Thursday, January 14, 2016

கதகளி -சினிமா விமர்சனம்


ஈரோட்ல  தம்பான்னு ஒரு ரவுடி இருந்தான். சென்னைல ஒரு அமைச்சரை வாக்கிங் போகும்போது போட்டுத்தள்ளிட்டாங்க. இந்த 2 சம்பவத்தையும் கோர்த்து  ஒரு ரவுடியை க்ரியேட் பண்ணி இருக்காங்க, அவன் தான் வில்லன்,

கடலூர் மீனவர்கள் , சென்னை மீனவர்கள் 2 க்ரூப்க்கும்  எல்லைத்தகறாரு நடக்குது. இதுல  ரவுடியிசம்  தலை தூக்குது. இது ஒரு ட்ராக் .


ஹீரோவோட அண்ணன்  வில்லன் தம்பா கிட்டே வேலை செஞ்சவன். தனியா தொழில் பண்ணலாம்னு வெளில வர்றார்.அது வில்லனுக்குப்பிடிக்கலை. இது ஒரு ட்ராக்


 குள்ள நரிக்கூட்டம் படத்துல  வர்ற மாதிரி  ஹீரோ  ஒரு  ராங்க் கால் மூலம் ஹீரோயினை கரெக்ட் பண்றாரு . அவங்க லவ் எபிசோடு 40  நிமிசம்  ஓடுது.


 அந்த  வில்லன் ரவுடி  யாராலோ கொலை செய்யப்படறார். பலர் மேல சந்தேகம். அந்த ரவுடியால பாதிக்கபட்டவங்க பலர் . அதுல  ஹீரோவும் ஒருவர். 

ஹீரோ க்கு 4 நாள் ல கல்யாணம்.  இப்போ இந்த கேஸ்  விஷயமா  போலீஸ்  சென்னைல  இருக்கும்  ஹீரோவை கடலூர் வரச்சொல்லுது. அந்த ரவுடியோட ஆளுங்க  ஹீரோவை போட்டுத்தள்ள துடிக்கறாங்க

 என்ன ஆச்சு?  யார் கொலைகாரன்? என்பதே மிச்ச மீதிக்கதை ஹீரோவா புரட்சித்தளபதி  விஷால் .திமிரு படத்தில் வந்தது போல் கண்ணாடி போட்ட கெட்டப். ஹேர் ஸ்டைலில் வித்யாசம் காட்டி  இருக்கார். படம் முழுக்க மறை முகமா நம்ம சித்தப்பா சரத் சார்க்கு பஞ்ச் கொடுக்கார். வரலட்சுமிக்கு ஹிண்ட்ஸ் கொடுக்கறார். 


ஹீரோயினா காத்ரீன் தர்சா. ஹோம்லி லுக்குன்னும்  சொல்லிட  முடியாது , கிளாமர் லுக்குன்னும்  சொல்லிட முடியாது, மீடியம்  ஃபிகர்னு வெச்சுக்கலாம்.

நடிப்புக்கு எல்லாம் அதிக வேலை இல்லை

 காமெடியனா கருணாஸ். ரொம்ப வயசாகிடுச்.  


பாடல் காட்சிகள்  நல்லா எடுத்திருக்காங்க. பாண்டிய நாடு படம் போலவே  திரைக்கதையில்  ஒரு டெம்போ மெயிண்ட்டெயின் பண்றாங்க . குட் .

 ஆனா ரவுடியிசம்  , ஹீரோ ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு வருவது இந்த ஒரே ஃபார்முலாவை  இன்னும் எத்தனை நாளைக்கு விஷால்  யூஸ் பண்ணுவாரோ? சலிப்பு 


மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஹீரோ ஓப்பனிங் சீன் டயலாக் =,நான் ஊருக்குள்ளே வந்துட்டேன் "

பாண்டிராஜ் 10 மாசமா யோசிச்சு எழுதுன பஞ்ச்சாம்


2 நல்லது பண்ணனும்னு பண்றீங்களா? 4 பேருக்கு சொல்லனும்னு பன்றீங்களா? # க


3 உன்னைக்கண்டாலே எனக்குப்பிடிக்கலை.

25 வருசமா வளர்த்த எங்க அம்மா அப்பாவுக்கே என்னைப்பிடிக்காது.உங்களுக்கு எப்டி என்னைப்பிடிக்கும்?


# க # உலகத்துலயே சுலபமானது எது தெரியுமா?
லவ் பண்றது.

உலகத்துலயே கஷ்டமானது எது தெரியுமா?

லவ் பன்றது5 வில்லன் .பஞ்ச் = எவ்ளவ் தான் ஊர்க்"குருவி" உயர உயரப்பறந்தாலும் அது பருந்தாகாது.இங்கே நான் தான் பருந்து # க . எதுனா உள்குத்தா?


6 பாடி கடலூர்.பாடி லேங்க்வேஜ் கலிபோர்னியாவா?டேய்.- ஹீரோயின் டூ ஹீரோ # க


7 அவன் எஸ் ஆனா நீ மிஸ் ஆகிடுவே @ க

8  உண்மைக்குப்பயப்படறவன் வேற ஒருத்தருக்கும் பயப்படமாட்டான் # கதகளி அப்ளாஸ் டயலாக்
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

கேரள கதகளி போஸ்டர்களில் விஷால் ,த ரியல் ஆக்சன் ஹீரோன்னு விளம்பரம்.அப்போ மத்தவங்க எல்லாம் டூப்ளிகெட்டா?


2 கதகளி 125 நிமிடம் தான்.சின்னப்படம்


3 ஓப்பனிங் லயே சுறா எபக்ட்.கடல் பிரதேசத்தைக்காட்றாங்க. அய்யய்யோ.ஹீரோ கடல் கண்ணன் போல் பீறிட்டு வந்துடுவாரோ?


4 ஹீரோயின் பேரு கேத்"ரின்" தெர்சா.தங்கச்சி பேரு கேத்"சர்f" சரசாவா?


5 ஹீரோ ஓப்பனிங் சாங் ல எல்லாமே என் கிட்டே இருக்கு ங்கறார்.சித்தப்பாக்கு மெசேஜ். வரலட்சுமிக்கு மசாஜ்

6 ஹீரோயின் பேரு மீனு குட்டியாம்.ஹீரோயின் அம்மா மீனம்மா வா?சொல்லவே இல்ல டீச்சரு # கதகளிஇயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 ஆக்சன் காட்சிகள்  அதகளம், ஸ்டண்ட்  மாஸ்டர்  கலக்கிட்டார். தேவை அற்ற சண்டைக்காட்சிகள் எதுவும் இல்லை. ஹீரோ கதகளி ஃபைட் போடும்போது பின்னணி  பிஜிஎம் பக்கா


2  வில்லன் ஆட்களை அடிச்சுத்துவைச்சு செல்ஃபி எடுத்து  வில்லன் ஃபேஸ்புக்கில் அப்டேட்டுவது  செம

3  போலீஸ் ஆஃபீசராக வருபவர்  பாடிலேங்குவேஜ் , நடிப்பு  எல்லாம்  கன கச்சிதம்.


இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  செல் பில்லில்  செல்போன் நெம்பர் ஓனர் அட்ரஸ் வராது. ஹீரோ ஹீரோயின் அட்ரஸ் கண்டுபிடிக்க  தகிடுதித்தம் பண்ணி  டீலர்ட்ட அட்ரசோட செல் பில் வாங்கறது நம்பும்படி இல்லை. அப்டி அட்ரஸ் தரனும்னா ஐ டி ப்ரூஃப் கேட்பாங்க

2  போலீஸ்க்கு யார் எவ்ள்வ் மாமூல் கொடுத்தாலும் அதை 4 பேர் முன்னால சொல்லிக்காட்டிட்டு இருக்க மாட்டாங்க. போலீஸ் அதுக்கு அனுமதிக்காது. இதுல வில்லன் அடியாள் ஸ்டேஷனுக்கே வந்து இன்ஸ்பெக்டர்ட்ட  கை நீட்டி  காசு வாங்கற இல்ல?னு கத்தறார். சாத்தியமே  இல்ல


3  ஹீரோவோட அண்ணன் 2 லட்சம் ரூபா அவசர உதவிக்குக்கேட்கறார். ஹீரோ எதுக்கு?ன்னு கேட்டப்போ மென்னு முழுங்கறார். ஏதோ சஸ்பென்ஸ் சின் அப்டினு நினைச்சா  புஸ். யாரோ ஒரு பொண்ணுக்கு ஆபரேசன்  செலவுக்குன்னு ஃபிளாஸ்பேக்ல  சொல்றார். இதை அப்பவே  சொல்லி இருக்கலாமே? வில்லன் தம்பாவைப்போட்டுத்தள்ள கூலிப்படைக்கு கூலி தரவோன்னு டவுட் வர வைக்கவா?  யாருக்கும் அப்டி ஒரு டவுட் வர்ல

4  ஹீரோயின்  ஹீரோவைத்தேடி  கடலூர் வருவது  போலீஸ் அவரைப்பிடித்து வைப்பது  எல்லாம் ட்ராமிடிக்


5  லேடி கான்ஸ்டபிள் இல்லாத  போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோயினை  இன்ஸ்பெக்டர் லாக்கப்பில் பிணையக்கைதியாய் வைப்பது எப்படி? சட்டப்படி அதுக்கு இடம் இல்லையே?
சி  பி  கமெண்ட்- கதகளி - மாமூல் ஆக்சன் மசாலா - ரவுடியிசம், சேசிங்க் ,பாண்டிய நாடு க்குக்கீழே,ஆம்பள க்கு மேலே- விகடன் மார்க் - 41 , ரேட்டிங் = 2.5 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே ரேட்டிங்
-  2.5 / 5


கேரளா திருவனந்தபுரம் அஜந்தாவில் படம் பார்த்தேன். 1200 பேர்  சீட் கெபாசிட்டி தியேட்டர்ல 280 பேர் இருந்தாங்க .

0 comments: