Friday, January 15, 2016

MONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )


ஹீரோ ஒரு அரைகுறை  டேலண்ட் ஆள். ஆஃபீஸ்ல ஒர்க் பண்ணாலும் சினிமா எடுக்கும் நினைப்பிலேயே இருக்காரு . இவரோட சினிமா ஆர்வம் அப்பாவுக்கும் பிடிக்கலை. ஆஃபீஸ் டேமெஜருக்கும் பிடிக்கலை.

 அப்பா எப்போப்பாரு திட்டிட்டே இருக்காரு .எந்த வீட்ல தான் அப்பா பையனை கொஞ்சி இருக்காரு , உள்ளூர பாசத்தை ஒளிச்சு வைப்பதில் ஆண்களுக்கே  முதலிடம் .

 ஆஃபீஸ் ல டேமேஜர் ஒரு நாள் கடுப்பாகி ஹீரோவை டெர்மினேட் பண்ணிடறாரு . நம்மாளு கவலைப்படலையே, ஒரு சினிமா டைரக்ட் பண்ணலாம்னு முழு மூச்சா இறங்கிடறாரு

ஹீரோவுக்கு டேலண்ட் கம்மியா இருந்தாலும் அடுத்த மல்லுவுட் ஸ்பீல்பெர்க்கா ஆகனும்னு ஆசை. உலக அளவில் ஒரு தரமான மலையாள இலக்கிய சினிமாவைப்படைக்கனும்னு நினைக்கறாரு.


 சினிமா வில் நடிக்க நடிகர்கள் தேவைன்னு விளம்பரம் தர்றாரு. ஆட்கள் வர்றாங்க. அவங்களை தன் வீட்டிலேயே தங்க வைக்கறாரு , அதுல ஒருத்தன்  வீட்ல இருக்கும் செல்வத்தை ஆட்டையைப்போட்டுட்டுப்போய்டறான். அப்பா செம கடுப்பாகி வீட்டை விட்டு வெளியே போங்கறார். ஹீரோ அவர் ஆசைப்பட்டபடி அவார்டு ஃபிலிம் எடுத்தாரா? இல்லை செல்வராகவன் மாதிரி கெடுத்தாரா? என்பது க்ளைமாக்ஸ்


 ஹீரோவா  படத்தில் இயக்குநரா வருபவர் ஃபகத் ஃபாசில் . மிக இயற்கையான காமெடி நடிப்பு  ஓவர் ஆக்டிங் , ஒரு துளியும் இல்லை . பாடி லேங்குவேஜ் பக்கா

ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன். ஆனா படத்தில்  ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லை . இது ஹீரோ ஓரியண்ட் மூவி . ஊறுகாய் மாதிரி தொட்டுக்குவார்னு பார்த்தா இயக்குநரும் தொடலை , ஹீரோவையும்  தொட விடலை. ஹீரோயின் சம்பளம் வேஸ்ட்டா போச்சேன்னு தமிழன் கவலைப்படறான்

 இதுக்கெல்லாம் தமிழ் டைரக்டர்கள் தான் சரி . ஹீரோயினுக்கு 35 லட்சம்  ரூபா சம்பளம் கொடுத்தா   எந்த அளவு  கிஸ் சீன் , கிளாமர் சீன் எல்லாம் எடுக்க முடியுமோ அதை எல்லாம் 10  ரீல் எடுத்து வெச்சுக்குவாங்க . படத்துல 2 ரீல் தான் வரும்  என்பது வேற  விஷயம்


ஹீரோவோட அசிஸ்டெண்ட் டைரக்டரா வினய் காமெடி  ரோலில் கன கச்சிதம்


ஹிந்தி ஆக்டர் பிரேம்குமாரா வரும் விஜய் கச்சிதமான நடிப்பு ! என்ன பார்க்கறீங்க? இது வேற விஜய்.

"Akkara Kazhchakal". என்ற புகழ் பெற்ற படத்தை இயக்கிய  அபி வர்கீஸ் தான் படத்தின்  திரைக்கதை இயக்கம் எல்லாம், இவர் நம்மூரு அகத்தியன் எடுத்த  விடுகதை டைப்ல எடுத்திருக்கார்.


படம்  ரொம்ப ஸ்லோ . டீசண்ட்டான காட்சி அமைப்புகள் படத்தின் பலம் என்றாலும் ஹை க்ளாஸ் ஆடியன்சுக்கு மட்டுமே பிடிக்கும் விதத்தில் இருக்கு, இது ஒரு   பலவீனம்

 5 பாட்டு இருக்கு 2 தேறுது. ஒளிப்பதிவும் இசையும் கச்சிதம்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ஒரு கண்ணாடி உடைந்தால் அதில் 1000 கண்ணாடித்துகள்கள் உருவாகும்
ஒரு கனவு சிதைந்தால் அதில் இருந்து.1000 கனவுகள் கிளர்ந்து எழும்#MONSOON


2 ஏன் காலேஜ் போகல?

ரவீந்திரநாத் தாகூர் காலேஜே போகாம பாடல் இயற்றலையா?
ஏன்?ஏசு கிறிஸ்து ஸ்கூலுக்குப்போனாரா?ன்னு கேளேன்#MONSOON


3 YOU ARE FIRED.
WHAT?
U R TERMINATED.
SIR!!
யோவ்.வேலையை விட்டு தூக்கிட்டோம்னு பச்சையா சொன்னாதான் புரியுமா?


உங்க கதைல டெப்த் கம்மியா இருக்கே?
இன்னும் 2/3 "சீன்",சேர்த்த வேண்டி இருக்கு சார்.



ஹீரோயின் இல்லாம எடுக்கப்படும் சினிமா ஓணம் பண்டிகை.அன்னைக்கு வெறும் ரொட்டி சாப்ட்டது போல் இருக்கும்


என் படத்துல நீங்க நடிக்கனும்னா அந்த கேரக்டராவே மாறிடனும்.
அய்யய்யோ.அப்போ சாகற மாதிரி சீன் வந்தா ?
ஆ! # MONSOON MANGOES


7 சார்.நம்ம பட.டைட்டில் எப்படி இருக்கு?
ம்ம் மேங்கோஸ் னு வர்றதால ஹீரோயின் டி சர்ட்ல டைட்டில் வர்ற மாதிரி டிசைன் பண்ணிடலாம் #,MONSOON MANGOES

8 குதிரையை கூட்டிட்டு வா ன்னா கழுதையை ஷூட்டிங் கூட்டிட்டு வந்திருக்கே?
சார்.2ம் ஒரே பேமிலிதானே?,அட்ஜஸ் பண்ணிக்க முடியாதா? MANGOES


9 அம்மா அப்பா இஷ்டப்படி குறிப்பிட்ட வயசு வரைதான் நடக்க முடியும்.பின் நம்ம இஷ்டப்படிதான் வாழனும் MANGOES


10 உன் கனவு நிகழ்ந்தேற பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் # M M


11 அடல்ட்ஸ் ஒன்லி படம் தானே எடுக்கப்போறீங்க?,அதுக்கு கதை எதுக்கு?,எல்லாப்படத்துலயும் ஒரே க்ளைமாக்ஸ் தானே? MANGOES


12 வாழ்க்கையை விட சினிமா பெருசில்ல.சினிமாவை.விட உயர்ந்தது வாழ்க்கை #,M M








இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  எடுத்துக்கொண்ட கதை  என்னவோ அதை நோக்கிய நிதானமான பயணமாக அமைக்கப்ட்ட தெளிவான திரைக்கதை


2 தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் கச்சிதமான பங்களிப்பை அளித்தது




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  முன் பின் அறிமுகம் இல்லாத ஆட்களை எப்படி  வீட்டுக்குள் தங்க வைப்பாங்க ? வெள்ள பாதிப்பு மக்களா இருந்தாக்கூட அப்படி செய்யலாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர்களை கெஸ்ட் ஹவுசிலோ  தனி  வீட்டிலோதானே தங்க வைப்பாங்க ?


2  ஹீரோ எந்த ஒரு இய்க்குநரிடமும் அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணாமயே எப்படி கேமரா கையாள்வது உட்பட எல்லா ஒர்க்கும் பண்றாரு ? பெரிய மணி ரத்னமா?


3 படத்துக்குப்பக்க பலம் வசனங்கள் , ஆனால் எல்லாம் ஆங்கில பொது அறிவு நூல்கள், அறிஞர்கள் பழமொழிகள்  அறிவுரைகள்  இவற்றில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கு, ட்விட்டர்ல இருந்தும்

4  ஹீரோயின் இல்லாம படம் எடுக்கறது வேஸ்ட்னு படத்துலயே டயலாக் வெச்ச இயக்குநர் அதை அவர் ஃபாலோ பண்ண மறந்தது ஏனோ?




சி  பி  கமெண்ட் - Monsoon Mangoes ( 2016- malaiyaalam)- அரைகுறை திறமையுடன் சினிமா எடுக்கும் ஆர்வக்கோளாறு காமெடி கதை - ஏ செண்ட்டர் ஃபிலிம், ரேட்டிங் = 3/5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43  ( மலையாளப்படத்துக்கு விமர்சனம் அதிகம் போடுவதில்லை, ஒரு ஒப்பீட்டு நோக்கில்_)



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங் =3/5


திருவனந்த புரம் ஸ்ரீ  தியேட்டரில் படம் பார்த்தேன்





0 comments: