Tuesday, October 31, 2023

திவ்யா டெலிகிராம் சேனல் மோசடி -ரூ42 லட்சம் இழந்த ஐ டி ஊழியர்

  இப்போது  அதிகம்  சம்பாதிப்பது  ஐ டி  ஊழியர்கள்தான் ஆனால்  அப்படி  சம்பாதித்த  பணத்தை  பேராசையால்  இழந்த அனுபவங்களும்  உண்டு . ஒரு  ஐ டி  ஊழியர்  வாட்சப்க்கு  ஒரு  தகவல்  வருகிறது . நீங்கள்  சில  விளம்பரங்களைப்பார்ப்பதன்  மூலம்  எக்ஸ்ட்ரா  வருமானம்  பார்க்கலாம். அதைப்பார்க்கும்  அளவுக்கு  உங்கள் அக்க்வுண்ட்டில்  பணம்  கிரெடிட்  ஆகும்  என்ற  தகவல்  வருகிறது 


 அவரும்   அந்த  நபரின்  வழிகாட்டுதல்  படி  ஒரு டெலிகிரா,ம்  சேனலில்  ஃபாலோயராக  சேர்கிறார். சில  யூ  ட்யூப்  வீடியோக்களை  முதலில்  அனுப்பி  அதற்கு  லைக்ஸ்  போடச்சொல்லி இருக்கிறார்கள் ., அந்த  டெலிகிராம்  க்ரூப்பில்  ஆல்ரெடி  சிலர்  உறிப்பினர்களாக  இருக்கிறார்கள் ., பிறகு  அவரிடம்  நீங்கள்  ஷேர்  மார்க்கெட்டில்   நாங்கள்  சொல்லும் ஷேரில்  பணம்  போட்டால்  நல்ல  வருமானம்  கிடைக்கும்  என்று  கேன்வாஸ் பண்ணி  அவரை  பிரெய்ன் வாஷ்  பண்ணி சம்மதிக்க  வைத்திருக்கிறார்கள் 


 மார்ச்  மாதம்  24 ம்  தேதி  2023  ல்  இருந்து  இந்த  வேலை  நடக்கிறது . அவரும்  தன்  மனைவி  அக்கவுண்ட்  மூலம்  42  லட்சம்  ரூபாய்  ட்ரான்ஸ்ஃபர்  செய்து  இருக்கிறார்.பிறகு  அவர்கள்  சொன்ன  தகவல்  உங்கள்  42 லட்ச  ரூபாய்  பணம்  இப்போது  69  லட்சம்  ஆகப்பெருகி  விட்டது  .  டெலிகிராம்  க்ரூப்பில்  இருந்த  மற்ற  சிலரும்  அதை  ஆமோதித்து  இருக்கிறார்கள் ஆமாம், உங்கள் பணம்  பெருகி  விட்டது , நாங்களும்  பார்த்தோம்  என  தெரிவித்து  இருக்கின்றனர் . உடனே அந்தப்பணத்தை   எடுக்க  முயன்றிருக்கிறார். ஆனால்  அப்படி  வெளியே  எடுக்க  வேண்டும்  எனில்  இன்னும்  கொஞ்சம்  பணம்  கட்ட  வேண்டும்  என்றிருக்கிறார்கள் . அவர்  இப்போது  போலீசில்  புகார்  கொடுத்திருக்கிறார் . விசாரணை  போய்க்கொண்டு  இருக்கிறது


 எனவே  யாரும்  இது  போல  ஆசை  வார்த்தை  சொன்னால்  நம்பி  ஏமாறாதீர்கள் 


கட்டுரை எழுதிய  நாள்  1/6/2023 

Monday, October 30, 2023

ராக்கெட் மாதிரி உயரும் ரயில்வே பங்கு - ஒரு பார்வை

ரயில்வே  துறையில்  IRCTC , IRFC      என  மோனோபோலி  ஸ்டாக்குகள்  இருந்தாலும்  RVNL    ஏனும் ரயில்வே விகாஸ்  நிகாம்  லிமிட்டெட்  எனும் ஷேர்  மிக  வேகமாக  உயரும்  பங்காக  மாறி  உள்ளது 



 2022 ஆம்  வருடம்  மே மாதம்  4  ம் தேதி  அன்று  ரூ 32  இருந்த  பங்கின்  விலை  ஒரே ஆண்டில் 322%  கூடி  இன்று  அதாவது மே 5  2023  அன்று  ரூ 141.85  ஆக  உள்ளது 


இது  முதலீட்டாளர்களுக்கு  மிகப்பெரிய  ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும்  அளித்துள்ளது . இது  ஒரு  மல்ட்டி பெக்கர் ஸ்டாக்  ஆக  மாறி  உள்ளது .


காரணங்கள்

1    2021-2022   கால கட்டத்தில் 18  பிராஜெக்ட்களை வெற்றிகரமாக  முடித்துள்ளது  

2   கை வசம் 73  பிராஜெக்ட்கள்  முடிக்க  வேண்டிய  நிலையில்  இருக்கின்றது 


3    2020 - 2021  கால  கட்டத்தில்  102  பிராஜெக்ட்களை  வெற்றிகரமாக  முடித்துள்ளது  

4   ரூ 58000 கோடி  க்கான  ஆர்டர்  ரஷ்யா  கம்பெனியுடன்  சேர்ந்து  முடிக்க  உள்ளது 

5  வந்தே  பாரத்  ரயில்வே  திட்டத்தில்  ஆர் வி என் எல் -ன்  பங்கும்  இருக்கிறது 

4  ஹெச் ஆர் டி ஐ   எனும்  தனியார்   நிறுவனம்  கடந்த  வாரத்தில்  7  லட்சம்  ஆர்விஎன் எல் பங்குகளை  வாங்கி  உள்ளனர் 


 கடந்த  கால  வரலாறு 

 2019 ம்  ஆண்டில்  மார்க்கெட்டில்  லிஸ்ட்  ஆகும்போது  20  ரூபாய்க்கு  இருந்த  பங்கு  கோவிட்  காலத்தில் 11  ரூபாய்க்கு  இறங்கியது . 2021  ஜனவரியில் தான்  இதன்  பங்கு 25  ரூபாயாக  உயர்ந்தது  பின் 2022  செப்டம்பரில்  46  ரூ  ஆக  உயர்ந்தது


பங்கு  லிஸ்ட்  ஆகும்போது  இந்தப்பங்கை  நீங்கள்  வாங்கி  இருந்தால்  இப்போது  422%  உயர்வு  ஆகும் . 


இப்போது வாங்கினாலும்  ரூ 150 டூ  ரூ 175  வரை  உயர  வாய்ப்புள்ளது ., இறங்கினால்  ரூ 100  வரை  இறங்கலாம், எனவே  ரிஸ்க்  புரிந்து  முதலீடு  செய்யவும் 


 நான்  செபியில்  பதிவு  பெற்ற  நபர்  கிடையாது . இந்தப்பங்கை  வாங்குங்கள்  வாங்க  வேண்டாம்  என  சொல்லவில்லை , இது  எஜூக்கேஷன்  பர்ப்பஸ்  கட்டுரை  மட்டுமே 


இதன்  புக்  வேல்யூ 11  ரூபாய் . ஒரு  பிராஜெக்ட்டில் 200 கோடி  ரூபாய்  லாபம்  பெறுகின்றனர் . ஷேர் ஹோல்டிங்க்  பேட்டர்ன் ல  பார்த்தாலும்  அரசாங்கத்திடம் 91%  உள்ளது ,. பொது  மக்களிடம் 9 % தான்  உள்ளது . இது  மிகவும்  பாதுகாப்பானது 


கட்டுரை  எழுதிய  நாள் - 5/4/2023  

SHANTHOSHAM (2023) - சந்தோஷம் - (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

   


புது  வசந்தம்  இயக்கிய  விக்ரமன்  பட  ஃபார்முலா  படி  எதிர்மறை  கதாபாத்திரங்களே  இல்லாத  ,அனைவரும்  நல்லவர்களாக  உலா  வரும்  கதை , அக்கா, தங்கை  பாசம்  தான்  ஒன்  லைன் . மாமூல்  மசாலா  டப்பாப்படங்களை  ரசிப்பவர்கள்  ஒன்  ஸ்டெப்  பேக் 


        ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  +2  படிக்கும்  மாணவி. அம்மா, அப்பா, பாட்டியுடன்  வசித்து  வருகிறார். நாயகிக்கு  17  வயதாக  இருக்கும்போது  ஒரு  தங்கைப்பாப்பா  பிறக்கிறாள் . வயது  வித்தியாசம்  அதிகமாக  இருந்தாலும்  அக்கா , தங்கை  ஆக  இல்லாமல்  மகளைப்போல்  தன்  தங்கையை  கவனித்துகொள்கிறார்


தங்கைக்கு  எட்டு  வயது  ஆகும்பொது  நாயகிக்கு 25  வயது . திருமணம்  பற்றிப்பேச்சு  எடுத்தால்  நாயகி எனக்கு  இப்போ  என்ன  அவசரம்  என  தட்டிக்கழிக்கிறார்


 தன்  தங்கையின்  மீது  அதீத  அக்கறை  எடுத்து  கண்டிஷனுடன்  வளர்ப்பதால்  தங்கை  ஸ்கூல்  ஃபர்ஸ்ட்  மார்க்கில்  பாஸ்  ஆகிறாள் , ஆனால்  தங்கைக்கு  ஒரு  குறை . தனக்கு  என  ஒரு  சுதந்திரம்  இல்லை .  எல்லாவற்றையும்  தன்  அக்கா  தான்  தீர்மானிக்கிறார்


 இப்பொதுதான்  தங்கைக்கு  ஒரு  ஐடியா  வருகிறது . நாயகியை  அதாவது  அக்காவை  ஒரு  ஆள்  சுற்றிச்சுற்றி  வருகிறான், அவன்  காதலுக்கு  நாம்  உதவி  செய்தால்  அக்காவின்  மனசு  டைவர்ட்  ஆகும். நம்மைக்கண்டுக்க  மாட்டா.  அவ  ரூட்  மாறிவிடும், நாம்  சுதந்திரமாக  இருக்கலாம்  என  திட்டம்  இடுகிறாள்


அதன்படியே   செய்கிராள் . நாயகி  காதலில்  விழுகிறாள் . தன்  தங்கையைக்கண்டு  கொள்வதில்லை . ஆனால்  தங்கை இப்போது  5வது  ரேங்க்  தான்


 நிழலின்  அருமை  வெய்யிலில் தான்  தெரியும்  என்பது  போல  அக்காவின்  முக்கியத்துவம்  தங்கைக்கு  இப்போதுதான்  ட்தெரிய  வருகிறது . அதனால்  பழையபடி  அக்காவை  தன்  பக்கம்  இழுக்க  அவள்  காதல்  பிரேக்கப்  ஆக  வேண்டும்  என  நினைக்கிறாள் , இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக   கேரளத்து  கிளியோபாட்ரா  அனு  சிதாரா. +2  படிக்கும்  மாணவியாக  25  வயதான  இவரை  எப்படி  பார்ப்பது  என்ற  கவலை  வேண்டாம் ., குமரிக்கோட்டம்  படத்தில்  எம் ஜி ஆர்  ரையே  நாம்  காலேஜ்  ஸ்டூடண்ட்  ஆக  ஏற்றுக்கொண்டோம்


ஆடை  வடிவமைப்பில் சிகை  அலங்காரத்தில்  எப்போதும்  கவனம்  செலுத்தும்  நாயகி  இதிலும்  பக்காவாக  இருக்கிறார். நடிப்பிலும்  குறை  வைக்க வில்லை 


தங்கை  ஆக லட்சுமி  மிகச்சிறப்பாக  நடித்திருக்கிறார். பேபி  ஷாலினி  மாதிரி  ஓவர்  ஸ்மார்ட்  ஆக  ஓவர்  ஆக்டிங்  எல்லாம்  பண்ணாமல்  யதார்த்தமாக  நடித்திருக்கிறார்


 அப்பாவாக கலாபவன்  சாஜன்  அருமையான  நடிப்பு , குறிப்பாக  க்ளைமாக்சில் பெண்ணைப்பெற்றவர்கள்  பற்றிப்பேசும்  டயலாக்கில்  கண்  கலங்க  வைக்கிறார் . அம்மாவாக , பாட்டியாக  நடித்தவர்கள் நடிப்பும்  அருமை 


 நாயகிக்கு   ஜோடியாக   அமித்  சக்கலக்கல்  நடித்திருக்கிறார் , இருவருக்கும்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகவில்லை  என்றாலும்  அது  பெரிய  குறையாகத்தெரியவில்லை ,ஏன்  எனில்  இத்  லவ்  ஸ்டோரியோ , தம்பதி  கதையோ  இல்லை , அக்கா  -தங்கை  கதை


பி எஸ்  ஹெய்ஹரி  இசையில்  பாடல்கள்  இதம், பின்னணி  இசை  கச்சிதம். கார்த்தியின்  ஒளிப்பதிவில்  பகல்  வெளிச்சக்காட்சிகளே  அதிகம், தெளிவான  படப்பிடிப்பு  ஜான்  குட்டியின்  எடிட்டிங்கில்  2  ,மணி  நேரம்  படம்  ஒடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  அஜித்  வி  தாமஸ் 




சபாஷ்  டைரக்டர்  (அஜித்  வி  தாமஸ் )


1  நாயகியின்  குடும்பத்தினர்  அனைவரும்  பர்ச்சேஸ்  செய்ய  ஜவுளிக்கடைக்குப்போகும் காட்சியில்  எல்லோரும்  கலர் , டிசைன்  பார்த்து  செலக்ட்  செய்ய  அப்பா  மட்டும்  விலை  அட்டையைப்பார்த்துப்பார்த்து  செலக்ட்  , ரிஜெக்ட்  செய்யும்  காட்சி  யதார்த்தம்  + காமெடி 

2  சிறுமியான  நாயகியின்  தங்கை  நாயகனுடன்  டான்ஸ்  ஆடும்போது  முயற்சித்த  ஒரு  டான்ஸ்  ஸ்டெப்பை  தன்  குடும்பத்தார்  முன்  ஆடிக்காட்ட  அதே  ஸ்டெப்பை  எல்லாரும்  ட்ரை  பண்ணுவதும் ,  ஆடுவதும்  க்யூட்  மொமெண்ட்ஸ் 


3  நாயகனின்  தங்கை  தன்  காதலனை  நாயகனின்  குடும்பத்தில்  அறிமுகப்படுத்தும்போது  அவன்  ஓவராகப்பம்முவதும், அமைதிப்படை அமாவாசை  போல  அடக்கி  வாசிப்பதும்  காமெடி  கலக்கல் 


  ரசித்த  வசனங்கள் 


1  இவ  யாரையும்  லவ்  பண்ணவும்  மாட்டா, மத்தவங்க  லவ்  பண்ணவும்  விட  மாட்டா

2  அப்பா , தொப்பையைக்குறைங்க , அப்பா  மாசமா  இருக்காருபோல, எப்போ  டெலிவரினு  ஃபிரண்ட்ஸ்  கிண்டல்  பண்றாங்க 


3  ஒரு  சின்னக்குழந்தையைக்கூட  கவரத்தெரியாத  நீ  எப்படி  அவ  அக்காவை  கரெக்ட்  பண்ணப்போறே? 


4  இந்த  ரைட்டர் கொஞ்சம்  ஓவர்  ரேட்டட்னு  எனக்குத்தோணுது , நீங்க  என்ன  நினைக்கறீங்க ?


அவரைப்பிடிக்கனும்னா வாசகன்  கொஞ்சம்  புத்திசாலியா  இருக்கனும்


5  என் பொண்ணு  ஒரு  பையனை  லவ்   பண்றது  எனக்குப்பிரச்சனை  இல்லை , ஆனா  அதை  நம்ம  கிட்டே  ஷேர்  பண்ணலையே?  நான்  இவளை  லவ்  பண்ணப்ப  உங்க கிட்டே தானே  முதல்ல  சொன்னேன், அம்மா?


 ஆமா, நான்  கூட  இவ  வேணாம்னு  சொன்னேன், நீ  கேட்கலை 


 டாப்பிக்  இப்போ  அதில்லை 


6  பெண்களோட  வாழ்க்கை  ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேசன் போல . அவங்க  பிறப்பது  , வளர்வது  ஒருஇடத்தில். திருமணத்துக்குப்பின்  அவங்களை  வேரொடு பிடுங்கி  வேறு  இடத்தில்  நட்டு  வளரச்செய்யறாங்க . அது  வளர்ந்து  பூத்து  , காய்த்து  கனி  கொடுக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகியின்  தங்கையிடம்  ஐஸ்க்ரீம்  தரும்  ஆள்  அவர்களால்  அது  மறுக்கபப்டவே  நான்கு  கோன்  ஐஸ் சையும்  கீழே  போட்டு  வீணாக்குகிறார்.உணவுப்பொருட்களை  வீண் ஆக்காமல்  அங்கே  போகும்  ஏழைக்குழந்தைகளுக்கு  தருவது  போல்  காட்சி  அமைத்திருக்கலாம்


2  பப்ளிக்  லைப்ரரிக்குப்போகும்போது  ர்ல்லோரும்  செல்  ஃபோனை  சைலண்ட்  மோடில் வைத்திருப்பார்கள் , ஆனால்  நாயகனுக்கு  லைப்ரரில  இருக்கும்போது  கால்  வருது , அவரும்  அசால்ட்டா  அட்டெண்ட்  பண்ணி  பேசிட்டு  இருக்கார்  


3  நாயகன்  நாயகியிடம்  லைப்ரரில  பேசிட்டு  இருக்கும்போது  அங்கே  அமர்ந்திருக்கும்  பப்ளிக்  யாரும்  கண்டு கொள்ளவே  இல்லை , சைலன்ஸ்  ப்ளீஸ்னு  சொல்லி  இருக்க  வேண்டாமா? 

4  நாயகி  தன்  தங்கையின்  டைரியை ரெகுலராகப்படிப்பது  போலவும், வாட்சிங்  மோட்லயே  இருப்பதாகவும்  ஓப்பனிங் ல  காட்றாங்க. அபப்டி  இருக்கும்போது  தன்  தங்கை  நாயகனுடன்    ஃபோனில்  அடிக்கடி பேசுவது , தன்னைப்பற்றிய  டீட்டெய்ல்ஸ்  தந்து  தன்னைகக்ரெக்ட்  பண்ண  நாயகனுக்கு  உதவியது  தன் தங்கை  தான்  என்பதை  ஏன்  கண்டு  பிடிக்க  முடியவில்லை ? 


5  திருமணத்துக்குப்பின்  நாயகன்  நாயகியிடம்  உன்னை  கரெக்ட்  பண்ண  உதவியது  உன்  தங்கை  தான்  என்ற  உண்மையை  சொல்லவே  இல்லையே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெண்கள் , ஃபேமிலி  ஆடியன்ஸ்க்குப்பிடித்தமான  படம் . ரேட்டிங் 2.75 / 5 


Santhosham
Theatrical release poster
Directed byAjith V Thomas
Produced byIsha Pattali
Ajith V Thomas
Starring
CinematographyKarthik A[1]
Edited byJohn Kutty[1]
Music byP S Jayhari[1]
Production
company
Mise-En-Scene Entertainment
Release date
  • 24 February 2023
CountryIndia
LanguageMalayalam

Sunday, October 29, 2023

POLICE STORY LOCKDOWN (2013) - சைனீஷ் - சினிமா விமர்சனம் ( எ ஜாக்கிசான் ஃபிலிம்) ( ஆக்சன் டிராமா) @ அமேசான் பிரைம்

   


  ஜாக்கி சான்  படங்களில்  என்னைக்கவர்ந்த  முக்கியமான  படம்  ஆர்மர்  ஆஃப்  காட். அதில்  தான்  அதிக  ரிஸ்க்  காட்சிகள்  இருந்தன. அதே  போல மிராக்கிள்ஸ்   படத்தில்  ஃபைட்ஸ்  எல்லாம்  செம்யா  இருக்கும்   ,ப்ரூஸ்லியை  விட  ஜாக்கிசானுக்கு  அதிக  ரசிகர்கள்  இருக்கக்காரணம்   அவரது  ரீ  ஆக்சன்  தான். ப்ரூஸ்லி  எதிரிகளிடம்  அடி  வாங்க மாட்டார், ஆனால்  ஜாக்கிசான்  ஓவராக  அடி  வாங்குவார். அதற்கான   ரீ  ஆக்சனை  நன்றாகக்காட்டுவார். அசால்ட்டாக  அவர்  ஜம்ப்  செய்யும்  காட்சிகள்  எல்லாம்  அப்ளாஸ்  அள்ளும்


35  மில்லியன்  டாலர்  செலவில்  உருவான இப்படம்  95  மில்லியன்  டாலர்  வசூலை  பாக்ஸ்  ஆஃபீசில்  குவித்துள்ளது


  ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனின்  தங்கை  ஒரு  பொறம்போக்கைக்காதலிக்கிறாள் .கர்ப்பம்  ஆகிறாள் . அண்ணனிடம்  சொல்ல  பயம் . மனம்  விரக்தி  அடைந்து  தற்கொலை  செய்ய  முடிவெடுக்கிறாள் . ஒரு  மெடிக்கல் ஷாப்  போய்  தூக்க  மாத்திரைகள்  வாங்கி  சாகலாம்  என  நினைக்கிறாள் . அவள்  போன  அதே  மெடிக்கல்  ஷாப்பில் தன்  அம்மாவுக்கான  மருந்துகளைத்திருட  ஒருவன்  வருகிறான். சந்தர்ப்ப  வசத்தால்  அவன்  மாட்டிக்கொள்வதால்  தப்பிக்க  சும்மா  மிரட்ட  வில்லனின்  தங்கையை  கத்தி  முனையில்  பிடித்து  அனைவரையும்  மிரட்டுகிறான். இதுதான்  சாக்கு  என  வில்லனின்  தங்கை  தன்  கழுத்தை  அதே  கத்தியால்  அறுத்துக்கொண்டு  சாகிறாள் 


 இந்த  விஷயம்  எல்லாம்  வில்லனுக்குத்தெரியாது . ஏதோ  பிரச்சனை.. மெடிக்கல்  ஷாப்பில்  தன்  தங்கை  மரணம். என்று  மட்டும்  தெரியும் . அந்த  சம்பவத்தின்  போது  அங்கே  இருந்தவர்களை ஒரெ  இடத்தில்  கொண்டு  வந்து  தங்கையின்  சாவுக்குக்காரணம்  ஆனவர்களை  பழி  வாங்க  நினைக்கிறான், 


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . அவருக்கு  ஒரு  மகள் , அவள்  ஒரு  பொறுக்கியைக்காதலிக்கிறாள் ( அழகான  பெண்கள்  நல்லவனைக்காதலிப்பதில்லை , பொறுக்கி   குடிகாரன், கஞ்சா  கேஸ்  , ரவுடி  இதுதான்  அவங்க  சாய்ஸ்) . அந்த  பொறுக்கியை  அப்பாவுக்கு  அறிமுகப்படுத்த  ஒரு  நைட் கிளப்புக்கு  குறிப்பிட்ட  நேரத்துக்கு  வரச்சொல்கிறாள்


நாயகன்  வருகிறான் . வில்லன்  அவர்களை  எல்லாம்  பிணையக்கைதிகளாக  வைத்துக்கொண்டு  ஒரு  டிமாண்ட்  வைக்கிறான். இவர்களை  எல்லாம்  நாயகன்  எப்படிக்காப்பாற்றுகிறான்  என்பதே  மீதி  திரைகக்தை 


 விஜய்  நடித்த  பீஸ்ட்  படத்தின்  கதை  நினைவுக்கு  வரலாம் . அதே  போல  முழுக்க  முழுக்க  ஒரு  நைட்  கிளப்பில் நடக்கும்  கதை 


 ஜாக்கிசான்   ஹேர்  கட்டிங்  வித்தியாசமாய்  இருந்தது . ஆக்சன்  காட்சிகள்  அடி பொலி  என  சொல்லும்  அளவு  இல்லை  என்றாலும்  ஓக்கே  ரகம்  தான். வயோதிகம்  காரணமாக  அடக்கி  வாசிக்கிறார் 


 வில்லன்  நல்லவன் என்  திரைக்கதை அமைத்தாலே  டேஞ்சர்  தான். நாயகன்  ஜெயிக்க  வேண்டுமா?  வில்லன்  தப்பிக்க  வேண்டுமா? என்ற  குழப்பம்  ஆடியன்சுக்கு  வந்து  விடும் ( உதா - எந்திரன் பாகம் 2 )



சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  தன்  மகளுடன்  பேசும்  செண்ட்டிமெண்ட்  காட்சிகள் . நாயகன்  தன்  மனைவியைக்காப்பாற்ற  முடியாமல்  போகும்போது  மகள்  கோபித்துக்கொள்வது  , பின்  புரிந்து  கொள்வது 


2  வில்லனின்  தங்கைக்கு  யாரால்  என்ன  ஆபத்து  ஏற்பட்டது? என்பதை  க்ளைமாக்சில்  விவரிக்கும்  விதம்.,.


3 வில்லனின்  தங்கைக்கு  என்ன  நடந்தது  என்பதை  ஒரே  வரியில்  டயலாக்காக  வைக்காமல்  காட்சியாக  ஜவ்வாக  இழுத்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த  க்ளப்  எப்படி  இருக்கு ?

 ஜெயில்  மாதிரி 


 அதுவும்  சரி  தான் , உள்ளே  வந்துட்டா  வெளில  போக  முடியாது 


2  [போலீஸ்காரங்க  லேட்டா  வர்றதை மட்டும்  இன்னும்  எத்தனை  வருடங்கள்  ஆனாலும்  மாற்ற  முடியாது 


3  என்ன? தனியா  வந்து  மாட்டிக்கிட்டியா?


 நீயும் தான்  தனியா  வந்திருக்கே


4 ஹார்ட்  அட்டாக்  வந்தவனை  எப்படிக்காப்பாத்தறதுனு  எனக்குத்தெரியும் , நெஞ்சுலயே  ஓங்கி  மிதிச்சா  சரி  ஆகிடும்


 அய்யய்யோ  விடுங்க . நான்  சும்மா  நடிச்சேன் 

5  தான்  வாழ  அடுத்தவங்களை  அழிக்கக்கூடாதுனு  சொல்வாங்க , ஆனா  ஆடுத்தவங்க அழிவுல  தான்  என்  வாழ்க்கையே  ஆரம்பிச்சுது 



6  வில்லனான  உன்  மனசு  திடீர்னு  ஏன்  இளகிய  மனம்  கொண்டதா  ஆச்சு ?


 சில  விஷயங்கள்  ஏன்  நடக்குதுனு  யாராலும்  சொல்ல  முடியாது 


7  வாழ்க்கை  ஒரு  காக்ட்டெயில்  மாதிரி   அதை ச் சந்தோஷமா  டேஸ்ட் பண்ணனும்


8  பெண்கள்  தற்கொலை  செய்து கொள்ளக்காரணமே ஆண்கள்  தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  மகள்  நாயகனைக்கடுப்பேற்றவே ஒரு  மாடர்ன்  லுக்  விக்  வைத்து  மேக்கப்  எல்லாம்  போட்டிருக்கிறாள் , வில்லன்  க்ரூப்  பணயக்கைதியாக  மகளைப்பிடித்து  வைத்திருக்கும்போது  மகள்  பாத்ரூம் போக  அனுமதி  கேட்டு  போகிறாள் , அங்கே  கண்ணாடி  முன்  தன்  விக்கைக்கழற்றி  சுய  ரூபத்துக்கு  மாறுகிறாள் . அப்போது  வில்லனின்  ஆள்  உள்ளே  வந்து  கிளம்பலையா? என  கேட்டதும்  கிளம்புகிறாள். மகளின்  ஹேர்  ஸ்டைல்  , கலர்  எல்லாம்  மாறியதை  அவன் ஏன்  கவனிக்கவில்லை ? 


2   வில்லன்  தன்  ஃபிளாஸ்பேக்  கதையை  ரெண்டு  லைன்ல  சொன்னாப்போதாதா? தேவையே  இல்லாம  வில்லன்  போட்ட  ஃபைட்  சீன்களை  எல்லாம்  திணிச்சு  இழுத்து  இது  ஆக்சன்  படம்னு  காட்டிக்கனுமா? 


3  நாயகன்  ஒரு  இடத்தில்  எந்த  உயிர்  போவதையும்  நான் விரும்ப  மாட்டேன்னு  சொல்றாரு, ஆனா  வில்லன்  தன்  அடியாளுடன்  ஃபைட்  போடச்சொன்னதும்  அவனை ஜெயிக்கற  அளவுக்கு  அடிச்சாப்போதாதா? கொல்லும்  அளவு  போகனுமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-ஜாக்கிசான் , ரஜினி  படங்கள்  பெரும்பாலும்  ஃபேமிலியுடன்  பார்க்கும்  தரத்தில்  தான்  இருக்கும் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாக்கிசான்  ரசிகர்கள்  மட்டுமே  பார்க்கலாம், மற்றவர்களை  பெரிய  அளவில்  கவராது . ஆவரேஜ்  வாட்ச்  . ரேட்டிங் 2.5 / 5 



Police Story 2013
Film poster
Traditional Chinese警察故事2013
Simplified Chinese警察故事2013
Hanyu PinyinJǐng Chá Gù Shì Èr Líng Yī Sān
JyutpingGing2 Caat3 Gu3 Si6 Ji6 Ling4 Jat1 Saam1
Directed bySheng Ding
Screenplay by
  • Sheng Ding
  • Yahui Wei
  • Yang Xu
  • Alex Jia
Story by
  • Chao Lv
  • Shuying Chen
  • Ying Gao
  • Huijuan Gao
  • Jianai He
Produced byJerry Ye
StarringJackie Chan
Liu Ye
Jing Tian
CinematographyYu Ding
Edited by
  • Sheng Ding
  • Ismael Gomez III
Music byZai Lao
Production
companies
Distributed byJackie & JJ International (Worldwide)
Emperor Motion Pictures (Hong Kong)
Release dates
  • 24 December 2013 (China)
  • 16 January 2014 (Hong Kong[1])
Running time
108 minutes
CountriesChina
Hong Kong
LanguageMandarin
BudgetUS$35 million
Box officeUS$94.2 million[2]

100 வருடங்கள் ஆயுள் நீடிக்க நாம் செய்ய வேண்டியவை- உடல் ஆரோக்கியம்- கட்டுரை


 பெரியவர்கள் ஆசீர்வாதம்  செய்யும்போது  100  வருடங்கள்  வரை  தீர்க்காயுசா  வாழனும்  என  வாழ்த்துவார்கள், ஆனால்  ஒரு  இந்தியனின்  சராசரி  ஆயுட்காலம் 63  என  சொல்லப்படுகிறது. அந்தக்காலத்துல்  ,மருத்துவ  வசதிகள் , விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள்  இந்த  அளவு  இல்லாதபோதே  நம்  முன்னோர்கள்  80  வயது  டூ  95  வயது  வரை  வாழ்ந்தார்கள் . ஆனால்  இந்த  காலகட்டத்தில்  75தாண்டுவதே  அபூர்வம்  ஆகிவிட்டது . 100  வருடங்கள் வாழும்  ஆசை  எல்லோருக்கும் இருக்கும், ஆனால்  அதற்கான  வழிமுறைகளை கடைப்பிடிப்போர்  கொஞ்சம் பேர் தான் . அந்த  வழி முறைகள்  என்ன?


நம்  உடம்பில்  உள்ள  முக்கியமான  6  உறுப்புக்ளை  பராமரித்தால்  போது, ஒவ்வொரு  உறுப்புக்கும்  நான்கு  விஷயங்கள் , ஆக  மொத்தம்  24  பாயிண்ட்கள் கவனிக்க  வேண்டும் 


1  மூளை   2  இதயம்  3 கல்லீரல்  4 எலும்பு & மூட்டு  5  செரிமாண  மண்டலம் ( ஜீரண  உறுப்புகள்  6  சிறு நீரகம் 


1  தினசரி  ஏழு  மணி நேரம்  டூ  எட்டு  மணி  நேரத்தூக்கம்

2 தினசரி   அரை  மணி  நேரமாவது  ஏதாவது  புதிய  விஷயங்களைப்படிக்க  வேண்டும் 

3  தினசரி  கால்  மணி  நேரமாவது  தியானம்  செய்ய  வேண்டும் . 

4  முடிந்தவரை   தினசரி  கொஞ்ச  நேரமாவது  சிரிக்க  வேண்டும், சிரித்த  முகத்துடன்  இருக்க  வேண்டும் 

=================================

5   வீட்டில்  சமைத்த  உணவுகளை மட்டுமே  சாப்பிட  வேண்டும், ஹோட்டல் , நடை பாதைக்கடைகளில் சாப்பிடுவதை  முடிந்த  வரை  தவிர்க்க  வேண்டும் 


6   தினசரி  45  நிமிடங்கள்  உடல் பயிற்சி  செய்ய  வேண்டும். ஜிம் முக்குப்போகனும்  என்ற  அவசியம்  இல்லை . நடைப்பயிற்சி , நீச்சல்  பயிற்சி , ஸ்கிப்பிங் , ஜாகிங்  எது  வேண்டுமானால்  இருக்கலாம்

7  மனழுத்தம் , ஸ்ட்ரெஸ் , டென்ஷன்  போன்றவற்றைக்குறைத்துக்கொள்தல் . அல்லது  எப்போதும்  மனதை  ரிலாக்சாக  வைத்துக்கொள்தல்


8   புகையிலை , சிகரெட் , மூக்குப்பொடி  போன்ற  கெட்ட  பழக்கங்கள்  இல்லாமல் இருத்தல் 

===========================

9   குடிப்பழக்கம்  இல்லாமல்  இருத்தல் 

10   மாவு  உணவுகள் , கார்போஹைட்ரேட்  உணவுகளை, கொழுப்புகள்  அதிகம்  உள்ள  உணவுகளை   எடுத்துக்கொள்வதை  குறைத்துக்கொள்தல் 


11   டாக்டர்  அட்வைஸ் இல்லாமல்  மெடிக்கல்  ஷாப்பில்  நீங்களாகவே  போய்  தலைவலி , காய்ச்சல்  என  எதற்கெடுத்தாலும்  மருந்து  மாத்திரை  எடுத்துக்கொள்வதை  தவிர்த்தல்


12  மூன்று  மாதங்களுக்கு  ஒரு  முறை  கல்லீரலை  சுத்தம்  செய்ய  கரிசலாங்கண்ணிக்கீரை  யை  உணவில்  சேர்த்துக்கொள்ள  வேண்டும் .. கல்லீரலை  பலபப்டுத்த  கை கால்களை  வீசி  நடைப்பயிற்சி  அடிக்கடி  மேற்கொள்தல் 


===================



13   கால்சியம் சத்து  உள்ள  பொருட்களை  உணவில்  எடுத்துக்கொள்தல் . உதாரணம்  பால் , தயிர் , மோர் , ராகி ( கேழ்வரகு)

14    முருங்கை  கீரை , முருங்கை  காய்   உணவில்  சேர்த்தல் 


15  நெய்யை  வாரம் 3  நாட்களாவது  உணவில்  சேர்த்தல் 

16  புரோட்டீன்  சத்து  உள்ளபொருட்களை  உணவில்  சேர்த்தல். நீங்கள்  80  கிலோ  எடை  உள்ளவராக  இருந்தால்  தினசரி  50  கிராம்  அளவாவது  புரதச்சத்து  தேவை . அதற்கு  பட்டாணி , சுண்டல் , பயிறு  வகைகள்  சாப்பிட  வேண்டும். இட்லி , தோசை  , சாப்பாடு  என  மாவுச்சத்து  பொருட்களையே  தொடர்ந்து  சாப்பிட்டால்  சரி  வராது . 


=====================


17  முழு  தானிய  உணவுகளை  எடுத்துக்கொள்தல் . ரிஃபைண்டு  பொருடகளை  தவிர்த்தல் மைதா, பட்டை  தீட்டப்பட்ட  அரிசி , அஸ்கா சர்க்கரை (  வெள்ளை  சர்க்கரை )) தவிர்த்தல்  நல்லது . தானியங்கள் ( ராகி , கம்பு , சோளம் ), சிறுதானியங்க:ள்( வரகு , சாமை , திணை , குதிரைவாலி )   பழகிக்கொள்ளவேண்டும் 

18 பேக்கரி  ஐயிட்டங்களான  வெள்ளை  சர்க்கரை + மைதா பொருட்களை  தவிர்த்தல் 

19  நார்ச்சத்து  மிக்க காய்கறிகள்  எடுத்துக்கொள்தல் . பெரும்பாலும்  அனைத்துக்காய்கறிகளிலும்  ஃபைமர்  எனும் நார்ச்சத்து  உள்ளது . சீசனுக்கு  ஏற்ற  அல்லது  சீசன்  டைமில்  கிடைக்கும்  பழங்களை  சாப்பிடுதல் . ஜூசாக  பழசாறாக  குடிக்காமல்  பழமாகவே  சாப்பிடுதல்  நல்லது 


20   ஃபிரைடு  அயிட்டங்களை  தவிர்த்தல் 


==============

21  இரத்த  அழுத்தத்தை  கட்டுப்பாட்டில்  வைத்தல் 120 / 80

22  இரத்த  சர்க்கரையை  கட்டுப்பாட்டில் வைத்தல். சாப்பிடும்  முன்  ரத்த  சர்க்கரை  அளவு  70 - 110  . சாப்பிட்ட  பின் 90-150.   பிபி  , சுகர்  உள்ளவர்கள் மூன்று  மாதங்களுக்கு  ஒரு  முறை  மெடிக்கல்  செக்கப்  செய்து  கொள்வது  நல்லது . மாத்திரைகளை  சரியாக  சாப்பிட்டு  கட்டுப்பாட்டில் வைக்க  வேண்டும் 

23  டாக்டர்  அட்வைஸ் இல்லாமல் பெயின்  கில்லர்ஸ் எனப்படும்  வலி  மாத்திரைகளை  மெடிக்கல்  ஷாப்பில் வாங்கி  சாப்பிடுவதை  தவிர்த்தல் 

24  சாராயம் , கள்ளச்சாராயம், சீமை  சரக்கு  போன்ற  ஆல்ஹஹால்  தவிர்த்தல் . தின்சரி  தேவையான  அளவு  தண்ணீர்  குடித்தல் 

Saturday, October 28, 2023

PAIN HUSTLERS (2023) - சினிமா விமர்சனம் ( ,மெலோ டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


  ஈவன்  ஹக்ஸ்  எழுதிய  நான் -ஃபிக்சன்  நாவல் ஆன  த  ஹார்டு  சேல்   கதைக்கருவை  தழுவி  எடுக்கப்பட்ட  படம்  இது . மருத்துவ  உலகில் நடக்கும்  மோசடிகள் , மருந்துக்கம்பெனிகளின்  தில்லுமுல்லுகள் , கமிஷனுக்கு  ஆசைப்பட்டு  டாக்டர்கள்  செய்யும்  தவறுகள்  பற்றிப்பேசுகிறது . டாக்குமெண்ட்ரி  ஸ்டைலில்  இல்லாமல்  ஒரு  பயோகிராஃபி  தொனியில்  திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கிறது   

      ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  சிங்கிள்  மதர். தன்  அம்மா, ஒரு மகளுடன்  வசித்து  வருகிறார். நைட்  கிளப்களில்  ஸ்ட்ரப்டீஸ்  டான்ஸ்  ஆடுவது  அவரது  பணி . ஒரு கவுரவமான  வேலை  செய்யலாம்  என  முடிவெடுத்து ஒரு  மருந்துக்கம்பெனியில்  மார்க்கெட்டிங்  எக்ஸ்க்யூட்டிவ்  வேலைக்கு  அப்ளை  செய்கிறார்


அதிர்ஷ்டவசமாக அங்கே  அவருக்கு  வேலை  கிடைக்கிறது ., ஆனால்  கம்பெனி  மேனேஜர்  நாயகியின்  ரெஸ்யூம், பயோ  டேட்டாவில்  சில  மாறுதல்களை  செய்கிறார். நாயகி  பள்ளிப்படிப்பு  தான்  முடித்திருக்கிறார், ஆனால் டிப்ளமோ  படித்தது  போல , அனுபவம்  உள்ளவர்  போல  பொய்யான  தகவல்களை  பதிவேற்றி  எப்படியோ  கம்ப்பெனி  எம் டி  யிடம் சொல்லி  பணியில்  அமர்த்தி  விடுகிறார்


நாயகி  வேலைக்கு  சேர்ந்திருக்கும்  மெடிக்கல்  கம்பெனி  லாஸ்ல  போய்க்கிட்டு  இருக்கு . மூழ்கிக்கொண்டிருக்கும்  கப்பலில்  பிரயாணம்  செய்ய  வந்திருக்கும்  பயணி  போல  உணர்கிறார். 


வாய்  உள்ள  பிள்ளை  பிழைக்கும்  என்பது  போல  நாயகி  தன்  கம்பெனி தயாரிக்கும்  பெயின்  கில்லர்  மெடிசனை  டாக்டர்களிடம்  மார்க்கெட்டிங்  செய்து  ஆர்ட்ர்  பிடிக்கிறார். அவரது  தொடர் உழைப்பால்  கம்பெனி  செம  சேல்ஸ்  டார்கெட்  அச்சீவ்  செய்கிறது. நாயகிக்கு  பிரமோஷன் , சம்பள  உயர்வு , இன்செண்ட்டிவ்  என  ஒரு  அள்ளு  அள்ளுகிறார்


நாயகிக்கு  அது  போலி  மருந்து  என்பது  தெரியாது . கேன்சர்  நோயாளிகளுக்கு  ஏற்படும்  வலியைக்குறைக்கும்  மருந்து  அது . சேல்ஸ்  நன்கு  முன்னேறவே  அது  எல்லா  வலிகளுக்குமான  பொது  நிவாரணி  என்ற  பொய்யான  தகவலைப்பரப்பி  டாக்டர்களை  பேஷண்ட்களுக்குப்பரிந்துரைக்க  கம்பெனி  கட்டாயப்படுத்துகிறது . இதில்  நாயகிக்கு  உடன்பாடில்லை 


ஒரு  கட்டத்தில்  அப்ரூவர்  ஆக  மாறி  போலீசிடம்  உண்மைகளை  எல்லாம்  சொல்கிறார். கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . இதற்குப்பின்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக  எமிலி பிளண்ட்   கச்சிதமாக  நடித்திருக்கிறார். மொத்தப்படத்தையும்  அவர்  தான்  தோளில்  சுமக்கிறார். அவ்ரது  யதார்த்தமான  நடிப்பு  படத்துக்கு  பக்க  பலம்


ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்   போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  நன்றாக  இருக்கின்றன


திரைக்கதை  அனுமதித்தும்  விரசமான  காட்சிகள்  வைக்காமல்  கண்ணியமான  நெறியாள்கை  பாராட்ட  வைக்கிறது 



சபாஷ்  டைரக்டர் ( டேவிட்  யாட்ஸ்)


1  டாக்டர்களை  , அவர்களின்  சுயநலத்தை  தோலுரிக்கும்  காட்சிகள்  அமர்க்களம்,  அவர்களிடம்  இருந்து  எதிர்ப்பு  வரும்  என்பது  தெரிந்தும்  போல்டான  காட்சிகளை  அமைத்த  விதம்  அருமை 


2  மெயின்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லாத  விஷயங்கள்  ஆன  நாயகி  ஏன்  டைவர்ஸ்  பெற்றார்?  நாயகனுடன்  என்ன  உறவு ? கம்பெனி  ஓனரை , டாக்டர்களை  அவர்  அட்ஜஸ்  செய்தாரா? இல்லையா?  என்பதை  விளக்காமல்  மேலோட்டமாக  காட்சிகளை அடுக்கிய  விதம்


  ரசித்த  வசனங்கள் 


1  நாம  ரெண்டு  பேரு  மட்டும்  இருந்தா  அதுக்குப்பெரு  ஈவெண்ட்  இல்லை , டேட்டிங்


2  உங்க  உயிருக்கே  ஆபத்து  என்பது  போல  நீங்க  வேலை  செய்யனும்


3  அதிகமா   வரி  கட்டுவதும்  ஒரு  ஸ்டேட்டஸ் சிம்பல்  தான்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  அம்மா  கம்பெனி  ஓனருடன்  நெருக்கமாக  இருப்பது , பணத்துக்காக  நீ  யார்   கூட  வேண்டுமானாலும்  இருப்பாய்  என  மகளே (நாயகி)  அம்மாவைக்குற்றம்  சுமத்துவது  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


2  கம்ப்பெனியில்  செல்வாக்குக்கிடைத்த  பின்  நாயகி  எதற்காக  தன்  அம்மா  என்பதை  மறைத்து  அம்மாவை  கம்பெனியில்  ஸ்டாஃப்  ஆக  சேர்த்து  விட  வேண்டும் ? உண்மை  சொல்லியே  சேர்க்கலாமே? 


3  நாயகியின்  அம்மா  தன்  கம்பெனியில்  பணியில்  இருக்கிறார்  என்ற  உண்மை  தெரிந்த  [பின்  முதலாளி  ஏன்  நாயகியின்  அம்மாவை  பணி  நீக்கம்  செய்ய  முனைகிறார். அவர்  ஆல்ரெடி  அவருடன்  இல்லீகல்  ரிலேசன்ஷிப்பில்  இருந்தும்  டிஸ்மிஸ்  செய்ய  நினைப்பது  ஏன்? என்பதற்கு  விளக்கம்  இல்லை 


4 போலி  மருந்துக்கு  லைசென்ஸ்  எப்படிக்கிடைத்தது ?  அதுவும்  பண  பலத்தால்  பெற்றார்களா? என்பது காட்டப்படவில்லை  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வசன  ரீதியான  18+  க்ள்  உண்டு . காட்சி  ரீதியாக  சைவம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    மெலோ  டிராமா , பயோகிராஃபி  மூவி  ரசிகர்கள்  பார்க்கலாம், ஸ்லோவாக  செல்லும்  திரைக்கதை . தமிழ்  டப்பிங்கில்  நெட்  ஃபிளிக்சில்  கிடைக்கிறது / ரேட்டிங்  2.5 / 5

Friday, October 27, 2023

இறைவன் (2023) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

   


 ராட்சசன் , போர்  தொழில்  படங்களின்  பிரம்மாண்ட  வெற்றிக்குப்பின்  பெண்களைக்கொலை  செய்யும்  சீரியல்  கில்லர்  கதை  கோடம்பாக்கத்தில்  ஃபேமஸ்  ஆகி  விட்டது , ஆனால்  வலுவான  திரைக்கதை  இல்லாமல்  ஸ்டார்  வேல்யூ வை  மட்டுமே  நம்பும்  படங்கள்  உருப்படாது , உருப்படக்கூடாது  என்ற  ஃபார்முலா படி  ஓடாத  இந்தப்படத்தை  ஏன்  ஓடவில்லை  என  அலசி  ஆராய்வோம்


      ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  அசிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆஃப்  போலீஸ் .  அவரது  நண்பரும்  போலீஸ்  ஆஃபீசர் ., வில்லன்  ஒரு  சைக்கோ  கில்லர் , பெண்களைத்தொட்ர்ச்சியாகக்கொலை  செய்கிறான். அவனை  ஆரம்பத்திலேயே  பிடித்து  விடுகிறார்கள் , ஆனால்  அந்த  முயற்சியில்  நாயகனின்  நண்பன்  இறக்கிறான், இதனால் நாயகன்  போலீஸ்  வேலையை  ரிசைன்  செய்து  விட்டு  காஃபி  ஷாப்  வைக்கிறான்  ( லியோ , ஹிஸ்டரி  அஃப்  வயலன்ஸ்  ரெஃப்ரன்ஸ்) 


பிடிபட்ட  சைக்கோ  கில்லர்  ஆன  வில்லன்  தப்பி  விடுகிறான். அரசியல்  தலைவர்கள்  அவரவர்  மகன்களை  அடுத்த  கட்ட கட்சித்தலைவராக  ஆக்குவது  போல  சீரியல்  கில்லர்  அவனுக்கு  ஒரு    வாரிசை  , காபிகேட்  கில்லரை    உருவாக்குகிறான்


நாயகன்  மீது  ஒரு  தலைக்காதல்  கொண்டு இருக்கும்  நாயகனின்  நண்பனின்  தங்கை , நாயகனின்  நண்பனின்  மனைவி , அந்தக்குழந்தை  இந்த  மூவரையும்  வில்லனின்  பிடியில்  இருந்து  நாயகன்  காப்பாற்றினானா? என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  ஜெயம்  ரவி . ரஃப்  அண்ட்    டஃப்  போலீஸ்  ஆஃபீசர்  கேரக்டருக்குபொருத்தமாக  விறைப்பாக  வந்து  போகிறார். 


நண்பன்  ஆக  நரேன்  கொஞ்ச  காட்சிகள்  வந்தாலும்  ஓக்கே  ரகம்’

 நாயகி  ஆக  லேடி சூப்பர் ஸ்டார்  நயன்  தாரா. அநியாயத்துக்கு  அவர்  கால்ஷீட்சை  வேஸ்ட்  பண்ணி  விட்டார்கள் 


சைக்கோ  கில்லர்  ஆக  வில்லன்  ஆக  ராகுல்  போஸ்  மிரட்டலான  நடிப்பு  , காபி கேட்  கில்லர்  ஆக  வினோத்  கிஷன்    ஆண்  ஜோதிகா  போல  ஓவர்  ஆக்டிங்  


நரேனின்  மனைவியாக  விஜயலட்சுமி  கவனிக்க  வைக்கும்  நடிப்பு 


யுவன்  சங்கர்  ராஜா  இசையில்  ஐந்து  பாடல்கள் . ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்துக்கு  ஏன்  இத்தனை  பாடல்கள் ?  ஆனால்  பிஜிஎம் மில்  விட்டதைப்பிடித்திருக்கிறார்

ஹரி  கே  வேதாந்தம்  ஒளிப்பதிவில்  இரவுக்காட்சிகளை  நுட்பமாகப்படம்  பிடித்திருக்கிறார்

ஜே  வி  மணிகண்ட  பாலாஜியின்  எடிட்டிங்கில்  இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது .


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஐ  அகமது 




சபாஷ்  டைரக்டர் (ஐ  அகமது ) 


1  கடத்தப்பட்ட  பெண்  ஆப்பிள்  வாட்ச்  கட்டி  இருப்பதும், அவள்  ஃபோன்  மூலம்  லொக்கேஷன்  கண்டு  பிடிப்பதும்   பாராட்ட  வைக்கும்  பரபரப்பான  காட்சி 


2  காபி  கேட்  கில்லராக  நடித்தவரிடம்  நீ  தான்  அடுத்த  ரகுவரன் , பிரகாஷ்ராஜ் , எஸ்  ஜே  சூர்யா  என  உசுப்பி  விட்டு  ஓவர்  ஆக்டிங்  பண்ணச்சொன்னது 


3  லேடி  சூப்பர்  ஸ்டார்க்கு  அவ்ளவ்  சம்பளம்  கொடுத்தும்  அவரை  அதிகம்  யூஸ்  செய்யாதது (  டூயட்  இல்லை  எஸ் கேப் ) 



  ரசித்த  வசனங்கள் 


1 கிரிமினல்ஸ்  மிருகமா  மாறி  தப்புப்பண்ணும்போது  ஆண்டவன்  பார்த்துக்குவான்னு  விட்டுப்போக  எனக்குப்பொறுமை  இல்லை 


2  சாக ரெடியா  இருக்கறவனுக்கு  சாவு  வராது 


3 உனக்கு ஒரு  பிரச்ச்னைன்னா எனக்கு  அது  வருத்தம், நீ  சந்தோஷமா  இருந்தா  எனக்கும்  ச்ந்தோஷம், உன்  நிம்மதியா  நான்  இருக்கனும்னு  ஆசைப்பட்டேன்


4  உனக்கு  யார்  மீது  பயம்  இருக்கோ  அவன்  கூட  நேரா மோது



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்;ல  நரேன்  தான்  வில்லனைக்கைது  பண்றாரு. அதுல  பலத்த  காயம்  ஏற்பட்டு  உயிர்  இழக்கறாரு . நாயகன்  ஜெயம்  ரவி  ஜஸ்ட்  லைக்  தட்  அப்போதான் ஸ்பாட்டுக்கே  வர்றாரு. ஆனா  நியூஸ்ல  இருவரும்  தான் கொலைகாரனைக்கைது  செய்தார்கள்னு  சொல்றாங்க , அதை  வில்லன்  கோபமா  பார்த்துட்டு  இருக்கான், என்ன  சீன்  இது ? ஏம்ப்பா  அசிஸ்டெண்ட்  டைரக்டஸ்.. நோட்  திஸ்


2  12  கொலைகளை  செய்த  சைக்கோ  கில்லரை கை  விலங்கிடாமல்., போலீஸ்  பாதுகாப்பு  இல்லாமல்  டாக்டர்  பேட்டி  எடுத்துட்டு  இருக்காரு. அந்த  டாக்டரையே  கொலை  பண்ணிட்டதா  நியூஸ்ல  சொல்றாங்க . விஷூவலா  காட்டலை . அது  எப்படி  சாத்தியம் ? 


3  ஹார்ட்  அட்டாக்ல  ஐசியூ  ல  அட்மிட்  ஆன  போலீஸ்  ஆஃபீசருக்கு  டாகடர், நர்ஸ்  யாரும்  கூட  இருக்க  மாட்டாங்களா? கிரிட்டிக்கல்  கண்டிஷன்  தாண்டாம  உயிருக்குப்போராடும்  அவரை  எப்படி  கொலீக்ஸ்  கூட பேச  விடறாங்க ? 


4 கொலைகாரன் &  திவ்யா  லொக்கேஷன்  கிடைத்ததும்  நாயகன்  ஏன்  போலிஸ்க்கு  தகவல்  சொல்லலை? தனி  ஒருவன்  படத்தில்  நாயகனாக  நடித்ததால்  தனி  ஆளாகவே  போலாம்னு  முடிவு  பண்ணிட்டாரா? 


5  நாயகன்  கொலைகாரன்  ஸ்பாட்டைக்கண்டு பிடித்து  விட்டார்  என  போலீஸ்க்கு  தெரியும், நாயகனின்  செல்  ஃபோன்  நெம்பர்  லொக்கேஷனை  வைத்து  போலீஸ்  ஃபாலோ  பண்ணி  இருக்கலாமே? 

6  சீரியல்  கில்லருக்கு  மனநிலை  சரி  இல்லை  எனில்  ஜெயிலுக்கு  வந்து  மன  நல  மருத்துவர்  செக்  செய்வது  பாதுகாப்பா? லூஸ்  மாதிரி கில்லரை பாதுகாப்பே  இல்லாமல்  மன  நல  மருத்துவமனைக்கு  அனுப்புவது  பாதுகாப்பா? 


7  காபி கேட்  கில்லரை  நாயகன்  ஒரு  விரலை  முறிக்கிறார். அவன்  அய்யோ  என  கத்துகிறான். அடுத்த  காட்சியிலேயே  அவனுக்கு  கை  விரல்கள்  எல்லாம்  நார்மலா  இருக்கு , அது  எப்படி ? 


8 காபிகேட்  கில்லர்  க்ளைமாக்ஸில்  நாயகனை ஒரு  அறையில்  அடைத்து  விடுகிறான். அப்படியே  விட்டுப்போய்  இருக்கலாம், எதுக்கு  கிறுக்கன்  மாதிரி  கதவைத்திற்ந்து  விட்டு  ஃபைட்டு  ப்ண்ணலாம்  வா  என  கூப்பிடுகிறான் ? 


9  காபிகேட்  கில்லர்  ஆலரெடி  ஒரு  கேசுக்காக  நாயகனால்  அரெஸ்ட்  செய்யப்ப்ட்டவன், அதனால்  நாயகனை  டார்கெட்  செய்யவே  சார்லியின்  மகள்  திவ்யாவை  அவன்  கொன்றான்  என  நாயகன்  சொல்கிறான். நாயகனைத்தூண்ட , கோபப்படுத்தனும்னா  நாயகனின்  காதலி  நயன்  அல்லது  நண்பன்  நரேனின்  மனைவியைத்தானே  கொன்றிருக்கனும் ? அந்த  லாஜிக்  கூடவா  வில்லனுக்கு  &  டைரக்டருக்கு  தெரியல ?   


10  திரைக்தைக்கு  தேவையே  இல்லாமல்  கொடூரமான  காட்சிகள் , கொலை  செய்யும்  பேட்டர்ன்  எல்லாம்   ரணகளம் .பெண்கள் , சிறுவர்கள்  அந்தப்பக்கமே  போக  முடியாது    


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  பயங்கர  வன்முறை 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்தப்படத்தை  தெரியாம , விசாரிக்காம  பார்த்து  யாரும்  மாட்டிக்காதீங்க. யாம்  பெற்ற  துன்பம்  பெறக்கூடாது  இவ்வையகம் /. ரேட்டிங்  1.75 / 5  ( இந்த  மார்க்கும்  நாயகி  நயனுக்காக ) 


Iraivan
Theatrical release poster
Directed byI. Ahmed
Written byI. Ahmed
Produced byJerish Raja
Starring
CinematographyHari K. Vedantam
Edited byJ. V. Manikanda Balaji
Music byYuvan Shankar Raja
Production
company
Passion Studios
Distributed byRed Giant Movies
Think Studios
S Picture
Release date
  • 28 September 2023
Running time
152 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget28 crore
Box office4.25 crore[2]