Tuesday, January 28, 2020

ராஜாவுக்கு செக் - சினிமா விமர்சனம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் பற்றிய கதைக்கரு , திரைக்கதை அமைக்கும்போது சாமார்த்தியமா  விஷால் நடிச்ச நான் சிகப்பு மனிதன் கதைல வர்ற ஹீரோவுக்கு ஸ்லீப்பிங் சிண்ட்ரோம்கறதை கொஞ்சம், டெவலப் பண்ணி சுவராஸ்யமான திரைக்கதை ஆக்க முயன்றிருக்காங்க , அது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம்

ஹீரோவுக்கு ஒரு சம்சாரம் ஒரு பெண் குழந்தை . நல்லா போய்ட்டு இருக்கற குடும்பத்துல ஒரு பிரச்சனை , ஹீரோவுக்கு திடீர் திடீர்னு தூங்கும் வியாதி . அதாவது கார் ஓட்டிட்டு இருக்கும்போது கூட திடீர்னு தூக்கம் வந்துடும் , அவரு எப்போ எந்திரிப்பார்ங்கறது சொல்ல முடியாது , ஜெ மர்ம மரண விசாரணை முடிவு மாதிரி//


 இதனால மனம் வெறுத்த அவர் மனைவி டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணுது . பொண்ணு அம்மா கிட்டேதான் இருக்கு , கடைசியா ஒரு 10 நாள் மக கூட செலவு பண்ண அனுமதி வாங்கிடறாரு. கடைசி நாள் அன்னைக்கு மக பிறந்த நாள் கொண்டாடறப்ப தன் காதலனை அப்பாவுக்கு அறிமுகம் பண்றா.


 அவளோட காதலன் ஒரு பொம்பள  பொறுக்கி , ஏற்கன்வே ஒரு ரேப் கேஸ்ல மாட்டி போலீஸ் ஆஃபீசரான ஹீரோவால ஜெயில் தண்டனை பெற்றவன்

 ஹீரோவைப்பழி வாங்கத்தான் அவன் லவ் டிராமா போட்டிருக்கான்

 அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதுதான் திரைக்கதை

 ஹீரோவா இயக்குநர் சேரன். , தூக்கம் கெட்டு சோர்வடைந்த கண்கள் , சோம்பேறித்தனத்தின் அடையாளமாய் தாடி , ரிட்டையர்டான வயசான பாடி மாதிரி அவரோட உடம்பு , ஒரு போலீஸ் ஆஃபீசருக்கான எந்த அடையாளமும் இல்லை , என்ன கேரக்டர் ஸ்கெட்சோ ? ஆனா நடிப்பு  பக்கா . மகளுடனான காம்போ காட்சிகளில் , அந்த பாடல் காட்சியில் சில இடங்களில் செயற்கை தட்டினாலும்  சேரன் அனாயசமாக அந்த கேரக்டரை உள்வாங்கி நடிச்சிருக்கார்

 அவரது மனைவியா வர்றவர் ஆளும் சுமார் , நடிப்பும் சுமார். கேரளத்து கப்பக்கிழங்கு சரயு மோகன் தான் ஜோடி , ஆனா அவர் படத்துல நடிப்பும் காட்டலை , கிளாமரும் காட்டலை, எப்படி தமிழனால ஏத்துக்க முடியும் ? ( இங்கே தமிழன்னு சொன்னது என்னைத்தான் )

 மகள் ஆக வரும் நந்தனா வர்மா  நடிப்பு குட் , பிக் பாஸ் எபிசோடில் வரும் சில காட்சிகளை அப்பா மகள் காம்போ காட்சிகள் நினைவு படுத்துது வில்லனாக வருபவர் இர்பான் , பார்வை , நக்கல் சிரிப்பு , பாடி லேங்க்வேஜ் குட்

ஹீரோவுக்கு தூங்கும் வியாதி இருப்பதை வைத்து திரைக்கதையில் திருப்பத்தை காட்டும்போது அட போட வைக்கிறார் இயக்குநர்

 லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சராசரி த்ரில்லர் மூவி

நச் வசனங்கள்

குடிச்சுட்டா கோர்ட்டுக்கு"வரப்போறே?
அவனவன் கோயிலுக்கே குடிச்ட்டு"வர்றான் #Rajavukkucheckreview


2  ஒரு"மனுசன்"தப்பு"பண்ணாம"இருக்கறது அவன் தூக்கத்துல இருக்கறப்ப மட்டும்தான்
#Rajavukkucheckreview

3 husband is not only for physical companionship,also for emotional companionship #Rajavukkucheckreview

4 அவங்க எல்லாம் டைம் பாஸ் பண்ண குடிக்கறாங்க,நான் தனிமை ல டைம் கில் பண்ண குடிக்கறேன் #Rajavukkucheckreview


5 அவன் போலீஸ்காரன்,ரோட்ல தப்பு நடந்தாலே கண்டுபிடிச்சுடுவான்,தன்"வீட்ல நடக்கற தப்பை கண்டுபிடிக்காமயா இருப்பான்? #Rajavukkucheckreview

6 தன் பொண்ணுக்காக ஒரு அப்பா தன்னோட கெட்ட பழக்கத்தை விட்டொழிக்கறது ஒரு சுகம் #Rajavukkucheckreviewதியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

 1 ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். கூட்டமே இல்லை , 870 சீட்சுக்கு 18 பேர் . கரண்ட் பில்க்குக்கூட கட்டாது

 2 சேரனுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் உண்டு , ஆனா தியேட்டரில் மருந்துக்குக்கூட பொண்ணுங்க இல்லை 
சபாஷ் டைரக்டர்

1  மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் தான் சாய் ராஜ்குமார்னு பேரை மாத்தி இதை எடுத்திருக்காரு . முன் பாதியில் நிதானமாக செல்லும் கதை வில்லன் எண்ட்ரிக்குப்பின் விறுவிறுப்புடன் போகுது. செலவே இல்லாம  சும்மா 3 லொக்கேஷன்கள்லயே மொத்தப்படத்தையும் எடுத்தது சிறப்பு


2  கதை அமைப்பில் வாய்ப்பிருந்தும் ஆபாசம் , வன்முறைக்காட்சிகள் வைக்காதது சபாஷ் போட வைக்குது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1− மனைவியைப்பிரிந்து வாழும் ஹீரோ அதுவும் ஒரு போலீஸ் ஆபீசர் தன் மகளை வீட்டில் தனியா விட்டுட்டு போவாரா?ஒரு சமையல்காரி,வேலைக்காரி அட்லீஸ்ட் பக் வீட்டு லேடி னு யாரையும் பாதுகாப்புக்கு நியமிக்காம?
#Rajavukkucheckreview

லாஜிக் மிஸ்டேக் 2 −ஒரு பெண்ணை ரேப் பண்ணும் உத்தேசத்துடன் கடத்தும் வில்லன் அவகிட்ட இருக்கற செல்போனை பறிமுதல் பண்ணாமயா அடைச்சு வெப்பான்?சரியான மாங்கா மடையனா அவன்?
#Rajavukkucheckreview

3 போலீஸ் ஆபீசரால் பாதிக்கப்பட்ட வில்லன் ஒரு வருச ஜெயில்வாசத்துக்கு பின் வெளில வந்த உடனே மகளை கடத்தாம ஒரு வருசம் அவ பின்னால அலைஞ்சு லவ் பண்றதா ஏமாத்தி அப்றமா கடத்தறான்,காலம் பூரா குடித்தனம் பண்றவனதான்"லவ்வறதா ஏமாத்தனும்,ரேப்பறதுக்கு எதுக்கு டிராமா? #Rajavukkucheckreview


4 லாஜிக் மிஸ்டேக் 4− ஹீரோவைப்பழி வாங்கறதுக்காக ஒரு வருசம் காத்திருந்து மகளைக்கடத்தற வில்லன் அவளை ரேப் பண்ண போறப்ப வேற ஒரு பொண்ணு வாண்ட்டடா வந்து சிக்கிக்கிச்சுனு அதை ரேப் பண்றான்,அப்றம் அப்டி இவளை ரேப் பண்ணுவான்? #Rajavukkucheckreview

5 ஏற்கன்வே கார் ஓட்டும்போது தூங்கி விபத்து ஏற்படுத்துன ஹீரோ இப்போ மகளை காரில் கொண்டு போவது என்ன தைரியத்தில் ? டிரைவர் வெச்சுக்கலாமே?

6 கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர முக்கியக்காரணங்கள் அந்தஸ்து பேதம் , ஈகோ , கள்ளக்காதல் , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் . ஆனா அதெல்லாம் எதும் இல்லாம ஹீரோவுக்கு உள்ள சின்ன நோயால அவ்ளோ வெறுக்க முகாந்திரம் இல்லை

7 போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இந்த மாதிரி குறை உள்ளவரை க்ரைம் பிராஞ்ஸ் இன்ஸ்பெக்டரா எப்படி கண்ட்டிநியூ பண்ண விடுவாங்க ?

8 போலீஸ் கேசில் மாட்டி டிவி பேப்பரில் படம் எல்லாம் வந்ததை மக்ள் எப்படி பார்க்காம விட்டாங்க , அட்லீஸ்ட் அப்பா டிவி ல நியூஸ் வரும்போது இந்த கேஸ் நான் டீல் பண்ணதுதான் என காட்டி இருப்பாரே?


 விகடன் மார்க் ( யூகம்) - 43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 2.75 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-ராஜாவுக்கு செக் − பொள்ளாச்சி சம்பவத்தை கருவாகக்கொண்டு"உருவான த்ரில்லர்"மூவி.ஹீரோவுக்கு திடீர் திடீர் என தூங்கும் வியாதி தமிழுக்கு புதுசு.விறுவிறுப்பான திரைக்கதையில் லோ பட்ஜெட் நாடக பாணி படமாக்கம் மைனஸ்,சேரனுக்கு வெற்றிப்படம்", விகடன் 43 ரேட்டிங் 2.75 / 5

Saturday, January 25, 2020

சைக்கோ - சினிமா விமர்சனம் 25+

psycho tamil के लिए इमेज परिणाम

ஹீரோ ராஜபார்வை , காசி ,தாண்டவம் படங்கள்ல வர்ற ஹீரோ மாதிரி விழி ஒளி இழந்தவர் , ஹீரோயின் ஒரு ரேடியோ ஜாக்கி . பொதுவா தறுதலையா வெட்டியா இருக்கற பசங்களுக்கு ஒருதலையா எதுனா ஃபிகரை லவ் பண்றது வழக்கமான பழக்கம், இதிலும் டிட்டோ , ஆனா பாப்பா ஏத்துக்கலை , ஒரு மேடை நிகழ்ச்சில ஹீரோவை ஹீரோயின் அவமானப்படுத்துது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாத ஹீரோ ஒரு பாட்டு பாடறார். மைக் மோகன் டைப்ல வர் பாடறதைக்கேட்டு ஹீரோயின் மனசு மாறி உன்னை லவ் பண்றேனா? இல்லையா?ங்கறதை  நான் க்ளூ கொடுக்கற இடத்துக்கு நீ சரியா வந்தா லவ்வை சொல்றேன்குது பாப்பா . ஒரு கேவலமான க்ளூ தருது.


 எங்கேயோ அத்துவானக்காட்டில்  ஹீரோயின் ஹீரோவுக்காக வெய்ட்டிங்
 அங்கே ஹீரோவும் எண்ட்ரி , வில்லனும் எண்ட்ரி . வில்லன் அல்ப சொல்பமானவன் இல்லை. ஆல்ரெடி பல பெண்களை கொலை செஞ்சவன். ஹீரோயினை கடத்திட்டுப்போய்டறான்

 அதுக்குப்பின் என்ன ஆச்சு? ஹீரோ ஹீரோயினை மீட்டாரா? புரொடியூசர் போட்ட முதலீட்ல பாதியாவது  திருப்பி எடுத்தாரா?

 வெண் திரையில் காண்க


சைக்கோ கொலைகாரன் பற்றி தமிழில் வந்த முக்கியமான படங்கள்
பாலுமகேந்திராவின்  மூடுபனி  ( ஹிட்)
பாரதிராஜா வின் சிகப்பு ரோஜாக்கள் ( செம ஹிட்)
சிம்பு வின் மன்மதன் ( செம ஹிட்)
கவுதம் வாசுதேவ் மேனன்   நடுநிசி நாய்கள் ( அட்டர் ஃபிளாப்)
செல்வராகவன்  காதல் கொண்டேன் ( சூப்பர் ஹிட்)
ராம்குமார்  ராட்சசன்  செம ஹிட்
செந்தில்   காளிதாஸ்  ஹிட்

இந்த லிஸ்ட்டைப்பார்த்துட்டு மிஸ்கின் என்ன கணக்கு போட்டார்னா சைக்கோ படம்னா வெற்றிக்கான வாய்ப்பு ஜாஸ்தியா இருக்கு , நாமளும் நம்ம பங்குக்கு ஒண்ணை இறக்குவோம்னு களம் இறங்கி இருக்கார்


படத்துல மிகப்பெரிய பிளஸ்  இளையராஜா , உன்னை நினைச்சு நினைச்சு  செம ஹிட் மெலோடி . படத்துக்கு இவ்ளோ ஓப்பனிங் கிடைக்க முக்கியக்காரணம் பாட்டு ஹிட் ஆனதே ., இது போக 2 பாட்டு இருக்கு , அதுவும் பரவால்லை ரகமே . பிஜிஎம் பற்றி
  சொல்லவே வேணாம், இளையராஜா அதில் விற்பன்னர் ,. முதல் பாதில சுமாரா போன இசை  பின் பாதியில் பட்டாசைக்கிளப்புது


ஒளிப்பதிவு ரொம்ப முக்கியம்,. சைக்கோ கொலைகாரன் ஸ்பாட் ம்னட்டும் டிம் அடிச்ச மூட்ல காட்டிட்டு மற்ற இடங்களை எல்லாம் பிரமாதமான லைட்டிங்கோட ஒளி அமைத்த விதம் அருமை


நித்யா மேணன் நடிப்பு  குட் , ஆனா ஒரு பொறுப்பான போலீஸ் ஆஃபீசர் அம்மாவைக்கூட மரியாதை இல்லாம  வாடி போடி எனவும் பேர் சொல்லியும் கூப்பிடறது என்ன மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச்? ஒரு வேளை மூன்றாம் கலைஞர் இருப்பதால் யாரும் அம்மாவை மதிச்சா பிடிக்காது என இயக்குநர் நினச்சாரோ என்னவோ?

2015ல இருந்து 2019 வரை கொலைகள் வரிசையா நடக்குது ஆனா போலீஸ் கண்டுபிடிக்க முடியலை என்பதெல்லாம் பூச்சுற்றல்


இயக்குநர் ராம் போலீஸ் ஆஃபீசரா வர்றார். அவரைப்பார்த்தா சுறுசுறுப்பான போலீஸ் மாதிரி தெரியல என்னமோ மூலம் வந்த  ஆதிமூலம் மாதிரி வீக்கா டயர்டா தெரியறார்.

 சார் உங்க உயிருக்கு ஆபத்து எஸ் ஆகுங்க என நாயகி எச்சரிக்கும்போது  . அட போம்மா ரொம்ப டயர்டா இருக்கு அப்டிங்கறார், அய்யோ ராமா

மூன்றாம் கலைஞர் அப்படியே தன் தாத்தா அப்பா மாதிர் , அவங்க 2 பேரும் அரசியல்ல மக்களிடம் நடிச்சாங்க , இவர் சினிமா ல நடிக்கறாரு .ஓவர் ஆக்டிங் எதும் பண்ணாம  அடக்கி வாசித்திருப்பது சிறப்பு

 நாயகியா அதிதி செம ஆக்டிங். முகம் தாமரை மாதிரி  சாரி தமிழர்களுக்குதான் தாமரைன்னாலே அலர்ஜி ஆச்சே? நந்தியா வட்டைப்பூ மாதிரி.

 வில்லன் மிரட்டல் நடிப்பு, ஆஜானுபாவக உய்ரம்.

சிங்கம்புலி கொஞ்சம் ஆறுதல்

aditi rao hydari hot के लिए इमेज परिणाम
நச் வசனங்கள்


1  சைக்கோ,சீரியல் கில்லர் என்ன வித்யாசம்?
2ம் 1தான்.
ஒரு மனுசன் இன்னொரு சக மனுசனை கொலை செய்ய அவனுக்கு உரிமை இல்லை.அப்படி அவன் தொடர்ந்து கொலை செஞ்சுட்டே வந்தா அவன் சைக்கோ

ஜாதி வெறில கொல்றவனும் சைக்கோதான் #PsychoFromtoday


இப்டி என் பொண்ணு பின்னாடியே எப்பவும் வர்றியே?

சீக்கிரம் "முன்னுக்கு" (முன் வரிசைஹீரோவா)வந்துடுவார்.. #PsychoFromtoday

கொலைகாரனைப்பிடிக்கனும்னா சாகறதுக்கு தயாரா இருக்கனும் #PsychoFromtoday
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  மூன்றாம்"கலைஞர் சில பல படங்கள் நடிச்சிருந்தாலும் ஒருகல் ஒரு"கண்ணாடிதான் ஹிட்.எம்.ராஜேஷ் + சந்தானம் காம்போவால் தப்பிச்சாரு.ஆனா நாளை வெளியாக இருக்கும் "சைக்கோ" மிஷ்கின்,இளையராஜாவையும் தாண்டி அவருக்கு பேர் வாங்கித்தரும்னு எதிர்பார்க்கிறேன்

ஹீரோ க்கு ஹீரோயின் மேல இருக்கற அன்பை,காதலை,அபிமானத்தை"முதல்ல சிலகாட்சிகளால் ,வசனங்களால் ஆடியன்சுக்கு புரிய வெச்சுடனும்.அதுக்கப்புறம்தான் ஹிட் சாங் இன்செர்ட் பண்ணனும், எ குட் மூவ் இன் ராங் ப்ளேஸ் ,உன்னை நினச்சு நினச்சு செம ஹிட் சாங்கை ஓப்பனிங் லயே இறக்கியது பெரிய தவறு #PsychoFromtoday


ஒரு இயக்குநர் தன் கொள்கைலயும் கோட்பாடுகள்லயும் உறுதியா இருக்கலாம்,ஆனா காதல் வெளிப்படுத்தும் முக்கியக்காட்சியில் க்ளோசப் ஷாட் வைக்காமல் லாங் ஷாட்தான் வைப்பேன் னு அடம் பிடிப்பது ஏனோ? #PsychoFromtoday


மூன்றாம் கலைஞரின் நடிப்பு கனகச்சிதம் ,அவரு குடும்பமே நடிப்பு ரத்தத்துல ஊறி இருக்கே? #PsychoFromtoday


படத்தின் முதல் பாதில இளையராஜா கால்ஷீட் கிடைக்கல போல.வட்டியும்,முதலுமா பின் பாதில பிஜிஎம் ல பின்னிப்பெடல் எடுத்துட்டாரு #psyco
சைக்கோ யார் எல்லாம்பார்க்கக்கூடாது?
1 இளகிய மனம்"கொண்டோர்
2 கர்ப்பிணிப்பெண்கள்
3 தனிமையில் வசிக்கும் ஆண்கள்
4 ரத்தம் கண்டால் அலர்ஜி உள்ளவர்கள்;
5 ஒரு படம் பார்த்தா அதில் வரும் வில்லன்"போல்"நாமும் செஞ்சு பார்த்தா என்ன? என்ற எண்ணம் கொண்டவர்கள்
6 வயது 25 க்கும் கீழ் உள்ளோர்7  சைக்கோ படத்துல இயக்குநர் சொல்ல வரும் நீதி = பல கொலைகள் கொடூரமா செஞ்சிருந்தாலும் சைக்கோ வை யாரும் வெறுக்கக்கூடாது,அன்பு"காட்டனும்,அன்புக்காக ஏங்கிதான் ,சில சம்பவங்களால் பாதிக்கப்பட்டுதான்"அவன் சைக்கோ ஆகறான்,எனவே அன்பு"செய்யுங்கள் #psyco

8   ஹீரோ கேரக்டர் வடிவமைப்பில் ஒரு சறுக்கல்
நண்பன் = நான்தான் உன் வாழ்வின் வெளிச்சம்னு சொல்வியே,இப்போ என்னை போ னு துரத்துனா நான் எங்கே போவேன்?
நாயகன் =போ ,எங்காவது போய் செத்து ஒழி
அடுத்து வரும் காட்சியில் நண்பன் இறக்கப்போகிறார் ங்கற குறியீடு ஓகே,ஆனா ஹீரோ கேரக்டர் புஸ் #psyco
சபாஷ் டைரக்டர்


1   இளையராஜாவிடம் கெஞ்சியோ , பம்மியோ நல்லபடியா 3 பாட்டு வாங்கிய திறமை


2  வாய்ப்பிருந்தும்  ரேப் சீன் வைக்காதது


3  ஹீரோவுக்கு க்ளைமாக்ஸ் ல வில்லன் கூட சோலோ ஃபைட் வைக்காதது

aditi rao hydari hot के लिए इमेज परिणाम


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1 − வழக்கமாக தான் கொலை செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் கொல்லும் முன் அவள் முகத்தில் மரண பயத்தை ரசித்து பின் கொல்லும் சைக்கோ கொலைகாரன் நாயகி கண் முன் கொல்லும் பெண்ணை மட்டும் மயக்க நிலையில் கொல்வது ஏன்? #PsychoFromtoday


லாஜிக் மிஸ்டேக் 2− ஒரு வீட்டு எஜமானியை பாக்க வரும் விழி ஒளி இழந்த நபரை அந்த வீட்டு பணிப்பெண் அவரை மாடிக்கு வழி நடத்தி செல்லாமல் "மேலே தான் இருக்காங்க,போய்ப்பாரு"என்பது ஏனோ? இத்தனைக்கும் அவர் நல்ல மனம் கொண்டவர்,உதவும் மனப்பான்மை கொண்டவர்னு குறிப்புகள் வருது #pshyco

லாஜிக் மிஸ்டேக் 3− சைக்கோ கொலைகாரன் தான் கடத்தும் பெண்களை ஒரு குட்டி நாயின் கவன ஈர்ப்பு மூலம்தான் கடத்தறான் என்பதை அறிந்து போலீஸ் மீடியாக்களில் நாய் வெச்சிருக்கற நாய் யாரையாவது"பாத்தா ஜாக்கிரதைனு வார்னிங் குடுக்குது,சைக்கோ அந்த விளம்பரத்தைப்பாத்து தன் ரூட்டை மாத்திக்கமாட்டானா?பூனைக்குட்டி வெச்சு ட்ரை பண்ண மாட்டானா? #psyco


லாஜிக் மிஸ்டேக் 4− சைக்கோ கொலைகாரன் ஒவ்வொருத்தரையும் கடத்து போது, பப்ளிக் ப்ளேஸ் ல தான் கடத்தறான், அதுவும் 14 வது கடத்தல்ல ஒரு கார் பார்க்கிங்கில் கொலையே செய்யுறாரே அங்கு சிசிடிவி கேமரா இருக்கா என்று கூட போலிஸார் விசாரிக்க மாட்டார்களா ? #PsychoFromtodayலாஜிக் மிஸ்டேக் 5− கொலைகாரனால் தாக்கப்பட்டு கடைசி மூச்சில் இருக்கும் ஹீரோவின் நண்பன் ஹீரோவுக்கு ஒரு தகவல் சொல்ல ட்ரை பண்றப்ப பக்கத்துலயே இருந்த கொலைகாரனால் மறுபடி தாக்கப்படறாரு. ஈசியான வழி sms.அதை ஏன் அவரு ட்ரை பண்ணலை #PsychoFromtodayலாஜிக் மிஸ்டேக் 6− சைக்கோ வில்லன் 14 பெண்களை கொலை செய்தவன்,க்ளைமாக்சில் அவனை போலீசில் சிக்க வைத்து மன நல காப்பகத்தில்"சிகிச்சை தர விடும் பொறுப்பு எதுவும் இல்லாமல் மடத்தனமாக அவனை மன்னித்து இரக்கப்பட்டு விடுவது என்ன விதமான மனநிலை?சட்டப்படி ஹீரோ,ஹீரோயின்"செய்ததே தவறுதான் #psyco


லாஜிக் மிஸ்டேக் 7− சைக்கோ தனது பெரும்பாலான கொலைகளை நாய்க்குட்டியை முன் வைத்து பெண்ணின் கவனம் கவர்ந்து தான் கொலை பண்றான்,ஆனா அவனது இருப்பிடத்தில் நாய் இருக்கும் சுவடே இல்லை.அட்லீஸ்ட் பேக்க்ரவுண்டில் நாய் குரைக்கும் சத்தம் கூட கேட்கலை #psyco


லாஜிக் மிஸ்டேக் 8− சைக்கோ ஹீரோயினை குணா"கமல் மாதிரி தன் இடத்தில் 7 நாட்கள் அடைச்சு வெச்சிருக்கான்,வேளாவேளைக்கு சாப்பாடு தர்றான்,ஆனா ஒரு டிரஸ் கூட மாத்திக்க தர்லை,ஒரு"வாரமா அழுக்கு டிரஸோடவே அழகு ஹீரோயின் #psyco


9  லாஜிக் மிஸ்டேக் 9− மேட்டுப்பாளையத்தில் உள்ள 53 பன்றிப்பண்ணைகளில் ஏதோ ஒன்றில் வில்லன் இருக்கான்னு"தகவல் தெரியுது.உடனே போலீசுக்கு தகவல் தந்தா அவங்க பல பிரிவா பிரிஞ்சு 1 மணி நேரத்தில்"பிடிச்சிருப்பாங்க,இவரு 2 பேர் மட்டும் 53 இடம் போய் விசாரிக்க 2 நாள் ஆகும் #psyco


10  லாஜிக் மிஸ்டேக் 10− விழி ஒளி இழந்தவர் பல நாட்கள் பழகிய தனது வீட்டில் நடமாடுவது"எளிது,ஆனால்"முன்"பின்"அறியாத வில்லன் இருப்பிடம் போய்"கரெக்டா லெப்ட்ல திரும்பி ரைட்ல கட் பண்ணி பேக்ல டர்ன் பண்றதெல்லாம் பேரரசு ,ஹரி படத்துக்கு ஓகே,மிஷ்கின்"படத்திலுமா?இதுல நடந்து போகாம ஓடி வேற போறாரு #psyco


11 லாஜிக் மிஸ்டேக் 11- சைக்கோ ஆனது"எப்படி ?என்பதற்கு பிளாஸ்பேக் வெச்சாதான் அது"அழுத்தமா ஆடியன்ஸ் மனசுல பதியும் (உதா− சிகப்பு ரோஜாக்கள், காதல்"கொண்டேன், மன்மதன்,நடுநிசி நாய்கள்) சும்மா வசனத்துலயே சமாளிக்கறது வேலைக்கு ஆகாது.அதுவும் வில்லன் தன்"வாயால ஹீரோயின்ட்ட சொல்ற மாதிரி காட்ட வாய்ப்பிருந்தும் விட்டுட்டாங்க.வேற ஒரு கேரக்டர் அதை விளக்குவது நிக்கலை #psyco


12 லாஜிக் மிஸ்டேக் 12− விழி ஒளி இழந்த ஹீரோ ஒரு பணக்காரர்,கார் வெச்சிருக்கார் ,ஒரு டிரைவர் வெச்சுக்க மாட்டாரா?கண்ணாமூச்சி விளையாடறப்ப லெப்ட்ல போ,ரைட்ல போ னு சொல்றமாதிரி க்ளைமாக்ஸ்ல காரை நித்யாமேணன் வழி காட்ட ஓட்றாரு #psyco .


13  லாஜிக் மிஸ்டேக் 13−வில்லனை ஹீரோ இன்னும் பிடிக்கலை,நேருக்கு நேர் சந்திக்கலை,சில க்ளூ மட்டும் கிடைக்குது,ட்ரை பண்றாரு,ஆனா வில்லன் பேக்கு மாதிரி "நான் உன் கிட்ட தோத்துட்டேன் னு 4 டைம் தனிமை ல கத்தறாரு,200 ருபா அங்கேயும் வேலை செய்யுது போல #psyco


14  லாஜிக் மிஸ்டேக் 14−எந்த அடிப்படையில் வில்லன் தான் கொலை செய்யும் பெண்களைத்தேர்வு செய்கிறான்?னு கண்டுபிடிக்கவே முடியலையே? 14 பேரு கொலை செய்யப்பட்டதுல 14 பேரையும் இணைக்கும் கோடு இல்லையே னு ஹீரோ ,போலீஸ்,ஆடியன்ஸ் அங்கலாய்க்கறாங்க,கடைசி வரை யாருக்குமே விடை தெரில #psyco

15  லாஜிக் மிஸ்டேக் 14− சைக்கோ வுக்கான பிளாஸ்பேக்கில் ஆணான அவரை இன்னொரு ஆண் ரேப்பிட்டதா (!) வசன ரீதியா தெரிவிக்கிறார்.அப்போ லாஜிக்படி அவர் அந்த மாதிரி ஹோமோ டைப் கேரக்டர்களைத்தானே தேடி கொலை செய்யனும்?அப்டி செய்யலை #psyco

 விகடன் மார்க் ( யூகம்)  -42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  4/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் -3.25 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-சைக்கோ − 14 பெண்களைக்கொலை செய்த சைக்கோவை பிடிக்க முயலும் ஹீரோவின் கதை.மிஷ்கின் அதகளம்,இளையராஜா பிஜிஎம்ல,கலக்கிட்டார்,மூன்றாம் கலைஞர் குட் ஆக்டிங்.அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்ற படம் அல்ல,கொடூரக்காட்சிகள் உள்ளடக்கம்,விகடன் 42 ,ரேட்டிங் 3.25 / 5 ,ஏ செண்ட்டர் பிலிம் #psycoTuesday, January 14, 2020

பட்டுக்கோட்டை பிரபாகர் - மைக்ரோ கதைப்போட்டி

சில தினங்களுக்கு முன்  ரைட்டரும் , ஏய் , காப்பான் பட வசனகர்த்தாவும் ஆகிய பட்டுக்கோட்டை பிரபாகர் முக நூலில்  மைக்ரோ கதைப்போட்டி வைத்தார். அதில் பலரும் கலந்து கொண்டனர். அதற்கு முன் கணேஷ் வைத்த சிறுகதைப்போட்டியில் செமி ஃபைனலில் தேர்வான கதைகளில் இருந்து ஃபைனல் செலக்சனாக  பிகேபி நடுவராக   ஜட்ஜாக இருந்து தேர்ந்தெடுத்தார். அதில் செமி ஃபைனலில் கூட நம்ம கதை  தேர்வாகாததால் ஃபைனலுக்கு  பிகேபி சாரின் பார்வைக்கே நம்ம கதை போகாமல் இருந்தது. சரி இந்த வாட்டியாவது அவரது நேரடி பார்வையில் நம் படைப்பு போய் சேரவாவது செய்யட்டும் என நானும் கலந்து கொண்டேன். அதில் 613 கதைகள் பங்கேற்றன. 25 கதைகள் தேர்வாகி இருக்கு.


 முகநூலில் அவரது அறிவிப்பும் கதைகளும்....


உலகத்திலேயே மிகவும் குட்டிக் கதை
ஆறே வார்த்தைகளில்
ஹெமிங்வே எழுதியது.

“For sale: Baby shoes. Never worn.”
விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு - ஒருபோதும் அணியப்படாதது!

ஆங்கிலத்தில் படித்த
சில இரண்டு வரி
மைக்ரோ கதைகள்
என்னைக் கவர்ந்தன.
--------------------------------------------------------------------------------
He asked,"Are you a HIndu or Muslim?''.
The response came,"I am hungry''

அவன் கேட்டான்," நீ இந்துவா முஸ்லிமா?''
பதில் வந்தது," எனக்கு பசிக்கிறது!''
-------------------------------------------------------------------------------
Man and God both met somewhere.
Both exclaimed,"My creator!'

மனிதனும் கடவுளும் சந்தித்தார்கள்.
இருவருமே வியந்தார்கள்,"என்னைப் படைத்தவன்!''
--------------------------------------------------------------------------------
"wrong number'' said a familiar voice.

"தவறான எண்'' என்றது பரிச்சயமான குரல்.
----------------------------------------------------------------------------
What if God asks you after you die,"So how was heaven?''

இறந்த பிறகு கடவுள் ஒரு வேளை உங்களிடம், "சொர்க்கம் எப்படி இருந்தது?'' என்று கேட்டால்..?
----------------------------------------------------------------------------
We don't make friends anymore. We add them nowadays!

இப்போதெல்லாம் நாம் நண்பர்களை உருவாக்குவதில்லை. சேர்க்கிறோம்!
--------------------------------------------------------------------------------

தமிழில் நீங்கள் எழுதும் சிறந்த
10 மைக்ரோ கதைகளுக்கு
பரிசளிக்கக் காத்திருக்கிறேன்.
கதைகளை பொதுவெளியில்
பின்னூட்டமாகவும் எழுதலாம்.
அல்லது எனது உள் பெட்டிக்கும்
அனுப்பலாம்.
(இரண்டே வரிகள் என்பதே நிபந்தனை!)வீட்டுக்கொரு கற்பனைக்- காரன்/காரி இருப்பதறியாமல் எழுதச்சொல்லிவிட்டேன்.
பின்னூட்டமாகவும் உள் பெட்டியிலுமாக
மொத்தம் வந்த மைக்ரோ கதைகள் 613.

சிலர் கதைகளில் முயற்சி இருந்தது.
சிலர் கதைகளில் பயிற்சி இருந்தது.

பல வகையான கதைகள் சுவாரசியமாக இருந்தன. இதிலிருந்து பத்து கதைகளை மட்டும் தேர்வுசெய்ய சிரமமாக இருந்ததால் 25 மைக்ரோ கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன். சுவாரசியம் கூட்ட சில கதைகளை சற்றே திருத்தியமைத்திருக்கிறேன்.
மற்ற கதைகளையும் ரசித்தேன். அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அர்த்தமல்ல.. இந்த 25 கொஞ்சம் தூக்கலாக மனதில் இடம் பிடித்தவை. அவ்வளவுதான்.
ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்குமே என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
வென்றவர்கள் உள் பெட்டியில் விலாசம் கொடுங்கள். என் அன்புப் பரிசாக நான் எழுதிய ஒரு புத்தகம் தேடி வரும்.
25 மைக்ரோ கதைகள்:
--------------------------------

1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை.
- ஜெயா சிங்காரம்

2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.
- பிரபு பாலசுப்பிரமணியன்

3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் சுரேஷ். - தனுஜா ஜெயராமன்
4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்.
-சி.பி.செந்தில்குமார்

5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை!
-கல்யாணி சேகர்

6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை!
-கவிதா ஹரிஹரன்

7. ஒரு மெளனத்தின் அலறல்!
சைலண்ட் மோடில் செல்போன்!
-மன்னன் உசைன்

8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான்.
-ஆர்.திலகவதி ரவி

9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.
-அ.வேளாங்கண்ணி

10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை!

11. அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே!
-தயா.ஜி.வெள்ளைரோஜா

12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு. "கட்'' என்றார் இயக்குனர்.
-விஜி.முருகநாதன்

13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..!
-பழனீஸ்வரி தினகரன்

14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை!
மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்!
-முரளி, மதுரை

15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில். கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்!
-ரெஜி தரகன்

16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள். குழந்தை சிரித்தது. மார்பில் வலி குறைந்தது.
-செல்லம் ஜெரினா

17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா.
'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன்.
-இயக்குனர் ஹரி கணேஷ்

18. "விட்டுடு தம்பி!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன்.
-குமரன் கருப்பையா

19. "Good morning. We are calling from tamil sangam!''
- அப்துல் ரஷீது

20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன்.
-ஜே.குமார் ராம்

21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய!
-லக்‌ஷ்மன் மோகனசந்திரன்

22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக!
-எஸ்.எஸ்.பூங்கதிர்

23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக!
-sridevi மோகன்

24. இன்றுடன் உலகம் அழிகிறது!
முழு விபரம் நாளைய நாளேட்டில்!
-ராம் சின்னப்பயல்

25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு!
-கருணாகரன் கருணாகரன்தேர்வுசெய்யப்பட்ட மைக்ரோ கதைகளை
முகநூலில் மட்டும்தானே படிப்பார்கள்..
இவர்களுக்கு இன்னும் சிறப்பான அங்கீகாரம்
கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்த சமயம் அழைத்தார் ராணி வார இதழிலிருந்து ரசனைக்கார ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன்.
விளைவாக..
25 மைக்ரோ கதைகளும் ராணி வார இதழில்
வெளியாகின்றன! இதழ் தேதி பின்னர்!
மீண்டும் வாழ்த்துகள்!
மீண்டும் பாராட்டுக்கள்!நன்றி - பட்டுக்கோட்டை பிரபாகர்

Sunday, January 12, 2020

ASN - ( கன்னடம்)- 2019 ( அவனே ஸ்ரீமன் நாராயண் )−சினிமா விமர்சனம் ( ஆக்சன் காமெடி மசாலா)

asn movie poster के लिए इमेज परिणाम

கேஜிஎஃப் -னு ஒரு படம் கன்னடத்தில் ரிலீஸ் ஆகி செம ஹிட் அடிச்சுது. குருவி படத்தை பட்டி டிங்கரிங் பண்ணி எடுத்த அந்தப்படம் ஹிட் ஆக முக்கியக்காரணம் பன்ச் டயாக்ஸும்  பிஜிஎம்மும்.  அதே மாதிரி கன்னடத்தில் இருந்து வந்த இன்னொரு காமெடி ஹிட் இது


 கதை என்ன?னு சொல்றேன், யாரும் தமிழக அரசியல் நிலவரத்தை இந்தக்கதையோட கனெக்ட் பண்ணிக்க வேண்டாம்

 ஒரு ஊர்ல ஒரு வயசான திருடன். ஒரு வயசாச்சுன்னா அது குழந்தை தானே?னு கடிக்கக்கூடாது . 90+ வயசான திருடன். அந்தத்திருடனுக்கு 2 பசங்க. திருடனோட பசங்க ஐ ஏ எஸ் ஆஃபீசராவா இருப்பானுங்க? அவனுங்களும் அப்பா மாதிரியே திருடனுங்க . அப்பா கிட்டே ஒரு புதையல். அதை ஒரு நாடக ட்ரூப் ஆட்டையைப்போட்டுடுது. அப்பாவோட கடைசி ஆசைப்படி அந்த புதையலை திருட்டுப்பசங்க 2 பேரும் கண்டுபிடிக்கறதுதான் கதை , ஊடால ஹீரோவான போலீஸ் ஆஃபீசரும் புதையலை தேடறார். யாருக்கு புதையல் கிடைச்சது என்பதே கதை

ரக்சித் ஷெட்டி தான் ஹீரோ , அதகளம் பண்ணி இருக்கார் . பருத்தி வீரன் கார்த்தியின் தெனாவெட்டு , புதிய பாதை இரா பார்த்திபனின் குறும்பு என கலந்து கட்டி அடித்ததில் ஆடியன்சிடம் அப்ளாஸ் மழை ( சிலர் அவரது ஓவர் ஆக்டிங்கையும் தொண தொண பேச்சையும் ரசிக்க வில்லை )


திரைக்கதை உத்தியில் பல புதுமை கள் , ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கான இந்தக்கதை எல்லாத்தரப்பு மக்களூக்கும் புரிய அவங்க மெனக்கெட்டதில் பல பளிச் ஐடியாக்கள்.  சம்பவம் நடந்த ஃபிரேமை அப்படியே ஃப்ரீஸ் பண்ணி அங்கே ஹீரோ போய் ஒரு கைடு மாதிரி  நம்மிடம் விளக்குவது எல்லாம் அட! போட வைக்குது

 நாயகியாய் நடித்திருப்பவர் சான்வி ஸ்ரீ வத்சவா ,பேரே வாய்ல நுழையல, ஆனா ஆள் மனசுல நுழைஞ்சுடறார். எளீமையான அடக்கமான அழகு

 எதிரிகளை அவரது அடியாட்களை நாயகன் கையாளும்  விதம் அடடே!பல இடங்களீல் வசனம் ஓவர் டோஸ் என்றாலும் ரசிக்க முடியுது

 ஆர்ட் டைரக்சன் அபாரம் . செட்டிங்ஸ் எல்லாம் கடின உழைப்பு . இசை  சோடை போகலை . பாட்டு கேட்கற மாதிரி இருக்கு

 சண்டைக்காட்சிகள் கன கச்சிதம்
asn movie images के लिए इमेज परिणाम
நச் வசனங்கள்

வழி தப்பிப்போனவங்களை மன்னிக்கலாம்,ஆனா தப்பான வழில போனவங்களை மன்னிக்கவே கூடாது #ASN

அரியாசனத்துல அமர்ந்திருக்கறவன் தான் ஆசைப்பட்டதை அடைஞ்சே ஆகனும்,இல்லைன்னா அந்த அரியாசனத்துக்கே அவமானம் #ASN

ஹீரோ ஓப்பனிங் பஞ்ச் தெலுங்குப்படம் மாதிரி....
ஜானினு ஒருத்தன் என்னை எதிர்த்தான்,அவன் கதை என்னாச்சு தெரியுமா?
ஜானி ஜானி நோ பாப்பா #ASN

அண்ணே!...
என்னபா?
துரை வரச்சொன்னாரு
அப்போ போய்ட்டு வந்துடு....
அய்யோ ,அவரு உங்களை கூட்டிட்டு வரச்சொன்னாரு #ASN


என் ஆசையை பலவீனமா ஆக்காதே!#ASN

அப்பாவுக்கு அடிபட்ட இடத்துல மறுபடி அடிச்சேன்,அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்துடுச்சு
ஒரு நிமிஷம்...அவருக்கு அடிபட்ட இடம் எது"?னு உனக்கு எப்டி தெரிஞ்சுது?
முதல்ல அடிச்சதும் நான்தான் #ASN

7 நாடகம் முடிஞ்சதும் வேஷத்தைக்கலைச்சிடனும்,இல்லைனா பைத்தியக்காரன்னு சொல்லிடுவாங்க #ASN

8 உடம்புக்கு ஒரு நோய் வந்தா அது சீக்கிரம் சரி ஆகிடும்,ஆனா மனசுக்கு நோய் வந்தா சரி ஆக லேட் ஆகும் #ASN

=9 ஒருத்தரை கன்வின்ஸ் பண்றது கஷ்டம்,ஆனா அவரை கன்பியூஸ் பண்றது ஈசி #ASN

10 புத்திசாலித்தனத்துக்கும்,முட்டாள்தனத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?புத்திசாலித்தனத்துக்கு வரையறை உண்டு,முட்டாள்தனத்துக்கு வரையறையே இல்லை #ASN

11 நம்ம எல்லார்க்குள்ளேயும் ஒரு ராவணன் ஒளிஞ்சுட்டு இருக்கான்,ஆனா நாராயணன் மட்டும் வெளில தெரியற மாதிரி காட்டிக்கறோம் #ASN

12 அரியாசனம் ஏறுன முத நாளே தன் கோட்டையை எரிச்ச முத துரை நானா தான் இருப்பேன் #ASN

13 உன் புத்திசாலித்தனம் வரம்பு மீறினா நீ முட்டாள் ஆக்கப்படுவாய்#ASN

14 உன் புத்திசாலித்தனத்தைப்பணயம் வெச்சு நீ தோத்துட்டே #ASNதியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

ஹீரோவோட பாடிலேங்க்வேஜ் ,டயலாக் டெலிவரி பிரமாதம்.ஓவர்டோஸ்தான்,ஆனா ரசிக்கலாம்,புதியபாதை பார்த்திபனின் தெனாவெட்டு,பருத்திவீரன் கார்த்தியின் லொள்ளு சேர்ந்து செய்த கலவை #ASN


2  படம் ரொம்ப நீளம் , கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு 10 நிமிசம் கம்மி. ஆனா ரசிகர்கள் போர் அடிக்குதுனு சலிச்சுக்கலை , எஞ்சாய் பண்ணீப்பார்க்கறாங்க 
சபாஷ் டைரக்டர்

1  படத்தின் அடிநாதம் ஆக்சன் சேசிங் சர்ச்சிங் என்றாலும் எல்லாத்தையும் காமெடி பேஸ்ல கொண்டு போன விதம்,


2  ஹீரோ ஹீரோயினை படம் பூரா மரியாதையாகவே அழைப்பது , சொல்லுங்க லட்சுமி அவர்களே... இது சினிமாக்கு புதுசு

3   வாய்ப்பிருந்தும் ஒரு சீன்ல கூட வன்முறையோ , ஆபாசமோ தலை தூக்காம பார்த்துக்கிட்டது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  மணலால் மூடப்பட்ட பெட்டிக்குள் இருக்கும் ஹீரோ மூச்சை அடக்க முடியாமல் தவிப்பார்னு பார்த்தா ஒண்ணூமே ஆகலை . ஆக்சுவலா புதைக்கப்பட்ட பெட்டிக்குள் இருக்கும் ஆளுக்கு சுவாசிப்பதில் பிரச்சனை வரும்,  வேர்க்கும், ஆனா அசால்ட்டா ஹீரோ இருக்கார்


2  ஹீரோ சொல்வதை எல்லாம் வில்லன்கள் நம்புவது , போனா போகட்டும்கற கதையா “ எதுக்கும் அவன் மேல ஒரு கண் இருக்கட்டும்னு வசனம்


3  பட டைட்டில் பாரிஜாதம்னே வெச்சிருக்கலாம், மேட்சா இருக்கும். புதையல் இருக்கும் இடம்  பாரிஜாத மரம் அருகே , நாயகி பாரிஜாத மலர் போல இருக்கார்னு சமாளீக்கலாம்

4  நீளமான திரைக்கதை இன்னும் ஷார்ப் ஆக்கலாம். விகடன் மார்க் ( யூகம்)  43 ( விகடன்  நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே மார்க் போடும்)

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3.5/ 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்    3/ 5( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-ASN ( kannadam)- ( அவனே ஸ்ரீமன் நாராயண்)− புதையலைத்தேடி அலையும் இரு திருடர்கள் கூட்டம் + ஒரு போலீஸ் கதை,கிட்டத்தட்ட இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மாதிரி காமெடி ஆக்சன் பிலிம்,KGF போல ஹிட் அடிக்கும்,புதியபாதை பார்த்திபன் போல ஹீரோ நடிப்பு ,BGM + , ஏ சென்ட்டர் பிலிம் , 3 / 5 #ASN