Saturday, February 29, 2020

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் - சினிமா விமர்சனம்

#KannumKannumKollaiyadithaal  க்கான பட முடிவுகள்


ஆரவாரமா விளம்பரம் பண்ணி பயங்கர எதிர்பார்ப்போட வர்ற படங்கள் அட்டர் ஃபிளாப் ஆகிடும், ஆனா சத்தமே இல்லாம எதிர்பார்ப்பும் இல்லாம வர்ற படங்கள் செம ஹிட் அடிச்சிடும், இது இரண்டாவது வகை


ஹீரோவும் அவரது நண்பரும் 420. திமுக காரங்க மாதிரி டெக்னிக்கலா திருடறவங்க . இப்போ அரசியல்வாதிங்க எல்லாருமே திருடங்க தான் . ஆனா ஆதாரம் இல்லாம மாட்டிக்காம திருடறது ஒரு கலை இல்லையா? அந்த திருட்டுக்கலையை ஹீரோ பிரமாதமா பண்றாரு .


ஆன்லைன்ல லேப்டாப் , மொபைல் ஆர்டர் பண்றது பார்சல் வந்ததும் பணம் குடுத்து பர்சேஸ் பண்ணி பின் முக்கிய பாகங்களை நைசா கழட்டி எக்சேஞ்ச் [பண்ணி வித்துடறது. இந்த வேலையை பண்றாரு


ஹீரோயினை சந்திக்கறார். ஹீரோயினுக்கு ஒரு தோழி மாப்பிள்ளையும் பொண்ணும் மணமேடைல கிருக்கும்போது மாப்பிள்ளைத்த்தோழனும், பெண்ணின் தோழியும் சிங்க் ஆகற மாதிரி இப்போ 2 செட் ஜோடி செட் ஆகிடுச்சு .ஒரு திருட்டு ஜோடி திமுக காங் மாதிரின்னா இன்னொரு திருட்டு ஜோடி அதிமுக பாஜக மாதிரி


ஹீரோவும் , ஃபிரண்டும் திருடனுங்கனு ஹீரோயினுக்கும் தோழிக்கும் தெரியாது


இவங்களை பிடிக்க போலீஸ் ஆஃபீசர் மெனக்கெடறார்


செஞ்ச திருட்டெல்லாம் போதும் , கோவா போய் எதுனா தொழில் செஞ்சு பிழைச்சுக்கலாம்னு 2 செட் ஜோடியும் போறாங்க


அங்கே போனதும் ஒரு ட்விஸ்ட்


இடைவேளைக்குப்பின் ஒரு ட்விஸ்ட் , க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட்

லாஜிக் மிஸ்டேக்ஸ் பெரிய அளவில் இல்லாம பிரமாதமா திரைக்கதை அமைச்சிருக்கார் இயக்குநர்


ஹீரோவா துல்கர் சல்மான், அனாயசமா பண்ணி இருக்கார் .துள்ளலான நடிப்பு , ஹீரோவின் நண்பனா ரக்சன் நல்ல சரளமான வசன உச்சரிப்பு , டைமிங் ஜோக்கில் சந்தான வாசம்


ஹீரோயினா நித்து வர்மா , ஆஹா ஓஹோ ஃபிகர் இல்லைன்னாலும் ஓக்கே ரகம் தான் , ஹீரோயின் தோழியா வரும் நிரஞ்சனி அகத்தியன் ஹீரோயினை விட கலர் கம்மியா இருந்தாலும் சில இடங்களில் அவரை விட நல்லாவே நடிக்கிறார்

போலீஸ் ஆஃபீசரா இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேன்ன் கலக்கிட்டார் . அவர் பாடி லேங்க் வேஜ் ஹேர் கட் , வசன மாடுலேசன் எல்லாம் அருமை /.; காக்க காக்க சூர்யா , என்னை அறீந்தால் அஜித் , என அவர் நடிப்புக்கு கோச்சிங் அவர் படங்கள்ல இருந்தே


ஏன் இவங்களைப்பிடிக்கெ இவ்ளோ துடிக்கறே என ஹையர் ஆஃபீசர் கேட்கும்போது கவுதம் ஃபிளாஸ்பேக் சொல்கையில் அரங்கம் அதிர்ந்தது

வாரணம் 1000 பட சீனை இவரை வெச்சே நக்கல் பண்ணியது அட்டகாசம்


மொத்தப்படமும் ரெண்டே முக்கால் மணி நேரம் என்றாலும் போர் அடிக்கும் காட்சிகளே இல்லை

நீண்ட நாட்களுக்குப்பிறகு விறுவிறுப்பான ரொமாண்டிக் த்ரில்லர்

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1 துல்கர் ன் 25 வது படம்னு டைட்டில் ல போடறப்பதான் விஷயமே நமக்கு தெரியுது.போஸ்டர்கள்ல அதை மென்ஷன் பண்ணி இருக்கலாம்.திரைக்கதையில் கச்சிதமா ஸ்கோர் பண்ணுன இயக்குநர் மார்க்கெட்டிங்க்ல கோட்டை விட்டுட்டார்.ஓப்பனிங் ரஷ் இல்லை #KannumKannumKollaiyadithaal


2 இயக்குநரோ,தயாரிப்பாளரோ இருவரில் ஒருவர் ரஜினி ரசிகர் போல,படம் பூரா கொட்டிக்கிடக்குது ரஜினி ரெப்ரன்ஸ் #KannumKannumKollaiyadithaal


3 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு எனது டைட்டில் சாய்ஸ்


திருடா திருடா திருடி திருடி #KannumKannumKollaiyadithaal4 ஒரு த்ரில்லர் படமா இருந்தாக்கூட இயக்குநர் போற போக்குல ஒரு அழுத்தமான கருத்தை பதிவு பண்றார். காதலிக்கற மாதிரி பொண்ணுங்க ஏமாத்துனாலும் ஆண்கள் காதலியை ஏமாத்தமாட்டாங்க,அதுவும் தன்னை ஏமாத்துன பெண்ணா இருந்தாலும்.... #KannumKannumKollaiyadithaal


நச் டயலாக்ஸ்1 பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் னு பழமொழி இருக்கே?


ஒரே தப்பை ரெகுலரா பண்றவன்தான் மாட்டிக்குவான்,ஒவ்வொரு டைமும் புதுப்புது தப்பா பண்றவன் மாட்டிக்க மாட்டான் #KannumKannumKollaiyadithaal
2 என்ன ப்ரோ?

ப்ரோனு சொன்னதும் தான் ஞாபகம் வருது , 2 ப்ரோ பக்கத்து பக்கத்து ல இருந்தும் இணையவே மாட்டாங்க , எப்டி?

தெரியலையே?

ஐ ப்ரோ ( eye brow) #KannumKannumKollaiyadithaal  3 என்னப்பா , ஃபோன்ல குசு குசு?


இது லவ் மேட்டர்பா
லவ்வா? மேட்டரா? #KannumKannumKollaiyadithaal


4 இதுவரை அவன் செஞ்ச தப்பை வெச்சு பிடிக்க முடியலை , ஆனா இனிமே அவன் பண்ற தப்பை வெச்சு பிடிக்க முடியும் #KannumKannumKollaiyadithaal  


5 ம்த்தவங்களுக்கு நாம் பண்ற உதவி நமக்கு சின்ன விஷயமா இருக்கலாம், ஆனா அவங்களுக்கு அது பெரிய உதவியா இருக்கும் #KannumKannumKollaiyadithaal


6 ஏண்டா? லவ்வர் கூட ஃபோன்ல தானே பேசறீங்க? என்னமோ நேர்ல கட்டிப்பிடிச்சு கிஸ் குடுக்கற மாதிரி ஒரு ரீ ஆக்சன் காட்றீங்க? #KannumKannumKollaiyadithaal


7 மிஸ்! உங்க பேரு என்ன?>


வர்ஷா
ஓஹோ, வருசா வருசம் பேரை மாத்திக்குவீங்களா? #KannumKannumKollaiyadithaal


8 மத்த ஊருல தண்ணி அடிச்சா தப்பா பாப்பாங்க ,ஆனா கோவாவுல தண்ணி அடிக்கலைன்னா தான் தப்பா பார்ப்பாங்க #KannumKannumKollaiyadithaal


திரைக்கதையில் சில தவறுகள்


1 லாஜிக் மிஸ்டேக் 1 - வெளியூர் போறவங்க கைல ஹாட் ஹேஷா 6 லட்சம் ரூபா பிளாக் மணி எடுத்துட்டுப்போவாங்களா? வழில போலீஸ் செக்கிங்ல அதுக்கு கணக்கு கேட்டா எப்படி சமாளிப்பாங்க ? #KannumKannumKollaiyadithaal


2 லாஜிக் மிஸ்டேக் 2 - சுமார் 71 கோடி பணத்தை ஹீரோவும் , நண்பரும் 2 பைகல லக்கேஜ் பேக்ல வெச்சு பைக்ல போறாங்க ஹை வேல பல்லாயிரம் கிமீ போக வேண்டிய சூழல்ல இது சாத்தியமா? #KannumKannumKollaiyadithaal  

3 க்ளைமாக்ஸ் ல ஹீரோ, ஹீரோயின் , நண்பன், தோழி 4 பேரும் பைக்ல பைக் ரிலே ல ஜாய்ன் பண்ணி எஸ் ஆக ற மாதிரி காட்றாங்க , மத்த பைக்ல எல்லாம் ஆண் மட்டும், இவங்க 2 பேர் மட்டும் ஜோடியோட , பேக் சீட்ல லக்கேஜ்ல பணம்,, போலீஸ் க்கு டவுட் வராதா?சி.பி கமெண்ட் -கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் − இரும்புத்திரைக்குப்பின் தமிழில் வந்த டெக்னிக்கல் த்ரில்லர் மூவி.ஏ சென்ட்டர் ஹிட் பிலிம்.இயக்குநரின் க்ரிமினல் ப்ரெய்ன் பல இடங்களில் அப்ளாஸ் வாங்குது.

கவுதம்,துல்கர் நடிப்பு குட்,விகடன் 43 ,ரேட்டிங் −3 /5 #KannumKannumKollaiyadithaal


Monday, February 17, 2020

நான் சிரித்தால் - சினிமா விமர்சனம்

naan siriththaa;க்கான பட முடிவுகள்

படத்தோட டைட்டிலை நான் மட்டும் சிரித்தால் அப்டினு வெச்சிருக்கலாம், ஏன்னா படம்  பூரா ஹீரோ மட்டும் தான் லூஸ் மாதிரி சிரிச்சுட்டு  இருக்காரு , ஆடியன்ஸ் செம  கடுப்புல இருக்காங்க 


 மத்தவங்களுக்கு ஏதாவது சோகம்னா  அல்லது ஒரு சோகமான சிச்சுவேஷன்ல  ஹீரோ இருந்தார்னா அவருக்கு சிரிப்பு வந்துடும் , இது ஒரு புது வியாதி , இந்த வியாதியால ஹீரோக்கு வேலை  போகுது , காதல் போகப்போகுது. இப்படி ஒரு சிச்சுவேஷன்ல  ஒரு ஆள்மாறாட்ட குழப்பத்துல ஹீரோ சிக்கறார். அதை எப்படி சமாளிக்கறார் என்பதே கதை


படத்தோட பெரிய மைனசே கதைக்கும் ஹீரோவுக்கு இருக்கற சிரிக்கற வியாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே  , அடுத்தது  அவர் சிரிக்ம்கற சீன்கள் எல்லாம் ஆடியன்சுக்கு கனெக்ட் ஆகலை என்பதும் மைனஸ்


ஹிப் ஹாப் தமிழா ஆதி ரொம்ப நம்பிக்கையா நடிச்சிருக்காரு. இசை இவர் என்பதற்காக கண்ட கண்ட இடங்கள்ல எல்லாம் பாட்டு வருது

 நாயகியா ஐஸ்வர்யா மேனன் , இன்னொரு தண்டம்

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தான் வில்லன்/ அவர் கிட்ட பயமும் வர்லை , அவர் பண்ற காமெடி மொக்கையாவும் இருக்கு 


 ரவி மரியா ஓரளவு பரவால்ல , முனீஷ் காந்த் சுமார் நடிப்பு 

 படவா கோபி க்கு அப்பா கேரக்டர் . திரைக்கதை பலவீனத்தால் அதுவும் எடுபடல்நச்  வசனங்கள் 


1  ஒருத்தனுக்கு திடீர்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஒரே சமயத்துல வந்தா அவனுக்கு வெய்ட்டா,பிரைட்டா ஏதோ நல்லது நடக்கப்போகுதுனு அர்த்தம் #naansiriththaal


நீ தல fanனா?தளபதி fanனா?
நியூட்ரல்ங்க்ணா
நியூட்ரல் எதுல இருக்கும்?
பைக்ல
அப்போ பைக்கை யார் ஓட்டுவாங்க?
தலதான்
அப்ப தல fan தானே நீ? #naansiriththaal


3 போஸ்டர் ல ஏன் என் தலை பின்பக்கமா திரும்பி இருக்கு?
தலைவரே!நீங்கதான் தலை மறைவா இருக்கீங்களே?சிம்பாலிக்கா சொல்றேன் #naansiriththaalஉங்க ஓ.டி.பி. நெம்பர் சொல்லுங்க

என்னது?ஓட்டைப்பிரிச்சு இறங்கனுமா? #Naansiriththaal

5   வெண்டைக்காய் குழம்புல விளக்கெண்ணெய் ஊத்துனமாதிரி வள வளனு பேசிட்டு இருக்கற #naansiriththaal

என்ன வேலைசெய்யறோம்?எங்கே வேலை செய்றோம்கறது முக்கியமே இல்ல.மனசுக்கு பிடிச்ச வேலையா?ங்கறதுதான் முக்கியம் #naansiriththaal

7  நம்மை முதல்ல நல்லாப்பாத்துக்கனும்,அப்பதான் நம்மை சுத்தி இருக்கறவங்களை நல்லா பாத்துக்க முடியும் #naansiriththaal

இவரு பாரின் மாப்ளை,உங்களுக்கு இவரை முதல்லியே தெரியுமா?
இவன் என் நண்பன்.அரியர் பாபு
எது?
ஆருயிர் நண்பன்னு சொல்றான் #naansiriththaal

9ஏண்டி,உனக்கு ஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களாமே?

டோண்ட் ஒர்ரி,நீ தான் கடைசி #naansiriththaal

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  அவ கண்ணு இருக்கே கண்ணு அப்டினு ஹீரோ வர்ணிக்கறாரு,ஷாட் கட் பண்ணி ஓப்பன் பண்ணா ஹீரோயின் உதடு க்ளோசப்ல,அப்றம் லோ ஹிப்க்கு க்ளோசப் ஷாட் ,ஹிப் ஹோப் தமிழான்னா இதானா? #naansiriththaal

2  படையப்பா மாதிரி மாஸ் மசாலா தந்த படைப்பாளி கே எஸ் ரவிக்குமார் இயக்க வாய்ப்பு வரவில்லை என்பதற்காக வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது படைப்புத்திறனுக்கு பின்னடைவு. #naansiriththaal


பிக் பாஸ் லூஸ் போராளி ஜூலிக்கு பிரமாதமான கேரக்டர்.பல பாய் பிரண்ட்ஸ் இருக்கற பேரழகி ரோல்.ஹிஹி #naansiriththaal

டைரக்டர்ஸ் சொதப்பல்ஸ்


லாஜிக் மிஸ்டேக் 1− ஹீரோ ஒரு முக்கியமான எக்சாம் எழுதறாரு.காலை 10 − மதியம்1. எப்டி எழுதுனே?னு ஹீரோயின் போன் பண்ற டைம் நைட் 8 மணிக்கு.ஏழு மணி நேரமா அந்த ஏழரை என்ன பண்ணிட்டு இருந்தது? #naansiriththaa

 மிட்நைட் 12 மணிக்கு பிறந்த நாள் கொண்டாடும்வில்லன் கூலிங் க்ளாஸ்போட்டிருக்காப்டி. நைட் 8 மணிக்கு ஹீரோயினுக்கு வரவேற்பு தந்து பாட்டு ,டேன்ஸ் ஆடும் ஹீரோ கூலிங் க்ளாஸ் போட்டிருக்காரு.கூலிங்க் க்ளாஸ் வெய்யிலுக்கு போடறது பைக்ல போறப்ப கண் ல தூசி விழாமஇருக்க போடறது #naansiriththaal


3 உளுந்தூர்ப்பேட்டை கே கே ஆர் மஹால் ல கல்யாணம்னு ரிசப்ஷனிஸ்ட் / சேல்ஸ் கேர்ள் சொல்லுது. ஒரு கேன அடியாளு முழு அட்ரஸ் சொல்லுனு கேட்கறான் ,ஏண்டா மாங்கா ,அதை உளுந்தூர்ப்பேட்டை ஆட்டோ ஸ்டேண்ட்ல கேட்கலாம் ,கூகுள் சர்ச்ல பாத்துக்கலாமில்ல? #naansiriththaal


முனிஸ்காந்த் கைல ஒரு ஹேண்ட் பேக்.அதுல 50 லட்சம் ருபா கேஷ் இருக்கு.க்ளோசப்ஷாட்ல காட்றப்பபெருசா இருக்கு.ரவிமரியா கிட்ட வரும்போது லாங்க் ஷாட்ல காட்றப்ப சின்ன பேக்கா இருக்கு..அந்த பேக்ல 50 லட்சம்வைக்கசான்சே இல்ல #naansiriththaal


5  லாஜிக் மிஸ்டேக் − ஹீரோயின் மூச்சுக்கு 300 தடவை "எங்கப்பாவுக்கு 50 லட்ச ருபா கடன் இருக்குனு புலம்பறாரு.அப்பா என்னடான்னா மாசம்"1 லட்சம் ருபா சம்பளம் வாங்கற மாப்ளைக்குதான் பொண்ணு தருவேன்கறாரு.கணக்குப்படி நாலே கால் வருசம் ஆகும் கடனை அடைக்க.அதுக்கு பேசாம ஹோல்சேலா எதுனா"தொழில் அதிபரை"வளைச்சுப்போடலாமே? #naansiriththaal
நான் சிரித்தால் − கெக்கே பிக்கே எனும் குறும்படத்தை டெவலப் பண்ணி 14 ரீல் படமா எடுத்திருக்காங்க,பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.டிவி ல போட்டா பாக்கலாம், விகடன் 39 ,ரேட்டிங்க் 2 / 5 #naansiriththaal

Tuesday, February 11, 2020

சீறு - சினிமா விமர்சனம்

Image result for seeru

கோர்ட் வளாகத்துலயே ஒரு பெண் வக்கீல் தன் சக பெண் வக்கீல் தோழிகளோடு சேர்ந்து ஒரு ஆளை கத்தியால குத்திக்கொலை பண்ண முயற்சி பண்றா, ஆனா ஆள் எஸ்கேப் . அவ நல்லவ. குத்துவாங்குனவன் கெட்டவன். எதனால அவ அவனைக்கொலை பண்ண முயற்சி பண்றா? அவன் யார்? என்பதற்கு  திரைக்கதையில் விடை இருக்கு


 இந்த KNOT டை கேள்விப்பட்டதும் ஃபேஸ்புக்ல குடி இருக்கறவங்களுக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்திருக்குமே?

 கணேஷ் பாலா ஃபேஸ்புக்கில் படம் பார்த்து கதை சொல் போட்டி வெச்சிருந்தாரு . அதுல பரிமாறப்பட்ட படம்  வக்கீல் யூனிஃபார்மல ஒரு ஆள் இன்னொரு ஆளை கொலை செய்ய கத்தியை ஓங்கற மாதிரி போஸ்

இந்தப்படத்துக்கு பலரும் கதை அனுப்புனாங்க ,. நடுவர்களா சிரி சிரி கதை புகழ் நந்து சுந்து சார் , வேதா கோபாலன் மேடம் இருவரும் .. வந்த கதைகளை இரண்டாகப்பிரித்து  இரு ஜட்ஜ்களுக்கும் கதை அனுப்பப்பட்டது.


 க்தைகளைப்படிச்ச நடுவர்கள் சொன்ன கருத்து “ பெரும்பாலும்  கதை எழுதுனவ்ங்க  கொலை பண்ண முயற்சி பண்றவன்  கெட்டவன் , கொலை செய்யப்படுபவன் நல்லவன் என்ற கோணத்துலயே எழுதி இருக்காங்க . யாருமே  கொலையாளி நல்லவன் , கொலை செய்யப்படுபவன் கெட்டவன் என்ற கோணத்தில்  எழுதலை . மாத்தி யோசி  வெற்றிக்கோடு உனக்கு தூசி
 என்ற ஃபார்முலா படி  கதைஞர்கள் வித்தியாசமா சிந்திக்கனும் என கருத்து தெரிவிச்சிருந்தாங்க


 இரு ஜட்ஜ்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் ஃபைனல் ரவுண்டில் கலந்து சில கதைகள் தேர்வாச்சு


 எதேச்சையா நடந்ததா? அல்லது இயக்குநர் இதைப்பார்த்து திரைக்கதை எழுதுனாரா தெரில. நல்ல விறு விறுப்பான ஆக்‌ஷன் கமர்ஷியல் மசாலா படம் தமிழ் சினிமாக்கு கிடைச்சிருக்கு

 ஹீரோவா ஜீவா , கொஞ்சம் கேப்க்கு பின் இவருக்கு ஒரு கம்பேக் மூவி. ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார்.ஒரு சரத்குமாரோ ஒரு விஷாலோ ஒரு அருண் விஜயோ பண்ண வேண்டிய கேரக்டர். அதாவது நல்ல பாடி பில்டர் தான் இந்த ரோலுக்கு சூட் ஆவார் . ஜீவாவுக்கு பிஞ்சு மூஞ்சி , இருந்தாலும் சமாளிக்கிறார்


ஹீரோயினா ரியா சுமன் ,. தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகக்குறைவான காட்சிகள் வந்த முதல் ஹீரோயின் இவர் தான் , ஓப்பனிங் சீன்ல ஒரு டூயட் , க்ளைமாக்ஸ்ல சுபம் போடும்போது ஒரு அட்டெண்டென்ஸ் அவ்”லோ” தான்


ஃபிளாஸ்பேக்கில் வக்கீலாக வரும் நந்தினிக்கு நல்ல வாய்ப்பு , சில இடங்களில் ஓவர் ஆக்டிங் என்றாலும் பல இடங்களீல் எதார்த்தம்


வில்ல்னாக  க்ரிமினல் லாயராக நவ்தீப் ( ஏகன் படத்தில் பேபி ) சுமாரான நடிப்பு


ப்ரொஃபஷனல் கில்லராக வருண். இவருக்கும் ஹீரோவுக்குமான ஓப்பனிங் சீன் சேசிங் , டெலிஃபோன் உரையாடல்கள் , சவால்கள் எல்லாம் அமெச்சூர்த்தனமாய் இருந்தது  பெரிய மைனஸ்.  ஃபிளாஸ்பேக் காட்சிகளில்  ஆக்‌ஷன் காட்சிகளில் முத்திரை பதித்த இயக்குநர் இதில் கோட்டை வ்கிட்டது ஏனோ?


பொதுவா பொண்ணுங்க அடிதடி வம்பு தும்புக்கு போக மாட்டாங்க ( க்ட்டுன புருஷனை துவைச்செடுப்பாங்க, அது வேற ) என்ற கருத்தை மறுதலித்து  தோழிக்காக பழி வாங்கப்புறப்படும் பெண்கள் புது கான்செப்ட்நச் வசனங்கள்

1   இவன்  ஃபோட்டோ பார்த்துட்டு ஆளைப்போடறவன் இல்லைடா , ஆளைப்போட்டுத்தள்ளிட்டு ஃபோட்டோவைப்பார்க்கறவன்


2  நம்பவெச்சுக்கழுத்தறுக்கறவன் தானே நீ?

 ஆனா முதுகுல குத்த் மாட்டேன் ( இந்த டயலாக் பேசற வில்லன் அடியாளுங்களோட சண்டை போடறப்ப 3 பேரோட முதுகைதான் குத்தறாப்டி )3  ஆட்டத்தை ஆடரவங்களை விட வெளில இருந்து வேடிக்கை பார்க்கறவன் தான் கேமை கரெக்டா ஆடி முடிப்பான்


4   நாடு நாசமாப்போய்க்கிட்டு இருக்கு நாசாவுக்கு போய் என்ன பண்ணப்போறோம்


5  எல்லாருக்கும் கனவு காண உரிமை இருக்கு ஆனா உன் கனவு என் உரிமையை  பறிக்கக்கூடாது

6  உதவிங்கறது முதுகுக்குப்பின்னாடி இருக்கற மச்சம் மாதிரி ,  சம்பந்தப்பட்டவங்களுக்கு இன்னார்னு அடையாளம் காட்டிக்காமயே செஞ்சுடனும்


7 நான் இல்லாம எந்த இரு நல்ல காரியமும் நடந்துடக்கூடாது


8 காளைக்கு மட்டும் தான் கொம்பு இருக்குனு நினைக்காதே , மான்களுக்கும் கொம்பு உண்டு  ( இது கொஞ்சம் டபுள் மீனிங்கா இருக்கு , இயக்குநர் சொல்ல வர்றது  ஆண்களப்போலவே பெண்களும்  தாக்குவாங்க அப்டினு , ஆனா சொன்னது கில்மா டைப் வசனம் . இந்த இடத்துல ஆண் தேள் பெண் தேள் எல்லார்க்கும் கொடுக்கு உண்டு விஷம் உண்டு . பாம்பு வகைகள்ல ஆண் இனத்துக்கு மட்டும் தான் விஷம் உண்டுனு இ,ல்லை இப்டி எதுனா வெச்சிருக்க,.லாம்


சபாஷ் டைரக்டர்

 1  படம் 2 மணி நேரத்துல முடியுது. செம விறுவிறுப்பு , ஸ்பீடு


2 ஃபிளாஸ்பேக் காட்சிகள் கதைக்கு ஜீவன்

3 இமான் இசை , ஆக்சன் சீக்வன்ஸ்


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  நிறை மாத கர்ப்பிணியா இருக்கற தங்கையை அண்ணன் தனியா விட்டுட்டு போவானா? பெற்றோர்  இல்லை , பார்த்துக்க ஒரு நர்ஸ் அல்லது பணிப்பெண்ணை நியமிக்க   மாட்டாரா?

2   கோர்ட் வளாகத்துல கத்தியால வில்லனைக்குத்துற லேடி டக்னு கத்தியை தூர வீசிடனும் அல்லது அதை ஃபோல்டு பண்ணி ஹேண்ட் பேக்ல வெச்சுக்கனும், அப்படியே ரத்தக்கரையோட கைல வெச்சுக்கிட்டே 2 கிமீ ஓடிட்டு இருக்காப்டி . கூட்டத்துல யார் கைல கத்தி இருக்கோ அவங்க தான் கொலையாளினு ஈசியா கண்டு பிடிச்சுட மாட்டாங்களா?


3   பொதுவா ஆளைக்கொலை பண்ற கத்தி மினிம்ம் ஒரு ஜானாவது இருக்கனும், ஆனா அந்த லேடி யூஸ் பண்ற கத்தி கேரட் வெட்டதான் நீளம் போதும் .பொண்ணுங்க கட்ற வாட்ச் சின்னது , அவங்க ஹேண்ட் பேக் சின்னது , இதெல்லாம் ஓக்கே , ஏத்துக்கலாம் , ஆனா அவங்க கொலை பண்ண யூஸ் பண்ற கத்தி சின்னதா இருந்தா எப்படி ஆள் உயிர் போகும் ?
4  படத்துக்குப்பொருத்தமான டைட்டில்

 தங்கைக்காக
நண்பனா? எதிரியா?
பெண்ணுக்கும் கோபம் உண்டு 

 விகடன் மார்க் ( யூகம்)  -41

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3 / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் -2.75 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-சீறு− ஓவர் ஹீரோயிசம் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை,மாஸ் மசாலா,ஒரு விஷாலோ,சரத்குமாரோ பண்ண வேண்டியது.சண்டைக்காட்சிகளை ரசிப்பவர்கள் பார்க்கலாம்
ஜீவா நடிப்பு ,ஸ்டண்ட் சீன்ஸ் + மொக்கைவில்லன் − ,விகடன் −41 , ரேட்டிங், 2.75 / 5 #seerureview