Monday, August 20, 2018

ரத்னபாலா

சைனா ல டூப்ளிகேட் சரக்குக்கு மதிப்பு அதிகமாமே?நல்ல மார்க்கெட்டாமே?


ஆமா,அதுக்கென்ன இப்ப?
நம்மாளு படம் சைனால டப் பண்றாங்க,100 கோடி வடை சுட ஆரம்பிச்சுடுவாங்களே?


=========


2 குருவே!கவுதம புத்தர் கூட ஸ்ரீ கிருஷ்ணரோட அவதாரமாமே?


வாய்ப்பே இல்ல
எப்டி?
கிருஷ்ணரோட எந்த அவதாரத்துலயாவது சம்சாரமோ,ஜோடியோ இல்லாம இருந்திருக்காரா?லாஜிக் இடிக்குதே==========


3 டைரக்டர் சார்,படம் பாத்தேன் ,வில்லன் ஒரு ஹீரோயினை கொல்றாரு,பதிலுக்கு ஹீரோ வில்லன் க்ரூப்ல எல்லாரையும் கொல்றாரு


பார்க்கற ஆடியன்சையும் தான்============


4 25 வருட காலத்தில் ஒருமுறை கூட FDFS பார்த்ததில்லை.


ஓஹோ,நீங்க பாக்கறது"பூரா செகண்ட்ஸ்"தானா?==========


5 குருவே!தாத்தாவோட சொத்து பேரனுக்குத்தான்னு"சொல்றாங்களே,அது"நிஜமா?


ஆமா,ஆனா அது"தாத்தா உழைச்சு"சம்பாதிச்சதா இருக்கனும்============


6 கமலோட அடுத்த படம் ரிலீஸ் பண்ற தியேட்டர்கள் கிளாமரா மாறிடும்


எப்டி?
சபாஷ் நாயுடு ஹால் ஆகிடுமில்ல?===========7 புல்லட்"ரயில்ல கவுண்டர்கள் மட்டும்தான் போவாங்களாமே ,நிஜமா?


இது என்ன புதுப்புரளி?
ஒரு காலத்துல புல்லட் பைக் னாலே கவுண்டர்கள் தான்னு ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலா இருந்துச்சே?
==========


8 டாக்டர்,பப்பாளி பழத்தை சீனி போட்டு சாப்பிடலாமா?

ஏம்மா,அஸ்கா சர்க்கரை"கெடுதல்,சுகர் பேஷண்ட்"சாப்பிட உகந்த பழம் பப்பாளி,அதுல அஸ்கா வை தொட்டு சாப்பிடறதுக்கு பஞ்சு மூட்டை குடோன்லயே இருக்கலாம்"சந்தானம்"காமெடி பார்க்கவும்


=================


9 Multi talented ன்னா என்ன .?

ஊருக்கு வெளில"மல்ட்டிகாம்ப்ளெக்ஸ் தியேட்டர் மால் கட்டி அதுல கேண்ட்டின் ல 4 மடங்கு விலை"அதிகமா பொருள்கள் விற்பது,தியேட்டருக்கு வர்ற ஜனங்களை வாட்டர் கேன்"கூட கொண்டு வரக்கூடாது னு தடை விதிப்பது=============


10 அம்மன்
கோவிலில் முதல் முதலாக
பால்குடம் எடுக்கப்போறேன்
வாழ்த்துங்க
வாழ்த்துக்கள்,எடுத்த குடத்தை ,திருப்பி எப்போ கொண்டுபோய் வைப்பீங்க?


=================


11 vகுருவே!டோல் கேட்களில்
பிச்சைக்காரர்கள் இல்லாதது
ஆச்சர்யமாக இருக்கிறதே?
ஒரே ஏரியாவில் 2 தரப்பு எப்டி பிச்சை எடுக்கும்?ஏரியா பிரிச்சு வெச்சுப்பாங்க"இல்ல?


==============


12 வீட்டுக்கு வீடு மரம் வளருங்க ்னு சொல்றாய்ங்க
சந்தன மரக் கன்று நட்டா அடிக்க வராய்ங்க
நல்ல வேள,கஞ்சா செடி பயிரிடலை


============


13 தமிழ் செம்மொழி ஆனது
அவள் என்னை மாமா என்று அழைத்த போது
அத்தான்"னு கூப்ட்டிருந்தா செம்மொழி செம மொழி ஆகி இருக்கும்=============


14 இங்க யாராவது Dermatologist
இருக்கீங்களா?
சொல்லுங்க ,உங்களுக்கு என்ன பிரச்சன?
தோள் ல ஒரு பிராப்ளம்
அதுக்கு வேற ஆள் இருக்காங்க,இது தோல் வியாதிக்கு.ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்


==============


15 தலைவரே!உங்க அப்பா நட்புக்கு இலக்கணம் வகுத்தவராமே?

ஆமா
60 வருடங்களா அரசியல்ல பக்கபலமா இருந்தவருக்கு நட்பின் நாயகன்னு பட்டம் கொடுத்தாராமே?
ஆமா

ஆனா,தன்னோட தலைவர் பதவியை ஒரு வருசம் விட்டுக்குடுத்திருக்கலாமே"நண்பனுக்கு,ஏன் செய்யல?
பட்டம்னா ஓசி,தரலாம்,பதவி தந்தா வருமானம் லாஸ்


===================


16 தலைவரே!கடந்த 15 வருசமா"வந்த ரத்னபாலா இதழ்கள் 15×18=270 புக் கூரியர்ல வந்திருக்கு

எதுக்கு?
பாரதரத்னா கேட்டோமில்ல,ரத்னபாலா தான் ஒர்த்தாம் நமக்கு


================


17 தலைவரே!நம்ம தலைவருக்கு"தலைவர் பதவி தந்தது அறிஞர் அண்ணா தானே?

ஆமா
அதுக்கு நன்றிக்கடனா அண்ணா வோட வாரிசுகளுக்கு பதவி தந்து வழிகாட்டியாவும் இருந்து நன்றிக்கடன் ஏன் செய்யல?
யோவ்,சொந்த மகனுக்கே கடைசி வரை வழி விடல


==============


18 வயசான காலத்துல இவருக்கு பதவி எதுக்கு னு காமராஜருக்கு எதிரா பிரச்சாரம் பண்ணுனது யாரு?;

நம்ம தலைவர்தான்
அப்ப காமராஜருக்கு என்ன வயசு இருக்கும்?
50
நம்ம தலைவர் எத்தனை வயசு வரை பதவில இருந்தாரு?
93 வரை
வயசான காலத்துல இவரு மட்டும் பதவிக்கு"ஆசைப்படலாமா?


=================


19 தலைவரே!காமராஜரை விட நம்ம தலைவர் தான் சிறந்தவர்னு ஒரு பிரச்சாரம் நடக்குது,எப்பிடி?

காமராஜர் இறந்தப்ப அவரோட சொத்து எவ்வளவு?
வெறும் 500 ரூபா நம்ம தலைவருக்கு?
ஒரு லட்சம் கோடி பணம்,18 டிவி சேனல்கள்... etc
காமராஜருக்கு வாரிசு? அவர் பிரம்மச்சாரி நம்ம தலைவருக்கு?
ஹிஹி ,சரிசரி

==============


20 தலைவரே!நம்ம கட்சிக்கு கெட்ட பேரு எதனால?

ரவுடியிசம்,சாராயம்
ரவுடியிசத்தால பாதிக்கப்பட்டது யாரு?கட்சிய விட்டு விலக்கப்பட்டது யாரு?
மு.க.அழகிரி குடிப்பழக்கத்தால வாழ்க்கையை தொலைச்சது யாரு?
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் கறது இதுதான்
மு.க. முத்து

============

தனியார் கம்பெனி முதலாளிகளும் ,தொழிலாளிகளும் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

இத்தனை பிரதமர்களையும் பார்த்தவர்

==============அப்பாவுக்கு மகனாகவும் சரி
தலைவரின் வாரிசாகவும் சரி அழகிரியை விட ஸ்டாலின் சிறந்தவர்

===============தனியார் கம்பெனி முதலாளிகளும் ,தொழிலாளிகளும்

============


4  இவரோட ராசியே சரி இருக்காதே?
 ==============

3 X Cm
==========


6  2033 = 2+0+3+3=8 அஷ்டமத்துல சனி னு"ஒரு"க்ரூப் கிளம்புமே
============


7  அதுவே ஒரு எக்சசைஸ்தான்,நம்மாளு அதை செய்யமாட்டாப்டி,பணம் கட்டி ஜிம்"போவாப்டி


=========================


வார்த்தையை அளந்து"பேசனும் னு"ஒரு"நீதி இதுல"தெரியுதா?

=================

இதுல ஒரு பாய்ண்ட் இருக்கு


===============


10 நகரத்தில் இருப்போர்"பலர்"கண்டிராத பழம் , கொழுமிச்சம்பழம் (எலுமிச்சம்பழம் போல)இது புளிப்பு கலந்த இனிப்பு,மிளகாய்ப்பொடி பெஸ்ட்"காம்போ.சாதமும் கிளறலாம் .(குளிர்ச்சியானது.வீசிங்க் ட்ரபுள் உள்ளவர் தவிர்க்கவும்)

டாக்டர் ,மஞ்சள் காமாலை நோய் க்கு மாதுளம் பழம் சாப்பிடலாமா?

இன்றைய கால கட்டத்தில்

பஸ்,ஸ்டாப்பில்
பார்க்கும் பெண்களிடமே காதல் வயப்படுகிறார்கள் என்றால்
அது
காதலா? மோகமா? காமமா?
யோவ், தனியா பொண்ணுங்களைப்பார்க்கறதே அபூர்வமா இருக்கு,ஜோடியாவே சுத்தறாங்க,எதுனா"எங்கேயாவது"பாத்தா"டக்குனு"ப்ரப்போஸ்"பண்ணி ரிசர்வ் பண்ணிக்கறதுதான்


========

2 குருவே!நட்பா இருக்கிறவங்க ஒத்த கருத்துடையவங்களா தான் இருக்கணும் நியதி இருக்கா?


அப்டி எல்லாம் எதுவும் கிடையாது,திராவிட அரசியல் நடத்தும் கமல் ,ஆன்மீக அரசியல் நடத்தப்போகும் ரஜினி மாறுபட்ட எதிர் பாதை பயணம்,நட்பா இல்லையா?=========


3 கோவப்பட்டு திட்றோம் திட்டுவாங்குறவங்க அழறாங்க அப்போ நம்ம கோவம் நியாயமாகுமா ?


யாரும் யாரையும் எக்காரணத்துக்காகவும் அழ வைப்பது நியாயம் ஆகாது===========4 குருவே!செட்டில் ஆகாதவங்கள லவ் பண்ணி கடைசி வரை அவங்க கூடவே இருந்து அவங்கள முன்னேற வைக்கிற காதலிகள் இப்போ இருக்காங்களா?


அதெல்லாம் 1990 கள்லயே காலாவதி ஆகிடுச்சு,சொந்த பங்களா இருக்கா?வசதி இருக்கா?னு முதல்ல பார்ப்பாங்க.விதிவிலக்குகள் ஒரு 10% இருக்கலாம்,அவங்க கிராமத்துப்பொண்ணுங்க===========


5 டாக்டர்,மூக்கு செமையா வலிக்குது 😢 ஒன் வே ட்ராபிக் வேற.. 3 டேஸா இப்படி இருக்கு... என்ன பண்ணா சட்டுனு சரியாகும்..?


வெந்நீரில் மஞ்சள் தூள் ,தூவி ஆவி பிடிக்கவும் ,15 நிமிடத்தில் சரி ஆகும்
==========


6 சம்பளம் மட்டும் தரும் கம்பெனியில் பணி புரிவது ஒரே ஒரு பெண் உள்ள வீட்டில் பொண்ணு கட்டுவது போல,இன்சென்ட்டிவ் ,சைடு வருமானம் உள்ள பணியில் சேருவது மச்சினிகள் உள்ள வீட்டில் பொண்ணு கட்டுவது போல


============


7 ரைசா பிக்பாஸ்ல கமல் கிட்ட குட்டு வாங்குனார்.விஸ்வரூபம் 2 ரைசாவின் ப்யார்பிரேமா ்காதல் படம் முந்திடுச்சாம்,கமலுக்கு வந்த சோதனை,அடப்பாவமே"


=========


8  நாங்க இந்தியாவுக்குள் நுழைவோம் - சீனா
போட்டியா நாங்களும் ஒரு படத்தை டப் பண்ணி சைனா அனுப்பறமே?பார்ப்பமா?யாருக்கு பாதிப்பு அதிகம்னு?


========


9 குருவே!உள்ளம் அழகாய் இருந்தால் தான்

உள்ளங்கை கூட அழகாய் தெரியும்.என்பது உண்மையா?

கண்ட கண்ட நெயில் பாலீஸ் போட்டு கெடுக்காம இயற்கை ஒப்பனை மருதாணி இட்டாலே செக்கச்சிவந்த வானமாய் விரல்கள் ஜொலிக்காதா?==========


10 டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு , லோன் தரும் வங்கிகள் கவனத்துக்கு, கேரளாவில் கடும் மழை, வெள்ளம் காரணமாக கடந்த 74 நாட்களாக பாதிப்பு, மக்களிடையே பணப்புழக்காட்டம் இல்லை, இந்த ஓணம் கடந்த வருடத்தை விட 50% குறைவான வியாபாரமே இருக்கும், வசூல் 65% குறையும், கவனத்தில் கொள்க


============


11 கார் , பைக் லோன் வாங்கி சரியா ட்யு கட்டாதவங்க புத்திசாலித்தனமா செயல்படறதா நினைச்சு ரயில்வேஸ்டேசன், பஸ் ஸ்டெண்ட் , பார்க்கிங் செண்ட்டர்களில் பாஸ் போட்டுட்டு போய்டறாங்க, நாங்க முதல்ல டார்கெட் வைப்பதே அங்கேதான் என் சிப்சு


============

12 27/5/2018 லிருந்து 10/8/2018 வரை 76 நாட்களாக தொடர்ந்து"தினசரி"மழை ,வெள்ளம் கேரளாவில்.சபரிமலை யில் பெண்களையும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்னு"கோர்ட் தீர்ப்பு வந்தது இப்பதான் ,ஒரு க்ரூப்"இது"சாமி குத்தம்னு,கிளம்பிடுச்சு,அடேய்!
==============


13 பருப்புக்குழம்பு ன்னாலே சத்துணவுக்குழம்பு னு கிண்டல் பண்ணுவாங்க,ஆனா அமாவாசைக்கு படையல் போட அதைத்தான் வெச்சாகனும்===========


14 ஊர் , உலகம் உங்களைப்பைத்தியக்காரன் என்றும் , பிழைக்கத்தெரியாதவன் என்றும் தூற்றுகிறதா?அப்போ நீங்க சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம், பெரும்பான்மை யினர் செய்யும் செயல்கள் தான் சரி என்று ஆகி விடாது============
15 வெறுப்பவர்கள் பட்டியலிலோ,விரும்புபவர்"பட்டியலிலோ இடம் பிடித்து விடுங்கள்,கவனிக்க"வைப்பதுதான் முக்கியம்=================16 மழைல நனையிறது ரொம்ப பிடிக்கும் னு"கவிதை எழுதறவங்க கேரளா ,எர்ணாக்குளம்,ஆலுவா செல்லவும் .தொடர்ச்சியா தினம்"மழை தான்


================


17 ப்யார்ப்ரேமாகாதல் ஒரு"கலாச்சாரசீர்கேடு மிக்க கமர்ஷியல்"கில்மாப்படம்.18+
விஸ்வரூபம்"2 ஒரு"சராசரி ஏ செண்ட்டர் ஆக்சன்"மசாலா படம்.இதை வெச்சு ரைசா கிட்ட கமல்"தோத்துட்டார்னு மீம்ஸ்"போடறது லாஜிக் இல்ல.எப்பவும் கெட்டதுக்கு அதிக வரவேற்பு இருக்கும்==============


18 டாக்டர் ,மஞ்சள் காமாலை நோய் க்கு மாதுளம் பழம் சாப்பிடலாமா?

அது ரத்த அழுத்தத்தைத்தான் கட்டுப்படுத்தும்.bp பேஷண்ட்களுக்கு நல்லது.மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சாறு,இளநீர் ,மோர் ,ஆரஞ்சு சாறு இப்டி குளிர்ச்சியா சாப்பிடலாம்.தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கனும்.உணவில் எண்ணெய் தவிர்க்க


===================


19 122 எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது - தினகரன்
இருந்து ரகசியமா ஆதரிப்பாங்க போல


=================


20 கடும் மழை ,வெள்ளம் காரணமா சபரிமலை ஏரியாவில்(கேரளா) நோய்தொற்று கிருமிகள் ,காய்ச்சல் அபாயம்"உண்டு என தகவல்,மீறி போய்ட்டு பின் சாமி மேல பழி போடாதீங்க


==============

Saturday, August 18, 2018

கோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்

Image result for kolamaavu kokilaஇது ஒரு ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட் ,ஹீரோயினோட அம்மாவுக்கு கேன்சர், மருத்துவ செலவுக்கு பணம் வேணும்,, அதுக்காக நாயகி எதேச்சையா ஒரு ஸ்மெக்ளிங்க் க்ரூபோட அபின் கடத்தலுக்கு உதவுது, அது சக்சஸ் ஆனாங்காட்டி அந்த க்ரூப் அவரை தொடர்ந்து உபயோகப்படுத்துது. அந்த க்ரூப்புக்கு நாயகி தண்ணி காட்றதுதான் மிச்ச மீதி காமெடி திரைக்கதை


 இது ஒரு எதிர்பாராதா வெற்றிப்படம். படம் போட்டதுல இருந்து கடைசி வரை ஆடியன்ஸ் சிரிக்கறாங்க , ரசிக்கறாங்க , குறிப்பா பெண்கள்


 ஸ்லிம் ஃபில் சிங்காரி , ஸ்லோமோஷன் நடை ஒய்யாரி  நயன் தான் நாயகி , நானும்  ரவுடிதான் , அறம் படங்கள் வரிசையில் பிரமாதமான நடிப்பு வாரி வழங்கி இருக்கார், ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு ஸ்மெக்ளிங் க்ரூப்புக்கு அல்வா கொடுப்பது அசத்தல் 


 யோகி பாபு கிட்டத்தட்ட  ஹீரோ மாதிரி , கலக்கறார் , காமெடி ஆக்டிங் குட் , அவர் கூட வரும் தொண தொண  சகலைக்கு நல்ல எதிர் காலம் உண்டு , இவர் துள்ளாத மனமும் துள்ளும்  ல ரூட் சொல்லும் பாரி வெங்கட் போல் சாயல்


மொட்டை ராஜேந்திரன் மேலும் ஒரு  காமெடி வில்லன் , கலக்கல் நடிப்-பு 


 சர்ண்யா அம்மாவாக வருகிறார், எம்டன் மகன் பாதிப்பு பல இடங்களில், பெண்கள் கை தட்டும் நடிப்[பு 

 அனிரூத் தான் இசை , 2 பாட்டு ஹிட் பி ஜி எம் வழக்கம் போல் குட்

திரைக்கதை , இயக்கம், வசனம் , நடிப்பு எல்லாமே கனகச்சிதம்


Related image


நச் டயலாக்ஸ்

போலீஸ் கிட்ட கை கட்டி நின்னாதான் நம்ம தொழில் நடக்கும்


நான் யார் தெரியுமா?

தெரியும்
யாரு?
என் ஆளோட அக்காவை லவ் பண்றிங்க
ஆ!,அப்போ நீ சகலை,உள்ள வா

பொண்ணு எப்டி இருக்கா தெரியுமா?பால் கொழுக்கட்டை மாதிரி


மொட்டை ராஜேந்திரன் = அடிக்கடி ஆளை மாத்திட்டே இருக்க நாம லவ்வா பண்றோம்? ஸ்மெக்ளிங்க் பண்றோம்


வில்லன் டு நயன் = என்னால ரேப் எல்லாம் பண்ண முடியாது,நீயாப்பாத்து கோ ஆபரேட் பண்ணாதான் உண்டு,ஸ்பைனல் கார்டு டோட்டல் டேமேஜ்

நாம தப்பு பண்றோம்கறத நம்ம முகம் காட்டிக்கொடுத்துடக்கூடாது


யோகிபாபூ − யார்றா நீ,காட்டுக்குரங்குக்கு மொட்டை அடிச்சு விட்டது மாதிரி?
நீ மட்டும் என்ன?முடி வெச்ச மொரட்டுக்குரங்கு மாதிரிதான இருக்க?

இதுக்கு முன்னால நீ சரக்கு அடிச்சிருக்கியா?
நானெல்லாம் ராஜ போதைக்காரன்

Image result for kolamaavu kokila
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


ஈரோடு"சண்டிகா ,நயன்தாரா வுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் அதிகம் போல,வந்திருக்கற 146 பேர்ல 82 பேர் லேடீஸ்,இதுல பால்கனி ஆடியன்ஸ் 32============

தலைவி நயன் ஓப்பனிங்க் சீன்ல மாடிப்படி ஏறி வருது,சம்பளம் படத்துக்கு படம் கூடி வருது னு குறியீடு,.இந்தப்படத்துக்கு 2 1/4 கோடி


யோகிபாபு ஓப்பனிங்க் சீனுக்கு ஆரவாரமான கை தட்டல்,அடுத்த படத்துல சந்தானம் போல ஹீரோதான் னு கண்டிஷன் போடப்போறாரு


முன்னால நிக்கற,கண்ணால சொக்குற பாடல் காட்சி படமாக்கம் மணிரத்ன தரம் ,நயன் இளைச்சிருக்கு,மாடு இளைச்சாலும்.....


தமிழ் சினிமா வில் பனங்கிழங்கு காட்டப்பட்ட வெகு சில படங்களில் இதுவும் ஒண்ணு .பனை கிழங்கு சாப்பிட்டால் பரம்பரைக்கே சர்க்கரை வியாதி வராதாம்

1986 ல ரிலீஸ் ஆன தழுவாத கைகள் படத்துல தான் முதல் முறையா புற்றுநோய் பிரச்சனை கதைக்கருல காமெடி திரைக்கதை அமைச்சாங்க அதுக்குப்பின் இதுதான்


தலைவி நயன் எதுக்காக புருவ நீளத்தை குறைச்சிருக்கு?தெரில ,அறம் படத்து ல வந்ததை விட 1 இஞ்ச் நீளம் கம்மி


நயன் போட்டிருக்கற பாவாட மாதிரி டிரஸ் கேரளா ஸ்பெஷல் ,ரேப்பர் ரவுண்ட்.
ஜாக்கெட் நெக் பைப்பிங் ,பப் கை பைப்பிங்க் ,ஜாக்கெட் பாட்டம் பைப்பிங் இவங்களா கண்டுபிடிச்ச புது காஸ்ட்யூம் டிசைன் போல

படிக்காதவன்(ரஜினி) படத்துல அம்பிகா செஞ்ச கேரக்டர்தான் இதுல நயன் கேரக்டர்

10 தரமான ஏ சென்ட்டர் ஆடியன்சுக்கான காமெடி,ஆனா பி,சி சென்ட்ர் ஆடியன்சும் கை தட்டி ரசிக்கறாங்க,முதலீட்டைப்போல் 4 மடங்கு சம்பாதிக்கும் ,இடைவேளை வரை குட்

11 இந்தப்படத்துக்கு பொருத்தமான தலைப்பாக எனக்குத்தோன்றியது
அபினும்,நானும் ஒரு பொண்ணு நினைச்சா
போங்காட்டம்

Image result for kolamaavu kokila

சபாஷ் டைரக்டர்

1  இந்தப்படத்துக்கு நடிகர் நடிகைகள் தேர்வு பிரமாதம், நீண்ட இடைவெளிக்குப்பின் யார் மீதும் குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பு 

2   நயனின் அட்ராசிட்டி அசத்தல், காஸ்ட்யூம் டிசைன் பக்கா


3  யோகிபாபு , மொட்டை ராஜேந்திரன், அந்த நெக் பெண்ட் வில்லன் நடிப்பு எல்லாமே ரசிக்க வைக்குது

4 ஆரம்பம் முதல் இறுதி வரை யோசிக்கவே விடாத ரகளையான திரைக்கதை +

லாஜிக் மிஸ்டேக்ஸ்

லாஜிக் மிஸ்டேக் 1 − எந்த மேனேஜரும் ஒரு பெண்ணை ஆபிஸ் ல கரெக்ட் பண்ண டைம் எடுத்துக்குவார்,இப்டி மடத்தனமா திடீர்னு கில்மா க்கு கூப்பிட்டு மொக்க வாங்க மாட்டாங்க

2   பின் பாதியில்  வில்லன் க்ரூப் அடியாட்கள் ஒவ்வொருவராக உள்ளே போய் மாட்டுவது நம்பற மாதிரியே இல்லை, டவுட் வராதா?

3  கழுத்தை அசைக்க முடியாத வில்லன் நாயகியை ரேப் பண்ண நினைத்ததும் மயக்க மருந்து தந்து ஈசியா ப்ராஜெக்ட் முடிக்கறதை விட்டு சேர் டேபிளை எல்லாம் எதுக்கு உடைச்சார் தெரில 

4  வில்லன் க்ரூப் ல அனைவரும் செல்லூர் ராஜூக்களாகவே இருப்பது அபத்தம்
Image result for nayanthara hot
சி.பி கமெண்ட்கோலமாவு கோகிலா− ஆல் செண்ட்டர் ஹிட்.திரைக்கதை,இயக்கம்,நடிப்பு கனகச்சிதம்.பெண்கள் கூட்டம் அள்ளுது,நயன் தாரா,யோகிபாபு ராக்கிங் பர்பார்மெனஸ்,பேமிலி ஆடியன்சை வரவழைக்கும் ஸ்மெக்லிங்க் த்ரில்லர் காமெடி பிலிம் ,விகடன் 44 ,ரேட்டிங்க் 3.25 / 5 , லாஜிக் பார்க்கக்கூடாத காமெடி மேஜிக்