Friday, January 08, 2016

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்?

1.குறைகள் இல்லாத மக்களாட்சியை தி.மு.க. அமைக்கும்- மு.க .ஸ்டாலின் # நிறை ஒன்றும் இல்லை குறை தானே தலைவா==================
2.பிச்சைக்காரர்களில் 21% பேர் +2 படித்தவர்கள்-டாக்டர் ராம் தாஸ் #,ஆனா ஓட்டுப்பிச்சை எடுக்கும் அரசியல்வாதிகள் 90%,பேர் படிக்காத கைநாட்டுங்க


===========

3 துணை முதல்வர் பதவி தருவதாக தி.மு.க. வாக்குறுதி: விஜயகாந்த் - அரசியல்வாதிங்க வாக்குறுதியை தொண்டனே நம்பறதில்லை.இவரு நம்பி ஏமாறப்போறாரு

==============

4 துணை முதல்வர் பதவி தருவதாக தி.மு.க. வாக்குறுதி: விஜயகாந்த்# அப்போ பதவி கிடைச்சா ஊழலுக்கு துணை போவீங்க?

===============

5 விஜயகாந்த் கேள்வி எதிரொலி: ஜெயலலிதாவிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயற்சி -
முயற்சி உடையோர் இங்கே மட்டும் இகழ்ச்சி அடைவார்WAR

============

6 அதிமுக என்றால் அத்துமீறல் திமுக தானே-ராமதாஸ் .# பாமக என்றால் திமுக /அதிமுக 2 ல் 1 க்கு துதி பாடிய கட்சிதானே?


=============

7 எனக்கு பயமே கிடையாது-விஜயகாந்த் # இப்டியே துப்பிட்டும் அடிச்ட்டும் இருந்தா தேர்தலில் ஜெயமே கிடையாது


==============

8 விஜயகாந்த் கண்ணியத்தை கற்றுக்கொள்ள வேண்டும் -அன்புமணி # அன்பு மனைவி பிரேமலதா சொல்லியே கேட்காதவர் அன்புமணி சொல்லியா கேட்கப்போறார்?

===========

9 விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு 'கருடா' # படத்தோட கெட்டப்க்காக பறவையாவே மாறிடுவாரோன்னு பயமா இருக்கு

=============

10 விஷ்ணு விஷால் - நிக்கி கல்ராணியின் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' # பதவிக்கு வந்துட்டா கொள்ளைக்காரன்?


=============

11 பற்றாக்குறை என்னும் நோயால் தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ளது: கருணாநிதி குற்றச்சாட்டு # நாட்டுப்பற்று இருந்தா சரி பண்ணிடலாம்


=============

12 மீண்டும் 'அம்மா' தான் ஆட்சிக்கு வருவார் என்கின்றனர் மக்கள்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் # அப்போ தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் எப்போ?


==============
13 தரம் தாழ்ந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் காட்டம் # தரம் வாய்ந்த திமுக வுடன் பேரம் முடிஞ்சிடுச்சு போல

============


14 தனுஷுடன் இணைந்து நடிப்பதால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.. அறிமுக நடிகை பூஜா ஜவேரி # பூஜா சவாரி ன்னு படிச்சுடப்போறான் தமிழன்


===============

15 கச்சா எண்ணெய் விலையை 50% உயர்த்த உத்தரவு.. வளைகுடா நாடுகள் அதிரடி# நம்ம லைப் சைக்கிள்.நல்லாருக்கனும்னா இனி சைக்கிள்லதான் போகனும்


================

16 டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: # ரேப்பிஸ்ட்கள் க்கு வசதி.டைரக்ட்டா டேரா போட்ருவாங்க

==============

17 மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்் தன்னைத் தானே புகழ்கிறார் ஜெ.. ராமதாஸ்ு # தற்குறிப்பு அணியில் புகழ்ந்து கொள்வது தற்குறிகள் பழக்கம் தலைவரே

===============

18 டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: # திறப்பு விழாவுக்கு  வரும் மகளிர் அணித்தலைவிக்கு ஊத்திக்கொடுப்பாங்களா?==================


19 கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்? ஜெ.க்கு விஜயகாந்த் பதிலடி # ஹீரோ சத்யராஜ், தயாரிப்பாளர் கமல் ,இயக்குநர் சந்தானபாரதி 3 பேருமா?


====================


20 ஜல்லிக்கட்டு.இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது!' - கை விரிக்கும் மத்திய அரசு # ஜனவரி 17 வரை இழுத்தடிச்சிட்டா சமாளிச்சடலாம்-மோடி மைண்ட் வாய்ஸ்


=======================

0 comments: