Thursday, January 14, 2016

வஞ்சிப்பா ,புஷ்பா ,ரம்பா

மாமா, உங்க பொண்ணுக்கு வாய் ஜாஸ்தியா இருக்கு

 இல்லியே மாப்ளை, எல்லாரையும் போல அவளுக்கு ஒரு வாய் தானே இருக்கு? நல்லா பார்த்துட்டு சொல்லுங்க


==============

2  நான் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும்  4 லைக்ஸ் தான் விழுது

 மேடம், இனிமே ஸ்டேட்டஸே போடமாட்டேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க, 4000 லைக்ஸ் விழும்


================


3  லோ பிரசர், லோ சுகர்னு க்ளினிக் வந்தீங்க, ஆனா செக் பண்ணா ஹை பிசர், ஹை சுகர் காட்டுதே?

டாக்டர், நர்ஸ் லோ ஹிப் லோ கட் சேலை கட்டுதே? அதான்


================

விடிஞ்சு.2,மணி.நேரம் ஆகுது.கெட்டப் மேன்

எந்திரி.

ஹீரோ = கெட்டப் பா?,அய்யோ நான் மாட்டேன்


==============

5 கி.மு , கி.பி என்பது கிருஷ்ணன் பிறப்புதற்கு முன், பின் தானாம், கிறிஸ்து கிடையாதாம்


 நல்ல வேளை, கில்லி ரிலீசுக்கு முன்,பின்  என சொல்லலை


==============


6 டியர், மாசாமாசம் நான்தான் உனக்கு விதம்விதமா மோதிரம் கிஃப்ட் பண்றேன்,ஒரு நாளாவது நீ ரிங்க் தந்திருக்கியா?

டெய்லி மிஸ்டு கால் ரிங்க் தருவேனே?


==================

7 டியர், லவ் பண்றப்போ 
எனக்கு பிடிச்சவங்களுக்காக நா எதையும் செய்வேன்னு சொன்னியே?


ஆமா, இப்போ அதுக்கு என்ன?

மேரேஜ் ஆகிடுச்சே?சமையல் பண்ணு

================

8  இன்ஸ்பெக்டர், சிம்புவை எல்லா இடத்துலயும் தேடியும் கிடைக்கலையா?

ம்ம், பாபநாசம் க்ளைமாக்ஸ் போல் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே  ஒளிஞ்சிருக்காரோ?


=================

9  தலைவரே! தனியா நிக்காம  ஏன் கூட்டணி வைக்கறீங்க?

 தனியா நின்னு தோத்தா நமக்கு கெட்ட பேரு, கூட்டணி வெச்சு தோத்தா பழியை அவங்க மேல போட்டுடலாம்


==================


10 
தமிழ் மிஸ்.தம்புராட்டி = பா எத்தனை வகைப்படும்?

லொள் மாணவன் = வஞ்சிப்பா ,புஷ்பா ,ரம்பா என பல வகைப்படும்


===============
11 தலைவரே! ஜெயிக்கற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடனும்னு தமிழன் நினைக்கறான்.


 ஓஹோ. அப்போ நம்ம கட்சிப்பேரை ஜெயிக்கற கட்சின்னு மாத்திடலாமா?===================

12  

லெட்டர் எழுதுனா போஸ்ட் பண்ணனும்னு அவசியமா என்ன! ?


 எஸ் மிஸ், டோண்ட் போஸ்ட்போன் இட்


===================\


13  லெட்டர்ஸ் டூ GOD -னு நம்ம பொண்ணு எழுதிட்டிருக்கே? கண்டிக்கலையா?

 கடவுளுக்குத்தானே?


 எனக்கென்னவோ அவ மனதை ஆண்டவனுக்கு-ன்னு தோணுது


====================

14 டியர், இன்னைக்கு வேட்டி தினம் கொண்டாடுனீங்களா?


 பெருசா கொண்டாட என்ன இருக்கு? டெய்லி நமக்கு வெட்டி தினம், இன்னைக்கு வேட்டி தினம்


=================


15  தலைவரே!சிவாஜி கணேசன் நடிச்ச சாதனைப்பட திரைக்கதையை எதுக்கு மேடைல சொல்றீங்க?


சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தனும்னு மேலிட உத்தரவு


====================

16 திருமண வைபவத்துல எதுக்கு அரிசிய தலைல போடுறாங்க?

பொண்டாட்டி  புருசன் தலைல அம்மிக்கல்லைத்தூக்கிப்போடுவான்னு ஒரு முன்னோட்ட எச்சரிக்கைதான்


===============

17  இன்ஸ்பெக்டர், உங்க கண் முன்னாலயே திருடன் கார்ல தப்பிப்போறான், பிடிக்கலை?


 சாரி, அவன் கார் நெம்பர் ஒத்தைப்படை, நம்ம ஜீப் ரெட்டைப்படை


=====================

18 இன்ஸ்பெக்டர், நாகார்ஜூன் ஃபோட்டோவை  டிபி யா வெச்சிருக்கறவர் எனக்கு டெய்லி டி எம் அனுப்பறார்


 ஏம்மா, அமலா டிபி தானே நீங்க.அட்ஜஸ் பண்ணிக்குங்க


==================

19  சிங்கம்-3 ல ஹீரோயினா  யாரைப்போடலாம் ஜோசியரே?


 நியூமராலஜிப்படி  த்ரிஷா தான், நேமாலஜிப்படி சிம்ம வாகினி


===================


20  ஜாப் கோயமுத்தூர்'ல ஆனா இன்டர்வீயூ திருச்சி'ல


பார்த்து மிஸ்! சம்பளத்தை  மாசா மாசம்  சென்னை வந்து சைன் பண்ணி வாங்கிக்கோ சொல்லப்போறாங்க


======================

0 comments: