Saturday, January 23, 2016

சீமான் ஜெராக்ஸ் கடை

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் பெயர் சேர்ப்பு # சாரதா , சீட்டு, நளினி, மோசடி, ஊழல் எல்லாம் 3 எழுத்தில வருதே,நாமம்தான்=====================
அதிமுக பேனர்களுக்கு ஒரே நாளில் அனுமதியளித்த அதிகாரி களின் வேகம் வியக்க வைக்கிறது - நீதிபதி  வேகத்தில் செயல்படக்காரணம் இரட்டைஇலை
=================நாங்கள் மட்டும்தான் சாதிக் கட்சியா?- ராமதாஸ் கேள்வி# நான் மட்டும் தான் குற்றவாளியா?னு ஜட்ஜ்ட்ட கேட்டா ரிலீஸ் பண்ணுவாரா?
=================
ஜெ மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதி நடைபெறாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு# என்ன  அவசரம்? தேர்தல் முடியட்டும்னு ஆர்டரோ?
===================='நம்பிக்கைதானே வாழ்க்கை... விஜயகாந்த் வருவார்!' - வைகோ # கேப்டன் மனசுல ரெண்டே சாய்ஸ் , பிஜேபியா? திமுகவா? அதிக சீட் தரும் கட்சிக்கு 
======================
மத்திய துணை ராணுவப் படைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: விரைவில் நடைமுறைக்கு வருகிறது # இனி மிலிட்ரில லவ் ஸ்டோரி நிறைய வரும்
=================
டிடிசிஏ தலைவராக இருந்தபோது யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை: நீதிமன்றத்தில் ஜேட்லி # பின் தேதி இட்ட காசோலையா வாங்கிட்டீங்களோ?
==================
ஜெ வுக்கு ராமதாஸ் கண்டனம் வாட்ஸ்அப் விளம்பரத்திற்காக 50 கோடியை வீணடிப்பதா? #,சொந்தக்காசா போச்சு?மக்கள் வரிப்பணம்தானே னு நினைச்சிருப்பாரு ஜெ


============

9 மேக் இன் இந்தியா’ திட்டம்: 50,000 கோடி கடன் ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை# அப்போ பிஜேபி அதிமுக கூட்டணி இருக்காது


================

10 400 ரயில் நிலையம் நவீனமாக்க விரைவில் டெண்டர் : அருண் ஜெட்லி # இதுல. செம காசு கை மாறும்


==================

11 செய்தித்தாளைப் போல் சுருட்டிக் கொள்ளும் அசத்தல் டிவி-யை அறிமுகப்படுத்தும் எல்.ஜி # திருடனுக்கு ஈசி.அப்டியே சுருட்டி ட்டுப்போய்டுவான்

============

12 30 வயதுக்குள் சாதனை படைத்த 45 இந்திய தொழில் அதிபர்கள்: போர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியல்..# அப்பாடா.45,நடிகைகளுக்கு மாப்ளை ரெடி.

=========

13 அ.தி.மு.க. ஆட்சிக்கு பதில் சொல்லும் காலம் வரும்: கருணாநிதி #,அப்டி ஒரு காலம் வர்லைன்னா இவர் தான் அதுக்கு "ஜவாப்தாரி ஜிம்மேதாரி எல்லாம்

=================


14 2016ல் ADMK ஆட்சிக்கு வந்தால் “ஜெ ஸ்டிக்கர்” Made in அம்மா நாடு என்று உலகப் புகழும் பெற்று விடும்.-கலைஞர் # தலைவரே! அவதூறு வழக்கு பார்சல்


====================

15  வருடம் தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே மின்சார வாரியம், இந்தியாவிலேயே TNEB  மட்டும்தான்!-கலைஞர் # தலைவரே! 2006 டூ 2010?


=============

16  10,000 எழுத்துக்கள் வரை பதிவிடும் வசதியை டிவிட்டர் அறிமுகம் செய்ய உள்ளது!-செய்தி# தேர்தல் அறிக்கையே  ட்விட்டர்ல வந்துடுமே, செத்தாண்டா சேகரு

=================

17 அதிமுக சாதனை விளக்க பேரணி துவக்கம்!# விளக்கிச்சொல்லிப்புரிய வைக்க வேண்டிய  அளவுக்கு உங்கள் சாதனை மக்களுக்குத்தெரியாமல் இருந்தால் அது வேதனை=================================18  லட்சக்கணக்கான சீமான்களை உருவாக்கி வருகிறோம் - சீமான் #  சீமான் ஜெராக்ஸ் கடை ஆரம்பிச்ட்டீங்களா?


===================


19  ஒற்றை, இரட்டைப்படை வாகன நடைமுறை: நிறுத்த சொல்லும் டெல்லி நீதிமன்றம்!# போக்குவரத்து  நெரிசல் குறையும்னு நினைச்சா கார் புக்கிங் கூடிடுச்சாம்


==================


20  
பொங்கலுக்கு இரண்டு துண்டு கரும்பு வழங்கப்படும்- செய்தி#  அதுல கூட இரட்டை இலைக்கு மறைமுக பிரச்சாரம்.னு நம்ம தானைத்தலைவர் இன்னும் கிளம்பலையா?

=====================

0 comments: