு, சொர்க்கத்தில் அல்ல, பூமியிலேயே திருமணம் நடந்ததா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்.
காதல் நிறைவேறாத ஜோடிகள் தற்கொலை செய்யும் கதை வந்திருக்கிறது. அப்படி தற்கொலை செய்துகொண்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் ஷாக் கதையுடன் உருவாகி உள்ளது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்'.



10  பாய்ண்ட் பிரேக் - அச்சம் தாண்டி உச்சம் தொடு



டிஸ்கி - தியேட்டர்கள் கிடைக்காததால் 10 ல் 7 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகுது

0 comments: