Sunday, August 29, 2010

கேனை டிவி வழங்கும் கெக்கெக்கே பிக்கெக்கே விருதுகள்

1. இந்த வாரத்தின் சிறந்த  பிழைக்கத்தெரியாத பிலோமினா விருது மெக்சிகோ அழகி ஜிமேனா நவ்ரத்தேவுக்கு,பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மற்ற அழகிகள் போல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல்,அமைதியாக விருதை வாங்கியமைக்காக.

2.இந்த வாரத்தின் சிறந்த கூச்ச நாச்சமே இல்லாத கூத்தாண்டப்பெருமாள் விருதும்,யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை என களம் இறங்கி (!?)
3 ஆம் திருமணம் செய்த டோண்ட் கேர் டோண்டு ராகவன் விருதும் சசிதரூருக்கு.

3.இந்த வாரத்தின் சிறந்தகேள்வியின் நாயகன் விருதும்,லாஜிக் லிங்கேசன் விருதும் கலைஞருக்கு,ரஜினியின் மகள்,மருமகன் சினிமாவுக்கு வரலாம்,என் வாரிசுகள் சினிமாவுக்கோ,அரசியலுக்கோ வரக்கூடாதா? எனக் கேட்டமைக்காக.

4.இந்த வாரத்தின் சிறந்த கள்ள நோட்டு கண்காணிப்பு ஸ்பெஷல் ஆஃபீசர் விருது திருப்பூர் ஐ சி ஐ சி ஐ  பேங்க் மேனேஜர் (டேமேஜர்?!)திரு பிரதீப் சாமியப்பனுக்கு,316 கள்ள நோட்டுகள் பேங்க்கில் கண்டுபிடிக்கப்பட்டபோது,இவை எப்படி வந்தது என்றே தெரியவில்லை என பொறுப்போடு பதில் சொன்னமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்தகவுண்ட்டவுன் கண்ணாயிரம் விருது தினமலருக்கு,திருச்சியில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் 6 நிமிடத்தில்
37 முறை தொண்டர்கள் அம்மா என அழைத்ததை பொறுப்பாக எண்ணி அதை ஒரு பக்க கட்டுரையாக போட்டதற்கு.
6. இந்த வாரத்தின் சிறந்தஜெராக்ஸ் காப்பி ஜெகதீசன்ஸ் விருது ஆந்த்ரா நீதிபதிகள் 6 பேருக்கு,நீதிபதிகளுக்கான பிரமோசன் தேர்வில் பிட் அடித்து மாட்டிக்கொண்டதற்காக.

7.இந்த வாரத்தின் சிறந்த இண்டீசண்ட் இன்பராஜ் விருது புழல் பட இயக்குநர் அழகுக்கு,படத்தின் விளம்பர டிசைனில் மிக மோசமாக ஆண்களை சித்தரித்தமைக்காக.

8.இந்த வாரத்தின் சிறந்த கிழக்குசீமையிலே கிலாக்கா விருது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு,தன்மானத்தம்பி விருது முத்துசாமிக்கு. ரக்‌ஷாபந்தன் விழாவில் பழைய பகை மறந்து இருவரும் ராக்கி கட்டி அண்ணன் தங்கை ஆனதற்கு.

9. இந்த வாரத்தின் சிறந்த நஷ்ட ஈடு நாதமுனி விருது கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்சனுக்கு ரூ 3169 கோடி நஷ்ட ஈடாக மனைவிக்கு கொடுக்க நேர்ந்தமைக்கு.இந்த வாரத்தின் சிறந்த பம்ப்பர் லாட்டரி பரிமளா விருது அவரது மனைவி எலின் நர்திகிரன் அவர்களுக்கு.

10.இந்த வாரத்தின் சிறந்த ஒன்னும் தெரியாத பாப்பா விருது அருணாச்சலபிரதேசத்தின்  முன்னாள் முதல்வர் ஜியாங் அபாங் அவர்களுக்கு,பொது விநியோகத்தில் ரூ 1000 கோடி ஊழல் நடந்ததை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின்னும் எப்படி நடந்தது என்பதே எனக்குத்தெரியாது என சொன்னதற்காக.

11. இந்த வாரத்தின் சிறந்த சமாளிஃபிகேசன் சங்கடராஜ் விருது கலைஞருக்கு,திருச்சியில் ஜெ கூட்டிய கூட்டம் பணம் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம்,தானாக கூடிய கூட்டம் இல்லை என சமாளித்ததற்காக.

12. இந்த வாரத்தின் சிறந்த பங்சுவாலிட்டி பரமசிவம் விருது மீண்டும் சசிதரூருக்கு,ஹனிமூனுக்கு கிளம்புகையில் 30 நிமிடம் தாமதமாக
கிளம்பியதற்காக விமானம் தரை இறங்கியதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை லெஃப்ட் & ரைட் வாங்கியமைக்காக.

13.  இந்த வாரத்தின் சிறந்த  ஒண்டிக்கு ஒண்டி சண்டி ராணி விருதும்,காலக்கொடுமையால்  காவியத்தலைவி ஆன (?!) காவ்யா விருது நடிகை குஷ்பூவுக்கு, யாருக்கு கூட்டம் அதிகமாகக்கூடுகிறது பார்ப்போமா? என ஜெவுக்கு சவால் விட்டமைக்காக.

விலை -சினிமா விமர்சனம்

படத்தின் ஸ்டில்களைப்பார்த்தோ,எகனை மொகனையான போஸ்டர்களைப்பார்த்தோ, அஜால் குஜால் படம் என நினைத்து வரும் அனைத்து சீன் பட ரசிகர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது இந்தப்படத்தில் மெடிசனுக்குக்கூட அதாங்க மருந்துக்குக்கூட அது போல் ஒரு சீன் இல்லை என் மட்டற்ற மகிழ்ச்சியோடும்,பிட்டற்ற வருத்தத்தோடும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
20 வருடங்களுக்கு முன் கார்வண்ணனின் பாலம் என்று ஒரு படம் வந்தது,மொத்தமே 2 லட்சம்தான் செலவு,2 நாகள் ஓடுனாலே லாபம் என்ற கான்செப்டில் வந்த படம் ,40 நாட்கள் ஓடின.அது போல் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து முதலுக்கு மோசம் இல்லாமல் லாபம் சம்பாதிக்கும் படங்கள் வரிசையில் இதை சேர்க்கலாம்.
படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே பருத்திவீரன் சித்தப்பு சரவணன் கேப்டன் மாதிரி ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும்போது தான் எனக்கு சந்தேகம் வந்தது,இது பிட்டுப்படமா?ஆக்‌ஷன் ஹிட்டுப்படமா ?என.

நாடோடிகளில் காதில் அடி வாங்கி செவிடாகிப்போவாரே அவர்தான் ஹீரோ.நோ ஹீரோயின்,நோ டூயட், ஒன்லி ஆக்‌ஷன்.
.சென்னைக்கு வரும் அப்பாவிப்பெண்களை ஒரு கும்பல் வளைத்துப்பிடித்து ஆன்லைன் வியாபாரத்தில் ஏலம் விடுகிறது.அவர்களை பாதிக்கப்பட்ட அண்ணன் போலீஸ் ஆஃபீசருடன் இணைந்து காப்பாற்றுவதே கதை.
ஹீரோவுக்கு பம்பு செட் பட்டப்பெயர் எப்படி வந்தது என சர்வே எடுப்பது செம காமெடி.அந்த பிராசஸ் நடக்கும்போதே விஜய் டி வி வரை அந்த மேட்டர் போவது சிரிப்பு.அப்பா,அம்மா கிட்ட தான் திருடுனதை சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கும் ஹீரோ ,தங்கை ஊர் பூரா ஃபோன் போட்டு மானத்தை கெடுப்பது சுவராஸ்யம்.அண்ணன்,தங்கை இருவரும் அடித்துக்கொள்வதும் ,பின் பிரச்சனை வரும்போது சேருவதும் எதார்த்தம்.
மேற்படிப்புக்காக தங்கையை சென்னை அழைத்து வரும் அண்ணன் எவ்வளவுதான் அப்பாவியாக இருந்தாலும் அப்படியா தனியாக டாக்சியில் விட்டு வருவார்?ஆனால் திரைக்கதையை வேகமாக நகர்த்தும் கலையில் இயக்குனர் காமராஜ் தேர்ச்சி பெற்றதால் சமாளிக்கிறார்.
அருக்காணி எனும் குத்துப்பாடலில் டைரக்டரின் பேடு டேஸ்ட் வெளிப்படுகிறது,(கமர்சியல் காம்ப்ரமைஸ்?)பிரபுதேவா ஒரு படத்தில்(மிஸ்டர் ரோமியோ?)ஹீரோயின் இடுப்பில் ஆம்லெட் போடுவது போல் இதிலும் ஒரு சீன் உண்டு.மக்காச்சோளத்தை போட்டதும் அது இடுப்புச்சூட்டில் பாப்கார்ன் ஆகிறது.(என்னே ஒரு இன்டீசண்ட்டான கற்பனை?)

படத்தின் கேமராமேனுக்கு ஒரு கேள்வி.அது ஏன் அடிக்கடி கேமராவை லோ ஆங்கிளில் வைக்கிறீர்கள்?அதெல்லாம் காமிராமேதை(!?)கர்ணனின் ஜம்பு,இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகிய படங்களோடு வழக்கொழிந்து போனதே?

அதே போல் இயக்குனருக்கு ஒரு கேள்வி.நாடோடிகள் படம் உங்களை ரொம்ப பாதித்திருக்கலாம்,அதற்காக அதிலிருந்து ஏகப்பட்ட காட்சிகளை உருவ வேண்டுமா?குறிப்பாக சம்போ சிவசம்போ பாட்டு ஸ்டைலில் அச்சு அசலாய் ஜெராக்ஸ் எடுக்க வேணுமா?
வில்லனின் ஆட்களை செல்ஃபோன் மூலம் கேட்ச் அவுட் பண்ணும் சீன் செம திரில்லிங்க்.(என்னதான் அது தி செல்லுலார்  என்ற ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டிருந்தாலும்).
ஹீரோயிச எஃபக்ட் வேண்டும் என்பதற்காக சரவணன் வரும்போதெல்லாம் ஹோ ஹோ ஒஹொஹோ, ரீ ரீ போ போ ரிம்பக் என்பதெல்லாம் ஓவர் பில்டப்.படத்தில் சரவணன் பேசும் பஞ்ச் டயலாக்குகள் செம காமெடி.
பஞ்ச் டயலாக் 1 -போலீஸ்காரன் திருடனை பிடிக்காம கூட இருப்பான்,ஆனா என்ன நடந்ததுனு தெரியாம இருக்க மாட்டான்.(அப்போ தானே மாமூல் வாங்க முடியும்?)
பஞ்ச் டயலாக் 2 - ஒர்க் அவுட் ஆகுமா ஆகாதா அப்படிங்கறது ஒர்க் அவுட் ஆனபின்புதானே தெரியும்?(சத்தியமா எனக்கு அர்த்தம் புரியலை)
பஞ்ச் டயலாக் 3 - உண்மையை சொல்ற நண்பனை விட எனக்கு கடமையை செய்யற போலீஸ்தான் வேணும்.

சரவணன் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.பஞ்ச் டயலாக் பேசுவதற்கு 50 படங்களாவது நடித்திருக்க வேண்டும்,அதில் 20 படமாவது ஹிட் குடுத்திருக்க வேண்டும்.(சத்தியமா நான் விஜய்யை கிண்டல் பண்ணலை).அதே போல் போலீஸ் கேரக்டர் பண்ணும்போது அட்லீஸ்ட் ரிவால்வரை எப்படி பிடிக்க வேண்டும் என்றாவது கற்றுக்கொண்டிருந்தால் தேவலை.காக்க காக்க படம் பார்க்க பார்க்க.
ஹீரோவின் தங்கை வேனில் கடத்தப்பட்டு வரும்போது அவரது உதட்டு காய ரத்தத்திலிருந்து வேன் பின் புற கண்ணாடிக்கதவில் கிட்னாப்புடு என எழுதும் ஐடியா ஓகே.
ஆனால் போலீஸ் செக்யூரிட்டியை மீறி அவர்கள் எப்படி ஆந்திரா பார்டரை கடந்தார்கள் என்பது டைரக்டருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள்.ஊமை என சைகை செய்து தப்பிக்கும் கைதியை  தப்பிக்க விட்டு, பின் ஊமைக்கு ஏன் செல் ஃபோன் எனக்கேட்டு மடக்கும் சீனும் புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டே.
மாட்டிக்கொண்ட பெண் கொலுசை கூர் செய்து த்ற்கொலை செய்து கொள்ளும் சீன் பரபரப்பு.தெலுங்கில் டப் பண்ணவும்,டப்பு  பண்ணவும் வசதியாக பானுச்சந்தரை யூஸ் பண்ணிக்கொண்ட விதத்தில் இயக்குனரின் தொலை நோக்குப்பார்வை தெரிகிறது.

வில்லி சரவணின் மகள் என்ற ட்விஸ்ட் எண்டமூரி வீரேந்திரநாத்தின் மர்ம மாளிகை நாவலில்,சிவாஜியின் தங்கப்பதக்கம் படத்தில் உட்பட பல வற்றில் பார்த்தது தானே?மன்மதக்காடு பாட்டு ஜெவின் “ஆடாமல் ஆடுகிறேன் “பாட்டின் காப்பி.ஹீரோ சரவணனிடம் சார்,1 ல இருந்து 100 ஐ பார்க்காதீங்க,99ல இருந்து பாருங்க,பக்கத்துலயே இருக்கும்னு ஒரு வசனம் வருது.அது எதுக்குன்னு யாருக்கும்  புரியலை.

சரவணனுக்கு வரும் அந்த ஃப்ளாஸ்பேக் காட்சிகளை இன்னும் எடிட் செய்திருக்கலாம்,அவர் புரொடியூசர் என்பதற்காக இந்தக்கொடுமையை எல்லாம் ரசிகர்கள் தாங்க வேணுமா?

படத்தில் வில்லியாக வருபவர் டி ஆர் பட வில்லி மாதிரி ஓவர் ஆக்ட் செய்வது ரசிக்க வைக்கிறது.(கேப்டன் பிரபாகரன் மன்சூர் மாதிரி).அவரது நடை உடை பாவனைகள் எல்லாம் பக்கா ஐட்டம் போல் அமைந்தது டைரக்டரின் சாமார்த்தியமா?நடிகையின் அதிர்ஷ்டமா?(பார்ட்டி செம கட்ட மாமு)
இலங்கைப்பெண்ணாக வருபவர் தற்கொலை செய்யும் சீன் நான் கடவுள் க்ளைமாக்ஸ்சை ஞாபகப்படுத்துகிறது.

வசனகர்த்தாவின் பெயர் சொல்லும் இடங்கள்
1. ஒரு பொண்ணா எனக்கு கிடைக்காத மரியாதை நான் பொணமான பிறகாவது எனக்கு கிடைக்கட்டும்.
2.கடவுள் மனுஷனா வந்து யாரும் பார்த்ததில்லை,ஆனா மனுஷன் கடவுளா இருந்து உதவி செஞ்சதை  நிறைய பார்த்திருக்கேன்.
3.விலைமகளான எங்கம்மாவைப்பார்த்தா அவ கிட்ட சொல்லுங்க,”நீங்க பார்த்த நரகத்தை அவ பார்ர்க்காம ,நீங்க பார்க்காத சொர்க்கத்தை பார்க்க அவ மேல போய்ட்டா அப்படினு”
4.படிப்பு வராத பிள்ளையை படி படினு சொல்றதும்,படிக்கற பிள்ளையை படிக்க வேணாம்னு சொல்றதும் ரொம்பத்தப்பு.
5.நரகம்னு சொல்லி இந்த தொழிலை வேணாம்னு சொல்றீங்களே,முன் அனுபவம் இருக்கா?நரகம்னா என்னனு தெரியுமா?

ஹீரோ டாக்சி டிரைவரை ஆவேசமாக தூக்கி எறிவது செமயான ஆக்‌ஷன் சீன் .ஆனால் அடிக்கடி அவர் காட்டுக்கத்தல் கத்துவது எதற்கு?ஒரு வேளை ரீ ரிக்கார்டிங் ஃபால்ட்டோ?
மன்மதக்காடு பாட்டு மிக மோசமான சிச்சுவேஷனில் வைக்கப்பட்ட மிக நல்ல பாடல்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1.பெண்களுக்கான விழிப்புணர்வுப்படத்தை ஆக்‌ஷன் ஃபார்முலாவில் எடுத்திருக்கிறீர்கள்,ஓகே,சந்தோஷம்.ஆனால் பெண்களை தியேட்டருக்கு வரவைக்க என்ன செஞ்சீங்க?போஸ்டர் டிசைன் ரொம்ப மோசம்.டப்பிங் படம் மாதிரி.
2.இந்தப்படத்தை சன் டிவி டேக் ஓவர் பண்ணி இருந்தா 50 நாட்கள் ஈஸியா ஓட வெச்சுருவாங்க.அந்த அளவு படத்துல சரக்கு இருக்கு.ஆனா படத்தை நல்லா எடுத்த நீங்க மார்க்கட்டிங் விஷயத்துல ஏன் இவ்வளவு அசிரத்தை?
3.வெர்ஜின் லேடிஸ் ஏலம் விடுவது போலீஸ் நினைத்தாலும் தடுக்க முடியாது என ஒரு வசனம் வைத்திருக்கிறீர்கள்.யார் சொன்னது?சைபர் க்ரைம்னு ஒரு டிப்பார்ட்மெண்ட்டே அதுக்குனு இருக்கே?
4.ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் இருந்தாலும் அது குடிக்கமுடியாதுதானே,பின் ஏன் நல்ல சமூக அக்கறையில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் டபுள் மீனிங் டயலலாக்ஸ் ,முகத்தை சுளிக்கும்படி சில வசனங்களை வெச்சீங்க?
5.திருடப்போறவனை தேள் கடிச்சா பரவால்லை,திமிங்கலமே கடிச்சா? அப்படினி ஒரு டயலாக் வருது,தேள் கொட்டும்,எப்படி கடிக்கும்னு பெஞ்ச் ல உக்கார்ந்து இருக்கற கடைக்கோடி ரசிகன் கூட சொல்றான்,நீங்க எப்படி அதை அனுமதிச்சீங்க?
6.போஸ்டரில் ஹீரோவின் தங்கைக்கு ரூ 50,000 என ரேட் ஃபிக்ஸ் செய்யப்படுகிறது,ஆனால் படத்தில் 60 லட்சத்துக்கு விலை போகிறார்.எப்படி?
எனிவே இந்தப்படம் போட்ட முதலுக்கு மேலயே சம்பாதிச்சுக்கொடுத்துடும்.தெலுங்கில் 50 நாள் ஓடும்.இங்கே பி,சி செண்ட்டர்களில் 30 நாட்கள் ஓடும்.(படம் ரிலீஸ் ஆகி 3வது நாளிலேயே 40 அதிகப்படியான தியேட்டரில் போட்டுட்டதா விளம்பரம் பார்த்தேன்

Friday, August 27, 2010

மாஸ்கோவின் காவிரி - சினிமா விமர்சனம்

கவித்துவமான டைட்டில்,கண்ணைக்கவரும் ஸ்டில்கள்,கலக்கலான ஃபிகர் என்று சொல்ல முடியாவிட்டாலும் ரசிக்க வைக்கும் அழகுள்ள ஹீரோயின் இத்தனை இருந்தும் இயக்குனரால் ஏன் இந்தப்படத்தை  ஹிட் ஆக்க முடியவில்லை?

புதுமுக ஹீரோ ராகுல் முதல் படம் என்ற அளவில் ஓகே.ஹீரோயின் சமந்தாவுக்கு புக் ஆன கணக்கில் இது முதல் படம் ஆனால் ரிலீஸில் 2வது படம்.படத்தின் இயக்குனர் அடிப்படையில் ஒரு ஒளீப்பதிவாளர் என்பதால் படம் முழுவதும் ஒளீப்பதிவு த்னியாகஹ்தெரிய வேண்டும் என்ற ஆர்வம் புரிகிறது.ஆனால் பி சி ஸ்ரீராமாக இருந்தாலும்,சந்தோஷ் சிவனாக இருந்தாலும் கதை,திரைக்கதையில் சரக்கு இல்லை எனில் ஒப்பேற்ற முடியாது என்பதை பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் படம்.

படத்தோட ஓப்பனிங்லயே ஹீரோ ஹீரோயினிடம் காதல் வசப்படுவதும்,ஹீரோயின் அதை சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்துவதும்,அதற்கடுத்த சீனே ஹீரோ காதலை உதறுவதும் ரொம்ப ஓவர்.என்ன தான் ஃபாஸ்ட் உலகமாக இருந்தாலும் இப்படியெல்லாமா நடக்கும்?அதை விட சூப்பர் காமெடி அடுத்த 5வது நிமிஷமே ஹீரோயின் ஹீரோவின் ஊருக்கே வந்து நான் மனசு மாறிட்டேன்,ஐ லவ் யூ என்பது செம காமெடி.காதலை கேலிக்கூத்து ஆக்கி விட்டார்கள்.

பம்பாய் படத்தில் மணிரத்னம் காதல் டேக் ஆஃப் ஆவதை அவசர அவசரமாக காண்பித்தார் என்றால் அதற்கு காரணம் இருந்தது,படத்தின் பின்பாதி மும்பைகலவரத்தை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை செல்ல வேண்டியக் கட்டாயம்.இந்தப்படத்திற்கு என்ன?

புதுமுக ஹீரோ முகசாயலில் எக்ஸ் இடை அழகி சிம்ரனின் எக்ஸ் லவ்வர் ராஜூசுந்தரம்போலவும்,காதல் வைரஸ் ரிச்சர்டு(ஷாலினி அஜித்தின் தம்பி) போலவும் இருப்பதால் ஈஸியாக மனதை கவர்கிறார்.வசன உச்சரிப்பும்,பாடி லாங்குவேஜும் போகப்போக கற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

ஹீரோயினின் அழகை ஹீரோ புக்ழ்ந்து பாடும் ஓப்பனிங்க் சாங்க் ஆன “நீ ஒன்றும் அழகில்லை” பாட்டு அங்காடித்தெருவின் சூப்பர்ஹிட் மெலோடி ஆன அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாட்டின் உல்டா.யூ டூ வைரமுத்து சார்?
ரூம் ஃபுல்லா காதலியின் ஃபோட்டோ ஒட்டி வைப்பதும்,அதைகொஞ்சுவதும் ஓவர் செயற்கை.குஷி படத்தில் எஸ் ஜே சூர்யா செய்த ஓப்பனிங் சீன் டெக்ன்க்கை ரவி இதில் காப்பி அடித்திருக்கிறார்.
காதலித்துப்பார் கவிதை வரும் என்ற புகழ் பெற்ற கவிதையை இன்னும் எத்தனை படத்தில் பார்க்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை.அதைத்தான் ஜோடி படம் உட்பட பல படங்களில் பிரித்து மேய்ந்து விட்டார்களே?
இயக்குனர் ஒரு அவசரக்காரர் என்று நினைக்கும்ப டி  படத்தின் காட்சிகள் படபட என கட் ஆகி கட் ஆகி ஸ்பீடு ஆக போகுது,அது ஏன்?படம் ஸ்பீடு என பெயர் வாங்கனும்னா திரைக்கதை ஸ்பீடா இருக்கனும்.இப்படி எடிட்டர்ட்ட சொல்லி பட பட கட்டிங்க் கூடாது.

ஹீரொயின் ஒரு காட்சியில் எருமைகளுடன் வருகிறார்.அது காமெடிக்கா?அழகியல் வெளிப்பாட்டுக்காக வைக்கப்பட்டதா?இந்த மாதிரி பல கேள்விகள் இயக்குனர் பதிலுக்காக காத்திருக்கு.

தேடித்தேடிப்பார்த்து நான் கண்ட வசனத்தில் மனதைக்கவர்ந்த சீன்கள்.

1. என்னப்பா,வயக்காட்ல பொண்ணுங்களையும் காணோம்,அவங்ககிட்ட கடலை போடற பசங்களையும் காணோம்?
2. பொண்ணு யாரு?
இன்னும் மேரேஜ் ஆகலை.
ஓ,தள்ளிட்டு வந்ததா?

3.பாப்பா,உனக்கு என்ன வயசு?    30
எத்தனை வருஷமா?                       ம்,30 வருஷமா.


4.புருஷன் சந்தோஷமா எந்த வேலை செய்தாலும் அது இந்தப்பொண்ட்டாட்டிங்களுக்கு பிடிக்காதே?

5.உங்களை நம்ப முடியாது.நான் வீட்ல இல்லைனா வேலைக்காரியை கரெக்ட் பண்ணுவீங்க,ஆஃபீஸ் போனா டைப்பிஸ்ட்டை  கரெக்ட் பண்ணுவீங்க.

புது மண ஜோடிகள் தனி அறையில் கொஞ்சி குலாவும்போது “எனக்கு இது புதுசா இருக்கு  என ஹீரோ சொல்வதும்,அதை ஒளிந்திருந்து பார்க்கும் வாண்டுகள் “அங்கிள் .எங்களூக்கும் இது புதுசுதான் என கலாய்ப்பது ரசனையான சீனாக இருந்தாலும் சமூக நலன் கருதி அந்த மாதிரி சீன் வைக்காமல் இருப்பது நல்லது.
என்ன பிடிக்கும் பாட்டில் ஒளிப்பதிவாளர் பின்னி எடுக்கிறார் என்றாலும் அந்த கட் ஷாட் டெக்னிக் கதிரின் காதல் வைரஸ் படத்தில் ஏய் ஏய் என்ன ஆச்சு உனக்கு பாட்டு எடுக்கப்பட்ட ஸ்டைலின் காப்பி.அதே போல் ஆணூம் ,பெண்ணும் இல்லை என்றால் பாட்டு ம்ணிரத்னத்தின் அலைபாயுதே படப்பாடலான செப்டம்பர் மாதம் பாட்டின் உல்டா.
 
கே பாலச்சந்தரின் கல்கி ஹீரோயின் மாதிரி கேரக்டரைசேஷன் செய்த டைரக்டர் அதை நிறுத்தி நிதானமாக ,தெளிவாக சொல்ல வேணாமா?
திடீர் என ஊரை விட்டு ஓடிப்போன தன் மகளை எந்தத்தந்தையாவது சிலாகித்துப்பாராட்டுவாரா?ஃபாரின் படத்தில் கூட நடக்காது.சிலிப் ஆன பல கட்டங்களில் இதுவும் ஒன்று டைரக்டர் சார்.மாதம் ரூ 1 லட்சம் சம்பளம் வாங்கும் ஹீரோயின் வாயிலிருந்து துட்டு என்றெல்லாமா வார்த்தைகள் வரும்?

படத்தில் ஆறுதலான் ஒரே விஷயம் சந்தானம்.இடைவேளைக்குப்பிறகு தான் வருகிறார்.முக்கியமான காமெடியை சொல்ல மறந்துட்டனே,45 நிமிஷத்துல படத்துல இடைவேளை வந்துடுது.இடைவேளைக்குப்பிறகு 50 நிமிஷம் ஓடுது.மொத்தமே ஒன்றரை மணி நேரம்தான் படம( ஒரு வேளை படத்தை இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கனும்னு புரொடியூசர் சொல்லி இருப்பாரோ?)

பஸ் டிரைவராக வரும் சந்தானம் பஸ் பயணி செல் ஃபோனில் ஸ்டாப் இட் என கத்துவதைக்கேட்டு சடன் பிரேக் போடும் சீன் செம கைதட்டல்.கவுண்டமணியின் பாடிலேங்குவேஜை ,அவர் ஸ்டைல் ஆஃப் டயலாக் டெலிவரியை சந்தானம் தவிர்ப்பது நல்லது.எவளைப்பார்த்தாலும் என் பொண்டாட்டி மாதிரியே தெரியறா,என அவர் புலம்புவதும்,மனைவியிடம் இனி காலிங்க் பெல்லை உன் காதுக்குள்ளதான் வைக்கனும் என கலாய்ப்பதும் ரகளையான சீன்கள்.
நல்லாருக்கற முடியை கலைச்சு விட்டுட்டு ஏண்டி இங்கே வர்றீங்க? என அவர் கலாய்ப்பது அனைத்து பந்தா பார்ட்டி பார்வதிகளுக்கும் பொருந்தும் என்பதால் தியேட்டரில் செம விசில்.அவரது செல் ஃபோனில் வைத்திருக்கும் ரிங்க்டோன்(கா கா கா எனும் பராசக்தி பாடல்),கலரிங்க் ஹேர் விக் என படத்தின் ஒரே பூஸ்ட் அப் அவர் தான்.அவர் சீட்டுக்கு அடியில் பாம் என ஃபோன் வந்ததும் என்னது கண்ணி வெடியா? அதை ஏண்டா அங்கே வெச்சீங்க?வேற இடம் கிடைக்கலை? என புலம்புவது சூப்பர்.ஆனால் அந்த மாதிரி காமெடி ஜெய்ஹிந்த் படத்துலயே கவுண்டமணி செந்தில் பண்ணிட்டாங்க.

இடைவேளை ட்விஸ்ட்டுக்காக வரும் வில்லன் எடுபடவில்லை.லவ் கிஃப்ட்டை ஹீரோயினுக்கு கொடுக்கும் ஹீரோ எக்ஸ்பிரஸ்சன்ஸ் எப்படி இருக்க வேணும்? ஆனால் அவர் என்னடாவென்றால் பக்கோடா பொட்டணம் பிரிப்பதைப்போல் தேமே என முகத்தை வைத்திருக்கிறார்.அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லாம் என்னப்பா பண்ணுனீங்க?

நீயா? நானா? புரோகிராம் மேல டைரக்டருக்கு என்ன கோபமோ அதை ஒரு வாரு வாரி இருக்கார்.(பதிலுக்கு விஜய் டி வி ல இந்தப்படத்தை ஒரு கிழி அல்லது 9 கிழி கிழிக்கலாம்.இயக்குனர் சீமான் அந்த ஒரு சீனில் வந்து கவர்ந்தாலும் கடுப்பில் இருக்கும் ஆடியன்ஸை அது சமாதானப்படுத்தாது,

அதே போல் ரொம்ப முக்கியமான சீன் ஆன கல்யாண முகூர்த்தப்புடவையை தவறுதலாக வேலைக்காரிக்கு கிஃப்ட்டா குடுக்கும் சீன் செம சொதப்பல்.நாடகத்தனமாய் அப்படியா அந்த வேலைக்காரியை ஹீரோ முன் ஓட விடனும்?

கல்யாணத்துக்கு முன் லிவிங்டொகெதர் தம்பதியாய் வாழ்வதால் ஹவுஸ் ஓனர் காலி பண்ணசொல்வதும்,அடுத்த சீனிலேயே லேப்டாப்பில் தேடி 50 லட்சம் மதிப்புள்ள பங்களாவை வாங்குவதும்,அடுத்த 10 நிமிஷத்துல்யே அந்த பங்களாவை அம்போ என விட்டு இருவரும் ஹைதராபாத் 30 நாள் கேம்ப் போவதும் டைரக்டரின் லாஜிக் மீறலை காண்பிக்கும் முட்டாள்தனமான சீன்கள்.


எச்சரிக்கை 1 - மனசுல என்ன நினைச்சுட்டு படத்தை டைரக்டர் எடுத்தார்,புரொடியூசர் என்ன நினைச்சு இதற்கு ஃபைனான்ஸ் பண்ணினார் என யாராவது விளக்கினால் அவருக்கு 1000 பொற்காசுகள் பரிசு.
எச்சரிக்கை 2 - ஏ ,பி ,சி ,டி , ஈ,எஃப் என எந்த செண்ட்டரில் இந்தப்படம் 10 நாட்கள் ஓடினாலும் ஓட்டிய தியேட்டர் ஓனருக்கு 1 லட்சம் பரிசு.சிரிச்சா சந்தோஷம்,இல்லைனா தோஷம்


திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்,அல்லது சன்மானத்தை எதிர்பார்க்காத தன்மானத்தமிழன்னு வெளில சொல்லிக்க வேண்டியதுதான்.ஏனெனில் இன்று ஊடகத்துறை மிக மோசமான பொருளாதாரசிக்கலில் சிக்கி பத்திரிக்கை நடத்துவதே பெரிய சவாலாக இருக்கும் வேளையில் ஒன்றையணா ஜோக் எழுதி சார்,சன்மானம் ?என்று கேட்பது சரியாக இராது.எனவே கொடுத்தா சந்தோசமா வாங்கிக்கறது ,இல்லைனா விட்டுடறதுனு போனாத்தான் நல்லது.புதிய பாரவை இதழில் வெளியான ஜோக்ஸ் இவை.

டிஸ்கி -

அழகிய பேக்கிங்கில் என விளம்பரங்களில் சொல்லுவது போல் ஸ்வாதியின் ஸ்டில்கள் சும்மா ஒரு அட்ராக்‌ஷனுக்கு.Wednesday, August 25, 2010

தம்புராட்டியின் தத்துவங்கள் 18+

10 வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்,ஈரோடு நடராஜா தியேட்டரில் தம்புராட்டியின் தாகம் என்ற படம் பார்க்க கையில் 2 லிட்டர் வாட்டர் பாட்டிலுடன் போனேன்.(தாகம் நமக்கும் எடுத்தால் குடிக்க).ஆனால் என்ன ஒரு பரிதாபம் என்றால் சுத்தமான சைவப்படம் அது.வாழ்க்கை நொந்துபோய் வீட்டூக்கு வந்து சோகத்தில் எழுதிய ததுவங்கள் இவை.19 தத்துவங்கள் இருப்பதால் 18+ என அடைமொழி,மற்றபடி அனைவரும் படிக்கலாம்.இது புதிய பார்வை ஆகஸ்ட் 15 இதழில் வெளியானது.

Tuesday, August 24, 2010

கைபேசி எண் -சினிமா விமர்சனம்

அன்புள்ள இயக்குனர் விஷ்வக்சேனன் அவர்களுக்கு வணக்கம்,

பொதுவாக விமர்சகர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டை நீங்கள் என் மேலும் வைக்கக்கூடும்.1000 குறை சொல்லலாம்,நீ செஞ்சு பாரு,அப்பதான் அதன் கஷ்டம் தெரியும்,2 வருஷம் கஷ்டப்பட்டு படம் எடுப்போம் 2 லைன்ல படம் சரி இல்லைனு விமர்சனம் எழுதிட்டு போய்ட்டே இருப்பீங்க என்று நீங்கள் கோபப்படக்கூடும்.ஆனால் என் நோக்கம் படைப்பாளிகளின் திறமையை குறைத்து மதிப்பிடுவதோ,அவர்களை எள்ளல் செய்வதோ அல்ல,மேன்மேலும் அவர்கள் மெருகேற வேண்டும் என்பதே,எனவே பொறுமையாகப்படிக்கவும்.

முதல்ல உங்கப்படத்துல இருக்கற பிளஸ் பாயிண்ட்ஸ் 3 இருக்கு,அதை பார்ப்போம். 1.போஸ்டர் டிசைன். 2.ஹீரோயின் செலக்‌ஷன். 3.இடைவேளைக்குப்பின் வரும் சில காட்சிகள்.

1.போஸ்டர் டிசைன் -ஒரு லேடி ஒரு ஆளோட டெட் பாடியின் ஒரு காலை மட்டும் பிடித்து காட்டில், இரவில் அமானுஷ்யமான சூழ்நிலையில் இழுத்து செல்வது போல் ஒரு ஸ்டில் செலக்ட் பண்ணுனது அருமை.அதுவே படத்துக்கு என்னை இழுத்து வந்தது.
2.ஹீரோயின் செலக்‌ஷன் -படத்தை பொறுமையா கொஞ்சமாவது பாக்க முடியுதுன்னா அது ஹீரோயின் முக தாட்சண்யத்துக்காகத்தான்.நல்ல ஹோம்லி லுக் +கண்ணியமான தோற்றம்,கவர்ச்சியாக காண்பிக்காமல் டீசண்ட்டாக காண்பித்தது.
3.இடைவேளைக்குப்பின் வரும் சில காட்சிகள். -படத்தோட செகண்ட் ஆஃப்ல வர்ற அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள்,அமானுஷ்யக்காட்சிகள்.
படத்தோட கதை என்ன?மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தனது குழந்தையையே கொல்லும் கணவனை கொல்லும் மனைவி தன் வீட்டின் எதிர் வீட்டில் குடி வரும் புதுமணத்தம்பதியுடன் பழகுவதும்,கர்ப்பவதியான புதுமணப்பெண்ணின் குழந்தையை தன் குழந்தையாக பாவிபதும்,அந்த சைக்கோ பெண்ணிடம் இருந்து புதுமணத்தம்பதிகளை காப்பாற்றுவதும்தானே?
சஸ்பென்ஸ்  படமோ,திரில் படமோ எடுக்க ஆசைப்படும் அனைவருக்கும் பொருத்தமான ஒரு ஐடியாவை உங்களுக்கும் கூறுகிறேன்.தயவு செய்து காமெடி காட்சிகள் ,டூயட் காட்சிகள் வைக்காதீர்கள்,அது படத்தின் டெம்போவைக்குறைத்து விடும்.படத்தோட ஓப்பனிங்க் சீன் ல இருந்தே ஒரு பதட்டமும்,பயமும் ஆடியன்சுக்கு வரனும்.அதுக்கு தகுந்த மாதிரி காட்சிகள் வைக்கனும்.
நீங்க லவ் சப்ஜெக்ட் எடுக்கற மாதிரி 4 பசங்க குட்டிசுவர் மேல நின்னு கேர்ள்ஸை கமெண்ட் அடிக்கறது,லவ் பண்றது,காலி ஃபிளவர் கிஃப்டா தர்றது.காத்லுக்கு எதிர்ப்புனு தேவை இல்லாம 5 ரீல் படத்தை இழு இழுனு இழுத்திடீங்க.அதுவும் கற்பனை வறட்சி.
முதல்ல 100வது நாள்,நாளை உனது நாள் போன்ற சஸ்பென்ஸ் படங்களை பாருங்க.ஒரு படைப்பாளன் தனது படைப்பை உருவாக்கும்  முன் தனக்கு முன் அதே துறையில் சாதனை படைத்த திறமைசாலிகள் படைப்பை உணரனும்,கத்துக்கனும்.
அப்புறம் முக்கியமான விஷயம் அந்த லேடி ஹீரோவின் காலைப்பிடித்து இழுத்து செல்லும் காட்சியை 10 நிமிஷமா ஏன் காட்டிட்டே இருக்கீங்க,பயம் போய் சலிப்புதான் வருது.ஹீரோ புரொடியூசர் பையன்னு நினைக்கிறேன்(அறிமுக நாயகன்னு பட்டப்பெயர் இருக்கே)தேறாத கேஸ்.காட்சி அமைப்புகளில் நாடகத்தனம்,அனுபவமின்மை அப்பட்டமாய் வெளிப்படுகிறது.
இசை.ஒளிப்பதிவு எல்லாம் சுமார்தான்.பாடல் காட்சிகள் நோ கமெண்ட்ஸ்.
அமானுஷ்ய லேடி பங்களா ஓகே,லொக்கேஷன் செலக்‌ஷன் குறை சொல்ல முடியாது.படத்தின் முன் பாதியில் டபுள் மீனிங் டயலாக் ஓவர்.படத்துக்கு லேடீஸ் வர்றது டவுட்தான்.(படத்துக்கு ஆடியன்ஸ் வர்றதே டவுட்தான்)
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டைரக்டர் சார்.

Monday, August 23, 2010

இந்தியக்குடிமகன்(ள்)கள் மட்டும் படிக்கவும்பத்திரிக்கை உலகில் ரூ 50 ,ரூ 100 என சன்மானம் தரும் நேரத்தில்
 தினமலர் மட்டும் ஜோக்குக்கே ரூ 500 தருவது ஆச்சர்யமானது.
ஏனெனில் பெரிய பெரிய பத்திரிக்கைகளில் 4 பக்கம் எழுதும்
 கட்டுரைக்கே  ரூ 250 தான் தருகிறார்கள்.அப்படிப்பட்ட சூழலில்
தினமலர் வாரமலர் இதழில் 4 வரி ஜோக்குக்கே ரூ 500 தருவதும்,
பெஸ்ட் ஜோக்கிற்கு ரூ 1000 தருவதும் நினைவு கூறத்தக்கது.
இந்த வார புத்தகத்தில் எனது ஜோக்கும் வ்ந்துள்ளது.உங்களுடன்
 அதை பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, August 22, 2010

ஜாலிலோஜிம்கானா விருதுகள்


1.இந்த வாரத்தின் சிறந்த சால்ஜாப்பு சாஞ்சனா விருது குணச்சித்திர நடிகை நமீதாவுக்கு.த டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் கேட்ட “வர வர நீங்க குண்டாகிட்டே இருக்கீங்களே?” என்ற கேள்விக்கு தமிழக ரசிகர்கள் குண்டான ,புஷ்டியான நடிகைகளைத்தான் விரும்புகிறார்கள் என்று கூறி சமாளித்ததற்காக.

2. இந்த வாரத்தின் சிறந்த புலம்பல் புலிகேசி + லபோ திபோ லவகுசா விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ, எங்களுக்கு கோவில் தர்மகர்த்தா போஸ்ட் கூட கிடைப்பதில்லை என இந்தியா டுடே, புதிய பார்வை இதழ்களில் புலம்பியதற்காக.

3. இந்த வாரத்தின் சிறந்த அன்லக்கி அண்ணாசாமி விருது வை.கோ விற்கு,6% ஓட்டு வாங்கி இருந்தால்தான் கட்சிக்கான அங்கீகாரம் என வலியுறுத்திய தேர்தல் கமிஷனிடம் 5.98% என்பது 6% என்றுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என வாதாடித்தோற்றதற்காக.

4. இந்த வாரத்தின் சிறந்த அதிகப்பிரசங்கி அய்யாசாமி விருது கவிஞர் வைரமுத்துவின் மகன் கார்க்கிக்கு,எந்திரன் படம் பற்றி சம்பந்தப்பட்ட இயக்குனர்,ஹீரோ இருவரும் அடக்கி வாசிக்க,இவர் மட்டும் என் டி டி வி க்கு அளித்த பேட்டியில் “இந்தப்படத்தில் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் இல்லை,இது ஒரு இயக்குனரின் படம்”என கூறி ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டதற்கு.

5. இந்த வாரத்தின் சிறந்த ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம் விருது கலைஞருக்கு,திருச்சியில் நடந்த மீட்டிங்கில் திருக்குவளையின் தீய சக்தி என ஜெ தன்னை வர்ணித்த 7வது நிமிடத்தில் “வாய்தா ராணி “எனப் பட்டப்பெயர் இட்டு முரசொலியில் நக்கலடித்ததற்கு.6.அய்யய்யோ,வட போச்சே என புலம்பும் வடக்குப்பட்டி ராமசாமி விருது இயக்குனர் கே பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனுக்கு,களவாணி படத்தில் இயக்குனர் சற்குணம் நடிக்க அணுகியபோது கதை பிடிக்கவில்லை எனக்கூறி ஒதுக்கி விட்டு,இப்போது படம் ஹிட் ஆனதும்  சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பேட்டியில் புலம்பியதற்கு,

7.சீ... சீ... இந்தப்பழம் புளிக்கும் எனும் நொந்து நூடுல்ஸ் நரி விருது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு,அஜித் வேண்டாம் என புராஜக்ட்டை கை விட்ட பிறகு ,எனக்கு இனி அஜித் தேவை இல்லை என வீராப்பாக ஸ்டார் டஸ்ட்,ஆனந்த விகடன் ஆகிய  இதழ்களில்  பேட்டி அளித்ததற்கு.

8.இந்த வாரத்தின் சிறந்த நாட்டு நலப்பணி ஆற்றிய நல்ல தங்காள் விருது 
குமுதம் வார இதழுக்கு,3 பக்கத்துக்கு கட்டுரை போட்டு விஜய்யின் அடுத்த பட டைட்டில் காவல் காதல் அல்ல,காவலன் என உலகிற்கு அறிவித்து சமுதாய விழிப்புணர்ச்சியை ஊட்டியதற்காக.

9. இந்த வாரத்தின் சிறந்த செண்ட்டிமெண்ட் செண்பகம் விருது டான்ஸ் மாஸ்டர் கலாவிற்கு,கலைஞர் டி வி யில் மானாட மயிலாட நிகழ்ச்சியில்  அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு நம்மை பயமுறுத்தியதற்கு.

10.இந்த வாரத்தின் சிறந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒப்பிலியப்பன் விருது விஜய்காந்துக்கு,22 8 10 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் தி மு க ,அ தி மு க தவிர வேறு எந்தக்கூட்டணியாக இருந்தாலும் தலைமை ஏற்க தயார் என அறிவித்ததற்காக.

Saturday, August 21, 2010

நான் மாக்கான் அல்ல-ரசிகர்கள் விமர்சனம்

ஹீரோ-முத படம் வில்லேஜ் சப்ஜெக்ட்ல மெகா ஹிட் குடுத்தாச்சு,2 வது படம் ஊத்திக்கிட்டாலும் மேக்கிங்க் ஸ்டைல்லில்,என் நடிப்பில் யாரும் குறை சொல்ல முடியாது,3வது படம் ஹிட் (பருத்தி வீரன்,1000 ல் ஒருவன்,பையா).4வது படம் ஒரு ஆக்‌ஷன் படமா கமல் நடிச்ச வேட்டையாடு விளையாடு டைப்ல,எம் சசிகுமார் எடுத்த நாடோடிகள் மாதிரி பரபரப்பா ஒரு படம் பண்ணனும்.


டைரக்டர்-மாதிரி என்ன மாதிரி,அதே கதையை அப்ளை பண்ணி ஒரு காக்டெய்ல் கதை பண்ணிடுவோம்.


ஹீரோ-சரி,படத்தோட ஒன் லைன் ஸ்டோரி சொல்லுங்க.


- 
டைரக்டர் -   அப்பாவைக்கொன்னவங்களை பழி வாங்கற பையனோட கதைதான்,பழைய கதைனு யாரும் சொல்லிட முடியாதபடி ஸ்க்ரீன்ப்ளே மேஜிக் கைவசம் இருக்கு.ஜோடியா பொம்மலாட்டம் காஜல் அகர்வாலை போட்ரலாம்,ஓவர் ஆக்டிங்க் ஓமனா விருது அவங்களுக்கு இந்தப்படத்துல கிடைக்கலாம்.5 லட்சம் சம்பளம் குடுத்தா அம்மணி 20 லட்சம் சம்பளத்துக்கு நடிக்குது,நீங்க வேணா பாருங்க அவங்க ஜூனியர் ஜோதிகானு பேரு வாங்கப்போறாங்க.

ஹீரோ - அதெல்லாம் ஓகே,நீ என் பக்கத்துல நின்னா நான் கொஞ்சம் பிரைட்டா தெரிவேன்னு ஒரு காமெடி சீன் வெச்சிருக்கீங்களே,அது பல வருஷங்களுக்கு முன்பே தூறல் நின்னு போச்சுல வந்த சீன் ஆச்சே.


டைரக்டர்- ஆமா,உங்க கண்ணுக்கு எப்பவும் மைனஸ்தான் தெரியும்,படத்தோட முதல் பாதில 17 காமெடி சீன் படத்தோட ஒட்டி இருக்கற மாதிரி இருக்கே,6 இடத்துல செம அப்ளாஷ் வாங்குச்சே அதை பற்றி பேசுங்க.

ஹீரோ - 1.நாம என்ன சாப்பாட்டுக்காகவா கல்யாணத்துக்கு வந்தோம்?

அதுல என்ன டவுட்?

2.ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கட் எடுத்தா படம் பார்ப்பீங்க?

நோ, நோ பத்து ரூபா டிக்கட் கவுண்ட்டர்ல தான் செம ஃபிகருங்க வரும்.

3.என்னா அண்ணே,பொண்டாட்டிக்கு தோசை சுடறீங்க?ஹூம்,விட்டுக்குடுத்து வாழ்னு சொல்வாங்க,சுட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததுனு நினைப்பே போல.

4.சில செக்கை பேங்க்ல போட்டாதான் பவுன்ஸ் ஆகும்,இவன் குடுத்த செக்கை கீழே போட்டாலே பவுன்ஸ் ஆகிடும்.

5.கடக ராசி,பூஷ நட்சத்திரம்.ஐ லவ் யூ சீன்

இதெல்லாம் காமெடிதான்,ஓகே,ஆனா எல்லா புகழும் வசனக்ர்த்தா பாஸ்கர் சத்திக்குதானே போகும் ,நீங்க எங்கே வர்றீங்க?

டைரக்டர் - ஏன்,காஜலுக்கு நீங்க ஐஸ்க்ரீம் குடுக்க்ற சீன்,பசங்களை பார்த்ததுமே நம்பிடக்கூடாதுனு தோழி காஜலுக்கு சொல்ற சீன்,ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டு மெதுவா கொண்டு வாங்க என அமர்த்தலா சர்வர்ட்ட சொல்ற சீன்,காஜல்ட்ட ஃபோன்ல பேசிட்டே அவங்க வீட்டுக்கே வ்ந்து சம்பந்தம் பேசற சீன் எல்லாமே டைரக்‌ஷன் டச் உள்ள சீந்தானே?

ஹீரோ - எப்படியோ யுவனை பிடிச்சு 3 ஹிட் பாட்டு வாங்கிட்டீங்க?வா வா நிலவை பிடிச்சு பாட்டுக்கு ரசிகர்கள் செம அப்ளாஸாமே?கண்ணோரம் பாட்டுக்கு உங்க ஜிம்மிக்ஸ் வேலைகள் கனகச்சிதம்.ஆனா அடிக்கடி நான் செல் ஃபோன்ல பெசிட்டே வண்டி ஓட்டற மாதிரி 8 சீன் வெச்சு இருக்கீங்களே ,எதுக்கு?

டைரக்டர் - படத்துல என்ன சொல்ல வர்றீங்கனு எவனும் கேட்டுடக்கூடாது,பைக்ல போறப்ப ஃபோன் பேசக்கூடாது அப்ப்படிங்கறதுதான் மெஸேஜ்னு சொல்லி சமாளிக்கலாம்.வில்லன் குரூப்பை க்ளைமாக்ஸ்ல ஹீரோ அதகளம் பண்ற சீன்ல பின்னீட்டமில்ல?அனல் அரசு கலக்கிட்டாரு.


ஹீரோ - அது ஓகே,ஆனா ரன் படத்துல மாதவன் செஞ்ச மாதிரியே இருக்குன்னா என்ன பண்றது?அது கூட தேவலை.கல்யாண வீட்ல கரண்ட் போனதும் வழக்கமா ஜெனெரேட்டர்தானே போடுவாங்க?1000 மெழுகுவர்த்தி எல்லாம் யார் இந்தக்காலத்துல ஏத்த்றாங்க?

டைரக்டர் - அப்பதாங்க பாட்டு சீன்ல ஜாலவித்தை காண்பிக்க முடியும்?வெண்ணிலா கபாடி குழுல வந்த புரோட்டாக்காமெடி செஞ்சவரை இன்னும் நல்லா உபயோகிச்சிருக்கலாம்.பின்னணி இசைலயும் யுவன் கிட்ட இன்னும் நல்லா வேலை வாங்கி இருக்கலாம்னு தோனுது.

ஹீரோ - பின்னால் ஒரு பெரிய சாட்சியாக வந்து நிற்பான்னு தெரிஞ்சும் யாராவது ஃபோனை வாங்கி அதுல வில்லனின் ஃபோன் நெம்பரை போட்டு பேசுவாங்களா?அதுல ரெக்கார்டு ஆகும்னு தெரியாதா?

டைரக்டர் - சரி விடுங்க,மிஸ் ஆகிடுச்சு.உங்கப்பாவை கொலை பண்ற காட்சி,ஏரியா தாதாவை பொடிப்பசங்க போட்டுத்தள்ள்ற சீன் எல்லாம் செம விறுவிறுப்புதானே?


ஹீரோ - அவ்வளவு பெரிய தாதா ஒரு பொடியன் பாட்டிலை உடச்சு மிரட்னதும் ஓடறது நம்பற மாதிரி இல்லை.
டைரக்டர் - படம்  போற செம ஸ்பீடு விறு விறுப்புல அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க.படத்துல வன்முறை அதிகம்னு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான் முன்பாதி பூரா படத்துக்கு சம்பந்தமில்லைனாலும் காதல்,காமெடி,நக்கல்,நையாண்டினு கொண்டு போனேன் பார்த்தீங்களா?

ஹீரோ - அதுலதான் பிரச்சனை,முதல் பாதி காமெடி,செகண்ட் ஆஃப் ஆக்‌ஷன் த்ரில்லர்னு திடீர்னு படம் கலர் மாறுதே அதை ரசிகர்கள் எந்த அளவு ஏத்துக்குவாங்கன்னு தெரியலை.

டைரக்டர் -  ஒண்ணும் கவலைப்படாதீங்க.போட்ட முதல் கண்டிப்பா வந்துடும்.நல்ல ஓப்பனிங்.ஈரோட்லயே 4 தியேட்டர்,திருப்பூர்ல 7 தியேட்டர், 2 வாரம் ஓடுனாலே போதும் அள்ளிடலாம்.எப்படியும் படம் எல்லா செண்ட்டர்லயும் சராசரியா 50 நாள் ஓடிடும்.அடுத்த படமும் நம்ம காம்பினேஷன் தான்.

இனிது இனிது - சினிமா விமர்சனம்

படத்துக்கு பேசாமல் (அல்லது பேசிக்கிட்டே) ஃபோர் பிளஸ் ஃபோர் (4 + 4) என டைட்டில் வைத்திருக்கலாம்.4 லவ் ஜோடிகள்,அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்,ஊடல்கள்  என இளமை ததும்பும் கதைதான்.ஆனால் திரைக்கதை..?

டூயட் மூவிஸ் சார்பில் பிரகாஷ்ரா‌ஜ் தயா‌ரித்திருக்கும் படம், இனிது இனிது. தெலுங்கில் சேகர் கம்மூலா இயக்கத்தில் உருவாகி மிகப்பெ‌ரிய வெற்றி பெற்ற ஹேப்பிடேஸ் படத்தின் தமிழ் ‌ரீமேக் இது.


 தெலுங்குக்காரர்களுக்கு ஒருவேளை இந்தக்கதை புதுசாக இருந்திருக்கலாம்.நாம் தான் ஏற்கனவே சுசிகணெசனின் 5 ஸ்டார்,ஒரு கல்லூரியின் கதை,பறவைகள் பலவிதம் என பலவிதத்திலும் பார்த்து சலித்தாகி விட்டதே.


காதலன் படத்தில் ஹீரோவின் அப்பா ஹீரோவோடு சேர்ந்து தண்ணி அடித்தாலும் அடித்தார்,அதை அப்படியே காப்பி அடித்து பல படங்களில்... இப்போ  இந்தப்படத்தில் அதை விட ஒரு படி மேலே (கீழே?) போய் சைட் அடிக்க செட்டா போறாங்க(பரிணாம வளர்ச்சி?).கொடுமை.

காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் எல்லோரையும் அவர்கள் பெற்றோரெ காலேஜ்க்கு டிராப் பண்ணுவதாக இயக்குனருக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை.4 ஜோடிகள் என முடிவான பிறகு ஆர்டினரி,ஹிப்பி,ஃபங்க்,லூஸ் என வெரைட்டிக்கு ஒன்று என தேர்வு செய்த இயக்குனரின் எண்ணம் ஓகே,ஆனால் அது தேவை இல்லாதது.
ரேகிங்க் சீனின் ஓப்பனிங்க் காட்சிகள் ஓகே, ஜாலி ரகம்.தமிழ் வழிக்கல்வியை ஆரம்பத்தில் கிண்டல் அடித்து பின் சாமார்த்தியமாக பாசிடிவ்வாக திருப்பி அடிப்பதில் இயக்குனர் சபாஷ் பெறுகிறார்.பாடகியாக வரும் ஹீரோயின்,அப்புவாக வரும் சோடா புட்டி,மூடி டைப்பாக வரும் சீனியர் என 3 பேருக்கும் சரியான போட்டி.அதில் வென்றது அப்புதான்.

முதல் பாடல் காட்சியில் பிரம்மாண்டமாக தேசியக்கொடியை மேலிருந்து கீழே பறக்க விட்டு பூக்களை சொறியச்செய்து எடுத்த சீன் இயக்குனர் எதிர்பார்த்த தியேட்ட ரெஸ்பான்ஸை பெறாததற்குக்க்காரணம் அது ஒரே ஷாட்டாக காண்பிக்கப்படாமல். கட்ஷாட்டாக காண்பிக்கப்பட்டதுதான்.

அமெரிக்காவே கடன் கேட்கும் எனும் பாடல் வரிகளில் வைரமுத்து உள்ளேன் ஐயா சொல்கிறார்.
ஹீரோவாக வரும் புதுமுகம் சிபிராஜ் சாயல்,ஆனால் அவரை விட நல்லாவே நடிக்க முயற்சிக்கிறார்.லன்ச் காட்சிகளில் காலேஜில் அனைவரும் பிளாஸ்டிக் ஸ்பூனால் சாப்பிடுவது போன்ற காட்சி எதற்கு?மதுவாக வரும் ஹீரோயின் உயிர் சங்கீதா சாயல்.முக வசீகரம்,புன்னகை,கண்ணியமான தோற்றம் என கோல் அடிக்கிறார்.ஆனால் அவருக்கு மனசுக்குள் தான் ஒரு சூப்பர் ஃபிகர் என்ற சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் என்ற எண்ணம் மேலோங்கியதால் பர்ஃபார்மென்சில் கோட்டை விடுகிறார்.

காக்கா கக்கா போன சாப்பாட்டை ஹீரோயினடம் இருந்து பிடுங்கி வில்லன் சாப்பிடும் சீனை இயக்குனர் காமெடி சீன் என நினைத்தால் சாரி.

படம் பூரா பின்னணியில் கதை சொல்லும் உத்தி எடுபடவில்லை.
லெக்சரரையே வாட் எ பியூட்டி என கொஞ்சுவது ஓவர் என்றாலும் ரசிக்கலாம்.ஆனால் எந்த காலேஜில் லேடி லெக்சரர் இப்படி லோ கட்,லோ ஹிப் என கலக்கலாய் வர்றார் என இயக்குனர் விளக்கினால் நல்லது.
FILE


இனிது இனிதுவை ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கியிருக்கிறார். குஷி, நியூ, மொழி, தெலுங்கு அத்தடு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த குகனின் முதல் இயக்குனர் முயற்சி இந்தப் படம்.

கல்லூரியின் முதல் நாளில் தொடங்கும் படம் இறுதி நாளான ஃபேர்வெல் டேயில் முடிகிறது. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களின் நட்பு, காதல், மோதல், துரோகம், பச்சாதாபம் என அனைத்தையும் மிகை இல்லாமல் சொல்கிறது.

இனிது இனிது பாடல் காட்சியில் இயக்குனரின் பல சின்ன சின்ன ஐடியாக்கள் சூப்பர்.குறிப்பாக புகையில் வானில் அவரவர் விருப்ப ஆட்களின் உருவம் வரவைப்பது,SMS பண்ணுவதை ஸ்க்ரீனில் எழுத்துக்களாக காட்டுவது அனைத்தும் அருமை.

சீனியர்-ஜூனியர் லவ் மிக யதார்த்தமாக வந்திருக்கிறது.முதலில் உம்மனாமூஞ்சியாக வருபவர் படிப்படியாக புன்னகையிலேயே காதலை  வழிய விடுவது அற்புதம்.
டீச்சரிடம் (?) ஒப்பிக்கும்போது அவர் லோ ஹிப்பில் மயங்கி அடச்சே காத்து வந்து கவுத்திடுச்சு என புலம்புகையில் தியேட்ட ர் அதிர்கிறது.

1)பர்த்டே பார்ட்டிக்கு நான் வர்லை


ஓகே நான் வேணா அவ கிட்ட சொல்லி பர்த்டேவை போஸ்ட்போன் பண்ண
சொல்லவா?
2)பிடிச்சிருந்தா வா,பயமா இருந்தா வேணாம்

2ம் ஒண்ணா இருந்தா?
அப்படி இருக்க சான்ஸ் இல்லை.


3)சண்டை போடறது ஈஸி,பின் அதை சமாதானப்படுத்தறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

4)எதுவா இருந்தாலும் அனுபவிக்கறப்ப அதனோட அருமை தெரியறதில்லை,பிரியனும்னு நினைக்கறப்பதான் கஷ்டம் தெரியுது.

5)டியர்,உன் தலைமுடியும் சுருள் சுருளா இருக்கு,என் முடியும் சுருள் சுருளா இருக்கு.
 சோ வாட்?

அப்போ நாம லவ் பண்ணலாம்தானே?

6)ஆ,இடிச்சிடுச்சு.

ஒக்கே டியர்,காலேஜ் லீவ் விட்ரலாமா?


இதெல்லாம் வசனங்களில் இயக்குனர் சிக்ஸர் அடித்த காட்சிகள்.

கிரிக்கெட் மேட்ச் காட்சிகளை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்.பவுலிங்க் போட வரும்போது டீச்சரின் முகம் பொறித்த டீ சர்ட் போட்டு வந்து கவிழ்க்கும் சீன் சூப்பர்.அந்த கிரிக்கட் காட்சிகள் அமரர் சுஜாதாவின் நிலா நிழல் நாவலின் சுட்ட வடிவம்.
ஹீரோயினின் பர்த்டே பார்ட்டி பற்றிய முஸ்தீபுகளை ஓவராகக்க்கொடுத்து விட்டு ரொம்ப சுருக்கமாக அந்த சீனை ஏன் முடிக்க வேண்டும்?
படத்தின் தென்படும் பெரிய குறையே இயக்குனரின் குழப்பம்தான்.அவருக்கு அடிக்கடி 4 லவ் ஸ்டோரியையும் சம அளவில் சொல்ல வேண்டுமா?அல்லது ஹீரோ .ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்ற குழப்பம்தான்.இதனால் பல காட்சிகளில் அழுத்தம் இல்லை.

ஹீரோ ஜஸ்ட் ஒரு முத்தம் கேட்டதற்காக 8 ரீலகள் ஹீரோயின் பேசாமல் இருப்பது ஓவர் ( கே பாக்யராஜின் டார்லிங் டார்லிங் கிலேயே அந்த மாதிரி சீன் வந்துடுச்சே?)
அதை விட க்ளைமாக்சில் ஹீரோ பேசிய காதல் டயலாக்ஸை ஆடியோ டேப்பில் கேட்டு மனம் மாறும் ஹீரோயினின் முடிவு சொதப்பல்.

ஏ செண்ட்டர்களில் மட்டும் 50 நாட்கள் ஓடும். காதலர்கள் பார்க்கலாம்.

Wednesday, August 18, 2010

உமாசங்கர் I.A.S க்கு என் ஆதரவு...நேர்மை வெல்லும்! நீதி வெல்லும்!!


thanks to http://thedipaar.com/news/news.php?id=15132

ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த சுடுகாட்டு கூரை ஊழலை அம்பலப்படுத்தியவரும், தற்போதைய திமுக அரசு கொண்டு வந்து தற்போது முடமாகிக் கிடக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை, சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடமிருந்து காக்கப் போராடி தற்போது ஊழல் குற்றச்சாட்டை சுமந்து நிற்பவருமான ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தன்னை அரசு பழிவாங்குவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மேலும் அமைச்சர் ஒருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு ச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் ஆத்திரமடைந்துள்ள அரசு தன்னைப் பழிவாங்கும் வகையில் ஊழல் வழக்கை ஏவி விட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தில் உமா சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ளது:

தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன்.

1995-ல் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் பணியாற்றினேன். அப்போது ஜவஹர்லால்நேரு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டு கூரை கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் தவறான உத்தரவை செயல்படுத்த மறுத்துவிட்டேன்.

1996-ம் ஆண்டு விஜிலென்ஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்ட நேரத்தில் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு தொடர்வதற்கு பரிந்துரை செய்தேன்.

1999-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றினேன். 2006-ல் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், பிறகு 2008-ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டேன்.

பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.

எஸ்.சி.வியின் சட்டவிரோத நடவடிக்கைகள்

இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன்.

இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை.

ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் தமிழக அரசு

நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸாரை ஏவி விட முடியாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இம்மனு நீதிபதி தனபலான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, உமாசங்கர் மீதான ஊழல் தடுப்புப் போலீஸாரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் ஜூன் 28ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்


நன்றி-தருமி,புல்லட் பாண்டி


http://dharumi.blogspot.com/2010/08/424-complaint-filed-by-cumashankar-ias.html

Sunday, August 15, 2010

நையாண்டி நாரதரின் விருதுகள்

1.இந்த வாரத்தின் சிறந்த மேட்சிங் செண்ட்டர் மேனகா விருது நதியாவுக்கு,
ஜெயா டி வியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பூ மாதிரி ஏன் மாடல் ஜாக்கெட் அணிவதில்லை என குமுதம் கேட்ட கேள்விக்கு “குஷ்பு சைஸ் ஜாக்கெட் எனக்கு மேட்ச் ஆகாது என நக்கலாக பதில் சொன்னதற்கு.

2. இந்த வாரத்தின் சிறந்த திருநெல்வேலிக்கே அல்வா விருது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு.நாட்டின் நிதி அமைச்சருக்கே ஃபோன் போட்டு லோன் வேனுமா என பிரைவேட் ஆட்கள் கேட்கும் அளவு போனதற்கு.

3 இந்த வாரத்தின் சிறந்த அப்படியே சாப்பிடுவேன் விருது அழகிரிக்கு.ஹார்லிக்ஸ் பாட்டில்களை ஆட்டையைப்போட்டதற்கு.
4.இந்த வாரத்தின் சிறந்த கருத்து கந்தசாமி(யாரினி) விருது ஸ்ரேயாவுக்கு.எந்திரன் இசை வெளியீட்டு விழாவுக்கு தான் என்ன உடையில் வர வேண்டும் என ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி அவர்கள் வேண்டுகோள் படி சேலை அணிந்து வந்ததற்கு.

5. இந்த வாரத்தின் சிறந்த அந்தர்பல்டி ஆறுமுகம் விருது நடிகர் பருத்தி வீரன் கார்த்தி அவர்களுக்கு,பையா பட ரிலீஸ் டைமில் தமனாதான் எனக்குப்பிடித்த நடிகை என்று பேட்டி கொடுத்துவிட்டு,இப்போது நான் மகான் அல்ல பட ரிலீஸ் டைமில் காஜல் அகர்வால் அழகு என்னை அசத்துகிறது என பல்டி அடித்து பேட்டி அளித்ததற்கு.

6.இந்த வாரத்தின் சிறந்த சுற்றுப்புற சூழல் ஆர்வலர் விருது டாக்டர் ராம்தாஸ்க்கு,2011இல் ஆட்சியைப்பிடிப்போம் என சொன்னேன்,இப்போது சூழல் சரி இல்லை(!).அது சரி ஆனதும் ஆட்சி அமைப்பேன் என காமெடி செய்தமைக்காக.

7.இந்த வாரத்தின் சிறந்த சுயமரியாதைத்தலைவர் விருது கலைஞருக்கு.
நான் எல்லாருக்கும் மரியாதை செலுத்துபவன்,உன்னை நீ  என ஒருமையில் பேசி ,மரியாதை இல்லாமல் பேசுவதாக நினைத்து விடாதே என ஜெவைப்பற்றி கூட்டத்தில் பேசி கலாய்த்தமைக்காக.

8.இந்த வாரத்தின் சிறந்த வன்முறை வளர்க்கும் வாமணன் விருது பாண்டிராஜ்க்கு,பசங்க படத்தை சிறந்த மழலைகள் படமாக் எடுத்துவிட்டு,தமிழ் சினிமாவை ஒரு படி உயர்த்தியவர் வம்சம் படத்தில் கட்டற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டமைக்காக.

9.இந்த வாரத்தின் சிறந்த மார்க்கெட்டிங் மேனேஜர் விருது சன் டி விக்கு.
எந்திரன் இசை விழா,அது உருவானது எப்படி விழா என எப்படி எல்லாம் காசு பண்ணமுடியும் என வளைத்து வளைத்து ஐடியா செய்தமைக்காக.

10.இந்த வாரத்தின் சிறந்த தில்லு தொர விருது பிரகாஷ் ராஜுக்கு.மொழி,அபியும் நானும் உட்பட பல தரமான படங்களை கொடுத்தவர் இனிது இனிது பட விழாவில் போனிவர்மா என் தோழி என அறிமுகப்படுத்தியமைக்காக.

சில்பான்சி ஜோக்ஸ் 18 +1. ஏய்,மிஸ்டர் ! டிரைவர் பிரேக்கே போடலை.இப்படி தடால்னு மேலே வந்து விழறீங்களே?

சும்மா ஒரு ட்ரையல் பார்த்தேன் மிஸ்.

2.ஈரோடு சவானா கார்டன்ல என் மேரேஜ் ரிசப்ஷன் வெச்சிருக்கேன்,அவசியம் வந்துடுங்க.

அடப்பாவி,ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல்ல வேலை செஞ்ச ரிசப்ஷனிஷ்ட்டை வெச்சிருந்தியே,அவ என்னானா?3.போலீஸ் -டேய்,இங்கே வா,இந்தப்பொண்ணு யாரு?

என் ஃபிரண்டோட தங்கச்சிங்க.

பார்க்ல ,இருட்டுல என்ன பண்றே?

என் ஃப்ரண்டை மச்சான் ஆக்க ட்ரை   (TRY) பண்றேன் சார்.

4.மோஹனா,உன் வயித்துல வளர்ற கருவை கலைச்சுடு.

இது என்ன சட்டசபையா,நினைச்ச உடனே கலைக்க?  முடியாது.


5.தலைவரே,மகளிர் அணித்தலைவியை ஏன் ஊறுகாய்னு கூப்பிடறீங்க?

என் மனைவி ஊர்ல இல்லாதப்ப அப்பப்ப தொட்டுக்குவேன்,அதான்.
6.மிஸ் மோஹனா,இன்ஸ்பெக்டர் உங்களை கற்பழிச்சதை வீடியோ எடுத்து வெச்சிருக்கறதா சொல்றீங்களே,அதை குடுங்க,விட்னெஸா யூஸ் பண்ணலாம்.

வக்கீல் சார்,அதை வாடகைக்கு விட்டிருக்கேன்.நாளை கொண்டு வர்றேன்.


7. மேடம்,இந்த வழக்குல முக்கிய சாட்சியே நீங்க தான்,எதையும் மறைக்காம சொல்லனும்.

நடிகை-யுவர் ஆனர்,என் படம் எதையும் நீங்க பார்த்ததில்லையா?எதையும் மறைச்சு எனக்கு பழக்கம் இல்லை.என் அகராதிலயே அது கிடையாது.ஓப்பன் டைப் நான்.8.உனக்கு வந்த லவ் லெட்டரை வெச்சே அதை எழுதுனவன் ஒரு பொம்பள பொறுக்கினு எப்படி கண்டுபிடிச்சே?

லெட்டர் மேல காண்டம் துணைனு எழுதி இருந்தது.

9.எதுக்காக ஊர்ல இருக்கற ஒவ்வொருவர் வீட்டுக்கும் போய்,எல்லாரையும் கண்டிக்கறே?

உன் மனைவியைப்பற்றி ஊரே தப்பா பேசுது ,கொஞ்சம் கண்டிச்சு வைனு நீங்கதானே சொன்னிங்க.?

10. சுவாமி! ,இல்லறம்,துறவறம் என்ன வித்தியாசம்?

சிஷ்யா!தனிமையாக காட்டில் இருந்தால் அது துறவறம்,சம்சாரத்தோட கட்டில்ல (COT) இருந்தா அது இல்லறம்.

விட்டுச்சென்றவளுக்கு ஒரு விண்ணப்பம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் 1999 ஆண்டில் நான் எழுதியகவிதை இது.இப்பூது படிப்பதற்கு எனக்கே அபத்தமாகத்தான் தெரிகிறது.பதின்ம பருவங்களில் நாம் செய்தது,எழுதியது எல்லாம் அபத்தமாக இப்போது தோன்றினாலும் வாழ்வியல் ரசனைகளையும் அவைதானே தருகின்றன.

வேண்டாம் என்று நீ

விலகிப்போனாலும்

காற்றின் ஒரு மூலக்கூறாய் மாறி

உன் சுவாசத்தில் நிரம்புவேன்.

நான் பார்க்கின்ற

அதே நிலாவையும்,சூரியனையும்

எங்காவது ஒரு மூலையில் இருந்து

நீயும் பார்க்கிறாய் என்பதால்

அங்கே குடியேற குறுக்கு வழியோ ,

என் முகம் அதில் பிரதிபலிக்க

விஞ்ஞான முறையோ தேடுகிறேன்.

திட்டமிட்ட பயணத்திலோ,

எதேச்சையாகவோ

நம் சந்திப்பு ஒருமுறை

நிச்சயம் நிகழும்.

அப்போது

உன் உதடுகளால் முடியாவிட்டாலும்

கண்கள் மூலமாவது

ஒரு புன்னகை சிதறவிடு.

பாக்யாவின் வால்போஸ்டர்களில் ஜாக்கிசேகர்

இயக்குனர் கே பாக்யராஜ் பல வருடங்களாக பாக்யா எனும் பத்திரிக்கை நடத்திவந்ததும் ,20 வருடங்களுக்கு மேல் அது தொடர்ந்து வெற்றிகரமாக பவனி வருவதும் நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த பாக்யாவில் பொதுவாக வால்போஸ்டர்களில் கே பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதிலில் அந்த வார டாப் கேள்வி எதுவோ அதுவே வால் போஸ்டர்களீல் விளம்பரப்படுத்தப்படும்.
அந்தப்பத்திரிக்கையின் சரித்திரத்தில் முதன் முறையாக ஆசிரியர் அல்லாத ஒருவரின் படைப்புக்கான் முன்னோட்ட வரிகள் விளம்பரமாக வருவது இதுவே முதல் முறை.
நமது பதிவுலக நண்பர் அண்ணன் ஜாக்கிசேகர் அவர்கள் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற பிளாக்கில் ஹாலிவுட் படங்களின் விமர்சனம் எழுதி ஏற்கனவே புகழ் பெற்று இருந்தார்.சமீபத்தில் அலாஸ்கா கவுண்ட்டிங் & ரேட்டிங்கில் ஒரு சாதனை புரிந்தார்.அவரது புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாக அவரது படைப்பு பாக்யாவில் வால்போஸ்ட்ரில் “உங்கள் மனைவி மீது யாராவது கை வைத்தால்?” இடம் பெற்று உள்ளது.
கே பாக்யராஜின் மனம் கவர்ந்த ஜாக்கி அண்ணன் தொடர்ந்து மேன்மேலும் புகழ் பெறவும்,திரை உலகில் கொடி கட்டிப்பறக்க பதிவுலகம் மற்றும் பதிவாளர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

வம்சம் - அம்சமா?துவம்சமா?

கோடம்பாக்கத்தில் ஒரு செண்ட்டிமெண்ட் உண்டு.முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்த பல டைரக்டர்கள் 2வது படத்தில் ச்றுக்குவார்கள்.சில எ.கா


இயக்குனர் பெயர்        ஹிட் ஆன முதல் படம்    ஃப்ளாப் ஆன 2வது படம்

ஆர் பார்த்திபன்              புதிய பாதை                                பொண்டாட்டி தேவை

விக்ரமன்                            புதுவசந்தம்                                பெரும்புள்ளி

மணிரத்னம்                  பல்லவி அனுபல்லவி            இதயகோயில்

ஆர் பாண்டியராஜன்     ஆண்பாவம்                                  மனைவி ரெடி(கன்னிராசி கணக்கில் வராது.)

இந்தப்பட்டியலில் பசங்க எனும் ஹிட் படம் கொடுத்த பாண்டிராஜ் இணைந்தாரா,ஜெயித்தாரா என்பதை விமர்சனத்தின் கடைசியில் காண்க.(இவரு பெரிய ராஜேஷ்குமார்,சஸ்பென்ஸ் வைக்கறாரு)

கிராமத்துக்கதை என்றதும் காலம் காலமாக vamsam_tamil_movie_wallpapers நமது இயக்குனர்கள் கையாளும்  இரண்டு ஊர் பகை தான் கதைக்களம்.

படத்தோட ஓப்பனிங்லயே பருத்திவீரன் பாதிப்பில் கிராமத்துத் திருவிழாக்கள் காட்சிகள் களைகட்டுகிறது.கரகாட்டக்காரன் படத்துக்குப்பிறகு அதிகமான கிராமிய விழாக்காட்சிகள் இந்தப்படத்தில்தான்.
எதிர்காலத்தில் உதவும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் ஹீரோ அன்பரசு ஊருக்கு உழைப்பவன் எம் ஜி ஆர் மாதிரி ஏழை மாணவர்களுக்கு உதவுவது படத்தின் கதைக்கும்,கேரக்டருக்கும் சம்பந்தமில்லாதது.

கத்திக்குத்து வேணாம்,கத்தாழைக்குத்து வை என்பது,கடுகு ஆயில் எதுவும் மளிகைக்கடயில்  வாங்காதே ஊர்ல திருவிழா என்பது,திருவிழாவுல கருவறுக்கும் பணியை ஆரம்பிச்சிட வேண்டியதுதான் என்பது கிராமத்து மண் வாசனையை புடம் போடும் வசனங்கள்.
முதல் சண்டைக்காட்சியில் பின்னணி இசையாய் குலவைஇடுவது தூள் படத்தில் பரவை முனியம்மா செய்தாகிவிட்டதே.(சிங்கம் போல நடந்து வாரான்).ஆனால் ஃபைட்டின் முடிவில் ஹீரோ கம்பியை கல்லில் கட்டி ஆற்றில் விட்டு கரண்ட் கம்பத்துடன் கனெக்‌ஷன் குடுப்பதாக சொல்லி மிரட்டுவது புதுசு.

ஹீரோ புதுமுகம் என்ற அளவில் ஈஸியாய் பாஸ் மார்க் வாங்குகிறார்.உடல் தோரணையில் விஷால்,தோற்றப்பொலிவில் எம் சசி குமார் என பார்ப்பவர் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.பன்ச் டயலாக் எதுவும் பேசவில்லை என்பது பெரிய ஆறுதல்.
என்னதான் கிராமத்துக்கேரக்டரில் சுனைனா மிளிர்ந்தாலும் எண்ணெய் தடவி,படிய தலை சீவி வரும் காட்சிகள் அவரது அழகை ரேஷன் செய்கின்றன.
மாசிலாம்ணியில் ஓடி ஓடி விளையாடு பாட்டுக்கு ஆட்டம் போட்ட அந்த சுனைனாதான் டாப்.இருந்தாலும் கிராமத்துக்கதை என்பதால்,இயக்குனர் சொல்லிக்குடுத்தபடி கச்சிதமாக நடித்திருக்கிறார்.
.
வில்லனின் அறிமுகத்துலயே கேரக்டரின் கொடூரம் புரிய வைக்கப்படுகிறது.வேலையை விட்டு நின்றவனை வலிய சமாதானப்படுத்திக்கூட்டி வந்து நீ வேலை செஞ்சது சரி இல்லை,உன்னை நிறுத்த்றேன் என சொல்லி அனுப்பி விட்டு நீ என்னடா வேலையை விட்டு போவது,நான் அனுப்பறேன் என்பது பிரமாதம்.
செம்பருதிப்பூ,பருப்பு என அன்றாடம் நாம் உபயோகிக்கும்,பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பாட்டனி நேம் வைத்து நாயக்னும்,நாயகனும் சதிராடும் சீன் நல்லாருக்கு,அதே போல் கஞ்சா கருப்பு டேய்,முனியப்பா என்னை பெத்துபொட்டுட்டு ஏன் இபடி போய்ட்டே முனியப்பா என புலம்புவது நல்ல காமெடி என்றாலும் அதே சீன் பல முறை ரிப்பீட் ஆகும்போது கடுப்படிக்கிறது.
யார்கிட்டயும் இந்த மேட்டரை சொல்லிடாதே என ஒரு ஓட்டைவாயனிடம் ரகசிய்த்தை பகிர்வதும்,டேய்,ஊரே அவன் தான் என சலம்புவதும் இயக்குனரின் திறமைக்கு சபாஷ் சொல்ல வைக்கும் காட்சிகள்,
பசுவிடம் காதல் தூது விடுவது,துணி துவைக்கும் ஹீரோ மேலுக்குப்போடும் சோப்பை துணிக்குப்போட்டுவிட்டு அதற்குக்கூறும் காரணம்,திருவிழாவில் ஹீரோ &கோ நன்கொடை கொடுத்து சுய விளம்பரம் செய்வது,என பல காட்சிகள் இயக்குனர் சரக்குள்ளவர் என்பதை பறை சாற்றுகின்றன.
ஹீரோவின் அம்மா சுனைனா கூந்தலை புகழும்போது அந்த ஷாட்டை கட் பண்ணி சுனைனா சவுரியை கழட்டி மாட்டுவது கே பாக்யராஜ் டச்.
சுனைனா வில்லனின் மேல் சாணித்தண்ணியை கரைத்து ஊற்றும் அந்தப்பரபரப்பான சீனில் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.பின்னணி இசை அந்த இடத்தில்  இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம்.

வசனகர்த்தாவாக பல காட்சிகளில் ஜொலிக்கிறார் இயக்குனர்.சாம்ப்பிளுக்கு சில.

1.அடிக்கறது மட்டும் வன்முறை அல்ல,மிரட்டுறதும் வன்முறைதான்.

2.எதிரிக்கு முன்னால வாழ்ந்து காட்டுனாலே அது ஜெயிச்ச மாதிரிதான்.

3.கெட்டவனை தொட்டா,தொட்டவனும் கெட்டான்.

4.உடம்புலயும்,மனசுலயும் ஈரம் வேணும்,ஆகாரத்துல காரம் வேணும்.

5.ஒரு ஊர்ல மனுஷங்க சரி இல்லைனா சொலிக்குடுத்த வாத்தியார் சரி இல்லைனு அர்த்தம்.

பசங்க படத்தோடு ஒப்பிடுகையில் பாடல் காட்சிகள் சுமார்தான்.
என்னாச்சு என்னாச்சு பாடல் வரிகளில் கண்ணும் கண்ணும் ஒன்னா சேர்ந்து பாலம் போடுதே என்ற வரி நச் ரகம்.மருதாணிப்பூவைப்போல பாடலும் ஓகே.

பின்பாதியில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நீளம்.அதோடு ஆடியன்ஸ் ஒன்றிப்போகையில் மிண்டும் படம் நிகழ் காலத்தில் வரும்போது லின்க் ஆக நேரம் பிடிக்கிறது.(ஹீரோவின் அம்மாவாக வருபவர் ஃப்ளாஷ்பேக்கில் நல்ல ஃபிகரா வருதுங்கோ.வாரிசுக்காக மடிப்பிச்சை கேட்பது உருக்கம் என்றாலும் அது சின்னக்கவுண்டர் படத்தின் மொய் விருந்து காட்சியை ஞாபகப்படுத்துவது பலவீனம்.

எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவர் என அறிமுகத்தோடு வரும் ஹீரோ குடும்ப முகமன் மொழி நல்ல வீரியம்.சுனேனாவே ஆள் வைத்து ஹீரோவை அடிப்பதும் ,அதை வில்லன் மேல் திருப்புவதும் நல்ல டெக்னிக்.ஊரெல்லாம் வில்லனின் ஆட்கள் ஹீரோவைத்தேட ஹீரோ வில்லனின் வீட்டிலேயே தினம் இரவு வந்து தங்கி செல்வது சுவராஸ்யம் என்றாலும் பல படத்தில் பார்த்ததுதானே.
கிராமத்துமக்கள் சத்தியத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பல காட்சிகளில் இயக்குனர் பகிர்வது ரசனை.
சிலம்பாட்டம் பலவகை இருக்கு ,ஒவ்வொண்ணா சொல்லவா என ஹீரோவின் அப்பா கிஷோர் லிஸ்ட் போடும்ப்போதே அவர்கள் தெரித்து ஒடுவதெல்லாம் ஓவர் பில்டப்.
ஹீரோயின் காத்லில் விழுந்ததும் தோழி “பருவத்தே பயிர் செய் “என கவுண்ட்டர் டயலாக் அடிப்பது சுவராஸ்யம்.பக்கத்து ஊர் பள்ளிக்கூடம் லீவ் என்றதும் ஒரு பையன் ஏக்கமாய் அவங்க பள்ளிக்கூடமெல்லாம் நல்ல பள்ளிக்கூடம்டா என்பதும் சூப்பர்.
கஞ்சா கருப்பு நீங்க எம் எஸ் சி பாட்டனியா,என்னமா எண்ணெய் ஊத்த்றீங்க என்பதும்,கடைசி வரை மேட்டரை என்கிட்ட காட்டவே இல்லையெ என டபுள் மீனிங்கில் பேசுவதும் ,யார் நீங்க என ஹீரோயின் கேட்டதும்  அசினோட
ஓல்டு ஓனர் என்பதும் ரகளையான காட்சிகள்.
போகிற போக்கில் திருவிழாவில் ஒரு ஆள் நன்கொடை கொடுக்கும்போது பெண்களை பார்க்கும்போது கண்களை மூடும் கண்ணன் என தன்னைத்தானே வர்ணிப்பதும் அருமை.
க்ளைமாக்சில் வில்லனின் மகனுடன் ஒத்தைக்கு ஒத்தை சண்டை போடுவது ரன் படத்தை ஞாபகப்படுத்துகிறது.வில்லன் என்ன ஆனார் என்பதைக்காட்டவே இல்லை (எடிட்ட்ங் பிராப்ள்மோ,ஃபுட்டேஜ் பிராப்ளமோ)

சும்மா என்ன வள வளனு இழுவை?படத்தோட ரிசல்ட் என்ன?
அறிவுநிதிக்கு இது வெற்றிப்படம்.பசங்க படத்துடன் ஒப்பீடு செய்கையில் இயக்குனருக்கு ஒரு படி இறக்கம்தான்.பி ,சி செண்ட்டர்களில் படம் 50 நாட்கள் ஓடும்.ஏ செண்ட்டர்களில் சுமாராகப்போகும்.படத்தின் முற்பகுதி அம்சம்.பிற்பகுதி துவம்சம்.

Saturday, August 14, 2010

ஹாலிவுட் சினிமா விமர்சனம்-THE EXPENDABLES 18+

நம்ம கோடம்பாக்கத்துல ரஜினி,கமல்,அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் இவங்க எல்லாம் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?(தியேட்டர்ல எப்படியோ தியேட்டருக்கு வெளியே ரசிகர்களுக்குள்ள ஒரே அடி தடியா இருக்கும்) இங்கே சாத்தியமோ ,இல்லையோ ஹாலிவுட்டில் சாத்தியமாகி இருக்கிறது.
படத்தோட மக்கள் தொடர்பும் ,போஸ்ட்டர் டிசைனும் ரொம்ப மோசம்.ஏதோ டப்பிங்க் பட போஸ்டர்  மாதிரி..

படத்தின் இயக்குனரும் ,நாயகனும் ஃபர்ஸ்ட் பிளட்,ராம்போ புகழ் சில்வர்ஸ்டர் ஸ்டாலின் .விளம்பரத்தைப்பார்த்து ஏதோ ஆபாவாணனின் இணைந்த கைகள் மாதிரி பிரம்மாண்டப்படம் என நினைத்தால் அது சுயம்வரம் மாதிரி ஒரு அடாசு படம்.

ஆரம்பக்காட்சியில் சில வசனங்களை ரசிக்க முடிகிறது.

காலிங்பெல் சத்தம் கேட்டு “யாரது?” என ஒரு ஃபிகர் கேட்க, நம்மாளு நீ தூங்கறப்பக்கூட உன்னை ரசிக்க ஒருத்தன் வருவானே அவன்தான் என ஜொள் விட நாமும் ஏதோ சுவராஸ்யமான படத்துக்கு தான் வந்திருக்கோம் போல என நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால்...?

நீ என்ன பண்றே?என்ன வேலைல இருக்கே?ஏதாவது சொல்றியா?

என்ன வேலை செய்யறேன்கறது முக்கியம் இல்ல,எப்படி உன்கிட்ட நடந்துக்கறேன்கறதுதான் முக்கியம்.

இப்படி நடக்கும் ஊடல் காட்சிகள் ரசனையான கவிதைகள்.
தமிழில் பார்த்தால் பல காட்சிகள் வினோதமாக தெரிகிறது.

இது நம்ம ஆளுதான்

அப்படியா,இன்னா பேரு கண்ணு?

த ட்ரான்ஸ்போட்டர் ஹீரோவை கெஸ்ட் கேரக்டர் எனக்கூறி கூட்டி வந்து நொங்கு எடுத்து விட்டார்கள்.அவரது தலையை கவுண்டமணி செந்திலை நக்கல் அடிப்பது போல் சர்வசாதரணமாக கிண்டலடிக்கிறார்கள்.

உன் தலையை பார்த்தா பானையை கவுத்து வெச்ச மாதிரி இருக்கு.

ஒரு புராஜக்ட்டை செய்ய அழைத்து வரப்படும் 3 திறமைசாலிகளுக்கிடையே நடைபெறும் உரையாடல்கள்

இந்த வேலையை கத்துக்குட்டிங்கதான் செய்வாங்க,என்னை விட்டுடுங்க என அர்னால்டு ஸ்வார்செனேகர் சொல்ல  உடனே இதை செஞ்சா எவ்வளவு பணம் தருவீங்க? என ஜெட்லீ கேட்க கத்துக்குட்டிங்கறதை நிரூபிச்ட்டான் என நையாண்டி செய்ய ஒரே ரகளை தான்.
படத்தின் ஹீரோ சில்வர்ஸ்டர்ஸ்டோலன் மும்பை எக்ஸ்பிரஸ் கமல் மாதிரி கெடப்பில் வருகிறார்.எடுபடவில்லை.படம்,அவர் நடிப்பு எதுவும்.ஒரு அபத்தமான காட்சி.

எதிரியின் பாசறைக்குள் நுழைந்த ஹீரோ &கோ விமானத்தில் பறந்தபடியே ஃபயர் சர்வீஸ் மாதிரி பெட்ரோலை பைப் மூலம் எதிரியின் இடத்தில் தெளிக்கின்றனர்,பின் ஷூட் பண்ணி வெடிக்க வைக்கிறாங்க.அப்போ இவங்க பயணம் பண்ற விமானமும்தானே தீப்பிடிக்கும்?பி எஸ் ஸி பிசிக்ஸ் சில் அரியர் வெச்சவன் கூட இதை சொல்லிடுவானே.சூப்பர் ஹிட் படங்கள் குடுத்த  இவருக்குத்தெரியாமல் போன மாயம் என்ன?

படத்தின் முக்கிய சொதப்பல் ஹீரோயின்.குதிரை மாதிரி நீள் முகம்.காமரா எந்த கோணத்தில் அவரை காண்பித்தாலும் ரசிக்க முடியவில்லை.படத்தோட கதையே ஆபத்துல மாட்டி இருக்கற காதலியை காதலன் நண்பர்களோட வந்து காப்பாத்தறதுதான் அப்படிங்கறப்போ நல்ல ஃபிகரா போட்டிருக்க வேணாமா?
இடைவேளைக்குப்பிறகு யார் யாரை  சுடறாங்க, யார் தப்பிச்சாங்க ஒண்ணும் புரியல.கிராஃபிக்ஸ் காட்சிகள் ஜூராசிக்பார்க் மாதிரி இருக்கும்னு பார்த்தா நம்ம ராமநாராயணனின் ஆடிவெள்ளியை விட மோசமாக இருக்கு.

க்ளைமாக்சில் ஜெட்லீ பேசும் டயலாக் நல்லாருக்கு.நான் ரொம்ப உயரனும்னு நினைச்சேன்.ஆனா சண்டை போடறப்பக்கூட எம்பி எம்பிதான் சண்டை போட வேண்டி இருக்கு.ஆண்டவன் என்னை குள்ளமாவே படச்சிட்டான்.
சரி ,படத்தைத்தான் கெடுத்துக்குட்டிச்சுவர் பண்ணிட்டோம்,ஏதாவது கண்ணுக்கு குளுமையா சீனாவது வெப்போம்கற பேசிக் நாலெட்ஜ் கூட டரக்டருக்கு இல்ல.நாம் என்ன செய்வது?ஸ்டில்களில் பார்க்கும் அளவு கூட திரையில் இல்லை.
இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா பெரிய ஹீரோ படம்னாலும் ரிசல்ட் கேட்டுட்டுதான் போகனும்.

குறுக்குப்புத்தி - சினிமா விமர்சனம் 18+

என்னதான் கணையாழி,ஏழைதாசன் போன்ற இலக்கிய இதழ்களை நாம் வாசித்து வந்தாலும்,பதின்ம வயதில் படித்த சரோஜாதேவி,விருந்து,சினிமித்ரன் மாதிரி ஒளித்து வைத்துப்ப்படித்த புக்குகளிலும் நமக்கு அவ்வப்போது ஆர்வம் வந்துகொண்டுதான் இருக்கிறது.அதேபோல் உலகப்படங்கள்,உள்ளூர்ப்படங்கள் என கலந்து கட்டிப்பார்க்கும்போதும் அவ்வப்போது வரும் இது மாதிரி அடாஸ் படங்களையும் பார்த்துத்தான் தொலைக்க வேண்டி இருக்கிறது.இந்த மாதிரி படங்கள் காலம் காலமாய் ரசிகனை சுண்டி இழுக்கக்காரணம் படத்துல சீன் இருக்குமா,இருக்காதா,இருந்தாலும் நம்ம எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்குமா? இடைவேளையின்போது பிட் ஓட்டுவாங்களா ,மாட்டாங்களா ,இந்த சஸ்பென்ஸ்தான் .கே பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் மாதிரி படத்துல 2 கதைகள்(கே பி மன்னிப்பாராக).அந்த 2 கதைகளுக்கும் ஒரு லிங்க் கொடுத்திருக்கார் பாருங்க டைரக்டர் அடடா புஷ்பா தங்கதுரையின் லிங்க் கூட இவ்வளவு சுவராஸ்யம் இல்லை.
படத்துல ஏகப்பட்ட காமெடி சீன்கள்.

1.எல்லா ஸ்கூலிலும் சுடிதார் யூனிஃபார்ம் அமல்படுத்தப்பட்ட இந்தக்காலகட்டத்தில் எந்த ஸ்கூலில் இப்படி ரம்பா தெரியும்படி(அதாங்க தொடை )ஸ்கர்ட் இருக்கோ டைரக்டருக்கே வெளிச்சம்.2.படத்தின் ஹீரோயின் 10வது படிப்பதாக காட்டுகிறார்கள்.ஆனால் அம்மணிக்கு 32 வயசு இருக்கும்.3.படத்தின் வில்லன் அஜய் ரத்னம் மிக அசட்டுத்தனமாக ,ஹீரோயினுக்கு மாமாவாக ,அவரை அடைய நினைக்கும் கேரக்டரில் வரும் ஒவ்வொரு சீனும் செம காமெடி,4.படத்தோட க்ளைமாக்ஸ்ல பாரதிராஜா கணக்கா டைரக்டர் படத்தோட கருவை 10 நிமிஷம் விளக்கறார் பாருங்க,அடடா.5.வில்லன் அஜய் காலிங்பெல்லை அடிப்பார்.2வது செகண்ட்லயே கதவைத்திறக்கும் அவரது மனைவியை பளார் என அறைந்து ஏன் லேட் என கேட்பார்.
முதல்ல படத்தோட கதை என்னனு பார்த்துடுவோம்.
ஹீரோயின் பாட்டி வீட்டில் தங்கி இருக்கிறாள்,பெற்றோர் ஃபாரினில் இருக்கிறார்கள்.(அப்பதானே தனிமையில் அவள் இருப்பதை அடிக்கடி காட்ட முடியும்.)அவளின் மாமா அவளை அடைய நினைக்கிறார்.ஹீரோயினின் தோழி பற்றிய ஒரு கிளைக்கதையும் உண்டு,அவள் காதலனுடன் அம்மா அப்பா விளையாட்டு விளையாண்டதை செல்ஃபோனில் படம் பிடித்த காதலன்  செல்ஃபோனை தொலைத்து விடுகிறான்.அது எப்படியோ ,யாரிடமோ சிக்கி அம்பலம் ஆகி தோழியின் பெற்றோர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.


படம் பார்க்கற நாமதான் சாகனும்,இவங்க எதுக்கு சாகறாங்க என்ற கேள்வியோடு ரசிகர்கள் நொந்து போய் வெளியேறுகின்றனர்.ஓரவல்லி சூரவல்லியே (அடடே,என்னா ஒரு கவிதை லைன்) என்ற பாட்டு அப்படியே 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தின் லஜ்ஜாவதியே என்னை அசத்துறே ரதியே பாடலின் உல்டா.நடன வடிவமைப்பு,காட்சிப்படித்திய விதம்,லொக்கேஷன் என எல்லாம்.என்ன கொடுமை சார் இது.பொழுது சாயும் நேரம் என்ற பாட்டு சிம்புவின் குத்து படப்பாட்டான சாணக்யா
சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் பாட்டின் அப்பட்டமான காப்பி.வில்லன் அஜய் திரையில் தோன்றும்போதெல்லாம் கேவலமாய் ஒரு பின்னணி இசை தர்றாங்க பாருங்க ,அய்யோ சாமி.அப்புறம் வில்லன் ஹீரோயினை நெருங்கும்போதெல்லாம் உள்ளத்தை அள்ளி தா பட ஹிட் சாங்கான அழகிய லைலா பாட்டின் ஆரம்ப ஹம்மிங்கை போடறாங்க பாருங்க,போதுண்டா சாமி.


படத்தின் இயக்குனர் சொந்தமாக சிந்தித்து எடுத்த ஒரே காட்சி அந்த ரெஸ்டாரண்ட் சீன் தான்.ஹீரோயின் &கோ சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.லேடி ஓனர் வந்து அதட்டல் போடுவார்.உடனே அவரது பின்பக்கத்தில் நோ சர்வீஸ் என நோட்டிஸ் ஒட்டி விடுவார்கள் (ராகிங்காம்)
சொல்ல மறந்த முக்கிய காமெடி சீன் ஒன்று.ஹீரோயினின் தோழி அவளது பாய் ஃப்ரெண்டை ஹீரோயினிக்கு அறிமுகப்படுத்துவாள்,அடுத்த சீனிலேயே டூயட்,அதற்கடுத்த சீனில் 2 பேருக்கும் அறிமுகமே இல்லாதது போல் காட்சிகள்.எடிட்டர் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க?கடைசியாக ஒரு கேள்வி சென்சார் ஆஃபிசருக்கு.இந்தப்படத்துக்கு என்ன இதுக்கோசரம் ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்தீங்க? U/A  கொடுக்கக்கூட யோக்யதை இல்லாத படத்துல சும்மா விளம்பரத்துக்காகவும்,கூட்டத்தை வரவைக்கறதுக்காகவும் பணம் குடுத்து ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கி இருப்பாங்களோ?