Thursday, January 14, 2016

தாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்

ஒரு சிறந்த படைப்பாளியின் வீழ்ச்சி  எப்போது ஆரம்பிக்கிறது? தான் படைக்கும் எல்லாப்படைப்பும் உயர்ந்ததே என தன்னைத்தானே உயர்வாக எண்ணும்போதும் , தான் என்ன படைத்தாலும் மக்கள் அதைக்கொண்டாடுவார்கள் என உயர்வு நவிற்சியாய் எண்ணும்போதும்.

சேதுவில் சிகரம் தொட்டு  பிதா மகனில் தன்னை நிலை நிறுத்தி , நந்தா வில் உருக வைத்து  நான் கடவுள் படத்தில் கண் கலங்க வைத்த , பரதேசியில் பதை பதைக்க வைத்த இயக்குநர் பாலா வின் சறுக்கல் படம் இது

சன்யாசி கரகாட்டக்குழு வெச்சிருக்கார்  ஹீரோ. அவரோட குழுவில் கரகாட்டக்காரியா இருக்கும் சூறாவளி ( ஹீரோயின் பேரே சூறாவளிதான்) ஹீரோவை சின்சியரா லவ்வுது. ஹீரோவும் தான்.ஆனா அவர் வெளிப்படையா தன் அன்பைக்காட்டிகலை. பொதுவாவே ஆம்பளைங்களுக்கு அன்பை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியாது.ஆனா சுயநலம் அற்ற அன்புக்கு அடையாளமே ஆண்கள் தான்.


ஒரு கவர்மெண்ட் ஆஃபீசர் ஹீரோயினைப்பொண்ணுக்கேட்டு வர்றார். ஹீரோயின் அம்மாவும் ஹீரோ கிட்டே நைச்சியமாப்பேசி சம்மதம் வாங்கிடுது. ஆனா ஹீரோயின் சம்மதிக்கலை. வலுக்கட்டாயமா ஹீரோயினுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடறாங்க ,  முதல் இரவு அன்னைக்கு தான் மாப்ளை ஒரு போதை அடிமைன்னு தெரியுது.

இடைவேளை.அதுக்குப்பின் என்ன ஆகுது? என்பதே கதைஇசை ஞானி இளையராஜாவின் ராஜாங்கம் 1000 வது படம் என்னும் அடையாளத்துடன் களை கட்டுகிறது. ஆனால்  எல்லாம் விழலுக்கு இரைத்த நீர்

ஹீரோவா எம் சசிகுமார் . ஒரு பெரிய ஆறுதல் இதில் நண்பன், நட்பு , முதுகில் குத்திட்டான் டயலாக்ஸ் எதுவும் இல்லாததே.இந்தக்கதாபாத்திரத்துக்கு எம் சசிகுமாரை ஏன் பாலா தேர்ந்தெடுத்தார் என்பது  தெரியலை . ஒரு வேளை அவரும் படத்தில் ஒரு புரொடியூசர் என்பதாலோ என்னவோ?


ஹீரோயினா வரலட்சுமி. நளினம்னா என்னன்னே தெரியாத ,பெண்மையின் நாணம் 1 % கூட இல்லாத , தமிழர்களுக்கு சிறிதும் பிடிக்காத  ஆமபளைத்தனமான கேரக்ட்ர். கேரக்டர் செம பொருத்தம். இந்த கேரக்டருக்கு இவர் தான் பொருத்தமா இருப்பார்னு விஷால் தான் சிபாரிசு செஞ்சாராம். எண்ட ஈஸ்வரி

 ஆனால் வர லட்சுமியின் பங்களிப்பு பிரமாதம். படத்தில் முழு வீச்சும் அவரது நடிப்பை நம்பியே இருக்கிறது . கரகாட்டம் என்னமா ஆடறார்? ஹீரோவை  ஓங்கி உதைக்கும் காட்சியில் அப்படியே அப்பா சரத் குமார்  கேப்டன் பிரபாகரன் -ல்  மன்சூர் அலிகானை உதைப்பது போல் செம சீன்.பின் பாதியில்  சோக நடிப்பில் கலங்க வைக்கிறார்

 வெல்டன் வரு,


ஹீரோவின் அப்பா , ஹீரோயின் அம்மா  இருவர் நடிப்பும்  கன கச்சிதம்

இளையராஜாவின்  இசை  வழக்கம் போல் அற்புதம், பின்னணி இசை ஆங்காங்கே  கேப்பில் கெடா வெட்டுது.க்ளைமாக்சில் பிஜிஎம்மில் கலக்கல்


திரைக்கதை அமைக்கும்போது பாலா பல இடங்களில் சறுக்கி இருக்கிறார். லாஜிக்  அங்கங்கே உதைக்கிறது


 வசனகர்த்தாவாய் இயக்குநர் பேனாவில் பச்சை மை ஊற்றி புகுந்து விளையாடி இருப்பது பின்னடைவு . பெண்கள் தியேட்டரில் குடும்பத்தோடு பார்க்க முடியாது

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

மாமா.என் சைஸ்.என்ன?


ஏய்.எனக்கெப்டிதெரியும்?
ஏன்?எத்தனை டைம் உத்து உத்து பார்ப்பியே?# தா த (A)


2 த # ஏம்மா.என்ன சைஸ் ப்ரா வேணும்?


நீயே பார்த்து சொல்யா
கடைக்காரன் =,ம் ட்ரிபிள் எக்ஸ்
அப்டின்னா?
இருப்பதிலேயே பெரிய சைசு3 கிளாஸிகலா நல்லா வாசிக்கறீங்க.ஜனரஞ்சகமா மாடர்னா வாசிக்க முடியுமா?
எப்டி?பிச்சைக்காரன் சாப்பாட்டுக்கலன் மாதிரி? #,தா த ( உள் குத்து )

4 வரலட்சுமி =,சரக்குக்கப்பல் னு சொல்றாங்க.சரக்கே இல்லையே?#,தா த


5 வரு =,நான் குத்தவெச்சு 15 வருசம் ஆகுது.இன்னும் கன்னி கழியாம இருக்கேன் .உன் பின்னாலயே சுத்திட்டு இருக்கேன் #,தா த


6 ஆட்டக்காரியோட ஆட்டத்தை யார் பார்க்கறா? ஆள் எப்படி இருக்கா?னுதானே பார்க்கறாக # தா த


ஆட்டக்காரின்னாலே அவுசாரிகதானா?அட போங்கப்பா # தா த

8 சரக்கு அடிக்கறவனுக்கு மருந்து மாத்திரை எல்லாம் சைடு டிஷ் மாதிரி #,தா த


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

தாரை தப்பட்டை 128 நிமிசம். சின்னப்படம்.ஆனா பெரிய படம். இசை ஞானி + பாலா


2 இளையராஜா இசை எனில் முதல் காட்சி யிலிருந்தே இசை யின் ஆட்சி தொடங்கி விடும் # தா த


3 ட்விட்டர் சன்யாசி ஹேன்டிலை உல்டா பண்ணி சன்னாசி தாரை தப்பட்டைக்குழு னு பேர் வெச்ட்டார் பாலா

4 ஓப்பனிங் சாங் செம குத்தாட்டம்

வரலட்சுமி அப்டியே ஆம்பள மாதிரியே டான்ஸ் கதகளி பண்ணுது # தா த

5 பாலாவின் படங்களிலேயே நளினம் இல்லாத நாசூக்கு இல்லாத ஒரு பெண் பாத்திரம் முதல் முறையாக.ஆல் க்ரெடிட் கோஸ் டூ வரலட்சுமி # தா த


எந்த ஆட்டக்காரன் தான் நல்லா வாழ்ந்திருக்கான்? இல்ல நிம்மதியா செத்திருக்கான் ? #,தா த


7 ஹீரோயின் ஹீரோவை எட்டி உதைப்பது போல் சீன் வைக்க இருவரால்தான் முடியும்

1 கே பாலச்சந்தர்
2 பாலா


8 கரகாட்டக்காரியா வரலட்சுமி ஆடும் தரை குத்தாட்டத்தையும் கேமரா ஆங்கிளையும் பார்த்தா சரத்தும் வருத்தப்படுவாரு.விஷாலும் விசனப்படுவாரு.# தா த

