Monday, January 11, 2016

டி.ராஜேந்தர் வீட்டில் வெடிகுண்டு !!!!!!!!!!!!!!!!

தேர்தலில்

காங்கிரஸ் தனித்து
போட்டியிடவே
விரும்புகிறது#EVKS # தனி ஒருவன் சினிமாவில் ஜெயிப்பான்.அரசியலில் தோற்பார்


===========

2 மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் 1096Km சீரமைக்கப்பட்டுள்ளது-ஜெ

#,கூட்டுத்தொகை 7 வருது.ஆட்சிக்கு ஏழரை தான் ( 1+0+9+6 = 16= 1+6= 7)

===========


3 தரச்சான்று பெற்ற அம்மா சீட்ஸ்விதைகள் விற்பனை ஜெ தொடங்கி வைத்தார் # விதைகள்னு தமிழ்ல போடுங்க, சீட்ஸ்னா எலக்சன் சீட்ஸ்னு நினைச்சுக்குவாங்க


=================

மின்சார கொள்முதலில் தொடரும் முறைகேடு: ராமதாஸ் கண்டனம் # ஒரு தடவை செஞ்சா ஷாக்கிங் நியூஸ், அடிக்கடி செஞ்சா?


================

ஆங்கில புத்தாண்டையொட்டி கூடுதல் மது விற்பனைக்கு இலக்கு இல்லை: அரசின் ‘திடீர்’ மனமாற்றம் # அவங்க டார்கெட் இனி அடுத்த  எலக்சன் பத்திதான்


==================


ஜெவுக்காக மட்டும் உடனடி சாலை வசதி செய்வதா?- விஜயகாந்த்  # அப்டி சாலை வசதி செய்யலைன்னா ஹெலிகாப்டர்ல போவாங்க, நம்ம வரிப்பணம்தான் வீண் ஆகும்


================


அனைத்து வீடுகளுக்கும் 3 ஆண்டுக்குள் சமையல் காஸ் இணைப்பு: மத்திய அரசு அறிவிப்பு  எலக்‌ஷன் வர்ற டைம்க்குள்ள, தொலைநோக்கு சிந்தனை


===================


சர்ச்சை பேட்டிகள்- துணை கொள்கை பரப்பு செயலர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் டிஸ்மிஸ்- ஜெ. அதிரடி!  # இன்னோவா, இனி இன் ”நோ” வா?


=================

எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காமல் இருக்குமா? -நாஞ்சில் சம்பத் # அதனாலதான் யானையோட எண்ணிக்கை எறும்பை விட கம்மியா இருக்கு


===============


10 சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது ?- நாஞ்சில் சம்பத் # கல்யாணத்தை தள்ளிப்போடலாமே?ஒருத்தன் சோகமா இருக்கும்போது சுகம் எதுக்கு===================


11 "அதிமுக பொதுக்குழு ஆடம்பரமாக நடத்தப்பட்டதில் தவறு இல்லை - நாஞ்சில் சம்பத் # இப்போ கட்சியை விட்டு நீக்கப்பட்டதிலும் தவறு இல்லை====================


12 இந்த 14 வருடத்தில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்  ,# அப்போ 14 வருசத்துக்கு முன்பு யாரு? விடமாட்டோமில்ல?


==================


13 தமிழகவெள்ள பாதிப்புகாக அதிமுக ஆடம்பரைத்தை குறைக்காது - நாஞ்சில் சம்பத். மேலான உடன்பிறப்பே!சேம் சைடு கோலுக்கு நன்றி- கலைஞர்===================

14  எங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிக வை கருணாநிதி அழைப்பது பிறர் மனைவியை அழைப்பது போல பண்பாடற்ற செயல் -Hராஜா # இது மட்டும் ரொம்ப பண்பாடா?


====================

15 டி.ராஜேந்தர் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததா?... போன் தகவலால் பரபரப்பு #,அவரோட புதுப்படத்துக்கு ட்ரம்ஸ்.வாசிச்ட்டு இருந்தாராம்."

===============

16 சட்டசபை தேர்தலில் மக்கள் அதிமுக, திமுகவை அப்புறப்படுத்துவார்கள்: ராமதாஸ் # பழைய கூட்டாளிங்க கூட்டணிக்கு குட்பை சொல்லிட்டா குப்பை ஆகிடுமா?

==================

17 செய்வீர்களா என்று கேட்ட ஜெ.வை பார்த்து செய்தீர்களா, செய்தீர்களா என கேளுங்கள் மக்களே: கருணாநிதி # லாக்கப்ல தள்ளி நல்லா வெச்சு செஞ்சுருவாங்களே

=================

18 தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்: வைகோ # மெயின் கட்சிக்கே பாடம் னா உதிரிக்கட்சிங்களுக்கு ?சூடம் காட்டிடுவாங்களா?

=============

19 கூட்டணி கட்சி அலுவலகங்களுக்கு'விசிட்' போக கருணாநிதி திட்டம் # தேர்தலில் ஜெயிக்க இது ஒரு விசிட் டிங் கார்டா உதவும்னு தலைவர் நினைக்கறார் போல

===============

20 வெள்ளத்தால் சேதமடைந்த எம்ஜிஆர் வீட்டை சீரமைக்க ஜெ நினைக்கவில்லை-கருணாநிதி # தேர்தல் நேரம் நெருங்கிட்டா எம்ஜிஆர் மேல பாசம்  பொங்கி வருமே?


===================

0 comments: