Thursday, June 27, 2019

ஆசை தோசை அப்பள வடை

1  லோக்சபா தேர்தலில்,  மோடியின் பிரபலத்துக்கு முன்பாக, எவராலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை- சல்மான் குர்ஷித்: 

நீங்க காங்கிரசா? பாஜகவா?திடீர்னு டவுட்

============

2  . இதை ஒப்புக் கொள்ளாவிட்டால், தேர்தலையே புறக்கணிப்பதாக அமைந்துவிடும்.-சல்மான் குர்ஷித்:

தேர்தல் முடிவையே என்பதே சரி

\============ உயர் நீதிமன்றத்தில், தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி, அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும்.-  ராமதாஸ்

 நாட்டுக்கு ரொம்ப முக்கியம். தண்ணீர் பிரச்சனை தண்ணி காட்டிட்டு இருக்கு, அதைக்கவனிங்க 

=============
4  : காங்கிரஸ் தொண்டர்கள், லோக்சபா தேர்தல் தோல்வியால் சோர்வடைய வேண்டாம். மக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே, அவர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் - பிரியங்கா

ராகுல் தலைவர் தானே? தொண்டர்னு குறிப்பிடறாரு?

==============

போதிய மழையின்றி, சென்னையின் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

40 ஏரிகளின் மேல் பில்டிங் கட்டிட்டா எப்படி தண்ணி இருக்கும்?

==============
6  அதற்கு மாற்று ஏற்பாடாக, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம். -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

சென்னையின் தண்ணீர் தேவை ஒரு நாளுக்கு 4 கோடி லிட்டர், நீங்க பண்ற சப்ளை 10% கூட வராது
==============
7   இதில், சிலர் அரசியல் செய்கின்றனர். 'வேலுாரிலிருந்து தண்ணீர் கொண்டு சென்றால், போராட்டம் நடக்கும்' என்றார், தி.மு.க.,  துரைமுருகன். மக்களிடம் எதிர்ப்பு வந்ததால், 'நான் சொல்லவில்லை; மக்கள் போராடுவர்' என, மாற்றி பேசுகிறார். -தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

அதிமுக வுக்கு திமுக தண்ணி காட்டுது போல 

====================
8  சென்னைக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதே, துரைமுருகனின் நிலைப்பாடு.-தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி 

கழகம்னா கடமை கண்ணியம் கட்டுப்பாடு
ஆனா புரிஞ்சுக்கலை தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாடு

=============

9    சந்திரபாபு நாயுடு, தேர்தலில் இம்முறை, தனித்துப் போட்டியிட்டார். ஆனால், மக்களுடன் எப்போதுமே அவர், கூட்டணி வைக்கவில்லை; மக்கள் மன உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டார்.-நடிகை ரோஜா:

 மக்களுடன் கூட்டணி என அறிவிச்ச கேப்டனின் ம ந கூ கூட தோல்விதானே? 
============
10   நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 23 தொகுதிகளிலும், லோக்சபா தேர்தலில், மூன்று தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் வெற்றி பெற்றுள்ளது. இது தான், அவரது கட்சியின் உண்மையான பலம்.0நடிகை ரோஜா:


அரசியல்வாதிகள் தங்கள் பலத்தை  தேர்தல் முடிவுக்கும் முன் அறிந்து கொள்ள  முடியாதது  அவர்கள் பலவீனம் 

===============
11   கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம், அ.தி.மு.க., இதில், சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஜெ., காலத்திலும், கோஷ்டி பூசல் இருந்தது; இப்போதும் இருக்கிறது. ஆனால், கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை.-அமைச்சர், ஜெயகுமார்


இல்லைன்னா அரசியல்வாதி அகராதில இருக்குனு அர்த்தம்

=============

12  ஜெ., இல்லாத சூழ்நிலையிலும், இவ்வளவு துாரம் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறோம். கட்சியின் முடிவுக்கு, எல்லாரும் கட்டுப்படுவோம்.-அமைச்சர், ஜெயகுமார்

வேற வழி? முடிவுக்கு கட்டுப்படலைன்னா ஆட்சி கலையும், பதவி போய்டும்

=============
13  , ': தமிழகத்தில், பருவ மழை பெய்ய தவறியதால், தண்ணீர் பிரச்னை ஆங்காங்கே எழுந்துள்ளது-அமைச்சர், ராஜு


 ஆங்காங்கேவா?அங்கிங்கெணாதபடி  அனைத்து இடங்களிலுமா? 

==============
14 . மழை பெய்ய வேண்டி, அ.தி.மு.க., சார்பில், கோவில்களில் யாகமும், பூஜையும் நடத்தப்படுகிறது-அமைச்சர், ராஜு

பூஜை பண்றதுக்கா ஆட்சியில் உக்கார வெச்சோம்?

==========

15  2015ல், சென்னையில் வெள்ளம் வந்தபோது, மக்களுக்கு நோய் பரவாமல், அரசு காப்பாற்றியது. தற்போது, வறட்சியால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது; இதையும் சமாளிப்போம்.-அமைச்சர், ராஜு

 நல்லா சமாளிக்கறீங்க 
=================


16  கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம், அ.தி.மு.க., .-அமைச்சர், ஜெயகுமார்

 தமிழக மக்கள் தொகையே 7 கோடிதான்


==============

17  எதிர்க்கட்சிகள் வில்லன்களாக விளங்கியதால் தான், கதாநாயகன் போல, மோடி உருவானார் =, பிரதாப் சாரங்கி 

அப்போ மோடியின் பலத்தால ஜெயிக்கலை? எதிர்க்கட்சிகளின் பலவீனத்தாலதான் ஜெயிச்சீங்க?


===============


18  இனி அனைத்து தேர்தல்களிலும், நாங்கள் தனித்து போட்டியிடுவோம்,'' = மாயாவதி

 கூட்டணி வைச்சே ஜெயிக்க முடியல, இனி தனியா நின்னா உள்ளதும் போச்சுடா கதை ஆகிடும்

============


19  அடுத்த தேர்தல் வந்து தான், ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்ற, அவசியம் கிடையாது; தேர்தல் வராமலேயே,ஆட்சி மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு,'' = ஸ்டாலின்


ஆசை பேராசை நிராசை


 ஆசை தோசை அப்பள வடை


இதே டயலாக்கை 2 வருசமா சொல்லிட்டு இருக்காரு

================= அரசியல் உல்கில் உங்க முடிவு நெருங்கிடுச்சுனு ஒத்துக்கறீங்களா?

==================

Wednesday, June 26, 2019

வட்டி கட்ட செயலாளர்கள் அசலைக்கட்ட மக்கள்


1  : நாங்க மட்டுமல்ல, தமிழகமும், இந்தியாவும் கடனில் தான் இருக்கின்றன.-பிரேமலதா


அது சரிதான், ஆனா உங்களுக்கும் உங்க பையனுக்கும் வாய் நீளம், உங்க கணவருக்கு கை நீளம், அதுதான் பிரச்சனை

============
கர்நாடகாவில், மத சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்திருக்கா விட்டால், 15 முதல், 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். இது, 100 சதவீதம் உண்மை.-வீரப்ப மொய்லி: 


 எல்லாரும் தனித்தனியா நிக்கலாமே? எப்போப்பாரு தோல்விக்குப்பின் கூட்டணிக்கட்சிகளைக்குத்தம் சொல்றது

=============

3   நெல்லை மாவட்டம், களக்காடு பகுதிகளைச் சேர்ந்த, அ.ம.மு.க., பொறுப்பாளர்கள், முதல்வர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்ததாகக் கூறினர். ஆனால், அவர்கள், 'எங்களை ஏமாற்றி அழைத்துச் சென்றனர்' எனக் கூறி, திரும்பி வந்து விட்டனர்.-தினகரன்:

 பால்வாடி ஸ்கூல் குழ்க்ஷந்தைகளா? பஞ்சு மிட்டாய் வாங்கித்தர்றேன்னு ஏமாற்றிக்கூட்டிட்டுப்போக?

==============


,  புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிட்டவுடன், தி.மு.க., வினர் மொழி என்ற ஒன்றை மட்டும் எடுத்து பேசினர்; வேறு அம்சங்கள் குறித்து எதுவும் பேசவில்லை =வானதி சீனிவாசன்

 அவங்களுக்குத்தெரிஞ்சதெல்லாம் ரெண்டு தான்
 1 கனி மொழி
2 தமிழ்மொழி

==================

5 , ஸ்டாலின், ஒவ்வொரு அம்சம் குறித்தும், ஆலோசனை வழங்க வேண்டும்.-வானதி சீனிவாசன்


துண்டுச்சீட்டு பார்த்து ஆலோசனை வழங்கலாமா?

==============

6  பல ஆண்டுகளுக்கு பின், புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உணர்ச்சிகளை துாண்டும் அரசியலை விட்டு, ஆக்கப்பூர்வமாக, வரப்போகும் தலைமுறைக்கான ஆலோசனைகளை, அவரிடமிருந்து வரவேற்கிறோம்.-வானதி சீனிவாசன்“ஆக்க”ப்பூர்ப்வமான அறிக்கை சிரமம்
“தாக்க”ப்பூர்வமா?ன்னா பழக்கம், ஈசி அவங்களுக்கு

=============
7  தமிழக அரசு, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், சரி செய்யவும் முயற்சித்ததாக தெரியவில்லை. இனியும் மெத்தனம் காட்டாமல், போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக குடிநீர் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு, உடனே சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். - திருமா 


 மத்திய அரசு ஒதுக்குனாலும் இவங்க அதை அவங்க  பக்கம் ஒதுக்கிக்காம நம்ம பக்கம் ஒதுக்கனும்

================

8    இந்தியாவில், முதல் முறையாக, இரண்டு ஆண்டுகளில், 12 வகுப்புகளுக்கும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 99 சதவீதம் மாணவர்கள், பள்ளிக்கு வருகின்றனர். கட்டமைப்பு மற்றும் குடிநீர் வசதியின்றி, எந்த பள்ளிகள் இயங்கினாலும், தடையின்மை சான்றை அரசு திரும்ப பெற்றுக்கொள்ளும். அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள், மாணவர் சேர்க்கை அதிகரித்தபடி உள்ளது.- செங்கோட்டையன்

அரசுப்பள்ளிகளில் குடி நீர் கிடைக்கலைன்னா?

============
9 மக்களுக்கு நன்மை செய்ய, கடவுள் என்னை, எம்.பி.,யாக வெற்றி பெற செய்திருக்கிறார்.=
, வசந்தகுமார், எம்.பி.,  

 உங்க மனைவி மகன் மகள் மக்களுக்கா? தொகுதி மக்களுக்கா? விளக்கமா சொல்லவும்

===============

.10   தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக, அரசிடம் மக்கள் முறையிடுகின்றனர். ஆனால், ஆட்சியாளர்களோ, தங்களால் முடியாது எனக்கூறி, ஆண்டவனிடம் முறையிடுகின்றனர்.-துரைமுருகன்

தமிழகத்தை ஏற்கனவே ஆண்டவர்கள் அறிஞர் அண்ணா, காமராஜர் , எம் ஜி ஆர், ஜெ , கலைஞர், அவங்க சமாதில போய் முறையிட்டாங்களா?

=================


 11 கோவில்களில் பூஜை செய்து, யாகம் வளர்க்கின்றனர். இதன் வாயிலாக, அவர்களால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை என்பதை அறியலாம். அவர்களே, தானாக ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்; இல்லா விட்டால், அவர்களை மக்கள் வெளியேற்றி விடுவர்-துரைமுருகன்


 மின்சாரப்பற்றாக்குறை காரணமா அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால திமுக ஆட்சியை விலக்கின ,மாதிரியா?


=================
12  காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்! # தண்டமா அங்கே"முழங்குனதுக்கு இவங்க"கூட்டணிக்கட்சித்தலைவர்க்கு ஒரு போன்"போட்டா ராகுல்"கர்நாடகா க்கு ஒரு போன்"அடிச்சா போதாதா?சும்மா டிராமா"பண்ணிக்கிட்டு,மக்கள்"மடையர்களா?=============


13   காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பதை, நான் முடிவு செய்யப்போவதில்லை; கட்சி தான், அந்த பொறுப்பை மேற்கொள்ளும். அதில் நான் தலையிடுவது பொருத்தமாக இருக்காது,'' -ராகுல்


 எப்படியும் பிரியங்கா காந்தியைத்தான் தேர்ந்தெடுக்கப்போறாங்க, நீங்க தலையிட்டா குடும்ப அரசியல்ம்பாங்க , அதானே? 

================


14  ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும் =தேவகவுடா


அவங்க தெளிவாதான் இருக்காங்க, அரசியல்வாதிகள்தான் பயப்படறாங்க 

=============


15 கேரள தண்ணீரை பெறுவதில் தமிழக அரசு...அலட்சியம்!


கவுரவம் பார்க்கறாங்க போல , வறட்டுக்கவுரவம் வாழ்க்கைக்கு ஆகாது


===============


16  'எங்கள் ஆட்சியை கவிழ்க்க, எதிர்க்கட்சியால் முடியவில்லை,'' =முதல்வர் எச்.டி.குமாரசாமி 

 இவரே  உசுப்பேத்தி கவிழ்க்க வெச்சிடுவார் போல 

================
 மீதி 500 கட்சிகளா இருக்கு? தேசியக்கட்சிகள் 2 தான் மெயின், 1 பாஜக் ,2 காங்- இதை யாராவது அவர் கிட்டே எடுத்து சொல்லுங்க

-============== மறுபடி அவ்ங்க ஆட்சிப்பொறுப்புக்கு வந்தா துடைச்சு எடுத்துடுவாங்களா?

=============== மக்களுக்கு தண்ணிக்குடம் நிரப்பவே , வரிசைல்; நிற்கவே டைம் சரியா இருக்கு

============

20  கடனுக்கு வட்டி கட்ட, தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


 வட்டி கட்ட செயலாளர்கள்
அசலைக்கட்ட மக்கள்

=================

================

Tuesday, June 25, 2019

பிகில் #BIGIL

1  அணுக்கழிவுகளால் பாதிப்பு இல்லை என்று முழுங்கும் அரசியல்வாதிகள் வீட்டின் பின்புறம், முன் புறம் கொஞ்சம் சாம்ப்பிளுக்கு அணுக்கழிவுகளை புதைத்து மக்களின் பயத்தைப்போக்கலாமே?


=============


2 ஜூன் 3 .2019 முதல் கேரளாவில் தினசரி மழை பெய்யுது. போன வருசம் இதே சமயத்தில் தொடர்ந்து 47 நாட்கள் மழை பெய்து அணைக்கட்டுகள் நிரம்பி திடீர் என ஒரே நாளில் திறந்து விட்டதில் கேரளா மூழ்கியது, தமிழக அரசு குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வாக கேரளா விடம் பேசி இப்போதே கொஞ்சம் நீர் கேட்கலாம்


==============


3 எதிரியை முதல்ல பர்ஃபார்ம் பண்ண விடனும், அப்புறமா நாம ஜெயிக்கனும், அதான் கெத்து
# சதுரங்கம் அரசியல் வாழ்க்கை மூன்றிலும்


=============

4 டாக்டர் ,இடது ்கண் கொஞ்சநாளாவே எப்பவும் துடிச்சிட்டே இருக்குது. கண்ணாடில பார்க்கும்போது வலது கண்ணை விட இடது ்கண் சின்னதாக தெரியுது..என்ன பிரச்சனை?
கட்டெறும்போ,வண்டோ கடிச்சிருந்தா் அப்டிஆகும்.ஆற வைத்த வெந்நீரில் கண்களைக்கழுவவும்.தண்ணீரில் மஞ்சள் தூள்"கலந்து ஒரு டம்ளர் குடிக்கவும்


===========


5 டூ வீலரில் வேகமாகப்பயணிப்போர் கவனத்துக்கு,சைட் அடிக்க வாழ்நாள் பூரா கண் அவசியம்,எனவே"வண்டு,இன்ன பிற பறக்கும்"பூச்சி"கண்ணில்"அடிக்காம இருக்க"முன்"மறைப்புக்கண்ணாடி உள்ள தலைக்கவசம் அணிந்தோ ,கண்ணாடி அணிந்தோ பயணிக்கவும்

=========


6 நம்மாளுங்க பதவி ஏற்கும்போது பதவி ஏற்புப்பிரமாணத்தை பாத்து படிச்சது ஓகே,அது ஒரு"பார்மாலிட்டி,ஆனா தமிழ் வாழ்க,பெரியார் வாழ்க ங்கற 4 வார்த்தை கோஷத்தைக்கூட துண்டுச்சீட்டு பாத்து படிச்சாங்களாமே?அதைக்கூடவா சொந்தமா சொல்ல முடியல?


=============


7 ஆடை,படத்தோட டீசர்"பாத்துட்டு"ஒரு"ரசிகன்"அமலா"பால் கிட்டே ட்விட்டர் ல மென்ஷன் போட்டு "அக்கா,டீசர்"பாத்தேன் ,அபாரம்க்கா"ங்கறான்,அடேய்!


=========


8 டாக்டர் ,அதிகாலை 4 மணிக்கு பிரியாணி சாப்ட்டா செரிமாணம் (ஜீரணம்) ஆகுமா? ஆகாதா ? 🙄😂
ஆகும்,ஆனா காலை டிபன் சாப்பிட உகந்த நேரம்"!7.30 am to 8.30 am. அதுக்காக ஒரு"மணி"நேரமும் சாப்பிட்டுட்டே"இருக்கக்கூடாது


============


9 விஜய் =3
அட்லீ = 3 21 = 2+1= 3 21/6/2019= 2+1+6+2+0+1+9 =21=2+1=3 வெற்றி =3 இப்டி எதுனா நியூமராலஜி ஜோசியம் சொல்ல யாரும் இன்னும் கிளம்பலையா?


==============


10  குடிப்பதற்கு மட்டுமே மக்கள்"தண்ணீரை உபயோகிக்க"வேண்டும், பல் துலக்கி வாய் கொப்புளிக்கும்போது ,முகம் கழுவும்போது,குளிக்கும்போது,காலைக்கடன்களின்போது தண்ணீரை யாரும் உபயோகப்படுத்த வேண்டாம்,தூய்மை இந்தியா ஜொலிக்கட்டும்
இப்டி ஒரு அறிக்கை இன்னும் அரசிடமிருந்து வர்லையா?


===============

11 ஸ்கூல்ல,காலேஜ்ல,ஆபீஸ்ல,கம்பெனிகள்ல அட்டெண்டென்ட்ஸ் எடுத்தா டெய்லி யாராவது ஆப்சென்ட் ஆவாங்க,ஆனா ட்விட்டர்ல ,FB ல ஒரு பய ஆப்சென்ட் ஆகறதில்ல,டெய்லி ஆஜர் ஆகிடறாங்க


==============


12 தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில்மூலம தரத்தயார் என கேரள அரசு முன் வந்தும் அதை ஏற்க மறுத்தது தமிழக அரசின் அறிவீனம்


============


13 இன்று சர்வதேச யோகா தினம்,யோகா செஞ்சா உடலுக்கு நல்லதுன்னா தமிழன் நம்ப மாட்டான் ,தண்ணி அடிச்ட்டு "யோகா டீச்சர்" கில்மாப்படம் பாத்துட்டு யோகா வால இத்தனை பலன் உண்டா?நம்ப முடியல னு ஸ்டேட்டஸ் போடுவான்


==============


14 விஜய்"படம்"ரிலீஸ் ஆகறப்ப அஜித்"ரசிகர்களும் ,அஜித்"படம்"ரிலீஸ் ஆகறப்ப விஜய்"ரசிகர்களும் பரஸ்பரம் எதிர்தரப்பு படங்களை கலாய்க்கறது"தப்பில்லை,ஆனா ஒருத்தரோட பிறந்த நாள்"அப்போ தரம் தாழ்ந்த பதிவுகளை"சம்பந்தப்பட்ட நாயகர்களே விரும்ப மாட்டாங்க


===============


15 பிரேமலதா விஜயகாந்த் ஒரு"வீடியோ விட்டிருக்கிறார் ,ஏலத்துக்கு"முன்பே கடன் அடைக்கப்படும் என.இதை பேங்க் செவன் டேஸ் நோட்டீஸ் அனுப்பும் போதே செய்திருந்தால் விஷயம் வெளியே வந்திருக்காது


============


16 வங்கியில் /தனியார் பைனான்சிடம் கடன் வாங்கி வியாபாரத்துக்கான பொருட்களை வாங்குவதை விட பொருள்கள் வாங்கும் இடத்துலயே"கடன் வெச்ட்டா வட்டியும் இருக்காது,சிரமும் இருக்காது,அதற்குத்தேவை முதலிலேயே சில முறை ரெடி கேஷ் பர்ச்சேஸ் பண்ணி பார்ட்டியிடம் நம்பிக்கை பெறுவதே!


===============


17 இதே நம்ம தலைவர் ஆட்சியா இருந்தா கேரளா வில் இருந்து தண்ணீரை ஓசி ல வாங்கிட்டு அதுக்கு ஒரு கள்ளக்கணக்கு எழுதி பணம் தந்து வாங்கினதா லம்ப்பா ஒரு தொகை தேத்தி இருப்பாரு


============


18 விசில் னு ஒரு படம் வந்துடு்ச்சு ,அதனால பிகில் னு வெச்ட்டாங்கபோல.FL நல்லாருக்கு.ஆனா தெறி ,மெர்சல் அளவு டைட்டில் பிரமாதம் கிடையாது


=============


19  FL தர வரிசை
1 தெறி 2 பிகில் 3 மெர்சல்


==============


20  வீச்சரிவாளோடு விஜய் போஸ்டர்களில் வந்த படங்கள் ஹிட்
.திருப்பாச்சி மெர்சல் பிகில்


================

Monday, June 24, 2019

கட்சி நடத்த புதிதாக் வரும் நடிகர்களுக்கு.....

 1  காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல், ராஜினாமா செய்யக் கூடாது. அவரிடம், இது தொடர்பாக, நானும், எங்கள் கட்சி நிர்வாகிகளும், வற்புறுத்த முடிவு செய்துளோம்- தேவகவுடா

அது வும்சரி தான், அவரு ராஜினாமா பண்ணிட்டா இவரு பையன் குமாரசாமி பதவ் இக்கு ஆபத்து வந்துடுமே?கட்சியின் பழைய தலைகள் எல்லாம்  விஆர் எஸ் வாங்க வேண்டி வருமே?

================
.2  காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பதை, நான் முடிவு செய்யப் போவதில்லை; கட்சி தான், அந்த பொறுப்பை மேற்கொள்ளும்- ராகுல்


பிரியங்கா காந்தி தானே? என்ன சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு?


இதுவும் ந்ல்ல ஐடியாதான், இவரா அறிவிச்ட்டா பிரச்சனைஉ இல்லை, அறிவிக்கலைன்னா கட்சிக்குள் குழப்பம் வரும் , கோஷ்டி மோதல்; வரும், பிறகு நானே தலைவரா இருந்துக்கறேன்னு சொல்லிக்கலாம்

===============
3  குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, அரசிடம் எந்த திட்டமும் இல்லை.=துரைமுருகன்: 


சீனியர்ங்கற முறைல நாம தான் ஐடியா தர்றது?========

4  கல்குவாரிகளில் இருக்கும் தண்ணீரை கொடுக்கிறேன் என்பது, விஷத்தைக் கொடுப்பதற்குச் சமம் -துரைமுருகன்: 

