Thursday, June 30, 2016

கரண்ட் இல்லாததால கரண்ட் பாலிடிக்ஸ்ல எதிர்க்கட்சியாக்கூட முடிய;ல

தேர்தல் நடத்த  தேர்தல் கமிஷனுக்கே 200 கோடி ரூ தான் செலவு,ஆனா ஜெ வுக்கு 4000 கோடி செலவு-நக்கீரன் # நாட்டுமக்களின் நன்மைக்காக தன் சேமிப்பை எல்லாம் கரைக்கும் தாய் உள்ளம் 


============

திமுக 3வது அணியாகப் போகிறது என்பது கருணாநிதிக்கே தெரியாது: வைகோ # 6 பேரும்  6வது அணி ஆகப்போறீங்க. 6 சீட் தான் கிடைக்கும் போல



==============


அதர்மம்-சந்தர்ப்பவாதம் தோற்க வேண்டும்: ஆர்.கே.நகரில் ஜெ # கலைஞர் - வை.கோ 2 பேரும் தோற்கனும்னு பூடகமா சொல்றாங்க போல



============

4  அவர்' பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே முன்னேற்ற ஒன்னும் செய்யவில்லை: ராமதாஸ் # எத்தனையோ செஞ்சிருக்காரு.ஆனா ஊருக்காக செய்யலை

=============

5 ஹெலிகாப்டர் ஊழல்: சோனியாவை கைது செய்யும் தைரியம் மோடிக்கு இல்லை: கேஜ்ரிவால் # தைரியம் இருக்கு, ஆதாரம் ஸ்ட்ராங்கா வேணுமில்ல

=============


6

சாமி சத்தியமா எனக்கு தான் ஓட்டு போடணும், போடுவீங்களா?: கேட்கும் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் # குமாரசாமி மேல சத்தியமா இவரு ஜெயிக்க மாட்டாரு


-==========

7
  • திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வந்த ம ந கூ ஏன் விஜயகாந்த் பின்னால் சென்றது? தமிழருவி மணியன் கேள்வி # 2 % வாக்கு வெச்சுக்கிட்டு என்ன பண்ண? இத்தனை பேர் சேர்ந்தே 8 % தான் இருக்கு

=================


8  

இந்திராவின் பேரனே வருக, இளம் தலைவரே வெல்க.. மதுரையில் ராகுலுக்கு, ஸ்டாலின் வெல்கம் # கூடா நட்பின் குலக்கொழுந்தே,பாரா முகத்தின் வேந்தே வருக



================


9

தான் மட்டும்தான் அறிவாளி என நினைக்கிறார் ஜெ- ராகுல் காந்தி # எல்லா குற்ற”வாளி”களும் அறி”வாளி”களே



==============

10

மநகூவுக்கு 35% வாக்குகள் 'கன்பார்ம்'... மத்திய உளவுத்துறை அதிகாரியே கூறியதாக வைகோ # தேர்தல் அறிக்கை வந்த பின் 3.5 % தான்னு சொல்லி இருப்பாரே?



====================


11 . டீ விற்பவர் மகன் என்பதால் உ.பி. பள்ளியில் இருந்து மாணவன் நீக்கம் # நம்ம நாட்டோட பிரதமரே முன்னாள் டீகடை பார்ட்டிதானே


================

12   அதிமுக அரசை தெறிக்க விடப்போவதாக  கடலூர் விஜய் ரசிகர்கள் சபதம் - சன் நியூஸ்  # , சனி பகவான் சன் டி வி மூலமா விஜய்க்கு தூது விட்டிருக்காரு அய்யோ பாவம்


=============

13 உங்களிடம் பிச்சைகேட்கிறேன் யாசகம்கேட்கிறேன்-நாஞ்சில் சம்பத் #காரியம் ஆகும் வரை காலைப்பிடி,ஆன பின் கழுத்தைப்பிடி மொமெண்ட்


==============


14 திமுக தேர்தல் அறிக்கையிலADMKஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டார் ஜெ.-ஸ்டாலின் # நாமஎன்னசெஞ்சோம்? பாமக அறிக்கைல சூரியன் ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டோம்



===============



15

4 சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு- ராகுல்  # சுவர் இல்லாத சித்திரங்கள் அரிது.4 சுவருக்குள் இருந்தால் பத்திரம்னு நினைச்சிருப்பாரு



=================

16  93 வயது ஆகியும் மக்களுக்காக உழைக்கிறார் கலைஞர் - ராகுல் # தமிழ் நாட்டு மக்களுக்காகவா? தன் வீட்டு மக்களுக்காகவா? 


=================


17   

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது,'' -ஸ்டாலின் # அப்போ அடையாளமே தெரியாம மாறப்போறீங்கன்னு சொல்லுங்க




===================


18  

அம்மா  எல்லாம் சும்மா - விஜயகாந்த் # இலவசம் எல்லாம் இலைவசம் என்பதை சூசகமா சொல்றாரோ?



=================


19  

விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக இருப்பதற்கு உதாரணமாக உள்ளது, தி.மு.க., - காங்., கூட்டணி-'' கருணாநிதி: # அவங்க 60 சீட் கேட்ப்ப, ஜோதிமணிக்கு அரவக்குறிச்சி கேட்டப்ப விட்டுக்கொடுத்தீங்களா?



================


20   

தமிழ் நாட்டின் இருள் அகல வாக்களிப்பீர் உதய சூரியன் -கலைஞர் # நம்ம ஆட்சி போனதுக்குக்காரணமே பகலிலும் இருள் சூழந்ததால்தானே? கரண்ட் இல்லாததால கரண்ட் பாலிடிக்ஸ்ல எதிர்க்கட்சியாக்கூட முடிய;ல



======================

கேப்டன் அமெரிக்கா படம் ரொம்ப ஸ்லோவா போகுது ஏன்?

1  தலைவரே! எதுனா கெட்ட கனா கண்டீங்களா? ஏன் சோகமா இருக்கீங்க?

 நமக்கு 24 சீட் தான் கிடைக்கும்னு பட்சி சொல்லுது.சூர்யா -24, உதய சூர்யன்=24



===============


2  மேடம், எதுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர் யூஸ் பண்றீங்க?\\

 எல்லாம் செண்ட்டிமெண்ட்ஸ் தான்,முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தனி விமானத்தை பயன்படுத்தியது ”ஹிட்”லர்தானாம்


==============


3
சார், உங்க படத்துல ரொமாண்டிக் சீன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்குமே? ஏன் டைவர்ஸ்?

ஷூட்டிங் ஸ்பாட்க்கு சம்சாரம் சொல்லாம வந்துடுச்சு

==========

4 டாக்டர்.ஃப்ரிட்ஜ்ல இருக்கற காய்கறிலாம் வாடிப் போற அளவு வெயில் அடிக்குது


பிரிட்ஜில் வைத்ததை சாப்பிட்டா உடல் ஆரோக்யமே வாடிப்போகுமே மிஸ்


==========






5 மேடம், மக்க|ளை சந்திக்காத  ஒரே முதல்வர்  நீங்க தான்னு பேசிக்கறாங்களே?

ஹெலிகாப்டர்ல போகும்போது கூட மக்களை கீழே எட்டிப்பார்த்துட்டுதான் இருக்கேன்


================


கேப்டன் அமெரிக்கா படம் ரொம்ப ஸ்லோவா போகுது

கேப்டனுக்கு இப்போ உடல் நிலை சரி இல்லை அல்லவா? அதனாலயா இருக்கும்


===============

7 டாக்டர். ரெட்டைச்சுழி தலைல இருந்தா 2 பொண்டாட்டி  அமையுமா?

 அடப்பாவி, எல்லாம் என் தலை எழுத்து/



==============



8  சார், நீங்க கண்டபடி எழுதற ஆளாமே?

 ஆமா, வாரா வாரம் வெள்ளிக்கிழமை கண்ட சினிமாவை கண்டபடி விமர்சனம் எழுதுபவன்


=============


கேவளம் என்று எழுதுகிறார்கள். கேவலமாய் இருக்கிறது!


