Thursday, January 28, 2016

உலக மகா வாயாடி யார் தெரியுமா?

1  டியர்.பொங்கலுக்கு ஒருவாரம் எங்கம்மா வீட்ல இருந்துட்டு வரவா?


ஒரு மாசம் வேணாலும் இரு.ஆனா கிளம்பும்போது ஒரு மெசேஜ் அனுப்பிடு.


==============

2 எனக்கு கோவை தமிழ் அவ்ளோ பேச வராது.


பாவை தமிழ் எப்டி இருந்தாலும் அவை ரசிக்கப்படும்.டோன்ட் ஒர்ரி


============

3 டியர்.நேத்து நைட் என் கனவில் என் மடில படுத்துத்தூங்கிட்டு இருந்தீங்க.


அப்டியா? தூங்காதே தம்பி தூங்காதேன்னு பாடி எழுப்பி விட்டிருக்கலாமில்ல?


==============

4 டியர்.நீ கட்சி சார்பற்ற ஆள் தானே?,எதுக்கு நெத்தில இரட்டை இலை பொட்டு?


கடைல போய் ஸ்டிக்கர் பொட்டு கேட்டேன்.இதை வெச்சு விட்டுட்டான்=========


5 டியர்.உங்க மேல் கோவப்படுவது போல் நடிச்சனே ?எப்படி என் நடிப்பு?


நமக்குத்தான் படிப்பும் வர்ல ,நடிப்பும் வர்லயே.எதுக்கு இந்த விஷப்பரீட்சை?

================

6 டாக்டர்! நா நல்லாதான் இருக்கேன்,ஆனா டக்குனு மனசு டவுனாகுது, எதனால?

6 மணி ஆனா லேடீஸ் ஸ்டாஃப்ஸ் எல்லாம் வீட்டுக்கிக்கிளம்பிட்டா அப்டி ஆகும்

================

7 டெய்லி 200 ரூபாய்க்குக்குடிக்கறே,ஆனா உன் தினக்கூலியே அவ்ளவ் தான், ஏன் இப்டி?சம்பளம் வாங்குனதும் முழுசா அது அம்மா கைக்குப்போய்டனும்னாருடாடி

==================

8  தலைவரே! கூட்டணிக்கு அவர் வரனும்னா 500 கோடி ரூபா வேணுமாம்

அடேங்கப்பா, அதை சம்பாதிக்க கழகம் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்?கண்டுக்காம விட்ருவோம்


=================

9  சிஷ்யா! ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டால்  விரைவில் கீர்த்தி பெறுவாய்!

 குருவே! அதுக்கு கீர்த்தியோட அப்பா சுரேஷ் ஒத்துக்குவாரா? ( ரஜினி முருகன் நாயகி கீர்த்தி சுரேஷ்)


================
10  டியர், என்னை லவ் பண்ணிட்டு அப்புறம் முதுகில் குத்திட மாட்டீங்களே?

எனக்கென்னவோ உங்கப்பாதான் என் முதுகுல , நெஞ்சுல எல்லாம் குத்துவார்னு தோணுது


================


11  உங்களுக்கு கவிதை பிடிக்கும்னா  என் ஃபேவரைட்ஸ் பாருங்க


 ஓஹோ, அப்போ உங்களையே பிடிச்சிருந்தா உங்க அம்மாவை அப்பாவை வந்து பார்க்கலாமா?


================

12  உலக மகா வாயாடி யார் தெரியுமா?


காதலன் லிப் கிஸ் தரும்போது கூட ஏதாவது பேசிக்கொண்டே இருப்பவரே!============


13 டாக்டர்,நாய் துரத்தறாப்ல கனவு டெய்லி வருது.இதுக்கு என்ன பலன்?

 பைரவன் கற பெருல எவனோ உங்களை டெய்லி துரத்தப்போறான்னு தோணுது


=================

14   டாக்டர்.ஆபீஸ் ல FILE அடுக்கும்போது கைல அடிபட்டு ரத்தம் கொட்டுது.எதனால?

ஏம்மா.முதல்ல உங்க PROFILE ஸ
செக் பண்ணனும்.அதெப்டி அப்டி வரும்?


===========

15 இன்ஸ்பெக்டர்.என் காதலர் அர்ஜென்ட்டா டொனேசன் வேணும்னு கேட்கறார்.

ஏம்மா.குடுக்க வேண்டியதுதானே?

அவரு டொனேசனா கேட்டது என் கற்பை

=========


16 மாப்ளை.போட்டோவே தேவை இல்லை.பொண்ணு மகா லட்சுமி மாதிரி இருப்பா.

பரவால்லை, எதுக்கும் ஒரு டைம் ஃபோட்டோ
காட்டிடுங்க.வரலட்சுமி ,லட்சுமிமேனன் ,லட்சுமிராய் மாதிரி இருந்துடப்போகுது

==============

17 பொண்ணு ஒல்லியா இருக்கும்னீங்க?குண்டா இருக்கு.?

இவ்ளோவ் பக்கத்துல நின்னு பார்க்கக்கூடாது.2 கிமீ லாங்க் ஷாட் ல பார்த்தா ஒல்லி

=============
18 லிமிடட் மீல்ஸ் =50 ரூபா.அன்லிமிடெட் =70 ரூபா

ஓஹோ.அன் லிமிடெட் மீல்ஸ் பார்சல் கட்டுங்க.ஆனா அன்லிமிட்டெட்க்கு அளவு எவ்ளோவ்? காட்டுங்க


============

19 டியர், நீங்க  என் கிட்டே சேட்டிங் பண்ண  வராததால  காலைல டிஃபன் எதுவும் சாப்பிடலை

ஓஹோ, வெஜ்டபிள் ஃபிரைடு ரைஸ்  சாப்ட்டியா?


===================


20  மிஸ்! உங்க மேரேஜ் எப்போ?

 அவ்வ், அதுக்கு இன்னும் பல வருசம் இருக்கு

 ஹலோ, 60ம் கல்யாணம் எப்போ?ன்னு கேட்கலை.முதல் கல்யாணம் எப்போ?


=========================

0 comments: