Monday, June 30, 2014

செம சண்டை = 1 ட்விட்டர் ? , 2 ஃபேஸ் புக் 3 சத்தியமூர்த்தி பவனில் ?


1. நடிகை பிரியாஆனந்த் இசையமைப்பாளர் அனிரூத் காதல்,புது கிசுகிசு # இவர் டைரில ஒரு லிஸ்ட்டே இருக்கும் போல , கலக்கல் இசைஅமைப்பாளர்யா========================


2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி# இப்பவே அவனவன் ஒரு சின்ன வீடு வெச்சு தான் இருக்கான், அரசு சார்பில் இன்னொண்ணா?===================
தமிழக மின்திட்டங்கள் தொடர்பான வினாக்களுக்கு ஜெ பதில் அளிப்பாரா?- ராமதாஸ் # கவுரவக்கொலை, ஜாதி வெறி பற்றிய வினாக்களுக்கு நீங்க விடை தருவீரா?
==================
எந்தவொரு முன்னேற்றத்திற்கும், ஒரு சிறிய அடி தான் முதற்படி: லோக்சபாவில் மோடி  # அர்விந்த் கேஜ்ரிவால் கன்னத்தில் வாங்குன அடியை சொல்றாரா?
=================
சத்தியமூர்த்தி பவனில் சண்டையில்லை! - ஞானதேசிகன்  # போங்கய்யா யோவ், இங்கே ட்விட்டர் , ஃபேஸ் புக் வந்து பாருங்க , செம சண்டை 
=================
6 அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை தந்தை விளக்கம் # எதுவுமே நடக்காத மாதிரி யே எல்லாரும் அடிச்சு விடுவாங்க பாருங்க======================


8  இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது -நத்தம் விஸ்வநாதன் # நீங்க சொல்லி முடிச்சதும் போயிடுச்சுங்க்ணா.இட்ஸ்கான்


======================


 9 மோடி எனக்கு கால் செய்யவில்லை -மனுஷ்யபுத்திரன் # மோடியா இருந்தாலும் ,லேடியா இருந்தாலும் நாமதான் கால் பண்ணனும்


=======================


10 சென்னையில் இன்று விஜய் – அமலாபால் திருமணம். # அமலா பால் ரசிகர்கள் ல எத்தனை பேரு இன்னைக்கு நைட் தூங்காம இருக்காங்க்ளோ?   12 6 14 )


==============================


11  நாட்டிலேயே உ.பி.யில்தான் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது: அகிலேஷ் யாதவ் # அதனாலதான் அடிக்கடி ரேப் நடக்குதா?


================


12 மின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' -கருணாநிதி # அப்போ 2 ஜி யில் கழகத்துக்கு தொடர்பில்லைனு சொன்னது பொய்?


===============13 ஒருத்தரைப் பத்தி அவங்க கிட்ட பாராட்டாம, அடுத்தவங்க கிட்ட பாராட்டறது தான் கமல்ஹாசனோட பாணி - ரோகிணி # ரொம்ப கிட்டே போய் பாராட்டிடுவாரா?


==============


14  இந்திராகாந்தியைப் போல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மோடி -செய்தி # அப்போ நெருக்கடி நிலைமை கன்ஃபர்ம்?


==============

15  பிரபுதேவா (என குத்திய டாட்டுவை) பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்கிறார் நயன்தாரா! -செய்தி # நல்ல வேளை.சிம்பு பேரை பச்சை குத்தலை===================


16 3 படங்களில் மாறி மாறி நடிக்கும் நயன்தாரா..- செய்தி # 3 ஹீரோ கூட மாறி மாறி டூயட் பாடனும்.ஐ ஜாலி னு நினைச்சிருப்பார்


===================


17 பிரதமராகியும் மோடி, பிரசார மனநிலையிலேயே இருக்கிறார்: காங்கிரஸ் கேலி || மரண அடி.வாங்கியபின்னும் வலிக்காத மாதிரியே நீங்க நடிக்கலையா?


===============


18 காங்கிரஸ் இழந்த பெருமையை மீண்டும் மீட்டேதீருவேன்: சோனியா காந்தி...# வீணையா ?,ஈசியா மீட்ட?


=================


19 எதிரிகள் பழிவாங்கிவிட்டனர்: கரகாட்டக்காரி மோகனாம்பாள் ஆவேசம்.. # பின்னே எதிரின்னா ஹார்லிக்ஸ் போட்டுத்தருவானா?,நல்லா சொல்றீங்க டீட்டெய்லு==================


20 மனைவியின் விருப்பமில்லாமல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகாது: நீதிமன்றத் தீர்ப்பு || # ஜட்ஜ் அய்யா வீட்லயும் ஒத்துழையாமை பிரச்னை போல


====================

ஜிகர்தண்டா 'ஏ டர்ட்டி கார்னிவல்' என்ற கொரியப்படத்தின் காப்பியா?

 

 

ஜிகிர்தண்டா வெளியாவதில் தாமதம் ஏன்?

Why Jigardhanda release is delay?
பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி உள்ள படம் 'ஜிகிர்தண்டா'. இதில் சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ளனர். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இதற்கு காரணம் தணிக்கை குழு வழங்கியிருக்கும் யு/ஏ சான்றிதழ். பீட்சா என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் இயக்கிய படம், ராசியான நடிகை என்ற இமேஜ் ஏற்பட்டிருக்கிற லட்சுமிமேனன் நடித்த படம், தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிற சித்தார்த் நடித்த படம், இத்தனை பாசிட்டிவான விஷயங்கள் படத்திற்கு இருப்பதால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் நல்ல விலை கொடுத்து படத்தை வாங்கினர். 
தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் படத்திற்கு வரிவிலக்கு கோர முடியாது. வரிவிலக்கு இல்லாவிட்டால் வசூலில் 30 சதவிகித்தை வரியாக கட்ட வேண்டும். இதனால் அந்த 30 சதவிகிதத்தை படத்தின் விலையில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று படத்தை வாங்கியவர்கள் தயாரிப்பாளர்களிடம் கேட்கிறார்களாம்.

படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் யூ சான்றிதழ் தருவதாக தணிக்கை குழு கூறியுள்ளது. அந்த காட்சியை நீக்குமாறு தயாரிப்பாளர் இயக்குனரை கேட்டிருக்கிறார். இயக்குனரோ அந்த காட்சிகள் முக்கியமானவை அதை நீக்கினால் படத்தின் ஜீவனே போய்விடும் என்று கூறி நீக்க மறுத்துவிட்டாராம். இந்த கருத்து வேறுபாடால்தான் படம் வெளிவராமல் தாமதமாகிறாம்.

சித்தார்த் நடிக்கும் ஜிகர்தண்டா 'ஏ டர்ட்டி கார்னிவல்' என்ற கொரியப்படத்தின் காப்பியாமே?

Is Jigarthanda copy of Korean Movie.?
பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இரண்டாவது படம் ஜிகர்தண்டா. சித்தார்த், லட்சுமிமேனன் நடிக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில்...'ஜிகர்தண்டா' தென்கொரியத்திரைப்படத்திலிருந்து திருடப்பட்ட கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜிகர்தண்டா படம் விரைவில் வெளியாகவிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2006 ஆம் ஆண்டு, யூ ஹா என்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளியாகி, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம் 'ஏ டர்ட்டி கார்னிவல்'. இந்த திரைப்படத்தின் கதையை சுட்டுத்தான் 'ஜிகர்தண்டா' என்ற பெயரில் படமாக எடுத்திருக்கிறாராம் கார்த்திக் சுப்பாராஜ்.

'ஜிகர்தண்டா' படத்தின் கதை என்ன?

நகரத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான் மிகப்பெரிய தாதா ஒருவன். தாதாவின் முக்கிய அடியாட்களை போட்டுத்தள்ளிவிட்டு குறுக்குவழியில் தாதாவின் தளபதியாகிவிடுகிற ஹீரோ, நாளடைவில் அவனும் மிகப்பெரிய தாதாவாகிறான். அவனது பள்ளிக்கூடத்தோழன் ஒருவன் சினிமா டைரக்டராக முயற்சி செய்பவன். ரௌடிகளின் வாழ்க்கையை வைத்து தன்னுடைய முதல் படத்தை எடுக்க நினைத்து தன் பள்ளி நண்பனும், ரௌடியுமான ஹீரோவை அணுகுகிறான். அவனின் வாயாலேயே ரௌடியிஸத்தைப் பற்றிய உண்மைத்தகவல்களை பெறுகிறான்.

இதற்கிடையில் பள்ளிக் கூடத்தில் படித்தபோது சக மாணவி மீது ஹீரோவுக்கு மயக்கம் இருந்தது. அவளை ஹீரோவுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவள் மீதுள்ள காதலில் தங்களின் ரௌடியிஸம் குறித்த தகவல்களை ஒளிவுமறைவில்லாமல் சொல்கிறான். அந்த தகவல்களை வைத்து படம் இயக்குகிறாள் நண்பன். தன்னைப்பற்றிய ரகசியங்கள் அனைத்தும் படத்தில் எப்படி வந்தது? என்று வில்லன் விசாரிக்கிறான். அந்த புதுமுக இயக்குநரிடம் விசாரிக்கும்போது உண்மை தெரிகிறது. தன் விசுவாச தளபதியான ஹீரோதான் இத்தனைக்கும் காரணம் என்று...

அப்புறம்? 'ஏ டர்ட்டி கார்னிவல்' (A dirty carnival) தென் கொரியப் படத்தின் டிவிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்க பாஸ். கார்த்திக் சுப்பாராஜ் எப்பேற்பட்ட ஆளுன்னு புரியும்.
thanx - dinamalar
jigarthanda movie is fully entertainment says karthick subburaj
பீட்சாவை விட ஜிகர்தண்டா ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று அப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பீட்சா படத்தின் மூலம் மக்களிடம் பாராட்டை அள்ளிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படமாக ஜிகர்தண்டா என்ற படத்தை எடுத்துள்ளார்.

ஜிகர்தண்டா படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, பீட்சாவில் பயம் மட்டுமே இருக்கும். ஆனால், ஜிகர்தண்டா முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். பீட்சாவை விட இந்த படத்தில் ஸ்க்ரிப்ட் நாலு மடங்கு வேகமாக இருக்கும். இது வழக்கமான மதுரை படங்கள் மாதிரி இல்லாமல், விஷூவல், இசை, வசனங்கள்னு அனைத்துமே வேற மாதிரி இருக்கும். சித்தார்த்துக்கு இந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. இது வழக்கமான சாக்லேட் பாய் கதை இல்லை. நிறைய சவால்களை ஜஸ்ட் லைக் தட் சாதிக்கிற செம கேரக்டர். பீட்சாவை ஒரு வீட்டுக்குள்ளேயே வெச்சு முடிச்சுட்டோம். ஆனா, இந்த படம் முழுக்க அவுட்டோர். ஏகப்பட்ட பிரபலங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றார்.


thanx - dinamalar