Friday, January 29, 2016

குண்டான ஃபிகரைக்கட்டிப்பிடிக்கும்போது

1  நீண்டநாள் பழகியவர்களிடம் உதவிகேட்ககூச்சப்படுங்கள்
அறிமுகமே இல்லாதவரிடம் உதவிகேட்க பயப்படுங்கள்
தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் நிலைப்படுங்கள்


=================
2  பர்லாங்க் தூரம் வாக்கிங்க் போய்ட்டு வந்து  1 கிலோ மைதா மாவு பலகாரம், கேக், பப்ஸ்  சாப்ட்டு அதை ஃபேஸ்புக்கிலும் அப்டேட்டுவான் நெட் தமிழன்


=================

ஆடம்பரத்தேவைக்கு பண உதவி கேட்பவர் மதிப்பு பாதாளம் வரை இறங்கும்


===============

ஆபத்துக்காலத்தில் ஒருவருக்கு உதவியதை 4 பேர் முன்பு சொல்லிக்காட்டுவது உதவி செய்தவருக்கு நீங்கள் செய்யும் துரோகமே===========5 எப்போதாவது எந்த சூழ்நிலையிலாவது மற்றவர் முன் அவமானப்பட வேண்டி வரும் என்பது தெரிந்தால் அந்தச்செயலை ஒரு போதும் செய்யாதீர்
============6 பட்டுச்சேலை எந்தெந்த ஊரில் நெய்கிறார்கள் ?எங்கே விலை கம்மியா கிடைக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதும் பட்டறிவு கேட்டகிரியில் வரும்
==============
7 மீனம்மா கயல் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சா ஒரு பயலும் அங்கே சீட்டு போட மாட்டான்.அடிக்கடி டீ ஆக்டிவேட் பண்ணிட்டுப்போய்டும்னு பயந்துக்குவான்

\\===========8 யார் இது? என்னை ஏன் ப்ளாக் பண்ணிருக்காரு.நா இந்த மொகரகூட பேசுனதே இல்லையே!!

அதான் காரணம் மிஸ்! டி எம் அனுப்பி மாமாங்கம் ஆகியும் ரிப்ளை இல்ல

==============

9 டாக்டர்!ஏசி போட்ருந்தா தலைவலிக்குது.!
லிப்ட்ல போனா தலை சுத்துது.!

ஜன்னல் திறந்து இயற்கைக்காத்து வாங்குங்க, மாடிப்படியில் நடந்து போங்க


===================


10 ரோஜாவுக்குக்காவலாக ஆர் கே செல்வமணி இருக்காரே என வருத்தப்படாமல்  RKS  பாதுகாப்பில்  ரோஜா இருக்கார் என பாசிட்டாவாக நினையுங்கள்


================


11 தாரை தப்பட்டைல  விசா இல்லாம எப்டி ஃபாரீன்ல இருந்தீங்க?

வரலட்சுமி = விசா இல்லாட்டி என்ன? “விஷா”ல் இருந்தாரில்ல?


==================

12  வீட்ல பார்க்கற பொண்ணை கல்யாணம்பண்ணிக்கப்போறேன்
 ஓஹோ, எங்கே அவங்க ?
 அம்மா நயன்தாரா வீட்டுக்கும், அப்பா ஹன்சிகா வீட்டுக்கும் போய் இருக்காங்க


====================


13 டியர், முதல் இரவுல 2 குயர் நோட் கொண்டு வந்து இருக்கியே? என்ன  மொய் நோட்டா?


இல்லைங்க, ஃபேஸ்புக்ல எனக்குக்கிடைத்த நல்ல நட்புக்கள் லிஸ்ட்


===============


14 சித்ரம் ட்வீட்ஸ் வாயில் விரல் வைக்கும் டிபி வைக்கும்னு அன்றே தெரிந்துதான் பெரியவர்கள் சொன்னார்கள் சித்திரமும் கைப்பழக்கம் என்று


===================

15 வீட்டின் அருகாமையில் பள்ளி வாசல் இருப்போர்க்கு அதிகாலை 5 மணி.அலாரம் அவசியமில்லை


=============

16 20 நாட்களுக்குள் கரைவது போன்ற மார்க்கெட்டிங் டெக்னிக்குடன் கம்பெனி தயாரித்தாலும் சோப்பை ரெண்டா கட் பண்ணி 40 நாட்களுக்கு உபயோகிப்பான் தமிழன்


==================

17 கூந்தலுக்கு ஷாம்பு, சோப்பு தவிர்த்து
சிகைக்காய், அரப்பு  தேய்த்து
தலைக்குக்குளிப்பது சிறப்பு


===============

18 ஃபிகர் வீட்டின் எதிரே டீக்கடை ஆரம்பித்தால் வர்றவன் போறவன் எல்லாம் இலவச தரிசனம் தினம் செஞ்சுட்டுபோய்டமாட்டானா?# ரஜினிமுருகன் ராங்க் ஃபார்முலா


=======================


19 குண்டான ஃபிகரைக்கட்டிப்பிடிக்கும்போது ஃபிகரோட தொப்பை(யும்) இடிக்குமேன்னு கவலைப்படறவந்தான் ஓவர் முன் ஜாக்கிரதை முன்சாமி


================


20 சர்வர் சுந்தரம் படம் பார்த்துட்டு இருக்கும்போது நெட் கட் ஆனா அதை சர்வர் எரர்னு சொல்லலாம்


=============================

0 comments: