Friday, October 23, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி-அக்டோபர் 23 ,2026 ரிலீஸ் தமிழ்ப்படங்கள் பட்டியல்

 

அடுத்த மாதம் தீபாவளி ரிலீசுக்குப்பெரிய படங்கள் வருவதால் லோ பட்ஜெட் படங்கள் இந்த மாதம் களம் இறங்குகின்றன.நான்கு தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.


ஹைக்கூ, நோவா,அசுர குலம்,,பிக்காசோ





ஹைகூ (2026)-தமிழ்- ரொமாண்டிக் டிராமா


முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உருவாகி இருக்கும் படம் இது.

ஏகன்,ஸ்ரீதேவி,கலைவாணி பாஸ்கர் ,அதிர்ச்சி அருண்  நடிக்கிறார்கள்.

இசை சித்து குமார்
இயக்கம் யுவராஜ்  



ட்ரெய்லர்,டீசர் பார்க்கும்போது யூகிக்கும் கதை இது 

நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு லேடீஸ் காலேஜில் சீட் கிடைத்துப்படிக்கிறான்.எல்லாரும்பெண்கள்.இவன் மட்டும் தான் ஆண்.அவனுக்கு வேறு வேறு சந்தர்ப்பங்களில் இரு வேறு 
பெண்களுடன் காதல் ஏற்படுகிறது.இதில் நடக்கும் காமெடி கலாட்டா தான் கதை.

ரசித்த வசனங்கள்

1 காதல்,கண்களைப்பார்த்துப்பேச வைக்கும்,எல்லைக்கோடுகளை எதிர்த்து நிற்கும்,புதிய திசைகளைத்திறந்தும் வைக்கும்,மெய் தொட்டுப்பயில வைக்கும் ,பொய்யாய் பாராட்டவும் வைக்கும்


2 காதல் ஆரம்பத்தில் சொதப்ப வைக்கும் ,சொதப்ப சொதப்ப சொல்லிக்கொடுக்கும்

3 மொத்தத்தில் காதல் என்றால் சொல்ல ஒன்றுமில்லை,காதல் இல்லை என்றால் சொல்ல ஒன்றுமே இல்லை.


4 சத்தியமா உன் கிட்டே அவங்க எதுவுமே சொல்லலையா?இது விமன்ஸ் காலேஜ்டா

அப்போ இந்த க்ளாஸ்ல நான் மட்டும் தான் பையனா!?

டேய் முட்டாள்,இந்த மொதக்காலேஜ்லயும் நீ ஒருத்தன் தாண்டா பையன்.


5 என்னைகிஸ் பண்ணும்போது யாரை நினைச்சுக்கிஸ்   செய்வே?வேற யாரையோ நினைச்சுக்கிட்டு என்னைக்கிஸ் பண்ணினா எப்படி இருக்கும்?

6. ஒரு பொண்ணு நம்மை லவ் பண்ணும்போதே அவங்களை நல்லாப்பார்த்துக்கனும்.ஒன்ஸ் அவங்க நம்மை விட்டுப்போகனும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் நாம காலில் விழுந்து கெஞ்சினாலும் வர மாட்டாங்க.

7 எப்படி இருக்கு?

எங்க வீட்டில் சாப்பிடுவது மாதிரி இருக்கு

உங்க வீட்டில் இப்படிக்கேவலமாதான் சாப்பிடுவீங்களா?

வாட்?
========================================================================

நோவா - சயின்ஸ் பிக்சன் ஹாரர் திரில்லர் 


பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் ,துருவா நேனி,அத்விதி ஷெட்டி ,ஹிருதிகா பிஸ்வாஸ் ஆகியோர் நடிக்கிறார்

டைரக்சன் மிலோ.

ட்ரெய்லர்,டீசர் பார்க்கும்போது யூகிக்கும் கதை இது 


ஒரு பேய்ப்படம் ஷூட்டிங்க் எடுக்க ஒரு படக்குழு வருகிறது.ஒரு மலைப்பிரதேசத்தில் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.1969ம் ஆண்டு கால கட்டத்தில் இருந்து ஒரு உதவி கிடைக்கிறது.எப்படித்தப்பிக்கிறார்கள் என்பது மீதிக்கதை.




ரசித்த  வசனங்கள்


1 பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?


2 ஆண்களை விட பெண்களுக்கு. இந்த உலகம் 
3 சூரியன் அடங்கும் வரை சோழன் அடங்க மாட்டான்.



=================================================================
அசுரகுலம் (ஆக்சன் திரில்லர்)




விக்னேஷ் மேனன் இயக்கத்தில் உருவான படம் இது. சபரீஷ் ,வித்யா பிரதீப் ,தம்பி 
ராமய்யா ,லால் ,ஜான் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் டி ரெய்லரோ , டீசரோ  வெளியாகவில்லை 
=====================================================

பிக்காசோ    ( ரொமாண்டிக் டிராமா )



அறிமுக இயக்குநர். கவுதம் சிவராமன் இயக்கத்தில்  டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் நாயகனாகவும்,புகழ் கன்னட நடிகர் சிவராஜ் குமார் அப்பா ரோலிலும் நடிக்கிறார்கள்.




நாயகியாக  யோக லட்சுமி நடிக்கிறார்.இவர் டூரிஸ்ட் பேமிலி ,அசுரன்  ஆகிய படங்களில் நடித்தவர்

இந்தப்படத்தின் டி ரெய்லரோ , டீசரோ  வெளியாகவில்லை 


===================================================