Sunday, January 31, 2016

சன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்?

சமூகபொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப் பூங்கா தமிழகம் சட்டசபையில் கவர்னர் ரோசய்யா # என்ன? மழை வெள்ளம் வந்ததால வாட்டர் பார்க் ஆகிடுச்சு==================
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பேசுவோர் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு  # ஆச்சரியமா இருக்கே? நம்ம கட்சில பேசக்கூட அனுமதி உண்டா?
=================
3  அரசின் தோல்விகளை ஆளுநர் உரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: வைகோ # அப்போ ஆளுநர் பதவிக்கு ஆபத்துன்னு சொல்லுங்க, கட்டம் கட்டிடுவாங்க
====================
4  ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள்: தமிழக காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை # ஆமா, நக்மா கோஷ்டி, குஷ்பூ கோஷ்டின்னு யாரும் அடிச்சுக்காம
==================5   ஓட்டுக்கு பணம் வாங்குமாறு கூறிய விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி # அப்போ பணம் வாங்கிக்கலாம்னு அர்த்தமா?என்னய்யா தீர்ப்பு இது?
===================
6  முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு # மாற்றம் , முன்னேற்றம்கற பாமக ஸ்லோகனை இவங்க தப்பா புரிஞ்சுட்டாங்க போல
==================
இன்றிலிருந்து (21/1/'16) ஒரு மாதத்திற்கு 5 கிரகங்களை வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்-செய்தி # திமுக, அதிமுக , காங்கிரஸ்,பாமக,சமக கட்சிகளா?
================
பாதுகாப்பு அம்சம் இல்லாமல்  ரிசர்வ் வங்கி அச்சிட்ட 1,000 ரூ.நோட்டு : ரூ.30,000 கோடி நோட்டுகள் செல்லாது-செய்தி # கள்ள நோட்டு அடிக்கறவன் கரெக்டா  அடிச்சுடறான், நல்ல நோட்டை தப்பு தப்பா அடிக்கறாங்க
=====================சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட மாணவர்கள் அரசியல் கட்சியில் சேர வேண்டும்- கார்த்தி ப சிதம்பரம் # கறிவேப்பிலையா யூஸ் பண்ணிட்டு தூக்கிப்போடவா?


=============


10 சன்னி லியோனிடம் "ஆபாச" கேள்வி கேட்ட செய்தியாளர்... பொங்கியெழுந்த நெட்டிசன்கள்... கணவர் கண்டனம் # புருசன் பயங்கரக்கோபக்காரர் போல.


==========

11 எனக்கு அப்பவே கோவில் கட்டினாங்க... குஷ்பு பெருமிதம் .தமிழன் உங்களுக்கு மட்டுமா கட்டினான்?ஹன் சிகா ,நயன் தாரா வுக்கும்தான் கட்னான்


=============


12 1 லட்சம் கொடுத்து 26 வயதுப் பெண்ணுடன்காண்டிராக்ட்கல்யாணம்.56 வயது சோமாலியா நபர் கைது # சினிமாப்பார்த்து காமா சோமானு எதுனா செய்யறது.


===========


13 திருமணம் எனக்கு தேவை இல்லை: நமீதா பேட்டி # மச்சான்ஸ் மட்டும் போதும் மாமன் வேணாம்கறார்


===============

14 வரும் தேர்தல் தமாகா-வுக்கு திருவிழா போல இருக்கும் -வாசன்# நம்ம கரகாட்டக்காரி சூறாவளிக்கு சொல்லி விட்டிருக்கு.சுளுக்கு எடுத்துடுவாப்டி


===========

15 தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை-அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்  #   தன்னிகரற்ற அம்மாவின் “தண்ணி” நீக்கமற நிறைந்த டாஸ்மாக் ஆட்சி வாழ்க!


==================

16   ஊழலை ஒழிக்க விரும்பினால் லோக் ஆயுக்தா அமைப்பீர்: ஜெ.-க்கு விஜயகாந்த் வலியுறுத்தல் # ஊழலை ஒளிக்க விரும்பினால் என்ன பண்ணனும்னும் சொல்லிருங்க===================17  பாமக ஆட்சி அமைத்து முழு மதுவிலக்கு அமல்படுத்துவது உறுதி-ராமதாஸ் # முழு மதுவிலக்குன்னா ஃபுல்லுக்கு மட்டும் தடை,குவாட்டர், ஆஃப் உண்டா?


==================


18  மரங்களில் ஆணி அடித்தால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம்: மதுரையில் விளம்பரபலகைநிறுவனமுகவரிகள் சேகரிப்பு # இனி ஆணியே புடுங்கவேணாம்னு சொல்ல முடியாது


===================


19  அம்மா ஆட்சியின்  சாதனையை விளக்கி மக்களிடம் துண்டு சீட்டை எம்.எல்.ஏக்கள் வழங்கினார்கள்:
செய்தி# ஒரே ஒரு துண்டு சீட்டில் அடங்கிடுச்சா சாதனை?


================


20  எதிரிகளையும் காத்து ஜெ  பூமாதேவியாக இருக்கிறார்-நாஞ்சில் பி.சி.அன்பழகன் # ஓஹோ, ஊழல்வாதியா எதிரி இருந்தா காத்து நின்னா சட்டப்படி குற்றம்


=======================

எதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்

1  சார், ஆன் லைன்  ஃபிரண்ட்ஸ் கிட்டே வாங்கின கடனை எப்பொ திருப்பித்தருவீங்க?

 இப்போ ஆஃப் லைன்ல இருக்கேன்,சாரி


================


2 சார், இந்தப்படத்துல கெட்டப்க்காக மொட்டை அடிக்கனும்

வழக்கமா   நம்ம பட புரொடியூசர்ங்க அடிச்சுக்குவாங்க, இப்போ  நானேவா? ரைட்டு


================


3 சலூனில்

மொட்டை அடிக்க வழக்கமா 100 ரூபாதானே? இப்போ ஏன் 250 ரூபா கேட்கறீங்க?

 இது தெறி ஸ்பெஷல் மொட்டை


==================


4  டாக்டர், ஆஃபீசுக்குக்கிளம்பும்போது பல்லி கத்துனா அதுக்கு என்ன அர்த்தம்?

யோவ்,அது  ஜோடி பல்லிக்கு சிக்னல் , நீ  சிக்னல் பார்த்து வண்டி ஓட்டு


====================

5  டியர்.நீங்க வராம ட்விட்டர்/ ஃபேஸ்புக் டைம் லைனே வெறிச்சோடிக்கிடக்கு.


அப்டியா?வரும்போது கிரவுண்ட்ல இருந்து.500 பேரைக்கூட்டிட்டு வந்துடவா?


==============


6 டியர்.ஊர் சுத்தாம சுத்தமா நீ இருந்தா

உன்ன ஏத்துக்குவேன்.
ஏம்மா உலகமே சுத்தறவரை பிரதமராவே ஏத்துக்கும்போது காதலனா என்னை ஏத்துக்க மாட்டாயா?


=============

7 மன்னா! குறைகளே இல்லாத ஆட்சி நம்முடையதுனு சொன்னீங்க?


ஆம் அமைச்சரே!
அப்போ குறை கேட்கும் படலம் ,குறை தீர்க்கும் மையம் நிறுவுனா என்ன அர்த்தம்?==========


8 ஜிவி பிரகாஷ்  பூஜை போட்ட புதுப்படத்துல சிம்பு நடிச்சிருந்தா  என்ன டைட்டில் வெச்சிருப்பாங்க?


எனக்கு இன்னொரு ஃபிகர் இருக்கு


=================


9 அதோ பச்சைப்புடவை கட்டி இருக்கே அதான் என் ஆளு


 டேய், அது அம்மா அழைப்பு மையம். அங்கே 87 பேருக்கும் பச்சை சேலை யூனிஃபார்ம்தான்==================


10 டாக்டர் ராம்தாஸ் சந்தானத்தை தாக்கப்போறாரு, எதிரா போராட்டம் பண்ணப்போறாருனு எப்டி சொல்றே?

 சந்தானத்தோட அடுத்த படம்  சர்வர் சுந்த”ரம்” ஆச்சே?===========================


11 டாக்டர்! சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழனும் , அதுக்கு ஏதாவது குறுக்கு வழி இருக்கா?


2 சைடு கடைவாய்ப்பல்லை பிடுங்கிட்டாப்போதும்


=====================13  டியர், முதல்ல  எல்லாம் ஒரு நாளைக்கு 750 மெசேஜ் அனுப்பிய நீ,
இப்போ 1 கூட அனுப்பறதில்ல ஏன்?


அப்போ ஒரு ஃபிகரை மட்டும்தான் லவ்விட்டு இருந்தேன்

===================

14 அகஸ்தியர் ஃபால்ஸ் போய் குரங்கு ஃபோட்டோ எடுத்தென்.

 ஓஹோ. அப்போ மங்க்கி ஃபால்ஸ் போனா  அகஸ்தியர்  ஃபோட்டோ எடுப்பீங்களா?


================


15  போஸ்டல் டிபார்மெண்ட்ல ஏ டி எம் வருதாம்


 அப்பாடா.  எப்டி?ஏ டி எம் மெஷினையே டோர் டெலிவரி பண்ணிடுவாங்களா?


==================


16  என் முதல் கதையை கிரவுண்ட் ஃப்ளோர்ல எழுதுனேன், 2வது கதையை 10 வது மாடில உக்காந்து எழுதுனேன்

 அடேங்கப்பா, அபாரமான முன்னேற்றம் சார்


================


17 
மன்னா! எதிரி மன்னன் போருக்கு அழைத்து ஓலை அனுப்பி இருக்கிறான்.பதில் மடலில் என்ன எழுத?
எனக்கு இன்னொரு போர் இருக்கு என எழுதி அனுப்பும்
=============18 தலைவரே! தமிழ்நாட்ல 5.75 கோடி வாக்காளர்கள் இருக்காங்களாம்


 ஓஹோ, அப்போ ஒரு வாக்குக்கு 1000 ரூபான்னா  5750 கோடி பட்டுவாடா பண்ணா போதுமா?


=================


19  தலைவரே! அவசர அழைப்பு 1100 திட்டம் வெற்றி பெறும்னு எப்படி  சொல்றீங்க?

 நோக்கியா 1100 பேசிக் மாடல் செம ஹிட் ஆச்சே? அதை வெச்சுதான்


===================


20 டியர்.எதிர் வீட்டு ஆண்ட்டி 10,000 ரூபா பட்டுப்புடவை கட்டிட்டு இருக்கா.பாத்தீங்களா?

பாக்க ட்ரை பண்ணேன்.ஜன்னல் சாத்திட்டாங்க

================

Saturday, January 30, 2016

சன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க இலவச அலைபேசி 1100 அறிமுகம்-ஜெ # ஜெ வும் சசியும் தான் நெ 1,நெ 1,மத்தவங்க எல்லாம் ஜீரோ ஜீரோ.கட்சியில்.குறியீடு?
=======

============


2 பிச்சை எடுப்பதை கட்டுபடுத்த நடவடிக்கை ___மத்திய அரசு # அம்மா தாயே ஓட்டு போடுங்கனு யாரும் வரமாட்டாங்க இல்ல இனி?
==============
3 ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தேமுதிக திமுக வெளிநடப்பு. # ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஓடலாம், வெளியேறலாம்
===============
4 தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு.-செய்தி # இனி கட்சிக்காரங்க இவரை "இது நம்ம ஆளு"நர் னு பாராட்டுவாங்களோ?்
==============5 திருவாரூருக்கு ரயிலில் செல்ல இருக்கிறேன் - கருணாநிதி # 2 ஜி தீர்ப்பு வந்த பின் ஜெயில் செல்ல இருக்கிறேன்
===========
6 கேட்டை திறக்க தாமதமானால் காவலாளி மீது காரை ஏற்றிக்கொன்ற சம்பம்: கேரள தொழிலதிபர் குற்றவாளி என தீர்ப்பு. # மாநிலத்துக்கு ஒரு சல்மான் கான்
===========
7 இதுதான் ஜெயலலிதாவுக்கான கடைசி பாராட்டு உரை: ஆளுநர் உரை குறித்து ராமதாஸ்  # அய்யய்யோ, இனி ஆளுநர் போஸ்ட்டே இருக்காதா? தூக்கிடுவாங்களா?

==================
8  காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது -ராகுல்# மக்களிடம்  வாக்குக்கேட்காமல் தேர்தலில் நிற்பதை ஆதரிக்கிறோம்
================
9  மதுகடைகளை மூடினால் சட்டம்-ஒழுங்கு கெடும்-எடப்பாடி பழனிச்சாமி # ஓஹோ! பெரும்பாலான போலீஸ்காரங்கள்கூட குடிகாரர்கள் தான்னு சொல்றீங்களா?
==================10 ‘அம்மா அழைப்பு மையம்’ காப்பியடிக்கப்பட்ட திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு # பரீட்சைல பையன் காப்பி அடிச்சானா?யார் கேட்கறா? பாஸ் ஆகிட்டானா?
=================11 கெத்து படத்துக்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி கோர்ட்டில் வழக்கு # மதுவிலக்குக்கேட்டு தாத்தா டிராமா போட்டா பேரன் வரிவிலக்குக்கேட்டு சினிமா
=================
12 நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை. -செய்தி # அதுல கூட ஸ்பீடு போஸ்ட் ஏடிஎம் இருக்கா?ன்னு கேட்பானே நம்மாளு, அவசர உலகம் 
===============
13  உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு கூடாது: ராமதாஸ்  # ஆமா, காதலர்களைப்பிரிக்கும்போது மட்டும் அதெல்லாம் பார்த்தாப்போதும்
==================14  தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடி: அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம்# அப்போ முதல் கருத்துக்கணிப்பை காஞ்சிபுரத்தில் எடுக்கனும்
=====================
15  வாட்ஸ் அப் பயன்படுத்த இனி கட்டணம் கிடையாது-செய்தி # இது நிறுவன அறிவிப்புதான். என் ஆணைப்படி இலவசம்னு யாராவது அடிச்சு விட்றப்போறாங்க
===================
16 தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் பெண் வாக்காளர்களே அதிகம் # ஆணாதிக்கம் நிறைந்த தலைநகரில் பெண் ஆதிக்கம்
==================
17 சன்னி லியோனியுடன் இணைந்து பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சியே - அமீர்கான் # அண்ணே, ஷூட்டிங் அவுட்டோர்ல தானே?
=================18  முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் 99 சதவீத மனுக்களுக்கு தீர்வு உயர் அதிகாரி தகவல் # சார், குறை மனுக்களைப்படிச்சு முடிக்கவே ஒரு வருசம் ஆகுமே?==================19 மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- ராமதாஸ் #  சாதிப்பிரச்னையால் காதலர்கள் தற்கொலைக்குக்காரணமானவர் முதல்வர் ஆகனுமா?


==================

20  தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்-GKவாசன்  # இப்டி பொதுவாச்சொன்னா  எப்படி?இங்கன தவறு செஞ்சவங்க கொள்ளைப்பேரு அரசியல்ல இருக்காக


======================

பின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்?

சுடுநீரில் கொதிக்க வைத்த சீரகத்தண்ணீர் தினம் நீ அருந்தினால் ஜீரணக்கோளாறு,நோய்த்தொற்று தவிர்க்கலாம் # கேரளா பார்முலா


============2 ட்விட்டர்/FB டிபி ல ஒரு கையால் பாதி முகத்தை மறைத்திருக்கும் மங்கைகள் நிஜ வாழ்வில் சாலையில் நடக்கும்போதும் அப்டியேதான் இருப்பாங்களோ?
=============3 திருமணம் ஆகியும் பொறுப்பே இல்லாத பருப்பே!

மாதம் ஒருமுறையாவது நீ சமைத்தால் சிறப்பே!


===========

4 எந்த வித சிக்கலும் இல்லாத பின் நவீனத்துவ வாழ்க்கை வாழ தினமும் ஒரு பூவன் வாழைப்பழம் சாப்பிடலாம் (பூம்பழம்)


=============


5 எல்லா ட்வீட்டர்சையும் பிடிச்சிருந்தா: நமக்கு பிடிச்சவங்க டிஎல்ல இல்லைனா ட்விட்டரே பிடிக்கலை ன்னு புலம்பத்தேவை இல்லை

==============


6 கான்ஸ்டபிள் கனகா தான் உன்னை பிடிச்சவரா?


ஆமா.திருடிட்டு ஓடும்போது துரத்திப்பிடிச்சவரு=========


7 சுகன்யா ஒரு ஸ்த்ரீ என்பதை கவனமா எழுதலைன்னா சு"கன்யாஸ்த்ரீ" ஆகிடும்


==============


8 இதழ் முத்தத்தை லிப் லாக் னு சொல்லாம ஏன் பிரெஞ்ச் கிஸ் னு சொல்றாங்க?


முதல் டைம்னா FRESH KISS னு சொல்லலாம்.பல டைம் கொடுத்தா FRENCH KISS==============


9 அன்பு கொண்ட உள்ளத்திற்கு டூ விட்டிருந்தால் இன்றே பழம் விடு.


============


10 டியர்.லைட்டை ஆப் பண்ணட்டா?


நோ.நானும் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரிதான்.எனக்கு, இருட்டைக் கண்டால் உன் முகத்தை கிட்டக்கா பார்த்தா பயம்================


1 1 ஹிந்தி படிக்கவே ஆர்வம் இல்லாதவங்க காலத்தில பிரெஞ்ச் கிளாஸ்க்கு வந்திருக்கியே.வெரி குட்.


டீச்சர்.நான் வந்ததே பிரெஞ்ச் கிஸ்னா என்ன?னு தெரிய்


================

12 அன்பை ரசி

அன்பு அரசி
இரு பொருள் பெயர்ச்சொல்
அன்பரசி================


13 பேங்கில் போய் பணம் எடுத்தார் பவித்ரா = ப"WITHDRAW"

==============


14 விஜய் ன் மைல் கல் கில்லி.அதை தெறி முறியடித்தால் இளைய தளபதி தெறி ஸ்டார் என அழைக்கப்படுவார்


============

15 மனதிற்கு பிடிக்காத  ஃபிகரின் ட்வீட்டை ஆர் டி  செய்வதும்
ஒரு வகையான தண்டனை தான்.!!


===============


16 அன்பே! புஷ்பா!
+2 வில் நீ பாஸா? புஸ்சா?


=================


17  மான் விழியோட அப்பா தங்க மீன்கள் பட பாட்டு பாடுனா எப்டி பாடுவார்?

 மான் விழி யாழை மீட்டுகின்றாள்

 காதலர் = மான் விழியாளை மீட்டுகின்றேன்


================

18 உன்னை நினைத்து கவிதையெழுதினேன் ,நனைந்தது காகிதம்.

 அட கிறுக்கு புள்ளே, இங்க் பேனாவில் எழுதுனா நனையாம? லெட் பேனாவில் எழுது இனி, நனையாது


===================


19  கீர்த்திசுரேஷ் மாதிரி ஃபிகர்அமைஞ்சா  வாய் சரிஇல்ல,
ஆர்த்தி கணேஷ் மாதிரி ஃபிகர் அமைஞ்சா  மெய் சரி இல்லை,ஓவர் குண்டுன்னும் குறைசொல்வான்தமிழன்==================

20 மனித மூளை ஒரு அதிசய அலாரம்.இரவில் நித்திரைக்குச்செல்லும் முன் அதிகாலை எழ வேண்டும் என முனைப்பு நினைப்பு கொண்டால் அதே நேரத்தில் எழுப்பி விடும்


================