 அமைச்சர்களுக்கு அதைக்கொடுத்து டெஸ்ட் பண்ணிடலாம்

==============


: மாணவர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தருவதாகக் கூறித்தான், தனியார் பள்ளிகள், அனுமதி பெற்றுள்ளன. தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி, பள்ளியை மூடப்போவதாக, தனியார் பள்ளிகள், அரசை மிரட்டக் கூடாது. பிரதமரோ, முதல்வரோ நினைத்தால், மழையை பொழிய வைக்க முடியாது. அது, பருவ காலங்களில் தான் பெய்யும்.-  ராஜேந்திர பாலாஜி  


மக்களுக்கு நல்லது பண்றோம், தேவையான அடிப்படை வசதிகளை செய்வோம்னு வாக்குறுதி தந்துதானே அரசியல் கட்சிகள் வ் ஆக்கு சேகரிக்குது? ஆட்சிக்கு வந்த பின் இயற்கை மீது பழி போட்டா எப்படி?

==============
 
6   வனத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, 'அந்த துறையில் என்ன இருக்கிறது... யானை, புலி, சிங்கம், கரடி இருக்கும்' என்று தான் நினைத்தேன். பணியாற்றத் துவங்கியபோது தான், இதில் அனைத்துத் துறைகளும் உள்ளடங்கி இருக்கின்றன என்பது தெரிந்தது. இந்தத் துறையில், மனதார செயல்பட்டால், பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும், கிடைக்கச் செய்ய முடியும்.- சீனிவாசன் : 


வனத்துறைன்னா என்ன? அதன் அதிகாரங்கள் , பொறுப்புகள் என்ன?ன்னு தெரியாதவருக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்திருக்கு மேலிடம்? 

==================
லோக்சபாவில், 'தமிழ் வாழ்க' என, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள், போலியாக கோஷமிட்டு, அங்கே, ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுகின்றனர். இது, தமிழகத்தில் திராவிட கட்சிகள், தமிழை அரசியல் வியாபாரம் செய்தது போல், லோக்சபாவில் தமிழை அரசியலாக்கி, வியாபாரம் செய்யத் துவங்கி விட்டனர் என்பதையே காட்டுகிறது.- அர்ஜுன் சம்பத்   


நமது ஆட்சியில் வியாபாரம் நலிவடைந்து விட்டது என யாரும் இனி சொல்ல முடியாதே?


அதுய்க்கும் ஜிஎஸ்டி போட்டு தாளிச்சிடலாமா?

================== 
8  பா.ஜ., அளித்த வாக்குறுதியும், செயலும், வேறு வேறாக இருக்கிறது; ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை. மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குறுதிகளை, பா.ஜ., அளித்து வருகிறது. ஆனால், செயல்பாடுகளில் ஒன்றுமே இல்லை. ரண்தீப் சுர்ஜேவாலா 

வாக்குறுதிகளை அள்ளி வீசறதும் அதை தேர்தலுக்குப்பின் காற்றில் பறக்க விடுவதும் எல்லா அரசியல் கட்சிகளும் செய்யறதுதானே?

================ 

9  இந்தியாவின், 65 ஆண்டு கால பார்லிமென்ட் வரலாற்றில், கடந்த ஐந்தாண்டுகளை தவிர, மற்ற எல்லா காலங்களிலும், எதிர்க்கட்சியினருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதில்லை. ஆனால், கடந்த ஐந்தாண்டு, பா.ஜ., ஆட்சி தான், அதை முற்றிலும் மறுத்தது. இம்முறை, பிரதமர் மோடி, கடந்த காலத்தைப் போல் இருக்க மாட்டார் என்று நம்புகிறோம்.- விருதுநகர் லோக்சபா தொகுதி, காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் 

 புதிய சரித்திரம் படைப்போம்னாரே? அது இதுல தானா?