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 கரகாட்டக்காரன் படம் எந்த அளவு கமர்ஷியல் ஹிட் ஆச்சு என மக்களை மீண்டும் நினைக்க வைக்கும் அளவு  இதில் சொதப்பியதற்கு பாராட்டு


2  விபச்சாரப்பெண்கள் பற்றிய காட்சி அமைப்பில் இதான் சாக்குன்னு காட்சிகள் வைக்காமல் இருந்ததற்க்குஇயக்குநரிடம்  சில கேள்விகள்

1  வெளிநாட்டு புரோகிராமுக்கு புக் செய்பவர்கள் அப் & டவுன் டிக்கெட்டை முதலிலேயே கையில் கொடுக்க மாட்டார்களா?  ஹீரோ அதைக்கூட கேட்டு வாங்க மாட்டாரா?


2  ஹீரோயினோட அம்மா மாப்ளையைப்பத்தி 10 பேர்ட்ட விசாரிச்சுதான் பொண்ணு   தர சம்மாதிச்சேன்னு ஒரு சீன்ல டயலாக் வருது. ஆனா மாப்ளை கவர்மெண்ட் ஆஃபீசர் இல்ல புரோக்கர்  அப்டினு ஏன் தெரியலை?


3   விபச்சாரக்கும்பல் பற்றிய காட்சி அமைப்புகள்  கொடூரம்  வக்ரம் .நான் கடவுள் படத்தில்  பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர் வில்லன் அதையே  டெவலப் பண்ணி லேடீஸ் புரோக்கர்  வில்லன். எப்டி உங்களால் மட்டும் இப்படி உயர்வாய் சிந்திக்க முடியுது?


4 ஹீரோ  தான் ஆசைப்பட்ட பெண்ணின் கணவன் எப்படிப்பட்டவன்? என விசாரிக்க மாட்டாரா? மேரேஜ்க்குப்பின் அவர் வாழ்க்கை எப்படி இருக்கு?ன்னு பார்க்க மாட்டாரா?

5   பிதா மகன் ல சிம்ரன் ஆடும் குத்தாட்டம் போல் ஒரு ஆல் சாங்க்ஸ் ரீமிக்ஸ் பாட்டு இதிலும் வருகிறது. ஆனா  ரஜினி , விஜய் , சூர்யா  என பல ஹீரோக்களை நக்கல் அடிப்பது போல் பாட்டு வருது. குறிப்பா  ரஜினியை ஓவர் நக்கல்.இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்குவாங்களோ? பொதுவா கலைப்பூர்வமான இயக்குநர்களுக்கு ஜன ரஞ்சகமான மாஸ் ஹீரோக்கள் மேல் ஒரு இனம் தெரியாத கோபம் இருக்கும், ஆனால் அதை இப்படி வக்ரமாய் வெளிப்படுத்தக்கூடாது

6  ஒரு பெரிய பணக்காரர்  குழந்தை வேண்டும் எனில்  நல்ல  ஹை குவாலிட்டி டாக்டரைப்பார்ப்பாரா? லேடீஸ் புரோக்கரிடம் போய் பேபிக்கு ரெடி  பண்ணனும்பாரா?

7  எதுக்கெடுத்தாலும் ரவுடித்தனம்  பண்ணும் நாயகி  கணவன் கொடூரன் என தெரிந்த பின்னும் பூனையாய் இருப்பது ஏன்? அதிலும் காதலனைக்கணவன் கொல்ல முயற்சிக்கும்போது கூட அழுதபடி கெஞ்சுவது ஏன்?
சி  பி  கமெண்ட்
தாரை தப்பட்டை - விபச்சாரக்கும்பல் பற்றிய கொடூரமான கதை, குடும்பப்பெண்கள் தியேட்டரில் பார்ப்பதைதவிர்க்க- விகடன் - 40 , ரேட்டிங் - 2.25 / 5


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - சுமார் ரேட்டிங்-2.25 / 5திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டரில் படம் பார்த்தேன்

1 comments:

638314 said...

Sir ithu adult film then epdi family pogum