Monday, July 31, 2023

JACKSON BAZAAR YOUTH (2023) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


  ஒரு  நல்ல  த்ரில்லர்  படம்  எடுப்பவர்கள்  அதற்கான  பிரமோஷன், போஸ்ட்ர்  டிசைன்  ஆகியவற்றில்  கவனம்  செலுத்த  வேண்டும். ஒரு  புத்தகத்தின் உள்ளடக்கம்  நன்றாக  இருக்கும்  அளவு  அட்டைப்படம்  டிசைன்  ரொம்ப  முக்கியம், அந்த  அளவில் இடைவேளைக்குப்பின் பிரமாதமான  த்ரில்லர் மோடில்  பயணப்படும்  இப்படத்தின்  போஸ்டர்  டிசைன்  ஏதோ  சாதா  மெலோடி டிராமா  லெவலில்;  இருந்தது . இது  மிகப்பெரும்  பின்னடைவு. இதே  படத்துக்கு  பிரமோ  மட்டும்  நன்றாக  செய்திருந்தால்  இது  செம  ஹிட்  ஆகி  இருக்கக்கூடும் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  மற்றும்  அவன்  நண்பர்கள்  ஒரு  இசைக்குழு  நடத்தி  வருகிறார்கள் . அவர்கள்  தங்கி  இருக்கும்  இடம்  புறம்போக்கு  நிலம், பல  காலமாக  அவர்கள்  அங்கே  தான்  தங்கி  வருகிறார்கள் . அங்கே  தண்ணீர்  பிரச்சனை  இருக்கிறது . நெடுஞ்சாலைத்துறை  அந்த  இடத்தைகையகப்படுத்தப்போகிறது  என்ற  தகவல்  வர  நாயகன்  தன்  நண்பர்களுடன்  போலீஸ்  ஸ்டேஷன்  போய்   புகார்  தருகிறார்கள் , ஆனால்  போலீஸ்  அதை கவனிக்காமல்  நாயகன் ஒரு  முன்னாள்  மிலிட்ரி  வீரர்  என்றும்  பாராமல்  அவரை  அவமானப்படுத்தி அனுப்பி  விடுகிறது 


ஹை  வே  டிபர்ட்மெண்ட்    அடுத்த  நாள்  ஆய்வுக்கு  வரும்  நிலையில்  நாயகன்  மற்றும்  அவரது  நண்பர்களை  ஆக்ரமிப்பு  அகற்றும்  பணி  தொடர்பாக  பேச்சு  வார்த்தைக்கு  அழைக்கிறது  போலீஸ் , ஆனால்  நாயகன்  போலீசை அவமானப்படுத்தி  விடுகிறார். இதனால்  கடுப்பான  போலீஸ்  நாயகனை  லாக்கப்பில்  தள்ளி  லாடம்  கட்டி  விடுகின்றனர் . அடுத்த  நாளே  நாயகன்   இற க்கிறார்


 இதனால்  கோபம்  அடைந்த  நாயகனின்  நண்பர்கள்  நாயகனை  லாடம்  கட்டிய  போலீஸ்  ஆஃபீசரை  அடித்துத்துவைக்கின்றனர் . இதனால்  கோபம்  ஆன  போலீஸ்  நண்பர்களை  லாக்கப்பில்  தள்ளி  பழி  தீர்க்கத்துடிக்கிறது 


 இந்த  பரபரப்பான   சூழலில்  ஸ்டேஷனுக்கு  புதிய சர்க்கிள்  இன்ஸ்பெக்டர்  பொறுப்பேற்க  வருகிறார் . இதற்குப்பின்  போலீஸ்  ஸ்டேஷனில்  நடக்கும்  அடிபொலியான  சமாச்சாரங்கள்  தான்  கலக்கலான  பின்  பாதி  திரைக்கதை 


  முதல்  பாதியில்  விசாரணை  ஸ்டைலில்  போகும்  திரைக்கதை  பின்  பாதியில்  கலக்கலான சஸ்பென்ஸ்  த்ரில்லராக  மாறுகிறது 


ஜாஃபர்  இடுக்கி  தான்  நாயகன் , அவர்  ஆரம்பக்கடக்காட்சிகளில்  காமெடியாக  நடிப்பை  வழங்கி  இருந்தாலும்  போலீசால்  அடித்துத்துன்புறுத்தப்படும்  காட்சிகளில்  பரிதாபத்தை  அள்ளிக்கொள்கிறார்


 போலீஸ்  சர்க்கிள்  இன்ஸ்பெக்டர்  ஆக  வரும்  இந்திரன்ஸ்  தான்  படத்தின்  உயிர்  நாடி . அவர்  வந்த  பின்  திரைக்கதையின்  போக்கே  மாறுகிறது  . பிரமாதமான  நடிப்பு , அட்டகாசமான  உடல்  மொழி , இவர்  நம்ம  ஊர்   வடிவேலு  போல  காமெடி , குணச்சித்திரம்  என  இரு  வடிவங்களிலும்  முத்திரை  பதித்தவர் . விடுதலை  பட    சூரி  போல  போலீஸ்  கெட்டப்பில்  அசத்தி  இருக்கிறார்


உஷ்மான்  மரத்தின்   திரைக்கதைக்கு  உயிர்  கொடுத்து  இயக்கி  இருக்கிறார்  ஷமால்  சுலைமான் . பின்  பாதி  காட்சிகளில்  பல  கூஸ்பம்ப்  மொமெண்ட் ஸ்


கோவிந்த்  வசந்தாவின்  பின்னணி  இசை  மிரட்டுகிறது   கண்ணன்  பட்டேரியின்  ஒளிப்பதிவு  இருட்டுப்பகுதிகளில்  பிரகாசிக்கிறது . பின் பாதி  திரைக்கதை  முழுக்க  ஒரே  இரவில்  போலீஸ்  ஸ்டேஷனிலேயே  நடப்பதால்  போர்  அடிக்காமல்  காமரா  கோணங்களை  அமைப்பதில்  ஒளிப்பதிவாளருக்கு சவாலான  வேலைதான்   அப்பு  பட்டாத்ரி . ஷைஜாஸ்    இருவரும் தான்  எடிட்டிங்.  பின்  பாதியில்  விறு விறுப்பு  அதிகம் . அதே சமயம்  முதல்  பாதி  ரொம்ப ஸ்லோ 


சபாஷ்  டைரக்டர்


1   விசாரனை  தமிழ்ப்படத்தின்  காட்சிகளை  நினைவுபடுத்தினாலும்  சாமார்த்தியமாக  பின் பாதி  திரைக்கதையில்  அதை  மறைத்த  லாவகம் 



2   போலீஸ்  சர்க்கிள்  இன்ஸ்பெக்டரின்  கேரக்டர்  டிசைனும்  , இந்திரன்சின்  நடிப்பும் 


 ரசித்த  வசனங்கள் 


1சோகத்தை  எத்தனை பேர்  கிட்டே ஷேர்  பண்ன  முடியும் ? ஆல்ரெடி எல்லார் கிட்டேயும்  ஏகப்பட்ட  சோகம் இருக்கு 


2  இன்ஸ்பெக்டர் சார். ஒரு  லேடி  ஃபோன்  பண்ணி  ஸ்டேஷன்  வரசோன்னாங்க


 ஓஹோ, இப்போ அந்த  லேடியே தான்  வேணுமா?


3 கைல  என்ன  பேக் ?


 சார் , இன்னைக்கு   என்  சம்சாரத்தோட் கல்யாண  நாள்

 அப்போ  உனக்கு 


 அய்யோ  எனக்கும்தான்


4  இந்தப்பொண்ணு  எப்படி  பழக்கம்?


 இன்ஸ்டாக்ராம்ல


ஓ, முதல்ல  வீட்டுக்குப்போனதும்  நாமும்  ஒரு இன்ஸ்டா  அக்கவுண்ட்  ஓப்பன்  பண்ணிடனும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    ஸ்டேஷனுக்கு  வந்த  காதல்  ஜோடியிடம்  செல்  ஃபோனை  பறிமுதல்  செய்யும்  போலீஸ்   ஆஃபீசர்  ஒருவர்  அந்த  காதல்  காட்சியைப்பார்க்க  ஆசைப்பட்டால்  அப்போதே  அந்த  ஃபோனிலிருந்து  தன்  ஃபோனுக்கு  ஃபார்வார்டு  செய்து  பார்த்திருக்கலாமே? தன்னிடமே  ஃபோனை  வைத்திருந்து  ஏன்  மாட்டிக்கொள்கிறார்?


2  போலீஸ்க்கு  தொப்பை  இருப்பது  சகஜம், நிஜத்தில்  60%  போலீஸ்க்கு  தொப்பை  இருக்கிறது , ஆனால்  மிலிட்ரி  வீரர்களுக்குமா  தொப்பை  இருக்கும் ?  ஜாஃபர்  இடுக்கி  உட்பட  மிலிடிரி  யூனிஃபார்மில்  பலருக்கும்  தொப்பை  இருப்பதாக  காட்சி  வருகிறது 


3  போலீசால்  கொல்லப்பட்ட  நாயகன்  உடலை  ஏன்  அடக்கம்  செய்கிறார்கள் ? போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  வேண்டும் , நீதி  கிடைக்கும்  வரை  போராடுவோம்  என ஏன்  போராடவில்லை ? 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வன்முறைக்காட்சிகள்  அதிகம், 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தரமான  பின்  பாதி  போலீஸ்  ஸ்டேஷன்  காட்சிகளுக்காகவே  பார்க்கலாம் ., ரேட்டிங்  2.75 / 5   இது  திரை  அரங்குகளில்  வெளியானபோதும்  சுமாராதான்  கேரளாவில்  ஓடியது ,  விமர்சன  ரீதியாகவும்  பெரிய  வரவேற்பைப்பெற  வில்லை ஏன்  எனத்தெரியவில்லை .


Jackson Bazaar Youth
Jackson Bazaar Youth.jpg
Release poster
Directed byShamal Sulaiman
Written byUsman Marath
Produced byZakariya Mohammed
Starring
CinematographyKannan Patteri
Edited byAppu N. Bhattathiri
Shaijas K. M.
Music byGovind Vasantha
Production
companies
Cross Boarder Camera
Imagine Cinema.
Distributed byCentral Pictures
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageMalayalam
Box office

Sunday, July 30, 2023

நீலகிரி எக்ஸ்பிரஸ் (1968) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ யூ ட்யூப்

  


1967ல்  ரிலீஸ்  ஆன  கொச்சின்  எக்ஸ்பிரஸ்  என்னும்  மலையாளப்படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது .இரு  மொழிகளிலும்  இது  வெற்றி  பெற்றதும்  கன்னடம், தெலுங்கு ,   என  தென்னிந்திய  மொழிகள்  எல்லாவற்றிலும்  ரீமேக்  செய்யப்பட்டு  வெற்றி  பெற்றது .ஹிந்தி யிலும்  ரீமேக்கப்பட்டு  ஹிட்  ஆனது 


  துக்ளக்  ஆசிரியர்  சோ  திரைக்கதை  , வசனம்  எழுதி  முக்கியப்பாத்திரத்தில்  நடித்திருந்தார் . கதாநாயகன்  ஜெய்  சங்கர் படம்  ஆரம்பித்து  32  நிமிடங்கள்  கழித்துத்தான்  எண்ட்ரி ஆவார். ஆனால்  காமெடியன்  சோ  படம்  முழுக்க  அதாவது  கதாநாயகனை  விட  அதிக  காட்சிகளீல்  தோன்றுவார். அதே  போல்  பெண்  வேடம், துபாய்  ஷேக்  வேடம், அப்பாவி  வேடம்  என  மூன்று  கெட்டப்களில்  அசத்தி  இருப்பார்  

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  தொழில்  அதிபர்  தன்  மகளின்  திருமணத்துக்காக  நகைகள்  பர்ச்சேஸ்  செய்து  விட்டு  ரயிலில்  பயணிக்கிறார். அதே  கம்ப்பார்ட்மெண்ட்டில்  காமெடியன்  பயணிக்கிறார். அப்போது  ஒரு  பெண்  அந்த  கம்ப்பார்ட்மெண்ட்டில்  ஏறி  காமெடியனுடன்  பேச்சுக்கொடுக்கிறார். தன்னை  டைவர்ட்  பண்ணி  அந்த  இடத்தைக்காலி  செய்ய  வைப்பதற்காக போடப்படும்  டிராமா  என்பதை  அறியாமல்  காமெடியன்  அந்தப்பெண்ணின்  சதிக்கு  பலியாகி   ஹோட்டலில்  சாப்பிடப்போக  ரயிலை  மிஸ்  செய்கிறார்


கம்பார்ட்மெண்ட்  காலி  ஆனதும்  கொள்ளை  அடிக்கும்  ஆள் அந்த  தொழில்  அதிபரைக்கொலை  செய்து  விட்டு  நகைகளூடன்  எஸ்  ஆகிறான் . இந்தக்கேசில்  காமெடியன்  தான்  முக்கியமான  சாட்சி , எனவே  இந்தக்கேசை  துப்பு  துலக்க  வரும்  நாயகன்  ஆன  சிஐடி  ஆஃபீசர்  காமெடியன்  உதவியுடன்  அந்தப்பெண்ணை  முதலில்  கண்டுபிடிக்க  முயாற்சி  செய்கிறார், அதற்குப்பின்  அந்தக்கொள்ளைக்கும்பலை  பிடிக்க  முயற்சி  செய்கிறார் , அவர்  முயற்சி  வெற்றி  அடைந்ததா? என்பதுதான்  பின்  பாதி  திரைக்கதை 


  காமெடியன்  ஆக  துக்ளக்  சோ  கலக்கலான  பாடி  லேங்க்வேஜ் , பக்காவான  காமெடி  ஸ்க்ரிப்ட்  உடன்  களம்  இறங்கி  இருக்கிறார். சரக்கே  இல்லாமல்  காமெடி  பண்ண  முயற்சி  செய்து  மொக்கை  போடும்   யோகிபாபு  போன்றவர்கள்  இதில்  பாடம்  கற்கலாம் .


நாயகன்  ஆக  ஜெய் சங்கர் . ஸ்டைலிஷ்  ஆன  லுக் , ஃபிட்  ஆன  ஜிம்  பாடி , அபாரமான  டிரஸ்சிங்  சென்ஸ்   உடன் ஒரு  ஆக்சன்  ஹீரோவுக்கான சகல  லட்சணங்களுடனும்  கலக்கி  இருக்கிறார். தன்  பழைய  காதலியை  ஹோட்டல்  ரிசப்ஷனிஸ்ட்  ஆக பார்க்கும்போது  அவர்  துள்ளிக்குதிப்பது  இளமை . ஆக்சன் சீக்வன்ஸ்களில்  தான்  தென்னக  ஜேம்ஸ்பாண்ட்  என்பதை  நிரூபிக்கிறார்


வில்லன்  ஆக  மொட்டை  பாஸ்  எஸ்  ஏ  அசோகன்  கச்சிதம் . மலை  மாடு  மாதிரி  அவர்  நாயகனுடன்  மோதும்  காட்சிகளில்  பயங்கரம் 


நாயகனின்  முன்னாள்  காதலியாக  விஜய நிர்மலா  நடித்திருக்கிறார்.   விஜய  லலிதா  ஒரு  முக்கியக்கேரக்டரில்  வருகிறார் . திருத்தணி  முருகா  என்ற  பாடல்  காட்சியில்  கெஸ்ட்  ரோலில்  ஸ்ரீ வித்யா , எம்  பானுமதி  வருகிறார்கள் .


பால்  துரை சிங்கம்  அவர்களின்  எடிட்டிங்கில்  பக்காவாக  2  மணி  நேரத்தில்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்கள் , டிகே  ராமமூர்த்தியின்  இசையில்  ஐந்து  பாடல்கள் ,  விட்டல்  ராவின்  ஒளிப்பதிவில்  சண்டைக்காட்சிகளில்  கேமரா  புகுந்து  விளையாடி  இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  (  திருமலை  மகாலிங்கம் ) 


1   காமெடியனுக்கு முக்கியத்துவம்  வாய்ந்த  கதையில்  ஆக்சன்  ஹீரோவை  சாமார்த்தியமாக  புக்  செய்தது 


2 காமெடியன் சோ  வை  கமர்ஷியலாக  சுதந்தரமாக   திரைக்கதையை  ஆக்ரமிக்க சம்மதித்தது 


3  நாயகனின்  பழைய  காதலியை வைத்து  கிளைமாக்சில்  வைக்கப்படும் ஒரு  ட்விஸ்ட்  குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   வாலிபம்  ஒரு  வெள்ளித்தட்டு , வருவாயா  நீ  என்னை  அள்ளிக்கிட்டு 

2   நான்  கலைஞன்  அல்ல 

3   திருத்தணி  முருகா , தென்னவா  தலைவா 

4  கல்யாணப்பெண்னைக்கொஞ்சம் 

5   கடவுள்  மதுவாய்  கண்களீல் ஆட 


  ரசித்த  வசனங்கள்   ( துக்ளக்  சோ) 


1   உங்க  பேர்  என்ன ?

 ராவணன் 

 வேடிக்கையா  இருக்கு , 

சரி, உங்க  பேரு  என்ன ?

கலாவதி 

  வாடிக்கையா  இருக்கு , ஐ  மீன்  நிறைய  பேரு  இதே  மாதிரி  பேரு  வைத்துக்கறாங்க 


2   நீங்க  ரெண்டு  பேரும்  அஞ்சு  நிமிசம்  பேசாம  இருந்தா   நான்  தூங்கிடுவேன் 

 சார் , லேடீஸ்  பாவம், பேசாம  ஒரு  நிமிசம்  கூட  இருக்க  முடியாது 


3  அட, உங்களூக்கு  வெட்கப்படத்தெரியுது . நீங்க  காலேஜ் கேர்ளா? 

 இல்லை , நான்  காலேஜ்  பக்கமே  போனதில்லை \


 அதான்  வெட்கப்படத்தெரிஞ்சிருக்கு 


4   சேலை  கட்டிய  மாதரை  நம்பாதேன்னு  சொல்வாங்க, அதனால  இங்கே  இருக்கும்  எல்லா ;லேடீசையும்,  நம்பறேன், ஏன்னா  எல்லாப்பெண்களும்  சுடி  மிடினு  மாடர்ன்  டிரசா போட்டிருக்காங்க , ஒரு பெண்  கூட  சேலைல  இல்லை 


5   சார் , ஐ  ஆம்  அன்  மேரீடு  மேன்  கழுத்துல  பார்த்தீங்களா  தாலி  இல்லை \


6   சார்  , உங்களைப்பார்த்ததும்  எனக்குப்பிடிச்சிடுச்சு 


நான்  இன்னும்  குளிக்கலை, அதுக்குள்ளே சோப்  போடாதே 


7   நாளை  உன்னைக்கொலை  பண்ணலாம்னு  இருக்கேன் 


 நாளை  வேணாம், நாளை  மறு நாள்  கொலை  பண்ணீக்கோ, ஏன்னா  சனிப்பொணம்  தனியாப்போகாதும்பா 


8   அவ  வீக்னெசை  குறை  சொல்றது , இந்த  சமூகத்தைக்குறை  சொலறது, எது  ஓக்கே ?


 இந்த  சமூகத்தைக்குறை  சொலறது, அதானே  உலக  வழக்கம் \\


 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பொதுவாக  லாட்ஜ், ஹோட்டல்களில்  ரூம்  புக்  பண்ண  வரும்போதுதான்  அட்ரஸ் , அட்ரஸ்  ப்ரூஃப் , ஃபோன்  நெம்பர்  எல்லா  டீட்டெய்ல்சும்  கேட்பாங்க , ஆனா  நாயகன்  அண்ட்  காமெடியன்  ரூம்  கேட்கும்போது  கொடுத்து  விட்டு  சாவகாசமாக  ஒரு  லேடி  ரூமுக்கு  வந்து  டீட்டெய்ல்ஸ்  கேட்கறாங்களே? 


2   ரூம்  நெம்பர்  16  , 19  கன்ஃபியூசனில்  காமெடியன்  பண்ணும்  அலப்பறை  காமெடிக்கு  ஓக்கே , ஆனால்  அவர்  தன்  ரூம்  நெம்பரை  16  என்பதை  19  என  மாற்றுகிறாரே? வில்லனை  திசை  திருப்ப . அருகில்  இருக்கும்  ரூம்  நெம்பர்  18  அல்லது 20  என  இருந்தால்  தானே  இது  19 ? 


3   நாயகன்  திடீர்  என  காமெடியன்  சோ வை  கடத்தல்காரர்கள்  அடைத்து  வைத்திருக்கும்  இடத்துக்கு  எப்படி  கரெக்டாக  வருகிறார்? எப்படி  ஸ்பாட்டைக்கண்டு பிடித்தார் ? 


4   நாயகி  பாய்சன்  சாப்ட்டுட்டு  அரை  மணி  நேரம்  டயலாக்  பேசிட்டு  இருக்கே? அது  வெரி வெரி  ஸ்லோ  பாய்சனா  இருக்குமோ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பிரமாதமான  காமெடி  கலந்த  க்ரைம்  த்ரில்லர்  ஆக்சன்  படம், செம  ஜாலியாகப்போகிறது . கதையின் ஒரிஜினல்  மலையாளம்  என்பதாலும்  ஆறு  மொழிகளிலும்  ஹிட்  ஆன  சப்ஜெக்ட்  என்பதாலும்  நம்பிப்பார்க்கலாம், ரேட்டிங்  3 / 5 


Neelagiri Express
Theatrical release poster
Directed byThirumalai–Mahalingam
Screenplay byCho Ramaswamy
Produced byV. Arunachalam
StarringJaishankar
CinematographyG. Vittal Rao
Edited byA. Paulduraisingam
Music byT. K. Ramamoorthy
Production
company
A. L. S. Productions
Release date
  • 23 March 1968
Running time
120 minutes
CountryIndia
LanguageTamil

Saturday, July 29, 2023

ஒரு விரல் (1965) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் மிஸ்ட்ரி த்ரி;ல்;லர் ) @ யூ ட்யூப்

 சஸ்பென்ஸ்  கதைகள்  அதிகம்  வெளி வராத  கால  கட்டத்தில்  பெரிய  பிரபல  நடிகர்கள்  யாரும்  இல்லாமல்  அறிமுக  நாயகர்களைக்கொண்டு  எடுக்கப்பட்டு  பெரும்  வெற்றி  பெற்ற  படம்,  தேங்காய்  சீனிவாசன் , ஒரு  விரல்  கிருஷ்ணராவ்  இதில்  தான்  அறிமுகம்  ஆனார்கள் , கிருஷ்ண  ராவ்க்கு  பட  டைட்டில்  ஒரு  அடையாளப்பெயர்  ஆகி  விட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  எஸ்டேட்டின்  ஓனர்  பெரிய  கோடீஸ்வரர், அவருக்கு  இரு  மகன்கள்.  மகன்கள்  இருவரும்  பட்டணத்தில்  காலேஜ்  படிப்பு  படிக்கச்சென்றிருக்கிறார்கள் . படிப்பு  முடிந்து  ஊருக்குக்கிளம்பலாமா?  டூர்  எங்காவது  போய்  வரலாமா?  என  இரு  சகோதரர்களும்  உரையாடிக்கொண்டிருக்கும்போது  ஊரில்  இருந்து  தந்தி  வந்து  விடுகிறது . அப்பா  இறந்து  விட்டார் , உடனே  கிளம்பி  வரவும் . இருவரும்  ஊருக்கு  வருகிறார்கள் 


எஸ்டேட்டில்  ஒரு  மேனேஜர்  இருக்கிறார் . வீட்டில்  அவர்களது  ஃபேமிலி  டாக்டர்  இருக்கிறார்.நடந்தது  தற்செயல்  இயற்கை  மரணமா? திட்டமிட்ட  கொலையா? என்பதை  மகன்கள்  கண்டுபிடிக்க  முயல்கிறார்கள் 

எஸ்டேட்  மேனேஜர்  ஆல்ரெடி  போலீசாரால்  தேடப்படு ம்  குற்றவாளி. அவன்  மேல  பல  கேஸ்கள்  இருக்கின்றன. அவனைக்கையும்  களவுமாகப்பிடிக்க  ஒரு  சி ஐ டி  ஆஃபீசர்  அந்த  எஸ்டேட்டில்  வேலைக்கு  சேர்கிறார்

டாக்டருக்கு  ஒரு  மகள்  இருக்கிறாள் . மாரடைப்பு  சம்பந்தமான  மருந்து  ஒன்றை  டாக்டரின்  மூதாதையர்கள்  கண்டுபிடித்ததாக  ஊரில்  பேசிக்கொள்கிறார்கள் . அதனால்   சொத்துக்கு  ஆசைப்பட்டு  டாக்டர் தான்  ஏதோ  மருந்து  கொடுத்து  ஹார்ட்  அட்டாக்  வருவது  போல்  செட்டப்  செய்து  விட்டாரோ  என  மகன்கள்  சந்தேகப்படுகிறார்கள் .  இறுதியில்  குற்றவாளி  யார்  என்பதைக்கண்டு  பிடிப்பதுதான்  மீதி  திரைக்கதை 


தேங்காய்  சீனிவாசன்  தான் சிஐடி  ஆஃபீசர் , ஆள்  அடையாளமே  தெரியவில்லை . ஒரு  விரல்  கிருஷ்ணாராவ்  முக்கிய  ரோலில்  வருகிறார்

மலேசியா  ராதிகா , திலகம் , , மீனா  குமாரி  என  நமக்கு  அதிகம்  அறிமுகம்  ஆகாதவர்கள்  நடித்திருக்கிறார்கள் 


தங்கம் , சி எம் வி  ராமன்  இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுத சி எம் வி  ராமன்  படத்தை  இயக்கி  இருக்கிறார். பேய்ப்படம்  மாதிரி  திகிலாகக்காட்சிகளைக்கொண்டு  போய்  பின்  எல்லாம்  மனித  சதிதான்  என  ஒவ்வொரு  முடிச்சாய்  அவிழ்ப்பது  அருமை 

சபாஷ்  டைரக்டர்


1   க்ரைம்  த்ரில்லர்  படத்தை  போர்  அடிக்காமல்  கொண்டு  செல்ல  3  லவ்  ஜோடிகளை  திரைக்கதையில்  அமைத்த  விதம் 

2  எலும்புக்கூட்டை  வைத்து  வில்லன்  திட்டம்  போடும்  காட்சிகள் 

3  ஒரே  ஒரு  விரலை  மட்டும்  தனியாக  எடுத்து  ஜனங்களைக்குழப்புவது 

செம  ஹிட்  சாங்க்ஸ்

  1. 1  மல்லிகை மொட்டு  சங்கெடுத்து  மங்கல  இசை  பாடுதம்மா 
  2. 2  உங்கள்  தேவை  என்ன  என்று  தெரியும், இந்தப்பாவை  மனசு  துணை 
  3. புரியும்
3  பதில்  ஒன்று  தர  வந்தேன் 

  1. ரசித்த  வசனங்கள் 

  2. 1  கிண்ணத்தில்  இருக்கும்  வரை தான் அது  பன்னீரு , கீழே  தரைல  கொட்டிட்டா  அது  சாதா  தண்ணீர் தான், அது  மாதிரி  தான் பெண்களீன்  கற்பும் 
  3. 2  ஓவர்  குவாலிஃபிகேஷன்  என்னைக்குமே  ஆபத்துத்தான். , பெருமை  பேசறவனாதான்  அவன்  இருப்பான் 
  4. 3  ஏமாற்றும் பழக்கம் ஏழைக்குக்கிடையாது 
  5. 4  மிஸ்! பிரமாதமா  டைப்  பண்ணி  இருக்கீங்க, ஒவ்வொரு  எழுத்தும்,  அச்சுல  வார்த்தது  மாதிரி  அவளோ  அழகா  இருக்கு 

  6.  போங்க  சார்  எல்லாம்  மிஷின்ல  டைப்  பண்ணு னதுதானே? 

  7.  இருந்தாலும் உங்க  கை  விரல்கள்  பட்டதாச்சே? 

  1. லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  எஸ்டேட்  ஓனர்  அந்த  ஊரின்  முக்கியப்புள்ளி. இறப்பில்  சந்தேகம்  என்றதும்  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  செய்யாதது  ஏன் ? 


2    தங்கச்சி , என்னை சந்தேகப்படறாங்க . அந்த  கேசில்  இருந்து  நான்  தப்பிக்க  நீ  அவனை  லவ்  பண்ணு  என  அண்ணன்  காரன்  சொல்வது  வடிவேலு  காமெடியான  பேக்கரி  எனக்கு  அக்கா  உனக்கு  கான்செப்ட்டை  நினைவுபடுத்துது





  1.  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  க்ளீன்  யூ 


  2. சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  மிஸ்ட்டரி  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம்,  இந்தக்காலத்திலும்  ரசிக்கத்தக்க  அளவில்  தான்  உள்ளது , ரேட்டிங்  2.75 / 5 
Oru Viral
Theatrical release poster
Directed byC. M. V. Raman
Written byThangam
C. M. V. Raman
Produced bySalvador Fernandes
StarringKrishna Rao
Thengai Srinivasan
CinematographyT. G. Sekar
Music byVedha
Production
company
Associate Artists
Release date
  • 17 December 1965
CountryIndia
LanguageTamil

Friday, July 28, 2023

டக்கர் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


2020  ஆம்  ஆண்டே  வெளியாக  வேண்டிய  படம், கொரானா  காலத்தால்  3  வருடங்கள்  தாமதமாக  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது ம், சர்வதேச  அளவில்   THE  BANG  என்ற  டைட்டிலில்  ரிலீஸ்  ஆன  போது  கலவையான  விமர்சனங்களை  சந்தித்தது ம், பாக்ஸ்  ஆஃபீசில்  இது  ஒரு வெற்றிப்படம்  அல்ல 


  ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  ஏழைக்குடும்பத்தில்  பிறந்தவர் , ஆனால்  பணக்காரன்  ஆக  வேண்டும்  என்ற  எண்ணம்  உள்ளவர் . அதனால்  அவர்  சொந்த  ஊரிலிருந்து  கிளம்பி  வந்து  பட்டணம்  சேர்கிறார். என்ன என்ன எல்லாமோ  வேலைகள்  எல்லாம்  பார்ப்பவர்  கடைசியில்  ஒரு  டாக்சி  டிரைவராக  பணிக்கு  அமர்கிறார்.


  வில்லன்  பெண்களைக்கடத்தி  வந்து  அவள்  பெற்றோருக்கு  ஃபோன்  பண்ணி  மிரட்டி  பணம்  பிடுங்கி  சம்பாதிப்பவர்.


 நாயகி  பெரிய  கோடீஸ்வரரின்  மகள் . அவளுக்கு  நிச்சயக்கப்பட்ட  மாப்பிள்ளையை  பிடிக்கவில்லை , அதனால்  அப்பாவிடம்  இவரைக்கல்யாணம்  செய்து  கொள்ள  மாட்டேன்  என  கறாராக  சொல்லி  விடுகிறாள் 

 இப்போது  வில்லன்  நாயகியைக்கடத்த  திட்டம்  போடுகிறான். நாயகனை  நாயகி  விரும்புகிறார். நாயகனே  நாயகியைக்கடத்தியது  போல அப்பாவிடம்  பணம்  பிடுங்கிக்கொள்ள  நாயகியே  ஐடியா  கொடுக்கிறாள் , இதற்குப்பின்  நிகழும்  காமெடிக்குழப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை  


நாயகன்  ஆக  சித்தார்த். நல்ல  பர்சனாலிட்டி . அவரது  ஸ்டைலிஷான  கெட்டப்  ரசிகைகளை  விசில்  அடிக்க  வைக்கும் . ஆக்சன்  காட்சிகளில்  வேகம்  போதவில்லை , ரொமான்ஸ்  காட்சிகளில்  விவேகம்  போதவில்லை . 


நாயகி  ஆக   திவ்யான்சா  தாராள  மனம்  படத்தை  தயாளு  கிளாமரினியாக  வருகிறார். அவர்  வரும்  காட்சிகள்  எல்லாம்  ஓப்பன் யுனிவர்சிட்டி  சிம்பாலிக்  டச்  காட்சிகள் தான் . நடிப்பு  பாஸ்  மார்க் 


யோகி  பாபு  காமெடியனாக  படம்  முழுக்க  வந்து  இரண்டு  இடைங்களில்  சிரிக்க  வைத்து  விடுகிறார்

முனீஷ் காந்த்  காமெடி  நன்றாக  இருக்கிறது 


 நிவாஸ்  கே  பிரசன்னா  வின் இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் . பின்னணி  இசை  சுமார்தான்   ஜி  ஏ  கவுதம்  எடிட்டிங்கில்  பின்  பாதியில்  நல்ல  விறு விறுப்பு 

 கார்த்திக்  ஜி  கிருஷ் இயக்கத்தில்  பல  படங்களின்  காட்சிகளை  ஒரே  படத்தில்  கோர்வையாகப்பார்த்த  அட்லீ  எஃபக்ட்  கிடைக்கிறது 


சபாஷ்  டைரக்டர்  ( கார்த்திக்  ஜி  கிருஷ்) 


1    நாயகன்  கார்  சேசிங்கில்  அந்த  குற்ரவாளிகளை  போலீசிடம்  இருந்து  காப்பாற்றும்  காட்சி   ஆங்கிலப்படங்களுக்கு  நிகராகப்படம்  ஆக்கபப்ட்டுள்ளது 


2   நாயகனின்  ஸ்டைலிஷான  கெட்டப் , அவரது  ஆக்சன்  சீக்வன்ஸ் 


3  முனீஷ்  காந்த்தின்  யதார்த்தக்காமெடி 



  ரசித்த  வசனங்கள் 


1  இந்த  உலகத்துல  தன்மானத்தோட  வாழனும்னு  நினைச்சா  ஒண்ணு  தகுதி  இருக்கனும், இல்லைன்னா  தைரியம்  இருக்கனும், என் கிட்டே  ரெண்டுமே  இல்லை 

2  பணம்  சம்பாதிக்கப்போறேன்னு  சொல்லு , ஆனா  பணக்காரன்  ஆகப்போறேன்னு  சொல்லாத

3  நல்ல  குணம்  ஆனவனா  ஆவான்னு  குணசேகரன்னு  பேரு  வெச்சா  ரொம்பக்கோபப்படறானே?


 கோபப்படறதும்  நல்ல  குணம் தான் , ஆனா  அதுக்கும்  ஒரு  தகுதி  வேணும்

4  இந்த  உலகத்துல  ரெண்டே  கேட்டகிரிதான்  1  ரொஷமான  ஏழை 2  மோசமான  பணக்காரன்

5   வாழ்க்கை  அதுவா  ஒரு ஆஃப்ஃபர்  தரும்போது  அது  ரைட்டா  , ராங்கா  என  யோசிக்காம  ஒரு தடவை  ட்ரை  பண்ணிப்பார்க்கலாம்னு  தோணுது 


6  லவ்  வேற அட்ஜஸ்ட்மெண்ட்  வேற  . வேற  வழியே  இல்லாம  அட்ஜஸ்  பண்ணி  வாழ்வது  லவ் ஆகாது , இது  எங்கேஜ்மெண்ட் ரிங்  மாதிரி  தெரியல , சர்க்கஸ்  ரிங்  மாதிரி  தெரியுது 


7  ஐ  சேஞ்ச்டு  மை  கீப் ,யூ  கீப்  மை  சேஞ்ச்


8 சாக  தைரியம்  இல்லாதவனுக்கு  செத்தாலும்  தைரியம்  வராது


9 வாழ்க்கையும்  ஒரு  விளையாட்டு  மாதிரிதான் , எப்போ  எல்லாம்  ஜெயிக்கறமோ  அப்போ  எல்லாம்  ஒரு  வெற்றிக்கோப்பை  கிடைக்கும், ஆனா  அதை  தக்க  வெச்சுக்கறமா  ? இல்லையா? என்பதில்தான்  நம்ம  வெற்றியே  இருக்கு 


10  நான்  உன்னை  அப்பப்ப  விண்டோ  ஷாப்பிங்  பண்ணி  இருக்கேன் 


அப்டின்னா??


 கிடைக்காதுனு  தெரிஞ்சும்  அப்பப்ப  பார்த்து சந்தோஷப்பட்டுக்கறது 


11  என்  லைஃப்ஃபோட  செகண்ட்  ஆஃப் தான்  எனக்கு பெட்டர்  ஆஃப். எனக்கு  பெட்டர்  ஆஃப்  கிடைச்சதும்  அப்போதான் 


12  நூடுல்ஸ்  சாப்பிடற உனக்கே  இவ்ளோ  அதுப்பு இருந்தா  கொத்து  புரோட்டா  சாப்பிடற  எனக்கு  எவ்ளோ  இருக்கும் ? 


13  அந்த  பச்சைக்கலர்  காரை  நான்  பார்த்தேன் 

 அதை  ஏன்  இப்போ  சொல்றே? 3  கிமீ  தாண்டி  வந்துட்டோமே?


 ஏன்னா  இங்கே  தானே  யூ  டர்ன்  இருக்கு 


14    ஒரு  டபுள்  ரூம்  குடுங்க 


 மேரீடா? அன்  மெரீடா?


 என்?  அன்  மேரீடுனு  சொன்னா  ரூம்  கொடுக்க  மாட்டீங்களா?


 மேரீடு  அப்டினு  சொன்னாதான்  ரூம்  கொடுக்க  மாட்டேன் 


15  ரொம்ப  நடிக்காதடா, நீ மாறலைனு  ஒத்துக்கறேன் 

 நடிப்புனு  தெரிஞ்சாலும்  அதானே  உங்களுக்கு  எல்லாம்  பிடிக்குது 


16 உங்களுக்கெல்லாம்  தேடவே  தெரியல. ஸ்பை  யா  இருக்க  லாயக்கு  இல்லை ,அவரு  எப்போதும்  பீரோக்குபின்னாலதான்  ஒளிவார்


 அவர்  இவ்ளோ ட்ரேடிஷனலா  இருப்பார்னு  எனக்கு  தெரியாது 

17  வாழ்க்கைல  எல்லா வலியும்  நான்  பார்த்துட்டேன் , ஆனா  கிடைக்காதுனு  தெரிஞ்சும்  மீண்டும்  மீண்டும்  கிடைக்காததுக்கு  ஆசைப்படறதுதான்  என்  தப்பு 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன்  நாயகியைக்கடத்திட்டு  வந்து  அவள்  அப்பாவிடம்  பேரம்  பேசுகிறான்  , சரி ,நாயகியை  ஒரு அறையில்  அடைத்து  வைக்காமல்  காரில் டிக்கியில்  ஏன்  வைத்திருக்கிறான் ? எப்படி  சாப்பாடு  , மற்ற  விஷயங்கள்  எல்லாம் நடக்கும் ?


2  நாயகனுக்கு  நாயகி  அடைக்கப்பட்ட  காரின் சாவி  எப்படி  கிடைத்தது ? காரிலேயே  விட்டுட்டுப்போவாங்களா? யாராவது ? வெறும்  கார்  எனில்  ஓக்கே , காரில்  நாயகி  பணயக்கைதியா  இருக்கா 


3  காரை  வில்லனிடம்  இருந்து  ஆட்டையைப்போட்ட  நாயகன்  அதே  காரில்  நெம்பர்  பிளேட்டையோ, காரின்  கலரையோ  மாற்றாமல்  ஊரை  ரவுண்ட்  அடிச்ட்டு  இருக்கான், போலீசும்  கண்டுக்கலை, கார்  ஓனரும்  கண்டுக்கலை 


3  நாயகனை  வில்லன்  க்ரூப் ,  ஓனர்  க்ரூப் , நாயகியின்  வருங்காலக்கணவன்  க்ரூப்  என  பல  கேங்  தேடுது . நாயகன்  தன்  செல்  ஃபோனை  ஆன் ல  வெச்சிருந்தா  ஜிபிஎஸ்  ட்ராக்  பண்ணி  ஆளை லொக்கேட்  பண்ணிடுவாங்கனு  தெரியாதா?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  நாயகியின் கிளாமர்  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வழக்கமான  ரொமாண்டிக்  மசாலாதான்  பார்க்க  போர்  அடிக்காமல்  இருக்கிறது  . ரேட்டிங் 2.25 / 5 


Takkar
Takkar 2023 poster.jpg
Theatrical release poster
Directed byKarthik G Krish
Written byShrinivas Kaviinayam Karthik G Krish
Produced by
  • Sudhan Sundaram
  • G. Jayaram
Starring
CinematographyVanchinathan Murugesan
Edited byG. A. Gowtham
Music byNivas K. Prasanna
Production
company
Passion Studios
Release date
  • 9 June 2023
CountryIndia
LanguageTamil

Thursday, July 27, 2023

ஓர் இரவு (1951) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


சி என்  அண்ணாதுரையின்  நாடகங்கள்  ஏற்கனவே  சினிமாவாக  வந்திருக்கின்றன.  1949 ல்  வேலைக்காரி , நல்ல தம்பி  ஆகிய  இரு  நாடகங்களும்  சினிமா  ஆகி  நல்ல  வரவேற்பையும்  , வசூலையும்  பெற்றது. கே  ஆர்  ராமசாமிக்காக  எழுதிய ஓர் இரவு  எனும் இந்த   நாடகத்தை  ஏ வி எம்  நிறுவனம்  சினிமா  ஆக்க  விரும்பியது . ஏ வி எம் ஸ்டூடியோவுக்கு  அண்ணா  வந்து  ஒரே  இரவில்  திரைக்கதை , வசனம்  எழுதிக்கொடுத்தாராம், அன்றைய  மதிப்பில்  ரூ 10,000  ஊதியமாகப்பெற்றாராம், அப்போது  அது  மிகப்பெரிய  தொகை. ஆனால்  நாடகமாக  செம  ஹிட்  ஆன  இக்கதை  ஏனோ  சினிமாவாக  சூப்பர்  ஹிட்  ஆகவில்லை . விமர்சகர்கள்  வரவேற்பைப்பரவலாகப்பெற்ற  இப்படம்  வசூல்  ரீதியாக  தோல்வியையே  சந்தித்தது 


 இயக்குநர்  ப  நீலகண்டன்  1947ல்  ரிலீஸ்  ஆன  நாம்  இருவர்  படத்தில் அசிஸ்டெண்ட்  டைரக்டராக  வேலை  செய்தவர் , அண்ணாதுரையின்  சிபாரிசால் இயக்குநர்  ஆக  ப்ரமோஷன்  பெற்றார் . இப்படத்தின்  கதை  ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  தவிர  மீதி  அனைத்தும்  ஒரே  நாள்  இரவில்  நடப்பதாக  சித்தரிக்கப்பட்டு  இருந்தது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


 கதையை  மூன்று  வெவ்வேறு  சம்பவங்களாகப்பிரிக்கலாம்


 சம்பவம் 1 -  நாயகன்  ரத்தினம்  பெரிய  ஜமீன் தாரர்  வாரிசு . நாயகி  சொர்ணம்  சாதா  ஏழைப்பெண். ஓப்பனிங்  ஷாட்லயயே  நாயகி  மாட்டு  வண்டியில்  வர  நாயகன்  காரில்  வருகிறார். இருவரும்  நேருக்கு  நேர்  சந்தித்துக்கொள்கிறார்கள் . மோதல்  உண்டாகிறது , நாயகியின்  தாத்தா  வந்திருப்பது  ஜமீன்  என்று  சொன்னபின்  தான்  நாயகிக்கு  விபரம்  தெரியும் . அதற்குபபின்  பல  சந்தர்ப்பங்களில்  நாயகன் - நாயகி இருவரும்  பூங்காக்களில்  சந்தித்துப்பழகுகிறார்கள் . காதலிக்கிறார்கள் . நாயகியின்  தாத்தா  இந்தக்காதலை  கண்டிக்கிறார். தன்  பேத்தியிடம்  நீ  அவனை  மறந்து  விடு . அவன்  உன்னைக்கல்யாணம்  எல்லாம்  செய்து  கொள்ள மாட்டான். அவர்கள்  பணக்காரர்கள் , நாம்  ஏழை ,  பின்  ஊர்  ஒரு  விதமாகப்பேசும்  என்கிறார். ஆனால்  நாயகி  அதைக்கேட்கவில்லை 


 ஆனால்  தாத்தா  சொன்னதுதான்  நடக்கிறது . நாயகன்  நாயகியைத்திருமணம்  செய்ய  முன்  வரும்போது  அந்தஸ்து  , ஜாதி  குறுக்கே  வருகிறது . நாயகனுக்கு  நாயகியை  ஏமாற்றும்  எண்ணம்  இல்லை , ஆனால்  சந்தர்ப்ப  சூழ்நிலையின்  காரணமாக  நாயகியைக்கை  விட  வேண்டிய  சூழலில்  இருக்கிறான். நாயகி  கர்ப்பமாக  இருக்கிறார்


சில  இடங்களில்  வேலைக்குப்போகிறார். போன  இடங்கள்  எல்லாம் நாயகியை  ஆசை  நாயகி  ஆக்க  முயலவே  ஒரு நாடகக்குழுவில்  சேர்ந்து  நடிகை  ஆகிறார். சில  வருடங்கள்  கழித்து  நாயகன் - நாயகி  சந்திப்பு  மீண்டும்  நடக்கிறது . அப்போதும்  நாயகன்  நாயகியை  ஏற்றுக்கொள்ள  முன்  வரவில்லை 


சம்பவம் 2 - நாயகன்    பவானி  என்ற  பெண்ணை  மணக்கிறார். அவர்களுக்கு  ஒரு  பெண்  குழந்தை  பிறக்கிறது. சில  வருடங்களீலேலேயே பவானி  இறந்து  விடுகிறார். அவர்களது  பெண்  குழந்தை  பெரியவள்  ஆகிறாள் , பெயர்  சுசீலா . சுசீலா  டாக்டர்  சேகர்  என்பவரைக்காதலிக்கிறாள் இருவரும்  காதலிப்பது  நாயகன்  ரத்தினத்துக்கு  தெரிய  வருகிறது 


 நாயகனை  ஒரு  ஆள்  ஏதோ  ஒரு  விஷயத்தை  சொல்லி  அடிக்கடி   மிரட்டிப்பணம்  பறித்துக்கொண்டிருக்கிறான்,  சட்டத்துக்குபுறம்பான  ஒரு  செயலை  நாயகன்  செய்யும் போது  அந்த  வில்லன்  அதை  ஃபோட்டோ  எடுத்து  வைத்துக்கொண்டு  மிரட்டிக்கொண்டு  இருக்கிறான்


 நாயகனின்  மகளைத்திருமணம்  செய்ய  வில்லன்  முன்  வருகிறான். நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை. என்  சொத்து  பூரா  தந்து  விடுகிறேன், ஆனால்  என்  மகள் மட்டும்  வேண்டாம் , விட்டு  விடு  என்கிறார், ஆனால்  வில்லன்  அந்த  ஆதாரத்தை  ஊருக்கு  அம்பலப்படுத்துவேன்  என  மேலும்  மிரட்ட  வேறு  வழி  இல்லாமல்  தன்  மகளை  வில்லனுக்கு  திருமணம்  செய்து  தர  சம்மதிக்கிறான். மகளையும்  வலுக்கட்டாயமாக  பாசத்தைக்காட்டி  சம்மதிக்க  வைக்கிறான் 


 சம்பவம்  3  -  நாயகன்  ரத்னம் , நாயகி  சொர்ணம்  இருவருக்கும்  பிறந்த  மகன்  இப்போது  ஒரு  திருடன்  ஆக  இருக்கிறான். நாயகனின்  மகள்  சுசீலா  அவனை  சந்தித்து  தன்  காதலன்  ஆக  நடிக்கும்படி  கேட்டுக்கொள்கிறாள் ., சுசீலாவுக்கு  அவன்  தான்  தன்  அண்ணன்  என  தெரியாது .இதற்குப்பின்  நடந்த  திடுக்கிடும்  திருப்பங்கள்  என்ன? நாயகன், நாயகி  சந்திப்பு  மீண்டும்  நடந்ததா?  நாயகனை  வில்லன்  மிரட்டுவதற்கான  பின்  புலம்  என்ன? நாயகன்  மகள்  சுசீலா - டாக்டர்  திருமணம்  நடந்ததா?  என்பதற்கெல்லாம்  பிற்பாதி  திரைக்கதை  பதில்  சொல்கிறது 



 நாயகன்  ரத்தினம்  ஆக   கே  ஆர்  ராமசாமி .  ஓபனிங்  ஷாட்டில்  தெனாவெட்டாக  அறிமுகம்  ஆகும்  அவர் , பிறகு  குணச்சித்திர  நடிகர்  ஆகி  விடுகிறார். நாயகன்  கமல்  கிட்டே  கேட்பது  போல  இவரிடமும்  நீங்க  நல்லவரா? கெட்டவரா? எனக்கேட்க  வேண்டும்  போல \\


 நாயகி  சொர்ணம்  ஆக  பி எஸ்  சரோஜா. ஓப்பனிங்  ஷாட்டில்  மாட்டு  வண்டியில்  கிளாமராக  வருபவர், கலக்கலாக  டூயட்  எல்லாம்  பாடுபவர்  அப்புறம்  சோகசிற்பம்  ஆகி  விடுகிறார். வயதான  கெட்டப்பில்  பார்க்க  முடியவில்லை, பாவம் 


மகள்  சுசீலாவாக   லலிதா. கச்சிதமான  நடிப்பு . நடனம்  அருமை  (  இவர்  தான்  லலிதா , பத்மினி , ராகினி  சகோதரிகள்  என  நினைக்கிறேன் . திருவாங்கூர்   சகோதரிகளீல்  மூத்த  அக்கா) 

 நாயகனின்  மனைவி  பவானி  ஆக   முத்து லட்சுமி  கெஸ்ட்  ரோல், அதிக  வாய்ப்பில்லை \

  நாயகனை  அடிக்கடி  மிரட்டும்  வில்லனாக  டி கே  சண்முகம் , டாக்டர்  சேகர்  ஆக  நாகேஸ்வரராவ்


 ஒரு  பாடல்  காட்சியில்  லலிதா, பத்மினி , ராகினி  மூவரும்  நடனம்  ஆடுகிறார்கள் .லட்சுமி  காந்தன்  ஒரு  வேடத்தில்  தோன்றுகிறார்  ( இவர்  தான்  பின்னாளில் தியாகராஜ  பாகவதர் , என் எஸ்  கிருஷ்ணன்  ஆகியோரை கொலை  வழக்கில்  ஜெயிலில்  தள்ளியவர் ) 


ஆர்  சுதர்சனம்   இசையில்  பத்து  பாடல்கள் , அவற்றில்  நான்கு பாடல்கள்  செம  ஹிட் , இப்போதும்  கேட்கலாம் 


கே  சங்கர்  எடிட்டிங்கில் 160  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது , எங்கும்  பெரிதாக  போர்  அடிக்கவில்லை , மாருதி  ராவின்  ஒளிப்பதிவு  கச்சிதம் 




சபாஷ்  டைரக்டர்  (  ப  நீலகண்டன் ) 


1 நாயகன்  நாயகிக்கு  செய்தது  துரோகம்  தான்  என்றாலும்   நாயகன்  மீது  ஆடியன்சுக்கு  வெறுப்பு  வராத  வண்ணம்  நாயகனுக்கு  வேறு  வழி  இல்லை  என்பது  போல  காட்சிகளை  சித்தரித்து  அவரது  கேரக்டர்  டிசைனை  வடிவமைத்த  விதம் \


2   வில்லன்  நாயகனை  ஏன்  மிரட்டுகிறான்  என்ற  சஸ்பென்சை  கடைசி  வரை  மெயிண்ட்டெயின்  செய்த  விதம் 


3  டாக்டர் , கம்பவுண்டர்  காமெடி  டிராக் 


  ரசித்த  வசனங்கள்   ( அண்ணாதுரை) 

\

1   உங்க  பார்வையை  லா  பாயிண்ட்  ஆஃப்  வியூவில்  பார்க்காதீங்க , லவ்  பாயிண்ட்  ஆஃப்  வ்யூவில்  பாருங்க \


2   அகராதி  என  அடிக்கடி  என்னைக்கூப்பிடறீங்க, அதுக்கு  என்ன  அர்த்தம்  என  அகராதியில்  தேடிக்கொண்டிருக்கிறேன்


3   எல்லார்  முன்னிலையிலும்  என்னை  இனிஷியல்  சுருக்  ஆக  எம்  என்  எனக்கூப்பிடறீங்க , அது  பேஷண்ட்ஸ்  காதில்  எமன்  என்றே  கேட்கும், பயப்படறாங்க 


4  நீங்க  சந்தோஷமா  இருக்கும்போதும்  என்னை  அடிக்கறீங்க , கோபமா  இருக்கும்போதும்  அடிக்கறீங்க, பணக்காரன்  சந்தோஷமா  இருந்தாலும், கோபமா  இருந்தாலும்   அது  ஏழைக்கு  அனர்த்தம்  தான்

5  உங்க  முகம்  அன்  சகிக்கபிளா  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்ள  மறுப்பதில்  நியாயம்  இருந்தது , ஆனால்  நாடக  நடிகை ஆன  பின்  வரும்  சந்திப்பில்  நாயகி  கேட்பதில்  நியாயம்  இருக்கிறது . நாயகன்  மறுப்பதில்  லாஜிக்கே  இல்லை /. நாயகனின்  மனைவி  இறந்த  பின்  நாயகியை  உடன்  வைத்துக்கொள்வதில்  என்ன  தயக்கம் ? 


2   நாயகன்  பண பலம்  மிக்கவன் , ஆனால்  வில்லனுக்கு  எந்தவித  பின்  புலமும்  இல்லை , ஆனால்  நாயகனை  பல  வருடங்கள்  மிரட்டிக்கொண்டே இருக்கிறான், அடியாட்களை   ரெடி  செய்து  வில்லனை  மிரட்டி  ஆதாரத்தைக்கைப்பற்றுவதில்  என்ன  தயக்கம் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   வசந்த  முல்லையும்  , மல்லிகையும் 

2   புவி  மேல்  மானமுடன்  பெண்ணாகப்பிறந்தாளே

3  கொட்டு  முரசே  கொட்டு  முரசே

4   அய்யா  சாமி  ஆவோ ஜி  சாமி \

5  துன்பம்  நேர்கையில்  யாழ்  எடுத்து \

6   என்ன  உலகமடா  இது , ஏழைக்கே  நரகமடா 

7  அரும்பு  போல்  மீசை  பார்த்து பார்த்து   கண்கள் இரண்டும் 

8   பூலோகம்தனைக்காண  வருவீர் \

9   படுத்துறங்கும்போது  அக்கம்  பக்கம்  யாரும்  இல்லை 

10   அழகு  நாடு  எங்கள்  நாடு  இது  எங்கள்  நாடு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  கமர்ஷியல்  ஆன  படம்  தான்  சி என்  அண்ணா துரையின்  எழுத்துக்கு  ரசிகர்களாக  இருப்பவர்கள்  பார்க்கலாம், போர்  அடிக்கவில்லை ,.  ரேட்டிங்  2.5 / 5 


Or Iravu
Poster
Directed byP. Neelakantan
Screenplay byC. N. Annadurai
P. Neelakantan
Based onOr Iravu
by C. N. Annadurai
Produced byA. V. Meiyappan
StarringK. R. Ramasamy
Lalitha
CinematographyS. Maruti Rao
Edited byK. Shankar
Music byR. Sudarsanam
Production
company
Release date
  • 11 April 1951
Running time
160 minutes
CountryIndia
LanguageTamil

Wednesday, July 26, 2023

VICHITRAM (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 மலையளத்தில்  விசித்திரம்  என்பதற்கு  வழக்கத்திற்கு மாறான  என்று  அர்த்தம் .   ஃபேமிலி  மெலோ  டிராமா  மாதிரி  படம்  ஆரம்பித்து  ஹார்ர்  திரில்லர்  மாதிரி  திரைக்கதை  பயணித்து  கடைசியில்  ரொமா்ண்டிக்  த்ரில்லர்  ஆக  முடியும் .  மாறுபட்ட  படம்  பார்க்கும்  ஆர்வலர்களுக்கு  இது ஒரு  வரப்பிரசாதம்


  ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஒரு  அம்மா  அவருக்கு  ஐந்து  மகன்கள் , ஐவரும்  வெட்டாஃபீஸ்கள் . அவங்களால  எந்தப்பிரயோஜனமும்  இல்லை , வீட்டு  வாடகை  உட்பட  எல்லா  செலவுகளையும்  அம்மாதான்  கவனிக்கறார். அம்மாவுக்கு  பர்த்டே  பார்ட்டிக்கு கேக்  வாங்கனும்னாக்கூட  அம்மா  கிட்டே  தான்  காசு  வாங்கறாங்க . 


 பனை மரம்  மாதிரி  வளர்ந்திருந்தாலும்  யாருக்கும்  பொறுப்புக்கிடையாது. அவங்க  குடி  இருக்கும்  வீட்டின்  ஓனர்  வாடகை  பெண்டிங் ஆகுது ,  வீட்டைக்காலி  பண்ணிடுங்க  என  கறாராகக்கூறுகிறார்.


 இந்த  சமயத்தில்  அந்த  அம்மாவின்   சகோதரன்   இறந்து  விடுகிறான் . அவன்  குடி  இருக்கும்  பங்களா  இப்போது  வெறுமையா  இருக்கு . அப்படியே  விட்டு  விட்டால்  பாழடைந்த  பங்களாவாகப்போய்  விடும்,  யாராவது  குடி இருந்தால்  புழக்காட்டம்  உள்ள  வீடாக  இருக்கும் என  சொந்தக்காரர்கள்  கருதுகிறார்கள் 


 வேறு  யாரும்  குடி  வராததற்குக்காரணம்  அந்த  வீட்டில்  பேய்  குடி  இருப்பதாக  வதந்தி  இருப்பதால் தான் . அம்மாவின்  சகோதரன்  உயிருடன்  இருந்த  போது  அவனது  மகள்   அந்த  வீட்டில்  தற்கொலை  செய்து  கொண்டார்  என  சிலரும்  , மகள்  யாரையோ  காதலித்ததால்  அது  பிடிக்காமல்  அப்பாவே  மகளைக்கொலை  செய்து  விட்டார்  என  சிலரும்  சொல்கிறார்கள் 


 ஆக  மொத்தம் அந்த  மகள்  அங்கே  ஆவியாக  நடமாடுவதாக   வதந்தி  பரவி  யாரும் அங்கே  குடி  வர  பயப்படுகிறார்கள் 


 இந்த  தருணத்தில்;  அந்த  அம்மாவும், ஐந்து  மகன்களும்  அந்த  பங்களாவில்  குடி  ஏறுகிறார்கள் . இதற்குப்பின்  அவர்களுக்கு  நிகழ்ந்த  திகிலான  அனுபவம் , அந்த  மகளின்  ஃபிளாஸ்பேக்  எல்லாம்  சொல்வதுதான்  படத்தின்  மீதிக்கதை 


 படத்தின்  நாயகி யாக  மகள்  மார்த்தாவாக  கனி  குஸ்ருதி  மாறுபட்ட  நடிப்பைத்தந்திருக்கிறார். அவரது  லிவ்விங்  பார்ட்னருடன்  காதல்  பார்வை  பார்க்கும்  இடங்கள்  எல்லாம்  கண்களே  நடித்து  முடித்து  விடுகின்றன . கொலை  செய்ய முயற்சிக்கும்  காட்சிகளில்  கண்களில்  வெறி  தாண்டவம்  ஆடுகிறது 


 அம்மாவின்  முதல்  மகனாக   ஷைன்  டாம்  சாக்கோ  நடித்திருக்கிறார் . ஆர்ப்பாட்டமான  நடிப்பு . இவர்தான்  வில்லனோ  என  கேட்கும்  அளவு  சில  இடங்களில்  முத்திரை  பதித்திருக்கிறார் 


 நாயகியின்  அப்பாவாக  அலெக்சாண்டர்  எனும்  கேரக்டரில்  லால்  சிறப்பான  நடிப்பு  சங்கமித்ரா  என்னும்  முக்கியமான  ரோலில்  கேடகி  நாராயணன்  நடித்திருக்கிறார் , அவர்  வரும்  காட்சிகள்  கவிதை 


அர்ஜூன்  பாலகிருஷ்ணனின்   ஒளிப்பதிவு  படத்துக்கு  மிக்க  உறுதுணையாக  இருக்கிறது  ஜூபைர்  மொகமத் , ஸ்ட்ரீட்  அகாடமிக்ஸ்  இருவரின்  பின்னணி  இசையும்  திகில்  ஊட்டுகின்றன 


நிகில்  ரவீந்திரனின் திரைக்கதையை   திறம்  பட  அச்சு  விஜயன்  இயக்கி இருக்கிறார்   


சபாஷ்  டைரக்டர்   ( அச்சு விஜயன் )

1`  அந்த  ஜோடி  முயல்களைக்காட்டும்போது  வரும்  திகில்  இசை  அதன்  பின்னணியில்  ஒரு சஸ்பென்ஸ்  இருப்பதைப்பறை  சாற்றி  விடுகிறது 


2   ஐவரில்  ஒருவரின்  கேர்ள்  ஃபிரண்ட்  வீட்டுக்கு  வந்து   செயின் பறிகொடுத்து  இந்த  வீட்டில்  ஒரு  பேய்  இருக்கு  என  பயந்தபடி  ஓடும்  காட்சி  கலக்கல்  ரகம் 


3   நாயகியின்  காதல்  காட்சிகள்  ஒரு  கவிதை  போல  சொல்லப்பட்ட  விதம் 

4   இது  பேய்க்கதை  இல்லை  என  க்ளைமாக்ஸில்  அழுத்தமாகப்பதித்த  விதம் 


 ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு  அஞ்சு பசங்க  இருந்து  என்ன  பிரயோஜனம், எல்லாம்  தண்டச்சோறுங்க , ஒரு  பொண்ணு  இருந்தா  எனக்கு  உறுதுணையா  இருந்திருக்கும் 


2  நமக்கு  வேண்டியவர்கள்  இறந்தாலும்  அவர்கள்  ஆன்மா  நம்மைச்சுற்றி  சில  காலம்  இருக்கும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  தான்  உயிருக்கு  உயிராக  காதலித்த  நபரைத்தன்   கண்  எதிரே  கொலை  செய்தவரைப்பார்த்து  கோபமே  கொள்ளாமல்  இருப்பது  எப்படி |  பழி  வாங்க  நினைக்காமல்  இருப்பது  ஏன் ? 


2  வீட்டில்  ஆட்கள்  யாரும்  இல்லாதபோது  தன்  கேர்ள்    ஃபிரண்டை  வீட்டுக்கு  அழைப்பதுதான்  உலக  வழக்கம்,  வீட்டில்  நான்கு  சகோதரர்கள்  இருக்கும்போது , அம்மாவுக்கும்  தெரியாமல் ஏன்  காதலியை  அழைத்து  வருகிறார் ? 


3  நாயகியின்  அப்பா  இறந்து  விட்டார்  என்ற  தகவல்  தான்  சொல்லபப்டுகிறது . அது  கொலையாக  இருக்கலாமோ என  நாம்  யூகிக்கக்கூட  இடம்  அளிக்க  வில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  கிளாமர்  காட்சிகள்  இல்லை , ஆனால்  மைனர்கள்  பார்க்கத்தேவை  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான  படம் , ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள் , க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்கள்  என  இரு  தரப்பையும்  திருப்திப்படுத்தும்  படம்  இது , ரேட்டிங்  3 / 5 


Vichithram
Vichithram movie first look poster.jpg
First look poster
Directed byAchu Vijayan
Written byNikhil Ravindran
StarringShine Tom Chacko
Balu Varghese
CinematographyArjun Balakrishnan
Edited byAchu Vijayan
Music byJubair Muhammed[1]
Street Academics
Production
company
Joy Movie Productions
Release date
  • 14 October 2022[2]
CountryIndia
LanguageMalayalam

Tuesday, July 25, 2023

நேற்று இன்று நாளை (1974) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா ) @ யூ ட்யூப்

 


வில்லன்  நடிகர்  எஸ்  ஏ  அசோகன்  எடுத்த  சொந்தப்படம்  இது பிரமாதமான  வெற்றிப்படம் . பழைய  கதை  தான் . டுயல்  ரோல்,  ஹிட்  சாங்க்ஸ்  மட்டுமே  அட்ராக்சன்  சப்ஜெக்ட்ஸ் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  பெரிய கோடீஸ்வரனின்  மகன், ஆனால்  அங்கே  வேலை  பார்க்கும்  இரு  பணியாட்கள்  சதியால் கோடீஸ்வரனின்  மனைவி  கொலை  செய்யப்படுகிறார். நகைகளைக்கொள்ளையடித்த  அந்த  வேலையாட்கள்  தப்பி ஓடுகின்றனர். கார்  டிரைவரும்  இறக்கிறார், குழந்தை  மட்டும்  தப்பிக்கிறது . அந்தக்குழந்தையை  ஒரு  விவசாயி  வளர்க்கிறார். கொலையாளீக்ள்  இருவரும்  வேறு   ஒரு  அனாதைக்குழந்தையைக்கொண்டு  வந்து  இதுதான்  உங்கள்  குழந்தை  என  பொய்  சொல்கிறார்கள் 


 காலம்  உருண்டோடுகிறது . நாயகன்  வளர்ந்து  பெரிய  ஆள்  ஆகிறான். நாயகனுக்குத்தன்  அப்பா  யார்  என  தெரியும் , ஆனால்  அப்பா  உண்மையான  மகன்   இவன்  தான்  என்பதை  நம்பவில்லை . நாயகன்  எப்படி  நம்ப  வைத்து  தன்  அப்பாவை  வில்லன்கள்  சூழ்ச்சியில்  இருந்து  காப்பாற்றுகிறான்  என்பதே  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  எம் ஜி ஆர்.  சூப்பர்  ஹிட்  பாடல்கள்  தான்  எம் ஜி ஆர்  படங்க்ஜளைப்பெரும்பாலும் காப்பாற்றுகின்றன  என்பதற்கு  இப்படமும்  ஒரு  உதாரணம். அரதப்பழசான  கதை , ஆனால்  இது 175  நாட்கள்  ஓடிய  வெற்றிப்படம்  என்றால்  நம்ப  முடியவில்லை 


நாயகி  ஆக மஞ்சுளா   சேரிப்பெண்ணாக  ஆனா  செக்கெச்செவேல்  என  வருகிறார்.   லதா  படத்தில்  நடிகை  ஆகவே  வருகிறார். ராஜஸ்ரீ  இன்னொரு  ஜோடி 


 எம் என்  நம்பியார்  , எஸ்  ஏ  அசோகன்  இருவரும்  தான்  வில்லன்கள் . அசோகன்  கெட்டப்  எல்லாம்  டிராமா  ஆள்  போல்  அப்பட்டமாகத்தெரிகிறது . நம்பியார்  ஓக்கே   ரகம் 


  சினிமா  நிருபர்  ஆக  வரும்  ஐசரி  வேலன்  காமெடி  டிராக்  சுமார்  ரகம் . தேங்காய்  சீனிவாசன், வி  கே  ராமசாமி  போன்ற  திரமைசாலிகள்  வீணடிக்கப்பட்டிருக்கிரார்கள் 

  படத்தில்  பெரிய  நட்சத்திரப்பட்டாளமே  இருக்கிறது 


 எம் எஸ்  விஸ்வநாதன் இசையில்  ஆறு  பாடல்கள்  , அவற்றில்  நான்கு  செம  ஹிட் 


154  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  செய்யப்பட்டு  இருக்கிறது 




சபாஷ்  டைரக்டர்  (  நீலகண்டன் )


1    டூயல்  ரோலை  வலுக்கட்டாயமாகத்திணித்திருந்தாலும்  சமாளித்த  விதம்  குட் 


2   அசோகனின்  சொந்தப்படம்  என்பதற்காக  அவரை  ஸ்பெஷலாகக்கவனிக்காமல்  கதைக்கு  என்ன  தேவையோ  அந்த  அளவு  மட்டும்  முக்கியத்துவம்  தந்தது 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பாடும்போது  நான்  தென்றல்  காற்று  பருவ  மங்கையோ  தென்னங்கீற்று 

2  தம்பி   நான்  படித்தேன்  காஞ்சியிலே    நேற்று , அதை  நான்  உனக்கு  சொல்லட்டுமா? இன்று ?

3   நீ  என்னென்ன  சொன்னாலும்    கவிதை   , நீ   எங்கெங்கு  தொட்டாலும்  இனிமை , நீ  என்னென்ன  செய்தாலும்  புதுமை 

4  இன்னொரு  வானம்  இன்னொரு  நிலவு 

5   அங்கே  வருவது  யாரோ 

6   நெருங்கி  நெருங்கி 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணக்காரர்  வீட்டில்  சமையல்காரர்களாக  இருப்பவர்கள்  ஒரு  கொலை  செய்ய  வரும்போது  அதே  யூனிஃபார்மிலா  வருவார்கள்?


2  வில்லன்களின்  டார்கெட்  நகைகளைக்கொள்ளை  அடிப்பது . அது  நடந்ததும்  அவர்கள்  வழியில்  செல்லாமல்  எஜமானி அம்மாவின்  குழந்தையைக்கொல்ல  ஏன்  முயல்கிறார்கள் ? 


3  குழந்தையை  ஆள்  மாறாட்டம்  செய்து  அப்பாவிடம்  தரும்போது  அப்பாவுக்கு  அடையாளம்  தெரியாதா?  முகத்தில்  காயம்  இருக்கு  என்ற  சால்ஜாப்  சொல்லப்பட்டாலும்  ஒரு  அப்பாவுக்கு  தன்  குழந்தை  அடையாளம்  தெரியாமல் போய்  விடுமா? 


4  விபத்தைக்கண்ணால்  கண்ட  சாட்சி  அந்த  இரு  வேலைக்காரர்கள் , அவர்களை  போலீஸ்  விசாரிக்காதா|?


5  குழந்தையைக்காப்பாற்றிய  நபர்  போலீஸ்  ஸ்டேஷனில்  போய்   தான்  கண்ட  விபத்தைப்பற்றி   வாக்கு  மூலம்  தர  மாட்டாரா ? 

6   சேரிப்பகுதியில்  குடிசையில்  வசிக்கும்  நாயகிக்கு  டல்  மெக்கப்  அல்லது  மேக்கப்  இல்லாமல்  காட்ட  மாட்டார்களா?  தக  தக  என  தங்கம்  மாதிரி  மின்றாரே? 

7    அப்பா , மகன்  இருவரும்  ஒரே  முகச்சாயலில்  இருக்கும்போதும்  அப்பாவுக்கு  மகனை  அடையாளம்  தெரியாதா?  போலி  மகனை  எப்படி  நம்புகிறார்?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பாடல்கள்  ஹிட்  என்பதற்காகப்பார்க்கலாம்,  மற்றபடி  சுமார்  ரகப்படம்  தான் . 175  நாட்கள்  ஓடிய  அளவுக்கு ஒர்த்  இல்லாத  படம்  . ரேட்டிங்  2.25 / 5 


Netru Indru Naalai
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்பி.நீலகண்டன்
எழுதியவர்சொர்ணம் (உரையாடல்கள்)
மூலம் கதைநெல்லை வெங்கடாசலம்
உற்பத்திஎஸ்.ஏ.அசோகன்
நடிக்கிறார்கள்எம்.ஜி.ராமச்சந்திரன்
மஞ்சுள
லதா
ஒளிப்பதிவுஅ.சண்முகம்
அமிர்தம்
திருத்தியவர்ஆர்.செபாஸ்டியன்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
அமல்ராஜ் பிலிம்ஸ்
வெளிவரும் தேதி
  • 12 ஜூலை 1974
நேரம் இயங்கும்
154 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்