Tuesday, December 05, 2023

CHAAVER (2023) -மலையாளம் / தமிழ் - தற்கொலைப்படை சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர் ) @சோனி லைவ்

 


வித்தைக்காரன்  எங்கே  இருந்தாலும்  ஜெயிச்சுடுவான்  என்ற சொலவடை  உண்டு . ஒரு  சாதாரண  கதையை  பிரமாதமான  திரைக்கதை   மற்றும்  அட்டகாசமான  டெக்னிக்கல்  அம்சங்கள்  மூலம்  படைத்திருக்கும்  படைப்பாளியின்  திறன்  கண்டு  வியக்கிறேன். பத்து  பைசாவுக்கு  பிரயோஜனம்  இல்லாத  பழைய  கதையை  ஃபாரீன்  போய்  ரீமேக்  உரிமை  வாங்கி  அதுக்கு  தண்டக்கடனாய் 300  கோடி  செலவு  செய்பவர்கள்  மத்தியில் மினிம்ம்  பட்ஜெட்டில்  தரமான  திரைக்கதை  ரெடி  பண்ணி  மேக்கிங்கிலும்  புருவங்களை  உயர்த்த  வைத்த  இப்படத்தின்ன் விமர்சனத்தைப்பார்ப்போம் .


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  எம் பி பிஎஸ் படித்துக்கொண்டு  இருக்கும்  ஒரு  மெடிக்கல்  ஸ்டூடண்ட் . அவனுக்கு  மெடிக்கல்  ஷாப்  வைத்திருக்கும்  ஒரு  நண்பன்  உண்டு நாயகனுக்கு  பழக்கமான  ஆள்  ஒரு  நாள்  ஃபோன்  பண்ணி   வண்டி  க்ளீனருக்கு  காலில்  அடிபட்டு  இருக்கு .மருந்து  போடனும், நீ  உடனே  வா  என்று  அழைக்கிறான். நாயகன்  நண்பனின்  மெடிக்கல்  ஷாப்பில்  மருந்து , பேண்டேஜ்  எல்லாம்  வாங்கிக்கொண்டு  ஆட்டோவில்  போக  முயலும்போது நண்பன்  தன்  பைக்கைக்கொடுத்து  நாயகனை  அனுப்புகிறான்.


வில்லன்  ஒரு  குறிப்பிட்ட  கட்சியின்  விசுவாசமான  தொண்டன். கட்சி  மேலிடம்  கேட்டுக்கொண்டதால் யார்  என்றே  தெரியாத  ஒரு  நபரைக்கொலை  செய்து  விட்டு  தப்பிப்போகும்போது  கொலை  முயற்சியின்  போது  தன்  காலில்  வெட்டுக்காயம்  ஏற்பட்டதை  கவனிக்கிறான். அதை  சரி  செய்ய  ஹாஸ்பிடல்  போக  முடியாது . போலீஸ்   கேஸ்  ஆகி விடும், அதனால் தான்  அன்  அஃபிஷியல்  ஆக  நாயகனை  வரச்சொன்னது 


நாயகன்  வில்லன்  இருக்கும்  ஜீப்பில்  ஏறியதும்  வண்டி  கிளம்பி  விடுகிறது. இதற்குப்பின்  நிகழும்  பரபரப்பான  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை . அபாரமான  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்  உண்டு 


 நாயகன்  ஆக  அப்பாவி  ரோலில்   அர்ஜூன்  அசோகன்  அருமையாக  நடித்திருக்கிறார்/படம்  முழுக்க  என்ன  நடக்குது ? ஏன்  எனக்கு  இந்த  நிலை  என தன்னைத்தானே  கேட்டுக்கொண்டும், யொசித்துக்கொண்டும்  இருக்கும்  கேரக்டர் .  அவருக்கு  ஒரே  ஒரு  டைம்  பைக்  ஓசி  சவாரி  கொடுத்த  ஒரே  குற்றத்துக்காக  போலீசிடம்  அடி  வாங்கும்  நண்ப்ன்  ரோல் பரிதாபப்பட  வைக்கிறார்


 வில்லன்  ஆக  குஞ்சக்கா  போபன். படம்  முழுக்க  வெறுப்பை  சம்பாதித்தாலும்  க்ளைமாக்சில்  அவரையும்  அர்சியல்வாதி  வஞ்சிக்கும்போது  பரிதாபத்தை  அள்ளிக்கொள்கிறார்


 நாயகன் , வில்லன்  யாருக்கும்  ஜோடி  கிடையாது / அதனால்  நாயகி  சம்பளம்  மிச்சம்


ஒளிப்பதிவாளர்  , லொக்கெஷன்  செலக்சன்  செய்தவர்  இருவரும்  தான்  படத்தில்  நாயகர்கள் . பிரமாதப்படுத்தி  இருக்கிறார்கள் . குறிப்பாக  டைட்டில்  சீன்  கம்ப்யூட்டர்  ஒர்க்ஸ் அட்டகாசம். ஜிண்ட்டோ  ஜார்ஜ்  என்பவர்  தான்  ஒளிப்பதிவு ஜஸ்டின்  வர்கீஸ்  தான்  இசை . பிஜிஎம்  மில்  கலக்கி  இருக்கிறார்.


 ஃபாரஸ்ட் ஏரியாவில்  கதை  நகரும்போது , பிஜிஎம் மும் , கேமராவும்  கூடவே  பயணிக்கிறது 

ஜாய்  மேத்யூ வின்  அபாரமான  திரைக்கதைக்கு  உயிர்  கொடுத்திருக்கிறார்  இயக்குநர்  டினு  பாப்பச்சன்


சபாஷ்  டைரக்டர்


1 எதற்காக  அந்தக்கொலை ?  யார்  கொலை  அனவன்  என்பது  கொலைகாரனுக்கே  க்ளைமாக்சில்  தான்  தெரிய வருவது   அருமையான  ட்விஸ்ட் .


2  வில்லனுக்கே  வில்லன்  ஆக  வரும்  அந்த  சூத்ரதாரி  ஜி கே  கேரக்டரை  கையாண்ட  விதம்  அருமை


3  அரசியல்  கட்சித்தலைவர்  தன்  பர்சனல்  வஞ்சத்துக்கு  கட்சித்தொண்டனை  பலி  கடா  ஆக்கும்  கொடுமை  வியக்க  வைக்கிறது 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஃபோனை  ஆன்  பண்ணி  பேசினால்  டைபர்  க்ரைம்  ,மூலம் லொகேஷன்  தெரிந்து  விடும்  என  ஜி  கே  எச்சரித்தும்  வில்லனின்  ஆள்  ஏன்  ஃபோன்  பேசி  மாட்டுகிறான்?


2 ஜீப்  காடு  , மலை  எல்லாம்  சுற்றுகிறது , பெட்ரோல்  ஏது ? பங்க்கில்  அடிக்கவும்  முடியாது 


3 ஒரு  சாதாரண  ஆளைக்கொலை  செய்ய  இவ்ளோ  அர்ப்பாட்டம்  எதற்கு ? அடியாட்கள்  அவங்களைக்கொல்ல  இன்னும்  அடியாட்கள்  என  இடியாப்பச்சிக்கல்  தான் . தேவை  இல்லாத  ஆணிஅடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - அடல்ட்  கண்டெண்ட்  இல்லை , வன்முறை  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   விறுவிறுப்பான , பரப்ரப்பான  த்ரில்லர்  படம்  பார்க்க  விரும்புபவர்  பார்க்கலாம், ரேட்டிங்   3 / 5 


Chaaver
Theatrical release poster
Directed byTinu Pappachan
Written byJoy Mathew
Produced byArun Narayan
Venu Kunnapilly
Starring
CinematographyJinto George
Edited byNishadh Yusuf
Music byJustin Varghese
Production
companies
 • Arun Narayan Productions
 • Kavya Film Company
Release date
 • 5 October 2023[1]
Running time
128 minutes[2]
CountryIndia
LanguageMalayalam

Monday, December 04, 2023

THEEPPORI BENNY(2023) - தீப்பொறி பெண்ணி -- மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்


 ஸ்டார்  வேல்யூ  இல்லாமல் லோ  பட்ஜெட்டில்  எடுக்கும்  படங்களுக்கு  பெரிய  பிளஸ்  பாயிண்ட்  உண்டு . இயக்குநர்  ஹீரோ  பில்டப்  சீன்ஸ்  யோசிக்காமல்  திரைக்கதையை  சுவராஸ்யமாய்  நகர்த்துவது  எப்படி  என  யோசிப்பார்  என்பதால்    இண்ட்ரஸ்ட்  ஆக  சீன்கள் வரும். இதுவும்  அப்படி  ஒரு படம்  தான்.  ஆனால்  பொறுமையாகப்பார்க்க  வேண்டும்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  படித்து  விட்டு  வேலைக்காக  வெய்ட்டிங். ஊரில்  இருக்கும்  எல்லா  அரசுப்பணிகளுக்கான  எக்சாம்களையும்  லிஸ்ட்  போட்டு  ஒவ்வொன்றாக  எழுதி  வருபவன்


நாயகனின்  அப்பா  ஒரு   கம்யூனிஸ்ட் . தீவிரமாக  அரசியலில்  ஈடுபட்டு  வருபவர் , மிக  நேர்மையானவர் . அவருக்கு  க்ட்சியிலும் , ஊரிலும்  நல்ல    பெயர்  உண்டு


 ஆனால்  நாயகனுக்கும், அப்பாவுக்கும்  பெரிய  அட்டாச்மெண்ட்  இல்லை /. நாயகனுக்கு  அரசியலில்  வர இஷ்டம்  இல்லை .அப்பாவுக்கு  தன்  மகன்  தன்னைப்போலவே  அரசியலில்   ஜொலிக்க  வேண்டும்  என்று  ஆசை 


 நாயகனுக்கு  ஒரு  முறைப்பெண்  உண்டு .இருவரும்  க்ளாஸ்மேட்ஸ்  வெற . ஆனா  பெரிய  அளவில்  இருவருக்கும்  இடையேபெரிய  ரொமான்ஸ்  எதும்  இல்லை 


இப்படி போகும் கதையில்  திடீர்  என  இரு  திருப்பங்கள்  1  ஆளும்  கட்சி  மீட்டிங்கில்  முதல்வருக்கு  எதிராக  நாயகன்  அவனையும்  அறியாமல்  கறுப்புக்கொடி  காட்டி  மீடியா  மூலம்  ஃபேமஸ்  ஆகிறான்.


 அது  த்ந்த  புகழ்  மேலும்  எதிரிகக்ளிடம்  இருந்து  தப்பிக்க  அரசியலில்  இறங்குவதுதான்  வழி  என  நினைக்கிறான். இப்போது  நாயகன்  கம்யூனிஸ்ட்  கட்சியில்  சேர்கிறான்


 ஆனால்  அப்பாவைப்போல  நேர்மையாக  இல்லாமல் குறுக்கு  வழியில்  ஃபேஸ்புக், இன்ஸ்டா  மூலம்  புகழ்  சேர்க்கிறான் . இது  அப்பாவுக்குப்பிடிக்கவில்லை 

 நாயகியை திடீர்   என  காதல்  பார்வை  பார்க்கிறான்


 நாயகனின்  அரசியல்  பிரவேசம்,  காதல் இரண்டிலும்  என்ன  என்ன  மாற்றங்கள்  வந்தன  என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக   அர்ஜூன்  அசோகன்  மிக  இயல்பாக  நடித்து  இருக்கிறார். தொப்பையுடன்  வரும்  பெரிய  பெரிய  ஹீரோக்கள்  மத்தியில்  ஃபிட்  ஆன  பாடியுடன்  அவர்  உலா  வருவது  மகிழ்ச்சி 


நாயகனின்  அப்பாவாக   ஜகதீஷ்  யதார்த்தமாக  நடித்திருக்கிறார். அருமையான  குணச்சித்திர  நடிப்பு 


நாயகி  பொன்னிலாவாக  ஃபெமினா   ஜார்ஜ்  அழகாக  வந்து  போகிறார். அதிக  காட்சிகள்  இல்லை 


122   நிமிடங்கள்  மட்டும்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  எடிட்   செய்து  இருக்கிறார்  சூரஜ்,


ஸ்ரீராக்  பாஜி  யின்  இசை  பின்னணி  இசை  இரண்டும்  ஓக்கே  ரகம் அஜய்  ஃபிரான்சிஸ்  ஜார்ஜின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  யதார்த்தமாக , உயிரோட்டமாக  கண்  முன்  விரிகின்றன .


ராஜேஷ்   மோகன் ,  ஜோஷி  தாமஸ்  ஆகிய  இருவரும்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்கள் . நல்ல  ஃபேமிலி  டிராமா  பார்த்த  திருப்தி 


சபாஷ்  டைரக்டர்


1  டைட்டிலை  நியாயப்படுத்த  வேண்டும்  என்பதற்காக  ஃபையர்  டான்ஸ்  என்பதை  வலியப்புகுத்தி  இருந்தாலும்  அதில்  நாயகன்  பேண்ட்டுக்குள்  தீப்பந்தம்  சொருகி ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகும் காட்சி  மரணக்காமெடி 


2  ஹாஸ்பிடலில்  படுத்திருக்கும்  நாயகனைப்பார்க்க  வரும்  நாயகி  ஐஸ்கட்டி  கொண்டு  வருவதும் . பெருசா  அடிபடலை , லைட்டா  என  வடிவேலு  பாணியில்  நாயகன்  சமாளிப்பது  வெடிச்சிரிப்பு  


3   நாயகன்  முதல்வருக்குக்க்றுப்புக்கொடி  காட்டும்  சீன் , இண்ட்டர்வல்  பி:ளாக்  சீனில்  துரத்தும்  ரவுடிகள்  முன்  கம்யூனிஸ்ட்  கொடிக்கம்பத்தை  தூக்கும்  காட்சி   எல்லாம்  காமெடி   தான் 


4  அப்பா  -மகன்  புரிந்துணர்வுக்குப்பின்  இருவருக்குமான  பாண்டிங்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  மலையாளிகளின்  பெரிய  பிரச்ச்னை  என்ன  தெரியுமா? அவங்க  என்ன  நினைப்பாங்க ?இவங்க  என்ன  நினைப்பாங்க    என  பயப்படுவதுதான்.  யார்  வேணா  என்ன  வேணா  நினைக்கட்டுமே? நமக்கு  என்ன? 


2  உன்னோட  உட்கார்ந்து  சாப்பிடும்போது  எனக்கு  10  வயசு குறைந்ததா  உணர்கிறேன்


உன்னோட  உட்கார்ந்து  சாப்பிடும்போது  எனக்கு  10  வயசு  கூடியதா  உணர்கிறேன்


3  அப்பா, மேல  இருக்கும்  கோபத்தை  சாப்பாட்டில்  காட்டாதே!  அப்பா  இல்லாமல்  வாழ  முடியும், ஆனா  சாப்பிடாம  வாழ  முடியுமா?


4  ஃபையர்  டான்ஸ்  ஆட  நாம  பயப்பட  வேண்டியதில்லை , ஏன்னா  ஆல்ரெடி  தம்  அடிக்கும்போது  நெருப்பு  கூட  விளையாண்டு  இருக்கோமே? 


5  பிரச்சனை  வரும்போது  அதை  ஃபேஸ்  பண்ணாம  ஓடிப்போவதால்  நாம்  ஜெயிச்சுட  முடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  அரசியலில்  இறங்குவதும்  எதிரிகள்  அவரைக்கண்டு  பயப்படுவதும்  சினிமாத்தனம் 


2   காமெடிக்காக  வைக்கப்பட்டாலும்  காக்கா  உட்காரப்பனம்பழம்  விழுவது  போல  நாயகன்  செய்யும்  சில  வேலைகள்  சிரிப்பை  வர  வைத்தாலும்  செயற்கை 


3  நாயகன்  - நாயகி   கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகாததும் ., இருவ்ருக்கும்  இடையே  காம்பினேசன்  ஷாட்சில்  அக்கறை  காட்டாததும்  பெரிய  பின்னடைவு


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மிக  மெதுவாகத்தான் திரைக்கதை  நகரும், மெயின்  கதைக்கு  வரவே  40  நிமிடங்கள்  எடுத்துக்கொள்கிறார்கள் . பொறுமை  அவசியம்  , ரேட்டிங்  2.5 / 5 


Theeppori Benny
Poster
Directed by
 • Rajeesh Mohan
 • Joji Thomas
Written by
 • Rajeesh Mohan
 • Joji Thomas
Produced byShebin Backer
Starring
CinematographyAjay Francis George
Edited bySooraj E. S.
Music bySreerag Saji
Production
company
Shebin Backer Productions
Distributed by
 • Central Pictures
 • Phars Film (Overseas)
Release date
 • 22 September 2023[1]
Running time
122 minutes[2]
CountryIndia
LanguageMalayalam

Sunday, December 03, 2023

SIYA (2023) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா ) @ ஜீ 5

 


உண்மைக்கு  மிக  நெருக்கமாக  எடுக்கப்பட்ட  படம்  என்பதால்  ஈரானியப்படங்கள்  போல  டெட்  ஸ்லோவாகத்தான்  படம்  நகரும். மாமூல்  மசாலா  அயிட்டங்கள்  எதுவும்  மிக்ஸ்  செய்யாமல்  நேட்டிவிட்டியோடு நத்தை  ஊர்வது  போல  திரைக்கதை  அமைத்திருப்பார்  இயக்குநர். எல்லாத்தரப்பு  மக்களுக்கும்  ஏற்ற  படம்  அல்ல. சாமான்யப்பெண்ணுக்கு  இழைக்கப்படும்  அநீதிதான்  கதைக்கரு . அவளுக்கு  நீதி  கிடைத்ததா? இல்லையா?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  17  வயதே  ஆன  மைனர்  பெண். அவளுக்கு  ஒரு  தம்பி  உண்டு , அம்மா, அப்;பா  உடன்  ஒரு கிராமத்தில்  ஓட்டு  வீட்டில்  வசித்து  வரும்  ஏழைப்பெண்


நாயகி  ஓரளவு  படித்திருப்பதால் நகரத்துக்குப்போய்  பணி  புரிய  ஆசைப்படுகிறாள் , ஆனால்  பெற்றோர்  அதற்கு  சம்மதிக்கவில்லை . 


அந்த  ஊரில்  இளவட்டப்பசங்க  நான்கு  பேர்  வெட்டியாக  ஊர்  சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் . அவர்கள்  கண்ணில்  படாமல்  ஜாக்கிரதையாக  இருக்கும்படி  பெற்றோர்  எச்சரிக்கின்றனர் .


ஆனால்  பலாப்பழத்தை  பாலீதின்  பேக்கில் சுற்றி  பாதுகாப்பாக  வைத்தாலும்  ஈ  மொய்ப்பது  போல   அடிக்கடி  அவளிடம்  அவர்கள்  வம்பு  செய்து  கொண்டு  தான்  இருக்கிறார்கள் .


 ஒரு  நாள்  நாயகி வீட்டை  விட்டு  வெளியே  செல்லும்போது  காரில்  வரும்  நால்வரும்  நாயகியை  இழுத்து  காரில்  அடைத்து  ஊரில்  இருக்கும்  பாழடைந்த பங்களா  வில்  அடைத்து  வைக்கின்றனர் . பாலியல்  பலாத்காரம்  செய்கின்றனர் 


 நாயகி  போலீசில் கேஸ்  கொடுக்கிறார். வழக்கம்  போல  நாயகியின்  பெற்றோர்  மிரட்டபடுகின்றனர் .  ஏன்  எனில்   அந்த  நால்வரில்  ஒருவன்  அர்சியல்  செல்வாக்கு   மிக்கவன் 


 இதற்குப்பின்  கதையில்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை  


நாயகி சியா  ரோலில்  பூஜா  பாண்டா  நடித்திருக்கிறார். தலையில்  இடியே  விழுந்தாலும்  அதிகம்  ரீ ஆக்ட்  செய்யாத  கேரக்டர்  டிசைன்.  அமைதியாக  படம்  முழுக்க  வந்து  செல்கிறார்.  அவருக்கு  இழைக்கப்படும்  கொடுமை பரிதாபப்பட  வைப்பவை 


வில்லன்  ஆக  நடித்திருப்பவர்  ரோஹித்  பதக். எம் எல்  ஏ  வாக  இவரது  நடிப்பு  ஓக்கே  ரகம்  தான்


ஜட்ஜ்  ஆக  வரும்  அந்தப்பெண்  கேரக்டர்  கூட  நன்றாக  செய்திருக்கிறார். வக்கீல்  ஆக  நாயகிக்குத்துணையாக  நடித்தவர்  குட் 


ராஜர்சியின்  இசையில்  பாடல்கள்  பரவாயில்லை ,நீல்  அதிகாரியின்  பின்னனி  இசை  இன்னும்  கவனம்  செலுத்தி  இருக்கலா,ம் 


மகேந்திர சிங்க் லோதியின்  எடிட்டிங்கில்  படம்  இரண்டு  மணி  நேரம்  தான்  என்றாலும்  நான்கு  மணி  நேரம்  ஓடுவது  போலத்தோன்றுகிறது 


எளிமையான  லோ  பட்ஜெட்  கிராமத்துக்கதை  என்பதால் ஒளிப்பதிவு  ஆர்ப்பாட்டம்  இல்லாமல்  தெளிவாக  கச்சிதமாக  இயற்கையாக  இருக்கிறது 


ராம்சி  சோம்வம்சி  தான்  வசனம், தீப்பொறி  எல்லாம்  கிளம்பலை , ஆனால் யதார்த்தமாக  இருக்கிறது 


ஹைதர் ரிஸ்வி, சாமா ஆகியோருடன்  இணைந்து  திரைக்கதை எழுதி  இயக்கி  இருக்கிறார் மணீஷ்  முந்த்ரா


சபாஷ்  டைரக்டர்


1   சினிமாத்தனமான  காட்சிகள்  எதும் இல்லாமல்  மிக  யதார்த்தமான  கதைக்களத்தை  நிறுவிய  விதம்  அருமை 


2  நாயகியின்  அமைதியான  நடிப்பு , தெளிவான  முகம், ஒப்பனை  இல்லாத  யதார்த்த  சருமம் 


3  யதார்த்தமான  கோர்ட்  காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு நஷ்ட  ஈடு  எதுவும்  வேண்டாம், எனக்கான  நியாயம்  கிடைச்சா  போதும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பாலியல்  பலாத்காரம்  செய்யப்பட்ட  பெண்  24  மணி  நேரத்துக்குள்  மருத்துவ  பரிசோதனை  மேற்கொள்ள  வேண்டும், அப்போதுதான்  தடயம்  சிக்கும், ஆனால்  பெண்  போலீஸ்  நாயகியைக்குளிப்பாட்டி  விடுகிறார்கள் . செமன்  டெஸ்ட்  எப்ப்டி  எடுக்க  முடியும் ? குற்றத்தை  எப்படி  நிரூபிக்க  முடியும் ? 


2  ரவுடிகள்  நால்வரும்    நாயகியை  ரேப்  செய்து  விட்டு  எஸ்  ஆகாமல்  பிக்னிக்  வந்த  மாதிரி  நாள்  க்ணக்கில் அங்கேயே  தங்கி  இருந்தால்  மாட்டிக்கொள்வோம்  என  தெரியாதா? 


3  குற்றம்  சாட்டப்பட்டவர்  எம் எல்  ஏ  ஃபேம்லி . குற்றம் இழைக்கப்பட்டவர்  ஏழை.  போலீஸ்  பாதுகாப்பு  ஏன்  அளிக்கப்படவில்லை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  ஏ  தான், ஆனால்  முகம்  சுளிக்கும்  காட்சிகள்  எதுவும்  இல்லை சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஸ்லோவான  க்ரைம் ட்ராமா  பார்த்துப்பழக்கம்  உள்ளவர்கள்  மட்டும்  பார்க்கலாம். ரேட்டிங்  2.5 / 5 Siya
Directed byManish Mundra
Written byManish Mundra
Haider Rizvi
Samah
Dialogues by
 • Rashmi Somvanshi
Produced byRaghav Gupta
StarringPooja Pandey
Vineet Kumar Singh
Ambrish Kumar Saxena
Rudra Chaudhary
CinematographyRafey Mehmood
Subhransu
Edited byManendra Singh Lodhi
Music bySongs:
Rajarshi Sanyal
Score:
Neel Adhikari
Production
company
Distributed byZEE5
Release date
16 September 2022
CountryIndia
LanguageHindi

Saturday, December 02, 2023

SATURDAY AFTERNOON (2019) - SHONIBAR BIKAL- பெங்காலி-ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் ) @ சோனி லைவ்

     


 இது  ஒரே  ஷாட்டில்  எடுக்கப்பட்ட  படம் , பங்களாதேஷ்  படமாக  இருந்தாலும்   ரிலீஸ்  ஆகி  நான்கு  ஆண்டுகள்  வரை  அங்கே  தடை  செய்யப்பட்ட  படம் . 2016 ஆம்  ஆண்டு  நிகழ்ந்த  தாக்கா  தாக்குதலை  அடிப்படையாகக்கொண்டு  எடுக்கப்பட்ட  படம் , இது  ஒரு  உண்மை  சம்பவம். .எல்லா  தரப்பு  மக்களும்  பார்க்கத்தகுந்த  ஜனரஞ்சகமான  படம்  அல்ல . 2019 ஆம்  ஆண்டு  நடந்த  மாஸ்கோ  இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  திரையிடப்பட்ட  பட,ம் .  பல  திரைப்பட  விழாக்களில்  கலந்து கொண்டு  மொத்தம்  5  விருதுகளை  வென்ற  படம் .  இதில்  நாயகன் , வில்லன்  , நாயகி    என  யாரும்  கிடையாது . ஒரு  சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  காட்சிகள்  நகரும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ரம்ஜான்  தினம். சனிக்கிழமை  மதியம்  . லியோ  படத்தில்  வருவது  போல  ஒரு  காஃபி  ஷாப்  கம்  ரெஸ்டாரண்ட்டில்  தீவிரவாதிகள்  புகுந்து  விடுகின்றனர்.  அப்போது  அங்கே  இருந்த  பொதுமக்கள் , க்டை  ஊழியர்கள்  அனைவரையும்  பணயக்கைதிகளாக  பிடித்து  வைத்துக்கொள்கின்றனர்


உடனே  போலீசுக்கு  தகவல்  தெரிவிக்கப்பட்டு பில்டிங்கை  சுற்றிலும்  போலீஸ்  ஃபோர்ஸ்  சூழந்து  விடுகிறது . தீவிரவாதக்கும்பலுடன்  பேச்சு  வார்த்தை  ந்டத்துகிறது 


 உள்ளே  இருக்கும்  தீவிரவாதி  க்ரூப் மாடர்ன்  பெண்களுக்கு  எதிரானவை . முஸ்லீம்  குரூப்.அங்கே  இருக்கும்  பொதுமக்களில்  ஒவ்வொருவராக  விசாரித்து  அவர்களுக்குப்பிடிக்காதவர்களை  சுட்டுத்தள்ளுகிறது 


 ஒரு  கட்டத்தில்   மீடியாக்கள்  ஆர்வக்கோளாறு  ஆர்யமாலா  ஆகி  பிடிபட்ட  பணயக்கைதிகள்  எந்த  எந்த  நாட்டினர் , எந்த  மதத்தினர்  என  ஓப்பன் செய்து  தான்  ஒரு  உதவாக்கறை  ஓட்டை  வாய்  என்பதை  நிரூபிக்கிறது


உள்ளே  இருப்பவர்களில்  ஒருவர்  மட்டும்  இந்தியர்  என்ற  தகவல்  மீடியா  மூல்ம்  தீவிரவாதி  க்ரூப்புக்குத்தெரிய  வருகிறது


 அந்த  இந்தியன்  யார்  என்பதைக்கண்டு பிடித்து  அவனைக்கொல்வதாக  முடிவெடுக்கிறார்கள் 


 உள்ளே  இருக்கும்  பணயக்கைதிகளில்  ஒரு  ரஜினி காந்த்தோ , விஜயகாந்த்தோ  இருந்தால்  ஃபைட்  போட்டு  படத்தை  முடித்திருப்பார். அனைவரும்  சாமான்யர்கள் ., நிஜத்தில்  நடந்த  சம்பவம்


 அந்த  புத்திசாலி  இந்தியன்  தன்னையும்  வெளிப்படுத்தாமல் , அங்கே  இருப்பவர்களுக்கும்  எந்த  ஆபத்தும்  இல்லாமல்  எப்படி  சாமார்த்தியமாக  செயல்பட்டுக்காப்பாற்றினார்  என்பதே  மீதி  திரைக்கதை 


இதில்  நடித்தவர்கள்  எல்லோருமே  சிறப்பாக  தங்கள்  பங்களிப்பை  தந்திருந்தாலும்  முஸ்லீம்  பெண்ணாக  வந்து  அனைவரின்  மனதையும்  கொள்ளை  கொண்டவர்  தான்  நாயகி  என  வைத்துக்கொள்ளலாம், பிரமாதமான  நடிப்பு 


வேறு  யாருக்கும்  அதிக  வாய்ப்பு  இல்லை . இந்தியன்  ஆக யாராக  இருப்பார்? என்ற  சஸ்பென்ஸ்  கடைசி  வரை  மெயிண்ட்டெயின்  செய்தது  சிறப்பு 


83  நிமிடங்கள்  மட்டுமே  ஓடுமாறு  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் .ஒளிப்பதிவு  அஜிஸ்.  ஒரே  ஷாட்டில்  83  நிமிடப்படத்தையும்  எடுப்பது  எவ்வளவு  சிரமம்  என்பதை  இரா  பார்த்திபனின் இரவின்  நிழலில்  படம்  பார்த்தவர்   உணர்ந்திருப்பர்


முஸ்தஃபா சர்வர்  ஃபரூகி  தான்  திரைக்கதை , இயக்கம்  எல்லாம்.


சபாஷ்  டைரக்டர்


1   தீவிரவாதிகள்  தங்களிடம்  சிக்கிய  மக்களை  எப்படி  பிரிவினை  ஏற்ப்டுத்தி  பிரிக்க  நினைக்கிறார்கள் ?  அவர்களை  எப்படி  டீல்  செய்கிறார்கள்  என்பதை  நன்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் 


2   முஸ்லீம்  பெண்ணின்  உடல்  மொழி , டயலாக்   டெலிவ்ரி  அனைத்தும்  அருமை


  ரசித்த  வசனங்கள் 


1  எல்லாரும்  ஒரு  நாள்  அல்லா  கிட்டே  போக  வேண்டியவங்க  தான், நாங்க  உங்களை  முன்  கூட்டியே கடவுளைக்காண  ட்ரிப்  அரேஞ்ச்  பண்ணி  இருக்கோம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஹோட்டலுக்குள்  டி வி  இருப்பது  அனைவருக்கும்  தெரியும் . வாய்  பேச  முடியாதவர்  போல  நடித்தவர்  பின்  வெளியே  போய்  மீடியாவுக்குப்பேட்டி  கொடுப்பது  எதற்கு ? 


2 முஸ்லீம்  லேடிக்கு  ஒரு  காதலர்  இருப்பதும்  அவர்  பற்றிய  தகவலும்  வெளிக்கொண்டு  வந்திருக்க  வேண்டிய  அவசியமே  இல்லை . ஏன்  ஓப்பன்  செய்தார்  அந்த   ;லேடி? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டிராமா  பார்ப்பது  போலத்தான்  இருக்கும், உண்மை  சம்பவம்  எப்படி  நடந்திருக்கும்  ? என்பதை  அறிய  ஆவல்  உள்ளவர்கள்  மட்டும்  பார்க்கலாம், ரேட்டிங்   2.25 / 5 


Shonibar Bikel
Film poster
Directed byMostofa Sarwar Farooki
Written byMostofa Sarwar Farooki
Produced byAbdul Aziz
Mostofa Sarwar Farooki
Starring
CinematographyAziz Zhambakiev
Music byPavel Areen
Production
companies
Release date
Running time
83 minutes
CountriesBangladesh
Germany
Russia
LanguagesBengali
English

Friday, December 01, 2023

சத்திய சோதனை (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ சோனி லைவ்

     


      ஒரு கிடாரியின்  கருணை ,மனு(2017) என்ற  மாறுபட்ட  , தரமான  நகைச்சுவைப்படத்தை  வழங்கி  விமர்சகர்கள்  இடையே  மிகப்பெரும்  பாராட்டைப்பெற்ற  சுரேஷ்  சங்கையா  இயக்கத்தில்  உருவான  இப்படம்  மிக  மிக  எளிமையான , தரமான  கதைக்களம், காட்சி  அமைப்புகளுடன்  வந்திருக்கிறது . விக்ரம், ஜெயிலர் , லியோ  மாதிரியான  ஆக்சன் மசாலா  வன்முறைப்படங்களைத்தொடர்ந்து  பார்த்து  சலித்து  விட்ட  ரசிகர்களுக்கு  மிகப்பெரிய  ஆறுதல்  இப்படம்

ஸ்பாய்லர்  அலெர்ட்

 ஓப்பனிங்  சீன்லயே  ஒரு  கிராமத்தில்  நான்கு  ரவுடிகள்  ஒரு  ஆளை  துரத்தி  வெட்டிக்கொலை  செய்கின்றனர். டெட் பாடியை  அப்படியே  விட்டுச்செல்கின்றனர். இறந்த  ஆள்  கழுத்தில்  தலா  10  பவுன்  கணக்கில்  ஏகப்பட்ட  தங்கசங்கிலிகள்  அணிந்திருக்கிறான்

நாயகன்   அந்த  வழியாக  வரும்போது  டெட்  பாடியைப்பார்த்து  அருகில்  இருக்கும்  போலீஸ்  ஸ்டேஷனில்  புகார்  கொடுக்கிறான். ஆனால்  போலீசோ  முறையாக  விசாரிக்காமல்  தகவல்  தந்த  நாயகனையே  பழி சொல்லி  லாக்கப்பில்  அடைக்கிறது 


போலீசுக்கு  கொலைகாரனைப்பிடிப்பதை  விட  கொலையான  ஆள்  அண்ந்திருந்த  தங்க  நகைகளை ஆட்டையைப்போடுவதில்  தான்  ஆர்வம்  அதிகம்


போலீஸ்  ஸ்டேஷனில்  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள் தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  பிரேம்  ஜி  அமரன்  அடக்கி  வாசித்து  இருக்கிறார்.  வெங்கட்  பிரபு  இயக்கும்  படங்களில்  எல்லாம்  பிரேம்  ஓவராக  உரிமை  எடுத்து  ஓவர்  ஆக்டிங்  செய்வார். சில  சிரிப்பது  போல  அமையும், பல  காட்சிகள்  எரிச்சல்  ஊட்டும், ஆனால்  இப்படத்தில்  இயக்குநர்  சொன்ன  வேலையை  மட்டும்  செய்திருக்கிறார். அப்பாவித்தன  நடிப்பு  நன்றாகக்கை  கொடுத்திருக்கிறது 


 ஜட்ஜ்  ஆக  வரும்  கு  ஞானசமபந்தம்  அவர்களின்  யதார்த்தமான  டயலாக்  டெலிவரி , அட்டகாசமான  உடல்  மொழி ,  , நடிப்பு  அனைத்தும்  படத்துக்குப்பெரிய  பிளஸ்  பாயிண்ட் 


போலீஸ்  குபெரன்  ஆக  வரும்  கே  ஜி  மோகன் ,  பாட்டியாக  வரும்  புது  முகம்  இருவரும்  கவனிக்க  வைக்கும்  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


அதிக  காட்சிகள்  இல்லை  என்றாலும்  பெண்  கதாபாத்திரங்களாக  வரும் ஸ்வயம்  சித்தா , ரேஷ்மா  இருவரும்  ஓக்கே  ரக  நடிப்பை  வ்ழங்கி  இருக்கிறார்கள் 


ஆர்  வி சரணின்  ஒளிப்பதிவில்  கிராமத்தில்  யதார்த்த  மனிதர்களைப்படம்  பிடிப்பதில்  ஃபர்ஸ்ட்  கிளாஸ்  ஃபோட்டோகிராஃபியை  பதிவு  செய்திருக்கிறார்


எம்  ரகுராம்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் .தீபன்  சக்கரவர்த்தியின்  பின்னணி  இசை  ஒரு  காமெடிப்படத்துக்கு  தேவையான  அளவில்  சிறப்பாக  அமைந்திருக்கிறது, திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்  சுரேஷ்  சங்கையா

சபாஷ்  டைரக்டர்  ( சுரேஷ்  சங்கையா) 


1  மெயின்  கதைக்குப்போகும்  முன்  போலீஸ்  ஸ்டேஷன்  எப்படிப்பட்டது  அங்கே  இருப்பவர்கள்  கேரக்டர்  என்ன? என்பதை  விலாவாரியாக   விளக்கிய  விதம்  அருமை 

2   போலீஸ்  இன்ஃபார்மர்  ஆக  வருபவர்  நடிப்பும், கேரக்டர்  டிசைனும்  அருமை 

3   இரு ஏரியா  போலீஸ்  ஸ்டேஷன்களில்  உள்ள  போலீசும்  நகைக்காக  அடித்துக்கொள்வது  அல்ட்டிமேட்  காமெடி 

4  யதார்த்தமான , நகைச்சுவையான  கோர்ட்  காட்சிகள் , நீதிபதி  நடிப்பு  கிளாசிக் 


  ரசித்த  வசனங்கள் 


1   சக்தி  மெடிக்கல்ஸ்க்கு  ஏன்  போனே? 


 சக்தி யை  வாங்க , ஐ  மீன்  பூஸ்ட்  வாங்க .. மற்றபடி  நீ  நினைக்கறதை  எல்லாம்  வாங்கலை 


2   ரெண்டு  போலீசும்  சோடி  போட்டுக்கிளம்பிட்டீங்களா? இன்னைக்கு  எவன்  குடியை  கெடுக்கப்போறாங்கனு  தெரியல


3   என்  ராசாத்தியை  வேணா   இங்கே  உட்கார  வைக்கலாமா? உடுப்புக்கு  எடுப்பா  இருக்கும் 


4  யூ  டூ  ப்ரூட்டஸ்?  மீண்டும்  ஃப்ரூட்டியா?


5   அவனை  ஏன்  கொலை  செஞ்சே?

அவன்  நடவடிக்கை  சரி  இல்லை  யுவர்  ஆனர் 

 அப்டி  என்ன  செஞ்சான் ?

வெளில  ஓப்பனா  சொல்ல  முடியாது 

சரி , அப்டி  உள்ளே  வந்து  சொல்றியா?


6  ரிமாண்ட்ல  எடுத்து  விசாரிக்க  எத்தனை  நாட்கள்  கால  அவகாசம்  வேண்டும் ?

யுவர்  ஆனர்  , ஒரு  48  நாட்கள்

சபரிமலைக்கா  மாலை  போட்டுட்டு  போறீங்க ? ரெண்டு  நாள்  எடுத்துக்குங்க 

7  உன் பேர்  என்ன?

வைரமுத்து 

பேர்  எல்லாம்  நல்லாத்தான்  இருக்கு , ஆனா  நடவடிக்கை  தான்  சரி  இல்லை 


8   என்னை  அடிக்காதீங்க , ஆளாளுக்கு  கை  வைக்க  நான்  ஒண்ணும்  ஏடிஎம்  கிடையாது . முதல்ல  அடிச்சாரே? அவர்  மட்டும்  என்  மேல  கை  வைக்கலாம் 


9  திருடனை  ஏன்  துரத்த  ,முடியலை ?

தம்  அடிச்சு  தம்  அடிச்சு   தம்  கட்டி  ஓட  முடியலை ‘

நம்ம  ராசாத்தியை  வேணா  முன்னால  ஓட  விடவா? அப்பவாவது  நீங்க  ஓடறீங்களா?னு பார்க்கலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஃபார்ஸ்ட்  ஏரியாவில்  கொலை  நடந்தால்  முதலில்  ஃபார்ஸ்ட்  ஆஃபீசர்ஸ்  தான்  டெட்  பாடியைக்கைப்பற்ற  வேண்டும், பின்  ஃபாரன்சிக்  ஆட்கள்  வந்து  தடயங்களை  சேகரிக்க  வேண்டும். இங்கே  அப்படி  நடந்த  மாதிரி  தெரியல 


2  நாயகனை  போலீஸ்  பார்த்ததும்  அவர்  பாக்கெட்டை  ஏன்  செக்  செய்யவில்லை ? 


3  நாயகி  நாயகன்  போலீஸ்  ஸ்டேஷனில்  அடி  வாங்கும்போது  கண்டுக்கவே  இல்லை , க்ளைமாக்சில்  மட்டும்  சிரித்தபடி  அவருடன்  ஜோடியாக  வண்டியில்  செல்வது  எப்படி ? கேரக்ட்ர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட கலக்கலான  காமெடிப்படம், டோண்ட்  மிஸ்  இட் . ஸ்டார்  வேல்யூ  இல்லை  என  யாரும்  தயங்க  வேண்டாம் .  அனைவரின்  நடிப்பும்  அருமை  . ரேட்டிங்  3.25 / 5 


நன்றி - அனிச்சம்  மின்னிதழ்  டிசம்பர் 2023 

Thursday, November 30, 2023

I SAW THE DEVIL (2010) - சவுத் கொரியன் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் ஆக்சன் & ரிவஞ்ச் த்ரில்லர்) @ அமெசான் பிரைம்

   


  6  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு 13  மில்லியன்  டாலர்  வசூல்  செய்த  படம் . பல  சர்வ தேச  விழாக்களில்  கலந்து  கொண்டு  பல  பிரிவுகளில்  பல  விருதுகளை  வென்ற  படம், விருதுப்பட்டியலை  சொன்னால்  ஏ 4  சீட்டில்  அதுவே  இரண்டு  பக்கங்கள்  வரும்    . 19  விருதுகளுக்குப்பரிந்துரைக்கப்பட்டு  16  விருதுகளை  வென்ற்  படம்.  ஜெயம்  ரவி  நடித்த  தனி  ஒருவன்  படத்தில்  இந்தப்படத்தில்  இருந்து  உருவப்பட்ட  சீன்  உண்டு 


தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகும்போது  ஏகப்பட்ட  வன்முறை  என  பல  இடங்களில்  கட்  கொடுக்கப்பட்டது .  அடிச்ச  கைப்புள்ளைக்கே  இவ்ளோ  காயம்னா  அடி  வாங்குனவன்  உசுரோட  இருப்பான்னா  நினைக்கறே? என்பது  போல  சென்சார் ல  கட்  வாங்கின  போர்சனே  இவ்ளோ  கொடூரமா  இருக்கே? அன்  கட்  வெர்சன்  எப்படி  இருக்குமோ? என  குலை  நடுங்க  வைக்கிறது 


இது  19+  மூவி. 18+  கேட்டு  மூன்று  முறை  சென்சாருக்குப்போயும்  கிடைக்கவில்லை . ப்யங்கர  வன்முறைக்காக  19+  வாங்கிய  படம் 


இந்தப்படத்தை  ரீமேக்  செய்ய  இந்தியாவில்  பல  மொழி  ஆட்கள்  படை  எடுத்தார்களாம்,  ஓவர்  ரேட்  சொன்னதால்  பேக்  அடித்து  விட்டார்கள்  என  தகவல் .


  ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு சைக்கோ. ஒரு  ஸ்கூல்  வேன்  ஓட்டும்  டிரைவரா  இருக்கான். இரவு  நேரத்தில்  யாரும்  இல்லா  ரோட்டில்  பெண் யாராவது  தனிமைல  சிக்குனா  அவ்ளோ தான். உப்புக்கண்டம்  போட்டுடுவான்


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . அவனின்  வருங்கால   மனைவி ஒரு  இடத்தில் தனிமையில்  மாட்டிக்கொள்கிறாள் . இவள்  கர்ப்பம்  வேற . வில்லன்  பார்வையில்  பட்டு  விடுகிறாள். வில்லன்  நாயகியைக்கொலை  செய்து  விடுகிறான் 


நாயகனின்  மாமனார்  30  வருடங்கள்  போலிஸ்  டிபார்ட்மெண்ட்டில்  டிடெக்டிவ்  ஆக  பணி  செய்தவர் , அதனால்  கேஸ்  தீவிரம்  ஆகிறது 


போலீசோட  சந்தேக  பட்டியலில் 4  பேர்  சிக்கறாங்க . நாயகன்  முதல்  3பேரை  பிடித்து அடித்துத்துவைத்துக்காயப்போட்டு  ஹாஸ்பிடலில் சேர்க்கிறான், அவங்க  ரெண்டு  பேரும்  அலறி  அடிச்சுக்கிட்டு  போலீசில்  சரண்டர்  ஆகிடறாங்க . இவங்களும்  சைக்கோக்கொலைகாரர்கள்  தான். ஆனால்  நாயகியைக்கொலை  செஞ்ச  வில்லன்  வேற 


கடைசியில் நாயகன்  வில்லனைக்கண்டு பிடித்து  விடுகிறான். ஆனால்  கொலை  செய்யலை. ஜிபிஎஸ்  கருவியை  மாத்திரையில் செலுத்தி  அதை  வில்லன்  உடலில்  வைக்கிறான். துரத்து  துரத்தி  சித்ரவதை  செய்து  அவனைக்கொல்வதே   நாயகனின்  திட்டம் .


 இது  வில்லனுக்கு  ஒரு  கட்டத்தில்  தெரிந்து  விடுகிறது . நாயகனின் மச்சினி, மாமனார்  இருவரையும்  கொல்ல  வில்லன்  கிளம்ப  நாயகன்  வில்லனைத்துரத்த  போலீஸ்  நாயகன்,   வில்லன்  இருவரையும்  துரத்துகிறது . இந்த  பரபரப்பான  சேசிங்  த்ரில்லரில்  யார்  வெற்றி  பெற்றார்கள்  என்பது  மீதி  திரைக்கதை 


கொடூரமான  சைக்கோ  கில்லர்  ஆக  வில்லன்   ரோலில் சோய்  மின்  சிக்  மிரட்டி  இருக்கிறார். (   இப்படி  எல்லாம்  ஆட்கள்  இருப்பார்களா?  என  வியக்க  வைக்கும்  அளவு  வில்லத்தனம்  செய்யும்  ரோல். ஒரு  ஸ்ட்ராங்க்  ஆன  திரைக்கதைக்கு  வில்லனின்  ரோல்  எவ்வளவு  வலிமையாக  கட்டமைக்கப்படவேண்டும்  என்பதற்கு  உதாரணமாக  வில்லன்  ரோலை    நிறுவி  இருக்கிறார்  இயக்குநர் . ஓல்டு  பாய்  படத்தின்  நாயகன்  ஆக  நடித்தவர்  இவர்  தான் 


லீ பின்   ஹங் தான்  நாயகன். பால்  மணம்  மாறா  பாலகன்  போல  இவரது  முகம்  சாந்த  சொரூபமாக  இருக்கிறது. நம்ம  ஊர்  சித்தார்த்  மாதிரி  அப்பாஸ்  மாதிரி  இருக்கிறார் 


144  நிமிடங்கள்  ஓடும்படி  எடிட்டிங்  செய்து  இருக்கிறார்கள் . கிட்டத்தட்ட  தமிழ்ப்படம்  போல  நீளமாக  ஓடுகிறது . ஆனால்  எங்கும்  போர்  அடிக்கவில்லை 


பார்க்  ஹூ ஜங் என்பவர்  தான்  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்.கிம்  ஜி  வூன்  தான்  இயக்கி  இருக்கிறார்.


இசை , பின்னணி  இசை , ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கள்  அம்சங்கள்  எல்லாமே  பிரமாதம்., இதன்  திரைக்கதையை , காட்சிகளை  அட்லீ  ஒர்க்  

( திருட்டு  வேலை )    செய்த  படங்களின்  பட்டியல்  பார்த்தால்  நீண்டு  கொண்டே  போகும் . ரிவஞ்ச்  த்ரில்லரில் ஒரு  லேண்ட்  மார்க்  படம்.பெஞ்ச்  மார்க்  மூவி 


சபாஷ்  டைரக்டர்


1  வில்லனின்  உடம்பில்  ஜிபிஎஸ்  டேப்லெட்  பொருத்தி  இருக்கியே? அவனுக்கு  அது  தெரிந்து  பேதி  மாத்திரை  சாப்பிட்டு  வெளியே  எடுத்தால்  தப்பிடுவானே? என  நண்பன்  நாயகனிடம்  கேட்கும்போது  அதை  அரை  மயக்கத்தில்  இருக்கும்  வில்லன்  ஒட்டுக்கெட்கும்  இடம்  மாஸ்  சீன் 


 2  வில்லனின்  நண்பன்  அவனை  விட  பெரிய  சைக்கோவாக  இருப்பதும்  அவனுடன்  வில்லன்  நடத்தும் உரையாடலும் 


3   நாயகன்  மாமனாரை  எச்சரிக்க  ஃபோன்  செய்யும்போது  ஃபோன் ரிங்  அடிப்பதும்  அதே  சமயத்தில்  வாசலில்  சார்  , பார்சல்  டெலிவரி  என  குரல்  கேட்பதும்  , இரண்டில்  எதை  அட்டெண்ட்  செய்ய  என  அவர்  தடுமாறும்  காட்சி   


ரசித்த  வசனங்கள் 


1 இதுக்கும்  மேல  நீ  பேசுனா  நீ  சாப்பிடற  சாப்பாட்டில்  விஷம்  வைத்து விடுவேன்

 நீ  போடற  சாப்பாடே  விஷம்  மாதிரி  தான்  இருக்கு 


2  நாமளே  ஒரு  சைக்கோ , இவன்  நம்மளை  விட  பெரிய  சைக்கோவா  இருப்பான்  போலயே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தன்  உடலில்  இருக்கும்  ஜிபிஎஸ்  டேப்லெட்டை  கண்டுபிடித்து  எடுக்கும்  வில்லன்  நாயகனை  திசை  திருப்ப  த்ரிஷ்யம்  படத்தில்  வருவது  போல  மூவ்  ஆகும்  ஏதோ  ஒரு  வாகனத்தில்  அதை  தூக்கிப்போட்டிருக்கலாம், அதை  விட்டு  விட்டு  ஒரு  காயம்  அடைந்த  ஆளின்  உடம்பில்  செலுத்தி  டைம்  வேஸ்ட்  செய்வது  ஏனோ ?


2  வில்லன்  துரத்தி  தேடி  வருகிறான்  என்ற  தகவலை  நாயகன்  மாமனாருக்கும்,  மச்சினிக்கும்  வாட்சப்பில்  வாய்ஸ்  மெசெஜ்  அனுப்பி  அலர்ட்  பண்ணி  இருக்கலாம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  கொடூரமான  வன்முறைக்காட்சிகள் , அடல்ட்  கண்ட்டெண்ட்  உண்டு சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பயங்கரமான  ரிவஞ்ச்  ஆக்சன்  த்ரில்லர்  பார்க்க  விரும்புவர்  பார்க்கலாம். சாப்பிட்டுக்கொண்டே  படம்  பார்ப்பதை  தவிர்க்கவும் . ரேட்டிங்  3 / 5 


I Saw the Devil
Theatrical release poster
Hangul
Hanja
를 보았다
Literal meaningSaw an angma (evil spirit, demon)
Revised RomanizationAngmareul boatda
McCune–ReischauerAkmarŭl poatta
Directed byKim Jee-woon
Written byPark Hoon-jung
Produced byKim Hyun-woo
Starring
CinematographyLee Mo-gae
Edited byNam Na-yeong
Music byMowg
Production
companies
 • Peppermint & Company
 • SoftBank Ventures Korea
 • Finecut
Distributed by
Release dates
 • 12 August 2010 (South Korea)
 • 21 January 2011 (Sundance)
 • 4 March 2011 (US & Canada)
Running time
144 minutes
CountrySouth Korea
LanguageKorean
BudgetUS$6 million[1]
Box officeUS$12.9 million[2]

Wednesday, November 29, 2023

TANTIRAM (2023) = தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி ட்ராமா) @ அமேசான் பிரைம்


முழு  டைட்டில்  என்ன?னு  பார்த்தா  தந்திரம் - சேப்ட்ட்ர் 1 - சிவகாசியின்  கதை.. சிவகாசியில்  உள்ள பட்டாசு  தொழிற்சாலை  அதிபரின்  உண்மைக்கதை  மாதிரி  காட்றாங்க. ஆனா பயங்கர  டஹால்டியா  இருக்கு , டி வி சீரியல்  ரசித்துப்பார்ப்பவர்களுக்கு  பிடிக்கும்  தரத்தில்  இருக்கும்  மட்டமான  கதைக்கரு .

  ஏன்  டி வி  சீரியலை  மட்டமா  சொல்றேன்னா  நடைமுறை  வாழ்க்கையில்  நாம்  கண்டிராத  பழி  வாங்கல்கள் , கள்ளக்காதல், மாமியார்  மருமகள்  அட்ராசிட்டிஸ்  தான்  கேவலமாக ( பெரும்பாலான  95%  டி வி  சீரியல்களில் )   கையாளப்படுகிறதுனு பலர்  சொல்லக்கேள்வி

ஸ்பாய்லர்  அலெர்ட்நாயகனின்  அப்பா  பெரிய  பட்டாசு தொழிற்சாலை  நடத்தும்  முதலாளி. நாயகன்  10  வயது சிறுவனா  இருந்தபோது  நாயகனின்  அம்மா  வேறு  ஒரு  நபருடன்  ஓடிப்போய்  விட்டதாக  சொல்லப்படுகிறது . இதனால்  நாயகனுக்கு  சின்ன  வயதில்  இருந்தே  பெண்கள்  என்றால்  வெறுப்பு 


  நாயகன்  வாலிப  வயதை  அடைந்ததும்  அப்பா  அவனுக்கு  திருமணம் செய்து  வைக்கிறார். ஆரம்பத்தில்  மனைவியிடம்  இருந்து  விலகி  இருந்தவன்  ஒரு  கட்டத்தில்  ராசி  ஆகி  விடுகிறான். நல்லபடியாகக்குடும்பம்  நடத்தி  வருகிறான்


இப்போதுதான்  கதையில் கேவலமான  ஒரு  ட்விஸ்ட். சாத்தான்  நாயகனிடம்  உன்   மனைவியின்  ரத்தம்  ஒரு  சொட்டு  கொண்டு  வா, உன்னை  கோடீஸ்வரன்  ஆக்குகிறேன்  என்கிறது . நாயகனும்  அதை  கொண்டு  வருகிறான். சாத்தான்  அதை  ரோஸ்மில்க்  மாதிரி  டேஸ்ட்  பண்ணி  விட்டு  சொன்ன  வார்த்தையைக்காப்பாற்றுகிறது


நாயகன்  பெரிய  பணக்காரன்  ஆகிறான். இப்போது  அவனுக்குப்பேராசை , மேலும்  பணம்  சம்பாதிக்க  நினைக்கிறான். சாத்தானை  அழைக்கிறான், அவன்  அழைத்ததும்  ஆஃபீஸ்  பாய்  மாதிரி  ஓடி  வரும்  சாத்தான்  இந்த  முறை  உன்  மனைவியை  என்னிடம்  முழுசாக ஒப்படைக்க  வேண்டும்  என்கிறது 


 மறுத்து  விட்ட  நாயகன்  தன்  வேலையைக்கவனிக்க  ஆரம்பிக்கிறான், இதற்குப்பின்  தொழிலில்  பயங்கர  நட்டம். அப்பாவிடம்  போய்  ஆலோசனை  கேட்கிறான். அப்பா  நாயகனின்  மனைவியை  சாத்தானுக்கு  தாரை  வார்க்கச்சொல்கிறார். ஊரார்  கேட்டால்  யாருடனோ  ஓடிப்போய்  விட்டதாக  கதை  கட்டு  என்கிறார்.


 அப்போதுதான்  நாயகனுக்கு ஒரு  உண்மை  தெரிய  வருகிறது . அம்மா  ஓடிப்போகவில்லை , அப்பாதான்  சாத்தானுக்கு  டொனேஷன்  கொடுத்து  விட்டார்


இதற்குப்பின்  கதையில்  நடக்கும்  கேவலமான  ட்விஸ்ட்  தான்  க்ளைமாக்ஸ் . இந்த  லட்சணத்தில்  இதன் இரண்டாம்  பாகம்  வேற  வருதாம் 


நாயகன்  ஆக  ஸ்ரீகாந்த்  குர்ரம்  என்பவர்  நடித்திருக்கிறார். தாடி  , தொப்பையோடு  கேவலமாக  இருக்கிறார்


நாயகி  ஆக  பிரியங்கா  சர்மா  கச்சிதமாக  நடித்திருக்கிறார்


அஜய்  அரசடா  என்பவர்தான்  இசை .  பின்னணி  இசை  தேவலை 

சிறுகுடி  வம்சி  சீனிவாஸ்  தான்  ஒளிப்பதிவு . ஓக்கே  ரகம் 


இந்த  மட்டமான  திரைக்கதையை எழுதியவர்கள்  இருவர்  சபாஷ்  எம் எச் வினீத் (  நான்  பாராட்டி  சபாஷ்  போடலை ., பேரே  அதான் போல ), பொண்ணுரு 


இயக்கி  இருப்பவர்  முத்தையா  மெஹர்  தீபக் 


சபாஷ்  டைரக்டர்


1  தயாரிப்பாளரிடம்  இது   செமயான  பேய்க்கதை  என  பொய்  சொல்லி படம்  எடுக்க  சம்மதிக்க  வைத்தது 


2  ஓப்பனிங்  பில்டப்பாக  புராணக்கதையான  அகல்யா - இந்திரன் , முனிவர்  கதையை  எல்லாம்  அள்ளி  விட்டு  நல்ல  எதிர்பார்ப்பை  கொண்டு  வந்தது 


3  கதை , திரைக்கதை  கேவலமாக  இருந்தாலும்  காட்சிகளில்  அடல்ட்  கண்ட்டெண்ட்  இல்லாமல்  பார்த்துக்கொண்டது 

  ரசித்த  வசனங்கள் 


1  அவசரமான  சமயங்களில்  தப்பு  செஞ்சுட்டு  அதை  சரி  செய்யனும்னு  நினைப்பது  ரொம்ப  தப்பு , ஏன்னா  சில  சமயங்களில்  அந்தத்தப்பே  நம்ம  வாழ்வை நாசமாக்கிடும் 


2  நாம்  சில  சமயங்களில்  எடுக்கும்  சின்னச்சின்ன  முடிவுகள்  நம்  தலையெழுத்தையே  சில  சமயம்  மாற்றி  விடும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன்  பெரிய  தொழில்  அதிபர்  மகன்,  பெரிய  பங்களாவில்  குடி  இருப்பவர்  , முதல்  இரவு  அன்று  மனைவியை  விட்டு விட்டு  தனியே  போய்  படுப்பது  என்றால்  கட்டிலில்  படுக்க  மாட்டாரா? பாய்  எடுத்துட்டுப்போறாரே?  ஏழையா ?


2 சாத்தான்  நாயகனிடம்  நாயகியின்  ரத்தம்  ஒரு  சொட்டு  வேண்டும்  எனக்கேட்கிறது/ நாயகன் ஒரு  குடுவையில்  ஒரு  சொட்டு  ரத்தத்தை  எடுத்துட்டு  வர்றான்.ஒரு  இங்க்  ஸ்பில்லர்ல  எடுத்துட்டு  வ்ந்திருக்கலாம்


3 பட்டாசு  ஸ்டாக்  வைக்க   புது  குடோன்  கட்டும்  நாயகன்  அது  ம்ழைல  நனையுதா?  தன்ணீர்  உள்ளே  வருதா?  என  செக்  செய்யாமல்  பட்டாசுகளை  ஸ்டாக்  வைப்பாரா?

4  பட்டாசு  ஆலை  அதிபர்கள்  யாராவது  இப்படத்தைப்பார்த்தால்  நட்ட  ஈடு  கேட்டு  வழக்கு  போட  வாய்ப்பு  இருக்கிறது , அப்பா, மகன்  இருவரும்  அவரவர்  மனைவியை  சாத்தானுக்குக்கூட்டிக்கொடுத்துதான்  இந்த  வசதியான  வாழ்வு  பெற்றார்கள்  என  யாரையோ  அட்டாக்  செய்யும்  கதை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   போஸ்டர்  டிசைன்  நல்லாருக்கு , டைட்டில் ஒக்கே  என  நினைத்து  யாரும்  ஏமாந்து  விட  வேண்டாம், மட்டமான  படம் , மோசமான  மேக்கிங் , ரேட்டிங்  மைனஸ்  1 / 5 


Tantiram: Chapter 1: Tales of Shivakasi
Tales of Shivakasi[2]
Directed byMuthyala Meher Deepak
Written byShabaz MS, Wineeth Ponnuru
Produced bySrikanth Kandragula[3]
Starring
 • Srikanth Gurram
 • Priyanka Sharma
 • Avinash Yelandur
CinematographySirugudi Vamsi Srinivas
Edited bySirugudi Vamsi Srinivas
Music byAjay Arasada
Production
company
Cinema Bandi
Release date
 • 13 October 2023
[1]
CountryIndia
LanguageTelugu