Tuesday, May 31, 2016

சதாம் உசேன் , ஜெ , கலைஞர் - பிரேமலதா

ஜெ வுக்கும், எனக்கும்தான் போட்டி!’ -அன்புமணி முன்னால் ரேசில் ஓடிட்டிருக்கும் கலைஞர்,கேப்டன் 2,பேரை பிடிக்கவே 10 வருசம் ஆகும்

===========

2 அரசியல் பேசமாட்டேன் செய்தியாளரிடம்-ரஜினி.
# கபாலி ரிலீஸ் ஆகற டைம் வேற.கபால்னு எந்தக்கருத்தும் சொல்லிட முடியாது

=============

3 பெண்களை கவர கூடியவர் பீட்டர் அல்போன்ஸ் - EVKS் # ஓஹோ.அப்போ விஜய் சிவகார்த்திகேயன் மாதிரி ஹீரோவா நடிக்கலாமில்ல?ஏன் கட்சி மாறிட்டே இருக்காரு?


===============

4 பிரேமலதா வடிவில் அன்னை தெரசாவை பார்க்கிறேன் - வைகோ # அன்னைக்கு ஜெ வை யும் இப்டித்தான் புகழ்ந்தீங்க


=============

5 கருணாநிதியும் ஏசுவும் ஒன்று- அப்பாவு பேச்சு
# கலைஞர் உங்களை அழைக்கிறார்.பாவிகளை அவர்.ரட்சிப்பார்.சீட் கொடுப்பார்

================
6 அதிமுக ஆட்சியில் மலிவாக கிடைப்பது கூலிப்படைகள் மட்டும் தான். -கீ.வீரமணி
.# பிரமோசன்.சம்பளப்படை.


==============


7

கச்சத்தீவை மீட்பதாக இரு திராவிடக் கட்சிகளும் நாடகங்கள் நடத்துகின்றன: ராமதாஸ் # உங்க ட்விட்டர் அக்கவுண்ட் (DR RAMADAS ) சைக்கூடத்தான் பலர் (DRAMA DAS )டிராமா தாஸ்-னு படிச்சுடறாங்க==============
8  

மதுரையில் ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்: அரசியல் கட்சிகளை அச்சுறுத்தும் தண்ணீர் பிரச்சினை # இது தெரிஞ்சுதான் மதுரைக்குப்போகாதடின்னு விஜய் பாடுனாரு அப்பவே================


25% காலியாக செல்லும் சுவிதா ரயில்கள்: கோடை விடுமுறையில் வசூலிக்க தயாராகும் ரயில்வே துறை # ஸ்வேதா மேனன் ரயில்னு பேர் மாத்துனா கூட்டம் அள்ளிக்கும்


================


10 

வரலாறு தெரியாமல் உளறுவதை பிரேமலதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.. தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை # வரலாறு தெரிஞ்சிட்டு அறிஞ்சிட்டு வந்து அப்புறமா உளறாம்ங்களா?
==============

11

தனித்துப் போட்டியில்லை... கட்சிக்குள் இருந்தே EVKS சை எதிர்கொள்வேன். ஜோதிமணி அதிரடி!# புத்திசாலித்தனமான முடிவு.ஒளிமயமான எதிர் காலம் உண்டு


=============


12 ஜெ. எந்த ஊருக்கு வருவாரோ என மக்கள் பயத்தில் உள்ளனர்: கனிமொழி # அவங்க என்ன ஸ்டாலின் மாதிரி சத்தியமா கேட்கறாங்க? பயப்பட

=============

13 நட்சத்திர கிரிக்கெட் போட்டி: விஷாலுக்காக வந்த 'நாட்டாமை' மகள் வரலட்சுமி # தவமின்றி கிடைத்த “வரமே!” என் வாழ்வில் எல்லாம் சுகமே


===============


14 திருப்பூருக்கு ஒரு முறை கூட ஜெ., வரவில்லை: ஸ்டாலின் # வந்தா பனியன் சிட்டி சனியன் சிட்டி ஆகிடுச்சுன்னு சொல்வீங்க,எதுக்கு வம்புன்னுதான் வர்லை போல


================


15 ஜெ மார்க்கெட் போன நடிகை,கலைஞர் மார்க்கெட் போன கதையாசிரியர்- சீமான் # நம்ம படம் மட்டும் 100 கோடியா வசூல் பண்ணிட்டு இருக்கு?


=================

16

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்:-கர்நாடக X CM எடியூரப்பா # தமிழக ஜனங்களாலயே கணிக்க முடியல, நீங்க எப்படி ஜோசியம் சொல்றீங்க?

================

17 தமிழகத்தில் பாஜக வரலாறு படைக்கும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.. # தேர்தல் முடிவுக்குப்பின் வரலாறு படிக்கும், வரலாறு தெரிஞ்சுக்கும்னு வேணா சொல்லுங்க


==============

18 அதிமுக ஆட்சியில் வசந்தம் வீசுகிறது: ஜெயலலிதா. # வெய்யில் காத்து தாங்க அனலா வீசுது,நீங்க ஏ சி ல இருக்கீங்க.வசந்தம் வீசும்


============

19 சதாம் உசேன் மாதிரித்தான் ஜெவும், மு.க வும் சாவார்கள் - பிரேமலதா # ஒரு தலைவர் எதைப்பேசலாம்னு தெரிஞ்சுக்கும் முன் எதை பேசக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கனும்


============

20 பேராசிரியர் அன்பழகனுக்கு வயது அதிகமாகிவிட்டதால் தேர்தலில் போட்டியிடவில்லை- கலைஞர் # அவருக்குக்கூட தெரிஞ்சிருக்கு,58 வயசு ஆனா இளைஞர்களுக்கு வழி விடனும்னு

===================

த சிங்கிள் புக் ஆஃப் எ சிங்கம்

தேர்தல் அறிக்கைகளை வைத்து அனைத்து கட்சிகளும் மாயாஜாலம் காட்டுகின்றன - தமிழிசை # எல்லாரும் மாயாஜால் காட்டினா நீங்க சத்யம் தியேட்டரை காட்டுங்க===============
2 நீதித்துறையின் செயல்பாடு அரசியலமைப்பை நீர்த்துப்போக செய்கிறது: பிரணாப் முகர்ஜி. # முதல்ல குமாரசாமிகளை களை எடுங்க ஜி
===========
3 விஜயகாந்த் என்றுமே பணத்துக்கு அடிமையானது கிடையாது: - பிரேமலதா # அவரைப்பற்றி என்ன சொன்னாலும் அடி வந்துடுதே?”அடி”மை
============4 என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறார் விஜயகாந்த்- ராதிகா # எதுக்காக கட்சி ஆரம்பிச்சோம் என்பதே தெரியாமல் சரத் இருக்காரே?============5 ஜெ ஒரு பெண். அவரை எதிர்த்து, ஆண்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்துள்ளனர். இருந்தும், சிங்கம் போல, 'சிங்கிளாக' போட்டியிடுகிறார்.-ராதிகா # த ஜங்கிள் புக் போல் த சிங்கிள் புக்  ஆஃப் எ சிங்கம் -னு  புக் போட்ரலாமா?======================


6  இந்தத் தேர்தலில் விருப்பமானவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதைவிட, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தான் சிறப்பானது-கருணாநிதி: #அப்போ மக்கள் அனுதாப ஓட்டு நமக்கு கிடைக்காது


=================

மத்திய அரசில் பல தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை, இந்தத் தேர்தலில் வெற்றி பெற, பா.ம.க., கொட்டுகிறது.-வைகோ: # ரேசில் உங்களுக்கு முன்னால ஓடிட்டு இருப்பவரை முந்தப்பாருங்கன்னா பின்னால திரும்பி பேசிட்டு இருக்கீங்க=================
8   முதல்வர் கோட்டைக்கே வரவில்லை. ஆனால் சம்பளம் வாங்குகிறார். -ஸ்டாலின்:# சட்டசபை கூட்டத் தொடருக்கு கூடத்தான் கலைஞர் வர்லை, அவர் சம்பளம் வாங்கலையா?=================


9  தி.மு.க., தேர்தல் அறிக்கைதான் தமிழகத்தை மீட்கும் 'ஹீரோ': ஸ்டாலின் வர்ணனை # தேர்தல் அறிக்கையில் பெஸ்ட் பாமக வுதுதான்,அதுக்காக அது ஜெயிச்சிடும்னு சொல்ல முடியுமா?

==================


10  நாங்கள், யாரையும் காசு கொடுத்து  கூட்டத்துக்கு அழைத்து வரவில்லை - விஜய்காந்த் # நமக்கு வாங்கித்தான் பழக்கம்கறீங்களா?


====================11  நான் ஏற்படுத்தியுள்ள விடியல் கூட்டணி, ஆட்சிக்கு வந்துவிடும் என, சொல்லவில்லை-கார்த்திக் # அதுக்கு கட்சில மினிமம் 234 பேராவது வேணுமே?==================


12  தி.மு.க.,வின் ஓட்டு வங்கி வலுவடைந்துள்ளது.- டி.கே.எஸ்.இளங்கோவன் # 27% இருந்தது,இப்போ அழகிரி வந்ததால 29% ஆகிடுச்சு, பத்துமா பத்மா?

==================


13 தாமரை வெல்லட்டும்; தமிழகம் வளரட்டும்' என்பது தான், எங்கள் முழக்கம்- தமிழிசை # முதல்ல தாமரை தமிழகத்தில் வளரட்டும்,அதுக்குப்பின்  வெல்லட்டும்====================


14 
  • புலால் உணவின் தீமை குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:-கி.வைத்தியநாதன் #உணவில் சிறந்தது சைவம், தவிர்ப்போம் அசைவம்

===================


15 

தடையை மீறி கள் விற்க முயன்ற 22 பேர் கைது # கள்ளாமையை இல்லாமை ஆக்குவோம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களா?================


16  

மது, ஊழல் ஒழிப்புதான் எங்களின் பிரதான லட்சியம்- வை கோ # சிகரெட் கம்பெனியை ஒழிக்க முடியாது, மகனுக்கு பாதிப்பு வரும்==================

17  

தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.41 ஆயிரம் கடன் சுமை: மு.க.ஸ்டாலின் # இதுல 20,500 ரூபாயை அதிமுகவும், மீதி 20,500 ரூபாயை திமுகவும் கட்டிடும்================


18

குஷ்பூ வுக்காக ஆர் கே நகரை விட்டுக்கொடுப்பதற்குப்பதில் ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை விட்டுக்கொடுங்கள் - ராகுல் டூ கலைஞர் # வெரிகுட்.இது ஜோதிமணிக்குப்பெருமை,ராகுலின் பெருந்தன்மை=================

19 

=====================


20  

விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு # லீவ் 

மீ அ”லோன்” அப்டினு ஜட்ஜ் குழப்பமாகிட்டாரா?----------------------------

Monday, May 30, 2016

100 கோடி, 100 லிட்டர் . குறியீடு, தெறியீடு. நஷ்ட ஈடு

முதலமைச்சர் ஆகும் தகுதி விஜயகாந்திற்கு இல்லை: ராதிகா # அதை விடுங்க.சரத் கட்சிக்கு 1 சீட் கேப்டன் கட்சிக்கு 100 சீட்.1 பெருசா 100 பெருசா?

===========

2 திமுகவைப் பார்த்தே மது ஒழிப்பு பிரச்சாரத்தை அதிமுக கையிலெடுத்திருக்கிறது - ஸ்டாலின். # 2 பேரும் பாமக வைப்பார்த்து தானே காபி அடிச்சீங்க?
============

3 தி.மு.க. அ.தி.மு.க.வால் மதுவை ஓழிக்க முடியாது: பிரேமலதா # பாமக.வந்தா தான் முடியும் அதுவும்.வராது.மது விலக்கும் வராது"


==========

4

விதி மீறி கோயிலுக்குள் பிரச்சாரம்: பாஜக வேட்பாளர் வானதி மீது வழக்கு # சாமி கும்பிடப்போனேன், பிரார்த்தனையை பிரச்சாரம்னுட்டாங்கனு சமாளிங்க ஜுஜூபி கேசு
===============


5  

சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதா? வேண்டாமா? - குழப்பத்தில் பாமக # ஜெயிப்போ தோற்போ போட்டியில் கலந்து கொள்வதே வீரம்===========================


6  ஜெ வை பார்க்க 6 மணி நேரம் வெயிலில் தவித்த பெண்கள்: சாக்குப்பை துணிகளை தலையில் அணிந்து சமாளிப்பு # சொத்து சேர்த்த பாவத்தோட இந்தப்பாவமும் சேருது=====================


7  

உ.பி.யில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் பலி; சம்பவத்தைப் பார்த்த பயணி அதிர்ச்சி மரணம் # செல்ஃபி வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு தரும்


=================

கொல்லம் கோயில் விபத்தை அரசியலாக்க முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது உம்மன் சாண்டி குற்றச்சாட்டு # தலைமையில் இருப்பவர் தவறுக்கு பொறுப்பெற்கத்தான் வேண்டும்=================

9  

‘ஆஹார்’ திட்டத்தின் கீழ் ரூ.5-க்கு சாப்பாடு: ஒடிசாவில் கூடுதலாக 100 மலிவு விலை உணவகங்கள் திறப்பு #ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு இது ஆஹா ஓஹோ திட்டம் ===============

10  

பிரிட்டனில் விஜய் மல்லையா உட்பட பெங்களூரு பணக்காரர்கள் முதலீடு: பனாமா ஆவணங்களில் தகவல் # பேங்க் மேனேஜர்கள் பிரிட்டன் போக நல்ல வாய்ப்பு=================


11  வை கோ கோவில் பட்டியில் போட்டி - செய்தி # சொந்த ஊரோ கலிங்கப்பட்டி,போட்டி இடுவதோ கோவில் பட்டி, வாங்கி விட்டார்  பணப்பொட்டி அப்டினு கலைஞர் கவிதை எழுதி இருப்பாரே?


====================


12  திமுகவிற்கு ஓட்டு போடுவீங்களா? வாக்காளர்களிடம் சத்தியம் கேட்ட மு.க.ஸ்டாலின் # அடடா, என்ன இது கழகத்துக்கு வ்ந்த சத்திய சோதனை

================


13 எடியூரப்பா பயணிக்கும் ரூ.1 கோடி சொகுசு காரால் சர்ச்சை # கோடியூரப்பா, எல்லாம் அப்பாவி மக்கள் வரிப்பணமப்பா


==================

14 கிருஷ்ணகிரியிலிருந்து.... விஜயகாந்தின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் துவக்கம் # கிழிஞ்சது கிருஷ்ணகிரி

===============

15 நடிகர் கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்ய 100 லிட்டர் பால் திருட்டு! அதிர்ச்சியில் கோவை ஆவின் முகவர்கள் # 100 கோடி, 100 லிட்டர் . குறியீடு, தெறியீடு. நஷ்ட ஈடு

===================


16 எந்த ஒரு விஷயத்திலும் நான் பின் வாங்கியதில்லை- விஜய்காந்த்  # தனித்துப்போட்டின்னு அறிவிச்சீங்களே அந்த முடிவில் இருந்து பின் வாங்கிட்டீங்கதானே?

===============

17 ரஜினிகாந்த் பின்வாங்கியதைப் போல், நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் - விஜயகாந்த் # தேவை இல்லாம ரஜினி ரசிகர்கள் ஓட்டு வங்கியை ஏன் இழக்கறீங்க?பின்னடைவு

===============


18 முதல்வர் பதவிக்கு விஜயகாந்த் சரிப்பட்டு வரமாட்டார்: ராதிகா # அவர் தேவலை. சரத் குமார் கட்சி நடத்தவே சரிப்பட்டு வர மாட்டார் போலயே?

=================

19 சத்துணவு முட்டையில் கொள்ளை அடித்த அதிமுக அரசு- ஸ்டாலின் # ஆட்சி நிர்வாகத்துலயும் மார்க் முட்டை, அடிச்ச பணமும் முட்டைல


================

20 ஆம்பூர் தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க கோரி போராட்டம்@ பிரியாமணியை கட்சி சார்பா நிக்க வைங்க, பிரியாணி பிரியாமணி மேட்சுக்கு மேட்ச்

==================

உறியடி - சினிமா விமர்சனம்

சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’.


இறந்துபோன சாதித் தலைவர் ஒருவருக்குச் சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார். உடனே அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிடுகிறார்கள் சாதிச் சங்கத்தினர். சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மைம் கோபி, ஒரு பொறி யியல் கல்லூரிக்கு எதிரே தாபா (உணவுக் கடை) நடத்திவருகிறார். அதில் மதுபானங்களும் விற்கப் படுகின்றன.


இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைத் தன் அபாயகரமான அரசியல் சதுரங்கத்தில் பகடைக் காயாக்க முனைகிறார். உள்ளூர் லாட்ஜ் முதலாளியின் மகனுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட, அதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் கோபி. இந்த நுட்பமான சாதி அரசியல் விளையாட்டில் சிக்கி மாணவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை.


வலுவான கதையைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய குமார். 1999-ல் நடக்கும் கதை யில் அந்தக் காலத்துக்குரிய அடையாளங்களைத் துல்லியமாகக் கொண்டுவந்திருக்கிறார். தாபாவின் உட்புறத் தோற்றம், பொறியியல் கல்லூரியின் சூழல், சாதித் தலைவர் களின் சிலைகளை வைத்து நடந்த கலவரங்கள், சாதிக் கணக்குகளால் உருவாகும் சீர்கேடுகள், மாண வர்களின் போக்கு, பெற்றோரின் நிலை, கல்லூரி விடுதியின் சூழல் எனப் பல அம்சங்கள் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. விடுதியின் அறைச் சுவர்களை அலங்கரிக்கும் 90-களின் நாயகிகளின் படங்களும் படத்தின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கின்றன.சாதி வெறி கொண்ட ஆட் களை மாணவர்கள் ஓர் இரவில் எதிர்கொள்ளும் காட்சியை திகிலூட் டும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சாதியைப் பேசும் படமாக இருந்தாலும, எந்த சாதி என்று அனுமானிக்க முடியாத அளவுக்கு நுட்பமாகப் படமாக்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகள் அபாரமாகப் படமாக்கப்பட்டுள்ளன. மாணவர் களை அடிக்க ஒரு கும்பல் தாபாவுக்கு வர, அவர்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் காட்சி நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வன்முறையைக் கொண்டாடும் அளவுக்குச் சில காட்சிகள் அதீதமாக இருப்பதையும் சொல்லியாக வேண்டும். ஒரு மாணவன் கொல்லப் படும் விதமும் பழிவாங்கும் இட மும் பார்வையாளர்களை உறைய வைக்கின்றன.


மாணவர்கள் எப்போதும் குடி யும் கும்மாளமுமாகவே இருக் கிறார்கள். சிறிய பிரச்சினை என்றாலும் முறுக்கிக்கொண்டு சண்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள். ரத்த வெறியுடன் அலைகிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு அடிதடியில் ஈடுபட்டாலும் கல்லூரியில் ஜாலியாகவே இருக்கிறார்கள். படத்தில் போலீஸே இல்லை.


அழுத்தமான காட்சிகளுடன் கதையை யதார்த்தமாக முன்னெடுத் துச் செல்லும் இயக்குநர், காட்சிகளைப் படமாக ஒருங்கிணைப்பதில் சறுக்கி யிருக்கிறார். சாதி அரசியல் கதையையும் மாணவர்களின் கதையையும் ஒன்றாக இணைப்பதில் போதிய நம்பகத்தன்மை உருவாக வில்லை.


பாரதியாரின் ‘அக்கினிக் குஞ் சொன்று கண்டேன்’ என்னும் குறுங்கவிதை உணர்வெழுச்சி மிகுந்த பாடலாகப் பயன்படுத் தப்பட்டிருக்கிறது. ஆனால், பொது நல நோக்கமோ தார்மிக பலமோ இல்லாத இளைஞர்களின் பழி வாங்கும் வெறியாட்டத்துக்குப் பின்புலமாக இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது கடுமை யாக உறுத்துகிறது.


மாணவர்களாக நடித்திருக்கும் விஜயகுமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். மைம் கோபி தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார். லாட்ஜ் முதலாளியின் பையனாக வரும் சுருளி, வஞ்சமே உரு வான பாத்திரத்தை நன்கு உள்வாங்கியிருக்கிறார். பொது இடத்தில் அவமானப்படுபவன் பழி வாங்கப் புழுங்குவதைக் கண் முன் நிறுத்துகிறார். ஓரிரு காட்சிகளில் எட்டிப் பார்க்கும் ஹெல்லா பென்னாவை நாயகி என்று நாமே நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.


பின்னணி இசையையும் கையாண் டிருக்கும் விஜயகுமார், காட்சிகளுக்கு வலு சேர்க்கும் இசையைத் தர்ந்திருக்கிறார். பாடல்களுக்கு இசை மசாலா கஃபே இசைக் குழு. ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலின் மெட்டும் பாடப்பட்ட விதமும் பிரமாதம். பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்துக்கு வலு சேர்க்கிறது.


உறியடி, வலுவான அடிதான்; ஆனால் முறையான இலக்கில்லாத அடி.

நன்றி - த ஹிந்து


நலன் குமாரசாமி வழங்கும் உறியடி.இட ஒதுக்கீடு பற்றிய விமர்சனம் முன் வைக்கும் வித்தியாசமான படம் @ ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா


============2 அவர்தான் பணம் வெச்சிருக்காரில்ல?ஏன் உள்ளே.விடலை?அவரை விட்டா மத்த ஜாதிக்காரங்க வர மாட்டாங்க================

காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணு


கல்யாணம் ஆகி ஒரு வருசத்துல டைவர்ஸ் பண்ண நீ அதைப்பத்தி பேசலாமா?,


===============

இந்த உலகத்துல ஒருத்தியை மட்டும் மனசுல நினைச்ச ஆம்பளை உலகத்தில் எவனும் இல்ல.

===============

5  பொண்டாட்டிக்கு பயந்த மாதிரி சீன் போடற பயலுக எல்லாம் நடிகனுங்கதான்.செம டிராமா போடுவாங்க # உறியடி


=================


6 சொக்க வெச்ச பச்சைக்கிளி சுத்தவிட்டுப்பாத்ததென்ன?

முத்தம் 1 கேட்டதுக்கு உத்து உத்துப்பார்த்ததென்ன ?
செம சாங்================

நம்ம ஜாதிக்கட்சி தனியா நின்னா ஜெயிக்காது.ஆனா நாம இல்லாம அந்த.2,கட்சி ல 1 மாறி மாறி ஜெயிக்க முடியாது

===============

8  திமுக கூட சேர்ந்தபோதுதான் பாமக வுக்கு வளர்ச்சி மரியாதைனு பூடகமா ஒரு டயலாக் # உறியடி

===============

9 4 காசு சம்பாதிக்க எத்தனை திட்டம் போடறீங்க .அரசியல்வாதின்னா அயோக்கியன் தான் போல

==================

10 என் முன்னேற்றத்தின் மொத்தத்தடையும் நீங்க தான் (அழகிரி டூ கலைஞர் உள்குத்து காட்சி)

=================


11 ஜாதிவெறியைத்தூண்டி விடனும்னா பொய்யான வதந்தியை பரப்பனும்

==================


12 ஜாதிக்கட்சி ஆரம்பிக்கறது ஜெயிக்க இல்ல.நம்ம ஜாதி பலத்தைக்காட்ட # உறியடி


================

13 நம்ம ஜாதிப்பேரை சொன்னாலே நாமதான் தலைமைன்னு எல்லார்க்கும் நினைவு வரனும்.வேற ஜாதிக்காரனை வளர விட்றக்கூடாது#உறியடி

================

14 அரசியல்வாதியா நாம 1 கோடி சம்பாதிக்கனும்னா 5 லட்சம் ரூபா நல்ல காரியத்துக்கு செலவு பண்ணனும்


=================


15 
உறியடி - பாமக வின் ஜாதிவெறிக்கொலைகள் பற்றிய ராவான பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர்.பெண்கள் தவிர்க்கவும்.வன்முறை.விகடன் =40,ரேட்டிங் = 2.5 / 5