Sunday, May 31, 2020

HIT ( THE FIRST CASE ) - TELUGU - சினிமா விமர்சனம் ( க்ரைம் , மிஸ்ட்ரி த்ரில்லர் )

நீங்க உங்க வாழ்நாட்கள் ல இதுவரை பார்த்த டாப் 10 க்ரைம் த்ரில்லர்களை மனசுக்குள் பட்டியல் போடுங்க , பிறகு இந்தப்படம் பாருங்க , நிச்சயம் அதுல டாப்1 ஆக இது இருக்கும். பிரமாதமான, க்ரிஸ்ப் ஆன திரைக்கதை, க்ளைமாக்ஸ் மட்டும் எல்லா தரப்பும் ஏத்துக்கற அளவு இல்லை . காளிதாஸ் படத்துல பட,ம் பிடிச்ச பலருக்கும் க்ளைமாக்ஸ்  ஏற்புடையதா இல்லை. அது மாதிரி தான் இதுவும். ஆனாலும் மிஸ் பண்ணிவிடக்கூடாத படம் .நான் ஈ பட ஹீரோ நானியின் சொந்தப்படம்




 ஹீரோ  ஒரு போலீஸ் ஆஃபீசர் . அவரோட காதலி கூட கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங். கொஞ்ச நாளா டச் இல்லை . திடீர்னு அவரோட காதலி காணாம போகுது . இன்னொரு பொண்ணும் அதே மாதிரி காணாம போகுது. இந்த 2 காணாம போன சம்பவத்துக்கும் ஒரு லிங்க் இருக்குனு ஹீரோ நினைக்கிறார்

காணாமப்போன ஒரு பொண்ணுக்கு பெற்றோர் யார்னு தெரியாது, வளர்ப்புப்பெற்றோர்தான். ஒரு பங்களாவில் வசதியா வாழ்ற டைவர்ஸ் ஆன ஒரு ஆண்ட்டிக்கு காணாம போன 2 பொண்ணுங்களையும் பழக்கம்.ஒவ்வொருவர் மேலயும்  சந்தேகம், வருது ஹீரோயின் கூட கருத்து வேறுபாடு கொண்டிருந்த காரணத்தால டிபார்ட்மெண்ட்ல ஹீரோ மேலயும் சந்தேகப்படறாங்க . எப்படி துப்பு துலக்கறாங்க என்பதே திரைக்கதை 


ஹீரோவா விஸ்வக் சென்  நல்ல நடிப்பு போலீஸ் ஆஃபீசருக்குண்டான மிடுக்கு, தோரணை  உடல் மொழி , கம்பீரம் எல்லாம் அபாரம். காதலியுடனான ரொமாண்டிக் போர்சனும் கன கச்சதம். சேசிங் காட்சிகளிலும் , ஃபைட் சீன்களிலும் நல்ல சுறு சுறுப்பு ஓப்பனிங் சீன்ல   வீடியோ ஆதாரம் உள்ள ஒரு தற்கொலை கேசை கொலைதான் என கண்டு பிடிக்கும் காட்சி அபாரம்  


நாயகி ருஹானி சர்மாவுக்கு அதிக வாய்ப்பில்லை. ஆனா வந்தவரை குறை ஒன்றும் இல்லை ஹையர் ஆஃபீசரா வரும் பானுச்சந்தர் கச்சிதமான நடிப்பு . ஹீரோவை ஒரு ஹையர் ஆஃபீசர் அறையும் காட்சி இதுவரை நான் பார்த்ததில்லை . துணிச்சலான சீன்

போலீஸ் இன்ஸ்பெக்டராக வ்ரும்  முரளி சர்மா  அனாயசமான நடிப்பு . டிபார்ட்மெண்ட்டால் தண்டிக்கப்படும்போது அனுதாபம் பெறுகிறார்

சிசிடிவி கேமராக்கள் இந்தக்கால கட்டத்தில் ஒரு கேஸ்க்கு எவ்ளோ முக்கியம் என்பதை பல இடங்களில் பதிவு பண்ணி இருக்காங்க 

உண்மை கண்டறியும் சோதனை பாலிகிராப்ட் டெஸ்ட் காட்சிகள் எல்லாம் இதுவரை இவ்வளவு டீட்டெய்லாக காட்டியதில்லை . ஒரு புத்திசாலி கிரிமினல் தன் இதயத்துடிப்பை சாதாரணமாக வைத்துக்கொண்டால் அவன் உண்மை கண்டறியும் சோதனையில் ஏமாற்ற முடியும் என்று டயலாக் வைத்து அந்த டைவர்ஸ் லேடி குற்றவாளியா? இல்லையா? என்பதை உறுதியா சொல்ல முடியலை  என்று குழப்பும் டெக்னிக் அபாரம் 

காணாமப்போன 2 பெண்களும் கொலை செய்யப்படலை , ரேப் மோட்டிவ் இல்லை , பணம் பறிக்கும் உத்தேசம் இல்லை , பிளாக்மெயில் காலும் வர்லை என்ற போது இது வேறு மாதிரியான திசை என்பது யூகிக்க முடியுது . மோட்டிவ் மிக மாறுபட்டது

 பின்னணி இசை கலக்கல் , ஒளிப்பதிவு பக்கா .எடிட்டிங்  அருமை ஒரு சீன் என்றால் ஒரு சீன் கூட போர் இல்லை 



சபாஷ் டைரக்டர் 


1   ஜாகிங் போய்க்கிட்டே காமெராவில் ஷூட் பண்ணின குறும்படம் மாதிரி மிக வேகமாகப்பயணிக்கும் திரைக்கதை பெரிய பிளஸ்


2  மொக்கை காமெடி , ஆடியன்சை தம் அடிக்க கிளம்ப வைக்கும்  டூயட் காட்சிகள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்

3  ஒரு காட்சியில் தோண்டி எடுக்கப்படும் அழுகிய நிலை பிணம் தத்ரூபமாக ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்படிருப்பது அபாரம் 


4  க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன்பு வரும் அந்த சேசிங் காட்சி , ஃபைட் காட்சி செம , தியேட்டரில் விசில் பறந்திருக்கும் 

5  இந்தப்படத்துக்கு 2ம் பாகம் வரப்போகுது என்பதற்கான லீடு சீன் க்ளைமாக்சில் வருவது அபாரமான திருப்பம் 


நச் டயலாக்ஸ் 

1   உன் உறவு சம்பந்தப்பட்ட கேஸ்ல நீ இன்வால்வ் ஆனா உன் இண்ட்டெலிஜென்சை விட  உன் எமோஷன் உன்னை அமுக்கிடும் 


2   பசங்க எப்பவுமே அப்படித்தான், ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிச்ட்டா அவங்க கூட கற்பனைலயே வாழ்க்கை நடத்த ஆரம்பிச்சுடுவாங்க    ( ஏன்? பொண்ணுங்க அப்டி  இல்லையா? அவங்களும் தான் ) 


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்டே அவரோட ஹையர் ஆஃபீசர் கேஸ் சம்பந்தபப்ட்ட ஒரு ஃபைல் கேட்கறார். அதை அவர் ஸ்டேஷன்ல இருந்து எடுத்துட்டு கார்ல போறப்ப அந்த ஃபைல் தானா?னு செக் பண்ண மாட்டாரா? மாறிடுச்சு வேற ஃபைல்  அப்டினு ஹையர் ஆஃபீசர் சொன்ன பிறகு மீண்டும் காரில் ஸ்டேசன்க்கு போய் கான்ஸ்டபிளை திட்றார். ஃபைலைக்கூட கரெக்டா பார்த்து எடுத்து வைக்க முடியாதா?னு , ஆனா இவர் ஏன் செக் பண்ணலை? ( கதைப்படி  அவர் அந்த ஹை வே ல  2 டைம் அப் அண்ட் டவுன் போக வேண்டிய சிச்சுவேஷன், ஆனா எதையாவது மறந்து வெச்ச மாதிரி காட்டி இருக்கலாம் ) 


2 உன் மேல ஒரு டவுட் இருக்குனு ஒரு போலீஸ் ஆஃபீசர் இன்னொரு ஆஃபீசர் கிட்டேயே சொல்வாரா? அவர் உஷார் ஆகிக்க மாட்டாரா? காதலியின் அம்மா வுக்கு உன்னை பிடிக்க ல, உன்னை சந்தேகப்படறாங்க என சொல்வதும் ஆபத்துதான் . 


3  அந்த டைவர்ஸ் லேடி கேஸ்க்கு எல்லா வகைலயும் ஒத்துழைப்பு த்ருது, கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுது. திடீர்னு கைகள் இரண்டையும் பின்னால் கட்டி விலங்கு போட்டு  ஜீப்ல ஏற்றுவது ஓவர். சும்மா டவுட்ல அப்டி அரெஸ்ட் பண்ண சட்டத்தில் இடம் இருக்கா? எவிடென்சே இல்லாம கை விலங்கு போட்டு  கூட்டிட்டு போறது ஓவர்


4 க்ளைமாக்ஸ்ல போலீஸ் ஆஃபீசர்ஸ்  2 பேரு சந்தேகிக்கும் நபர் வீட்டுக்கு ரகசியமா போறாங்க . அவன் வீட்டை செக் பண்ணிட்டு இருக்கும்போது அவன் ஸ்பாட்க்கு வர்றான். ஸ்பாட்ல போலீஸைப்பார்த்ததும் டக்னு நைசா நழுவி இருக்கலாமே? எதுக்கு லூஸ் மாதிரி துப்பாக்கியால்; சுட முயற்சி பண்ணி தன்னை வெளிப்படுத்திக்கறான்? 2 பேரை அட்டர் டைம்ல சுட முடியாதுனு தெரியுமுல்ல? 


5  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில் குற்றவாளி மீது   வெறுப்பு வர்லை , பரிதாபம் தான் வருது. அது கேசின் பலவீனம்

6   ஒரு டெட்பாடியை ஒரு இடத்துல குழி தோண்டி புதைச்ச சுவடுக்கும் , அதே பாடியை  குழி தோண்டி புதைச்சு பின் மீண்டும் குழி தோண்டி வெளியே  எடுத்து அதை மீண்டும் அதே இடத்தில் புதைத்து மண் மூடி விட்டாலும் வித்தியாசம்  தெரியாதா? மண் இளகி இருக்குமே? போலீஸ் அதை கவனிக்கலையா? 


சி.பி கமெண்ட் - ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கான மாறுபட்ட க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் . குடும்பத்துடன்  பார்க்கலாம் . வல்காரிட்டி , வயலென்ஸ் இல்லை . 
ரேட்டிங்   3.5  / 5 


Saturday, May 30, 2020

பொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம் (கோர்ட் டிராமா)


பொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்  (கோர்ட் டிராமா)

தமிழ் சினிமா ஆடியன்ஸ்க்கு ஒரு சிறப்பு உண்டு , கோர்ட் காட்சிகள் அதிகம் கொண்ட பல படங்களை வரவேற்று இருக்கிறார்கள் , அதற்கான உளவியல் காரணங்கள் 2. முதலாவது கோர்ட்டில் என்ன நடக்கும் என்பதை பெரும்பாலும் அவர்கள் கண்டதில்லை . இரண்டாவது வாத பிரதிவாதங்களை எப்போதும் அவர்கள் ரசிப்பார்கள். பட்டிமன்றங்கள் ஹிட் ஆவது கூட இந்த சைக்காலஜியில் தான்

பராசக்தி , விதி , நான் சிகப்பு மனிதன் , நீதிக்கு தண்டனை , ப்ரியங்கா , மனிதன் ( உதயநிதி), ஒரு தாயின் சபதம் ,நேர் கொண்ட பார்வை என ஏகப்பட்ட முன்னுதாரண்க்கள் இதுக்கு இருக்கு, அந்த வரிசைல இந்தப்படமும் ஒரு வெற்றிப்படமே.


பெண் குழந்தைகளை  கொலை செய்த ஒரு வட நாட்டு சைக்கோ கொலைகாரியை பற்றிய  ஒரு கேஸ்  பல வருடங்களுக்குப்பிறகு தூசு தட்டப்பட்டு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதிகாரமும், பண பலமும் உள்ளவர்கள் எப்படி எல்லாம் நீதியை வளைக்க முடியும்? என்ற எஸ் ஏ சந்திரசேகர் ஃபார்முலா கதை தான்

படத்தோட முதுகெலும்பு  ஜோதிகா தான் . ஜோதி , வெண்பா என இரு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். ஜோதியா வரும் காட்சிகளில் ஒரு பெண் குழந்தையின் அம்மாவா பாசத்தை வெளிப்படுத்தும் சராசரி பெண்ணின் அசாதாரணமான நடிப்பு  குட் . வக்கீலா  வெண்பா கேரக்டரில்  ஆவேசமா, இயலாமையுடன் , கண்ணீருடன்  இன்னொரு  பரிமாண நடிப்பு . பெண்களைக்கவரும் அம்சங்கள் பல இடங்களில்

வில்லனா வரும் தியாகராஜன் மிரட்டலான நடிப்பு . க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் முகத்தில் காட்டும் துடிப்புகள் அபாரம். சாகும் வரை மரியாதையுடன் இருக்கனும் என்ற அவர் கொள்கை கலக்கல். வக்கீலாக வரும் இரா பார்த்திபன்  சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். பல இடங்களில் ஜட்ஜூக்கே ஆர்டர் போட்டு  திகைக்க வைக்கிறார்.

நாயகியின் அப்பாவாக ,பெட்டிஷன் பெத்துராஜ் கேரக்டரில் கே பாக்யராஜ் தன் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். ஆனால் மீசை இல்லாத கெட்டப் என்னமோ மாதிரி இருக்கு

ஜட்ஜ் ஆக வரும் பிரதாப் போத்தன் பாராட்டும்படியான நடிப்பு

ஊட்டியின் அழகை மாறுபட்ட கோணத்தில் காட்டி இருக்கு  கேமரா. அபாரம்., ஆனா பின்னணி இசை பல இடங்களில் சொதப்பல் ரகம் . வசனம் ஆங்காங்கே கை தட்ட வைக்கிறது

 நல்ல கதைக்கரு , சமூக ஆக்கறை உள்ள கருத்து சொல்ல முற்பட்டதற்காக  புது இயக்குநரை பாராட்டலாம், ஆனா திரைக்கதை  அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார். பல இடங்களில் லாஜிம் மிஸ்டேக்ஸ். அட்லீஸ்ட் திரைக்கதை மன்னன் கே பாக்ய ராஜிடம் ஆலோசனையாவது ஷூட்டிங் கேப்பில்  கேட்டிருக்கலாம். கே பாக்ய ராஜ், பிரதாப் போத்தன், இரா பார்த்திபன், ஆர் பாண்டியராஜன், தியாக ராஜன் என 5 இயக்குநர்கள் நடித்த படம்  என்ற முத்திரையுடன் வந்த படம் என்பதால்  அவர்கள் கூட ஸ்க்ரிப்ட்டில் உள்ள குறைகளை சொல்லி இருக்கலாமே? என ஆதஙக,ம் எழுகிறது

நச் டயலாக்ஸ்

1        1   நாய் குலைக்குதுன்னா வீட்டுக்கு வந்தவன் திருடன்னு அர்த்தம் இல்லை
2         
3        2  சட்டத்துக்கு சாட்சி போதும், முழுமையான உண்மை தேவை இல்லை

33 நேர்மையோட மதிப்பு உங்களுக்கு எல்லாம் எப்பவாவதுதான் புரிய வரும்

4  4 எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மனநிலை

5 5  அதிகாரத்துல இருக்கறவங்களை விட தனக்காகவே அதிகாரத்தை உருவாக்கிக்கறவங்க ஆபத்தானவங்க 


6 6 எய்ட்ஸ் பேஷண்ட் தனக்கிருக்கற நோயை டாக்டர்ட்ட சொல்ல கூச்சப்பட்டு பைல்ஸ்னு பொய் சொன்னா டாக்டர் பைல்ஸ்க்கான சிகிச்சை தான் தருவார்


  7 தப்பானவங்க தான் வாழமுடியும்னா இந்த உலகத்துல  யாருமே வாழ முடியாது

  8  சத்தியத்தைத்தவிர வேற எதுக்கும் பயப்படக்கூடாது

  9  வாழ்க்கைல யாரும் எதுக்கும் பயப்படக்கூடாது

  10    வில்லன் பஞ்ச் = நான் பேசறப்ப என் சத்தம் மட்டும் தான்  கேட்கனும்

  11 சாகறவரைக்கும் எனக்கான மரியாதையோடயே வாழ்ந்துட்டுப்போய்டனும்

  12  வெளில தெரிஞ்சா அவமானம்னு நாம மறைக்கிற ஒவ்வொரு உண்மையும்  உதவறதால கெட்டவங்க நல்லவங்க ஆகிட முடியாது

  13  உண்மையையும் , கண்ணீரையும் தவிர வேற எதுவும் என் கிட்டே இல்லை

  14  யூகத்தின் பேர்ல எதையும் முடிவு பண்ணிட முடியாது

  15  ஒருத்தரோட அடையாளத்தை சிதைக்கறது மிகப்பெரிய அநீதி

  16  தப்பு செய்யறவங்களால நீதியை விலைக்கு வாங்க முடியாதுங்கற நம்பிக்கை ஜனங்களுக்கு வரனும்


  சபாஷ் இயக்குநர் 

  1  படத்தோட சப்ஜெக்ட் சைல்டு அப்யூஸ் என்றாலும்  காட்சிகளில்  வன்முறை தவிர்த்தது

  2  வில்லன் தியாகராஜன் உணர்ச்சி பொங்கும் நடிப்பு , ஜோதிகாவுன் பங்களிப்பு 

  3  பிரபல இயக்குநர்கள் 5 பேரை ஒருங்கிணைக்கும் ஐடியா 

  4   இடைவேளை ட்விஸ்ட்  ஓரளவு எதிர்பார்த்தது தான் என்றாலும் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் நல்லாருந்தது 

  5   கோர்ட் டிராமா என்றாலும் 2 மணி நேரத்துல படத்தை முடிச்சது

 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

  1   ஓப்பனிங்  சீன்ல  கொலைகாரியின் தலை முடியை சீப்பில் கொத்தா கைப்பற்றுவது  நம்ப முடியல. பொதுவா   சீப்பை க்ளீன் பண்ணி தான் பெண்கள் வைப்பாங்க, ஆண்கள் வேணா அப்படியே விட்டுடலாம்

  2  ஒரு சீனில் போலீஸ் ஒரு ஆளிடம் வாக்குவாதம் செய்வதை பாக்யராஜ் செல் ஃபோனில் வீடியோ எடுக்கிறார் , ஒரு அடி தூரத்தில் க்ளோசப்பில், இதுக்கு அந்த போலீஸ் ஒத்துக்கனுமே?

  3  ஜோதிகா இன்னொரு வக்கீலிடம் பேசும்போது மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி நடந்துக்கறார்.  ஆங்கிலத்தில் சொல்லிட்டு அதை தமிழில் மொழி பெயர்க்கிறார், ஏன் பி ஏ பி எல் படிச்சவருக்கு  கண்டெம்ட் ஆஃப் கோர்ட்னா அர்த்தம் தெரியாதா?

  4   ஒரு சீனில் ஊட்டி டூ திருப்பூர்   மூன்றரை மணி நேரத்தில் வரவே முடியாதுனு ஜோதிகா வாதம் செய்யறாரு.  108 கிமீ தூரம்  தாராளமா வரலாம் 2 3/4 மணி நேரம் போதும் 

   5  முக்கியமான சாட்சியான  எஸ் ஐ சுரேஷ் ஒப்புதல் வாக்குமூலம் தருவதை  வீடியோ பதிவா எடுத்திருக்கலாம், அல்லது ஜட்ஜ் வீட்டுக்கே கூட்டிட்டுப்போய் பதிவு பண்ணி இருக்கலாம், அதை ஏன் செய்யலை ? சப்போஸ்  சாட்சியை கடத்திட்டா/கொலை செஞ்சுட்டா என்ன  பண்ண? என யோசிக்க மாட்டாங்களா?

  6   ஒரு முக்கியமான பிரபலமான கேஸ் ல தீர்ப்பு சொல்லும் 2 நாட்கள் முன் ஜட்ஜ் ஒரு ஃபங்க்‌ஷனில் கலந்து  வில்லன்ட்ட சூட்கேஸ் வாங்கறார், இவ்ளோ பப்ளிக்காவா ஒரு ஜட்ஜ் தப்பு பண்ணுவார்? 

  7  வில்லன் பயங்கரமான ஆள். ஓப்பனிங்  சீன்ல  அந்த பெண் குழந்தையை உயிரோட விட்டுப்போவது ஏன் ? சாட்சியை கொலை பண்றவரு மெயின் பிரச்சனையான ஜோதிகாவை கொலை செஞ்சா ஈசியா மேட்டர் முடிஞ்சது, அதுக்கு முயற்சி கூட செய்யலை 

8  8  கோர்ட் காட்சிகளில் பார்த்திபன் மரியாதையே இல்லாம ஜோதிகாட்ட பேசுவது அவரோட வார்த்தை ஜாலத்தை வெச்சு விளையாடறது , ஜட்ஜூக்கே  ஆர்டர் போடுவது எல்லாமே கேலிக்கூத்து 


 சி.பி கமெண்ட் - பெண்களைக்கவரும் இப்படம் அமேசான் பிரைம்ல கிடைக்குது, ஆனந்த விகடன் மார்க் 41 (யூகம் )  குமுதம் ரேங்க்கிங் 2.75/ 5
அட்ராசக்க ரேட்டிங்  2.5 / 5 

Thursday, May 28, 2020

சிறுகதைப்போட்டி - படம் பார்த்து கதை சொல் - காட்சிப்பிழை- சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,


சிறுகதைப்போட்டி - படம் பார்த்து கதை சொல் -

காட்சிப்பிழை- சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,

காலேஜ் டூர் போய்ட்டு வந்ததில் இருந்து சித்ராவின் முகமே சரி இல்லை . அவள் ஏதோ சிக்கலில் மாட்டி இருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக்கொடுத்தது.
“ என்ன?னு விசாரி”
ஏன்? நீங்க கேட்க மாட்டீங்களோ?
பொதுவா ஒரு பொண்ணு மனம் விட்டுப்பேசுவது அம்மா கிட்டே தான், அப்பா செல்லம் எல்லாம் தனி .
சரிங்க கேக்கறேன்
சித்ரா
என்னம்மா?
டூர் போனப்ப என்ன நடந்தது?
ஒண்ணும் இல்லைம்மா
உன் முகமே சரி இல்லையே? எதா இருந்தாலும் என் கிட்டே சொல்லு. பிரச்சனையை வெளியே சொன்னாதான் அதுக்கு தீர்வு கிடைக்கும். மனசுக்குள்ளேயே வெச்சுப்பூட்டிக்கிட்டா சோர்வு தான் மிஞ்சும்
அம்மா.. அது வந்து
ம் சொல்லு
டூர் ல எந்தப்பிரச்ச்சனையும் இல்லை, டூர் முடிச்ட்டு ரிட்டர்ன் வர்றப்ப என் ஃபோன் வாட்சப் க்கு ஒரு வீடியோ க்ளிப் வந்தது.. அதுல…
அதுல?
நான் குளிக்கறதை யாரோ வீடியோ எடுத்து அனுப்பி இருக்காங்கம்மா
அம்மா அதிர்ச்சி ஆனாள். ஃபோனை வாங்கிப்பார்த்தாள்.
நிஜம். சரி . இந்தப்பிரச்சனையை நாங்க டீல் பண்ணிக்கறோம். உன் ஃபோன் அப்பா கிட்டேயே இருக்கட்டும் . நீ எதுவும் மனசுல வெச்சுக்காம ரிலாக்ஸா இரு
சொல்லி விட்டு கணவனிடம் வந்தாள்
என்னங்க…நம்ம பொண்ணை எவனோ வீடியோ எடுத்து இருக்கான். இப்ப என்னங்க பண்றது?போலீஸ்க்கு போலாமா?
வேணாம்மா, அவங்க 1008 கேள்விகள் கேப்பாங்க. அந்த வீடியோவை காமிக்க வேண்டி இருக்கும். நாம லேடி போலீஸ் ட்ட காட்னாலும் பிறகு எப்படியோ ஆண்களும் பார்க்க வாய்ப்பிருக்கு. இந்தப்பிரச்சனையை நானே டீல் பண்றேன். வீடியோ எடுத்தவன் பணம் கேட்டோ அல்லது நம்ம பொண்ணையோ கேட்டோ ஃபோன் பண்ண வாய்ப்பிருக்கு , ஃபோன் என் கிட்டேயே இருக்கட்டும். அந்த க்ளிப்பிங்க்சை மட்டும் எரேஸ் பண்ணிட்டு என் கிட்டே குடு
சரிங்க . அவனா காண்டாக்ட் பண்ணா சரி , இல்லைன்னா எப்படி கண்டு பிடிப்பீங்க?
எப்படியும் காண்டாக்ட் பண்ணுவான். நெம்பர் கண்டுபிடிச்சிருக்கான், வீடியோ எடுத்து அனுப்பி இருக்கான், காண்டாக்ட் பண்ண மாட்டானா?எப்போ காண்டாக்ட் பண்ணாலும் நீ அட்டெண்ட் பண்ணு , நான் சொல்லித்தர்ற மாதிரி பேசு
யாருங்க இப்டி பண்ணி இருப்பாங்க?
4 ஆப்சன் . இவ கூட படிக்கறவன், இவ தங்கி இருந்த ஹோட்டல் ஓனர் , மேனேஜர் , ரூம் பாய் இவங்க யாராவது பாத்ரூம் ல கேமரா மறைச்சு வெச்சு படம் பிடிச்சிருக்கலாம். இதை பலர் ஒரு தொழிலாவே பண்ணிட்டு வர்றாங்க . யார்?னு கண்டுபிடிச்ட்டா அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கலாம்
அப்போது சரியாக மணி அடித்தது. ஸ்பீக்கர் ஆன் பண்ணினாள்
ஹலோ
எஸ்
யாரு?
சித்ராவோட அம்மா தான் பேசறேன் என சொல்ல வந்தவள் நாக்கைக்கடித்துக்கொண்டு “ சித்ரா தான் பேசறேன்”
உன் வாட்சப்ல ப்ளூ டிக் வந்தது. பார்த்திருப்பேன்னு நினைக்கறேன். நான் பார்த்ததை நீ பார்த்திருப்பே. அதை ஊரே பார்க்கனும்னு ஆசைப்படறியா?
அய்யய்யோ, அப்டி எதும் பண்ணிடாதே, உனக்கு பணம் தானேவேணும்?
அட போம்மா , பணம் வேணும்னா அங்கே அப்போ ஹோட்டல்லயே மிரட்டி வாங்கி இருப்பேனே? எனக்கு நீ தான் வேணும். அப்போ கூட்டத்தோட இருந்தே , வீட்லயோ , போலீஸ்லயோ சொன்னேன்னா என்ன நடக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை , உனக்கே தெரியும், காலேஜ் கேர்ள், எத்தனையோ சினிமா பார்த்திருப்பே…
சரி, இப்போ என்ன செய்யனும்?
அதே ஹோட்டலுக்கு இந்த வாரம் ஞாயிறு அன்று வா. நீயே ரூம் புக் பண்ணு .நான் அங்கே வர்றேன்.
ஃபோனை கட் பண்ணிட்டான்.
என்னங்க , இப்போ என்ன பண்ணப்போறீங்க?
நீ சித்ராவுக்கு துணையா இங்கேயே இரு. நான் அந்த ஹோட்டலுக்குப்போய்ட்டு வர்றேன்.
ஏங்க, விபரீதமா ஏதும் நடந்துடாதே?
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்
சொன்னவர் நேரே ஜம்ப்போ சர்க்கஸ் கம்பெனிக்கு போனார். அங்கே லாக்டவுன் காரணமா எல்லாரும் ஃப்ரீயா தான் இருந்தாங்க . மேனேஜரைப்பார்த்தார். அவரிடம் குசு குசு என ஏதோ பேசினார். பின் அவர் கையில் கொஞ்சம் பணம் குடுத்தார்.
பிறகு கார்பெண்டர் வீட்டுக்குப்போனார்.
இன்று வெள்ளி , இன்னும் 2 நாட்கள் இருக்கு இன்றே கிளம்பி ஸ்பாட்டுக்குப்போக முடிவெடுத்தார். முதல்ல லொக்கேஷன் பார்த்து ஆள் எல்லாம் பார்த்து ஸ்கெட்ச் போட டைம் வேணும்
குறிப்பிட்ட அந்த ஹோட்டல் போனார். ரூம் புக் பண்ணார் . 3 நாட்கள் தங்கனும் என சொல்லி கீ வாங்கி ரூம் க்கு உள்ளே வந்தார்.
ஃபோன் குரல் சொன்ன அதே ஹோட்டல் . அதே ஃப்ளோர் , ஆனா ரூம் மட்டும் வேற
வெள்ளி , சனி இரண்டு நாட்கள் தங்கி அக்கம் பக்கம் விசாரித்ததில் அவர் தெரிந்து கொண்டவை ஹோட்டல் ஓனர் இப்போ ஃபாரீன் ல இருக்கார் , அவரா இருக்க வாய்ப்பில்லை . ஹோட்டல் மேனேஜர் ஒரு லேடி. அப்ப டவுட் லிஸ்ட்ல இவங்க 2 பேரும் காலி . மீதி இருப்பது ரூம் பாய் ,ரூம் க்ளீனர் இருவரும் தான் . லாக்டவுன் முடிந்து இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வெளியூர் போறவங்க , அவங்கவங்க சொந்த ஊர் போறவங்க எல்லா பணியாளர்களும் கிளம்பி போய் இருந்தாங்க . மிச்சம் இருப்பவன் ஒரே ஆள் . வேற இருக்க சான்ஸ் இல்லை . அவன் தான் ரூம் சர்வீஸ் , அவன் தான் ரூம் க்ளீனர்
கன்ஃபர்ம் பண்ன ஹோட்டலில் இருந்தே அந்த மிரட்டல் காரன் நெம்பர் க்கு ஃபோன் பண்ணீனார். அவன் ஃபோனில் புது நெம்பர் பார்த்து கட் பண்ணினான். உறுதி ஆனது, இவன் தான் அவன்.
சனிக்கிழமை சர்க்கஸ் கம்பெனிக்கு ஃபோன் பண்ணினார்
சார், நான் சொன்னபடி ஹோட்டலுக்கு நாளை காலை அவரை அனுப்பிடுங்க , பேசினபடி நாளை நைட் டீல் முடிச்சுக்கலாம்
ஓகே சார்
ஞாயிறு. பேசியபடி சர்க்கஸ் கம்பெனி ஆள் விடிகாலை யாரும் எழும் முன் ஹோட்டல் வாசலில் வந்து நின்றான்.சித்ராவின் அப்பாவுக்கு ஃபோன் செய்தான். அவர் ரூமிலிருந்து வெளியே வாக்கிங் கிளம்புவது போல் வந்து ஹாலில் ஆள் நடமாட்டம் இல்லாததை கன்ஃபர்ம் பண்ணி பின் வாசல்க்கு வந்து அவனை ரிசீவ் பண்ணி உள்ளே அழைத்து சென்றார். ரூம் கதவை தாளிட்ட்டார் கார்பெண்டரிடம் வாங்கி வ்ந்த சாதனங்களை எடுத்து பரப்பினார்.
டீப்பாயை ஒரு வட்ட வடிவில் காம்பஸ் வைத்து ஓட்டை போட்டார் . வந்த அபூர்வ சகோதர்கள் அப்பு டைப் ஆளை கழுத்து அளவு எடுத்து அந்த அள்வுக்கு ஒரு துளை இட்டார் . மேலே விரிக்கும் விரிப்பை எடுத்து தலை புகும் அளவுக்கு ஓட்டை போட்டார் வெட்டி எடுத்த துணியை டஸ்ட் பின்னில் போட்டார்
இப்போது அப்பு வை அந்த டீப்பாய் துளைக்குள் தலை விட்டு அமரச் சொன்னார். தன் பேக்கில் இருந்து கொண்டு வந்த நிஜ ரத்த பாட்டில் பிளட் பேங்க்கில் வாங்கியது எடுத்து கழுத்துப்பகுதியில் தெளித்தார்
ரூம் சர்வீஸ்க்கு ஃபோன் பண்ணி “ காஃபி 1 கொண்டு வாப்பா “
ரூம் பாய் வந்தான். வந்தவன் டீப்பாய் மேலே மனிதத்தலை ரத்தக்கறையுடன் இருப்பதைக்கண்டு அதிர்ந்தான்.
சார்… இது… இது.. கொலை கொலை என கத்தினான்
தலை அப்படியே திரும்பியது
அவனைப்பார்த்து சிரித்தது..
ரூம் பாயின் இதயத்துக்குப்போகும் ரத்தக்குழாய்கள் திடும் திடும் என அதிர்ந்தன. நெஞ்சில் கை வைத்தான்.. அய்யோ , நெஞ்சு வலிக்குது..
கத்தினான். சித்ராவின் அப்பா தயாராக வைத்திருந்த மாத்திரையை தந்து இந்தாப்பா இதை போட்டுக்க , தண்ணியைக்குடி..
யோசிக்க நேரம் இல்லை. அவன் டக் என மாத்திரையை போட்டு விழுங்கினான். ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்டான்.
சார் , இது பேய் இல்லையே? நான் கூட டக்னு பயந்த்…….
அவன் வார்த்தை கம்மியது.மீண்டும் நெஞ்சைப்பிடித்துக்கொண்டான், நிஜமான ஹார்ட் அட்டாக் செயற்கையாக உருவானது…

Tuesday, May 26, 2020

ஒரு “மே”ஜிக் ஜாக் கொலை-சென்னிமலை சி.பி. செந்தில் குமார் ( படம் பார்த்து கதை சொல் சிறுகதைப்போட்டி )


ஈரோட்டில் இருக்கும் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான  ஏபிசி  டெக்ஸ்  பன்னீர் செல்வம் பார்க் அருகே மணிக்கூண்டில் கம்பீரமாக  நின்றிருந்தது.  அப்பா, மகன் இருவரும் அதன் ஓனர்கள். எம் ஜி ஆர் காலத்தில்  எம் ஜி ஆர் அண்ணன்  எம்.ஜி சக்ரபாணியை  பெரியவரு எனவும் , எம் ஜி ஆரை சின்னவர் எனவும் தோட்டத்தில் அழைப்பார்கள். அது மாதிரி இங்கேயும்  அப்பா பெரியவர் , மகன் சின்னவர் . பெரியவர் சிறந்த  உழைப்பாளி , சின்னவர் ஷோக்காளி, அப்பா கஷ்டப்பட்டு  குருவி மாதிரி சேர்த்த பணத்தை மகன் அருவி மாதிரி அள்ளிக்கொட்டி செலவு பண்ணுவார் , ரஜினி பல வருசங்களா  நடிச்சு சேர்த்த பணத்தை  அவரு பொண்ணு கோச்சடையான் எடுத்து  செலவு பண்ண மாதிரி 

இப்போ சொல்லப்போற ஒரு விஷயம் நம்ப முடியாததா இருக்கும், ஆனா  நிஜம். அந்தக்காலத்துல ராஜாக்கள் வரும்போது வர்றார் மன்னர் பராக் பராக்  எல்லாம் சொல்வாங்க இல்லையா? தெரியாத இந்தக்கால தலைமுறைகள்  இம்சை அரசன்  23ம் புலிகேசி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த மாதிரி கம்பெனி கேட் முன்னால்  செக்யூரிட்டி  நிப்பார். அய்யா ( பெரியவர் ) கார் வந்து நின்னதும்  செக்யூரிட்டி  ஒரு பெல் அடிப்பார் . உடனே அனைவரும் எந்திரிச்சு  நிப்பாங்க . கார் டிரைவர் காரை பார்க்கிங்  பண்ணிட்டு கார் கதவை திறந்து விட்டு  அய்யா கம்பெனிக்குள் எண்ட்டராக 10 நிமிசம் ஆகும். அந்த 10 நிமிசம் வரை எல்லாருமே அப்படியே நின்னுட்டு இருப்பாங்க .அய்யா உள்ளே நுழைஞ்சு அவர்  ரூம் போய் உக்கார்ற வரை யாரும் உக்காரவே மாட்டாங்க. 2020 ல கூட இப்படி ஆளுங்க இருப்பாங்களா?னு முதல்ல ஆச்சரியப்பட்டவங்க பலர் 


அய்யா அந்தக்காலத்துலயே அதாவது சிலோன் என இலங்கைக்குப்பேர் இருந்தப்போ , கள்ளத்தோணில லுங்கி கொண்டு போய் வித்து செம காசு பார்த்தவர் . கேரளா, ஆந்திரா, கர்நாடகா,  தமிழ்நாடு என  பல மாநிலங்களில் அவரது  லுங்கி தயாரிப்பு பிரபலம். மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ் சம்பளம் எல்லாம் பிரமாதமா இருக்கும். 40,000   ,  50,000  ரூபாய் சம்பளம் அசால்ட்டா வாங்குவாங்க  டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிக்காரங்க தர வேண்டிய  பாக்கித்தொகைகள் கொண்ட லிஸ்ட்க்கு டாப் என்று பெயர்.  15 நாட்கள் அல்லது 20 நாட்கள் லைன் பார்த்துட்டு வந்து கலெக்சனை ஒப்படைத்து ( கேஷ்/டிடி/செக்)  டாப் செக் பண்ணும்போது டோட்டல் அவுட்ஸ்டேண்டிங்கில் மினிமம் 20% ஆவது கலெக்சன் பண்ணி இருக்கனும் , இல்லைன்னா கண்ட படி கத்துவார். 

 20 நாட்கள் லைன் பார்த்துட்டு வந்து மீதி 10 நாட்களுக்கு கம்பெனிலயே இருந்து எந்த எந்த  கடைக்கு என்ன  என்ன ஆர்டர் போடனும் என லிஸ்ட் அவுட் எடுத்து பேல் போடுவதும் எக்ஸ்க்யூட்டிவ் வேலையே! அந்த எக்ஸ்க்யூட்டிவ்ஸ்  தங்கள் ஓவர் ட்யூ லிஸ்ட் எனபப்டும் டாப் பேப்பர்சுடன் அய்யா ரூமுக்குள் போகும்போது  ஜெகஜோதியா இருக்கும். அப்படியே குனிஞ்ச வாக்குலயே உடம்பு முன் பக்கம் பெண்ட் பண்ணி அவ்ளோ பணிவா போவாங்க அவரு திறமைசாலிகளை மதிப்பார். ஆர்டர் சரியா எடுக்கலை , கலெக்சன் நல்லா பண்ணலைன்னா டாப் பேப்பரை தூக்கி எறிவார். அதே நல்லாருந்தா கொஞ்சுவார். வெரிகுட் பாய்  அப்டினு மனம் விட்டு பாராட்டுவார்


 சின்னவர் அவருக்கு நேர் எதிர் . அவர் சிரிச்சே யாரும் பார்த்ததில்லை .  எல்லாரையும் மட்டம் தட்டுவார். யாரையும் மதிக்க மாட்டார். ஒரு ஆயுத பூஜை தினத்தன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது மறக்க முடியாதது. கம்பெனி கேஷியர்  ரொம்ப சாது, அப்பாவி , வயசு 60 இருக்கும். பணியாளர்களுக்கு சம்பளம் போட , பேங்க் போக வர அக்கவுண்ட்ஸ் டீலிங் எல்லாம் அவர் தான். பெரியவர் , சின்னவர் இருவரிடமும் சைன்  வாங்கனும்.அதுக்கு அவர் படும் பாடு சொல்லி மாளாது. பரிதாபமாக இருக்கும். அக்கவுண்ட்சில் ஒரு 20,000 ரூபாய் டேலி ஆகவில்லை . எல்லார் முன்பும் “ ஏண்டா டேய் , அதைக்கூட ஒழுங்கா கவனிக்க முடியாதா? இங்கே புடுங்கறக்காடா ஆஃபீஸ்க்கு வர்றீங்க?


 அந்தக்குரலைக்கேட்டதும்  கம்பெனியே ஸ்டன் ஆனது, எல்லோர் ,முன்பும் எவ்ளோ பெரிய அவமானம் ?  கேஷியர் கூனிக்குறுகிப்போனார். எதுவும் சொல்லாமல் தலை குனிந்திருந்தார்  இவ்ளோ அவமானப்பட்டு இப்படி ஒரு ஆளிடம் வேலை பார்க்கனுமா? ஏன் அடிமை மாதிரி இப்படி இருக்காரு? என  விசாரித்ததில் ஒரு முறை அக்கவுண்ட்டில் ஒரு லட்சம் ரூபாய் ஷார்ட்டேஜ். அவர் தான் கட்டி ஆகனும். அவர் பரம ஏழை. வேற வழி இல்லாம வெத்து பாண்ட் பேப்பர்ல சைன் பண்ணிக்குடுத்து மாசாமாசம் அவர் சம்பளத்துல  கொஞ்சம் கொஞச்மா பிடிச்ட்டு வர்றாங்களாம். அதனால தான் அவர் படும் அவமானங்களை எல்லாம் சகித்துக்கொண்டு அங்கேயே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கார்


கலெக்சன் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் பல டைம் பல இடங்கள் ல தப்பு பண்றதுண்டு. கலெக்சன் ஆன பணத்தை ரோலிங்ல விடறது, பணம் வசூல் ஆனதை ஃபுல்லா கட்டாம பகுதி தொகையை  எடுத்துட்டு கம்மியா கட்றது இதெல்லாம் நடக்கும். ஆனா மாசா ,மாசம் பார்ட்டிகளுக்கு பெண்டிங் தொகை லிஸ்ட் கூரியர் போகும்போது அவர்கள் தகவல் சொல்லிடுவாங்க. இன்ன தேதில இன்ன தொகை கட்டிட்டோம்  என. ரசீது ல ஃபிராடுத்தனம் பண்ணி டேக்கா கொடுத்த ஆளுங்களை அடி விளாசுவார் , பெல்ட்டால  அடிப்பார் . அவன் போலீஸ்க்கும் போக முடியாது, மீடியா கிட்டேயும் சொல்ல முடியாது . அடிமை மாதிரி பாண்ட் பேப்பரில் சைன் பண்ணி உழைச்சுட்டே இருக்கனும்


இப்படிப்பட்ட சின்னவர் பெண்கள் விஷயத்தில்   வீக். அரசல் புரசலா கம்பெனில பேசிக்குவாங்க  சின்னவருக்கு ஒரு பி ஏ  உண்டு. அவனுக்கு சம்பளமே 25,000 ரூபாய் தான் , ஆனா சமீபத்துல ஒரு பங்களா கட்டி கிரஹப்பிரவேசம் எல்லாம் பண்ணிட்டான் . எல்லாம்  சின்னவருக்கு மாமா வேலை பார்த்ததில் சேர்த்த தொகை மற்றும் கம்பெனியில் சில பல கணக்கு வழக்குகளில் , பர்ச்சேஷ் டிபார்ட்மெண்ட்டில்  கமிசன் வாங்கியது என கேள்வி . சின்னவர் ரூட் போடும் விதமே தனி . லைனுக்குப்போகும் எக்ஸ்க்யூட்டிவ்கள் 15 நாட்கள் , 20 நாட்கள் வெளி மாநிலத்தில் தங்கி இருக்க வேண்டி இருப்பதால் குடும்பத்தை விட்டுப்பிரிந்து இருக்க நேரிடும். அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்வதாக பேச்சு உண்டு


 இந்த விஷயம் சின்னவரின் மனைவிக்கு தெரிய வந்தது. வீட்டில் பெரிய களேபரம் வெடித்தது, சின்னவரின் மனைவியும் பெரிய இடத்துப்பெண் தான். மன்னன் விஜயசாந்தி மாதிரி  போல்டான கேரக்டர். அவர் வீட்டில் இருந்து கார் எடுத்துட்டு கம்பெனிக்கே வந்து எல்லார் முன்பும் மாமனாரை ( பெரியவரை மிரட்டி விட்டார். கையில் லைசென்ஸ் உள்ள துப்பாக்கியுடன் அவர் வந்ததும் அனைவரும் அரண்டு போனார்கள் . பெரியவ்ரின்  ரூமிற்குள்
பம்மிக்கொண்டே போனவங்களைப்பார்த்து பழக்கப்பட்டவங்க பத்ரகாளியாய் போய் தில்லாக மிரட்டியதைப்பார்த்து  மிரண்டனர். வீட்டிலேயே புருசனிடம் பேசித்தீர்க்காமல் கம்பெனிக்கு வந்தது , மிரட்டியது எல்லாமே அவரை ,  அவமானப்படுத்தவே என்று புரிந்தது


 தசரத சக்ரவர்த்திக்கு 60,000 மனைவிகள் எனக்கேள்வி. மன்னர்கள் காலத்தில் அந்தப்புரத்தில் பல அழகிகளோடு மன்னர் இருக்கும்போது , பிறகு 6 மாசம் 7 மாசம் என போருக்குப்போய்விடும்போது மகாராணிகள் என்ன செய்வார்கள்? எனற கேள்வி மன்னர்கள் மனதில் இருக்கும் தானே? பெரிய மனிதர்கள், அரசியல்  தலைவர்கள் அவங்கவங்க  சக்திக்கு தக்கபடி 3 சம்சாரம் 4 சமாச்சாரம் என வாழும்போது அவங்க டைம் டேபிள் படி  வாரத்துக்கு இரு நாட்கள் ஒரு சம்சாரம் வீட்டில் என ட்யூட்டி பார்க்கிறார் எனில் மீதி 5 நாட்கள் அவர் சம்சாரம் என்ன செய்யும்? என்ற கேள்வி , சந்தேகம் வருவது இயல்புதானே? அந்த சந்தேகம் சின்னவர் மனதில் ஒரு நாள் வந்தது


தன் கார் டிரைவர் சாவியை வீட்டில் தந்து விட்டுப்போகும்போது தன் மனைவியிடம் சிரித்துப்பேசுவதை பார்த்து விட்டார். தன் பணியாட்களை எல்லாம் ஆடு மாடு போல் கேவலமாக நடத்தும் சின்னவருக்கு அந்தக்காட்சி பெரிய அடியாக இருந்தது. மனைவியிடம் ஏதும் விசாரிக்கவில்லை. டிரைவரிடம் மூச்சுக்கூட விட வில்லை காரை திண்டல் நோக்கி விடச்சொன்னார்.  அந்த ஏரியாவுக்கு இதுவரை போனதே இல்லை , திண்டல் மலையில் முருகன் கோவில் உண்டு ஆனா  சாமிக்கும் சின்னவருக்கும் சம்பந்தமே இல்லை. டிரைவரின் மனதில் சந்தேகக்கேள்விகள்.  ஆனால் எதுவும் பேசாமல்  வண்டியை ஓட்டினான். திண்டல் தாண்டியதும் ரைட் சைடில் ஒரு கட் போகும் . அதில் திரும்பச்சொன்னார்.


 ஆள் அரவம் இல்லாத பகுதி வந்ததும் காரை நிறுத்தச்சொன்னார் சின்னவர். வண்டி நின்றதும் சின்னவர் தன் கையில் வைத்திருந்த மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கர்ச்சீஃபை டிரைவரின்  முகத்தில் அழுத்தினார், சில நொடிகள் போராட்டத்துக்குப்பின்  டிரைவர் மயக்கம் ஆனான். அங்கே ஒரு மரம் அறுப்பு மில் இருந்தது. லாக்டவுனால்  யாரும் இல்லை . ஓப்பன் பிளேஸ்  அங்கே டிரைவரை தூக்கிப்போய்  உடலைக்கிடத்தினார். சரக் சரக் என ரம்பத்தால் அறுத்தார். தலை தனியே வந்து விழுந்தது. அதை பத்திரமாக ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொண்டார் . ஜவுளிக்கடைல தர்றாங்களே அந்தக்கட்டைப்பை . , பக்கத்தில் இருந்த செங்கல் சூளையில் பாடியை போட்டு விட்டு  எரித்தார்.


 பின்  முகத்தில் மாஸ்க் கட்டிக்கொண்டு ஈரோடு பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டலுக்கு காரை விட்டார். ரூம் எடுத்தார்.  கட்டைப்பையுடன் கோட் சூட் உடன் வந்தவரை ரிசப்ஷனிஸ்ட் விசித்திரமாக பார்த்தாள் , ஆனால் கேள் வி ஏதும் கேட்காமல்  ரூம் கீ குடுத்தாள்: ரூமிற்குள்: சென்றதும் கதவை சாத்தி வந்து கட்டிலில் அமர்ந்தார். கட்டைப்பையில் இருந்து அந்த தலையை எடுத்து டீப்பாய் மீது வைத்தார். அதையே வெறித்துப்பார்த்தவர்  ரூம் பாய் குரல் கேட்டு எஸ் கம் இன் என்றார். உள்ளே வந்த சர்வர் கம் ரூம் பாய் காபியை அவரிடம்  தந்து அந்தத்தலையை அதிர்ச்சியாகப்பார்த்தான். சின்னவர் அவனை இளக்காரமாகப்பார்த்துக்கொண்டே  என்னப்பா பார்க்கறே?  சிகப்பு ரோஜாக்கள் சர்வர் மாதிரி  என்னை மிரட்டி பணம் பறிக்கலாம்னு பிளானா?


   நக்கலாகக்கேட்டவர் காபியை குடித்தார்.. பண பல,ம் ஆள் பலம் அரசியல் பலம் இருக்கறவன் யாருக்கும் , எப்பவும் எதுக்கும் பயப்பட வேண்டாம். ஏழை சொல் அம்பலம் ஏறாது. அப்படி ஏறுச்சுன்னா அதுக்குப்பின் உன் கால்கள் உன் வீட்டுப்படி ஏறாது   என்றவன் தன் நெஞ்சை ஏதோ அடைப்பது போல், இருக்கவே தண்ணி தண்ணி என்றார். இதுவரை பம்மியது மாதிரி இருந்த சர்வர் இப்போது  குரல் உயர்த்திப்பேசினான்


 “ சார். என்னை யாரு?னு தெரியுதா? உங்க கம்பெனில ஒர்க்  பண்ற  கேஷியர் மகன் . அநியாயமா அப்பா மேல திருட்டுப்பழி போட்டீங்க . ஆனா உண்மையை உங்க ,மனைவி சொல்லிட்டாங்க . அந்த ஷார்ட்டேஜ் ஆன பணம் கிடைச்சிடுச்சு . அதை சொன்னா அவரை பயமுறுத்த முடியாது , அடிமையா நடத்த முடியாதுனு மறைச்சுட்டீங்க . அவங்க போட்டுக்குடுத்த பிளான் தான் எல்லாம். டிரைவரா உங்க கிட்டே சேர்ந்தது மேஜிக் நிபுணர், உங்க மனைவியோட கிளாஸ் மேட். இப்போ நீங்க கொலை பண்ணதா நினைச்சது எல்லாம் கற்பனை. உங்களை தன் மேஜிக்கால அப்படி நம்ப வெச்சிருக்கான். வெறும் காலி கட்டப்பை அது.


 இப்ப நீங்க குடிச்சீங்களே காபி அதுல விஷம் கலந்திருக்கு. ஊரடங்கு முடிய எப்படியும் செப்டம்பர் ஆகிடும். போலீஸ் இந்தப்பக்கம் வர வாய்ப்பே இல்லை . உங்க டெட் பாடி அதுக்குள்ள அழுகிப்போய்டும் . நான் எஸ் ஆகிடுவேன். டிரைவரா நடிச்ச மேஜிக் நிபுணர்  இந்த ஹோட்டலுக்கு தான் நீங்க ரெகுலரா பொண்ணுங்களை கூட்டிட்டு வருவீங்கனு சொன்னார். நான் சர்வரா ரெடியா காத்திருந்தேன். குட் பை... 

Thursday, May 14, 2020

the weather man (2005) -சினிமா விமர்சனம்

the weather man (2005) -சினிமா விமர்சனம்

மிக எளிமையான , சாதாரணமான , எல்லா மொழிகளுக்கும் உகந்த ஒரு கதை. தொலைக்காட்சியில்  வெதர்மேனாகப்பணி புரிகிறார் ஹீரோ. அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கிறார். அவர்களது குழந்தைகள் இருவர்  அவர்களது அம்மாவுடன் இருக்கின்றன. அப்பப்ப அவங்களைப்பார்க்க வருவார் ஹீரோ , வெளில அழைச்ட்டுப்போவார் .


குழந்தைகளுடன் வசிக்கும் அவர் மனைவி இப்போ வேறு ஒரு பாய் ஃபிரண்ட் உடன் லிவ்விங் டுகெதர் மாதிரி ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.குழந்தைகளோடு நேரம் செலவழிக்கும் ஹீரோ வுக்கு ஏற்படும் பிரச்சனைகள் , மனைவியுடனான வாக்குவாதங்கள், பணியில் காணும் சில சிக்கல்கள் என மிக யதார்த்தமான ஒரு திரைக்கதை தான் இது


பர பரப்பான காட்சிகள் , அதிரடி சண்டை , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என  எதிர்பார்த்துப்போறவங்க ஏமாற்றம் அடைவாங்க  ஆனா  ஒரு ஃபீல் குட் காமெடி மெலோ டிராமா வகைப்படம் என்ற அளவில் இது ஒரு நல்ல படமே . .,

 தமிழில் இதுபோல கணவன் , மனைவி பிணக்குகள் கொண்ட படங்கள் நிறைய வந்திருக்கு , அவ்வை சண்முகி, நான் அடிமை இல்லை என சொல்லிட்டே போகலாம். இந்த மாதிரி கதைகள் ல ஹீரோ -ஹீரோயின் க்ளைமாக்ஸ் ல சேருவாங்களா? சேரமாட்டாங்களா? என்பதுதான்  க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டாக இருக்கும். ஆனா இந்தப்பட இயக்குநர் அதைப்பற்றி எல்லாம் கவலையே படம போற போக்குல  க்ளைமாக்ஸை  எடுத்திருக்கார் ., அதுதான் படத்தின் பலமும், பலவீனமும்

 ஹீரோவா நிக்கோலஸ் கேஜ் . மிக யதார்த்தமான இயல்பான நடிப்பு . பணி செய்யும் இடங்களில் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் காமெடி கலக்கல்ஸ்
நம்ம ஊர் நம்பியார்  பொது இடங்களில் ரசிகர்களை சந்தித்தால்  வித்தியாச்மான கேள்விகளை சந்திப்பாராம். நீங்க நிஜமாவே வில்லனா? கொடூரமானவரா? என கேட்பாங்களாம். அந்த மாதிரி ஹீரோ  பொது இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியா சொல்லி இருக்காங்க 


மகளுடன் ஹீரோ கழிக்கும் பொழுதுகளில் அவரது உடைகள் அவருக்குப்பொருத்தமாக இல்லை என உணர்வது , மகளுக்கு அதை உணர்த்துவது அனைத்தும் டச்சிங் 


 மகனை எல்லோருக்கும் தெரிந்த ஒருவரே   பாலியல் சீண்டல் புரிய முற்பட்ட்டதை உணர்ந்து  அவனை துவம்சம் செய்யும் சீன் கை தட்டலை அள்ளுது. அதுவரை எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாகவே வரும் ஹீரோ  மாணிக்கம் டூ மாணிக் பாட்ஷா ஆவதைக்கண்டு  மகன் பிரமிக்கும்  தருணம் குட் ஒன்


 மகன், மகள் முன்னால் தன் மனைவியிடம்  வாக்குவாதம் செய்யும் சூழலில்  ஹீரோவின் தர்மசங்கடம்   குட் பர்ஃபார்மென்ஸ். 

 ஹீரோவுக்கும் அவரது அப்பாவுக்குமான பாண்டிங்  ஹாலிவு ட்  படத்துக்கு புதுசு

 படம் நெடுக  தத்துவ வசனங்கள் அள்ளி இறைக்கப்பட்டிருக்கு 


 கதை ஹீரோவின் பார்வையிலேயே செல்வதால் ஹீரோயின் மேல் பரிதாபமோ அவர் இவருடன்  சேர்ந்தால் தேவலை என்ற எண்ணமோ ஏற்படவில்லை 


 நச் வசனங்கள் 


1    வாழ்க்கைல ஏதாவது ஒண்ணை அடையனும்னா ஒண்ணை விட்டுக்குடுக்கனும்


2   உலகத்துல கஷ்டமான பாதைன்னு ஒண்ணு இருந்தா நிச்சயம்   சரியான பாதைனு ஒண்ணு இருக்கும் 

3   எதுவும் ஈசியா கிடைக்காது , அப்படிக்கிடைச்சா அது நிலையா இருக்காது  (  இது ரஜினி படத்துல வரும்- முத்து-னு நினைக்கறேன்  )

4 அப்பா கிட்டே நல்ல பேர் எடுக்கனும்னு ஆசைப்பட்டா அவர் எதிரே வேற யாரையும் எக்காரணத்துக்காகவும் அடிக்கக்கூடாது . அதை மீறி அடிச்ட்டா அவன் மகாத்மாவே ஆனாலும் அப்பா கண்ணுக்கு வில்லனாதான் தெரிவான் 



5  வாழ்க்கையும்  வெதர் மாதிரி தான், எப்போ மாறும் அப்டினு யாராலும் கணிக்க முடியாது 

6  வாழ்க்கைல ஒருத்தன் தப்பான வழில போறான்னா அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல் தான் காரணம் , ஆனா உண்மைல அவனுக்கு மன நிம்மதியே என்றும் இருந்ததில்லை 


7 ஒரு மனுசனுக்கு சந்தோஷம் சிதைஞ்சு போச்சுன்னா  அவன் வன்முறையைக்கையில் எடுக்கிறான்

8   வாழ்க்கைல முடிவுங்கறதே கிடையாது , எல்லாமே ஆரம்பம் தான்

 சபாஷ்  டைரக்டர் 

1  ஹீரோவுக்கும், அப்பாவுக்குமான பந்தம் , அவர்களின் உரையாடல் மிக அழகு.அதே போல் ஹீரோவுக்கும் அவரது மகனுக்குமான சந்திப்புகள்  கவிதை 


2  வன்முறையை விரும்பாத அப்பா தன் பேரனை வன் கொடுமை செய்ய முயன்றவனை  தன் மகன் தாக்கியது கண்டு பூரிப்பது டச்சிங்


3  தனக்கு பிரமோஷன் கிடைத்ததும் அதை தன் மனைவியிடம் தெரிவிக்க வரும் ஹீரோ அவள் அதைக்கண்டு கொள்ளாதது , இன்க்ரீமெண்ட் பற்றி அக்கறை கொள்ளாதது கண்டு கனம் வெதும்புவது கவிதை 



4  யதார்த்தமான க்ளைமாக்ஸ் 


Saturday, May 09, 2020

கேரளா - கொரோனா - அப்டேட்ஸ்

இந்தியாவின் நெ 1  இயற்கைப்பிரதேசமான கேரளா வில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் = 506 பேர், குணமானவர்கள் = 485 பேர் , இறப்பு 4 பேர் , இன்னும் குணம் ஆகாதவர்கள்=17 பேர்

மொத்தமாவே 17 பேஷண்ட்ஸ் மட்டுமே இருந்தும் இதுவரை கள்ளுக்கடைகள் திறக்கப்படலை 

ஹெல்த் மினிஸ்டர் திருமதி சைலஜா ,மிகச்சிறப்பாக இங்கே பணி ஆற்றினார்.  கொரோனா பேஷண்ட்  பயண விபரங்கள் ட்ரேக் செய்யப்பட்டு தொடர்பில் இருந்தோர் எல்லாம்  தனிமைப்படுத்தப்பட்டனர்

 தப்பி ஓடிய  இரு கொரோனா நோயாளிகள் பிடிக்கப்பட்டனர்.

மிக பாதுகாப்பான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள்  பச்சை மண்டலம் ஆக ஒரு மாதம் இருந்தது. திடீர் என  அங்கேயும் பேஷண்ட்கள் உருவாகினர்.

 அவர்கள் மிகச்சிறப்பாக கண்டறியபட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்

 மே 17 க்குள்  ஜீரோ கேஸ் நிலைக்கு வந்துடும்.


 இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டதும் கேரளா தான  முதன் முதலாக அதில் இருந்து மீளப்போவதும் கேரளாதான்

 நான் கோட்டயம் மாவட்டத்தில் இப்போ இருக்கேன்


 2018 ல் ஏற்பட்டது போல் இருமடங்கு அதிக அளவு வெள்ளப்போக்கு ஆகஸ்ட் மாசம் 2020 வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 கேரளாவில் இருக்கும் தமிழர்கள் நீச்சல் தெரியவில்லை எனில் இப்போது கற்றுக்கொள்வது எப்போதும் நல்லது

Wednesday, May 06, 2020

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு - பாகம் 2 2/5/2020

குமுதம் ரிப்போர்ட்டர்  வாரம் இருமுறை இதழ்  புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வருகிறது, சில முக்கிய நகரங்களான சென்னை , கோவை , ஈரோடு  மாவட்டங்களில் செவ்வாய் இரவு, வெள்ளி இரவே வந்து விடுகிறது/ அதில் ஆன் லைன் ஆப்பு என்ற பகுதி வரும். ( இப்ப வர்றதில்லை) அன்றாட செய்திகள் , அரசியல் தலைவர்கள் அறிக்கை இவ்ற்றை கலாய்த்து கமெண்ட் போடுவது பரிசீலிக்கப்படும். நிபந்தனைகள் ஜாதி , மத ரீதியான விமர்சனம் தவிர்க்கனும் . உருவ கேலிகள் , நிற பேதம் , தனிநபர் தாக்குதல் , தனிநபர் குடும்ப நபர்களைப்பற்றிய தாக்குதல் தவிர்க்கனும்.

  ட்விட்டர் , ஃபேஸ் புக் போன்றவற்றில் இருந்து அவங்க்ளே எடுத்து பிரசுரிப்பார்கள். த இந்து தமிழ் திசை  நாளிதழில் பஞ்ச்சோந்தி பராக் என்ற பெயரில் தினசரி 4 பஞ்ச்கள் ( ஒரு முதன்மை பஞ்ச் , 3  உதிரி பஞ்ச்கள் ., ஒரு கார்ட்டூன் என வரும். ஒரு பஞ்ச்க்கு 100 ரூபா பரிசு , கார்ட்டூன்க்கு ரூ 250 பரிசு

1  காவிரி நதி நீர் விவகாரம் :விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் -அமைச்சர் டி.ஜெயக்குமார் 

நானும் விவசாயக்குடும்பம்தான்னு முதல்வர் சொன்னாரு, அப்போ அவரோட குடும்ப நலன்கள் பாதுகாக்கப்படுமோ?

=========================================================
சமையல் எரிவாயு விலை 192 ரூபாய் குறைந்து 569ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அப்டியே அந்த பெட்ரோல், டீசல் விலையையும் குறைச்சா தேவலை

==================================================
மகாராஷ்ட்ரா சட்ட மேலவைக்கு மே -21ல் தேர்தல்!


 ஓட்டு போட மட்டும் வெளில வரலாமா?

=================================================


கொரோனாவுக்கு ஊரடங்கை பிரகனப்படுத்தி நாட்டை முடக்கி போடுவது மட்டுமே பிரதமரின் செயலாக உள்ளது -மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன்


கொரோனாவை முடக்கத்தானே  நாட்டை முடக்கறாங்க?நீங்க தான் வேற ஐடியா குடுங்களேன்?


============
5
தமிழகத்தில் கரோனா தொற்றில் சென்னை முதலிடம்.


ஊரடங்கா? போய்யா வெண்ணை என அலட்சியமா இருந்ததால் சென்னைக்கு வந்த வினை

===============
மே 4 முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல் 
.
ஊரடங்கு கடுமையா இருக்கும்போதே  இவ்ளோ பாதிப்பு, தளர்வு பண்ணா என்ன ஆகுமோ?

============================================ 
7
சென்னையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய காவல் ஆய்வாளர்


காக்கிச்சட்டைக்குள் ஒரு மனிதநேயம்

=============================================

  பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா உறுதி
  
விஐபி -னு ஒரு பயம் கொரோனாவுக்குக்கிடையாது போல
==============================================
9

தனியார் பள்ளிகளில் கரோனா சிகிச்சை அமைக்க எதிர்ப்பு 



அரசுப்பள்ளின்னா யாரும் எதிர்க்கறதில்லை
====================================================
10  

வங்கித் தலைவர்களுடன் ஆர்பிஐ தலைவர் ஆலோசனை 

மக்களின் சேமிப்புப்பணத்துக்கு வட்டியைக்குறைப்பாங்களோ?

===============================================
11

தொழிலாளர் வர்க்கத்துக்கு துணை நிற்போம் :மம்தா 

கம்யூனிஸ்ட் கூட்டணி அமைப்பார் போல

=============
12
 போலீஸ் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வச்திகளும், ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் வழங்க வேண்டும்.- அன்புமணி

அவங்களுக்கு தொப்பையும் இருக்கனுமா?

================
13
,: ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை, அரசு எடுக்கும் போது, மக்களுக்கு குழப்பம் ஏற்படாதபடி, முன்கூட்டியே, தெளிவான நடைமுறைகளோடு அறிவிக்க வேண்டும்-தினகரன்

ஜனங்க தெளிவா குழம்பிடுவாங்க, கடை வீதியில் கூட்டம் கூடி அலம்பிடுவாங்க 

================ 
14
 கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டது; இனி ஆபத்து அதிகமாகும்.-விஷ்ணுபிரசாத் 

சென்னை ஸ்கோர் பாத்தா ஸ்கோப் இல்ல

==============
15
 கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டதனால் தான் அரசு பள்ளிகள் மட்டும் போதாது என்று, தனியார் பள்ளிகளையும், தயாராக வைத்திருக்க சொல்லி, அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது--விஷ்ணுபிரசாத் 

 அரசு என்ன செஞ்சாலும் அதுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கறது

==================
   16


 'ரேபிட் டெஸ்ட்'  கருவியின் விலை, 245 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. - காங்கிரஸ் தலைவர், அழகிரி

இரட்டை இலை ஆட்சி என்பதால் இரு மடங்கு கூடுதல் விலை போல

===============
17

விவசாயிகள் நலனுக்காக, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தாங்க முடியாத\ ஸ்டாலின், துரைமுருகன், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.'-

 அமைச்சர் ஜெயகுமார்:


தேவையான குழப்பத்தைத்தான் ஏற்படுத்தறோம், அதாவது எதிர்க்கட்சிக்குத்தேவையான....

==================
18
,  போஸ்கோ, ஹூண்டாய் ஆகிய பன்னாட்டு பெரு நிறுவனங்கள், இந்தியாவிற்கு இடம் மாறும் பட்சத்தில், துாத்துக்குடியில், அந்நிறுவனங்களை அமைக்க வேண்டும்.-கனிமொழி:

ஸ்டெர்லைட் ஆலை மாதிரி ஆகிடுமோ?னு பயப்படமாட்டாங்களா?

எதுக்கு? நீங்க எதிர்த்துப்போராடவா? 


================
19

என் மீது,சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய, கவர்னர் கிரண் பேடி முயற்சித்து வருகிறார்,'' = அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்  


உலகமே கொரோனாவை எதிர்த்துப்போராடிட்டு இருக்கு, புதுச்சேரில மட்டும் கவர்னரை எதிர்த்துப்போராடிட்டு இருக்காங்க 


டீச்சர், டீச்சர் கிரண் பேடி அந்த பையனோட பென்சில், ரப்பர், பிடுங்கிட்டான் டீச்சர்

===========
20


 பைலட் தப்பா புரிஞ்சுக்கிட்டு வேகமா ஓட்டிடப்போறாரு 

=================

============= 
21
''மக்கள் நம்பிக்கையை இழந்த, ஸ்டாலின், தான் இருப்பதை காட்டிக் கொள்ள, முதல்வர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் -அமைச்சர் உதயகுமார் 

 மக்கள் நம்பிக்கை எப்போ அவர் மேல இருந்துச்சு? இப்போ இழக்க?


============== &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
22
மத்திய அரசு, தமிழகத்தின் முடிவுக்கேற்ப புதுவையில் ஊரடங்கு தளர்த்தப்படும்!- நாராயணசாமி.

அப்போ இவரா சொந்தமா யோசிச்சு எந்த முடிவும் எடுக்க மாட்டாரா?


===============
23
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிற மாநிலங்களைவிட முன்மாதிரியாக தமிழக முதல்வர் செயல்படுகிறார்!- அமைச்சர் உதயகுமார். 




அதிமுக அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் முன்மாதிரியாக செயல்படுகிறார் அமைச்சர் உதயகுமார். 


===============
24
ஆல்கஹால் நிறைந்த சானிட்டைஸரைக் கொண்டு கைகழுவுவது கரோனா வைரஸை நீக்குவது போல, ஆல்கஹால் நிறைந்த மதுவைக் குடிப்பது தொண்டையில் உள்ள கரோனா வைரஸை நீக்கும்!- ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ பரத் சிங்.


ட்ரம்ப்புக்கே அண்ணனா இருப்பார் போல


================

25 சுமார் 40 விழுக்காடு உணவகங்களை நிரந்தரமாக திறக்க முடியாத சூழல்: இந்திய உணவகங்கள் சங்கம்!


அப்போ அம்மா உணவகங்கள் பிராஞ்ச் அதிகப்படுத்தனும்?


====================

26 புதுச்சேரியில் ரசீதை வாயில் கடித்து மாஸ்க் என ஏமாற்ற முயன்றவருக்கு அபராதம்...!

போலீஸ் உடனே 100 ரூபாய்க்கு ரசீது கிழிச்சுக்குடுத்திருக்குமே?

சயிண்ட்டிஸ்ட்ங்களுக்கே தோணாத ஐடியாக்கள் நம்மாளுங்களுக்குத்தோணுது

=================


27   கோயம்பேட்டில் இருந்து லாரியில் சொந்த ஊர் சென்ற வியாபாரிகள் பலருக்கு கொரோனா தொற்று...!

சொந்த ஊருக்குப்போனா பாதுகாப்புனு நினைச்சிருப்பாங்க, நொந்த நிலை தான் மிச்சம்


================
28 அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர்
அப்போ இனி கம்மியா டெஸ்ட் பண்ணுனா க்ரீன் அல்லது ஆரஞ்ச் ஜோன்ல இருக்கலாமா?

==============