Monday, August 17, 2026

IKKA(2026)-ஹிந்தி/தமிழ் - சினிமா விமர்சனம் (கோர்ட் ரூம் டிராமா)@நெட் பிளிக்ஸ்

 


IKKA(2026)-ஹிந்தி/தமிழ் - சினிமா விமர்சனம் (கோர்ட் ரூம் டிராமா)@நெட் பிளிக்ஸ்


இக்கா என்றால் முதன்மையானவர் என்று அர்த்தம்.சீட்டுக்கட்டு விளையாட்டில் ஏஸ் என்னும் சீட்டு முதன்மையானது.படத்தில் இது தான் அர்த்தம்.இது போக வயதில் பெரியவர்களை முஸ்லீம் சமூகத்தில் இக்கா என்று அழைப்பார்கள்.உதாரணமாக நடிகர் மெகா ஸ்டார் மம்முட்டியை ரசிகர்கள் மம்மூக்கா என்று அழைப்பார்கள்



10/7/2026  முதல் நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் நேரடியாக  ரிலீஸ் ஆன படம் இது.தியேட்டர் ரிலீஸ் அல்ல.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் நேர்மையான,வெற்றிகரமான வக்கீல்.அவன் எடுத்த கேஸ்களில் இதுவரை தோல்வியே இல்லை.ஆனால் மனசாட்சிக்கு விரோதமாக எந்தக்கேசையும் எடுக்க மாட்டான்.நாயகனுக்கு மனைவி ,மகள் உண்டு.மகளுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது.மருத்துவ ரீதியான அந்தப்பிரச்சனையைத்தீர்த்து வைக்க வில்லனால் மட்டும் தான் முடியும்.

வில்லன் தான் நாயகனின் மனைவியின் குழந்தைக்கு உண்மையான அப்பா.நாயகனின் மனைவியும் ,வில்லனும் முன்னாள் காதலர்கள்.கர்ப்பமானவளிடம் கருவைக்கலைத்து விடு என்று வில்லன் கூற மறுத்து விட்டு விஷயத்தை நாயகனிடம் சொல்லி விட்டுத்தான்  நாயகனை மணம் புரிந்திருக்கிறாள்.

வில்லன்  உடைய ஸ்டெம்  செல்லை மகளின் உடம்பில். பொருத்தி ஆபரேஷன் செய்தால் தான் மகள் பிழைப்பாள்.


இப்படி ஒரு கிரிட்டிக்கலான சூழ்நிலையில் வில்லன் ஒரு கேசில் மாட்டிகொள்கிறான்.போலீஸ் வில்லனைக்கைது செய்கிறது.

வில்லனின் அப்பா அரசியல்வாதி.நாயகனை அணுகி மகனை மீட்டுத்தரும்படி கேட்கிறார்.வில்லனும் நாயகனிடம் இந்தக்கேசிலிருந்து என்னை விடுவித்தால் மகளின் ஆபரேசன் சக்சஸ் ஆக உதவுகிறேன் என்கிறான்.

நாயகனும் வேறு வழி இல்லாமல் வில்லனுக்காக கேசில் ஆஜர் ஆகிறான்.இதற்குப்பின் என்ன நடந்தது?கேசில் நாயகன் ஜெயித்தானா? நாயகனின் மகள் காப்பாற்றப்பட்டாளா? உண்மையில் வில்லன் மேல் குற்றம் உண்டா?அதற்கு தண்டனை கிடைத்ததா?என்பது தான் மீதித்திரைக்கதை.


நாயகனாக  சன்னிதியோல் நடித்திருக்கிறார்.முகத்தில் ஏனோ உற்சாகமே இல்லை.கோர்ட்டில் வாதிடும் காட்சியில் ,மகளுக்காகக்கவலைப்படுவதில்  முத்திரை பதிக்கும் நடிப்பு.


வில்லனாக  அக்சய் கன்னா அசத்தி இருக்கிறார்.துரந்தர் பாகம் 1 படத்தில் நாயகனை விட வில்லனான இவருக்குத்தான் தியேட்டரில் கை தட்டல் கிடைத்தது.ஸ்டைலிஷான நடிப்பு.தெனாவெட்டான உடல்மொழி.

நாயகனின் மனைவியாக  தியா மிஸ்ரா குடும்பப்பாங்கான நடிப்பு.கோர்ட்டில்  அரசு தரப்பு வக்கீலாக திலோத்தமா சோமே நடித்திருக்கிறார்.லாவகமான வாதிடும் திறன் அருமை.

வில்லனின் மனைவியாக சஞ்சிதா ஷேக் கச்சிதம்
வில்லனைக்காப்பாற்ற கோர்ட்டில் அவர் படும் பாடு அருமை.

நாயகனின் மகளாக டரியா பேடி நடித்திருக்கிறார்.இவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு.

வில்லனின் அப்பாவாக ஷிசிர் சர்னா  அகம்பாவம் காட்டி நடித்திருக்கிறார்.
ஜட்ஜாக  விஜய் விக்ரம் சிங் கச்சிதம்.

சமீப காலமாக ஜட்ஜ் கேரக்டர்கள் தமிழ் சினிமாவில் அப்ளாஸ் வாங்குகின்றன.ஆனால் இதில் அதற்கான  ரைட்டிங் இல்லை.


வில்லன் மாட்டிய கேசில் பாதிக்கப்பட்ட பெண்ணாக  அகன்ஷா ரஞ்சன் கபூர்,அம்மாவாக ஜோதி முகர்ஜி இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பு.


பாடல்களுக்கான இசையை மிதூன்,பின்னணி இசையை ஜூலியஸ் கவனித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஜிஸ்னு பட்டசார்ஜி.கோர்ட் ரூம் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது.


எடிட்டிங் ஸ்வேதா வெங்கட் மேத்யூ.ரன்னிங்க் டைம் 140 நிமிடங்கள்.

அல்தேகவுசல் + மயாங்க் தேவ்ரி இருவரும் இணைந்து திரைக்கதை எழுத வசனத்தை  மயாங்க் தேவ்ரியும் ,கதையை அல்தேகவுசலும் எழுதி இருக்கிறார்கள்.

இயக்கி இருப்பவர் சித்தார்த் மல்ஹோத்ரா.

தயாரிப்பு சித்தார்த் மல்ஹோத் ராவும் ,மனைவி சப்னாவும்.




சபாஷ் டைரக்டர்

1  ஓப்பனிங்க் ஷாட்டிலேயே நேரடியாக கதைக்கு வருவது நல்ல உத்தி.வில்லனின் காரிலிருந்து தெறித்து விழும் பெண் காயத்துடன் இருக்கிறார்.இது அப்படியே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது.

2. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை கேள்விகள் கேட்டு நாயகன் குழப்புவது அருமை.

3. அரசு தரப்பு வக்கீலை சந்திக்கும் நாயகன் தவறுதலாக தனது செல்போனை விட்டுச்செல்வது போல நடிப்பதும்,அவருக்கு வரும் மெசேஜை வக்கீல் படித்து அவர் வலையில் விழுவதும் நல்ல ட்விஸ்ட்

4  வில்லனின் மனைவி வில்லனைக்காப்பாற்றப்போடும் டிராமா பக்கா.நாயகன் அந்த சாட்சியை உடைப்பதும் செம.

5.  கோர்ட் ரூமில் நடக்கும் வாத ,விவாதங்களை சுவராஸ்யமாகக்காட்டியது குட்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1.  வில்லன் பல குற்றங்களை செய்து அனுபவம் உள்ளவன்.பப்ளிக்காக மெயின் ரோட்டில் காரில் அந்தப்பெண்ணிடம் தவறாக நடக்க முயல்வது நம்ப முடியவில்லை.பிரைவேட் பிளேசில் ,தனி ரூமில் செய்திருக்கலாமே?

2. பாதிக்கப்பட்ட பெண்  ஹாஸ்பிடலில் இறந்தவுடன் வில்லனை ஜாமீனில் வெளிவரமுடியாத  செக்சனில் உள்ளே தள்ளி இருக்க வேண்டும்.அதை போலீஸ் செய்யலை.

3.  சம்பவம் நடந்தபோது வில்லனின் மனைவி போலீஸ்க்கு போன்  செய்து பொய்யான அலிபியை ,அதாவது வில்லன் அந்த நேரத்தில் வீட்டில் இருந்ததாக பொய் சாட்சி உருவாக்குகிறாள்.இதை எப்படி போலீசும் ,ஜட்ஜூம் நம்புகிறது? வாய்ஸ் சிந்த்தசைசர் மொபைல் ஆப்பில் வந்துவிட்ட இந்தக்காலக்கட்டத்தில் வெறும் குரலை வைத்து  அலிபி கிரியேட்செய்ய முடியுமா?

4 வில்லனின் வீட்டில் குறிப்பிட் ட  நேரத்தில்  இருந்தாரா?என்பதை சிசிடிவியில் பார்த்தாலே தெரிந்து விடுமே?, அதை செக் செய்யவே இல்லையே?

5 கேஸ் சக்சஸ்  ஆகி வில்லன் ரிலீஸ் ஆனதும் உடனே சக்சஸ் பார்ட்டி வைத்து வில்லன் மாட்டிக்கொள்கிறான்.சரியான அவசரக்குடுக்கை என சொல்லத்தோன்றுகிறது.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+

CPS கமெண்ட் -  ஆஹா ஓஹோ பிரமாதம் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் சுவராஸ்யமான ,குடும்பத்துடன் பார்க்கத்தக்க லீகல் திரில்லர் தான் இது.ரேட்டிங் 2.5 /5

Sunday, August 16, 2026

DOSE(2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் மெடிக்கல் க்ரைம் திரில்லர்)@ஆஹா தமிழ் ,அமேசான் பிரைம்

 ஸ்பாய்லர் அலெர்ட்




நாயகன் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் டாக்டர்.அவரது மனைவி ஒரு நுரையீரல் பேஷண்ட்.அவர் பணி புரியும் ஹாஸ்பிடலிலேயே மனைவியை அட்மிட் செய்து பார்த்துக்கொள்கிறார்.

நாயகனுக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு.அவளும் அதே ஹாஸ்பிடலில் நாயகனுக்குக்கீழ் பணியாற்றும் டாக்டர்தான்.நாயகனின் காதலி கர்ப்பமாக இருந்தபோது குடும்ப  சூழ்நிலைகள் காரணமாக  வேறு பெண்ணைத்திருமணம் செய்து கொள்கிறார்.

இவை எல்லாம் பிளாஷ்பேக்.தற்போது நாயகன் பணி புரியும் ஹாஸ்பிடலில் அடுத்தடுத்து மர்மமான  முறையில் மூன்று பேஷண்ட்ஸ் இறக்கிறார்கள்.

நாயகனின் பெயரைக்கெடுக்க நாயகனின் முன்னாள் காதலிதான் இதை எல்லாம் செய்கிறாளோ என நாயகன் சந்தேகப்படுகிறான்.

ஹாஸ்பிடலின் எம் டி யின் மகளை வில்லன் லவ் பண்ணுவதாக ஏமாற்றுகிறான்.வில்லன் ஒரு பெண் பித்தன்.எம் டி யையே மிரட்டுகிறான்.

இந்தக்கேசை விசாரிக்க ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார்.கொலைகளை செய்தது யார்?
1 நாயகனின் முன்னாள் காதலியா?
2 எம் டி யா?
3 வில்லனா?


என்பதை போலீஸ் ஆபீசர் கண்டுபிடிப்பது தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக சிஜூ வில்சன் அமைதியாக நடித்திருக்கிறார்.டாக்டருக்குண்டான பொறுமை அருமை.

ஹாஸ்பிடல் எம் டி யாக ஜெகதீஷ் நடித்திருக்கிறார்.இவர் தான் வில்லனோ?என்று பல இடங்களில் சந்தேகிக்க வைக்கும் நடிப்பு.

போலீஸ் ஆபீசராக அஸ்வின் குமார் கச்சிதம்.ஹேர் ஸ்டைல்,உடல் மொழி எல்லாம் பக்கா.

நாயகனின் காதலியாக ,மனைவியாக வருபவர்களின் நடிப்பும் அருமை.

மற்ற அனைவர் நடிப்பும் கனகச்சிதம்.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிலாஷ் ஆர் நாயர்.



சபாஷ் டைரக்டர்

1 நாயகனின் இந்நாள் மனைவி,முன்னாள் காதலி இருவருமே குடும்பப்பாங்கான அழகு என்பதால் அவர் யாருடன் இருந்தாலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

2 போலீஸ் ஆபீசருக்கும் ,கொலையாளிக்கும் க்ளைமாக்சில் நடக்கும் போராட்டம் அருமை.

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது




ரசித்த வசனங்கள்

1 நமக்குப் பிடிச்சவங்களோட மட்டுமே நாம் வாழ்ந்திட முடியுமா?

2 திடீரென்று வரும் மரணம் சில சமயம் வரம்.

3 போலீஸ் ஆபீசரோட  வேலை குற்றவாளியை கோர்ட்டில் நிறுத்துவதோடு முடிஞ்சிடுது.மீதியை கோர்ட் பார்த்துக்கும்.

4 மனுசங்க கிட்டே ஒரு நேச்சர்  இருக்கு.கூட இருக்கறவங்களை  சந்தேகப்பட மாட்டாங்க.

5 என் வீட்டை எப்படிக்கண்டுபிடிச்சீங்க?

தேடினால் எல்லாமே கிடைக்கும்னு நீங்கதானே சொன்னீங்க?

6 நாம் விரும்புகிறவர்கள் நம்மை விட்டுப்போனபின்  அவங்க நம் கூடவே இருப்பதைப்போல் நாம் உணர்வது சகஜம் தான்.

7 மனசுக்கு சந்தோஷமா இருந்தா தெய்வத்துக்குப்பிடிக்காதுனு படிச்சிருக்கேன்.







லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  மெயின் கதைக்குப்போகும் முன் தேவை இல்லாத இரு பாட்டுக்கள் எதற்கு?

2 எதிரில் தென்படும் எல்லாப்பெண்களிடமும் வழியும் அந்த காமெடியன் டாக்டர் அதிகம் அறிமுகம் இல்லாத பெண்ணிடம் மொட்டை மாடிக்கு வா என மெசேஜ் அனுப்பியதும் எதற்கு?என்ன?ஏது?என எதுவும் கேட்காமல் கூப்பிட்ட இடத்துக்குப்போவது ஏன்?

3 அடுத்தடுத்து மர்மமான  முறையில் நோயாளிகள்  சாகிறார்கள் என்பதை விஷூவலாக சொல்ல ரொம்ப போர் அடிக்கும்படி காட்சிகளை அடுக்குவது ஏன்?

4 பேஷண்ட் ஆக இருக்கும் அந்தப்பாடகர். தன்னை கவனிக்க வந்த மனைவியிடம் எரிந்து விழுவது  ஏன்?

5 காரில் போகும்போது  நாயகன் சீட் பெல்ட் போடாதது ஏன்?

6 பேஷண்ட்டின் உடம்பில் விஷம் மாதிரி எதையோ செலுத்தி இருக்கிறார்களா?என்பதை பிளட் டெஸ்ட் எடுத்துப்பார்த்தாத்தெரிஞ்சிடுமே?என டாக்டரின் மனைவி. கேட்க  உடனே டாக்டர் அதை செயல்படுத்த விரைகிறார்.ஏன்?அவருக்கு அந்த ஐடியா தோன்றாதா?

7 ஹாஸ்பிடல் எம் டி யின் மகளை காதலிப்பதாக நடிக்கும் வில்லனை எம் டி தன் ஹாஸ்பிடலில் தொடர்ந்து வேலைக்கு வைத்திருப்பது எப்படி ?

8 வில்லன் ஹாஸ்பிடல் எம் டி யையே  மிரட்டுவது ஓவர்.வில்லனுக்கு எந்த பேக் கிரவுண்டும் இல்லை.


9 நாயகன் தன் முன்னாள் காதலி தான் கொலையாளியோ என சந்தேகப்படுகிறான்.ஆனால் தன் மனைவியை அதே ஹாஸ்பிடலில் அட்மிட்  செய்வது எப்படி ? ( க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் இதற்கு பதில் இருக்கிறது)

10  வில்லனை மாடியிலிருந்து கீழே தள்ளிக்கொலை செய்ய முயல்பவன் அதன் பின் வில்லனின் செல்போனில் இருந்தே தற்கொலை மெசேஜ் அனுப்புகிறான்.இப்போ வில்லன் கீழ் புளோரில்.வில்லனைத்தள்ளி விட்டவன் மொட்டை மாடியில் வில்லனின் செல் போனுடன்.எப்படி வில்லன் சர்ட் பாக்கெட்டில் மீண்டும் அந்த செல்போனை வைக்க முடியும்?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+

CPS கமெண்ட் - சைக்காலஜிக்கல் க்ரைம் திரில்லர் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் பார்க்கலாம்
மெதுவாக நகரும் திரைக்கதை.ரேட்டிங் 3/5

Saturday, August 15, 2026

Evil Dead Burn(2026)- சினிமா விமர்சனம் (சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்

 


1981ம் ஆண்டில் The Evil Dead என்ற படம் வந்து மெகா ஹிட் ஆனது.The Evil Dead 2 1987 ல் வந்து ரசிகர்களை மிரட்டியது. மூன்றாம் பாகம் Army of darkness (1992)  பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.நான்காம் பாகம்  Evil Dead (2013) சக்கை போடு போட்டது.ஐந்தாம் பாகம் Evil dead rise (2023)மாங்கு மாங்கு என ஓடியது.இப்போது வந்திருப்பது ஆறாம் பாகம்.


ஆறு பாகங்களையும் தனித்தனியாகப்பார்த்தாலும் கதை புரியும்.ஒவ்வொரு பாகமும் தனிக்கதை தான்.கடந்த ஐந்து பாகங்களைப்பார்க்காதவர்கள் கூட ஆறாம் பாகமான இந்தப்படத்தைப்பார்க்கலாம்


முதல் ஐந்து பாகங்களில் திகிலுடன் காமெடியும் கலந்து இருக்கும்.இந்த ஆறாம் பாகத்தில் காமெடி இல்லை.முழுக்க முழுக்க திகில் தான்.

20 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் ரன்னிங் டைம் 109 நிமிடங்கள் தான்.ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம்.



ஸ்பாய்லர் அலெர்ட

நாயகிக்கும்,அவளது கணவனுக்கும் ஒரு சண்டை.எந்த நாடா இருந்தாலும் புருசன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை இருக்கும் போல. சண்டையில். சம்சாரத்தை. ஜெயிக்க முடியாத கோபத்தில் கணவன் காரை எடுத்துட்டு வேகமாகப்போக வழி மறித்துக்கொண்டு ஒரு பெண் நிற்கிறாள்.ஆல்ரெடி இருவரைக்கொலை செய்து விட்டுத்தான் அவள் நிற்கிறாள்.இவள் சாபம் பிடித்தவள்.அவளுக்குக்கிடைத்த சாபத்தைக்கை மாற்றி விடத்தான் அங்கே நிற்கிறாள் .இது தெரியாத கணவன் அவளுடன் வாக்குவாதம் செய்ய  கணவன் இறக்கிறான்.

இறந்த கணவன் கல்லறையிலிருந்து எழுந்து வந்து தன் குடும்பத்துக்கு சாபம் கொடுக்கிறான்.

இறந்து விட்ட தன் கணவனுக்கு ஈமச்சடங்கு செய்ய நாயகி தன் குடும்பத்துடன் கூடி இருக்கிறாள்.ஆனால் நாயகியின் குடும்பமே கும்மி அடிக்கப்போகுது என்பது நாயகிக்கு அப்போது தெரியாது.

நாயகியின் மாமனார் கடைசியாக ஒரு முறை தன் மகனின் முகத்தைப்பார்க்கலாம் என்று அருகில் செல்லும்போது ஆவி அவரது உடம்புக்குள் புகுந்து விடுகிறது.நாயகி ஈமக்கிரியைகளை முடித்து விட்டு மாமியார் வீட்டுக்கே போகிறாள்.

நாயகியின் குடும்பத்தில் யார் எல்லாம் பலி ஆனார்கள்?நாயகியாவது தப்பித்தாரா?என்பது மீதி திரைக்கதை.

ப்ளோரண்ட் பெனார்ட் &  செபாஸ்டியன் வெனிசெக் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத  செபாஸ்டியன் வெனிசெக் மட்டும் தனியாக இயக்கி இருக்கிறார் 

Infested (2023) என்ற பிரமாதமான ஹாரர் திரில்லர் படத்தை இயக்கியவர் தான் இந்த செபாஸ்டியன் வெனிசக்.

இதுவரை வந்த இதன் ஆறு  பாகங்களில் முதல் பாகம் தான் டாப்.அடுத்தது இந்த ஆறாம் பாகம் தான்.

நாயகியாக சவுகீலா யாகூப் மிரட்டி இருக்கிறார்.




ஒளிப்பதிவாளர் பிலிப் லோசனோ தான் படத்தின் உண்மையான கதாநாயகன்.நம்ம ஊர் பி சி ஸ்ரீராம்,மது அம்பாட் மாதிரி ஒளிப்பதிவு ஷாட்ஸ்க்காகவே கை தட்டல் வாங்கும் ஒரு விற்பன்னர் பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார் கேமரா கோணங்களில்.

பின்னணி இசை தன் பங்குக்கு திகிலூட்டுகிறது


சபாஷ் டைரக்டர்

1 அப்பாவுக்கும் ,மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு சண்டை,,மாமியாருக்கும்,மருமகளுக்கும் இடையே நடக்கும் ஒரு சண்டை ,மீன் பிடிக்கப்போகும்போது நடக்கும் ஒரு சம்பவம் மூன்றுமே டைரக்டரின் டச் பிரமாதம் என சிலாகிக்கத்தகுந்த காட்சிகள்

2 டைனிங்க் டேபிள் சீக்வன்ஸ் ஒன்று மிரர் ஷாட்டாக  முடியும்.கலக்கலான ஒளிப்பதிவு,எடிட்டிங்

3. ஒவ்வொரு திகில் சீன்சும் சீட்டின் நுனியில் நம்மை இருக்க வைக்கும் பர பர காட்சிகள் தான்.

4 பைனல் டெஸ்டினேஷன், மிட் நைட் மீட் ட்ரெய்ன்  ,டெக்சாஸ் செயின்சா மசாக்கிர், ,ஹாஸ்டல்,ஷா, ஆகிய படங்களில் வருவதைப்போல் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குலை நடுங்க வைக்கிறது.

5 மேக்கப் பிரமாதம்.எது ஒரிஜினல் மேக்கப்?எது சி ஜி ஒர்க் என்பதைக்கண்டு பிடிக்க முடியாதபடி இருப்பது பெரிய பலம்.
6 முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமை.

7 மூதாதையர்கள் சாத்தானுக்காக வழிபடும் காட்சிகள்

8 படத்தில் மொத்தமே 5 கேரக்டர்கள் தான்,ஆனால் ஐவரும் நடிப்பில் மிரட்டி விட்டார்கள்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 முதல் 20 நிமிடங்கள் மிகவும் டெட் ஸ்லோ திரைக்கதை

2 கொடூரமான காட்சிகள் ,ரத்தக்களறி கொண்ட  பாடி ஹாரர் படம் என்பதால் எல்லோராலும் பார்க்க முடியாது.

3 முதல் பாகத்தில் வந்த அதே டெம்ப்ளேட் தான்.பெரிய மாற்றம் இல்லை.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 18+. வயலன்ஸ்

cps கமெண்ட் -  திகில் பிரியர்கள் ,பாடி ஹாரர் பட விரும்பிகள் தக்க துணையுடன்   பார்க்கலாம்.ரேட்டிங்  2.5/5

Friday, August 14, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி--சூர்யா vs விஷால் மகுடம் சூடப்போவது யார் ?

 சூர்யா ,விஷால் இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பதால் இது ஒரு ஆரோக்யமான போட்டியாகவே இருக்கும்.14/8/2026 வெள்ளி  அன்று. இரு படங்களும் மோதிக்கொள்கின்றன.இரு படங்களின் ட்ரெய்லரை வைத்து இரு படங்களின் கதை,திரைக்கதை என்னவாக இருக்கும்?எது ஜெயிக்கும் ?என்ற யூகப்பார்வையே இந்தக்கட்டுரை.



கறுப்பு என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டுக்குப்பின் வர இருக்கும் சூர்யா படம் என்பதால் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்க்கு மிகப்பெரிய ஓப்பனிங்க் இருக்கும்.அதே போல் மார்க் ஆண்ட்டனி(2023),ரத்னம்(2024),மதகஜராஜா(2025) என ஹாட்ரிக் ஹிட் அடித்த விஷால் படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.படத்தின் கதை,திரைக்கதை ,இயக்கம் எல்லாம் விஷால் தான் என்பதாலும் ட்ரெய்லரில் மார்க் ஆண்ட்டனி படத்தின் சாயல் இருப்பதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.சத்யராஜ்,பானுப்ரியா நடிப்பில்  பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1992ல் வெளியான மகுடம் கதைக்கும் ,இந்தக்கதைக்கும் சம்பந்தம் இல்லை.

1. விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்



லக்கி பாஸ்கர் என்ற பிரம்மாண்டமான ஹெய்ஸ்ட் திரில்லர் ஹிட் படத்தைக்கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேமிலி எண்ட்டர்டெய்னர் இது.

ட்ரெய்லரை வைத்து யூகித்த கதை இதுதான்.

நாயகன் துப்பாக்கி சுடுவதில் கோல்டு மெடலிஸ்ட்.சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து வெல்பவன்.அவரது நோக்கம் ,லட்சியம் எல்லாமே துப்பாக்கி சுடுவதில் தான்.நாயகனின் அப்பா வால் நாயகன்  சின்ன வயதிலிருந்தே மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவர் .வாழ்க்கையில் வெற்றி அடைவது மட்டும் தான் முக்கியம் என்று அட்வைஸ் செய்து அப்பா வளர்க்கிறார் 

இப்போது நாயகனுக்கு 40 வயது.பிளாஸ்பேக்கில் அவருக்கு ஒரு மனைவி இருந்தாள்.இறந்து விட்டாள்.ஒரு கைக்குழந்தை இருக்கிறது.அதற்கு மிகப்பெரிய மெடிக்கல் பிராப்ளம். இருக்கிறது.குழந்தையை கவனித்துக்கொள்ளும் கேர் டேக்கராக நாயகி வருகிறாள்.

நாயகியின் கேரக்டர் நாயகனின் கேரக்டருக்கு நேர் எதிராக இருக்கிறது.வாழ்க்கையை எஞ்சாய் செய்யனும் ,ஜாலியாய் இருக்கனும். பீலிங்க்சை வெளிக்காட்டனும்,சுதந்திரப்பறவையாய். சுத்தனும்.

நாயகியின் இந்த விசித்திரமான கேரக்டர் நாயகனுக்குப்புதுசு.நாயகி ஒருதகலையாய்  நாயகனைக்காதலிக்கிறாள்.நாயகனுக்கு உள்ளூர விருப்பம் இருந்தாலும் எரிந்து விழுகிறான்.நாயகியின் காதல் கல்யாணத்தில் முடிந்ததா?இல்லையா? என்பது தான் மீதித்திரைக்கதை.


கே பாக்யராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு + அகத்தியன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த விடுகதை. ஆகிய இரு படங்களின் கலவைதான் இந்தப்படம்.


முந்தானை முடிச்சு படத்தில் நாயகன் ஒரு கைக்குழந்தையுடன் இருப்பார்.நாயகி வம்படியாய் காதலிப்பாள்.விடுகதை படத்தில் அப்பா வயதுள்ள நாயகனை நாயகி காதலிப்பாள்.இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்தால் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் கதை ரெடி.


சூர்யாவின் கைக்குழந்தையைப்பார்க்கும்போது  நாகார்ஜூனா-அமலா நடித்த சுட்டிக்குழந்தை படத்தில் வரும் குழந்தை நினைவு வருகிறது.ஆனால் அந்தக்கதை. வேற கதை.ஹோம் அலோன் ஹாலிவுட் படத்தின் அன் அபிஷியல் ரீமேக் அது.குழந்தை செய்யும் சுட்டித்தனங்கள்,அதைப்பிடிக்க வரும் திருடன் படும் பாடுகள் தான் கதை.

இதில் மமிதா பைஜூவின் சுட்டித்தனமான நடிப்பு ,க்யூட்டான முக பாவனைகள் பிரமாதம்.சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஜெனிலியா கேரக்டர் போல துறு துறுப்பெண்.இவரது நடிப்பு நாயகனின் நடிப்புக்கு இணையாக இருக்கும்


நாயகனின் அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார்.நாயகனின் முதல் மனைவியாக ரவீனா டாண்டன் நடித்திருக்கலாம்.

ஜி வி பிரகாஷ் குமார்தான் இசை.பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார்.

காமெடிக்கு யோகிபாபு ,குணச்சித்திர நடிப்புக்கு நாசர் மற்றும் ஒரு நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது.




ரசித்த வசனங்கள்

1 நம்ம பணம் ,ஸ்டேட்டஸ் எல்லாம் நமக்கு கவுரவமா இருக்கனும்,கர்வமா இருக்கக்கூடாது.

2 திருட்டுத்தனமா அன்பு காட்டுவார்,அது எனக்கு வேணும்னு தோணுச்சு.

3 ஒரு பையனைப்பத்தி நினைக்கும்போதே கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ் வரும்,தெரியுமா?

4 ரொம்ப ஒட்டாத,ஒட்டாதன்னு சொன்னேன்,இப்போப்பாரு ,எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு...

5 மனுசங்க பிரியறது சண்டை போடறதால் இல்லைங்க,சண்டைக்குப்பின் எப்படிப்பேசறதுன்னு தெரியாததால்தான்.

7 ஜெயிக்கறவரைக்கும் நிற்கக்கூடாது,ஜெயிச்சபின் அதைப்பத்தியே பேசிட்டு இருக்கக்கூடாது.

8 இப்போ எதுக்கு சந்திரமுகி  ஜோதிகா மாதிரி பிஹேவ் பண்றே?



மகுடம்

விஷால் முதல் முதலாக இயக்குநராகக்களம் இறங்கி இருக்கிறார்.ட்ரெய்லரில் மூன்று விதமான கெட்டப்களில் வருவதால் மூன்று  வேடங்களில் நடித்திருப்பாரோ?என பலரும் யூகித்த வேளையில் அது டபுள் ஆக்சன் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.அப்பா,மகன் என இரு கேரக்டர் தான்.அப்பாவின் பிளாஸ்பேக்கில் இளமைத்தோற்றம்.ஆக மொத்தம் 3 கெட்டப் ,2 வேடங்கள்.


நாயகன் ஒரு மெடிக்கல் ரெப்.நாயகனின் அப்பா மிகப்பெரிய டாண்..அப்பா கேரக்டருக்கு ஜோடியாக அஞ்சலி.இவருக்கு ஒரு ஆக்சன் சீக்வன்ஸ் உண்டு.ஒரு செமகுத்தாட்டம் கூட இருக்கிறது.

நாயகனின் அப்பா பெரிய கேங்க்ஸ்டர்.ஒரு துறைமுகத்தையே கட்டி ஆள்பவர்.பெயர் லிங்கா.அப்பா கேரக்டருக்கு. ஒரு பழைய ரீமிக்ஸ் சாங்க் இருக்கிறது.

லோகேஷ் கனஜராஜ் தான் இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தார்.பழைய ஹிட் பாட்டைப்பின்னணியில் ஓடவிட்டு பைட் சீக்வன்சை அமைப்பது.

லிங்கா கேரக்டருக்கு ஒரு வில்லத்தனமான ஓப்பனிங்க் சீன் இருக்கிறது. எரியும் பிணத்தில் இருக்கும் தீயிலிருந்து சிகரெட்டுக்கு நெருப்பு எடுப்பது.இது புதிய பாதை படத்தில் ஆர் பார்த்திபன் ஏற்கனவே செய்தது தான் என்றாலும் இதில் இன்னமும் சுவராஸ்யப்படுத்தி இருந்தார்கள்.

மகன் கேரக்டருக்கு ஜோடி துஷாரா.

அப்பா கேரக்டருடன் ஒரு நண்பர் பிளாஸ்பேக்கில் இருக்கிறார்.ஆனால் நிகழ்காலத்தில்    வயதான அப்பா கேரக்டருடன் நண்பர் இல்லை.அப்போ பாட்ஷா படத்தில் வருவது போல நண்பரைக்கொன்றவரைப்பழி வாங்கும் கதையாக இருக்கலாம்.

சூப்பர் குட் பிலிம்சின் 99 வது படம் இது.



ரசித்த வசனங்கள்

1 கடல்ல வாழறவன் வேற,அந்தக்கடலையே ஆள்றவன்  வேற.

2 லிங்கா முடிவெடுத்துட்டா அது முடிஞ்சிடுச்சுனு அர்த்தம்.

3 அந்தப்பையன் மீது கை வெச்சுடலையே?

4 அந்த சரக்கை இறக்க மாட்டேன்,வேற யாரையும் இறக்கவும் விட மாட்டேன்.


இப்போது க்ளைமாக்ஸ்க்கு வருவோம்.விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பேமிலி எண்ட்டர்டெய்னர் படமாக இருக்கும்,மகுடம் ஆக்சன் மசாலாவாக இருக்கும்.48 மணி நேரம் காத்திருக்கத்தான் வேண்டும்.ஒருவேளை இரண்டுமே ஹிட் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.என் கணிப்பு சூர்யா முந்திவிடுவார் என்பது.

Thursday, August 13, 2026

இதயம் முரளி (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)@Netflix


 இயக்குநர் சேரன் நடித்த ஆட்டோகிராப் (2004) 50% + முரளி நடித்த இதயம்(1991)  40% + ஷங்கரின் ஜீன்ஸ் (1998)10%  இந்த மூன்று படங்களை வைத்து ஒரு படமாக எடுத்தது தான் இந்த இதயம் முரளி


இதயம் படத்தில் படத்தின் நாயகன் தன் காதலை தான் காதலித்த  நபரிடம் சொல்ல முடியாமல் தவிப்பார்.இதில் ஆட்டோகிராப் படத்தில் வருவது போல் ஸ்கூல் லவ்,காலேஜ் லவ்,ஆபீஸ் லவ் என வெவ்வேறு கால கட்டங்களில் தான் விரும்பிய வெவ்வேறு பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல்நாயகன்  தவிப்பது தான் கதை.ஜீன்ஸ் பட மேட்டர் எங்கே எப்படி வருகிறது என்பது சஸ்பென்ஸ்


ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் வெளிநாட்டில் (யு எஸ் சில்) வேலை செய்பவன்.நாயகனின் மாமா அவருக்கு போன் பண்ணி " நாளை உனக்குக்கல்யாணம்.எப்போக்கிளம்புவே?எப்போ வருவே?எனக்கேட்க  நாயகன் பிளைட்டில் கிளம்புகிறான்.

நாயகன் விமானப்பயணத்தின் போது தனது பள்ளிக்காதல்,காலேஜ் காதல்,ஆபீஸ் காதல்  என எல்லாக்காதல்களைப்பற்றியும் சொல்கிறான்.

மூன்று காதல் சம்பவங்களிலும் நாயகன் தன் காதலை யாரிடமும் சொல்லி இருக்க மாட்டார்.

திருச்சியில் நாயகன் பள்ளிப்படிப்பு படிக்கும்போது ஒரு நாயகியை சந்திக்கிறார்.காதலிக்கிறார்.ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்.நாயகன் பார்த்தது,காதலித்தது  ஒரு. நாயகியை. நாயகிக்கு ஜீன்ஸ் படத்தில் வருவது போல் ஒரு  ட்வின்ஸ் சிஸ்டர் இருக்கிறார்.இதில் குழப்பம் நேர்கிறது.


பிறகு சென்னையில் காலேஜ் படிக்கும்போது இன்னொரு நாயகியை சந்திக்கிறார்.காதலிக்கிறார்.இங்கேயும் காதலை சொல்லவில்லை.

பிறகு நண்பனின் திருமணத்தில் எல்லோரையும்  சந்திக்கிறார்.யாரிடம் காதலை சொன்னார்.யாருடன் கல்யாணம் நடந்தது ?என்பது க்ளைமாக்ஸ்



நாயகனாக அதர்வா.இதயம் பட முரளி கேரக்டர் கலகலப்பாக ,ஜாலியாக  இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் இவர் கேரக்டர் டிசைன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன் ,கயாடு லோஹர் ,நிஹாரிகா நடித்திருக்கிறார்கள்.

ப்ரீத்தி முகுந்தனின் ஆடை வடிவமைப்பு அருமை.கயாடு லோஹர் குடும்பப்பாங்காக,கண்ணியமான உடையில் வருகிறார்.

நாயகனின் நண்பனாக   இசை அமைப்பாளர் தமன் , யூ ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர் நடிப்பு கச்சிதம். நாயகனின் தாய்மாமாவாக. வரும் நட்டி யின் நடிப்பு சுமார் ரகம் தான்.

பகத் பாசில் ,சின்னி ஜெயந்த் இருவர் நடிப்பும் அருமை.

டீச்சராக வரும் ஜொனிட்டா மனதில் தங்குகிறார்.விரைவில் தனி நாயகி ஆகலாம்.

பப்லு கடுப்பேற்றும் விதத்தில் நடித்திருக்கிறார்.

டிராவிட்,ரக்சன் ஆகியோர் நடிப்பு பரவாயில்லை ரகம்.

மனோஜ் பரமஹம்சன் ,சாய் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.கண்ணுக்குக்குளுமையான காட்சிகள்.எஸ் தமனின் இசையில் 5 பாடல்கள்.ஓக்கே ரகம்.
பிரதீப் ஈ ராகவின் எடிட்டிங்கில் முதல் பாதி ஜாலி ,கலகலப்பு ,பின் பாதி இழுவை.

ரன்னிங் டைம்  164 நிமிடங்கள்..

இயக்கி இருப்பவர் ஆகாஷ் பாஸ்கரன்.




சபாஷ் டைரக்டர்


1 ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒத்திக்கொள்வது போல் பிரம்மாண்டமாக எடுத்த விதம்.குறிப்பாக நாயகிகள் ப்ரீத்தி முகுந்தன்,கயாடு லோஹர் இருவரையும் அழகாகக்காட்டிய விதம் அருமை.கலர்புல் காட்சிகள்

2  யூ ட்யூப் பிரபல காமெடியனின் காமெடி டிராக் கலகலப்பு.

3 இதயம் பட ரெப்ரன்ஸ். சின்னி ஜெயந்த் மூலம் தருவதும் ,அந்த டயலாக்சும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது

4 நைண்ட்டீஸ் கிட்சைக்கவரக்கூடிய நாயகனின் ஸ்கூல் போர்ஷன் அருமை.

5 கெஸ்ட் ரோலில் வரும் பகத் பாசிலை வைத்து பிளாஸ்பேக் சொல்லவே உங்களை நேர்ந்து விட்டிருக்காங்க என ஓப்பனிங்கில் காமெடியும் செய்து அவரை வைத்து க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட்டும் கொடுத்தது அடடா..



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 படத்தில் பாடல்கள் அடுத்தடுத்து கேப் விடாமல் வருவது ஏனோ?இரு பாடல்களுக்கு இடையே போதிய இடைவெளி வேண்டும் என்ற அடிப்படை விதி யை பின்பற்ற வேண்டாமா?

2 யூ ட்யூப் சேனலில்  பிரமாதமாகக்காமெடி செய்யும் பரிதாபங்கள் புகழ் சுதாகர் படத்தில் அந்த அளவு குவாலிட்டி இல்லை

3. பல காட்சிகள் பல படங்களில் பார்த்ததாக இருப்பது மைனஸ். பிரெஷ் ஆக யோசித்திருக்கலாம்.

4 படத்தில் எங்குமே எமோஷனல் கனெக்ட் ஆகவே இல்லை.


 அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


cps கமெண்ட் - முதல் பாதி கல கல ,பின் பாதி இழுவை ,திரைக்கதை ,காட்சி அமைப்புகளில் புதுமை இல்லை. ஓக்கே ரகம் தான்.பிரமாதம் எல்லாம் இல்லை.ரேட்டிங். 2.5/5

Wednesday, August 12, 2026

I,Nobody(2026)- மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர்)

 


பிரிதிவ்ராஜ் சுகுமாரனின் சொந்தப்படம் இது.அசீப் அலி-வீணா நந்தகுமார் நடித்த .Kettiyollaanu Ente Maalakha(2019),ரொமாண்டிக் காமெடி மூவி,மம்முட்டி-கிரேஸ் ஆண்ட்டனி நடித்த Rorschach(2022) ரிவஞ்ச் திரில்லர் மூவி ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கி இருக்கும் படம் இது.ஹெய்ஸ்ட் திரில்லர் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் இது சஸ்பென்ஸ் திரில்லர் கேட்டகிரியில் தான் வரும்.


2021 ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான நோ படி படத்துக்கும்,இந்தப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

9/7/2026 முதல் கேரளாவில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 10/7/2026  முதல்தமிழகத்தில்  தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது

நான் உங்களைப்போல் சாராரணமானவன்,வேறு யாரும் இல்லை என்பதுதான் படத்தின் டைட்டிலுக்கான அர்த்தம்.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் தன்னுடைய மனைவி,இரு மகள்களுடன் வாழ்ந்து வருபவன்.நடுத்தரக்குடும்பம்.கணவன் ,மனைவி இருவரும் பணிக்கு  செல்பவர்கள்.

ஒரு நாள் நாயகன் ஒரு வேலையாக வங்கிக்கு செல்கிறான்.ஒரு மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் அந்த வங்கியில் 17 கோடி ரூபாய் பணத்தைக்கொள்ளையடிக்கிறது.பணயக்கைதியாக வங்கியில் இருந்த நாயகனை அழைத்துச்செல்கிறது.

கொள்ளையடிக்க வந்த வண்டியிலிருந்து இன்னொரு வண்டிக்கு மாறியதும் நாயகனை விட்டு விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் பயணித்த வண்டி விபத்துக்குள்ளாகி கொள்ளையர்கள் மூவரும் ஸ்பாட் அவுட்.

ஆனால் கொள்ளையடித்த பணத்தைக்காணவில்லை.போலீஸ் விசாரணை நடக்கிறது.
நாயகனுக்கும் ,இந்தக்கொள்ளை கும்பலுக்கும் எதோ தொடர்பு இருக்கிறது என போலீஸ் சந்தேகிக்கிறது.இந்த சமூகமும் நாயகன் மேல்  வெறுப்பை உமிழ்கிறது.

நாயகன் இந்தப்பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்தாரா?அதற்காக என்னென்ன செய்தார்?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக பிரித்விராஜ் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒரு அமைதியான நடுத்தரக்குடும்பஸ்தனைக்கண் முன் நிறுத்துகிறார்.ஒரு கண்ணில் அடிபட்ட பின்  ஒரு மாதிரியாக ஒரு கண்ணால் பார்ப்பதை சிரமப்பட்டு உழைத்திருக்கிறார் காசி படத்தில் விக்ரம் இதே போல் உழைத்திருந்தார்.

நாயகனின் மனைவியாக பூ படப்புகழ் பார்வதி பாந்தமான ரோல்.ஆனால் அதிக வாய்பில்லை.வந்த வரை ஓக்கே.

நாயகனின் பெண் குழந்தைகளாக வரும் நட்சத்திரா ,ஐரா இருவரும்  அழகு செல்லங்கள்.

இவர்கள் போக ஹக்கீம் ஷாஜகான்,அசோகன்,மதுபால்,சந்திரன்,விஜயராகவன்,ரோனி வர்கீஸ் உட்பட அனைவரும் அவரவருக்குக்கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஜேக்ஸ்  பிஜோயின் இசையில் ஆங்கிலப்பாடல்கள்,ஹிந்திப்பாடல்கள் அதிகம்.இது எதற்காக என்று தெரியவில்லை.பின்னணி இசை கச்சிதம்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கலக்கல் ரகம். எம்.பி ரமீசின் எடிட்டிங் கில் படம் 168. நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் இழுவை.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

சமீர் அப்துல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.முதல் பாதி திரைக்கதையை க்ரிஸ்ப் ஆக எழுதியவர் பின் பாதித்திரைக்கதையை நம்ப முடியாத தெலுங்கு ஆக்சன் மசாலா ரேஞ்சுக்கு எழுதி விட்டார்.


நிக்சன் ஜார்ஜின் சவுண்ட் டிசைனிங் ஒர்க் பிரமாதம்.ஆக்சன் கொரியோகிராபியை மூவர்  கொண்ட குழு வடிவமைத்திருக்கிறது.அதகளமான ஆக்சன் சீக்வன்ஸ் .லிப்ட் பைட்,ஸ்ட்ரீட் பைட்,ஓப்பனிங்க் பைட் அனைத்தும் அருமை.


சபாஷ் டைரக்டர்

1 பரபரப்பான ,விறுவிறுப்பான ,கலக்கலான திரைக்கதையுடன் முதல் பாதி அருமை.ஒரு  சீன் கூட போர் அடிக்கவில்லை.

2 இடைவேளை பிளாக் சீனுக்கு முன் வரும் அமளிதுமளியான மூன்று சம்பவங்கள் செம.கவன் என்ற தமிழ்ப்படத்தில் இதே போல் இண்ட்டர்வெல் பிளாக் சீனுக்கு முன் 2 செமயான சம்பவங்கள் வரும்.

3  லிப்டில் நடக்கும் ஆக்சன் பிளாக் செம. கேமரா கோணம் செம.

4 காருக்குள் நடக்கும் ஆக்சன் சீன  கேமராவில் சுழற்றி சுழற்றிக்காட்டுவது இப்போது பேஷனாகி விட்டது.இதிலும் அப்படி ஒரு சம்பவம் எடிட்டர்,ஒளிப்பதிவாளர் இருவரும் இணைந்து கலக்கி இருக்கிறார்கள்.

5 கணவன் ,மனைவிக்குள் நிகழும் கருத்து மோதலை படமாக்கிய விதம்.

6 பேங்க் ஹெய்ஸ்ட் திரில்லரில் ஒரு காதல் விஷயத்தைப்புகுத்திய விதம்.
7 நாயகனுக்கு இளைய மகளுடனான பாண்டிங் அருமை.

8 யூ ட்யூபில் வரும் விஷயத்தை நம்பி மக்கள் எப்படி திசை திரும்புகிறார்கள் என்பதைக்காட்டிய விதம் குட்.

9 ஓப்பனிங்க் சீனில் நாயகன் வங்கிக்கு செல்லும்போது துப்பாக்கியை ஏன் எடுத்துச்செல்கிறார்?என்ற சஸ்பென்சை ஓப்பன் செய்த விதம் குட்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 பின் பாதி திரைக்கதை யில் சுவராஸ்யமான சம்பவங்கள் எதுவுமே இல்லை.
2 கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே இருக்கிறது என்பது ஆடியன்சான நமக்குத்தெரிந்து விடுகிறது.ஆனால் படத்தில் யாருக்கும் தெரியவில்லை.இது எடுபடவில்லை.

3 முதல் பாதியில் பிரில்லியண்ட்டாகத்திரைக்கதை அமைத்தவர்கள் பின் பாதியில் தெலுங்கு ஆக்சன் மசாலா போல் தேவை இல்லாத ஹீரோ பில்டப் பைட்ஸ்  இணைத்துத்திணித்து சொதப்பி விட்டார்கள்.
4 நாயகி தன் மகளைக்காணோம்,,பார்த்தீங்களா?எனக்கேட்பது அபத்தமான காட்சி.

5 கடை வீதியில் எல்லோரும் பார்க்கும்படி அவ்ளோ பெரிய பேக்கை நாயகன் தூக்கிக்கொண்டு வருவது ஏற்புடையதே அல்ல.

6 மினிஸ்டரைக்கிண்டல் செய்யும் காட்சி,வசனம் தேவை இல்லாத காட்சி

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


 CPS கமெண்ட் - பிரமாதமான முதல் பாதி ,சொதப்பலான பின் பாதி ,சராசரியான சஸ்பென்ஸ் திரில்லர்.பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5