Saturday, January 30, 2016

சன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க இலவச அலைபேசி 1100 அறிமுகம்-ஜெ # ஜெ வும் சசியும் தான் நெ 1,நெ 1,மத்தவங்க எல்லாம் ஜீரோ ஜீரோ.கட்சியில்.குறியீடு?
=======

============


2 பிச்சை எடுப்பதை கட்டுபடுத்த நடவடிக்கை ___மத்திய அரசு # அம்மா தாயே ஓட்டு போடுங்கனு யாரும் வரமாட்டாங்க இல்ல இனி?
==============
3 ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தேமுதிக திமுக வெளிநடப்பு. # ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஓடலாம், வெளியேறலாம்
===============
4 தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு.-செய்தி # இனி கட்சிக்காரங்க இவரை "இது நம்ம ஆளு"நர் னு பாராட்டுவாங்களோ?்
==============5 திருவாரூருக்கு ரயிலில் செல்ல இருக்கிறேன் - கருணாநிதி # 2 ஜி தீர்ப்பு வந்த பின் ஜெயில் செல்ல இருக்கிறேன்
===========
6 கேட்டை திறக்க தாமதமானால் காவலாளி மீது காரை ஏற்றிக்கொன்ற சம்பம்: கேரள தொழிலதிபர் குற்றவாளி என தீர்ப்பு. # மாநிலத்துக்கு ஒரு சல்மான் கான்
===========
7 இதுதான் ஜெயலலிதாவுக்கான கடைசி பாராட்டு உரை: ஆளுநர் உரை குறித்து ராமதாஸ்  # அய்யய்யோ, இனி ஆளுநர் போஸ்ட்டே இருக்காதா? தூக்கிடுவாங்களா?

==================
8  காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது -ராகுல்# மக்களிடம்  வாக்குக்கேட்காமல் தேர்தலில் நிற்பதை ஆதரிக்கிறோம்
================
9  மதுகடைகளை மூடினால் சட்டம்-ஒழுங்கு கெடும்-எடப்பாடி பழனிச்சாமி # ஓஹோ! பெரும்பாலான போலீஸ்காரங்கள்கூட குடிகாரர்கள் தான்னு சொல்றீங்களா?
==================10 ‘அம்மா அழைப்பு மையம்’ காப்பியடிக்கப்பட்ட திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு # பரீட்சைல பையன் காப்பி அடிச்சானா?யார் கேட்கறா? பாஸ் ஆகிட்டானா?
=================11 கெத்து படத்துக்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி கோர்ட்டில் வழக்கு # மதுவிலக்குக்கேட்டு தாத்தா டிராமா போட்டா பேரன் வரிவிலக்குக்கேட்டு சினிமா
=================
12 நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை. -செய்தி # அதுல கூட ஸ்பீடு போஸ்ட் ஏடிஎம் இருக்கா?ன்னு கேட்பானே நம்மாளு, அவசர உலகம் 
===============
13  உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு கூடாது: ராமதாஸ்  # ஆமா, காதலர்களைப்பிரிக்கும்போது மட்டும் அதெல்லாம் பார்த்தாப்போதும்
==================14  தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடி: அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம்# அப்போ முதல் கருத்துக்கணிப்பை காஞ்சிபுரத்தில் எடுக்கனும்
=====================
15  வாட்ஸ் அப் பயன்படுத்த இனி கட்டணம் கிடையாது-செய்தி # இது நிறுவன அறிவிப்புதான். என் ஆணைப்படி இலவசம்னு யாராவது அடிச்சு விட்றப்போறாங்க
===================
16 தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் பெண் வாக்காளர்களே அதிகம் # ஆணாதிக்கம் நிறைந்த தலைநகரில் பெண் ஆதிக்கம்
==================
17 சன்னி லியோனியுடன் இணைந்து பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சியே - அமீர்கான் # அண்ணே, ஷூட்டிங் அவுட்டோர்ல தானே?
=================18  முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் 99 சதவீத மனுக்களுக்கு தீர்வு உயர் அதிகாரி தகவல் # சார், குறை மனுக்களைப்படிச்சு முடிக்கவே ஒரு வருசம் ஆகுமே?==================19 மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- ராமதாஸ் #  சாதிப்பிரச்னையால் காதலர்கள் தற்கொலைக்குக்காரணமானவர் முதல்வர் ஆகனுமா?


==================

20  தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்-GKவாசன்  # இப்டி பொதுவாச்சொன்னா  எப்படி?இங்கன தவறு செஞ்சவங்க கொள்ளைப்பேரு அரசியல்ல இருக்காக


======================

0 comments: