Tuesday, May 31, 2011

கிஸ்ஸாலஜி. மிஸ்ஸாலஜி ,பஸ்ஸாலஜி

TRIUMVIRATE. Andrey Yakovlev & Lili Aleeva
TRIUMVIRATE. Andrey Yakovlev & Lili Aleeva


1. சத்தம் வராத முத்தம் பெண்ணின் விருப்பம்,சைலண்ட் கிஸ்ஸை புறம் தள்ளி வயலண்ட் கிஸ் தருவது ஆணின் விருப்பம்#கிஸ்ஸாலஜி

-----------------------------
2. புருவங்களின் மத்தியில் ,நெற்றியில் குங்குமம் வைத்தால் பெண்கள் லட்சுமிகரம்,நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தவர்கள் லட்சுமி கடாட்சம்#மிஸ்சாலஜி

---------------------
3. கண்ணாடி அணிந்த பெண்கள் கூடுதல் அழகுடன் ஜொலிப்பதை பல சந்தர்ப்பங்களில் நான் கண்டிருக்கிறேன்#ஜொள்ளாலஜி

--------------------
4. காதலிக்கு ரோஜா,மனைவிக்கு மல்லிகை,ஸ்டெப்னிக்கு ஜாதி முல்லை,கள்ளக்காதலிக்கு ஜாதி மல்லிகை என வகை வகையாக பூக்களை தருகிறார்கள் ஆண்கள்#கில்மாலஜி

-------------------
5.வில் போல் புருவம் வேண்டும் என பியூட்டி பார்லர் போய் செயற்கையாக அழகு புருவம் அமைக்கும் அழகிகளை ஆண் சுலபமாக அடையாளம் அறிந்து கொள்வான் #ஜெண்ட்ஸாலஜி

------------------------


Alex Alemany

6. பெரும்பாலான பெண்களின் மொபைலில் மிஸ்டு கால் விடுவதற்கான அளவு மட்டுமே பேலன்ஸ் மெயிண்டெயின் செய்யப்படுகிறது#லேடீஸாலஜி

----------------------

7. கூலிங்க் கிளாஸ் அணிவது கம்பீரத்தின் வெளிப்பாடு என வெளியே சொல்லிக்கொண்டாலும் கள்ளத்தனத்தை மறைக்கவும் அது பயன்படுகிறது #ஜெண்ட்ஸ்ஸாலஜி

-----------------

8.டேய் என பப்ளிக் ப்ளேசில் காதலி அழைக்கும்போது ரசிக்கும் ஆண் மனம் அவள் மனைவியான பின்பு தனி அறையில் அப்படி அழைத்தாலும் ரசிப்பதில்லை#லவ்வாலஜி

---------------------

9. காதலிக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை விட கிளு கிளு விளையாட்டு வேறு இருப்பதாக தெரிவதில்லை#லவ்வாலஜி

----------------

10. பஸ்ஸை விட ரயில் பிரயாணத்தை ஆண்கள் விரும்பாததற்குக்காரணம் ரயிலில் ஆண் ஆதிக்கம் அதிகம் என்பதால் தான்#ஜெண்ட்ஸ்சாலஜி

---------------------------  
 

A NIGHT MARE ON ELM STREET -3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://onlinemoviesplanet.com/covers/February-17-2011-2-25-53-a-nightmare-on-elm-street.jpg
மனுஷன் நிம்மதியா இருக்கறதே தூங்கறப்பத்தான்.. ஆனா தூங்குனா உங்க உயிருக்கு ஆபத்துன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?அதிர்ச்சியா இருக்கா? இது தான் படத்தோட ஒன் லைன்...
ஸ்கூல்ல ஒண்னா படிச்ச ஒரு ஸ்டூடண்ட்ஸ் செட்ல வரிசையா ஒவ்வொருவரா கொலை செய்யப்படறாங்க.. ஒவ்வொரு கொலையும் அவங்க தூங்கறப்ப தான் நடக்குது.. தூங்கும்போது ஒரு சக்தி அவங்களை அதனோட கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து கொலை செய்யுது.. 

ஏன் கொலைகள் நடக்குது? ஒரு ஃபிளாஸ்பேக்.. 

அந்த ஸ்கூல்ல தோட்ட வேலை பார்த்த ஒருவனோட நடவடிக்கைகள் மர்மமா இருக்கு.. தொடர்ந்து கண்காணிக்கறாங்க.. அவன் ஸ்கூல்ல படிக்கற சின்ன பசங்களோட,பொண்ணுங்களோட பாலியல் பலாத்காரம் பண்ணுறானோன்னு ஒரு டவுட்.. அது பற்றி சரியா விசாரிக்காமயே,அவன் குற்றவாளியாங்கறது  உறுதி செய்யப்படாமயே குழந்தைகளோட பெற்றோர் அவங்களா ஒரு முடிவெடுத்து அவனை ஒரு ரூம்ல வெச்சு தீக்குளிக்க வெச்சுடராங்க.. 

அவன் சாகறப்ப உங்களை எல்லாம் கொல்லாம விட மாட்டேன்னு சபதம் எடுக்கறான்.. அவன் ஆவியா வந்து ஒவ்வொருவரா கொல்றான்.. அதான் கதை...

http://maxcdn.fooyoh.com/files/attach/images/1068/532/601/004/nightmare-elm-st-mouthwash.jpg
படம் ஓப்பன்ல இருந்து முதல் 3 ரீல் செம சஸ்பென்ஸ் தான்.. ஆனா கொலைகள் ஏன் நடக்குதுன்னு தெரிஞ்ச பிறகு விறு விறுப்பு மிஸ்ஸிங்க்.. ( இதனால தான் சில படங்கள்ல கடைசி வரை கொலையாளி யார்னு சொல்லாமயே விட்றாங்க போல..)
திக் திக் படத்தில் வரும் டக் டக் வசனங்கள்

1. மிஸ்.. வீக் எண்ட்ல ரொம்ப டயர்டு ஆகீட்டீங்கபோல..?


ஏன்.. நீ அப்படி ஆக மாட்டியா?  ( ஹாலிவுட்லயும் டபுள்மீனிங்க்கா?)


2. என்னால 3 நாளா தூங்க முடியல.. தூங்குனா கனவு வருது.. கனவுல பேய் வந்துடுது.. என்னை என்ன பண்ண சொல்றீங்க?


3. எந்தக்கடவுளும் உன்னை காப்பாற்ற முடியாது.. மரண தேவன் கிட்டே இருந்து நீ தப்பிக்கவே முடியாது.. 


4. உன் இதயம் நின்னு போனாக்கூட மூளை மட்டும் 7 நிமிஷம் இயங்கிட்டே இருக்கும்.. நாம விளையாட அந்த 7 நிமிஷம் போதும்..

5. என்னால தூங்காம இருக்க முடியல.. 72 மணி நேரம் தொடர்ந்து தூங்கலைன்னா உடல் பலஹீனம் ஆகிடும்.. ..தூங்குனா உயிர் என் கைல இல்ல.. இப்போ நான் என்ன பண்ண?


6. டாக்டர்.. சொன்னா நம்புங்க.. நான் என்னோட 15 வது வயசுல இருந்தே இந்த மாத்திரையை சாப்பிட்டு வர்றேன்.. என் உடம்புல பலம் குறைஞ்சிடுச்சுன்னா அதை சாப்பிடனும் . ப்ளீஸ் குடுத்திடுங்க.. சக்தியை பூஸ்ட் பண்ணும் மாத்திரை அது.. 

7. டியர்.. நீ எதுக்கும் கவலைப்பதாதே.. நான் உன்னை எந்த சூழ்நிலைலயும் தூங்க விட மாட்டேன்..

ஐ நோ.. சப்போஸ் நான் என்னையும் மீறி தூங்கிட்டா தூக்கத்துல நான் துடிச்சா என்னை எழுப்பி விட்டுடு.. என்னை உடனே காப்பாத்து

http://thewolfmancometh.files.wordpress.com/2011/01/nightmare-on-elm-street-3-dream-warriors-patricia-arquette.jpg
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஃபிளாஸ்பேக் சீனில் சஸ்பென்ஸை சரியாக காப்பாற்றி டெம்ப்போ ஏத்துனது.. 

2. ஹீரோயின் அழகான ஃபிகரா செலக்ட் பண்ணி டீசண்ட்டா அவரை (படத்துல )யூஸ் பண்ணிக்கிட்டது.. 

3. ஹீரோயின் அம்மா மேல் டவுட் வர வைத்து டைவர்ட் செய்தது.. 

4. க்ளைமாக்ஸ் சீனில் ஹீரோயின் தரையில் நடக்கும்போது அது அப்படியே ரத்தக்குளமாக மாறும் சீன்...

5. ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் கனவு சீனில் வரும் வில்லன் நிகழ்கால பேக் கிரவுண்டை அப்படியே கனவு உலகத்து அதே பேக் கிரவுண்டில் இடம் மாற்றுவது.. 


http://moviemusereviews.com/wp-content/uploads/2011/03/spring-movie-preview-2011-scream-4.jpg
 

 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. தோட்டக்காரன் மேல் தவறு இருக்கா? இல்லையா? என்பதை கடைசி வரை தெளிவாக சொல்லாதது..

2. தோட்டக்காரன் மேல் தவறு என்றே வைத்துக்கொண்டாலும் பெற்றோர்கள் போலீசில் புகார் தராமல் ஏன் அவனை எரித்துக்கொள்ளவேண்டும்? அதை ஏன் போலீஸ் விசாரணை செய்யவே இல்லை.. ?

3. ஹீரோயின் நான்சி அடிப்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு ட்ரீட்மெண்ட் தரும்போது கடைசி வரை அவர் ஷூ சாக்ஸ் கழட்டாமலேயே ட்ரீட்மெண்ட் தருவது.. 

4. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸில் ஆபத்தான மருந்துகள் எப்படி ஓப்பனாக வைத்திருப்பார்கள்? அவை பாதுகாப்பாக பீரோவில் தானே இருக்கும்?

5.ஹீரோவுக்கு இருக்கும் ஸ்லீப்டெப்ரிவேஷன் நோய்க்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?

6.  ஹீரோயின் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கும்போது பேயின் கரங்கள் பாத் டப்பில் வருது.. அப்போ ஹீரோயின் அம்மா நான் சி என அழைக்கிறார்.. உடனே பேய் ஓடிடுது.. ஏன்? பேய்க்கு ஹீரோயின் அம்மான்னா பயமா?
7.  கடைசியாக ஒரு கில்மா டவுட்.. ஸ்கூல் ஃபிகர்கள் உட்பட படத்தில் வரும் அனைத்து பெண் கேரக்டர்களும் குளிருக்காக கோட் போட்டே வருவது ஓக்கே.ஆனா ஏன் முழங்காலுக்கு கீழே வெறும் சருமம் தெரிய இருக்க வேண்டும்? குளிராதா?

http://moviesmedia.ign.com/movies/image/article/108/1085171/a-nightmare-on-elm-street-2010-20100421114129649_640w.jpg

--
படத்தில் ஆரம்ப காட்சிகளில் இருந்த திகில் போகப்போக குறைவு.. பின்னணி இசை இன்னும் நல்லா போட்டிருக்கலாம்.. வில்லனுக்கான மேக்கப் சரி இல்லை.. தசாவதார மேக்கப் மாதிரி சுமார் தான்.. அதுவே படத்தின் பெரிய மைனஸ்..

 கர்ப்பிணிப்பெண்கள் தவிர அனைவரும் பார்க்கலாம்.. திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம். இது ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்..

ஜாலிலோ ஜிம்கானோ ஜோக்ஸ்

http://www.bharatwaves.com/wallpapers/d/66957-2/Iliyana_002.jpg
1.டீச்சர்,13 வயசுல ஒரு பொண்ணுக்கு குழந்தை பிறக்குமா?

ச்சே ச்சே 18 வயசு ஆகனும்.

அதை என் ஆள் காஞ்சனா கிட்டே சொலுங்க, ரொம்ப பயப்படறா

--------------------------------

2. பொண்ணு செம கலர்னே.. ஆனா கறுப்பா இருக்கே?


விளையாடறியா?கறுப்பும் ஒரு கலர் தானே? எப்படி ? பொண்ணு செம கறுப்பா?

-----------------------------

3. கம்மங்கூழ் குடிக்கறப்ப என் கிளாஸ் அதுல விழுந்துடிச்சு..


ஓஹோ.. இப்போ அது கூழிங்க் கிளாஸ் ஆகிடுச்சா?

-------------------------

4. தலைவரை டிஸ்மிஸ் பண்ணுன கவர்னர் லேடி பி ஏ வை விட்டு தலைவருக்கு ஒரு கிஸ் தர வைக்கிறாரே? ஏன்?

எலிமினேஷன்க்கு முன்னால வர்ற எண்ட்டர்டெயின்மெண்ட் டேன்ஸ் மாதிரியாம் இது..

-------------------------------

5. வேற்றுக்கிரகவாசியா அந்த நடிகையை நடிக்க வெச்சா என்ன யூஸ்?

இலியானா ஏலியனா? அப்படின்னு படத்துக்கு டைட்டில் வைக்கலாமே?

-------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4sRLtdusHyeIpYdplbnHUrZ_xMN3xklG6I9enj_n78zBNXhU-yOdRPeKSCq5qn7VZ850No0xt8WOcC8Y1DSeb_ZscnXUMD5nXoe3NQMeeZU8OpuURuHXaqgGdRv6Ne3GrTV_j5OtBl-Kc/s640/Illeana-Stills-from-Nenu-Naa-Rakshashi-3.jpg

6. மாசாமாசம் பவுர்ணமி அன்னைக்கு மட்டும் தலைவர் சம்சாரம் கூட சந்தோஷமா இருப்பாராம்.

சமச்சீர் கல்வித்திட்டத்தை விட அமெச்சூர் கலவித்திட்டம் ரொம்ப மோசமா இருக்கே?

--------------------------

7. என்னப்பா? உன் காதலி மோசம்னு நீயே சொன்னா எப்படி?

அய்யோ டாக்டர்.. உங்க காதுல இடி விழ.. என் காதலி மாசமா இருக்கா-னு சொன்னேன்மோசமா இருக்கா அப்டின்னா சொன்னேன்?

---------------------------------

8. என்னடி?உன் ஆளு உனக்கு ஊறுகாய் பாட்டில் கிஃப்டா தர்றான்?

என்னை ஊறுகாய் மாதிரி தொட்டுக்க பழகறான்னு சிம்பாலிக்கா சொல்றானோ? #டவுட்டு

---------------------------

9. அந்த லேடி பேஷண்ட் நெஞ்சுல ஸ்டெதஸ்கோப் வெச்சு பார்க்காம டாக்டர் தன் காதை டைரக்டா வெச்சு கேட்கறாரே?

செக்கப் பண்றாரா? ஃபிகரை பிக்கப் பண்றாரா?

----------------------------

10. நெட் செண்ட்டர்னு வெளில போர்டு வெச்சிருக்கீங்க. உள்ளே வந்து பார்த்தா ஒரு கம்ப்யூட்டர் கூட இல்லையே?

இது மீனவர்களுக்கான நெட் செண்ட்டர்.. ஒன்லி மீனவர் வலை சேல்ஸ்.

------------------------




டிஸ்கி- 3வதா போட்ட ஸ்டில் சும்மா சேஞ்சுக்காக. இலியானாவைப்பார்த்து இயற்கையே ஜொள் விடுதா?ன்னு யாரும் கமெண்ட் போட்றாதீங்க.. ஹி ஹி

Monday, May 30, 2011

நாளைய இயக்குநர் -கொலை கதைகள் - விமர்சனம்


photo
இப்பவெல்லாம் ஹாய் மதன் ஓப்பனிங்க்ல ஒரு கமெண்ட் குடுக்காம விட மாட்டார் போல.. த்ரில்லர் கதை, டெரர் கதை என்ன வித்தியாசம்?னு ஒரு கேள்வியை கேட்டதுக்கு ஏதோ குழப்பமான பதிலை குடுத்தார்.. அதாவது த்ரில்லர் கதைன்னா கொலை நடக்கும், பார்க்க த்ரில்லா இருக்கும், டெரர் கதைன்னா ஒரு கொலை கூட நடக்காம கதையை த்ரில்லிங்கா கொண்டு போவது..

தொகுப்பாளினி டிரஸ்ஸிங்க் சென்ஸ் பற்றி வாரா வாரம் ஒரு பேரா போடலைன்னா எனக்கு விமோச்சனமே கிடைக்காது போல,.,. டி வி காம்ப்பியரிங்க்லயே மிக மோசமான டிரஸ்ஸிங்க் சென்ஸ் இந்த பாப்பாவுக்கு த்தான்.. கிராமங்கள்ல பூ போட்ட பாவாடை கட்டுவாங்களே.. அதையே மேலே இருந்து கீழே வரை கிட்டத்தட்ட நைட்டி மாதிரி போட்டிருந்தார்.. கைல சம்பந்தமே இல்லாம பிளாஸ்டிக் வளையல் . இதுல வெள்ளை நிற ஹை ஹீல்ஸ் வேற.. ஃபிகர் பார்க்கற ஆசையே விட்டுடும் போல..


1. கல்யாண் - அவள் 

வீட்ல மன நிலை பாதிக்கப்பட்ட மனைவியை விட்டுட்டு கணவன் வெளில போறான். வேலைக்காரி பால் காய்ச்சறா.. அப்போ அவளுக்கு ஒரு கால் வருது.. அடுப்பை ஆஃப் பண்ணாம கதவை வெளில லாக் பண்ணீட்டு வெளில வந்து கடலை  போடறா...அப்போ பால் பொங்கி அடுப்பு ஆஃப் ஆகிடுது.. ஆனா கேஸ் சிலிண்டர்ல இருந்து கேஸ் வந்துட்டு இருக்கு.. குழந்தை அப்போ லைட்டர் எடுத்து விளையாடிட்டு இருக்கு.. பற்ற வெச்சா டமால் தான்.. 

செம KNOT  தான். மனைவி ரூம் வேற .. பாப்பா இருகும் ரூம் வேற.. வெளில வர முடியாம டோர் லாக்.. உடனே மனைவி ஃபோன் பண்றா.. கணவன் ஃபோன் எங்கேஜ்டு.. 

இந்த சீன்ல மனைவியா வந்தவரோட நடிப்பு செம.. .. 

இப்போ கணவன் வந்ததும் ஒரு சஸ்பென்ஸ் உடை படுது..  

இந்த படத்துல  டாக்டர் கேரக்டர்  அவ்வளவா எடுபடலை.. அவருகு பாடி லேங்குவேஜ் பத்தாது.. மற்றபடி அனைவர் நடிப்பும் பர்ஃபெக்ட்.. இந்தபடத்துக்குத்தான் பரிசு குடுத்திருப்பாங்கன்னு நினைக்கறேன்...

இந்தப்படத்துக்கு கே பி சார் முதல் ஹாய் மதன் ,பிரதாப் வரை அனைஅவரின் பாராட்டும் கிடைத்தது.. 

2. ஸ்ரீ மணி கண்டன் - மறந்துட்டியா?

பொதுவா பத்திரிக்கைல வர்ற படைப்புகள் எடிட்டரின் டேஸ்ட்ட்க்கு தக்கபடி தான் இருக்கும்.. உதாரணத்துக்கு சில புக்ஸ்ல பிரசுரம் ஆகற ஜோக்ஸ் படிச்சா சிரிப்பு வராது.. எரிச்சல் தான் வரும்.. இதைப்போய் போட்டிருக்காங்களேன்னு..

நாம் அனுப்பும் பல நல்ல ஜொக்குகளை அவங்க சர்வ சாதாரணமா ரிஜக்ட் பண்ணி ரிட்டர்ன் பண்ணிடுவாங்க.. 

அந்த மாதிரி இந்த படம் நடுவர்கள்,கே பி சார் யாருக்கும் பிடிக்கலை.. ஆனா எனக்கு பிடிச்சுது..

ஒரு ஹாஸ்டல் ரூம்ல 2 பொண்ணுங்க.. அவங்களோட இன்னொரு க்ளாஸ்மேட் பொண்ணு இறந்துடறா... அவ செல் ஃபோன் நெம்பர்ல இருந்து எஸ் எம் எஸ் வருது.. செல் ஃபோன் கம்ப்பெனிக்கு ஃபோன் பண்ணூனா அது உபயோகத்தில் இல்லைன்னு பதில் வருது.. 

செல் ஃபோன்ல மெசேஜ் ரிசீவ் பண்ற ரிங்க் டோனா “ மறந்திட்டியா?” ஒரு ராகத்தோட வர்றப்ப 2 பேரும் பேய் அறைஞ்ச மாதிரி பயப்படறாங்க..

அந்த 2 பேர்ல யாரோ ஒருத்தி தான் இறந்த தோழியின் மரணத்துகு காரணம்..

ஒருத்தி தன்னோட ஆஃபீஸ் பிஸ்னெஸ் டார்கெட்க்காக தோழியின் பணத்தை மிஸ் யூஸ் பண்ணிக்கிட்டவ,, இன்னொருத்தி தோழியின் பாய் ஃபிரண்டையே மிஸ் யூஸ் பண்ண ட்ரை செஞ்சவ,, யார் கொலையாளீங்கறதை கண்டறியத்தான் போலீஸ் அப்படி ஒரு செட்டப் பண்ணுது.. 

கொலையாளி யார்னு தெரியுது.. இப்போ அந்த 2 பேர்ல கொலையாளியை போலீஸ் கைது பண்ணி கூட்டிட்டுப்போறப்ப எஸ் எம் எஸ் வருது....  அவ்வ்ளவ் தான் படம்//

எல்லோரோட கமெண்ட் என்னான்னா படம் குழப்பமா இருக்கு.. இன்னும் தெளீவா சொல்லி இருக்கலாம்.. ஓக்கே ..ஆனா சந்தேகமே இல்லாம அது ஒரு நல்ல படம் தான்..

இந்தப்படத்தை 45 நிமிடப்படமா எடுத்தா செமயா ஹிட் ஆகும்னு தோணுது.. 

பிரதாப் இந்தப்படத்தை பத்தி கமெண்ட் பண்ணும்போது.. அவர் வழக்கம்போல எனக்கு படம் பிடிக்கலை... ( நல்லா பிட் படம் போட்டா பிடிக்குதுன்னு சொல்வாரோ?#டவுட்டு) அப்டின்னு சொல்லிட்டு மதன் கிட்டே மதன் உங்களுக்கு? என்றார்.. 

உடனே ஹாய் மதன்  எனக்கே கன்ஃபியூஸ் தான் என்றார்.. அதென்னெ எனக்கே...?ஹா ஹா 





3. என் .வெண்ணிலா - சைக்கோ  ( பொண்ணுங்களுக்கு இனிஷியலா என் வந்தா ஸ்கூல்ல காலேஜ்ல செம கலாட்டாவா இருக்கும் ஆளாளுக்கு இனிஷியல் சொல்லி பேர் சொல்வாங்க.. கூப்பிடுவாங்க)

ஓப்பனிங்க் ஷாட்ல டி வி ல நியூஸ் .. தொடர் கொலைல கைது செய்யப்பட்ட நபர் தப்பி ஓட்டம். அந்த நபர் ஒரு வீட்டுக்குள்ள  வர்றான்.. ஒரு வயசான ஆள்.. மன நிலை பாதிக்கப்பட்ட அவரோட பொண்ணு.. 2 பேர் மட்டும்.. வந்தவன் அவர் கிட்டே மிரட்டி பணம் கேட்கறான். அவர் போய் ஏ டி எம் ல எடுத்துட்டு வர்றேன்னு போறார்... 

அப்போ தப்பி வந்த கைதி அந்த பொண்ணு கிட்டே தவறா நடக்கலாமான்னு யோசிக்கிறான். அப்போ தோட்டத்துல சில பிணங்களை பார்க்கிறான். அப்போ தான் அந்த பெரியவர் தான் கொலையாளி என்ற உண்மை தெர்யுது.. அவரோட மகளை பாலியல் பலாத்த்காரம் செய்த ஆட்களை அவர்கள் மாதிரி யாரா இருந்தாலும் போட்டுத்தள்ளிடறது அவர் வேலை..

தப்பி வந்த கைதி யையும் அவர் போட்றாரு..

படத்துல  யாருக்கும் டயலாக் டெலிவரி சரியா  வர்லை..  நடிப்பும் செயற்கை.. 

 இயக்குநரிடம் சில கேள்விகள்

1. திருடன் பணம் கேட்டப்ப வீட்ல பணம் இல்லைன்னு சொல்றதோட நிறுத்திக்குவாங்க யாரும்... யாராவது ஏ டி எம் ல போய் எடுத்துட்டு வந்து தர்றேம்ப்பாங்களா/?

2. கைதி தவறான எண்ணம் உள்ளவன்னு தெரிஞ்சே யாராவது தனிமைல மகளை விட்டுட்டு வெளில போவாங்களா? அட்லீஸ்ட்  ரூமையாவது பூட்டிட்டு போக மாட்டாங்களா?

3. ஒவ்வொரு கொலை நடந்த இடத்துலயும் எதுக்காக கொலையாளி எலுமிச்சை பழம் விட்டுட்டு போறான்கறதை கடைசி வரை சொல்லவே இல்லையே?


 டிஸ்கி - மேலே உள்ளவற்றில் முதல் படம் முத்துச்சரம் பிளாக்கில் சுட்டது...டேக்கன் பை ஜீவ்ஸ்

கனிமொழியை கல்கியில் காய்ச்சி எடுத்த ஓ பக்கங்கள் ஞாநி -திமுக அதிர்ச்சி

இரண்டு மாயைகள்!

ஞாநி
1. கனிமொழி மாயை

கலைஞர் கருணாநிதி தன் 43வது வயதில் முதன்முறையாக அமைச்சரானார். அதன் பிறகு தான் நிர்வாக முறைகேடுகள், ஊழல், லஞ்ச லாவண்யம், வழக்கு, கைது எல்லாம்... அவர் மகள் கனிமொழி தன் 43வது வயதில் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இன்னும் அமைச்சர் பதவியைக் கூட அடையவில்லை. இதைத்தான் தமிழ் மரபில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது என்கிறார்களோ!

அரசியலுக்கு வந்த கருணாநிதியின் வாரிசுகளிலேயே ஆழமானவர், ஆபத்தானவர் கனிமொழிதான் என்று நான் அவர் பொது வாழ்க்கையில் நுழைந்த நாட்களிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அழகிரியின் அதிரடிகள் பகிரங்கமானவை. எனவே எளிதில் அம்பலமாகிவிடக் கூடியவை. ஸ்டாலினுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற ஆசை அவரை எப்போதும் எதிலும் அடக்கி வாசிக்கவே வைக்கிறது.


கனிமொழிதான் கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு. தன் அரசியல்ரீதியான அவப்பெயர்களையெல்லாம் மறைக்கும் முகமூடிகளாக ஆரம்பத்திலிருந்து கருணாநிதி தமிழையும் பகுத்தறிவையும் திறம்படக் கையாண்டு வந்திருக்கிறார். ஸ்டாலின், அழகிரி இருவரிடமும் அப்படி எந்த முகமூடியும் இல்லை. எதுவும் அவர்களுக்கு வசப்படவும் இல்லை.


கனிமொழியும் அப்பாவின் இலக்கிய முகமூடியையே தானும் அணிந்தவர். அப்பாவுக்கு சங்க காலம். மகளுக்கு சமகால கவிதை. கருணாநிதியின் எழுத்தை எப்படி ஒருபோதும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன் போன்றோரின் தரத்துக்கு நிகராக வைத்துப் பார்க்க முடியாதோ, அதே நிலைதான் கனிமொழியின் கவிதையும் அவரது சம காலக் கவிஞர்கள் பலரின் தரத்துக்குக் கிட்டவே நெருங்காதது. 

அப்பாவின் இலக்கிய வாரிசாகவே தன்னை கனிமொழி முதலில் காட்டிக் கொண்டதால் அழகிரியும் ஸ்டாலினும் அவரைத் தங்களுக்குப் போட்டியாகக் கருதவில்லை. முரசொலி மாறனின் வாரிசாக தயாநிதி மாறன் அரசியலில் கொண்டு வரப்பட்ட பிறகு, மெல்ல மெல்ல கூடாரத்தில் மூக்கை நுழைத்த ஒட்டகமாக கனிமொழியும் நுழைவதை ஸ்டாலினும் அழகிரியும் தடுக்க முடியவில்லை. அவர்களின் ஆசியுடன் அரசியலில் தான் இருப்பதாக ஒரு பிரமையையும் கனிமொழி ஏற்படுத்தினார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இல்லாத ஒரு ஜாதி வளையமும் கனி மொழியின் உள்வட்டத்தில் இருந்தது.

எப்படி கருணாநிதி எப்போதும் மீடியாவுடன், பத்திரிகைகளுடன் (எவ்வளவு எரிந்து விழுந்தாலும் கடிந்துகொண்டாலும்) நட்புறவை விடாமல் வைத்துக் கொண்டே இருக்கிறாரோ அதே அணுகுமுறையை சென்னையிலும் டெல்லியிலும் கனிமொழியும் கையாண்டு வந்திருக்கிறார். அவரைப் பற்றிய சாதகமான செய்திகள், குறிப்பாக ஆங்கில மீடியாவில் வெளிவர, இந்த நட்பு பயன்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்கள் கருணாநிதியின் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் அவரை தேர்தல் வேலைக்காக சிகிச்சையை தள்ளிப் போடச் செய்வதைப் பற்றி ஆங்கில ஏடுகளுக்கு தகவல்கள், செய்திகள் கனிமொழி வட்டாரத்திலிருந்து தான் கசியவிடப்பட்டன. 

ஸ்பெக்ட்ரம், ஆனைக்கும் அடிசறுக்கிய வாழைப்பழத் தோலாகிவிட்டது. அடுத்தடுத்து நடப்பவை கருணாநிதியையும் கனி மொழியையும் மேலும் மேலும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பெண்ணியவாதி பிம்பம், ஜாமீனுக்காக கோர்ட்டில் வைக்கப்படும் மன்றாடலில் நொறுங்கிப்போய் விட்டது. பெண் என்பதால், தாய் என்பதால் கருணை காட்ட வேண்டும் என்று ராம்ஜெத்மலானி மன்றாடினார்.

இன்னும் சில வாதங்கள் படுவிசித்திரமானவை. நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதால், ஜாமீன் தரவேண்டுமாம். எந்தக் குற்றவாளியும் நீதிமன்றத்தில் ரகளை செய்வதில்லை. அமைதியாக இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல கண்ணியமாகத்தான் நடந்து கொள்வார்கள். மூன்று மாதமாக ராசா கூடத்தான் நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.


தன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், கனிமொழி சென்னையில் பள்ளிக்குச் செல்லும் தன் மகனை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது இன்னொரு வாதம். அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக எப்படி அவரால் டெல்லியில் எம்.பி.யாக இருக்க முடிகிறது? சென்னையில் மகனைக் கவனிக்க வேண்டும்; டெல்லிக்கு எம்.பியாகச் செல்ல விரும்பவில்லை என்று அவர் சொன்னதே இல்லையே? 

மூன்று மாதங்களாக சிறையில் இருக்கும் ராசாவைப் பார்க்க டெல்லிக்குப் போகாத கருணாநிதி, கனிமொழிக்காகப் பதறிக் கொண்டு செல்கிறார். குடும்பம்தான் தனக்கு எல்லாம், குடும்பத்துக்காகத்தான் தன் அரசியல் எல்லாம் என்று திரும்பத் திரும்ப அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு கம்பெனியின் பங்குதாரரை அதன் எல்லா நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக்க முடியாது என்று வாதாடுகிறார் கருணாநிதி. இந்த வாதப்படி அவர் அரசு, சசிகலா மீது ஒரு வழக்கு கூடப் போட்டிருக்கக் கூடாதே? குற்றம் சாட்டப்பட்ட கம்பெனிகளில் அவர் பங்குதாரர் என்பதால்தானே தி.மு.க அரசு வழக்கு தொடுத்தது?

ஒரு பாவமும் அறியாதவர் கனிமொழி என்றால் ஏன் அவர் ராசாவுக்கு மந்திரி பதவி வேண்டும், அதுவும் டெலிகாம்தான் வேண்டும் என்று நீரா ராடியாவிடம் மன்றாடினார்? ஏன் அந்த டேப்புகள் பற்றி கருணாநிதியோ, கனிமொழியோ, வக்கீல் ராம்ஜெத்மலானியோ எதுவுமே சொல்வதில்லை?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த டெலிகாம் கம்பெனிகள் ஏன் கனிமொழி இருக்குமிடம் நோக்கியே செல்கின்றன? கனிமொழி பங்குதாரராக இருக்கும் கலைஞர் டி.வி.க்கு கடன் கொடுக்கின்றன. கனிமொழி டிரஸ்டியாக இருந்த தமிழ் மையத்துக்கு நன்கொடைகள் அளிக்கின்றன? 

ஆனால், கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று தீர்ப்பை எழுதத் தயாராகிறார் கருணாநிதி.

ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில் போலீஸ் வன்முறையில் செத்துப் போன கல்லூரி மாணவன் உதயகுமாரின் அப்பாவின் ஞாபகம் கருணாநிதிக்கு வராவிட்டாலும் நமக்கு வரவேண்டும். உதயகுமார் செய்த ஒரே குற்றம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எதிர்த்து அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான். இறந்து கிடக்கும் உதயகுமாரின் உடலைப் பார்த்து, இது என் மகன் இல்லை என்று சொல்லும்படி கருணாநிதியின் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையின் மனநிலையை நாம் மறக்கமுடியுமா? 

தி.மு.க.வை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியது அவரும் அவர் குடும்பமும்தான் என்றே வரலாறு குறிக்கும். இதிலிருந்து மீள வேண்டுமானால் கருணாநிதி உருவாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு மாயையிலிருந்தும் தி.மு.க தொண்டன் விடுபடவேண்டும். ஒவ்வொரு மாயையாகக் கரைந்து கொண்டிருக்கிறது.

2. சமச்சீர் கல்வி மாயை:
சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்று ஜெயலலிதா அரசு அறிவித்ததை வரவேற்றும் எதிர்த்தும் குரல்கள் எழுந்துள்ளன.
தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது அசலான சமச்சீர் கல்வியே அல்ல. சமமான வசதிகள், சமமான கல்வி பயிற்று விக்கும் தரம், சமமான கல்விக் கட்ட ணம், சமமான தேர்வு முறை எல்லாம் இருந்தால்தான் சமச்சீர் கல்வி. 

தி.மு.க. அரசு செய்ய முயற்சித்ததெல்லாம் மெட்ரிக், ஸ்டேட் போர்ட், சி.பி.எஸ்.ஈ, ஆங்கிலோ இந்தியன் போர்ட் எனப்படும் பலவிதமான போர்டுகளுக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது மட்டும்தான். அதில் மெட்ரிக்கில் ஏற்கெனவே இருந்ததைக் குறைத்து நீர்க்கச் செய்துவிட்டார்கள் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. மறுபக்கம் பாடப் புத்தகங்களை சி.பி.எஸ்.ஈ முறையில் உள்ளதுபோல, உணர்ந்து படிக்கும் முறைக்கு மாற்றி எழுதியது சிறப்பானது என்பது ஒரு சாராரின் பாராட்டு.

அசல் பிரச்னை பாடப் புத்தகமோ பாடத் திட்டமோ அல்ல. பயிற்றும் முறையும் தேர்வு முறையும்தான் அசல் பிரச்னைகள். மெட்ரிக், ஸ்டேட் போர்ட் தேர்வு முறைகள் மாணவரின் மனப்பாட சக்தியை மட்டுமே சோதிக்கின்றன. கீவேர்ட்ஸ், கீ டெர்ம்ஸ் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் தரப்படுகின்றன. சி.பி.எஸ்.ஈ. தேர்வு முறை, சிந்தித்து சுயமாக எழுதுவதை சோதிப்பதாக இருக்கிறது. 

கூடவே மாற்றப்பட வேண்டியது பயிற்று முறை. அரசு ஆசிரியரின் சம்பளம் தனியார் ஆசிரியரைவிட பல மடங்கு அதிகமானது எனினும் எந்த தனியார் பள்ளியிலும் குறைந்த பட்சப் பயிற்றுதல் தரம் என்பது அரசுப் பள்ளியின் சராசரித் தரத்தை விட மேலாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு. தனியார் பள்ளிகளில் தரம் குறைந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு. 

சமச்சீர் கல்வியை நோக்கிச் செல்வதற்கு அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. எல்லா அரசு அதிகாரிகளும் ஊழியர்களும், குறிப்பாக கல்வித்துறையில் பணியாற்றுவோர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்யாதவருக்கு அரசு வேலை கிடையாது. இதைச் செய்தாலே அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தில் பெரும் மாறுதல் ஏற்படும்.

2. பாடப் புத்தகங்களும் தேர்வுமுறையும் மனப்பாட அடிப்படையிலிருந்து, சிந்தித்து உணர்ந்து அறியும் அடிப்படைக்கு மாற்றப் படவேண்டும். இது எளிது. இருப்பதிலேயே சிறப்பானது என்று கல்வியாளர்களால் கருதப்படும் சி.பி.எஸ்.ஈ முறையை எல்லாருக்குமாக்கி விடலாம்.

3. ஆண்டுதோறும் ஆசிரியர்களின் பணிப் பங்களிப்பு மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கடுமையாக முறைப்படுத்த வேண்டும். கரெஸ்பாண்டென்ஸ் முறையில் ஆசிரியர் பயிற்சி அளிப்பது என்ற அபத்தம் ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு தனி நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி இப்போதைக்கு ஒரு மாயைதான். கோடிக்கணக்கான ரூபாய் புத்தகங்களை வீணடிக்காமல், கருணாநிதி ஜால்ரா பாடங்களை மட்டும் ஜெயலலிதா நீக்கியிருந்தால் போதுமானது. ஜெயலலிதா பழையபடி ‘கொண்டதை விடாத’ பிடிவாதம் உடையவராக இல்லை. சொன்னபடி வாரா வாரம் நிருபர்களை சந்திக்கிறார். மாறிவிட்டார் என்று சொல்லப்படுவது இன்னொரு மாயை இல்லை என்று நிரூபிக்க அவருக்கு இது ஒரு வாய்ப்பு. இப்போது கூட, ஒவ்வொரு பாடப் புத்தகத்துக்கும் ஓர் அறிஞர் குழுவை நியமித்து ஒரு வாரத்துக்குள் அந்தப் புத்தகம் தகுதியானதா என்று பரிசீலித்து முடிவு தெரிவிக்கச் சொல்லலாம். சரியானவற்றை இந்த ஆண்டே பயன்படுத்தலாம். மாற்றப் படவேண்டிய புத்தகங்களை மட்டும் அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகங்களும், நேரமும் வீணாவதைக் குறைக்கலாம். செய்வாரா? 

இந்த வாரக் கேள்வி?
கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரினார்கள். அவரோ வெளிநாட்டில் தான் சம்பாதித்த விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு பெறுவதற்காக தன்னைத் தொழில் முறை நடிகர் என்று அறிவித்திருக்கிறார். எனவே அவருக்கு நடிப்பிற்கான தாதா சாகிப் பால்கே அல்லது பாரத் விருது தரவேண்டும் என்று இனி கேட்பார்களா?

இந்த வாரத் திட்டு
மேலவையை உருவாக்கி அரசுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைச் சொல்லும் அறிஞர் சபையாக அதை செயல்பட வைக்கும் நல்ல வாய்ப்பைத் தூக்கி எறிந்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இ.வா.தி.

காஜல் அகர்வால்-ன் கலக்கல் கிளாமர் ,மிதக்கும் இளமை யில் மாவீரன் - சினிமா விமர்சனம்

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/04/Ram-Charan-Tej-Tamil-movie-Maaveeran-2011.jpg

மாமா பொண்ணு வயசுக்கு வந்து குடிசைல உக்கார வைக்கறப்ப நைஸா ஒரு ஃபிரஸ் கிஸ் வாங்கிடலாம்னு முறைப்பையன் நினைப்பான். ஆனா சந்தர்ப்பம் சாதகமாகாது.. ஆனா விழாவுக்கு வந்த வேறொரு ஃபிகரு எதிர்பாராத விதமா தானா வந்து முத்தம் குடுத்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஷாக் சர்ப்பரைஸ் தான் இந்த தெலுங்கு மகதீரா டப்பிங்க் படமான மாவீரன்.(போடறது  கில்மா விமர்சனம், அதுல ஜொள்மா...!!)

மாங்கு மாங்குன்னு கண்ட கில்மா படத்துக்கு எல்லாம் போக வேண்டியது.. சீன் இல்லாம ஏமாற்றமா திரும்பி வர வேண்டியது.. இதுவே பொழப்பா போன நமக்கு (!!!!) எதிர் பாராத இன்ப அதிர்ச்சியா காஜல் அகர்வால்-ன் மிதக்கும் இளமை காட்சிகள் கதையுடன் கூடிய சுவராஸ்யம் ஆஹா.. 

படத்தோட கதை என்ன?பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் 400 வருடங்களுக்குப்பிறகு எப்படி நிறைவேறுது என்பதே கதை..

சிரஞ்சீவியின் மகன் தான் ஹீரோ.. ஓப்பனிங்க் சீன்ல செம காமெடி பண்றாரு.. அதாவது பைக் ரேஸ்.. 30 அடி உயரத்தை தாண்டனும்.. அண்ணன்  பைக்ல வந்து தாண்டறப்ப  டக்குன்னு அந்த உயரத்தை 35 அடியா உயர்த்துறாங்க.. ( டகார்னு பெட்ரோல் விலையை நடுவன் அரசு ஏத்துன மாதிரி)அண்ணன் கவலைப்படலையே.. பைக்கை 30 அடில அம்போன்னு விட்டுட்டு ( ரம்லத்தை பிரபுதேவா கழட்டி விட்ட மாதிரி) அந்தரத்துல ஜம்ப் பண்ணி 35 அடி உயரம் போய் மறுபடி பைக்கை பிடிச்சுடறாரு.. ஜெயிச்சுடறாரு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


http://www.koodal.com/cinema/gallery/movies/maaveeran/maaveeran_7_47201192140123.jpg
அந்த டைம்ல முமைத்கானோட ஒரு குத்தாட்டம்.. பக்கத்து சீட் பார்ட்டி சொல்றான்.. தக்காளி, குடுத்த 50 ரூபா இந்த ஆட்டத்துகே சரியாப்போச்சுன்னு.. கேமராமேனை பாராட்றதா? அந்த மாதிரி ஆங்கிள் வைக்கச்சொன்ன டைரக்டரை பாராட்றதா?ன்னே தெரில.. செம கிளாமர்ப்பா.. 

இப்போ ஹீரோயின் அறிமுகம்.. காஜல் அகர்வால்.. சும்மா காமாட்சி, மீனாட்சின்னு பேர் வச்சா நம்ம ஆள் கண்டுக்க மாட்டான்.. இந்த மாதிரி கசக்கு முசக்கு பேர்னா ரசிப்பான்.. ஓப்பனிங்க் சீன்ல மிதக்கும் இளமையோட ஸ்லோ மோஷன் ல ஹீரோயின் வர்றப்ப..  ஹி ஹி அந்த கர்ச்சீஃப் எங்கே..?
ஹீரோ ஆட்டோல போறான்.. ஹீரோயின் கை காட்டி ( கவனிக்க கையை மட்டும் தான் காட்டறா) லிஃப்ட் கேட்க சும்மானாச்சுக்கும் லிஃப்ட் குடுக்காம அவளை தாண்டிப்போற ஹீரோ அவ கையை டச் பண்றான்,, உடனே மின்னல் வெட்டுது.. ஷாக் அடிச்ச மாதிரி ஆகிடறான்  பூர்வ ஜென்ம நினைவு வருது... 

..
பூர்வ ஜென்மம், மறு பிறப்பு இதெல்லாம் உட்டாலக்கிடி வேலை என்பது மூளைக்கு தெரிஞ்சாலும் நம்ம மனசு அதை விரும்புது.. சரி... ஃபிளாஸ்பேக் கதை என்ன?

30 வருடங்கள் மட்டுமே ஆயுள் உள்ள வம்சத்தை சேர்ந்த ஒரு வீரனை நாட்டின் இளவரசி விரும்பறா..மன்னர்க்கு தன் மக இள வயதுல விதவை ஆகறது பிடிக்கலை .ஒரு சமயம் தர்பார்ல தன்னோட அடுத்த வாரிசு தன் மக தான்னு மன்னர் அறிவிக்கும்போது இளவரசியோட முறைப்பையன் ஆண் வாரிசா தன்னைத்தான் அறிவிக்கனும்னு சொல்றான்.

இந்த இடத்துல இன்னொரு காமெடி சீன்.. அது வரை லோ ஹிப்பும் ,லோ கட்டும் தாராளமா காட்டி வந்த இளவரசி தன்னோட துப்பட்டாவை வில்லன் பிடுங்கினதும் அப்படியே கூனி குறுகிப்போயிடறா.. ( அந்த துப்பட்டாவை பாப்பா போட்டிருந்தாலும் ஒண்ணு தான் போடாம இருந்தாலும் ஒண்ணு தான்.)


வில்லன் அந்த துப்பட்டாவை தேர்ல கட்டி அனுப்பிடறான். ஒரு கேவலமான போட்டி.. அந்த துப்பட்டாவை யார் முதல்ல எடுத்துட்டு வர்றாங்களோ அவங்க தான் இளவரசிக்கு சொந்தம்.. ஹீரோ தான் ஜெயிப்பார்னு முந்தா நேத்து வயசுக்கு வந்த வளசரவாக்கம் வளர்மதிக்குக்கூட தெரிஞ்சிருக்கறப்ப நமக்கு தெரியாதா?( விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாம வளர்மதி யாருன்னு கேட்கப்படாது.. ஹி ஹி )

அப்புறம் தனக்கு கிடைக்காத எதுவும் வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாதுங்கற தமிழனோட கொள்கைப்படி வில்லன் சூழ்ச்சி பண்ணி ராஜ்ஜியத்தை கைப்பற்றி இளவரசியை போட்டுத்தள்ளிடறான் (அதாவது கொலை பண்ணிடறான்).

அந்த ஜென்மத்துல நிறைவேறாத இளவரசியின் காதல் இந்த ஜென்மத்துல எப்படி நிறைவேறுதுங்கறதுதான் கதை..

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/04/Maaveeran-Movie-Stills-2.jpg


கே பாக்யராஜ்-ன் வசனத்தில் கலக்கிய இடங்கள்

1. உன்னோட பெரிய ரோதனைப்பா.. உங்கம்மாவுக்கு தூக்கம் வராதப்ப உன்னை பெத்தாங்களா?உங்கப்பாவுக்கு தூக்கம் வராதப்ப உன்னை பெத்தாங்களா?

2.  மேடம்.. அந்த பொண்ணும் நானும் செம க்ளோஸ்..

அப்படியா? அட்ரஸ் தெரியாத அளவு க்ளோஸா?அவங்க அட்ரஸே தெரியல...

3. மச்சான்,... என்னைப்பற்றி நீ என்ன நினைக்கறே?

புரோக்கர்னு..

ஹூம்.. வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கனுமா?



4. என் சைல்டு ஹூட்ல (CHILD HOOD)  நான் ராபின் ஹூட் மாதிரி ....

எருமையை குதிரைன்னு நினைச்சிருப்பே..

5.இந்த வம்சத்து வீரர்கள் 30 வயசு ஆனா  மரணத்தை தழுவுவாங்கங்கறது  உண்மை தான்.ஆனா ஒவ்வொரு வீரரும் 100 பேரைக்கொன்ற பிறகே சாவை சந்திப்பாங்க..

6. மன்னிக்கவும்.. இது இளவரசியின் அந்தப்புரம்.. பெண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஆண்களுக்கு அனுமதி இல்லை..


வில்லன் - பெண்ணுக்குப்பெண் என்னாங்கடி பண்ண முடியும்? வழியை விடு,...


http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/apr/maaveeran/maaveeran_136.jpg

இயக்குநர் சபாஷ் பெற்ற இடங்கள்

1. காஜல் அகர்வால் ஓப்பனிங்க் ஷாட்ல மரத்தில் இருக்கும் பூக்களை பறிக்க ஜம்ப் பண்றப்ப கேமராவை ஏரியல் வியூல வெச்சு ஒளிப்பதிவு பண்ணுனாரே செம ஷாட்..

2.ஓப்பனிங்க் குத்தாட்டப்பாட்டான ஒத்திப்போ ஒத்திப்போ பெண்ணே பாடலில்  ஃபிரீஸிங்க் காட்சியும் , கிராஃபிக்ஸூம் கலக்கல்

3.துப்பட்டா வை யார் எடுத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு சென டெம்ப்போவோட சீன் வெச்சதுக்கு ..அந்த காட்சியில் மணல் புதைகுழி சீன் செம..

4. ஆசை தீர பாடல் காட்சியில் ஏரியல் வியூவில் கேமரா பிரம்மாண்டத்தின் உச்சத்தை  பதிவு செய்தது...

5. ஹீரோ 100 பேரை போரிட்டு கொல்லும் சீனில் லொக்கேஷன், கேமரா பக்கா.


6. காஜல் அகர்வாலை மிகச்சிறப்பாக பயன்படுத்தியது



7. மாடர்ன் கேர்ள் கேரக்டரில் 60 மார்க் வாங்கும் ஹீரோயின் இளவரசி கேரக்டரில் 90 மார்க் வாங்கும் அளவு ஒப்பனி,நடிப்பு அனைத்தும் கலக்கல


http://www.tamilnow.com/movies/gallery/maaveeran/maaveeran-movie-still-10.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பூர்வ ஜென்ம நினைவு ஹீரோவுக்கு இருக்கு ,ஹீரோயினுக்கு இல்லை.. அதெப்பிடி? அதே போல் ஹீரோ ஹீரோயின் விரல்கள் பட்டாலே அவருக்கு ஷாக் அடிக்குது.. ஆனா ஹீரோயினுக்கு எந்த சொரனையும் இல்லை.. அது எப்படி? ( ஒரு வேளை ஹீரோ புது முகம், ஹீரோயின் ஏற்கனவே பல..... படங்களில் நடிச்சவர் என்பதாலோ?)

2. அவ்வளவு பெரிய பணக்காரப்பொண்ணான ஹீரோயின் ஏன் பஸ்ஸ்டாப்ல லோக்கல் ஃபிகர் மாதிரி நிக்கனும்? (அப்போ பஸ் ஸ்டாப்ல நிக்கறவங்களெல்லாம் லோக்கல் ஃபிகர்ஸா?என யாரும் கண்டனம் தெரிவிக்க வேணாம்)

3. இளவரசியை அடைய முடியாத வில்லன் ஏன் அவளை கொல்லனும்? காட்சிப்பொருளா அந்தப்புரத்துல வெச்சு சும்மா பார்த்து ரசிச்சுட்டு இருக்கலாமே? ( ஹூம்.. பய புள்ள கேனத்தனமா கேள்வி கேட்டுட்டு வாங்கிக்கட்டிக்கப்போகுது..)

4. ஹீரோயினை வெறுப்பேத்த ஹீரோ அவரோட நண்பனை பெண் வேடம் இட்டு அணைக்கற மாதிரி சீனை குரு சிஷ்யன் உட்பட பல படங்கள்ல பார்த்ததாச்சே..?

5. ஹெலிகாப்டர்ல இருந்து அவ்வளவு உயரத்துல இருந்து கீழே விழும் ஹீரோ என்ன தான் தண்ணீர்ல விழுந்தாலும் ஒரு சிறு கீறல் இல்லாம தப்பிப்பாரா?

6. உண்மையான காதல்ல சந்தேகம் வருமா? அதுவும் வில்லன் சதிப்படி ஹீரோயினின் அப்பாவை ஹீரோதான் கொன்னார்னு சொன்னதை ஹீரோயின் எப்படி நம்பறாங்க?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBltjG4Jq5bmpGqMZriqVSHz7SSBjpR_JPqEq3EgOmZqUqfN1VMIVV0QHxPXAwuQzzedjecFxoGiZvpMq63XddZpxesKPq48_QVehGqjQwo8slTw1S68XubBxhWd5Mj6PgE2fCDixr3_k/s320/maaveeran_movie_hot_stills_pics_wallpapers_09.jpg

லாஜிக் மீறல்கள் பல இடங்கள்ல இருந்தாலும் படம் பார்த்து ரசிக்கிற மாதிரி தான் இருக்கு..

யார் யார் எல்லாம் இந்தப்படத்தை பார்க்கலாம்?

காதல் ஜோடிகள்,காஜல் அகர்வால் ரசிகர்கள், அஜால் குஜால் ரசிகர்கள், பூர்வ ஜென்ம நம்பிக்கை உள்ளவர்கள் ,அம்புலிமாமா ரசிகர்கள் பார்க்கலாம்.

ஆனந்த விகடன்ல டப்பிங்க் படத்துக்கு  விமர்சனம் போட மாட்டாங்க.. இருந்தாலும் படத்தோட ரேட்டிங்க் தெரிய

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40

குமுதம் ரேங்க்கிங்க்  - ஓக்கே

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

Sunday, May 29, 2011

அரவான் ஹீரோயின்கள் 2 பேரும் செம மைலேஜ் -வசந்தபாலன் கலக்கல் பேட்டி VS விகடன் - காமெடி கும்மி

http://mimg.sulekha.com/tamil/aravaan/wallpaper/1024-768/aravaan-wallpapers08.jpgலைகளில், வனங்களில், கல்லாய், கதையாய் வாழ்ந்துகொண்டு இருப்பவன், எல்லா நூற்றாண்டுகளிலும் அதிகாரத்தின் கோரப் பிடியில் சிக்கி நசுங்கும் நியாயவான்கள் அத்தனை பேரும் அரவான்களே!''-

லேப்டாப்பில் விரிந்த ஆதி, பசுபதியின் புகைப்படங்களைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்த என் வியப்பை ஓரக் கண்ணால் ரசித்தபடியே பேசுகிறார் இயக்குநர் வசந்தபாலன். 

'வெயில், 'அங்காடித் தெரு’ படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசியவர், 'அரவான்’ மூலம் 18-ம் நூற்றாண்டுக்குத் தமிழர்களைக் கடத்திச் செல்லும் முனைப்பில் இருக்கிறார்!   

சி பி - 2 படங்கள் தொடர்ந்து ஹிட் குடுத்துட்டாரு.. அதனால இந்தப்படம் ஊத்திக்கும்னு நினைக்கறேன்.. 

 1.''ஸ்டில்ஸ் அட்டகாசம்... எங்கே பிடிச்சீங்க 'அரவானு’க்கான பொறியை?''

'' 'வெயில்’, 'அங்காடித் தெரு’ ரெண்டுமே குட்டிக் கதைகள். சின்ன படங்கள். தெளிவான திட்டமிடலுடன் சின்னப் படம் எடுக்க முடிந்த உன்னால், பெரிய படங்களை உருவாக்க முடியாதா?’ன்னு எனக்குள்ளேயே ஏகப்பட்ட கேள்விகள். மிகப் பெரிய தாண்டல் வேண்டும்னு மனசுக் குள்ள பெரிய அலை.

 சி பி - இந்தப்படம் உங்களுக்கும் ,புரொடியூசருக்கும் பெரிய லாங்க் ஜம்ப்பா இருக்கும்னு சொல்லுங்க..


சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்’ நாவல் படிச்சுட்டு இருந்தேன்

 சி.பி - ஏன் வழக்கமா ஃபாரீன் டி வி ல இருந்துதானே  சுடுவீங்க:? திடீர்னு நாவலுக்கு போய்ட்டீங்க?

. படிக்கப் படிக்க... மனம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தது. அதில் ஒரு அத்தியாயத்தில் இருந்த சம்பவத்தை சினிமாவுக்கான கதை ஆக்கினால் என்னன்னு திடீர்னு ஒரு மின்னல். சு.வெங்கடேசனிடம் தகவல் சொன்னேன். 'இது உங்க கதை தலைவா. தாராளமா எடுத்துக்குங்க’னு உற்சாகமாப் பரிமாறிக்கிட்டார்.

 சி .பி - ராயல்டியா ஐயாயிரமாவது குடுத்தீங்களா? இல்லை டைட்டில்ல பேர் வரும்னு ஒப்பேத்துனீங்களா?

அடுத்த சில மணி நேரங்களில் இருந்தே 'அரவான்’ வளரத் தொடங்கிவிட்டான். இது எங்களின் இமாலயத் தாண்டல்.

 சி பி - அய்யயய்யோ... அப்போ ஷூட்டிங்க் ஃபுல்லா எவரெஸ்ட்லயா? அவ்வ்வ்வ்


பட்ஜெட்டை மட்டும் மனதில்வைத்து இதைச் சொல்லலை. கதையின் விஸ்தீரணம், பிரமாண்டத்தின் நேரடி சாட்சி என்பதால் சொல்கிறேன்!''
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGdzQvBCRVMUhkmkgP4vN41SV6GnHWqcAiLtU6QtYMA5DM6jdCsUdSt_yNeRcqWQmS3Pllf4Fp5nUsyzGXRiz9cqtSfdM3ShZxzU5-JT0XhNPyUTUdhxGitIDfSIY7h5VZUYtaDHzM54ey/s1600/002-23-07-2010-5677-1-2.jpg

'2. ' 'காவல் கோட்டம்’ மிகப் பெரிய நாவலாச்சே.... அதை முழுமையா ஒரு சினிமாவுக்குள் அடக்க முடியுமா?''  

'' 'காவல் கோட்டம்’ ஆயிரக்கணக்கான கிளைக் கதைகளைக்கொண்ட மிகப் பெரிய வரலாற்று நாவல். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை மக்களின் வாழ்க்கையைப் பேசும் எழுத்துக் கடல். அதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு துளிதான் 'அரவான்’.

அந்தத் துளிக்கும் காவல் கோட்டத்தின் முன் பின்னுக் கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நாவலைப் படித்தால், 'அரவான் துளி’ எங்கே இருந்து எடுக்கப்பட்டதுன்னுகூடக் கண்டுபிடிக்க முடியாது. 

 சி பி - அடடா,, நைஸா அப்படியே விட்டிருக்கலாம்.. ராயல்டி செலவு மிச்சம். ஆகி இருக்கும்

அவ்வளவு பெரிய நாவலை சினிமாவுக்குள் அடக்குவது என்பதும் சாத்தியம் இல்லாத சாகசம். ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில், அடுத்த கதைக்கான தேடலில் இருந் தோம். ஒருநாள் இயக்குநர் வெளியே கிளம்பும்போது நடிக்க சான்ஸ் கேட்டு ராம்-லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வந்தனர். அவங்களைப் பார்த்துட்டு ஏதோ யோசனையுடனே வந்தவர், 'நம் அடுத்த படம் ட்வின் பிரதர்ஸ் பற்றியது’ என்றார். அதுதான் 'ஜீன்ஸ்’.

ரங்கநாதன் தெரு வைப் பார்த்த நொடியில் உருவானதுதான், 'அங்காடித் தெரு’. 'நாய்ச் சண்டை பற்றிய 'அமரோஸ் பெரோஸ்’னு ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். அதைப்போல நம்ம ஊர்ல என்ன சண்டை இருக்குன்னு தேடினப்பதான் 'ஆடுகளம்’ உருவானது’ என்றார் நண்பர் வெற்றிமாறன். இரண்டரை மணி நேர சினிமா கதைக்கு அதிகபட்ச தேவை ஒரே ஒரு பொறிதான். அரவானுக்கான பொறி எனக்குக் காவல் கோட்டத்தில் கிடைத்தது. அவ்வளவுதான்!''


சி பி - மொத்தத்துல சொந்தச்சரக்கு யார் கிட்டேயும் இல்லைங்கறீங்க.. 
3. ''இவ்வளவு அழுத்தத்தை ஆதி, பசுபதி தங்கள் தோள்களில் தாங்குவாங்கன்னு உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?''


 சி.பி - அவர் தான் குடுக்கற சம்பளத்தை வாங்கிக்கிட்டு பேசாம இருப்பார்..
''படத்தில் 'வரிப்புலி’, 'கொம்பூதி’ன்னு இரண்டு முக்கியமான கேரக்டர்கள். காடு, மலை, இரவு, பகல்னு சுத்திய 18-ம் நூற்றாண்டு மனிதர்கள். இப்போ செருப்பு இல்லாம வெறுங்காலில் பத்து அடிகூட நம்மால் நடக்க முடியலை. பழக்கப்பட்ட குடிநீர் மாறினால், உங்களுக்கும் எனக்கும் வைரஸ் ஃபீவர் வந்துடுது. ஆனா, அன்றைய மனிதர்களின் அசாத்திய ஃபிட்னெஸ் நினைச்சாலே மலைக்கவைக்குது.

' 'வரிப்புலி’க்கு யார் சரியா இருப்பாங்க’ன்னு யோசிச்சப்ப 'மிருகம்’, 'ஈரம்’ தந்த பிம்பம் ப்ளஸ் 6.2 அடி உயரம் ஆதியை என் மனதில் நிறுத்தியது. கதை பத்திப் பேசிட்டு '8 பேக்ஸ் வைங்க’ன்னு சொன்னேன். ரெண்டு மாசத்துக்குள்ளேயே ஃபைபர் உடம்போடு 'வரிப்புலி’யா வந்து நின்னார்.

மரம் ஏறி, மலை ஏறி, கோட்டையைத் தாண்டின்னு படத்தில் ஆதியின் உழைப்பு அசாத்தியமானது. பசுபதி எப்பவும் என் மனசுக்குப் பிடித்த மனிதர், சிறந்த நடிகர். 'கொம்பூதி’யாகவே கிழித்து எறிந்திருக்கிறார்.


சி பி - பார்த்து.. படமும் கிழிச்சிடப்போகுது.. 
படப்பிடிப்பில் ஆதியும் பசுபதியும் ரத்தம் சிந்தாத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உச்சி வெயிலில் செருப்பு அணியாமல், சட்டை போடாமல், வெற்றுடம்பில் ஒரே ஒரு அழுக்கு வேட்டியுடன், உடல் முழுக்க டாட்டூ வரைந்து என அவர்களுக்கு முதல் ஷாட் வைக்கவே 11 மணியாகிவிடும். அதுக்கு அவங்க அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கணும். எழுந்ததும் உடற்பயிற்சி, டாட்டூ, விக்னு தயாராகி, படப்பிடிப்பு முடிந்து வேடம் கலைத்துப் படுப்பதற்குள் நள்ளிரவு ஆகிவிடும். திரும்ப அதிகாலை 4 மணிக்கு அலாரம். ஒரு வார்த்தையில் சொல்லணும்னா, அவங்க உழைப்பு அபாரம்!''
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMXCQjAEUdHkASN0orSx6Mn7IF5KnbU6Td9q6XkuMvlBpQTSlN5vkgx4MBUZsofnj5-xNculQwDuby-fY8Q8fH_yuK1wthtREYW3ygslv1ICT8ER9lGTnAY1Z_-rqqaLvn-RF9OXjaEzU/s1600/aravaan-59.jpg

4. ''இப்படி ஒரு படத்துக்குப் பாடல்கள், பின்னணி இசைக்கு அனுபவம் அவசியம். ஆனால், பின்னணிப் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தி இருக்கீங்களே... ரிஸ்க் இல்லையா?''

சி பி - அறிமுகப்படுத்துனா சம்பளம் தர்ற வேலை இல்லை.. 
''நினைத்ததைச் சொல்லலாம் என்பதைத் தவிர, வேற எந்த நோக்கமும் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழி சினிமாவிலும் பரபரப்பாக இருக்கும் பாடகர் கார்த்திக். 'பண்றீங்களா?’ன்னு கேட்டதும் ஆர்வமுடன் வந்து 18-ம் நூற்றாண்டு இசைக் கருவிகளைத் தேடிப் பிடித்து, பாட்டு, பின்னணி இசைன்னு இரண்டிலும் பிரமாதப்படுத்தி இருக்கார். எனக்குப் பாடல்கள் என்பது கதையைச் சொல்ல உதவும் இன்னொரு கருவி. அதாவது, கதைப் பாடல்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் ஆறு கதைப் பாடல்கள்!''

சி பி - அப்போ தம் பார்ட்டிங்களுக்கு செம ஜாலி தான் , மொத்தம் படத்துல 7 இடைவேளையா? 

5. ''ஹீரோயின்கள்பத்தியும் கொஞ்சம் சொல்லலாமே...''

சி பி - ஏன் கொஞ்சம்? நிறையா ஜொள்ளுங்க.. ஹி ஹி 

''தன்ஷிகா, அர்ச்சனா கவி ரெண்டு பேரும் 'வரிப்புலி’ ஆதிக்கு ஜோடிகள். அபிநயக் கண்கள், ஆச்சர்ய உயரம் ரெண்டும் தன்ஷிகாவின் வசீகரம். மலையாளியாக இருந்தாலும் அர்ச்சனாவுக்கு அழகிய தமிழ் முகம். படத்துக்கு ரெண்டு பேரும் நல்ல மைலேஜ் கொடுப்பாங்க!''  

 சி பி - என்னது நல்ல மைலேஜா? ஹா ஹா செக்கப் பண்ணீட்டீங்களா? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPvu8M4ZE42taxezDbyPWo0LdmLBSUc5srt3GSUvOlOYuvJ29jwEFO-jLgKOeIo82vBjjF_MB85RjguIdW8B4t4kgu-GIDMKpu2jsOIMiSF6frCY3zvFnHeBf8otM97TQfHNsUCi9haEbI/s1600/Aravaan+_9_.jpg
6. ''லொகேஷன், ஆபரணங்கள், உடைகள்னு எல்லாமே அசரவைக்குதே... எப்படி சாதிச்சீங்க?''

 சி .பி -  புரொடியூசர் சிக்கிட்டாரு.. வேற என்ன சொல்ல.. ஹி ஹி 


''நினைத்துப் பார்க்க முடியாத மிரட்சியான உழைப்பு. படப்பிடிப்புத் தளம் தேடி மட்டுமே இந்தியா முழுக்கப் பயணித்திருப்போம்.

 சி பி - பாவம் புரொடியூசர் .கோரிப்பாளையமே தாண்டி இருக்க மாட்டாரு.. அவர் காசுல அண்ணன் பாதி உலகத்தை லொக்கேஷன் பார்க்கறேன்கற பேர்ல ரவுண்ட் அடிச்சுட்டார் போல.. 


கடைசியில், இங்கேயே பக்கத்தில், மதுரை அருகே 'ஓவா மலை’யைக் கண்டறிந்தோம். சமணக் குகைகள் நிறைந்த மலை. இன்னும் நவீன சிதைவுகள் எட்டாத எல்லையில் எங்களுக்கான தன்மையோடு இருந்தது.  

 சி பி - அடப்பாவிகளா.. இந்தியா ஃபுல்லா சுத்திப்பார்த்துட்டு அப்புறமா இதை  கண்டு பிடிச்சீங்களா?
அதேபோல் ஆர்ட் டைரக்டர்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அனுபவமும் விஜய முருகனின் துறுதுறு உழைப்பும் அரவானின் அசுரபலம். அப்போதைய ஸ்டைல் வேட்டிக் குக்கூட ஒரு வார உழைப்பு தேவைப்பட்டது. புதிதாக நெய்த வேட்டியை மண்ணுக்குள் புதைத்து பண்படுத்தித்தான் பயன்படுத்த முடியும். 

பளிச் பற்களுடன் வந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்குக் கறை படிந்த அழுக்கு பல் செட்டுகள் மாட்டினோம். நகம் வெட்ட தடா போட்டோம். குளிச்சாலும் மூணு நாட்களுக்கு அழியாமல் இருக்கும் ஸ்பெஷல் டாட்டூ மை உருவாக்கினோம்.

தெளிந்த வெள்ளைச் சேலை வாங்கி, 
ஆங்காங்கே கோத்த கொசுவத்தை நூலால் முடிச்சுப்போட்டு சாயத்தில் முக்கிக் காயப்போட்டு, பிறகு நூல் முடிச்சுகளை அவிழ்த்தால், ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகளுடன் 18-ம் நூற்றாண்டுச் சாயலில் சேலைகள் கிடைக்கும். இப்படி ஆராய்ச்சி ப்ளஸ் உழைப்புடன் அரவானுக்காக நாங்களே தயார் செய்த விஷயங்கள் ஏராளம். இதுபோக, படப்பிடிப்புக் கால சவால்கள் தனி அத்தியாயம்!''

 சி பி - படம் ரிலீஸ் ஆன பிறகு எல்லாருக்கும் என்னென்னெ சவால் இருக்கோ? அவ்வ்வ்வ்

டியர்.. ஆயில் (OIL) உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.....

http://www.chennaivision.com/userfiles/monica.jpg

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது.

நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்.

இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.
சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள்.

அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.
நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள். 
அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது.

இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
 http://www.koodal.com/cinema/gallery/events/2011/423/vambu-and-bhadra-movie-press-meet-stills_1_165234123.jpg
தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

நன்றி - டாக்டர் விகடன்

ஜெ வின் முதல் தலை வலி - கரூரைக் கலக்கும் உர ஊழல்... பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !

http://tamilnews.ebest.in/images/news/fertibag-d.jpg

கரூரைக் கலக்கும் உர ஊழல்...

பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !
பிரச்னை 


தமிழக அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை, கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி செய்த அரசு அதிகாரிகள், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'டான்பெட்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அரசிடம் இருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த கூட்டுறவு அமைப்புகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றன.


இந்த அடிப்படையில் திருச்சியில் உள்ள 'டான்பெட்’ நிறுவனத்திடமிருந்து கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்துக்கு வந்த உர மூட்டைகளை வைத்துத்தான் ஊழல் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சூர்யகலாவிடம் கேட்டபோது, ''தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் மூலம் மானிய உரங்களில்  முறைகேடு நடப்பதாக அடிக்கடி தகவல் வந்தது. இதையடுத்து விசாரணை செய்தபோது, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

பல இடங்களிலும் பணியாற்றும் உயர்அதிகாரிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்'' என்றவர் கொஞ்சம் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். 

''675 டன் யூரியா, 235 டன் டி.ஏ.பி. ஆகக்கூடி 910 டன் உரங்களை, தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மைய தனிஅதிகாரி செல்லமுத்து, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கும்... சென்னையிலிருக்கும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ என்ற நிறுவனத்துக்கும் விற்பனை செய்ததிருப்பதாக ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இந்த உரத்தை வாங்கியிருப்பது போல ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, தனி அதிகாரி செல்லமுத்து தனியாக துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், இந்த நிறுவனங்களுக்கும் அந்த உரங்கள் செல்லவில்லை. கணக்கு மட்டுமே காட்டி பணத்தை வாங்கிச் சுருட்டிக் கொண்டு, வெளிமார்க்கெட்டில் மொத்த உரத்தையும் விற்றுள்ளனர். இதன் மூலமும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.

'டான்பெட்’, வேளாண்துறை, காகித ஆலை, பால்மர் லோரி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்தக் கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

தனி அலுவலர் செல்லமுத்து, 'டான்பெட்' துணை மேலாளர் பரமசிவம், உதவி வேளாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொதுமேலாளர் (கொள்முதல் பிரிவு) ராஜகோபாலன், த.நா. காகித ஆலையின் உதவிப்பொது மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ உயர் அதிகாரிகளான முருகன், அனிமேஷ் சத்தோவ் பாத்யா ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று சொன்னார் சூர்யகலா.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வையாபுரி, ''இந்த 910 டன் உர ஊழல் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு சங்கங்கள் ஊழலின் உறைவிடமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் மட்டுமல்ல, டிராக்டர்கள் பொக்லைன், போர்வெல் இயந்திரங்கள்கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை தனியார் ரியல் எஸ்டேட் நிலங்களை சமன்படுத்த அதிக வாடகைக்கு விடப்படுகிறது.

கூட்டுறவு என்றாலே, கூடி ஊழல் செய்யும் இடமாக மாறிவிட்டது. பணி ஓய்வு பெறும் காலம் வரை ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கு இருப்பதால்... முறைகேடுகள் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் ஆய்வு செய்வதுடன், கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் சங்கங்கள் செயல்படும்போதுதான் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்'' என்று சொன்னார்.

அமராவதி உழவர் இயக்க அமைப்பாளர் இரா. முருகானந்தம், ''உர ஊழலில் ஈடுபட்டுள்ள ஏழுபேரும் சாதாரண கடைநிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான அதிகாரிகள். ரசாயன உரம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேப்பம் பிண்ணாக்கிலும் முறைகேடு நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேப்பம் பிண்ணாக்கு குறித்து விசாரணை செய்தால், பல முறைகேடுகள் வெளிவரும்'' என்றார்.

பசுமை விகடன் இதழில் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் உர ஊழல் தொடர்பாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறோம். தற்போது, அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - பசுமை விகடன்

Saturday, May 28, 2011

காசிக்கு நிகரான கோயில் தமிழகத்தில் எது? ஆன்மீக அலசல்

http://www.unitedhindutemple.org/Images/sivan.jpg 
விசாகத்தில் வழிபட்டால்... 16 சாபங்களும் நீங்கும்!

வை'காசி’ப் புண்ணியம்...
ட்சியும் அதிகாரமும் இருந்தென்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சுவதற்கும், ஆட்சிக் கட்டிலில் நாளை வாரிசாக அமர்வதற்கும் நமக்கொரு குழந்தைச் செல்வம் இல்லையே..!’ என்பதுதான் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த பிரதாபசிம்ம ராஜாவின் பெருங்கவலை. 
அன்னதானம் செய்தார்; வைணவ சம்பிரதாயத்தில் திளைத்த மன்னர், திருமாலுக்கு ஆலயங்கள் பலவும் கட்டிக் கும்பாபிஷேங்கள் நடத்தினார். ஆறு- குளங்கள் வெட்டினார். ஆனாலும் என்ன... 'பிள்ளைபாக்கியம் இன்னும் தகையலையே...’ என வருந்தினாள் மகாராணி யமுனாம்பாள்.  
மன்னரின் கவலை, மந்திரிமார்களையும் தொற்றிக் கொண்டது. மிகுந்த சிவபக்தரான அமைச்சர் ஒருவர், ஈஸ்வரனுக்குக் கோயில் எழுப்பினால், சந்தான பாக்கியம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். சரியென்று சம்மதித்த மன்னர், 'எங்கே கோயில் எழுப்புவது?’ என அமைச்சரிடமே கேட்டார். 'காசியில் இருந்து முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடமே கேட்டு, அவரின் ஆசியுடனும் அருளுடனும் கோயில் கட்டுவோம்’ என்றார் அமைச்சர்.

அதன்படி, அந்தக் காசி முனிவரைச் சந்தித்து, நமஸ்கரித்து, ஆசீர்வாதம் பெற்ற மன்னர், அவர் சுட்டிக்காட்டிய இடத்திலேயே சிவாலயத்தை பிரமாண்டமாக அமைத்தார். முனிவரின் யோசனைப்படியே, ஸ்வாமிக்கு ஸ்ரீகாசி விஸ்வநாதர் என்றும், அம்பிகைக்கு ஸ்ரீவிசாலாட்சி என்றும் திருநாமம் சூட்டி, கும்பாபிஷேகத்தைக் கோலாகலமாக நடத்தினார். இதில் மகிழ்ந்த முனிவர், 'காசிக்கு நிகரான தலத்தை எழுப்பிய உனக்கு, காசிக்குச் சென்றால் கிடைக்கக்கூடிய அத்தனைப் பலன்களும் கிடைக்கட்டும்!’ என அருளினார். அதன்படி, மன்னருக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தது என்கிறது ஸ்தல வரலாறு.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது நீடாமங்கலம். இந்த ஊரின் மையப்பகுதியில் கோயில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகாசிவிஸ்வநாதர். அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் உண்டு எனினும், வைகாசி மாதத்தில் பிரம்மோற்ஸவம் விமரிசையாக நடந்தேறுமாம்.

பத்து நாள் விழாவாக நடைபெறும் பிரம்மோற்ஸவ விழா, தினமும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படுமாம் ஆலயம். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டிருப்பார்கள், நீடாமங்கலம் சிவாலயத்தில்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1rAvOXOvBtTvZ9wUnVl0GM7zspR79IqHnFfr5WP4_5JnfUslp2pyvkUYRY8o63M0xrPEB3uwkB6MaXuRQ7ouY8sao_zyG_hf-WVS1XHyCLD9mXxAdmWHvsWcP9t34hr3ZymBvzD4h5VeN/s1600/okom,.jpg
காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் மற்றும் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.  

வைகாசியை, ரிஷப மாதம் என்பர். அதாவது, ஈசனுக்கு உரிய மாதங்களில் இதுவும் ஒன்று. எனவே வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில், (ஜூன் 4 முதல் 13-ஆம் தேதி வரை) இங்கு வந்து வணங்கினால், 16 வகையான சாபங்களும் நீங்கி வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

நன்றி - சக்தி விகடன்