Tuesday, October 31, 2017

காலா காலாவதி

நம்ம அடுத்த படத்துல ஹீரோயின்,காமெடியன்,வில்லன் யாரும் கிடையாது நீங்க மட்டும்தான்

ஏன்?
அப்போதான் ஒன் மேன் ஷோ னு பந்தாவா சொல்லிக்க முடியும்

=============

2 ஹீரோ வேட்டிய மடிச்சு கட்ற அந்த ஸ்டைலுக்காகவே FDFS க்கு 1200 ரூ குடுத்தேன்

அடப்பாவமே!அந்தக்காசுக்கு 12 வேட்டியே வாங்கி இருக்கலாமே?


===============


3 கலைஞருக்கும் ,விஜய்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

எது?
ராமதாஸ் தேர்தல் அறிக்கையை கலைஞர் காபி அடிப்பாரு,சீமான் ,அன்புமணி உரையை விஜய் காபி


==============

4 A B C D மொத்தம் எத்தனை எழுத்து இருக்கு?

23
அதெப்டி?
G S T சேர்த்தலை,எதுக்கு வம்பு?கட்சிக்காரங்க GST பத்தி பேசுனா எதுனா தொந்தரவு தருவாக


===============


5 சார்,உங்க படத்துல அரசை விமர்சிச்சு வசனம் வருது.நீக்கனும்
யோவ்,நாங்களே அங்க இங்க காபி அடிச்சு கஷ்டப்பட்டு சேத்திருக்கோம்.வேட்டு வெச்சா எப்டி

=============


6 எல்லாரும் அவங்கவங்க ஹோம்"ஸ்க்ரீனை இங்கே ஷேர் பண்ணுங்க,உங்க டேஸ்ட் என்ன?னு தெரிஞ்சுக்கறேன்?

அடடா,மேடம்.சலவைக்கு போட்டுட்டேனே?

==============


7 ஜட்ஜ் − படத்தோட டைட்டில் கார்டுல எழுத்து ,இயக்கம் னு உங்க பேர் தான் வருது,அப்போ நீங்கதானே பொறுப்பு?

கதை ல கூட என் பேர் தான் வருது,அதுக்கு?


============

8 ஆளப்போறான் தமிழன் பாட்டு வரியையும் மாத்திடுங்க.முடியுமா?

சிம்ப்பிள்.டான்ஸ் ஆடப்போறான் தலைவன் னு மாத்திட்டா போச்சு

=============


9 4 பேர் சுத்தி இருக்கும்போது ஆன்ட்டி னு அழைக்குது குழந்தைங்க

மேடம்,எங்க கண்ணுக்கே அப்டி தான் தெரியறீங்க,குழந்தை கூப்ட்டா தப்பில்லயே


============


10 சார்,உங்க படம் காப்பி கதை, தப்பான வசனம் னு பிரச்னை ஆகி இருக்கே?என்ன நியூஸ் போட?

அதை எல்லாம் விட்ருங்க.100 கோடி வசூல் ஆகிடுச்சுனு போடுங்க

==============


11 கோவில் கட்றதுக்கு பதிலா ஹாஸ்பிடல் கட்டலாம்கற தை நான் எதிர்க்கறேன்

ஏன் மிஸ்.ரசிகையே எதிர்த்தா எப்டி?
லவ்வர்ஸ் கோயில்லதானே சந்திக்கமுடியும்?


=============

12 சார்,ஹீரோயின் இன்ட்ரோ சீனுக்கு முன்னால எதுக்கு லதா,மஞ்சுளா,சரோஜாதேவி யை காட்றீங்க?

ஹீரோ இன்ட்ரோ அப்போ MGR ரை காட்னமே?

==============


13 சார்,இந்தப்படம் அடுத்தவர் கதைல இருந்து திருடுன கதை தானே?

அவன் திருடுனான்,இவன் திருடுனான்
அது அடுத்து.இப்போ கேள்வி நீங்க திருடுனீங்களா?


===============


14 கேரள பெண்கள் அழகா? தமிழக பெண்கள் அழகா?

இக்கரைக்கு அக்கரை இச்சை

=============


15 கமல் எங்க படத்தை பாத்து கண் கலங்கிட்டாரு

நல்லா யோசிச்சு சொல்லுங்க,படத்தைப்பார்த்தா?பட டைட்டில்ல கதை னு உங்க பேர் போட்டத பாத்தா?


=============


16 குருவே!நான் ஒரு திருடன்.இந்த சமூகம் என்னை கேவலமா பாக்குது,தப்பிக்க என்ன வழி?

யார் வீட்ல திருடுனியோ அவர் கூட நின்னு போட்டோ எடுத்துக்கோ

==============

17 எங்க படம் 3 நாள்ல 100 கோடி வசூலிச்சுடும்னு 4 நாள் முன்னமே சொன்னேன்,கப்பு எனக்குத்தான்

கப்பை நீங்களே வெச்சுக்குங்க.ஸ்ரீ தேவி சம்பளபாக்கி?


==============


18 டாக்டர்,தொட்டதுக்கெல்லாம் காசு வாங்குற டைப்பாமே நீங்க?

ச்சே"ச்சே.பொண்ணுங்க"கிட்டே கேட்டுப்பாருங்க.அதுக்கெல்லாம் Free


=============


19 படத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது . வாழ்த்து

என்ன பிரச்னை?னு ஓப்பனா சொல்லுங்க
.காலா காலாவதி ஆகிடுமே

===========


20 நான் எப்பவும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் டச்லயே இருக்கறதால நமக்கு வசூல் நிலவரம் எல்லாம் Finger "tips" ல இருக்கும்

ஓஹோ,டிப்ஸ் இதுல குறியீடா?ரைட்டு

=================

ஈரோடு மகேஷ் ,மதுரை முத்து , அட்லி

அரசன் சோப் இன்னுமா மெர்சல் அரசன் சோப்னு விளம்பரம் பண்ணலை?


===========2 தீபாவளி அன்றும் பணிபுரிபவர்கள்


1டெய்லர்ஸ்
2 பட்டாசுக்கடைக்காரர்கள்
3 பேக்கரி
5 ஹோட்டல்
4 தியேட்டர் பணியாட்கள் 6 ரயில்வே
7 விவசாயிதீபாவளி −பணி− விடுபட்டது
மருத்துவப்பணியாளர்
ஏர்போர்ஸ்
காவலர் ஆர்மி நேவி
மற்றும் பலர்

===============


3 மெர்சல் ரிலீசுக்குப்பின் ஹீரோயின் அணிந்த சல்வார் கமீஸ் மெர்"சல்வார்"கமீஸ் என ஜவுளிக்கடைகளில் விற்கப்படலாம்

==============

4 மெர்சல் முதல் பாதி விஜய் ரசிகர்களுக்கான கொண்டாட்டம்,ஆன கமர்ஷியல் மசாலா எனவும், 2வது பாதி அஜித் ரசிகர்களுக்கான கொண்டாட்டம் எனவும் தகவல்


==============


5 ஏ ஆர் முருகதாஸ் கிட்டே வந்துட்டாருன்னு நினைச்சா அண்ணன் சிம்பு தேவனை தாண்டி ஓடிட்டு இருக்காரு=================6 ஒரு படத்தோட 14 ரீலையும் அப்படியே வேற நடிகர்களை வெச்சு எடுத்தா அது ரீமேக் படம், 7 படங்களோட 2 , 2 ரீல்களை ஒரே படமா எடுத்தா அது அட்லி படம்===============

7 சார், அட்லீயும், விஜயும் மீண்டும் இணையறாங்களாமே?

சபாஷ், விஜய் ஒரு நல்ல எண்ட்டர்டெய்னர் இல்லையா? நாம சந்தோஷமா இருக்கனும்கறதுக்காகவே அப்டி


==============

8 சார்,இதே கதையை பாகுபலி ராஜ்மவுலி எடுத்திருந்தா 2 பாகமா இழுத்திருப்பாராமே?

இல்ல,இதுவரை அவர் அடுத்தவன் இலை ல கை வெச்சதில்ல


=================


9 அடுத்தவங்க படைப்பை ஆட்டையைப்போட்டு பிரசன்ட்டேசன் கற ஒரே ஒரு ப்ளசால் பேர்,புகழ்,பணம் சம்பாதித்தவர்கள் டாப் 3
ஈரோடு மகேஷ்
மதுரை முத்து
1 அட்லி


============


10 இந்த அரசை எதிர்க்கறவங்களாப்பாத்து வைரஸ் காய்ச்சல் / டெங்கு வர்றது எதேச்சையானதா?திட்டமிட்டா?
நேற்று −கமல்
இன்று−தினகரன்
நாளை−?


===============

11 இளைய தளபதியின் கோட்டை கேரளா−கோட்டயம் − செங்கணாச்சேரி அபிநயா 5.30 pm ஷோ − 84 பேர் இருக்காங்க.தேவல.3 வது நாள்


==============

12 பாகுபலி 2 கேரளாவின் முக்கிய நகரங்களில் 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆச்சு,முதல் 10 நாள் ஹவுஸ்புல்.மெர்சல் 3 வது நாள்லயே காத்து வாங்குது


==============

13 மெர்சல் −MGR காலத்து கமர்ஷியல் காக்டெயில்.முன் பாதி கலக்கல்,பின் பாதி சொதப்பல்,விகடன் (முறைப்படி)41,ரசிகர்களே உள்ளே பணிபுரிவதால் 42,ரே 2.5/5

=============


14 திருட்டு 1 .விஜய் ஒற்றைக்கையில் தண்டால் எடுக்கும் சீன் கமலின் காக்கிசட்டை யிலிருந்து உருவியது

==============


15 20 குழந்தை பெத்துக்க டார்கெட் வெச்ச ஜோடி 2 வது குழந்தைக்கு 6 வருசம் ஏன் கேப் விட்டாங்க? logic mistake 1


===============


16 மகன் விஜயை பார்த்ததும் அதிர்ச்சி அடையும் வில்லன் ok.கூடவே இருந்த டாக்டர் விருது வாங்க வந்த விஜயை பார்த்ததும் ஏன் ஜெர்க் ஆகலை? logic


=============


17 நேர்மையாளரான அப்பா விஜய் Govt subsidy க்காக வில்லன் பேரில் ஹாஸ்பிடலை எழுதி வைப்பது ஏன்?முறைப்படி வரி கட்டி வாங்குவோம்னு ஏன் சொல்லல?


===============

18 தமிழனின் அடையாளம் வேட்டிதான் என பேசும் விஜய் விருது வாங்கும் சீன் தவிர மீதி எல்லாசீனும் பேண்ட் அணிவது ஏன்?பேசுனபடி ராம்ராஜ் பேமண்ட் தர்லையா?


=============


19 GST வசனத்தை நீக்கனும்னு போராடற பாஜக வுக்கு "ஆளப்போறான் தமிழன் " பாட்டு கண்ணை உறுத்தலையா?அல்லது அர்த்தம் புரியலயா?


==============


20 பராசக்தி
பாலைவனரோஜாக்கள்
அமைதிப்படை
கேப்டன் பிரபாகரன்
ரமணா இந்தியன் முதல்வன்
மிரள வைத்த படங்கள்
சிவப்பு மல்லி

=================

Monday, October 30, 2017

மெர்சல் பட "லிங்க்

தொழில் சார்ந்த எந்த ஊழலிலும் என் மகன் ஈடுபடவில்லை # அமித் ஷா.# அப்போ ஊழல் சார்ந்த தொழில் பண்றாரோ என்னவோ?


===============
2 அரசு மருத்துவமனையில் இறந்தால் மட்டுமே டெங்கு கணக்கில் வரும்: துரைக்கண்ணு - சாகற நிலைல இருக்கும்போது ஜிஹெச் அட்ரஸ் கேட்டு அங்கே போயிடனுமா
================
3 மோடி 3 லட்சம் இளைஞர்களை ஜப்பானுக்கு அனுப்பி தொழில்துறை வல்லுநர் ஆக்க ஜப்பானிய அரசுடன் ஒப்பந்தம்! பாதிப்பேர் அங்கேயே செட்டில்,ஆகிட்டா?
==============
4 தமிழக அரசியலில் கலைத்துறையினருக்கு இடமில்லை!' - தம்பிதுரை # MGR,JJ,கலைஞர் எல்லாம் யாரு?
============
5 பட்டாசு வெடிங்க, ஆனா புகை வராம பாத்துக்கங்க - அமைச்சர் ஹர்த்வர்தன் # எல்லாரும் மேரேஜ் பண்ணிக்குங்க, ஆனா ஒரு பய/பொண்ணு பேபி மட்டும் ம்ஹூம்
================
6 மழைகாலத்தில் காய்ச்சல் வரும் - அமைச்சர் செல்லூர் ராஜு # ஆமா, வெய்யில் காலத்தில் வேர்வை வரும்,குளிர் காலத்தில் MOOD வரும்,வேற வேற
=============
7 எதிர்க்கட்சி தலைவர் என்னை அவமரியாதை செய்ததில்லை: ஸ்டாலினுக்கு வித்யாசாகர் ராவ் புகழாரம்... # அவரு கலைஞரோட வாரிசு,பூடகமாதான் நக்கல் அடிப்பாரு
===============
8 பிஜேபியைப் பார்த்து நேரு பயப்பட்டார்-மோடி # நேருவைப்பாத்து மவுண்ட்பேட்டன் பிரபுவே பயப்பட்டாராம்.அப்போ யாரு டான்?
===============9 மெர்சல் பட GST பற்றிய வசனங்களை நீக்க சொல்லி தமிழிசை கண்டனம் # மொத்தப்படத்துல அந்த ஒத்த வசனம்தான் ஒரிஜினல்.அதையும் நீக்கச்சொனனா எப்டி?===============


