Thursday, January 21, 2016

பா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் யார்? ஒரு அலசல்

எம் சசிக்குமார் படத்தில் விஜய் நடித்தால் டைட்டில் சாங்


புலியும் புலிக்குட்டியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்டா
எவனும் இங்கே எதிர்த்து வந்தா தூசுடா


===============

2 இயக்குநர் ஆர் கே செல்வமணிக்குப்பிடிக்காத ட்வீட்டர் யார்?


ரோஜா ப்பூ தையல்காரன்===========

3 ஒடி விளையாடு பாப்பா னு பாரதியார் அப்போ சொன்னாரு.இப்போ ட்விட்டர்ல இருந்தா?


ஓடி விளையாடு பன் பேபி
நீ ஓய்ந்திருக்கலாகாது தெறி பேபி


============


4 நான் exam re-correction கு

போடவா???
வேணாமா???"
வேணாம்.மிஸ்.வாங்குன 30 மார்க்கும் 25 ஆகிடும்


==============

5 மது விலக்கு பற்றி உண்மையான அக்கறை உள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமக மட்டுமே.

============

6 ஜல்லிக்கட்டில் காளைய அடக்கறவங்க புலிய அடக்குங்களேன்.


மேடம்.புலிக்கு கொம்பு இல்லை .உங்க கிட்டே பேச தெம்பு இல்லை.தமிழ் நாடு பூரா தேடியும் சிம்பு இல்ல==============


7 டியர்!என்னிடம்  நீங்கள் கோபம் கொண்டால் எங்கு நான் போவது?

மாடிலதானே உங்க அம்மா வீடு?போய்க்கோ போய்க்கோ


==================


8  உங்க  சொந்த சம்சாரம் கோவிச்ட்டு குப்புறக்கா படுத்திருக்கா?எழுப்பி விட ஒரு எளிய வழி. வாங்க அத்தை  எப்போ வந்தீங்க? என வாசல் பார்த்து சொல்க


==================


9  அன்பே! உன்னிடமி௫ந்து மெசேஜ் வர தாமதமானால்  உன் சார்பாக  செல்லில் டைப் அடித்துத்தரும் உன் தங்கைக்கு உடம்பு சரி இல்லை போல் என நினைப்பேன்


====================


10 என் ஆட்சியில் என் ஆணைப்படி  சபரிமலை யில் பெண்கள் அனுமதின்னு  அறிக்கை யாரும் விட்றாதீங்க, கோர்ட் அவமதிப்பு கேஸ் போட்டுடுவாங்க


==================


11 எப்போதும் வாக்கு தவறாதீர்!

தேர்தலில் வாக்கு அளிக்க மறவாதீர்!
அதிகாலையில் தினசரி WALK போகாமல் இராதீர்!

=========

12 டாக்டர்! காலைலயும் தூக்கம் வருது.. மதியமும் தூக்கம் வருது.. இரவும் சீக்கிரம் தூங்கறேன்.


ஏம்மா பூங்கா வனம்.இப்டி தூங்காதே தினம்.


=============

13 எல்லா டெய்லர்களுக்கும் எல்லா நாளும் "தைத்திரு" நாளே!


=============

14 திடீர் என கலா உங்கள் எதிரே வந்தால்


அடடே! நீங்"கலா!?" என ஆச்சரியப்படுங்கள்


====================

15 ஃபிகரோட ஃபோன் நெம்பரும் , அட்ரசும் பிறர் தர வாரா. ஃபிகர்ட்டயே கேட்டு வாங்குனாத்தான் உண்டு.100 கேர்ள் ஃபிரண்ட்ஸ் வெச்சிருந்தாலும் தரமாட்டானுக


=================

16 நடப்பன, ஊர்வன , பறப்பன எல்லாத்தையும் கட்டுக்கட்டும் கட்டழகி இன்னிலருந்து வெஜிடேரியனா மாறுவோம்னா கோயில் அருகே குடி போய் இருக்குனு அர்த்தம்


==================


17  பூ வைக்க தெரில னு எந்தப்பொண்ணையும் திட்டாதீர்! இப்டித்தான் வைக்கனும்னு வெச்சு விடுங்க!ஒரே டிக்கெட்ல 2 சினிமா


==================


18 உங்க சொந்த ஊர்ப்பெருமையைப்பேச சொந்த ஊரில்தான் குடி இருக்கனும்னு அவசியம் இல்லை.எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊர்ப்பெருமை பேசலாம்


===============

19 பா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத ட்வீட்டர் மது ப்ரியா ":


==============

20 திமுக,அதிமுக 2 கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து இப்போ ட்ராமா போடுவதால் ட்ராமாதாஸ் DRRAMDAS


=================

0 comments: