Monday, September 30, 2013

சந்தானம் காமெடி பஞ்ச்சஸ் @ ராஜா ராணி

 

1. பேட்டரியே நிக்காத செல்லுக்கு டூயல் சிம்மு!


2 அவங்கப்பன் நெறைய டிவி சீரியல் பாப்பான் போல அதுல வர மாதிரியே பேசுறான்3 மேரேஜ் ஆன பொண்ணுங்க விட்டுக்குடுத்து போகல பசங்க துட்டுகுடுத்து போயிடுவாங்க!


4 பேருதான் காராசேவ் ஆனா அத சேவ் பண்ண ஆள் இல்லையே


5 சில நேரத்தில ஆம்பளைங்க எடுக்கிற முடிவு கூட சரியா இருக்கும்


6 டேய் , ஜானைக்காணோம்

அவனைக்காணோம்னா அவனைப்போய்த்தேடுடா , என் கிட்டே ஏன் வந்தே?7 ஒயின் ஷாப் போலாமா?

நான் ஒரு பீர் தான் அடிப்பேன்

செருப்பாலயே அடிப்பேன் , நாம போறது அவனைத்தேட8 சின்ன வயசுலயே ஜெகன் மோகினி படத்தை நாங்க பேய்ப்படம்மாதிரி பார்ப்போம், நீ ஜெயமாலினியைப்பார்த்தவன் தானே ?


9 அம்பது லட்சம் ரூபா செலவு பண்ணி மேரேஜ் பண்ணி வெச்சா அங்கே போய் வேலை செய்யாம ஐயாயிரம் ரூபா இன்க்ரீமெண்ட்டுக்காக ஆஃபீஸ் வந்து இங்கே வேலை செஞ்சுட்டு இருகான் ராஸ்கல்10 இங்கே வந்து நைட் ஷிஃப்ட் பார்க்கறியே , வீட்ல உனக்குப்பதிலா வேற யாராவது வந்து நைட் ஷிஃப்ட் பார்த்துடப்போறான்11 ஹனிமூன் எனக்கு ஆகலை , நீங்க ஃபிரீயா மிஸ் ?12 மேடம் , (என் தலை வழுக்கைன்னு சொல்லிக்காட்ட ) கிரவுண்ட் காலியாத்தானே இருக்கு , கிரிக்கெட் விளையாடலாமா?னு கூப்பிடறான்13 மிஸ் , காரசேவ் சாப்பிடறீங்களா?


ச்சே ச்சே எனக்கு பிடிக்காது


இந்த மூஞ்சிக்கே உன்னைப்பிடிக்கலையே .. ....14 டேய் , நீ ஆம்ப்ளையா இருந்தா நேர்ல வா

மிஸ் , நீங்க ஆம்பளையா இருந்தா வாங்க15 மிஸ் டர் , கஸ்டமர் கேர்னா என்ன அர்த்தம் ?


வாடிக்கையாளர் சேவை மையம்

ஓக்கே , எனக்கு நச்னு 4 கஸ்டம்ர் அரேஞ்ச் பண்ணிக்குடு


அய்யோ , அக்கா நாங்க அந்த மாதிரி ஆள் இல்லீங்கக்கா16 அவன் ரொம்ப பயந்தவனுங்க


ஓஹோ , அப்போ நீ தைரிய சாலியா?


நான் அவனை விட பயந்தவனுங்க ஹி ஹி17 யோவ் , ஆம்ப்ளைங்க அழக்கூடாது நான் ஒண்ணும் அழலையே , கண் வேர்க்குது அவ்ளவ் தான்18 டேய் ,. ஒவ்வொரு டைமும் மூடிட்டுப்போன்னு சொன்னாத்தான் மூடிட்டுப்போவியா?

யக்கா , கண்டிப்பா மூடிட்டுப்போறேனுங்க19 மிஸ் , உங்க வாய்ஸ் சோ க்யூட்


யோவ் , நான் ஆம்பளை20 நாம 2 பேரும் மேடு ஃபார் ஈச் அதரா?

உலகத்துல யாருமே பிறக்கும்போதே மேடு ஃபார் ஈச் அதரா பிறப்பதில்லை 

21 நம்ம கூட இருக்கறவங்க நம்மை விட்டுப்போயிட்டா நாமளும் போய்டனும்னு அவசியம் இல்லை


22 வாட்ங்கற ஒரு வார்த்தையை வெச்சு எங்களை வாட்டி எடுத்துட்டான்23 சார் , எதிர் வீட்டு ஆண்ட்டி சேனைக்கிழங்கு வாங்கிட்டு வரச்சொன்னாங்க , பர்மிஷன் அல்லது லீவ் கொடுத்தா போய்ட்டு வந்துடுவேன்24 யாரும் இந்த அசிங்கத்தை பார்த்துடலையே?


280 பேர் மட்டும் பார்த்தாங்க25 டேய் , ஏன் இவ்ளவ் சந்தோஷமா இருக்கே? உன் பொண்ட்டாட்டியைக்கொன்னுட்டியா?26 அய்யோ , ஃபிளாட்டோட செகரெட்டரி பார்த்துட்டாரு

அவன் கிடக்கான் , அவன் வீட்டுக்குள்ளே இன்னொரு ஆஃபீஸ் செகரெட்டரியை வெச்சிருக்கான் தெரியுமா?27 மல்லிகைப்பூ வாங்கிட்டு உன்னைப்பார்க்க வீட்டுக்கு வர வேண்டியவன் சரக்கு வாங்கிட்டு என்னைப்பார்க்க வரான் 


28 ஆல் பியூட்டி பார்லர்ஸ் ஒன் மன் த் லீவ் விட்டுட்டா எது எது ஒரிஜினல் அழகுன்னு தெரிஞ்சுடும் , எல்லாம் மேக்கப் 29 ஃபிகருக்காக நாம அடிச்சுக்கக்கூடாது , ஆனா ஃபிரண்ட்சுக்காக அடிச்சுக்கலாம் 


30 டேய் , நீ எல்லாம் குடும்பம் நடத்திப்பாரு , எவ்ளவ் செலவு ஆகுதுன்னு அப்போத்தான் தெரியும்  டாடி , நீயும் ஃபிரண்ட்ஸ் கூட சினிமாவுக்குப்போய்ப்பாரு , அப்போத்தான் எவ்ளவ் செலவு ஆகும்னு உனக்குத்தெரியும் 31 இந்தப்பொண்ணுங்க வீட்டுக்குப்போய் பார்த்தாத்தான் தெரியும் அவங்க ஆடும் ஆட்டம், அட்டர் டைம்ல அஞ்சு சாவு விழுந்த மாதிரி என்னமா ஆடறாங்க ? 


32 உன் சித்தப்பா வீட்ல என்ன கூட்டம் ? அவமானம் தாங்க முடியாம தூக்கு போட்டு செத்திருப்பாரா?  

அந்த நாய் அப்படி எல்லாம் பண்ண மாட்டானே? 33 ஆஃபீஸ் அட்ரஸ் , பேரு எல்லாம் தந்தா நான் ஃபிரீயா இருக்கும்போது உங்களை வந்து பார்ப்பேன்


மச்சி , நீ எப்பவும் ஃபிரியாத்தானே இருப்பே?34 நைட் பேசி முடிச்சுடுறேன்

நீ ( அவளை ) முடிச்சுடுவேன்னு தெரியும் , பேசிட்டியா? 35 இத்தனை பேரு இருக்கீங்க , இதுல யாரு ஜான் ?

எல்லாரையும் விட ஒரு ஜான் உயரமா இருக்கானே அவன் தான் ஜான்36 என் கிட்டே இல்லாதது அந்த நாய் கிட்டே என்ன இருக்கு ? முதல்ல அந்த நாயை கரெக்ட் பண்ணனும்


37 பூஷனா? புருஷனா>?


2ம் 1 தான் , எத்தனை செல்வ ராகவன் படம் பார்த்திருக்கேன்


38 அடி வாங்கவே ஆன் த வே வந்துட்டு இருக்கான் பா39 டேய் இரு இரு , அவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றான்


40 டேய் நான் என்ன குடிகாரனா> ?

பின்னே ? குல்பி ஐஸ்காரனா? 

41 ஒரு பொண்ணு அழுதா யாரோ ஏமாறப்போறாங்கன்னு அர்த்தம் , ஒரு பையன் அழுதா அவனை ஒரு பொண்ணு ஏமாத்திடுச்சுன்னு அர்த்தம்42 சும்மாவே அவ பிரதர் பிரதர்னு கூப்பிட்டு வெறுப்பேத்துவா , அடுத்து ஃபாதர்னு கூப்பிடப்போறானு பயமா இருக்கு 


43. லவ் பெயிலிருக்கு அப்பறம் லைப்'பே இல்லைனா 25வயசுக்கு மேல எவனும் இங்க உயிரோடவே இருக்க மாட்டான்!44 ஊருக்கே பருப்ப இருந்தாலும்,வீட்டுக்கு துடப்பக்கட்டதான்45 நீ என்னிக்கு லவ்வ சொல்றியோ அன்னில இருந்து உன் லைஃப் ஸ்டார்ட் ஆயிரும்.46 லவ்க்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சானா லவ் பெயிலியர் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சானா லைப்பே பெயிலியர்47 டேய் மாப்ளை , என்னடா புது நெம்பர்ல இருந்து கூப்பிடறே? 

என் நெம்பர்ல இருந்து கூப்பிட்டாத்தான் எடுக்க மாட்டேங்கறியேடா ? 48 சார் , என்ன சார் இப்படிச்சொல்லீட்டீங்க, உங்க மூஞ்சியைப்பயன் படுத்தி முந்நூறு குழந்தைகளூக்கு சோறு ஊட்டலாமே? 49. இது தான் நம்ம ஃபேவரை ட் ஐட்டம் 


எதை? இந்த வேலைக்காரியயா சொல்றீங்க?


50 மொட்டை வில்லன் - இந்த மண்டைக்கு படிப்பு ஏறலைங்க 

இந்த மண்டைல பேனே ஏறாது , படிப்பு மட்டும் எப்படி ஏறும் ? 

 

 டிஸ்கி 1 -

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2 -

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்டிஸ்கி 3  - டைட்டிலில் சந்தானம் பஞ்ச் என இருந்தாலும்  இது படத்தில் வரும் மற்ற ரசிக்கும் வசனங்களையும்  உள்ளடக்கியது  

தனுஷ் - நய்யாண்டி ல சிம்புவை வம்புக்கு இழுத்தாரா? ஒரு வெட்டி ஆராய்ச்சி

இனிய காலை வணக்கம் நண்பர்களே...


1.உங்க சிரிப்பு நல்லாருக்கு.ஆனா சில டைம் அது ஓவரோன்னு தோணும்.
ம்.உன் உதடு கூட நல்லாருக்கு.ஆனா வாய் நீளமோன்னு தோணும்.நான் ஏதாவது சொன்னேனா?

--------------------

2.மரண தேதி குறிக்கப்பட்டதும் மரணத்துக்கான காத்திருத்தலுமே பெரும் தண்டனை

-------------------

3.தமிழ் தெரியாத இங்க்லீஷ்காரன் கிட்டே தமிழ் பேசுவியா? மாட்டே இல்ல.இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே மட்டும் ஏன் பீட்டர் இங்க்லீஷல பேசறே?

-----------------------

4.டாக்டர்.எனக்கு காமாலை வந்திருக்கு. ம்.எதுக்கு காலைலயே வந்துட்டீங்க? சாயங்காலம் வாங்க # கா மாலை

-----------------------

5.சூரத் ல சொந்தக்காரங்க இருந்துட்டா ரொம்ப சவுகர்யம்.வீட்ல சூரத் புடவை பீரோ ன்னு தனியா ஒதுக்கிடலாம்

---------------------


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மருத்துவர்.விஜய் மற்றும் இடது ஓரத்தில் இருக்கும் அக்கா ரியாக்சன்:

"எனது ஆட்சியில்தான் திரைத்துறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள்" மேடம். ஜெ.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மருத்துவர்.விஜய் மற்றும் இடது ஓரத்தில் இருக்கும் அக்கா ரியாக்சன்:
 
"எனது ஆட்சியில்தான் திரைத்துறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள்" மேடம். ஜெ.


6.காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தெரியும் ,காய்ஞ்சு கிடக்கும் காளைகளுக்கு கண்டதெல்லாம் மஞ்சமா மஞ்சுளாவாத்தெரியும்

----------------------

7.தொப்பை வராம இருக்க தினமும் 4 கிமீ வாக்கிங் போகனும்.கடன் காரன் நம்மை பிடிக்க வந்தா ரன்னிங் போகனும்.பிகர் எதிரே வந்தா ஜாகிங் போகனும்

------------------------

8.உலக மகா அப்பாவி யார்னா ஒயின் ஷாப் ல போய் வெர் ஜின் கிடைக்குமா? னு தேடுபவன்

-------------------------

9.everything fine. = எல்லாமே அபராதத்துலதான் போய்க்கிட்டு இருக்கு.

-----------------------

10.பஸ் ல ஸ்டேண்டிங் ல வர்ற ஒரு லேடி மணிபர்சை கைல எடுத்துக்கிட்டு ஹேன்ட் பேக் கை என் கிட்டே கொடுக்குது.பெருத்த அவமானம்

-----------------------இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே.....
என்னப்பா ஹேங் ஓவர் எல்லாம் மாறிடுச்சா ? இல்ல மறுபடியும் கிளம்பியாச்ச ? ஞாயிறு ஆச்சே அதான் கேட்டேன் ஹி ஹி...

இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே.....

11.5 முழம் ஜாதி மல்லிகை வெச்ச பொஞ்சாதி பஸ் ல தன் புருசன் கூட செம சண்டை போட்டுட்டுப்போவுது.பிரிட்ஜ்க்குத்தான் அந்தப்பூ போகப்போகுது

--------------------------

12.இயற்கை அழகு கொஞ்சும் காட்டுக்குள்ள போய் இருந்துட்டு வந்தா fresh ஆயிரும் மனசு.cot டு வாழ்க்கைல fresh ஆகும் உடம்பு

-------------------- 

13. டைரக்டர் சார்.உங்க படம் எவ்ளவ் நீளம்? ஹி ஹி படம் பூரா நீலம் தான்-------------------


14   தனுஷ் - நய்யாண்டி ல டெடி பியர்னு ஒரு பாட்டு பாடி இருக்கேன்.சிம்பு - என்னை நக்கல் பண்ணுனா பொறுத்துக்குவேன்.எங்கப்பாவை கிண்டல் பண்ணினா ..----------------------------


15  சீன ராணுவம் இந்திய எல்லையில் எதுக்கு வந்தாங்க?ராணுவ அமைச்சர் - சைனா மொபைல் ல டவர் எடுக்கலை.இந்தியாவுல தான் புல் டவர் கிடைக்குதாம்------------------------"எனது ஆட்சியில்தான் திரைத்துறையினர் சுதந்திரமாக இருக்கிறார்கள்" மேடம். ஜெ."

இதுக்கு நீங்க ஜெயா டிவில நாலும், ஜெயா மக்ஸ்ல அஞ்சு சானலும் திறந்து ஊருக்குள்ள ஓட விட்ருக்கலாம்..


16   டியர்.நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.மேரேஜ் வரை தொடாதீங்க.
சரி.தொடலை.அந்த மாதிரி பொண்ணுங்கன்னா யாரு? மீ அப்பாவி------------------------

17 .விஜய் டான்ஸ் ல படத்துக்கு படம் வெரைட்டி காண்பிக்க மெனக்கெடனும்.அஜித் நடைல அப்டி எதுவும் தேவை இல்லை

----------------------

18 .சர்வாதிகார எண்ணம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது-விஜயகாந்த்# கோர்ட்டுக்கு வரச்சொல்லி வெத்தலை பாக்கா வெச்சு அழைப்பாங்க?பிடிவாரன்ட்தான்

------------------------------

19 .நாத்திகர்கள் கோவில் சொத்துகள உபயோகப்படுத்த முடியாது:- சட்ட திருத்தம் #தமழ் இனத்தலைவர் ஏதாவது ஆல்ட்டர்நேட்டிவ் ஐடியா வெச்சிருப்பாரு்

--------------------------

20 .ரூ.6 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால் கார் லோன் கிடையாது: SBI அதிரடி# பெட்ரோல் லோனாவது குடுப்பீங்களா?--------------------------------Harry Shanth's photo.


Sunday, September 29, 2013

6 மெழுகுவர்த்திகள்' -, ஷாம் INTERVIEW @ THE HINDU TAMIL


விக்ரம் தான் எனக்கு ரோல் மாடல்! 

“சார். எங்களோட ரெண்டரை வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி. படம் முடிஞ்சதும் மக்கள் எழுந்து நின்னு கைதட்டுறது தான். என்னோட சினிமா நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் எல்லாரும் படத்துல என் நடிப்பை பார்த்து பாராட்டினாங்க” என ஷாமிடமிருந்து அருவி போல் கொட்டுகிறது வார்த்தைகள். பேச்சில் அவ்வளவு சந்தோஷம். '6 மெழுகுவர்த்திகள்' படத்திற்கு கிடைத்த வெற்றி, சக நடிகர்கள், ஏற்ற இறக்கத்திலிருக்கும் திரையுலக பயணம், ஆர்யாவுடனான நட்பு என நீண்ட உரையாடல்களிலிருந்து..


மொதல் படமே ரெண்டு உச்சகட்ட ஹீரோயின்ஸ்... ( சிம்ரன், ஜோதிகா). ரொம்ப வித்தியாசமான கதைன்னு பரபரன்னு உள்ள வந்தீங்க.. அப்பறம் கேரியர்ல பெரிய ட்ராப்.. தெலுங்கு பக்கம் ஹிட்.. மறுபடியும் தமிழ்..ரங்கராட்டினமா போகுதே உங்க மார்க்கெட்..?12பி படத்துல சிம்ரன் ஜோதிகாவோடு நடிச்சது எல்லாம் மறக்க முடியாது. அப்புறமா சில படங்கள் நமக்கு செட்டாகுமானு யோசிக்காம ஒத்துக்கிட்டது உண்மைதான். ஆனாலும் 12பி, லேசா லேசா, இயற்கை அப்படினு சில படங்களல மட்டுமே எனக்கு கரெக்டா அமைஞ்சது. தெலுங்குல 'கிக்' மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இப்போ '6 மெழுகுவர்த்திகள்' என வாழ்நாள்ல மிக முக்கியமான படமா அமைஞ்சிருக்கு.


முன்னணி ஹீரோக்கள் பலருக்கு பேமிலி பேக்ரவுண்ட் இருக்கு. அப்பா, அண்ணன் அப்படினு யாராவது குடும்பத்துல ஒருத்தர் பீல்ட்ல துணையா இருப்பாங்க. ஆனா, எனக்கு அப்படியில்லை. என்னை மட்டுமே நம்பி களத்துல இருக்கேன்.


பலரும் ஷாமை ராசியில்லாத நடிகர் அப்படினு சொன்னாங்க.. அவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றீங்க?


“ஏ.சி ரூமுக்குள உட்காந்துகிட்டு ஆயிரம் பேசலாம். ஆனால் களத்துல இறங்கினா தான் உண்மையான வலி தெரியும்” இது தான் என்னோட பதில்னு எழுதிக்கோங்க.


எப்படி அமைஞ்சது '6 மெழுகுவர்த்திகள்'? இந்த படத்துக்கு ஷாம் வேணும்னு டைரக்டருக்கு தோண வெச்சதே உங்க வெற்றி தான்.. இல்லையா?'கிக்' படத்தை பாத்துட்டு துரை பேசினார். உன்னை வித்தியாசமா யூஸ் பண்ணுருக்காங்கனு பாராட்டினார். அப்பறம் ஒருநாள் '6 மெழுகுவர்த்திகள்' கதையை சொன்னார். அப்பவே முடிவு பண்ணிட்டோம். இந்த படம் நல்ல தயாரிப்பாளர் கைல கிடைச்சா மட்டும் தான் நல்லபடியா வரும்னு. உடனே எங்க அண்ணன் கிட்ட பேசி நானே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
ஏன்னா படத்துக்காக ரெண்டரை வருஷம் வெயிட் பண்ணனும். வேற ஒரு தயாரிப்பாளர் இதுக்கு தயாராக இருப்பாங்களானு தெரியல. அதான் நானே தயாரிப்பாளரா களத்துல இறங்கினேன். க்ளைமாக்ஸ் காட்சியை பாத்துட்டு, மக்கள் எழுந்து நின்னு கைதட்டும்போது சந்தோஷமாயிடுச்சு.. வலியெல்லாம் பறந்தே போச்சு.. எங்களோட ரெண்டரை வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு அது.


மொதல்ல மாடலிங், அப்பறம் சின்ன ரோல்.. அப்பறம் ஹீரோ.. அப்பறம் கன்னடப் படம், தெலுங்குல 'கிக்'.. மறுபடியும் தமிழ்ல சூப்பர் ரோல் பண்ண வாய்ப்பு.. அடுத்த மூவ் ரொம்ப ஜாக்கிரதையா எடுத்து வெக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கீங்க.. இப்ப எப்படி இருக்கு?


ரொம்ப ரொம்ப பயமா இருக்கு. தமிழ்ல அடுத்ததா புதுமுக இயக்குநர்  ஒருத்தர் படத்துல நடிக்கிறேன். '6 மெழுகுவர்த்திகள்' படத்துக்கு அப்புறம் வர படம் அப்படிங்கிறதுனால ரொம்ப யோசிச்சு ஒத்துக்கிட்டேன். நல்ல ஒரு பேமிலி எண்டர்டெய்னர். அதுல ஒரு புதுமை பண்ணிருக்கோம்.


தெலுங்குல 'கிக்' இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் 'RACE GAURAM' படத்துல நடிக்கிறேன். தமிழ்ல ' பந்தய குதிரை'னு அர்த்தம். நானும் அல்லு அர்ஜுனும் அண்ணன் - தம்பியா நடிக்கிறோம். தமிழ்ல தான் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கறது கம்மியா இருக்கு.. ஆனா தெலுங்குல அப்படியில்லை. கதைக்கு தேவைன்னா சேர்ந்து நடிக்கிறாங்க.'6 மெழுகுவர்த்திகள்' பார்த்துட்டு சுதீப் உங்களை ரொம்ப பாராட்டியிருந்தார்.. இன்னும் நிறைய பேரோட பாராட்டுல நனைஞ்சிருப்பீங்களே?சார்.. அதை வார்த்தைகளா வர்ணிக்க முடியாது. வேற வேற தியேட்டர்ல 8 ஷோ பாத்தேன். படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன், கைத் தட்னாங்க.. வெளியே வர்றப்போ கட்டிப்பிடிச்சு பாராட்டினாங்க, நிறையப் பேர் அழுதுகிட்டே பாராட்டினாங்க. ஷாமுக்கு கிடைத்த வெற்றியா நான் பாக்கல. படத்துக்கு கிடைச்ச வெற்றியா தான் பாக்கறேன்.படம் முடிஞ்சவுடன், சுதீப் கட்டிப்பிடிச்சு 'பின்னிட்டடா'ன்னார். சிம்ரன் மேடம் 'Awesome.. Awesome'னு பாராட்டினாங்க. விஜய் சேதுபதி ஒரு 45 நிமிஷம் படத்துல ஒவ்வொரு சீனையும், வசனங்களோட சொல்லி, இந்த சீனுக்குல்லாம் கண்டிப்பா ரசிகர்கள் பாராட்டுவாங்க பாருன்னார். சீமான் அண்ணன், சசி அண்ணன் எல்லாருமே 'தம்பி.. என்னடா இப்படி உழைப்பை கொட்டிருக்க..'னு தட்டிக் கொடுத்தாங்க.ஆர்யா, பரத் எல்லாருமே இந்திய சினிமாவோட 100ம் ஆண்டு விழாவுக்காக டான்ஸ் ரிகர்சல் பண்ணிட்டு இருந்ததுனால. “ டேய்.. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸாமே.. சூப்பர்டா.. படம் பாத்துட்டு கூப்பிடுறேன்”னாங்க.. எனக்கு மனசு பூரா பூ பூத்த மாதிரி இருக்கு.!விக்ரமுக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. விக்ரமுக்கு 'சேது', ஷாம்முக்கு '6 மெழுகுவர்த்திகள்'னு சொல்லலாமா..?இப்படித்தான் நிறைய பேர் கேட்கறாங்க. ஏன்னு தெரியல. விக்ரம் சார் எங்கேயோ இருக்கார். நான் எங்கேயோ இருக்கேன். அவர் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரெஷன். அவருடைய வசன உச்சரிப்பு, நடை, உடை எல்லாத்தையும் பாத்து ரசிச்சிருக்கேன். எல்லாருமே இப்படி கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு. அதே நேரத்துல கொஞ்சம் பயமா இருக்கு.படத்தை தெலுங்குல ரிலீஸ் பண்றாங்களா?


ஆமா.. ஒரே தேதில ரிலீஸ் பண்ற ப்ளான் தான். ஆனா தெலங்கானா பிரச்சனையால படத்த வாங்கினவங்க இப்போதைக்கு ரிலீஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சீக்கிரமே தெலுங்குலயும் வெளியாகும். நான் அடுத்து தமிழ்ல பண்ணப்போற படம், தெலுங்குக்கும் சேர்த்து தான் ப்ளான் பண்றோம்.படத்துக்காக நீங்க பட்ட கஷ்டத்தை வீட்டுல இருக்கறவங்க பாத்துட்டு என்ன சொன்னாங்க.. உங்க மனைவி காஸிஸ், பொண்ணு சமைரா ரியாக்‌ஷன் என்ன?படம் பாத்துட்டு எங்கம்மா தான் கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க. ரொம்ப பாராட்டினாங்க. அந்த நாள மட்டும் மறக்கவே மாட்டேன். என் மனைவி எப்போதுமே “ காசு, பணம் ரெண்டாவது.. முதல்ல ஷாம் நல்ல நடிகர் அப்படினு பேர் தான் முக்கியம்”னு சொல்லிட்டே இருப்பாங்க. இந்த படத்தை பாத்துட்டு “ நீங்க நடிகர் ஷாம்னு பேர் வாங்கிட்டீங்க.”னு சொன்னாங்க. அவங்க வாய்ல இருந்து இந்த வார்த்தை கேட்கறப்ப எதையோ சாதிச்சுட்டோம்னு நினைச்சேன். பொண்ணு சமைரா படம் பாக்குறப்போ “ அப்பாவ அடிக்குறாங்க.. அப்பா அழுறார்.. வா வெளியே போலாம்”னு சொல்லிட்டே இருந்தா.கமல்லேந்து, விக்ரம், ஷாம்னு ஆளாளுக்கு கதைக்காக உடம்பை ஏத்தி எறக்கி பயமுறுத்தறீங்க. சாப்பிடாம, தூங்காமன்னு இவ்ளோ கஷ்டப்படுத்திக்கறீங்க.. இந்த படத்துக்கு ஓகே.. ஆனா அப்பறம் உடம்பு போயிருமேன்னு பதட்டம் இல்லையா?இப்பவுள்ள சூழ்நிலை அப்படி இருக்கு. என்ன பண்றது.? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுசா ரெண்டு பேர் ஹீரோவா வர்றாங்க. இப்படி இருக்குறப்போ நம்மள இன்னும் நல்லா புரொக்ஜட் பண்ணக்கூடிய நிலைமை. வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. எது பண்ணனும் நினைக்கிறமோ அத இப்பவே பண்ணிறனும்.


நான் எடுத்த ரிஸ்க் அதிகம் தான். கண்ணு எல்லாம் வீங்க வைச்சு நடிச்சேன். கதைக்கு தேவைப்படுறப்ப செஞ்சு தானே ஆகணும். என்னைவிட '555' படத்துல பரத் எடுத்த ரிஸ்க் அதிகம். அதை நினைக்கறப்ப ரொம்ப பயமா இருந்தது. அவரு எடுத்த ரிஸ்க்கால, உடம்பு உறுப்புகள் கூட பாதிக்கலாம். இருந்தாலும் ரிஸ்க் எடுத்தார். வெற்றியால தான் Fieldல நிலைச்சு நிக்க முடியும்ன்னா எந்த ஒரு ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கேன்.உள்ளம் கேட்குமே ஆர்யா, ராஜா ராணி ஆர்யா.. வளர்ச்சியை எப்படி பாக்கறீங்க..? நாமும் காமெடி டிராக்லயே போயிருக்கலாமோன்னு தோணிச்சா..?ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பன் தான். சினிமாவுக்கு வந்தப்பவே சும்மா இருக்குற நேரத்துல நிறைய பேரைப் போய் பார்ப்பான். அவனுக்கு என்ன வரும் அப்படினு முடிவு பண்ணிட்டு அதுல கரெக்டா போயிட்டு இருக்கான். “என்னடா.. நான் நடிச்ச படம் வெளியாகவே மாட்டேங்குது..” அப்படினு வருத்தப்பட்ட காலத்தையெல்லாம் பொறுமையா கடந்து வந்தான். பாலா சார் இயக்கத்துல 'நான் கடவுள்' படத்துல ஆர்யா நடிப்ப பாத்து மிரண்டுட்டேன். ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்ப ஆர்யாவோட 'ராஜா ராணி' படத்துக்காக வெயிட் பண்றேன்.
thanx - the hindu

இரண்டாம் உலகம் - 100 கோடியே என் இலக்கு - ஆர்யா பேட்டி

வழக்கமான காதல், மோதல், காமெடி என்னும் வட்டத்தைத் தாண்டி, ‘நான் கடவுள்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் ஆர்யா. கதாபாத்திரத்துக்காக எத்தகைய சவால்களையும் எப்போதும் ஏற்க விரும்புவதாகச் சொல்லும் ஆர்யா, கோடம்பாக்கத்தின் தற்போதைய காதல் இளவரசனாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார். ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியிலிருந்து... ஆர்யா என்றால் ‘தமிழ் சினிமாவின் பிளேபாய்’ என்ற பிம்பம் முன்னால் வந்து நிற்கிறது. ஊடகங்கள் மீது உங்களுக்குக் கோபமே வராதா?


 
இது மீடியாவுக்கும் எனக்குமான கொடுக்கல் வாங்கல். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவர்கள் எழுதுவதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தானே செய்கிறது. அந்தக் கொஞ்ச உண்மையை, சமயங்களில் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தி எழுதும்போது ஷாக்காக இருக்கும். அதெல்லாம் செய்தியைப் படிக்கும் அந்த நிமிடத்தில்தான். அதன் பிறகு கூல் ஆகிவிடுவேன். அவர்கள் என்னைப் பற்றி நன்றாக எழுதும்போது, நான் என்ன பொக்கேவா அனுப்புகிறேன்? என்னதான் பிளேபாயாக என்னைக் காட்டினாலும், நான் நடிக்கும் படங்கள் நன்றாக இல்லையென்றால் மக்கள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள். நயன்தாரா விஷயம்...

 
நயனுக்கும் எனக்கும் நடுவுல நட்பைத் தவிர எதுவுமில்லே. இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லணும்னா, விஷால் எப்படி எனக்கு க்ளோஸ் ஃபிரெண்டோ அப்படித்தான் நயன்தாராவும். நீங்களாவது கொஞ்சம் தெளிவா போடுங்க. ஏன்னா நயன்தாரா அவ்வளவு நல்ல பொண்ணு. ராஜா ராணிக்கு படத்துக்கு லீட் ஹீரோயின் யார்னு முதல்ல எனக்கு சொல்லவே இல்ல. நான் நஸ்ரியாதான் லீட் ஹீரோயின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஒருநாள் திடீர்ன்னு நயன்கிட்ட இருந்து போன்.. “ ஆர்யா.. நீதான் ஹீரோவா பண்றியா.. சொல்லவே இல்ல!? ரொம்ப கம்ஃபர்ட்டா ஃபீல் பன்றேண்டா”ன்னு சொன்னாங்க. பாஸ்கரன் படத்துல கிடைச்ச ‘நண்பேண்டா!’ நட்பு இது. அப்புறம் ராஜா - ராணி படத்துல எங்க ஜோடி நடிப்பு, ரொம்ப டாமினேட்டிங்க இருக்கும். அது கதைக்காக நாங்க காட்டின இன்வால்வ்மெண்ட். 

 

நயன்தாரா உங்களைத் தேடி உங்க வீட்டுக்கே வந்தாங்களாமே?

 
அதுல என்ன தப்புன்றீங்க? என்னோட வீட்டுக்கு பூஜா வந்திருக்காங்க, த்ரிஷா வந்திருக்காங்க. இந்த வரிசையிலத்தான் ஒரு தோழியா, என்னோட அப்பா அம்மாவைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவ்வளவுதான். ஆக, ஆர்யாவுக்கு அப்பா அம்மா பார்க்கிற பெண்தான்னு முடிவாகிடுச்சா?


 
அதை உறுதியா என்னால சொல்ல முடியல. ஆனால் நாம கல்யாணம் செஞ்சுக்கப் போற பெண்ணையாவது அப்பா - அம்மா சூஸ் பண்ணட்டும்னு விட்டா, அதுல தப்பில்ல. ஏன்னா நமக்கு எது நல்லதுன்னு அவங்களுக்கு தெரியும். அவங்க பார்க்குறது மொக்க ஃபிகரா இருந்தாலும் ஓகேதான். அப்புறம் கல்யாணத்துக்கு டைம் லைன் பிக்ஸ் பண்ண முடியாது. எப்போ பொண்ணு கிடைக்குதோ, அப்பதான் கல்யாணம். இப்போ என்னோட கவலையெல்லாம்... நான் சிக்குறதுக்கு முன்னாடி என் நண்பன் விஷாலுக்கு ஒரு நல்ல பெண் கிடைச்சு அவன் சிக்குணும்கிறதுதான்! 

 

நான் கடவுள் மாதிரி ஒரு படத்துல நடிச்சீங்க. அதுக்குப் பிறகு அந்த மாதிரி ஆர்யாவைப் பார்க்க முடியலையே!


 
அவன் இவன்ல ‘கும்பிடுறேன் சாமி’ உங்க கண்ணுல படலையா? அப்புறம் சந்தோஷ் சிவனோட உருமியில ஒரு காட்சின்னாலும் நறுக்குனு தைக்கிற மாதிரி நடிச்சிருக்கேன்னு கேரளால ரிவ்யூ கொடுத்தாங்க. ஆனா லவ் , ஆக்‌ஷன் களத்துல டிராவல் பண்ணினாதான் ஆல் கிளாஸ் ஆடியன்ஸ் நம்மள மறக்காம இருப்பாங்க. அதே மாதிரி நான் லவ் பண்ணி , பைட் பண்ணினாத்தான் படம் பார்ப்பேன்னும் ஆடியன்ஸ் அடம்பிடிக்கவும் மாட்டாங்க. ஒரே மாதிரி நடிச்சும் அவங்கள போரடிக்கக் கூடாது! அப்புறம் நிறைய மல்டி ஸ்டாரர் படங்கள்ல நடிக்க விருப்பமா இருக்கேன். இதுமாதிரிப் படங்கள்ல நடிக்கும்போது, அது பெரிய பட்ஜெட் படமா இருக்கு! ஒவ்வொரு ஸ்டாருக்கும் தனித்தனியா இருக்க ரசிகர்கள், எல்லாம் திருவிழா மாதிரி தியேட்டர் கூடிருவாங்க. 


ஆரம்பம் படத்துல ஒரு வித்தியாசமான ஆர்யாவைப் பார்க்கலாமா?


 
கண்டிப்பா! விஷ்ணுவர்த்தனோட நான் பண்ற நாலாவது படம் இது. அவரை மச்சான்னுதான் கூப்பிடுவேன். அவர் என்னை வில்லனா நடின்னு சொன்னாலும் நடிப்பேன். வேற எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். ஆனா, ஆரம்பம் படத்துல என்ன கேரக்டர்னு மட்டும் கேட்காதீங்க. இந்தப் படத்துல தல அஜித்கூட நடிச்சதுனால, இது எனக்கு ஸ்பெஷல் படம். இந்தப் படத்துல என் கேரக்டர் கண்டிப்பா அதிர்ச்சியா இருக்கும். அதேமாதிரி ஒரு காட்சியில் 110 கிலோ வெயிட்டோட வர்ற மாதிரி, ஒரு கெட்அப்ல நடிச்சுருக்கேன். அதுவும் புதுசா இருக்கும். 

 

இரண்டாம் உலகம் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கே? அதுவும் 50 கோடி பட்ஜெட்டுன்னு சொல்றாங்களே?


 
இதுல கவனிக்க வேண்டிய விஷயம், இந்த 50 கோடி ஆர்யாவுக்காக இல்ல. கதைக்காக. கதைக் களத்துக்காக. இதுதான் ஹெல்தியான பட்ஜெட். மார்க்கெட் வேல்யூ ஒரு ஹீரோவுக்கு இருக்குன்றதுக்காக கன்னாபின்னான்னு செலவு செஞ்சு படம் எடுத்தா, அது ஆடியன்ஸுக்கு பிடிக்காம போயிடலாம். ஆனா கதை கேட்டுதுன்னா, நம்ம காட்டுற உலகத்தை ஆடியன்ஸ் நம்பனும்னா அதுக்காக எவ்வளவு வேணா செலவு செய்யலாம். செல்வா ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்துட்டு ஆர்டினரி டைரக்டர் இல்ல, கண்டிப்பா, அவர் இயக்கத்துல நடிச்சா எனக்கு நல்லது நினைச்சேன். மனுஷன் சொல்லி வெச்ச மாதிரி “ஆர்யா ஒரு கதை இருக்கு கேக்குறியா?” கூப்பிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்துல அவர் முன்னாடி இருந்தேன். கதை கேட்டு முடிச்சதும் , வேற ஒரு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீல். என்கிட்ட கதையா சொன்னதை விட 50% கூடுதலா விஷுவலைஸ் பண்ணியிருக்கார். செல்வராகவன் நட்சத்திரங்கள்கிட்ட ரொம்ப டெரர் காட்டுற மனிதர்னு சொல்றாங்களே?


 
இந்த மாதிரி கதையக் கையாளும்போது டெரராத்தான் இருக்கணும். செல்வா ரொம்ப கூலான ஆள்! ஆனா படத்துல நடிச்ச அனுபவம், ரொம்ப டெரிபிக்கா இருந்தது. தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போற, படம்னு சில பேர் அளந்து விடுவாங்க. ஆனா நிஜமாவே நம்ம சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போற படம். தமிழ் சினிமா, கோடாம்பாக்கத்து செட்டை விட்டு, கோபிச்செட்டி பாளையத்தை விட்டு, சுவிஸ் பனிமலைகளை விட்டு வேற ஒரு உலகத்துக்கு அழைச்சிட்டு போற படம். எனக்கு பிஸிகல் ஸ்டிரைன் அதிகமா கொடுத்த படம். கதையப் பத்தி யாரும் வாயே திறக்க மாட்டேன்றீன்களே?

 
கதைய சொல்லிட்டா இந்தப் படத்தை பார்க்குற ஆர்வமே போயிடும். இந்த மாதிரி ஃபேண்டஸி படங்களுக்கு இருக்குற ஆபத்து அதுதான். இருந்தாலும் உங்களுக்காக முதன்முதலா வாய திறக்குறேன். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில ரொம்ப அழகான காதலர்கள். அவங்க ரெண்டு பேரும் இன்னொரு உலகத்துல மருவன் - வர்ணாங்கிற வேற ரெண்டு கேரக்டர்ஸா மீட் பண்றாங்க. எதுனால இப்படி நடந்தது? அந்த இன்னொரு உலகத்துல அவங்க அனுபவம் எப்படி இருந்துச்சுங்கிறதுக்காக, அந்த கேரக்டர்ஸுக்கும் ஆடியன்ஸுக்கும் த்ரில்லான அனுபவமா அமையப் போகுது. என்ன பாஸ், பதில் சொல்றதுல ஒரு டைரக்டர் ரேஞ்சுக்கு தேறிட்டனா? அடுத்து நீங்க நடிக்கிற படம் தலைப்பு பிரச்சினையில சிக்கியிருக்கே?


 
அதை எஸ்.பி.ஜனநாதன் சார் பார்த்துக்குவார். ஆனா ஒரு விஷயம். படத்தோட தலைப்பு ‘புறம்போக்கு’ன்னு இருக்குறதால என்னோட கேரக்டரை அதோட ரிலேட் பண்ணிக்காதீங்க. இது கதையோட சம்பந்தப் பட்டது. இந்தப் படம் தவிர மகிழ்திருமேனி இயக்கத்துலயும் நடிக்கிறேன். அதுக்கு இன்னும் தலைப்பு ரெடியாகல. இந்த ரெண்டு படத்துக்கு அப்புறம், ஆர்யா படம் 100 கோடி வசூலுக்கு மாறும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு! 


thanx - the hindu 


aடிஸ்கி - நான் ஒரு ஆணாதிக்கவாதின்னு ஒரு தப்பான அபிப்ராயம் ஆங்காங்கே பரவிக்கிடக்கு. ஆனா பாருங்க ஆர்யா பேட்டில கூட அனுஷ்கா ஸ்டில்லுக்குத்தான்  முன்னுரிமை , பின்னுரிமை , சைடு உரிமை எல்லாம் கொடுத்திருக்கேன் , இதில் இருந்து தெரிய வரும் நீதி - சி பி பெண்மையை போற்றுபவர் , பெண்களை மதிப்பவர் . இதை எல்லாம் நீங்க ஊர்ல போய் சொல்லனும் ;-))