10 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவேன்: ஜெ.தீபா # 2017 தீபா வலி ஜோக்


===============

11 கடந்த 2 மாதத்தில் காங்கிரஸில் 25 லட்சம் பேர் இணைந்துள்ளனர் - திருநாவுக்கரசர்
#25 லட்சம் பேரோட ஆதார் கார்டு நெம்பர் சொல்லுங்க பார்ப்போம்


===============

12 நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் டாக்டரோ விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
# வசூல்ராஜா MBBS பார்த்தீங்கன்னா இதுக்கு பதில் உண்டு


=============

13 கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறேன்: ஓவியா
வேற சாபம் எல்லாம்"விடுவாரே?


===============


14 ஜெ மரணம்− சசிகலாவை தனியாக விசாரித்தால் உண்மை வெளிவரும் - EVKS# தனியா விசாரிச்சா லஞ்சம் குடுத்துடுவாப்டி.10 பேர் விசாரிக்கனும்.லைவ்"ரிலே


===============


15 வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடவில்லை - ரிசர்வ் வங்கி தகவல் எல்லா வங்கி வாசல்லயும் ஆதார் எண் அவசியம் னு போர்டு எதுக்கு?


=================


16 பாஜகவுக்கு "பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மென்ட் வீக்கு".. போட்டுத் தாக்கும் குஷ்பு # ஆனா காங் க்கு 2 மே வீக் ஆச்சே?


==============


17 பேச்சுரிமைக்கு திமுக எப்போதும் ஆதரவு: ஸ்டாலின் # கத்தி ல 2ஜி ஊழல் பத்தி விஜய் பேசுனதை சொல்றார் போல


=============


18 தமிழகம் முழுக்க எழுச்சிப் பயணம்.. நவ.7ம் தேதி தொடங்குகிறார் ஸ்டாலின் # ஊர்வலம் சேலத்துல தொடங்கி ஊட்டி தொட்டபெட்டால முடியுதாம்


==============


19 மெர்சல் பட "லிங்க்"கை பகிர்ந்து வசூலைக் கெடுப்போம்... டாக்டர்கள் சங்கம் # நல்ல எண்ணம்.ஆபரேஷன் பண்ண வேண்டிய பேஷண்ட் விஜய் ரசிகர்னா?


=============


20 மெர்சல்−் மருத்துவ பரிசோதனை குறித்து தவறான கருத்துக்கள்− அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் ஒரிஜினல் வெர்சன் ரமணா பார்க்கல போல

============

நித்யாமேனன் போர்ஷன்

ஒரு ட்விட்டர்"அடிக்ட் பட்டாசுக்கடைல எப்டி பர்ச்சேஸ் செய்வார்?
க்யூட் புஷ் வாணம் 3 பாக்கெட் கோவை அனு குண்டு 2 பாக்கெட் குடுங்க

============

2 சார், 150 கோடி செலவு ஆச்சுன்னீங்களே, கணக்கு சொல்லுங்க முத நாள் வசூலே 100 கோடின்னு கூட சொல்வோம், விட்டா அதுக்கும் கணக்கு கேட்பே போல?


=================


3 படத்தோட 2 வது பாதில ரசிகர்களை அழ வெச்ட்டாராமே? டைரக்டர்? அவரு ரசிகர்களை மட்டுமா அழ வெச்சாரு?


================

4 சார் , இந்தப்படம் ஒரு விழிப்புணர்வுப்படமாமே? ஆமா, இனிமே யாரும் ஆல்ரெடி ரிலீஸ் ஆகி ஹிட் ஆன 3 படங்களை மிக்ஸ் பண்ணி படம் எடுக்க மாட்டாக


===============


5 சார், படம் எப்டி? ஹீரோ இண்ட்ரோ சீன் பிரமாதம் சார், கதை நல்லாருக்கா? மேஜிக்மேன் சீன் எல்லாம் அள்ளுது அய்யோ ராமா, ஹேமா போட்ட காசு வருமா?


================

6 விஜய் ரசிகர் =படம் எப்டி?ஓடற மாதிரி இருக்கா?
அஜித் ரசிகர் = மீம்ஸ் போட்டு ஓட்ற மாதிரி இருக்கு


===============


7 சார்,மெர்சல் பாகம் 2 வருமா?
தெரில,சிம்பு கிட்டே கேட்கனும் புரில சிலம்பாட்டம் 2 வந்தா மெர்சல் 2 வும் வரும்.நாம எந்தக்காலத்துல புதுக்கதை


======================

8 விஜய் நித்யாமேனன் போர்ஷன் செம செம
அப்டீங்களா? ஆமா,போர்ட்டிகோ ,ஹால் ,டோட்டல் போர்ஷனுமே செம


===============

9 படத்தோட முத பாதில ஹீரோ நம்ம இதயத்தை திருடிடறார்.பின் பாதில டைரக்டர் நம்ம மனச திருடிடறார்
ஓஹோ,மொத்தத்துல இது ஒரு திருட்டுக்கதை னு சொல்லுங்க


===============


10 வெளிநாட்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கிட்டே போன்ல பேசினேன்,செம கலெக்சன் வருமாம்.
அப்டியா?அவங்க போன் நெம்பர் சொல்லுங்க ஒரு Flow ல சொன்னேன்


===========

11 இந்தப்படத்துல ஒரு சோசியல் மெசேஜ் சொல்லி இருக்கோம்.
அதை விடுங்க ்.130 கோடி செலவு பண்ணதுல 10 லட்சம் தந்து புதுக்கதை எழுதி இருக்கலாம்


==============

12 சார்,படத்தோட கதைக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தமே இல்லையே?எதுக்கு பிரச்சனை பண்ணாங்க?
சத்யராஜின் "ஜல்லிக்கட்டு" ல இருந்தும் 4 சீன் சுட்டோம்


==============


13 சார், பார்த்தா பழைய சட்டை மாதிரி இருக்கு, 1200 ரூபாயா?
பேக்கிங் சூப்பரா இருக்கு , பிராண்ட் ஐட்டம் போட்டுக்கறது சட்டையையா? பேக்கிங்கையா?


=================


14 தீபாவளி ரேஸ்ல நாங்க தான் நெ 1 ஓஹோ,ஸ்டார் வேல்யூ உள்ளவங்க எத்தனை பேர் படம் ரிலீஸ் ஆச்சு? 1 தான் அப்ப சரி


==================


15 பாசிட்டிவ் ரிவ்யூ நிறைய வருது சரி, முத நாள் டிக்கெட் ரேட் எவ்ளோ? 400,500,1200 அவ்ளோ பணம் கொடுத்து யார் பார்ப்பா? பப்ளிக்கா?ரசிகரா?


==================


16 ஹீரோ கேரக்டருக்கு என்ன பேர் வைக்கலாம்?யோசிச்சு சொல்லுங்க
அது ரிஸ்க்,ஆல்ரெடி ஹிட் ஆன படத்துல என்ன பேரோ அதையே வெச்சிடுவோம். ஹூம்.பேருமா?


===================


17 சார்,உங்க டார்கெட் இளைய தலைமுறையை நம்பிதான் இருக்கா?
ஆமா,அவங்கதான் பழைய படங்கள் பார்க்கறதில்லை,பார்த்தாலும் ஞாபகம் வெச்சுக்க மாட்டாங்க


================

18 சார்,உங்க கிட்டே அசிஸ்டெண்ட் டைரக்டரா சேரனும்.
என்ன தகுதி இருக்கு? 1980 −2016 எல்லா ஹிட் பட டிவிடி யும் கை வசம் இருக்கு


=================


19 சார்,உங்க படத்தோட மையக்கருத்து என்ன?
டாக்டர்ங்க 5 ரூ வாங்கீட்டு மருத்துவம் பார்க்கனும் உங்க சம்பளம்? 10 கோடி ஹீரோக்கு? 25 கோடி ரைட்டு


================


20 சார்,முத நாள் கலெக்சன் எவ்ளோ?
இருங்க சார்,இப்போதான் வடசட்டில எண்ணெய் கொதிக்க விட்டிருக்கோம்,இனி தான் வடை சுடனும்,சுட்டதும் தர்றோம்


================