=============== 
10 எங்கள் கட்சியில், இரண்டு, எம்.பி.,க்கள் இருக்கிறோம். 543 எம்.பி.,க்கள் இருக்கும் லோக்சபாவில், இரண்டு பேர் என்ன செய்ய வேண்டும் என்பதில், எங்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது; அதன்படி செயல்படுவோம். ஜனநாயக முறையில், அனுமதிக்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்-வி சி க விழுப்புரம்  எம்.பி., ரவிகுமார்  

சமபளம் , அலவன்ஸ் வாங்கறதைப்பற்றி சொல்றார் போல 


=============

11  தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தி.மு.க., தான் காரணம்,''-அமைச்சர் செல்லுார் ராஜு


கேரள அரசு தர்றதா சொன்ன 20 லட்சம் லிட்டர் குடிநீரை வேணாம் என மறுத்தது திமுக வா? அதிமுகவா?


 எல்லா கேசையும் அவங்க மேலேயே எழுதுனா எப்படி?

===============


12  அமைச்சர்கள் வீடுகளுக்கு தினமும் இரண்டு லாரி குடிநீர் வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு முதல்வர் ஆவேசமாக பதில் அளித்தார் அமைச்சர் வீட்டில் நான்கு பேர் வரை இருப்பர். அதிகாரிகள் வருவர்; மக்கள் வருவர். அவர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்

 அப்போலோ ஆஸ்பிடல்ல்ல ஜெ இட்லி சாப்பிட்ட பில் மட்டும் கோடிக்கணக்குல வந்தது , கேட்டதுக்கு அவரைப்பார்க்க வந்தவங்க சாப்பிட்ட பில்னாங்க, அது மாதிரியா?

===========
13  

எனக்கு 2 பக்கெட் தண்ணீர் போதும்!'- இபிஎஸ் எதுக்கு?  தண்ணீர் தட்டுப்பாடு இல்லை, அது வதந்தினு சொல்லி ஐ வாஷ் பண்ணவா?

===============

14 கேரளாவில் இருந்து தண்ணீர் பெறுவதில் என்ன வெட்கம் இருக்கிறது-?  துரைமுருகன்

 என்ன வளம் இல்லை இந்தத்திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்; மாநிலத்தில் ? பாலிசி போல 


இப்போ இப்படிப்பேசுவீங்க, நாளைக்கே ஏன் அண்டை மாநிலங்களில் கை ஏந்தனும்?னு பிளேட்டை திருப்பிப்போடுவீங்க 

===========


 நல்ல காலம் பொறக்குது   நல்ல காலம் பொறக்குது குடுகுடுப்பைக்காரன் வாக்கு மாதிரியே இருக்கே?


==================

16  இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள் பிரிவை சேர்ந்த நாய்களுக்கும், யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.காங்., தலைவர் ராகுல், இந்த புகைப்படத்தை, தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்து, 'புதிய இந்தியா' என, கிண்டலாக பதிவிட்டார்.


ராகுல் ராஜினாமா பண்ணிட்டா புதிஹ்ய காங்கிரஸ்  இப்படித்தான் இருக்கும்கறாரா?

==================


17 நாடு முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் கூடுதலாக பாதிப்புகள் இருக்கின்றன. எனவே மஹாராஷ்டிராவுக்கு வழங்கியதை போல தமிழகத்திற்கும் சிறப்பு நிதியாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்'-ஓபிஎஸ்


 மழைநீர் சேகரி[ப்பில் கவனம் இல்லாததுக்கு  மக்களிடையே விழிப்புணர்வைக்கொண்டு வராததுக்கு அபராதச்ம் தான் போடனும்


================== தேவா பிழைச்சுக்குவான்

 டாக்டர் சொன்னாரா?

 தேவாவே சொன்னான் 
 மொமெண்ட்

==================
 கட்சி நடத்த புதிதாக் வரும் நடிகர்களுக்கு இவர் வாழ்க்கை ஒரு பாடம், எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் மொமெண்ட்

==================


20  தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், ஒரு சில இடங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது= இபிஎஸ்


 ஒரு சில இடங்களா?பெரும்பான்மையான இடங்க்ஜளில்னு சொன்ன்னா  கவுரவம் குரைஞ்சிடுமா?

===================