கேரளாவில் உள்ள கோவளம் பீச்சில் கால் வைத்ததில்லை என்பதன் சுருக் தான் கேவளம்


================

10 தலைவரே! கள்ள ஓட்டுப்போட கட்சி ஆளுங்களை எப்டி ரெடி பண்றீங்க?

கள்ள ஓட்டுப்போட்டால் கள்ளக்காதலி செட் ஆகும் என வதந்தி கிளப்பி தான்


==============

11 தலைவரே! ஏன் சந்தோஷமா இருக்கீங்க? 

தேர்தல் நேரம், விஜய்காந்த் ஃபாரீன் போய்ட்டாராமே?

அய்யோ, அது கேப்டன் அமெரிக்கா ஹாலிவுட் படம் தலைவரே!

==============


12 மேடம், உங்க தொகுதி ல பிரச்சாரம் செய்த போது கரண்ட் கட்டாமே?

ஆமா, இது எதிர்க்கட்சிகளின் சதி. நான் சொல்வதை நம்புவது உங்கள் தலைவிதி,தேர்தலுக்குப்பின் மக்களுக்கு அதோகதி


==================

13  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரவணா ஸ்டோர் விளம்பரத்தை தடை செய்து மக்களைக்காப்பாற்றுவோம்



================



14   டைரி எழுதலாம்னு இருக்கேன்



 பிரமாதம் மிஸ், எங்கே எழுதுங்க பார்ப்போம்?



 டெய்ரி மில்க் சாக்லெட், வெண்ணிலா டெய்ரி, ஸ்ட்ராபெர்ரி டெய்ரி




=================



15  சார், நம்ம படம் பயங்கரமான கலெக்சன்\\


 ஓஹோ எவ்ளோவ்\\?

 அதான் பயங்கரம்னு சொன்னேனே? எண்ணிப்பார்க்கவே பயமா இருக்கு



================


16  சார் படம் எப்டி?


 முதல் 5 ரீல் க்கு 3.5 /5 , அடுத்த 5 ரீல்க்கு 4/5 , கடைசி 5 ரீல் க்கு 5/5

 அடேங்கப்பா ஏகப்பட்ட  ரீலா இருக்கெ? 3ஐயும் கூட்டி 3 ஆலா வகுக்க மாட்டீங்க|ளா?


==================


17  

  வாக்காளர்களே! இலவசத்தை நம்பியோ , புது கட்சி ஆட்சி நம்பியோ ஏமாறாதீர் , உங்களுக்கு நன்கு பழக்கம் ஆன எங்களிடமே ஏமாறுவீர்!



=================



18  

யார் முதல்வர் என்ற குழப்பம் இல்லாத ஒரே கட்சி ந்ம்ம கட்சி தான், நான், எனக்குப்பின் என் மகன், மகள்,,பேரன் , பேத்தி என  ஏகப்பட்ட வாரிசுகள் இருப்பதால் பரம்பரை பரம்பரையாக எங்களை ஆதரிப்பீர்




==================


19     டியர்  உனக்கு பூ கட்டத்தெரியுமா?

 அய்யோ. இப்பவே எனக்கு கண்ணைக்கட்டுதே



--------------


20 மாப்ளை, என் பொண்ணு மணக்க மணக்க சமையல் செய்வா.

எப்டி மாமா? தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சுட்டே கிச்சன் வருவாளா?

=================

Wednesday, June 29, 2016

அம்மா கணக்கு - திரை விமர்சனம்:

அறிமுக இயக்குநர் அஷ்வினி ஐயர் திவாரியின் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான ‘நில் பத்தி சன்னாட்டா’ என்ற இந்தி படத்தின் ரீமேக் ‘அம்மா கணக்கு’. தமிழிலும் அஷ்வினியே இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராயுடன் இணைந்து நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.


வீட்டு வேலைக்காரியாக இருக்கும் சாந்தியின் (அமலா பால்) கனவாக அவளுடைய மகள் அபி என்கிற அபிநயா (யுவஸ்ரீ) இருக்கிறாள். அவளை எப்படியாவது படிக்கவைத்து வாழ்க்கையில் நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுகிறாள். காலையில் டாக்டர் நந்தினி (ரேவதி) வீட்டில் வேலைபார்க்கும் சாந்தி, நான்கு இடங்களில் வேலைபார்த்து அபியைப் படிக்கவைக்கப் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறாள்.



பத்தாவது படிக்கும் அபிக்கோ படிப்பில் சுத்தமாக ஆர்வமில்லை. எப்போதும் டிவி, ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருக்கிறாள். தன் மகளின் பொறுப்பற்றதனத்தைப் பற்றி தினமும் தன் முதலாளியம்மா நந்தினியிடம் புலம்புகிறாள். ஒரு கட்டத்தில், அபியை வழிக்குக் கொண்டுவர அவள் அம்மா அதிரடியாக ஒரு முடிவை எடுக்கிறாள். அந்த முயற்சி வெற்றிபெற்றதா, அம்மாவின் கனவை அபி புரிந்துகொள்கிறாளா இல்லையா என்பதுதான் ‘அம்மா கணக்கு’.




அமலா பாலின் நெருக்கடியும் அதைத் தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளும் முதல் பாதியில் பிசிறின்றிக் காட்டப்படுகின்றன. பிரச்சினைக்கான தீர்வாக ரேவதி முன்வைக்கும் யோசனை நடைமுறை யில் சாத்தியம்தானா என்பதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் இருந்தால் முதல் பாதியை ரசிக்க லாம். அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவைக் காட்டும் காட்சிகளும் வசனங் களும் பொருத்தமாக உள்ளன. குறிப்பாக இடை வேளைக்கு முன்பு இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி அழுத்தமாக உள்ளது.



மொத்தப் படமுமே நாடகத்தன்மை கொண்டிருந் தாலும் இரண்டாம் பகுதியில் அது தூக்கலாகத் தெரிகிறது. ஆங்காங்கே வரும் திருப்பங்கள் படத்தை ஓரளவு சுவையாக ஆக்கினாலும் எதுவுமே பார்வையாளர்களைப் படத்தோடு ஒன்றச்செய்யும் அளவுக்கு இல்லை.



நானும் வேலைக்காரியாக விரும்புகிறேன் என்று 15 வயதுப் பெண் சொல்கிறாள். தன்னுடைய தேர்வு அது என்றும் அழுத்தமாகச் சொல்கிறாள். அவள் அப்படிச் சொல்வதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்த இயக்குநர் மெனக் கெடவில்லை. கடைசியில் அவள் மனம் மாறும் காட்சியும் அவள் பார்வையில் ஏற்படும் மாற்றமாக இல்லாமல், சென்டிமென்ட் சார்ந்ததாக இருப்பதும் படத்தின் ஆதார நோக்கத்தைப் பலவீனமாக்குகிறது.



மறு ஆக்கப் படங்களுக்குக் கூடுதல் கவனம் தேவை. சற்றுப் பிசகினாலும் மறு ஆக்கப் படங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடிய குறைபாடுகள் இப்படத்தில் பல இடங்களில் வெளிப்படுகின்றன. ‘நில் பத்தி சன்னாட்டா’வுடன் ஒப்பிடும்போது இதில் கதாபாத்திரங்கள் தேர்வு கச்சிதமாக இல்லை. அமலா பாலின் நடிப்பு நன்றாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்துவதற்கு அவர் எடுத்திருக்கும் முயற்சி பெரியளவு எடுபடவில்லை. 15 வயதுப் பெண்ணுக்குரிய பாவனைகள், உடல் மொழி, பேசும் விதம் ஆகியவற்றை யுவ நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். ரேவதி போகிறபோக்கில் நடித்ததுபோல இருக்கிறது, சமுத்திரக்கனியின் பாத்திரம் அவருக்குப் பொருந்த வில்லை. நகைச்சுவைக்காகத் திணிக்கப்பட்ட விசித்திரமான உடல் மொழி ஒட்டவே இல்லை.



வசனங்கள் இந்தியிலிருந்து அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் சில இடங்களில் பொருத்தமாக இல்லை. ‘கணக்கு பெண்களுக்கு பழைய எதிரி’ என்று சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது. ஆனால், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வசனங்கள் நன்றாக உள்ளன.


இளையராஜாவின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. பாடல்கள் பெரும்பாலும் காட்சிகளுக்குப் பின்புலமாகவும் சுருக்கமாகவும் ஒலிப்பதால் அவற்றைத் தனித்து உணர முடியவில்லை. ஓரிரு இடங்களில் பாடல்களின் முதல் வரிகள் ஈர்க்கின்றன.


வாழ்க்கையை மாற்றும் சக்தி கல்விக்கு இருக் கிறது என்ற செய்தியை வெகுஜன மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஷ்வினி. அந்த முயற்சி பாராட்டுக்குரியது


நன்றி - த இந்து

சோ ராம சாமி vs, டிராபிக் ராமசாமி

பிச்சைகாரர்கள் கூட செல்போன் வைத்துள்ளார்கள்-ஸ்டாலின் # பதவிக்காக.வீடு.வீடாக ரோடு ரோடாக வாக்கு கேட்பவர்களும் வாக்குப்பிச்சைக்காரர்களே

=============

2  பா.ஜ., அரசுக்கு தொடர்ந்து அ.தி.மு.க., ஆதரவு அளிப்பது வேடிக்கையாகவும், வினோத மாகவும் இருக்கிறது. -சோனியா:# கூடா நட்பு-ன்னு சொன்ன பிறகும் நாம எப்டி  திமுக  கூட சேர்ந்தோம்? 


=============

 எனது எந்தவொரு அறிக்கையும், உண்மை தகவலின் அடிப்படையில் தான் இருக்கும்.-,கருணாநிதி # அழகிரியை துரோகிம்பீங்க, விருந்து சாப்பிட வீட்டுக்கு போவீங்க


=================


4  மக்களைச் சந்திக்காத ஒரே முதல்வர் ஜெ  தான்-கனிமொழி: # 24 படத்தில் வரும் டைம் வாட்ச் கட்டி நாம எப்டி எம் பி ஆனோம்? மக்களைச் சந்திக்காமதானே?என பார்த்துட்டு வரவும்


==============


5  , பிரசாரம் செய்வதற்கே இயலாத ஒருவரால், முதல்வராகச் செயல்பட முடியுமா ?-ராமதாஸ் #உடல்நிலை சரி இல்லாம நீங்களே பிரச்சாரத்தை ரத்து செய்யும்போது 90+ வயசு கலைஞர் ரத்து செஞ்சா என்ன?


=====================

6  தமிழகத்தில் கால்பந்து விளையாட்டு போல, தி.மு.க., - அ.தி.மு.க., என்ற 2 கோல் ஆட்சிப் பந்து,-
சீத்தாராம் யெச்சூரி பேச்சு:# மத்தவங்களை கோள் சொல்வதை குறைச்சுட்டு நீங்க கோல் போடும் வழி பாருங்க


==================

7   இந்தத் தேர்தலில் பா.ஜ., வைப்புத் தொகையையே வாங்காது.- EVKS # இந்தியாவிலேயே அதிக நிதி உள்ள கட்சி பிஜேபி தானாம்.நமக்கெதுக்கு பெரிய இடத்துப்பொல்லாப்பு?


================


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை: ஒட்டுப் போட்ட சட்டை: பா.ஜ., வர்ணனை # ஏழைகளும் ஒட்டுப்போட்ட சட்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்,அதனால் ஏழைகளை கவரும்


================


பணம் புழங்கும் பதற்றமான 94 தொகுதிகள் அறிவிப்பு-செய்தி  # 234 லயும் பணம் புழங்கிட்டுதான் இருக்குது. 94 தான் இவங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு


=================


10 அ.தி.மு.க., அறிக்கையில் 29 காப்பி: ராமதாஸ் # பிராயசித்தமாக  ஜெ ஆட்சிக்கு வந்ததும் அம்மா ஜெராக்ஸ் க்டை காண்ட்ராக்ட் அன்புமணிக்கு தரப்படும்


======================



11 சாத்தியங்கள் இல்லாத பொய்யான வாக்குறுதி அளிப்பதும் , இலவசங்களை அள்ளி இறைப்பதும் சட்டப்படி தவறு என சட்டம் வந்தால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்


===================


12 தமிழகத்தை காப்பாற்ற போவது யார்?:பிரதமர் மோடி கேள்வி # அந்த ஆண்டவருக்குதாங்க வெளிச்சம்.-2006 -2011 ஆண்டவருக்கா?2011-2016 ஆண்டவருக்கா? வாய்ப்பு என்பதுதான் தெரியல


=================

13 

ஜெ.,வின் மதுவிலக்கு அறிவிப்பு கபட நாடகம்:- கருணாநிதி # புகழ் பெற்ற நாடகம், சினிமா வசனகர்த்தாவையே பாராட்ட வைத்து விட்டாரே ஜெ?



==============


14 

அன்புமணியை ஆதரித்து தமிழகத்தின் திசையை மாற்றுங்கள்- அன்புமணி # இலவச அறிவிப்பு வந்ததும் சுக்ரதிசை அடிச்சாச்சுன்னு சந்தோசப்படறான் தமிழன்.



===========


15 மோடி பி.ஏ., பட்டம் பெற்றதற்கு ஆதாரம் இல்லை’ கெஜ்ரிவால் # ஊரெல்லாம் வால் போஸ்டர் அடிக்ச்சுக்கொண்டாடுவாரோ? கெஜ்ரி”வால்”


==================

16 ச.ம.க., தலைவர் சரத்குமார் காரில் ரூ.9 லட்சம் பறிமுதல் # நடிகர் சங்கக்கடனுக்கு உதவ கொண்டு போனேன்னு சமாளிப்பாரோ?


=============


17  தி.மு.க.,வில் கருணாநிதி முதல்வரா, ஸ்டாலின் முதல்வரா என்பதில் பெரும் குழப்பம் உள்ளது- சரத்குமார் # அழகிரி முதல்வரா?ன்னு குழப்பம் வராத படி பார்த்துக்கிட்டதே சாமார்த்தியம் தான்


================


18 அ.தி.மு.க., தான் எதிரி ஜெ., அல்ல: 'டிராபிக்' ராமசாமி # எனக்கு நண்பர் சோ ராம சாமிதான், டிராபிக் ராமசாமி அல்ல அப்டினு அவர் சொல்வாரோ?



=================

19 மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: ஜெ., வேண்டுகோள் # என் ஆட்சியில் என் ஆணைப்படி சர்வாதிகார ஆட்சி நடத்த மக்கள் ஆதரவு தேவைப்படுது


================


20 நாட்டில், இரண்டு கோடி பேருக்கு மனநோய் உள்ளது - செய்தி # குறிப்பா தமிழ் நாட்டில் நான் தான் அடுத்த முதல்வர்னு ஆளாளுக்கு சொல்லிட்டு திரிய\றாங்க


================

காதலில் சொதப்புவது எப்படி'கல்யாணத்திலும் சொதப்பிட்டாரா?

வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு - ஜெ # இது மட்டும் பாமக கிட்டே இருந்து சுட்டுட்டாங்க


=========

\\2 திமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு: ஜெ # சூரியன் வந்தா சுட்டுடும் ,தமிழ்நாடு கெட்டுடும் .அடிச்சு விடுங்க



=============




3 மோடியின் தமிழக வருகை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தமிழிசை # அவர் வந்துட்டுப்போனதும் சோனியா வர்றாரு.அப்போ மறுபடி மாற்றம் வரும் ல?




=====



4 தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பேன்.-விஜயகாந்த்: # ஆள் பக்கத்துலயே இருந்தா தலைல கொட்டி கேட்பாரு


===========


5 தி.மு.க - காங்கிரஸ் உறவு ஆழமானது -க்லைஞர் # ரத்தகறை கொண்ட ஈழம் ஆனது.துரோகத்தின் பக்கங்கள் நீளம் ஆனது"


=================



6  தமிழகத்தில் நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்தி, ஜனநாயக கடமையாற்ற மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-கருணாநிதி: # திருமங்கலம் இடைத்தேர்தல் போல நடக்கும், டோண்ட் ஒர்ரி


===


7  மே 21ம் தேதி, அன்புமணியை கவர்னர் அழைக்கப் போவது உறுதி.-ராமதாஸ்  # கவர்னர் கிட்டே எதுனா லோன் வாங்கி இருக்காரா\? தவணை சரியா  கட்டலை போல



==================


8  மம்மி வெளியிட்ட அறிக்கை டம்மி-ஸ்டாலின்.# என்னதான் நெட்தமிழர்கள் கும்மி அடிச்சாலும் நமக்குக்கிடைக்கப்போகும் வாக்கு வங்கி கம்மி தான் தலைவரே!


==============




கூடா நட்புடன் மீண்டும் சேர்ந்துள்ளது திமுக.- சரத்குமார் # நாட்டாமை அய்யா, நாம கூட வேணாம்னு விலகி பாஜக போய் சேர்ந்து மீண்டும் இங்கே 1 சீட்க்காக வந்தவர்தானே?



============


10 ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கில் தேர்தலுக்கு முன் தீர்ப்பு இல்லை! -செய்தி # கலைஞர்க்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சு


==========


11 ஜெயலலிதா வாக்குறுதி, குமாரசாமிகளை உருவாக்கும்!' -சலசலக்கும் நீதியரசர் சந்துரு # சுப்ரமணியம் சாமிகள் இருக்காங்க இல்ல, கட்டுப்படுத்தும்


================


12 'சிறைக்கு சென்றவர்களுக்கா உங்கள் ஒட்டு -கனிமொழி # கர்நாடகா ஜெயில், திகார் ஜெயில் -னு 2 ஜெயிலுக்கு போனவங்க இருக்காங்க, யாரைச்சொல்றீங்க?


==============


13 மாட்டிறைச்சி வைத்திருக்கலாம், சாப்பிட கூடாது: மகாராஷ்டிரா ஹைகோர்ட் உத்தரவு # கல்யாணம் கட்டிக்கலாம், ஆனா சம்சாரத்தைக்கூட்டிட்டு ஹனிமூன் போகக்கூடாது


============

14 அதிமுக தேர்தல் அறிக்கை திமுகவின் காப்பி: மு.க. ஸ்டாலின்- உண்மை தான் தலைவரே! ஆனா ட்விஸ்ட் என்னான்னா நம்முது பாமக வின் காப்பி.காப்பி ஆஃப் த காப்பி தப்பில்லை


===============

15

திமுக தேர்தல் அறிக்கை திருக்குறள் போன்றது! -பெஸ்ட் ராமசாமி கொ.மு.க # திருவள்ளுவருக்கு காப்பி அடிக்கும் பழக்கம் கிடையாதே?


=================\

16 என் வாழ்க்கையில் இனி எந்த பதவிக்கும் போட்டியிட மாட்டேன் : வைகோ # திராட்சை கிடைக்காத நரி ச்சீ ச்சீ இப்பழம் புளிக்கும்னுச்சாம்


================


17 காதலில் சொதப்புவது எப்படி' இயக்குநர் பாலாஜிமோகன்- மனைவி விவகாரத்து! # கல்யாணத்திலும் சொதப்பிட்டாரா?


============


18 அரசு ஊழியர்களின் 2-வது மனைவி, குழந்தைகள் கருணை வேலை கோர முடியாது: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு # அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்துமா?


==============


19 எங்கள்கூட்டணி 150தொகுதிகளில் வெற்றி பெறும்- வைகோ # நேத்துதான் கேப்டன் 160 -ன்னாரு. நாளை 140?இப்டியே டெய்லி 10 குறையுமோ?


===============


20  தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கும்: கருணாநிதி # ரிசல்ட் வந்ததும் பணநாயக ஆட்சின்னு சொல்வாரு


=============