Tuesday, January 12, 2016

கோல்டன் குளோப் விருதுகள் -2015

'தி ரெவனன்ட்' பட இயக்குநர் மற்றும் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ | படம்: ராய்ட்டர்ஸ்
'தி ரெவனன்ட்' பட இயக்குநர் மற்றும் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ | படம்: ராய்ட்டர்ஸ்
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் ஆகிய மூன்று பிரிவுகளில் 'தி ரெவனன்ட்' கோல்டன் குளோப் விருதுகளை வென்றது. லியானர்டோ டிகாப்ரியோ சிறந்த நடிகருக்கான விருதையும், கேத் வின்ஸ்லட் சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதையும் வென்றனர். இவ்விருவரும் டைட்டானிக் படம் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.



73வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவின் பிவெர்லி ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது. இந்த வண்ணமிகு விழாவில் 2015-ல் வெளியான சிறந்த படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் 'தி ரெவனன்ட்' திரைப்படம் 3 விருதுகளைத் தட்டிச் சென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகியவற்றுக்கான விருதுகளை இப்படம் வென்றுள்ளது. 'டைட்டானிக்' புகழ் கேத் வின்ஸ்லட் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருது உள்ளிட்ட 2 விருதுகளை ஸ்டீவ் ஜாப்ஸ் பெற்றுள்ளது.



விருதுகளின் விவரம்:
சிறந்த திரைப்படம் - தி ரெவனன்ட்
சிறந்த நடிகை : ப்ரீ லார்சன் - ரூம்
சிறந்த நடிகர் : லியோனார்டோ டிகாப்ரியோ - தி ரெவனன்ட்
சிறந்த புனைவுப்படம் (அறிவியல்): தி மார்டின்
சிறந்த நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் - ஜாய்
சிறந்த அனிமேஷன் படம் : இன்சைட் அவுட்
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்: சன் ஆஃப் சோல்
சிறந்த உறுதுணை நடிகை: கேத் வின்ஸ்லட் - ஸ்டீவ் ஜாப்ஸ்
சிறந்த உறுதுணை நடிகர்: சில்வஸ்டோர் ஸ்டாலோன் - கிரீட்
சிறந்த இயக்குநர்: அலெஜான்ட்ரோ ஜி. இனாரிட்டு - தி ரிவெனன்ட்
சிறந்த திரைக்கதை: ஸ்டீவ் ஜாப்ஸ்
சிறந்த இசை: என்னியோ மோரிகோன் - தி ஹேட்ஃபுல் எய்ட்
சிறந்த பாடல்: ரைட்டிங்ஸ் ஆன் தி வால் - ஸ்பெக்டர்



தொலைக்காட்சித் தொடர்கள்
சிறந்த தொடர் - மிஸ்டர் ரொபோட்வ்
சிறந்த நடிகை டராஜி பி. ஹென்சன் - எம்பையர்
சிறந்த நடிகர் - ஜான் ஹாம் - மேட் மேன்
சிறந்த இசைத் தொடர் - மொஸார்ட் இன் தி ஜங்கிள்
சிறந்த நடிகை : (நகைச்சுவை அல்லது இசை) தொடர் ராச்சோல் ப்ளும் - எக்ஸ் கேர்ள்ஃப்ரண்ட்
சிறந்த நடிகர் : (நகைச்சுவை அல்லது இசை) கேயெல் கார்சியா பெர்னல் - மொஸார்ட் இன் தி ஜங்கிள்.

நன்றி - த இந்து

0 comments: