Friday, October 30, 2015

திரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்

நடிகர் : முத்து
நடிகை :ப்ரியா
இயக்குனர் :ஞானமொழி
இசை :நிதின் கார்த்திக்
ஓளிப்பதிவு :நித்யா
முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய ஆறு பேரும் நண்பர்கள். இவர்கள் சென்னையில் தேவதர்ஷினி வீட்டில் வாடகைக்கு தங்கிக்கொண்டு சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதாநாயகன், காமெடியன், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலைத்திறன் பெற்றவர்கள். 

வாய்ப்புக்காக ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியபோதும் வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் இவர்களிடமே பணம் கேட்கிறார்கள். இதனால் மிகவும் நொந்துபோன அவர்களுக்கு, புரோடக்‌ஷன் மேனஜராக இருக்கும் தம்பி ராமையாவின் உதவியால் ஒரு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்தி தங்கள் துறைகளில் தடம் பதித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நடித்திருக்கும் முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகியோர் திறம்பட நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். சினிமா வாய்ப்புக்காக இவர்கள் அலைவதும், கிடைக்காமல் சோர்ந்து போவதும் என நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஒரு பாடல் காட்சிக்கும் ஒரு சில காட்சிகளிலும் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்.

புரொடக்‌ஷன் மேனஜராக வரும் தம்பி ராமையா சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி, நடனம், சென்டிமென்ட் காட்சி என அனைத்திலும் அவருக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிறார். இவர் நண்பர்கள் ஆறு பேருக்கும் அறிவுரை கூறும் வசனங்கள் சினிமாவில் முயற்சி செய்பவர்களுக்கு ஒரு எனர்ஜியாக அமைந்திருக்கிறது.

வீட்டு உரிமையாளராக வரும் தேவதர்ஷினி மனதில் நிற்கிறார். வாடகை கூட வாங்காமல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதுடன் அவர்களுக்கு சாப்பாடு, பணம் என்று உதவுவது, அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்ற உணர்வு, பாசம் என பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

சினிமா வாய்ப்புக்காக இளைஞர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையக்கருவாக எடுத்துக் கொண்டு இயக்கியிருக்கிறார் ஞானமொழி. ஏற்கனவே இந்த மாதிரி கதைகள் பல வந்திருந்தாலும் இதில் சிறிதளவு மட்டும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். இளைஞர்களின் சினிமா ஆசையை பயன்படுத்தி, பல பட கம்பெனிகள் அவர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவு. திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. தேவையற்ற காட்சிகளை சரி செய்திருந்தால் ரசித்திருக்கலாம்.

நித்யன் கார்த்திக் இசையில் 2 பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கானா பாலா பாடிய திரைப்பட நகரம் பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நித்யாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. ஒரு சில காட்சிகள் டி.வி.சீரியல் பார்ப்பது போல் தோன்றுகிறது.மொத்தத்தில் ‘திரைப்பட நகரம்’ வளர்ச்சி தேவை.

--மாலைமலர்

மரப்பாச்சி (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : முருகானந்தம்
நடிகை :சுகன்யா
இயக்குனர் :முத்து மனோகரன்
இசை :பாலகணேஷ்
ஓளிப்பதிவு :முத்து மனோகரன்
நாயகன் முருகானந்தம் இராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊரில் இருக்கும் தாய், தந்தை, தங்கை ஆகியோரை சந்திக்க வருகிறார். முருகானந்தத்தின் அப்பா ஊரில் பெரிய பண்ணையார், செல்வாக்கு மிக்கவர். மேலும் ஊரின் எம்.ஏல்.ஏ., போலீஸ் ஆகியோரை தன் வசம் வைத்திருக்கிறார்.

ராஜஸ்தானில் இருந்து இந்த ஊருக்கு வந்த சிலர், மரப்பாச்சி பொம்மைகள் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களில் நாயகி சுகன்யாவும் ஒருவர். ஒரு சந்தர்ப்பத்தில் சுகன்யாவை முருகானந்தம் சந்திக்கிறார். இந்த முதல் சந்திப்பிலேயே சுகன்யா மீது காதல் வயப்படுகிறார். சுகன்யாவும் காதலை ஏற்க, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த விஷயம் முருகானந்தத்தின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. இவர்களின் காதலை பிரிக்க நினைத்த அவர், எம்.ஏல்.ஏ மூலம் போலீஸ் உதவியுடன் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் வெளியேற்ற முயற்சி செய்கிறார். ஆனால் அது பலனளிக்காமல் போகிறது. 

இந்நிலையில், ஒருநாள் காட்டுப்பகுதியில் தனியாக கிக்கிக்கொண்ட சுகன்யாவை, எம்.எல்.ஏ.வும், போலீஸ் அதிகாரியும் அடியாட்கள் மூலம் கற்பழிக்க முயற்சி செய்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக சுகன்யா இறந்துவிடுகிறார். இதற்கிடையில், விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பும் முருகானந்தம், ஊரில் சுகன்யாவைத் தேடுகிறார். அப்போது, முருகானந்தம் ஊரில் இருந்து வாங்கி வந்த ஒரு பொம்மையில் சுகன்யாவின் ஆவி புகுந்துவிடுகிறது.

தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் அதிகாரியை பழிவாங்கத் துடிக்கிறது. இறுதியில், அவர்களை சுகன்யா பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் முருகானந்தம் இராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் இருக்கிறார். ஆனால், நடிப்புதான் பொருந்தாமல் இருக்கிறது. நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் சுகன்யா, முற்பகுதியில் துறுதுறு பெண்ணாகவும், பிற்பகுதியில் பேயாகவும் நடித்திருக்கிறார். 

மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.ஏல்.ஏ., போலீஸ் அதிகாரி, நாயகன் அப்பா, நாயகியின் அப்பா ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தற்போது பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், அந்த வரிசையில் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்து மனோகரன். ஆனால், சமீபத்தில் வந்த பேய் படங்களுக்கு மத்தியில் இப்படம் நன்றாக இருக்கிறது. புதுமுகங்களிடம் சரியாக வேலை வாங்காமல் விட்டிருக்கிறார்.

பாலகணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசையை சிறப்பாக கையாண்டிருக்கிறார். முத்து மனோகரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மரப்பாச்சி’ மிரட்டல்.

-மாலைமலர்

புரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்

-மாலைமலர்


நடிகர் : ராம்சரண்
நடிகை :ரகுல் ப்ரீத் சிங்
இயக்குனர் :ஸ்ரீனு வைத்லா
இசை :எஸ்.தமன்
ஓளிப்பதிவு :மனோஷ் பரமஹம்சா
ராம்சரணை கலெக்டராக்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்படுகிறார். ஆனால், இந்த ஆசையை, அக்காவுக்காக விட்டுக் கொடுக்கிறார் ராம்சரண். இதனால், தந்தையின் வெறுப்புக்கு மத்தியில் வளர்ந்து பெரியவனாகும் ராம்சரண், சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ஒருமுறை சூட்டிங்கில் போலீஸ் உடை அணிந்து எதிரிகளுடன் சண்டை போடும் ராம்சரணை பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங், அவன்மீது காதல் கொள்கிறாள்.

அவன் உண்மையான போலீஸ் என்று நினைத்து அவனுடன் பழகவும் ஆரம்பிக்கிறாள். ரிப்போர்ட்டிங் என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரகுல் ப்ரீத் சிங், அங்கு நடக்கும் கொள்ளை சம்பவங்களை எல்லாம் போலீஸ் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ராம்சரணிடம் சொல்கிறாள். அவனும், ரகுல் ப்ரீத் சிங் மீதுள்ள மோகத்தால், அந்த கும்பலை எல்லாம் அடித்து துவம்சம் செய்கிறான்.

இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனான அருண்விஜய், ராம்சரண் மீது ஆத்திரம் அடைகிறார். ஒருமுறை இவரை எதிர்க்கப்போய், இருவருக்கும் மோதல் உருவாகிறது.

இந்நிலையில், பெரிய தொழிலதிபர்களான சம்பத்-நதியாவின் தம்பதியின் மகனான அமிதாஷ், ராம்சரணின் அக்காவை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் சொல்ல, அவர்களும் இதற்கு சம்மதிக்கிறார்கள். இருவருடைய வீட்டிலும் இதற்கு சம்மதம் கிடைக்க, திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையில், ராம்சரணை தனது அப்பாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் ரகுல் ப்ரீத். அவளுடைய அப்பா போலீஸ்காரர் என்பதால், ராம்சரணுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. ராம்சரண் போலீஸ் இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. இருப்பினும், அவர் ராம்சரணிடம் சில உண்மைகளை கூறுகிறார்.

அதாவது, சம்பத் பெரிய கொள்ளை கும்பலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் என்பதும், அவருடைய மகன்தான் அருண்விஜய் என்பதையும் ராம்சரணிடம் கூறுகிறார். மேலும், அரசியல்வாதியாக ஆசைப்படும் சம்பத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவரை பின்தொடர்வதாகவும் கூறுகிறார். அப்போது, தன் அக்காவின் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதுகூட அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்பதை அறிந்து கொள்கிறார் ராம் சரண். மேலும், அக்காவுக்கும், அவரை திருமணம் செய்துகொள்ள போகிறவருக்கும் சம்பத்தால் ஆபத்து இருப்பதையும் உணர்கிறார்.

இறுதியில், சம்பத்-அருண் விஜய்யின் திட்டங்களை ராம் சரண் முறியடித்தாரா? அவரது அக்காவின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

இது ஒரு குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு படம். இதற்கு ஏற்றாற்போல் ராம்சரண், பெற்றோர் மற்றும் அக்கா மீது பாசம் காட்டும் காட்சிகளாகட்டும், சண்டை, நடனம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் திறன்படவே செய்திருக்கிறார். குறிப்பாக, பாடல் காட்சிகள் இவர் வளைந்து ஆடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

ரகுல் ப்ரீத் சிங், இந்த படத்தில் ரொம்பவும் அழகாக தெரிகிறார். நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு பளிச்சிடுகிறது. அதேபோல், ரொம்பவும் துணிச்சலான பெண்ணாகவும் அழகாக நடித்திருக்கிறார். அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு வில்லனாக அறிமுகமாகியிருக்கும் படம். இந்த படத்திலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவருடைய கெட்அப்பை ரசிக்க வேண்டும்போல் இருக்கிறது.

சம்பத், நதியா, அமிதாஷ் என படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ஸ்ரீனு வைத்லா, ஒரு குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு படத்தை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். ஆனால், படம் ரொம்பவும் நீளமாக இருப்பதால், கொஞ்சம் போரடிக்கிறது. அதை மட்டும் குறைத்திருந்தால் படம் சபாஷ் பெற்றிருக்கும். படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். ஒவ்வொரு வசனமும் ரசிக்கும்படி இருக்கிறது.

தமன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் தனது முழு திறமையை நிரூபித்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அழகாக பதிவாகியிருக்கிறது.

மொத்தத்தில் ‘புரூஸ்லீ 2’  ரியல் பைட்டர்.


மனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்

தாத்தா மதுரையில் இருந்தார்.
கோயில் கட்டி முடிந்தபிறகு அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அதுகளையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார்.
மதுரைப்பட்டினத்தில் கிடைக்காதது என்று உண்டா? அம்மா, அப்பா தவிர எல்லாத்தையும் வாங்கலாம் என்று சொல்லுவார்கள்.
அவர் வாங்கியதிலெல்லாம் சிகரம் என்று சொல்லும்படியாக அமைந்தது பகவான் பாலகிருஷ்ணனின் பெரிய அளவிலான படம்தான்!
பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் என்று சொல்லப்படும் ஓவிய வகை அது.
அந்தப் படத்தின்மேல் பார்வை விழுந்தவுடன் ஒரு பரமானந்தம் ஏற்படும்.
தாய்மை உள்ளம் பொங்கும் ஒரு பெண் அதைப் பார்த்தால் “வாடா கண்ணா...'' என்று பாட ஆரம்பித்துவிடுவாள். பக்தன் அதைப் பார்த்தால் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கண்கள் அவன் அணிந்துள்ள மயில் பீலியின் நீல வர்ணக் கண்ணோடு போட்டியிடும்.
கண்களே முகமாகத் தெரிந்தது. பெயர் வாங்கித் தந்த கண்கள் அவை. முகமே கண்களாய் கண்களே முகமாய். அந்த புன்னகைக்கு இணையாய் அவன் அணிந்திருந்த புல்லாக்கின் முத்து போட்டி போட்டுப் பார்க்கிறது. சற்றே தலையைச் சாய்த்துப் புன்னகைக்கிறான். ஈடு இணையில்லாத படம் அது. இந்த ஊர்க் கோயிலுக்கென்று கிடைத்த படம்.
அந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்துக் கரைந்தார் தாத்தா.
இந்த ஒன்று போதும் இந்தக் கோயிலுக்கும் இந்த ஊருக்கும்.
அந்தப் படம் கோயிலுக்குள்ளேயே இருந்தா எப்படி? ஊரும் உலகமும் பார்க்க வேண்டாமா? அதற்காகத்தான் சாமி ஊர்கோலம். வருசத்தில் மூணு முறை; கண்ணன் பிறப்பு, ஏகாதசி, புரட்டாசியின் மூணாம் சனிக்கிழமை கொண்டாட்டம் கோலாகலம் . சப்பரம் சுமந்து வருவதில் இளவட்டங்களில் போட்டி.
வீடு தவறாமல் தேங்காய் உடைப்பார் கள். தெருவெல்லாம் சுத்தம்பண்ணி நீர் தெளித்துக் கோலங்கள் போட்டிருப் பார்கள்.
பெண் குழந்தைகள் குதித்துக் குதித்து கோலாட்டம் அடித்தும், கண்ணனைப் பற்றிய கும்மிப் பாடல்களும் பாடுவார் கள். இது முடிந்ததும் அவர்களைக் கோயிலினுள் அழைத்து வந்து வாழையிலையில் சர்க்கரைப் பொங்கல் வைத்துச் சாப்பிட வைப்பார் தாத்தா.
தாத்தாவின் தொழுவில் காராம்பசுக் கள் நிற்பதால் சுயம்பான நெய்யிக்குப் பஞ்சமில்லை. அந்த சர்க்கரைப் பொங்கலின் மணமும் ருசியும் சொல்லி முடியாது.
‘சர்க்கரை' என்பதை சில இடங்களில் ஜீனியைக் குறிப்பதால் சின்ன ஒரு குழப்பம் ஏற்படும்.
சர்க்கரை என்பது இங்கே கரும்பின் அச்சுவெல்லம்,
கருப்பட்டிக்கு நல் லெண்ணெய்தான் கொண்டாட்டம். (‘இஞ்சிக்கு ஏலம் கொண்டாட்டம்; அந்த எடுபட்ட சிறுக்கிக்கி கோவம் கொண்டாட் டம்' என்பது நாட்டுப்புறப் பாடல்)
இப்படி கொண் டாட்டங்களைப் பற்றி நிறையவே சொல்லப் பட்டிருக்கு; அவை அப்படி நிற்கட்டும்.
கும்மி, கோலாட்டு முடிந்த வுடன் கோயிலுக்கு முன்புறம் போடப் பட்டிருக்கும் கொட்ட கையின்கீழ் கொலுமேளம் வாசிப்பு. குருமலை பொன்னுசாமி சகோதரர்கள் நாயன‌ம்.
இந்த சகோதரர்கள் இருவரில் மூத்தவரின் பெயர் மணி முத்துப் புலவர் என்றாலும் மக்கள் சொல்லுவது பொன்னுசாமி பிள்ளை சகோதரர்கள் என்றுதான்.
அநேகமாக, எல் லாக் குடும்பங்களிலும் ஆணோ, பெண்ணோ நடு வுள்ளவர்கள்தான் பிரகாசிக்கிறார்கள். பொன்னுசாமி அப்படி.
காருகுறிச்சி கிராமத் தில் பெரிய அருணாசலம் சின்ன அருணாசலம் என்று இரண்டு பேர் இணைந்து நாயன‌ம் வாசித்து வந்தார்கள்.
நானாசரியில் சின்ன அருணாசலமே பிரகாசிக்க ஆரம் பித்துவிட்டதால் ‘காருகுறிச்சி அருணாசலம்' என்ற பெயர் மட் டுமே நிலைத்தது.
தஞ்சை மண்ணில் ஒரு சின்னப் பக்கிரி நாயன‌த்தில் கொடிகட்டிப் பறந்தார்.
விளாத்திகுளம் சுவாமிகளிடம் ஒரு நாள் நான் கேட்டேன்: “இதுவரை நீங்கள்கேட்ட நாயன‌த்தில் அந்த வாத்தியத்தின் உச்சம் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்” என்று கேட்டபோது அவர் சொன்னது:
‘‘சந்தேகமில்லாமல் சின்னப் பக்கிரிதான்” என்றார்.
சின்னப்பக்கிரிக்கு ஒரு அண்ணன் இருந்தாரா, தெரியாது எனக்கு, கோயிலின் கொட்டகையில் கொலு மேளம் வாசித்து முடித்துவிட்டு அவர்கள் போனதும் கிராமத்துப் பெரியவர்கள் விரும்பிக் கேட்கும் உறுமி மேளம்! சக்கைபோடு போடும்.
எப்பவுமே உழைப்பாளிகளுக்கான மேளம் அது.
தனி உறுமி மட்டுமே எல்லா நல்லது பொல்லாதுகளுக்கும். கோயிலுக்கும் கூட வாத்தியமாகக் கொண்ட குறிப்பிட்ட மொழிக்காரர்கள் உண்டு அந்த ஊரில். அவர்களும் இந்தக் கோயில் விழாக்களில் வந்து கலந்துகொள்ள எந்த ஆட்சேபணையும் இல்லை.
ஒவ்வொரு கோயிலுக்கும் அந்தக் கோயிலுக்கென்றே உள்ள பிரசாதம் பேர்போனதாக அமைந்திருக்கும். நமது இந்தக் கோயிலின் சர்க்கரைப் பொங்கலின் மணமும் ருசியும் அப்படி ஒரு ‘தேனாமிர்த'மாக அமைந்திருக்கும்; திருப்பதிக்கு லட்டு வாய்த்ததுபோல. எல்லாம் தாத்தாவின் பக்குவமும் மேல் பார்வையும்தான்.
எல்லா விசயங்களிலும் ஒரு கறார்த் தன்மை இருந்தது அவரிடம்.
ஒரு விசயம் அவருக்குப் பிடிக்க வில்லை என்றால் மவுனமாக சிலைபோல இருப்பார். அதைக் கண்டு, தெரிந்து கொள்வார்கள்.
ஊரில் எங்காவது வீடு கட்டுகிறார்கள் என்றால், அழைக்காமலேயே போய் நிற்பார். எல்லா விவரங்களையும் வீட்டுக்காரனிடமும் அங்கே தொழில் செய்யும் தொள்ளாளிகளிடமும் கேட்டு விசாரித்துத் தெரிந்து கொள்வார்.
“அப்படியா? இப்படிச் செய்து பாருங்களேன்” என்று யோசனை சொல்லுவார். அதன்படி செய்தால் செலவு சுருக்கமாகவும் வசதியாகவும் அமையும்.
சில சமயம் “யோசிச்சிக்கிடுங்க” “யோசிச்சுப் பண்ணுங்க” என்று சொல்லி விட்டுப் போவார். பிறகுதான் தெரியும்; அவர் சொன்ன‌படிக்குச் செய்யாமல் போனோமே என்று.
அவருடைய உணவு வகைகள் வித்தியாசமானவை. விதவிதமான மாவு உருண்டைகள் கேட்பார். எள்ளு ருண்டை, கம்பு மாவு உருண்டை, கடலை மாவு உருண்டை, முந்திரிக்கொத்து, விதவிதமான கொழுக்கட்டைகள் இப்படி. சில சமயம் மாவாகவே எடுத்துச் சாப்பிடுவதைப் பார்க்கலாம். வெண்ணெய் உருண்டைகள், சீம்பால் பாலாடைக் கட்டி, தேன், பழ வகைகள் என்று.
“தட்டத்திலெ சாதத்தெக் கொட்டி னோம். குளூற கறிய ஊத்துனோம், நெய்யோ நல்லெண்ணைய்யோ விட்டுக் குழப்பி பெரிய பெரிய உருண்டைகளாகச் செஞ்சி அடிச்சோம்னு கிடையாதே, வேண்டாத நொசனாரித்தனமெல்லாம் செஞ்சிக்கிட்டே இருப்பாம்; சின்ன வயசிலேயிருந்து இப்படித்தான்” என்று தாத்தாவோட அவ்வா சொல்லிக்கிட்டே இருப்பாளாம்.
வயசுல தாத்தாவுக்கு நசியம் (மூக்குப் பொடி) போடுகிற பழக்கமும் இருந்ததாம். கலியாணத்துக்குப் பிறகுதாம் அதெ விட்டொழிச்சாராம்.
- இன்னும் வருவாங்க

தஹிந்து

குபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : ரோஷன் பசீர்
நடிகை :அபிராமி சுரேஷ்
இயக்குனர் :ராதாகிருஷ்ணன்
இசை :கணேஷ் ராகவேந்திரா
ஓளிப்பதிவு :தில்ராஜ்
கும்பகோணம் பகுதியில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஷன். இவருடைய அப்பாவான தலைவாசல் விஜய், தன்னுடைய நண்பனான காதல் தண்டபாணியுடன் சேர்ந்து பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்திருக்கிறார். இதில் காதல் தண்டபாணி தலைவாசல் விஜய்யை ஏமாற்றிவிட்டு பணத்தை எடுத்துச் சென்று விடுகிறார். இதனால் பணத்தை பறிகொடுத்தவர்களிடம் தலைவாசல் விஜய் மாட்டிக்கொள்கிறார்.

பணத்தை இழந்தவர்கள் தலைவாசல் விஜய்யிடம் பணத்தைக் கேட்டு வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறார்கள். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் தலைவாசல் விஜய்க்கு அவருடைய மகன் ரோஷன் உதவி செய்ய முயல்கிறார். பணத்தை இழந்தவர்கள் ரோஷன் அலுவலகத்திற்கும் வந்து தொந்தரவு செய்கிறார்கள். இதனால் ரோஷனுக்கு வேலையும் போகிறது.

இந்நிலையில், பணத்தை இழந்தவர்களில் ஒருவர் தன்னுடைய பெண்ணின் திருமணத்திற்கு பணம் தேவை என்று கேட்கிறார். மேலும் திருமணம் நடக்காவிட்டால் குடும்பத்துடன் இறந்து விடுவதாக கூறுகிறார். இதையறிந்த ரோஷன் பணத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பனைத் தேடி சென்னைக்கு செல்கிறார்.

சென்னை வந்த ரோஷன் தன்னுடைய நண்பனுக்கு போன் செய்ய, அது தவறான அழைப்பாக பிஜோ ஐசக்கிற்கு செல்கிறது. அவரிடம் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை சொல்கிறார் ரோஷன். பிஜோ ஐசக்கும் நான் பணமும் தரேன், உனக்கு வேலையும் தருகிறேன் என்று கூறுகிறார். முதலில் பணத்தை பெற்றுக் கொண்ட ரோஷன் ஊருக்குச் சென்று பணத்தை கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்.

சென்னையில் பிஜோ ஐசக்கை சந்திக்கும் ரோஷன், ஒரு வங்கியில் கொள்ளை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு ரோஷன் மறுக்கிறார். பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக கொள்ளையடிக்க சம்மதிக்கிறார். அதன்படி இருவரும் கொள்ளையடித்து விட்டு செல்லும் வழியில் கொஞ்ச பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பித்து செல்கிறார் ரோஷன்.

இறுதியில் ரோஷன், பிஜோ ஐசக் இருவரும் போலீஸிடம் சிக்கினார்களா? ரோஷன் முயற்சி என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

பாபநாசம் படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்த ரோஷன், இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். குடும்பப் பிரச்சனையை கண்டு வருந்துவதும், அதற்காக திருடனாக மாறி சிக்கலில் சிக்குவதாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபிராமி சுரேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பிஜோ ஐசக், பணத்தை திருடும் காட்சிகளிலும், ரோஷனுக்கு கட்டளையிடும் காட்சிகளிலும் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சித்திருக்கிறார். ரோஷனுக்கு அப்பாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராதா கிருஷ்ணன். ஏற்கனவே வங்கி கொள்ளையை பற்றி பல படங்கள் வெளிவந்திருக்னிற்ன. எனவே, இப்படத்தில் எதாவது வித்தியாசத்தை புகுத்தியிருப்பார் என்று நினைத்தால் அது ஏமாற்றமே. தேவையற்ற காட்சிகள், லாஜிக் மீறல்கள் ஆகியவற்றை சரி செய்திருக்கலாம்.

கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் இசையும் பெரிதாக எடுபடவில்லை. தில்ராஜ் ஒளிப்பதிவில் தெளிவு இல்லாமல் இருக்கிறது.

மொத்தத்தில் ‘குபேர ராசி’ நேரம் சரியில்லை.

-மாலைமலர்


தூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அஜித்குமார் /கலக்கப்போவது யாரு?

1/அன்புமணி தலைமையைஏற்று பாமககூட்டணிக்கு

தேமுதிக வந்தால்ஏற்போம்-ராமதாஸ்
# கேப்டனை கேனைன்னு நினைச்ட்டாரா?அவர் டார்கெட் திமுக கூட்டணி==========

2/ஆட்சிக் கனவோடு வந்தவர்கள்,அனாதையாக திரிகிறார்கள்-ஸ்டாலின் # கேப்டன் பிரேமலதா கூட.்.அன்புமணி அப்பா கூட ரவுண்டிங்.தனியாப்போறது நாம தான் தலைவா

==========

3/தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி ஏற்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் # எழுச்சிகலைஞர் விஜய்காந்த் சி எம் ஆகிடுவார்ங்கறீங்களா?

===============

4/அன்புமணியை ஏத்துக்கங்க, பாமக கூட்டணிக்கு வாங்க... விஜயகாந்த்துக்கு ராமதாஸ் அழைப்பு # பிரேமலதா அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க

=============

5/கவர்ச்சிப் போட்டியில் குதித்த ஸ்ரீதிவ்யா, கீர்த்தி # சபாஷ் சரியான போட்டி.கூத்தாடினி ரெண்டுபட்டா கில்மாப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்

=============

6/நடிகைகளை முன்னிலைப்படுத்துவது தமிழகத்தின் வியாதி.. சாமி பேச்சு # குஷ்பூ ,நக்மா வுக்கு கவுன்ட்டர் குடுக்கறாரா?

=============

7/ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை... பவர்ஸ்டார் "லத்திகா-2"வை எடுக்கப் போறாராம்...# சுறா,புலி ன்னு எவ்ளவோ பார்த்துட்டோம்.இதைப்பார்க்க மாட்டோமா?

============

8/குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் ஆண்மையை அகற்ற வேண்டும்: ஹைகோர்ட் பரிந்துரை # சபாஷ் சரியான தீர்ப்பு

=========


திமுக ஆட்சியின் போது, சிலர் தவறுகள்.அதற்கு, நானும் துணை போயிருக்கலாம். அந்த தவறுகள் இனி இருக்காது'
~ ஸ்டாலின் # புதுசா தப்பு செய்வீங்க?=============10/தூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அஜித்குமார் படங்கள் வெளியாகின்றன..# ஆல்டைம் ஹீரோ VS அல்ட்டிமேட் ஹீரோ .கலக்கப்போவது யாரு?
===============

11/ரூ.749-ல் விமான டிக்கெட்; தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை வாரி வழங்கும் விமான நிறுவனங்கள்.# அட பேட்டா கடை பயலுகளே! ரவுண்ட் ஆப் பண்ணினா/ என்ன?============12/ஜெ,கருணாநிதி ஆட்சிகளில் விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிட்டனர் - Dr.ராமதாஸ்.

# கூட்டணி ல இருந்தப்ப தட்டிக்கேட்டிருக்கலாமே?

=============

13/என்னைப்போல முதல்வர் சைக்கிள் ஓட்டுவாரா?

-ஸ்டாலின்
# சைக்கிள் ஓட்டறது தான் சி எம் ஆக தகுதியா?ன்னு ஆளாளுக்கு உங்களை ஓட்டப்போறாங்க===========


14/மீனவர்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கருணாநிதி..# 15 வருசமா பிரச்னை இருக்கு


============

15/எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை - நடிகர் கார்த்திக் # ஏன் ? ஆசைப்பட்டுத்தான் பாரேன் -கவுண்டமணி்


=============

16/முதல்வர் என்னைப் போல சைக்கிள் ஓட்ட முடியுமா? - ஸ்டாலின்
# பதிலுக்கு அவர் உங்க கிட்டே என்னைப்போல் சேலை கட்ட முடியுமா?னு கேட்டுடப்போறாரு


============

17/எந்தப் பிரச்னைன்னாலும் அஜித் சார் தீர்த்துவைப்பார் - ஸ்ருதி பேட்டி! # புலி படம் புட்டுக்கிச்சாம்.செம லாசாம்.தீர்த்து வைப்பாரா?


============

18/டாஸ்மாக் கடைகள்மூடினாலுஊழியர்களைகலைஞர்
கைவிடமாட்டார்
-ஸ்டாலின் # ஏன்?அவர் தான் டாஸ்மாக் இன்சார்ஜா?்

===========

மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன்-ஸ்டாலின்#உங்க அறிக்கையைப்பார்த்தேன் சிரித்தேன்,கேள்வி கேட்கத்துடித்தேன்

===============

20//எங்களைப் பார்த்து திமுக காப்பி அடிக்கிறது: அன்புமணி சாடல்/" # விடாதீங்க.நீங்களும் அவங்க சைடில் இருந்து எதுனா காப்பி அடிங்க.தானிக்கு தீனி

===============

Thursday, October 29, 2015

சினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிராண்டோ!-கருந்தேள் ராஜேஷ்

‘எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்’ படத்தில் தனது செல்லப்பூனையுடன் மார்லன் பிராண்டோ
‘எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்’ படத்தில் தனது செல்லப்பூனையுடன் மார்லன் பிராண்டோ
மனம் என்பது நினைவுகளின் கிடங்கு. மீண்டும் மீண்டும் நினைவுகளை நமது மனம் கிளறி வெளியில் எடுத்துக்கொண்டு வருகிறது. ஆகவே, ஒரு நடிகர், எந்தப் பொருளின்மூலம் எத்தகைய உணர்ச்சி வெளிப்படுகிறது என்பதை ‘சென்ஸ் மெமரி’(Sense memory) பயிற்சியின் தெரிந்துகொண்டு பலன் பெற முடியும்.
குறிப்பிட்ட காட்சியில் எத்தகைய உணர்ச்சி வெளிப்பட வேண்டுமோ அந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் பொருளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினாலே போதும் என்பதைத் தனது பயிற்சிகளின் மூலம் ஸ்ட்ராஸ்பெர்க் வரையறுத்துக் கூறிச்சென்றிருக்கிறார். இந்த ‘சென்ஸ் மெமரி’ பயிற்சியில் நான்கு முக்கியமான உத்திகள் இருக்கின்றன. அவற்றில் ‘த பிரேக்ஃபாஸ்ட் டிரிங்க்’ (The Breakfast Drink) பயிற்சியைக் கடந்த வாரம் பார்த்தோம். இனி கண்ணாடி முன் (The Mirror), காலணிகளும் காலுறைகளும் (Shoes and Socks), பிறந்த மேனியாக (Getting Undressed) ஆகிய பயிற்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
கண்ணாடி முன் (The Mirror)
கண்ணாடியின் முன்னர் நின்றுகொண்டு, அதில் தெரியும் நமது பிம்பத்தின்மீது முழு கவனம் செலுத்துவதுதான் இந்தப் பயிற்சி. நாம் ஏற்கெனவே பார்த்த பாப்கார்ன் நினைவிருக்கிறதா? அப்படி எந்தப் பொருளின் மீது கவனம் செலுத்துகிறோமோ, அப்பொருள் ‘புலனுணர்வுப் பொருள்’ (sensory object) என்று ஸ்ட்ராஸ்பெர்க்கால் அழைக்கப்படுகிறது.
பாப்கார்ன் ஒரு புலனுணர்வுப் பொருள். அதேபோல் ஃபில்டர் காஃபி என்பதும் ஒரு புலனுணர்வுப் பொருள்தான். அந்த வகையில் பார்த்தால், கண்ணாடியில் தெரியும் நமது பிம்பமும் ஒரு புலனுணர்வுப் பொருள். இப்படி முதலில் கண்ணாடி முன்னர் நின்றுகொண்டு நடிகரின் பிம்பத்தின்மீது கவனத்தைக் குவிப்பதன்மூலம் அவரது பிம்பத்தின் புலனுணர்வுப் பொருளை அவரால் உருவாக்க முடிய வேண்டும்.
கண்ணாடியின் முன் நிற்கும்போது தேமேயென்று நிற்கிறாரா அல்லது அவரது பிம்பத்தை அவரால் நன்றாகக் கவனிக்க முடிகிறதா? கண்ணாடி இல்லாமலும் அவரால் அவரது பிம்பத்தை உருவாக்க முடிய வேண்டும். அதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம்.
காரணம்? இப்படி பிம்பத்தின் புலனுணர்வுப் பொருளை உருவாக்க முடிந்துவிட்டால், அந்த நடிகரின் உணர்ச்சிகளை எளிதில் அவரால் வெளிப்படுத்த முடிந்துவிடும் என்கிறது உளவியல். அப்படி உருவாக்க முடியாவிடில், அந்த நடிகரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மிகக் கடினம்.
காலணிகளும் காலுறைகளும் (Shoes and Socks)
இந்தப் பயிற்சி என்னவென்று புரிந்திருக்கும். காலணிகளையும் காலுறைகளையும் மனதில் உருவாக்கிக்கொள்ளுதல். காலணிகளும் காலுறைகளும் இல்லாமலேயே அவற்றை அணியும் அனுபவத்தை வாழ்ந்துபார்த்தல்.
பிறந்த மேனியாக (Getting Undressed)
இது, நடிகரின் உள்ளாடைகளையும், ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டு, பிறந்த மேனியாக நிற்பதையும் மனதில் உருவாக்கிப் பார்ப்பது. இந்தப் பயிற்சியைச் செய்யும்போது ஒரு நடிகர் கூச்சமோ பயமோ வெட்கமோ அடையக் கூடாது. முதலில் உள்ளாடைகளை அவிழ்த்துவிட்டு, பிறந்தமேனியாக நிற்பதைப் பயிற்சி செய்துவிட்டு, அதன்பின் அந்த உணர்ச்சிகளை மனதில் உருவாக்கிப் பார்க்க வேண்டும்.
இத்துடன் புலனுணர்வுப் பொருளின் நான்கு முக்கியமான கூறுகள் முடிகின்றன. மெதட் ஆக்டிங்கில் அடுத்த முக்கியமான விஷயம் உணர்ச்சிபூர்வ நினைவுமீட்டல் (Emotional memory).
உணர்ச்சிபூர்வ நினைவு மீட்டல் (Emotional Memory)
இதில், நடிகர் என்பவர் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிபூர்வமான நிலையை வெளிப்படுத்த முயலுவார். அப்படிச் செய்யும்போது, நாம் பார்த்த புலனுணர்வுப் பொருளை உபயோகித்தே இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவார். அதாவது, சோகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அவரது வாழ்வில் எப்போதாவது மிகுந்த சோகத்துடன் அவர் இருந்திருந்தால், அந்த நாளில் எதை முகர்ந்தார், எதைத் தொட்டுப் பார்த்தார், எதைப் பார்த்தார் என்பதை யோசித்து, அந்த எண்ணங்களின் மூலமாக தனது வாழ்க்கையில் அனுபவித்த சோகத்தை நினைவுகூர்ந்து, மீட்டெடுத்து அதனை மறுபடி வாழ்வார்.
இது ஓரளவு ஆபத்தான பயிற்சியும் கூட என்பதைத் தொடக்கத்தில் பார்த்தோம் (தாய் இழந்த சோகத்தை வெளிப்படுத்திய கதாபாத்திரம், காட்சி முடிந்த பின்னரும் மேடையிலேயே அழுதுகொண்டே இருந்தது).
கற்பனைச் சித்தரிப்பு – விலங்குகள் போன்று பயிற்சி (Characterization - The animal exercise)
ஸ்ட்ராஸ்பெர்க்கின் வகுப்புகளில், விலங்குகளைப் போன்று நான்கு கால்களில் நடிகர்கள் நடித்துப் பார்ப்பது சகஜம். ஒரு நடிகர் இப்படி விலங்காக மாறி நடப்பதை இன்னொரு நடிகர் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வார் - அந்த விலங்கு எப்படி நடக்கிறது, எப்படி வெளியுலகத்தோடு அதன் ஐம்புலன்களையும் உபயோகப்படுத்தித் தொடர்பு கொள்கிறது என்பதையெல்லாம். இந்த விலங்கு ஐம்புலன்களையும் உபயோகிக்கும்போது, அதற்கேற்ற புலன்சார்ந்த நினைவை அந்த நடிகர்கள் உபயோகிப்பார்கள்.
இப்படிச் செய்யச் செய்ய, சிறுகச் சிறுக அந்த நடிகர் இரண்டு கால்களில் நிற்க ஆரம்பித்து, அந்த விலங்கை அவரது மனிதக் கதாபாத்திரத்தோடு தொடர்புப்படுத்திக்கொள்வார். அப்படி அந்த விலங்கு மனிதனாக மாறும்போது, அதன் விலங்கு உணர்ச்சிகள் மறையாமல், மிக நுண்ணிய வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும். இதன்மூலம், கதாப்பாத்திரத்துக்குத் தேவையான நுண்ணிய உணர்ச்சிகள் தவறாமல் வெளிப்படும். கூடவே, கூச்சம் போய்விடும். எப்படி வேண்டுமானாலும் நடிக்க இயலும். நடிகர் என்பவர் வளைந்துகொடுக்கும் ஒரு பாத்திரம்தானே?
‘எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்’ (A Streetcar named desire) படத்தில் நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்துக்கான இரக்கமற்ற தன்மையை, மனிதக்குரங்கு போல நடித்துப் பார்ப்பதன்மூலம் வரவழைத்துக்கொண்டார் மார்லன் பிராண்டோ. ‘ஏஸ் வென்சுரா’ (Ace Ventura) படத்தில் நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழியை, புறா போலவே தத்ரூபமாக நடித்துப் பார்த்து வரவழைத்துக்கொண்டார் ஜிம் கேரி.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ‘நடிப்பு என்பதே செயற்கையான ஒன்றை வரவழைப்பதுதானே? இதில் ஏன் இப்படித் தலைவேதனை தரக்கூடிய பயிற்சிகள்? பேசாமல் இவையெல்லாம் இல்லாமலேயே நன்றாக நடித்தால் என்ன?’
இதுதான் லாரன்ஸ் ஒலிவியரின் முடிவு. அவர் இவையெல்லாம் இல்லாமல்தான் இயற்கையாகவே பெரியதொரு நடிகராக இருந்தார். மட்டுமில்லாமல், மெதட் ஆக்டிங் என்பதையே சமயம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துவந்தார். ஆனால், லாரன்ஸ் ஒலிவியர் போன்ற நடிகர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றுவார்கள் என்பதை மறவாதீர்கள். நாமெல்லாம் சாதாரண மக்கள். நமக்கு ஒலிவியரின் இடத்தை அடைய உதவுபவையே இந்தப் பயிற்சிகள்.
இதுபோல் மெதட் ஆக்டிங் முறையில் பயிற்சிகள் பலவிதமான பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு நடிகர் உருவாவதில் தலையாய பயிற்சிகளாக உலக அளவில் இவை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுதவிர, இயக்கம், சீன்களை கவனிப்பது, நடிகர்களைத் தேர்வு செய்வது, ஒளியமைப்பு, இசை, ஒத்திகை பார்ப்பது ஆகிய பல்வேறு விஷயங்களை ஸ்ட்ராஸ்பெர்க் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். அவற்றை எழுதப் புகுந்தால் இந்தக் கட்டுரை போரடித்துவிடலாம். ஆகவே மெதட் ஆக்டிங் பற்றிய முக்கியமான குறிப்புகளை இத்துடன் முடித்துக்கொண்டு அடுத்து, அசரவைக்கும் மேலும் பல ரசனையான விஷயங்களுக்குத் தாவிச் செல்வோம்.
(மெதட் ஆக்டிங் பற்றி எழுத எனக்குத் துணையாக இருந்த புத்தகம் - The Lee Strasberg Notes)
தொடர்புக்கு [email protected] 
படங்கள் உதவி: ஞானம்

தஹிந்து

தீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா? அஜித் படம் ஹிட் ஆகுமா?

1/சார்.150 கிமீ வேகத்துல பந்து வருது.இப்போ என்ன செய்யப்போறீங்க?


151 கிமீ வேகத்துல கிரவுண்டை விட்டே ஓடப்போறேன்=============

2/பொக்கிஷங்கள் என நினைத்தவை அனைத்தும் குப்பைகளே! !"


மேடம்.அப்போ உங்க வீட்டு பீரோ ல இருக்கற குப்பைகளை தந்துடறீங்களா?===========

3/டியர்.எனக்கு fe்ver வந்தா என்னை தாங்கு தாங்குன்னு தாங்குவீங்களா?


நீ சரின்னா FEVER வர்லைன்னாலும் தாங்கறேன்.ஐ ஜாலி


===========

4/டாக்டர்.கால் பாதத்தில் விக்ஸ் தடவினா இருமல் போயிடுமாமாமே நிஜமா?


அப்போ தலை நெத்தில விக்ஸ் தடவுனா கால் வலி போய்டுமா?=============

5/ஹலோ பிஏவா?தலைவர் சொன்னபடி "விழித்தெழு"மெசேசை சமூக வலைத்தளத்தில் பரப்பியாச்சு.தலைவர்ட்ட சொல்லிடுங்க


ம்மதூங்கிட்டிருக்காரு.எந்திரிக்கட்டும்்


===========

6/சார்.நம்ம அடுத்த படம் போலீஸ் ஸ்டோரி


அடடா.எதுக்கு போலீசோட ஸ்டோரி?நாவல் ஆசிரியர் கிட்டே கதை கேட்டிருக்கலாமே?


==============

7/உங்க படத்துக்கு டார்க் பச்சை ன்னு டைட்டில் வெச்சிருக்கீங்களே ஏன்?


சோ வாட்? காக்கி ன்னு டைட்டில் வைக்கறப்போ இது மட்டும் வைக்கக்கூடாதா?


===========

8/சமீபத்துலதான் சிங்கார வேலன் பார்த்தீங்களா?


எப்டி தெரியும் ?
அதுல வர்ற கக்காக்"காக்கி"க்கி பாட்டில் இருந்துதானே காக்கி டைட்டில் உருவுனீங்க?


===============


சார்.உங்க பேங்க்ல ஒரு லோன் வேணும்.
எதுக்கு?
சும்மா செலவு பண்ணத்தான்.பூமி அழியப்போகுதாம்.இருக்கும் வரை ஜாலியா செலவு செய்வோம்


===============

10/31/10/2015 உலகம் அழியப்போகுதாம்


விஜய் ரசிகர் = ஐ ஜாலி.அப்போ வேதாளம் ரிலீஸ் ஆகாதில்ல?============

11/சார்.இப்போ நீங்க சொன்னது ஜோக்கா? தகவலா?குழப்பமா இருக்கு.


எது?புரியல.
புலி 100 கோடி கலெக்ட் பண்ணிடுச்சுன்னீங்களே?


===============

12/சார்.புலி 100 கோடி கிளப்ல சேர்ந்துடுச்சு.


கேக்கறவன் கேனயனா இருந்தா புலி லயன்ஸ் கிளப்ல ஆயுள் மெம்பரா சேர்ந்துடுச்சுன்னு சொல்வீங்களே?=============

13/சார்.சினிபீல்டில் இத்தனை ஹீரோ இருந்தும் உங்க படம் மட்டும் தொடர்ந்து 100 கோடி வசூல் வந்துடுதே?எப்டி?


யார் வந்து எண்ணிப்பார்க்கப்போறாங்க?


=============

14/சார்.வீடியோ ரிவ்யூ போடும்போது வழக்கமா கை ஆட்டி ஆட்டி பேசுவீங்க.இப்போ கை கட்டி பேசறீங்க?


விமர்சன ஸ்டைலை மாத்திடுங்கன்னாங்க
================
15/சார்.பாகுபலி 2 ல எனக்கும் ஒரு ரோல் கிடைக்குமா?சாரி சார்.முதல் பாகத்தை விட 2ம் பாகம் அல்ட்டிமேட் ஹிட் ஆகனும்னு நினைக்கறேன்


=============

16/சார்.நீங்க ராஜா கேரக்டர் பண்றதை சிலர் கிண்டல் பண்றாங்க


பொதுவா சிப்பாய்கள் "காவலன்"கள் க்கு ராஜா ,மன்னர் மேல் பொறாமை இருக்கத்தானே செய்யும்?==============

17/படம் நவம்பர் 5 தான் ரிலீஸ் னு எப்டி யூகிக்கறீங்க?

ட்ரெய்லரே வியாழன் 12 AM தான் ரிலீஸ்னா படமும் வியாழன் ல தான் வரும்

============

18/தீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா? அஜித் படம் ஹிட் ஆகுமா?

கமல் = எது ஹிட் ஆனாலும் என் பேமிலிக்கு லாபம்.ஏன்னா வேதாளம் லஹீரோயின் ஸ்ருதிஹாசன்

===========