Saturday, May 31, 2014

பூவரசம் பீப்பீ - சினிமா விமர்சனம்

 

மாமூல் மசாலாப்படங்களையே பார்த்து சலித்த கண்களுக்கு அவ்வப்போது அபூர்வமான கலைப்படங்கள் வியாபார ரீதியான அம்சங்களுடன் மின்னி மறையும் . அப்படிப்பட்ட அபூர்வமான படங்களில்  தாராபுரம் பெண் இயக்குநர்-ன் இந்தப்படமும் இடம்  பிடித்ததில்  மெத்த மகிழ்ச்சி .


ஒரு கிராமம்.அதுல ஆறாவது படிச்ச 3 பசங்க,3 பேரும் புத்திசாலிங்க , தனித்திறமைகள் உள்ளவங்க.கிராமத்தில்  ஒரு மழை நாளில் ஆத்தோரமா விளையாடிட்டிருக்கும்போது   சலவைத்தொழிலாளியின்  மனைவியை 4 பேர்  கேங்க்  ரேப் பண்றதைப்பார்த்துடறாங்க.அடுத்த நாள் ஊரே  கூடி ஆத்தில் அடிச்சுட்டுப்போன  பிணம்னு  முடிவு கட்டிடறதைப்பார்த்து  குற்றவாளீகளை ஆதாரத்துடன் பிடிக்க முடிவு பண்றாங்க. 


ரிட்டயர்டு  மிலிட்ரி தாத்தா  ஒருவர் மிலிட்ரில இருந்து கொண்டு வந்த  தொலை தொடர்புக்கருவி 1 இவங்க கைக்கு சிக்குது.அதை வெச்சு பீப்பி எஃப் எம் அப்டினு அங்கீகாரம் இல்லாத  ரேடியோ உருவாக்கி தினமும் மாலை 4 மணிக்கு  கிராமத்து மக்களுக்கு  ஒரு புரோகிராம் பண்றாங்க .அதுல அந்த  ஊர் மக்களின்  நடைமுறை வாழ்க்கை , கிண்டல் கேலியோட  சொல்லி மக்கள் மனம் கவர்றாங்க . 


 க்ளைமாக்சில்  அந்தக்கொலையாளிகளை  அந்த  எஃப் எம்  மூலமாவே எப்படி பிடிக்கறாங்க என்ப்தே  கதை .



  சும்மா சொல்லக்கூடாது , இயக்குநர்  இது முதல் படம் என்ற   தடுமாற்றமோ தயக்கமோ  ஒரு சீனில்;  கூட காட்டாம  பிரமாதமா திரைக்கதை எழுதி  இயக்கி இருக்காரு . சின்ன வயசில் சுபா, பி கே பி , சுஜாதா நாவல்கள் அதிகம் படிச்சிருப்பார்  போல . க்ரைம் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில்  சீன் பை சீன் நாவல் படிப்பது  போலவே  இருக்கு 

சின்னப்பசங்க எப்படி இந்த மாதிரி செய்ய  முடியும் ? என்ற கேள்வியே எழாத வண்ணம் இவர் அமைத்திருக்கும் திரைக்கதை  புருவங்களை  வியப்பால்  உயர்த்தச்சொல்லும் 


 இயக்குநர்  மிஷ்கின் , சமுத்திரக்கனி ,புஷ்பா -காயத்ரி ஆகியோரிடம்  உதவி இயக்குநராக 7 வருடங்கள் பணி ஆற்றிய  ஹலீதா சாமீம்  தாரபுரத்துக்காரர் என்பதால்  படப்பிடிப்பையும்  முழுக்க முழுக்க தாராபுரம், பொள்ளாச்சியில்  முடித்திருக்கிறார் . இவர் எலக்ட்ரானிக்ஸ் ல்  டிகிரி முடித்திருப்பதால் அதே சப்ஜெக்ட் நாலெட்சை யூஸ் பண்ணி  திரைக்கதை அமைத்திருக்கிறார். டி ஆர் பாணியில்  இவரே எடிட்டிங்க் , கலரிங்க் , பாடல்கள் ,கதை , திரைக்கதை , வசனம், இயக்கம்  என  7 பணிகளை செய்திருக்கிறார்.இவருக்கு ஒரு அழகிய பூங்கொத்து வரவேற்பு

3 பசங்களோட அறிமுகக்காட்சி ,  அவங்களுக்குள் ஏற்படும்   சினேகம் , பின்  ஒரு சிறுமியால் ஏற்படும்  பிரிவு  என சின்னப்பசங்க  உலகத்தில்  புகுந்த மாதிரி  ஒரு குட் ஃபீல்  வருது . அபாரம் 

 3 பசங்க நடிப்பும்  பிரமாதம் .குறிப்பா ஆரண்ய காண்டம் , வெயில் படத்தில் வந்த  வசந்த் கலக்கறார். பிரவீன் கிஷோர் , கவுரவ் காலை இருவரும் அவருக்கு சளைத்தவர்கள் இல்லை என  முதல் பட புதுமுகம் என்ற பயம்  இல்லாமல் அசால்ட்டாக நடித்து அரங்கு நிறைந்த கை தட்டல் பெறுகிறார்கள்


 வில்லன்களாக  வரும்  காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் 4 பேரும்  நல்லா பண்ணி இருக்காங்க .கிராமத்து ஆட்களிடம் காணப்படும்  முரட்டுத்தனம் அப்படியே கண்  முன் நிறுத்தறாங்க 




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. பசங்க 3 பேரும் சந்தையில்  பொன் வண்டு  விற்கும் காட்சியும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி சீனும் 


2  பட்ட மரத்தில்   காதலிக்குப்பிடித்த பட்டம் தனை பல கலரில்  தொங்க விட்டு பட்ட மரத்தை பட்டம் மரமாக்கிய அழகியல் ரசனை கவிதையான காட்சி . பாரதிராஜா படத்துக்கு இணையான ஒளிப்பதிவு  


3  க்ளாஸ் லீடரான பொண்ணு  தினமும் இவங்க 3 பேரை  போர்டில் எழுதி போட்டுக்குடுக்கும் போது  ஒரு நாள்  “ ஏம்மா இன்னைக்கு அவன் லீவ்” என கலாய்க்கும் இடம் . குறிப்பா ஸ்கூலில் நடக்கும் எல்லாக்காட்சிகளுமே  கொண்டாட்டமான காட்சிகளே 



4  வில்லனில்  ஒருவன் மேரேஜ் ஆனவன் என்பதை அவ புதுக்காதலிக்கு  தெரியப்படுத்த  அவன்  வீட்டின்  முன்  டயர் எல்லாம் போட்டு பஞ்சர் கடை போல் செட்டப் செய்து    புதுக்காதலி  மோகனா  வரும் வழியில் பஞ்சர் ஆக்குவது,அதைத்தொடர்ந்து வரும் காமெடி கலாட்டாக்கள்


5  கெமிஸ்ட்ரி வாத்தியாரிடம் எக்சாம் பேப்பர் அபேஸ் பண்ணி மரம்  பூரா  ஒட்ட வைத்த ஆர்ட் டைரக்சன் அபாரம்


6 வில்லன்கள்  துரத்தும்போது   ஓடி வரும் 3 சிறுவர்களூம் மரத்தில் மாட்டிய பட்டத்தை பிடிக்கவே வந்தார்கள் என டைவர்ட் செய்யும் காட்சி   கை தட்டலை அள்ளியது 


 7    மதக்கலவர காச்ட்சிகளை  அனிமேஷனில் காட்டியது . அது  ஒரு சிறுகதை  போல் பிரமாதமாக அமைந்தது 


8   சுடர்க்கொடியை  சுடர்மணி என  மாத்தி  க்கூப்பிட்ட பின் கோபித்த காதலிடம்  இனி சுடர் மணி  சம்பந்தப்பட்ட எந்த டிரஸ்ம் போட மாட்டேன் என கூறுவது ( இந்த சீனில்  ட்விட்டரில்  இருக்கும்  சுடர்க்கொடி நினைவு வர்லை, நல்ல வேளை ) 

 9 எல்லாவற்றுக்கும்  சிகரம் வைத்தது  போல்  வயசுக்கு வரும் பையனின் உணர்வை செம காமெடியாக , கவிதையாக சொல்லி இருக்கும்  இயக்குநருக்கு  ஒரு ஷொட்டு /. இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் இந்த சீன் வரவில்லை 


10  லாலிபாப் ஆக வரும் வர்ஷினி , அகல்யா  இருவர் நடிப்பும் கண்ணுக்குள்  நிக்குது 





இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  சம்பவம் நடந்ததை நேரில் பார்க்கும்போது அவர்கள் அதிர்ச்சியில்  உறைகிறார்கள்  சரி , ஏன் சத்தம்  போட்டு ஊரைக்கூட்டலை?  3 பேரும் 3 திசையில்  ஓடிப்போய்  ஆட்களை வர வைக்கலாமே? 

2  அந்த சின்ன  கிராமத்தில்  3 பேரும்  ரெகுலராக மாலை 4 மணிக்கு அந்த மலையில் போய் எஃப் எம் ஒலிபரப்புவதை  யார் கண்ணிலும் மாட்டாமல் எப்படி செய்ய முடியும் ? 



3  இடைவேளைக்குப்பின் காட்சிகள்  ரொம்ப நீளம் , இன்னும் எடிட்டிங்க் பண்ணி    இருக்கலாம். கடைசி 30  நிமிடங்கள்  லேசாக போர் அடிக்குது


 

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.   ஜெட் விமானம் , சாதா விமானம் என்னடா வித்தியாசம்?

 ஜெட்  விமானம்  போற பக்கம் எல்லாம் குசு  விட்டுட்டே  போகும் . சாதா விமானம் சும்மா போகும் 


2  பொன் வண்டு எப்படி டால் அடிக்குது பாத்தியா ? பி டி வாத்தியார் மண்டை மாதிரி 


3  தலை நரைச்சு 4 மாசம் கூட ஆகலை, அதுக்குள்ளே தத்துவம் சொல்ல வந்துடறாங்க 


4  கண்ணும் காதும்  உனக்கு அவுட்டு , நாக்கை மட்டும் நீட்டு 


5 நீங்க என்ன பச்சா பாய்ஸா? \\


 பின்னே வயசுக்கு வந்துட்டு வர்லைன்னா சொல்றோம் ? 



6 வளர்ந்து பெரிய ஆள் ஆனதும்  என்ன செய்யப்போறே ? 

 யாருக்குத்தெரியும் ? 


7  நாங்க  பெரிய ஆள் ஆனாலும்  , நீ எப்பவும் இதே மாதிரி சின்னப்பொண்ணாவே   இருக்கனும் 


8  லைஃஃப்  பாய்  சோப் மட்டும்தான் ஆம்பளைங்க சோப், மீதி எல்லாம் பொம்பளைங்க   போடுவது 

 உனக்கெல்லாம் 501 தாண்டா சரி ., டபுள் பர்பஸ்


உனக்காக வானவில்லையே வளைச்சுத்தருவேன்

தேங்க்ஸ், ஆனா அது ஆல்ரெடி வளைஞ்சுதானே இருக்கு?

சரி, நேராக்கித்தர்றேன் # பூவரசம்பீப்பீ


10 நீயே  உன் மன்சை  ஓப்பன் பண்ணிடு,இல்லாட்டி  மத்தவங்க  உன் மன்சை  கிழிச்சு  ஓப்பன் பண்ணற மாதிரி ஆகிடும் # பூவரசம்பீப்பீ


11   ஏம்மா , எல்லாரும்  செத்துத்தான் ஆகனுமா? 


12 ஏண்டி. என்னதா  உனக்குத்தெரியாது ?


 என்னைத்தான் உனக்குத்தெரியாது



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1. மிக எளிமையான ,அழகான டைட்டில் டிசைன் # பூவரசம்பீப்பீ



2 பசங்க ,கோலிசோடா வரிசையில் சின்னப்பசங்க ராஜ்ஜியம் # பூவரசம்பீப்பீ


3 கலர் கோட்டிங் வெயில் வசந்தபாலன் பாணி ,பாடல் படமாக்கத்தில் அஞ்சலி மணிரத்ன உற்சாகம்.அறிமுக இயக்குநர் தாராபுரம் தாரகை ராக்கிங் # பூபீப்பி



4 13 வயசுப்பையன் வயசுக்கு வரும் காட்சியை மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடாமல் சூட்சுமமாய் உணர்த்தும் இயக்குநருக்கு ஷொட்டு # பூவரசம்பீப்பீ










சி பி கமெண்ட் -பூவரசம்பீப்பீ - அழகியல் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்ட மாறுபட்ட கிராமத்துப்பின்னணி த்ரில்லர் மூவி - விகடன் மார்க்=45 ,ரேட்டிங் = 3/5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =45





குமுதம் ரேட்டிங்க் =நன்று


 ரேட்டிங்= 3 / 5


கரூர் கலையரங்கம்
Embedded image permalink

 டிஸ்கி -  வழக்கமா அட்ரா சக்க ல ஹீரோயின்  ஃபோட்டோஸ் நிறைய போடுவோம், ஆனா இது சிறுவர்களுக்கான மழலை சினிமா. நோ ஹீரோயின் .ஆனா நமக்கு கொள்கை தானே முக்கியம்? அதனால இயக்குநரை ஹீரோயின் ஆக்கிட்டேன் . இந்தியாவிலேயே இது  முதல்  முறை . ஹி ஹி  


டிஸ்கி 2 -

அப்சரஸ் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/05/32-34-36.html

Track listing
No. Title Singer(s) Length
1. "Gnayiru Dhinangalin (Version 1)"   Abhay Jodhpurkar
2. "Angry Birds"   Ranjith, Aajeedh Khalique, Gautham
3. "En Ulagam"   Karthik
4. "Ko Ko Ko"   Aajeedh Khalique, Gautham, Vignesh, Iyshwarya, Swetha, Reagan
5. "Enakkondrum Vaanveli"   Aajeedh Khalique
6. "Gnayiru Dhinangalin (Version 2)"   Karthik
7. "Theme Music"   Instrumental


  • Gaurav Kalai as Venu Kanna
  • Pravin Kishore as Harish
  • Vasanth as Kapil Dev
  • Varshini as 'Lollypop'
  • Agalya
  • Kaali Venkat as Magudi
  • Sai Hari as RS Shanmugam
  • Sundar as Manjunathan
  • Karthik as Muniyan
  • Samuthirakani (Cameo appearance)[7]



Directed by Halitha Shameem
Produced by Manoj Paramahamsa
Sujatha Chenthilnathan
Written by Halitha Shameem
Starring Gaurav Kalai
Pravin Kishore
Vasanth
Music by Aruldev
Cinematography Manoj Paramahamsa
Editing by Halitha Shameem
Studio V Talkies
Baby Shoe Productions
Distributed by SPI Cinemas
Release dates
  • May 30, 2014
Country India
Language Tamil


எதுக்கு சுத்தி வளைக்கனும்? ஒரு துளி மிடி போதும்

1. தமிழகத்தில் மோடிகளுக்கு வேலை இல்லை: கருணாநிதி # தலைவா! மோடி மஸ்தான்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டுமா? மோடி வரக்கூடாதா?


================

2 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கட்டும்: ஜெ கடிதம் # 20+20 மேட்ச் ஆக்கீட்டீங்க


====================



3 ஜில்லா,வீரத்தை பின்னுக்கு தள்ளிய மான்கராத்தே ஓபனிங் -செய்தி # கேட்கறவன் கேனயனா இருந்தாKR -ன் ஈரமான ரோஜாவே ஈரேழு 14 லோகத்திலும் ஹிட்ம்பான்



=======================


ஏப்.24-ல் ஐ.டி. நிறுவனங்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு # டிவி பார்த்துட்டே வீட்லயே கிடப்பான் தமிழன்


====================


ஹன்சிகா அம்மாவுக்கே டிக்கெட் கெடைக்கல.மலைக்க வைக்கும் மான் கராத்தேவின் 12கோடி வசூல் # சிவபெருமான் சம்சாரம் பார்வதிக்கே பாஸ் கிடைக்கலயாம்


=================

6 ஜெயலலிதா ஒரு போல்டு லேடி -ஆதீனம் # சசிகலா உறவினர் மேரேஜ் அப்போ 184 பவுன் தன் கழுத்தில் போட்ட கோல்டு லேடி,அதை மறந்துட்டீங்களே!


=====================




7 ஆட்சியில் இல்லாதபோதும் சாதனை செய்தவர்தான் கலைஞர்! - குஷ்பு  # பெண் சிங்கம் , படத்துக்கு வசனம் எழுதுனதைச்சொல்றாரோ?


===================================


எனக்கு கூட ஜெயலலிதாதான் அம்மா! - மதுரை ஆதினம் #  அப்போ மதுரை மீனாட்சிஅம்மன் சித்தியா?அடிச்சு விட ஒரு அளவு இல்லையாய்யா?


==========================


மோடியை கடலில் தூக்கிப் போடுங்கள்! - அஜீத் சிங் #  சம்சார சாகரத்துக்கே டிமிக்கி குடுத்தவராச்சே?



======================

10 என்னை அடிப்பதற்கு இடம், நேரம் சொன்னால் நானே வருகிறேன்! - கெஜ்ரிவால் #  டெல்லி “வின்னர்” உங்களை அழைக்கிறார்! காமெடிகளை அவர் புதுப்பிப்பார்!



======================


11 வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும்! - சீமான் #  இவரை விஜய லட்சுமி மிரட்டுனப்பவே இவரால ஒண்ணும் பண்ண முடியல,



======================


12 குஜராத் மாடல் எங்களுக்கு தேவையில்லை! - ராகுல் #  இந்தியன் மாடலே பிடிக்கலைன்னா இத்தாலிக்கே போய்டலாமே?ஏன் இங்கே சிரமப்படறீங்க யுவர் ஆனர்?


====================


13 பாஜகவின் கொள்கை நாட்டை பலவீனப்படுத்தும்! - சோனியா #  காங்கிரசின் கொள்ளை சாரி கொள்கை நாட்டையே காலி பண்ணிடும்



========================


14 இனி 50 வருடம் வாழ எனக்கும் ஆசைதான்! - கருணாநிதி #  ஜெயா டி வி , ஸ்டார் டி வி -னு எல்லா சொத்தையும் வாங்கிடலாமு னு முடிவு போல



=======================


15 தமிழகத்தில் மோடி என்றால் யாருக்கும் தெரியவில்லை- ப.சி #  ப.சி -னா .ஏழையின் தீர்க்கமுடியாத பசிக்குக்காரணி-னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு



======================


16 எங்களுக்கு குவார்ட்டரும் வேண்டாம்,கோழி பிரியாணியும் வேண்டாம்! - கேப்டன் # ஃபுல் தான் வேணும்,மட்டன் தான் வேணுமு -னு நாசூக்கா சொல்றாரோ?



=====================


17 உடம்பை செக்ஸியாய் வெளிக்காட்டுவதே பெண்கள் லெக்கின்ஸ் அணிவதன் ஒரே நோக்கம்" -DRஷாலினி # எதுக்கு சுத்தி வளைக்கனும்? ஒரு துளி மிடி போதும்


========================

18 அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மாலை அணிவித்த ஆட்டோடிரைவர் ஒருவர், திடீரென கன்னத்தில் அறைந்தார் # அவரோட செல் ரிங் டோன் - கன்னத்துல வை!?


======================


19 கோச்சடையானைத் தொடர்ந்து ராணாவையும் எடுக்கப்போகிறாராம் செளந்தர்யா! # பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும்கறது இதானா?



======================


20 புதிய படத்தை தானே தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம்! # வடக்குப்பட்டி ராம சாமி! உன் பணம் ஊ ஊ ஊ 



=============================

பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் திரைக் கொண்டாட்டம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரான கான் நகரில் நடக்கும் இந்தத் திரைப்பட விழாவுக்கு இன்றைக்கு உலகமெங்கும் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆஸ்கார் விழாவுக்கு நிகராக கான் திரைப்பட விழா உலக சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு களையும் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய இந்த விழா உருவானதற்கு ஒரு முக்கியமான அரசியல் பின்னணி உள்ளது. 



1932-ல் முசோலினியின் இத்தாலியில் வெனிஸ் நகரத்தில் ஒரு திரைப்பட விழா தொடங்கப்பட்டது. இந்தத் திரைவிழா அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய திரை விழாவாகப் புகழ்பெற்றிருந்தது. வெனிஸ் திரைப்பட விழா விருது அந்நாளைய சினிமா கலைஞர்களின் கனவாக இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதை மற்ற நாடுகள் கெளர வமாகக் கருதின. ஆனால் இந்த விழா பிரபலமடைந்த சில நாட்களில் நடுவர்கள், ஜெர்மானிய, இத்தாலிய பாசிசக் கூட்டணி ஆதரவானவர்களுக்குச் சாதகமாகச் செயல்படத் தொடங்கினர். 



1938-ம் ஆண்டு நடந்த விழாவில் பிரெஞ்சு இயக்குனர் ழான் ரென்வாவின் படமான La Grande Illusion விழாவின் உயரிய விருதான முசோலினி கோப்பையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது இந்தப் படம் போருக்கு எதிரான கருத்து களை முன்வைக்கும் படம். ஆனால் ஜெர் மனியப் படமான Olympiaவுக்கும் இத்தாலி யப் பட மான Luciano Serra, Pilotக்கும் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தப் படம் ஹிட்லரின் நாஜிப் படைகளின் வெற்றி களைப் போற்றும் வகையில் எடுக்கப் பட்டது. இதற்குப் பின்னால் முசோலினி யின் அழுத்தம் இருந்ததாகச் சொல்லப் பட்டது. இந்த விருது அறிவிப்பு வெளியான தும் பிரான்ஸ் விழாவில் இருந்து வெளி யேறியது. பிரான்ஸுக்கு ஆதர வாக பிரிட்டிஷ், அமெரிக்க நடுவர் கள் ராஜினாமா செய்தனர். ஆனால் திரைப்பட விழாக் குழு அதற்கெல்லாம் செவி சாய்க்கவே இல்லை. La Grande Illusion படத்திற்கு இத்தாலியும், ஜெர்மனி யும் தடைவிதித்தன. 



இந்தக் காலகட்டத்தில்தான் பிரான் ஸைச் சேர்ந்த சினிமா ஆர்வலர்கள் சிலர், அரசியல் சார்பில்லாத ஒரு திரைப்பட விழா திரைப்பட வளர்ச்சிக்கு அவசியம் என நினைத்தனர். அப்படியான விழாவை பிரெஞ்சு அரசாங்கமே நடத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் முசோலினிக்குப் பயந்து பிரெஞ்சு அரசு அந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிக்கவில்லை. ஆனால் பிரிட்டிஷ், அமெரிக்கா நாடு களும் இக்கோரிக்கையை ஆதரித்தன. 



பிரெஞ்சு சினிமாவின் முக்கியமான ஆளுமைகளான பிலீப் எர்லாங்கர், ராபார்ட் பேவா ல பிரட், லூயீஸ் லுமியார் ஆகியோர் கொடுத்த நெருக்கடியால் வேறு வழியில்லாமல் பிரெஞ்சு அரசு அதற் குப் பச்சைக்கொடி காட்டியது. அதன் பிறகு விழா நடைபெறும் நகரமாக கான் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் விழா 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ல் தொடங்கி இன்று வரை நடைபெற்று வரு கிறது. சில ஆண்டுகளில் இடையில் உலகப் போராலும், பொருளா தாரக் காரணங்களுக்காவும் நிறுத்தப் பட்டிருந்தது. 




ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய திரைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. 


அரசியல் விருப்பு/வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு முழுக்க, முழுக்க கலைக்கெனத் தொடங்கப்பட்ட இந்த விழா, இன்று உலகின் திரை ஆர்வலர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறது. 


நன்றீ-த இந்து

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-கதை இல்லாத படத்தில் காஸ்ட்லி நடிகர்கள்!: இயக்குநர் பார்த்திபன் பேட்டி

மகளிர் கிறித்துவ கல்லூரி மாணவிகள் 100 பேர், தங்களது தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு விக் செய்வதற்காக கேன்சர் மையத்திற்கு கொடுத்தார்கள். பார்க்கும்போது ரொம்ப உணர்ச்சிவசப் பட்டேன். உடனே, அவங்க அனைவருக்கும் எனது சொந்த செலவில் விக் கொடுக்க இருக்கேன். இந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவில் கடவுள் வாழ்த்துக்கு பதிலாக அதைக் கொடுக்கப் போறேன் என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கினார் பார்த்திபன். 



'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்னும் படத்தின் மூலம் இயக்குநர் நாற்காலிக்குத் திரும்பியிருக்கிறார். இசை வெளியீட்டு விழாவிற்காகச் சுழன்றுகொண்டிருந்தவரிடம் பேசியபோது..


படத்தோட தலைப்பே வசீகரிக்குதே, என்ன மாதிரியான படம் இது? 

 
நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். காரணம், எப்போதுமே கதை எடுத்துக்கிட்டு படப்பிடிப்பிற்கு போறப்போ சந்தோஷமா இருக்கும். சில சமயங்களில், மொத்த படப்பிடிப்பும் முடிஞ்சு வரும்போது, நாம் நினைச்ச மாதிரியே படம் பண்ணிட்டோமா அப்படினு கேள்வி வரும். பல தடவை ஏதோ கம்மியா பண்ணியிருக்கோம்னுதான் தோணும். 


ஆனால், இந்தப் படம் அப்படி கிடையாது. நான் எடுத்துட்டுப் போன கதை மேலே, என்னைத் தவிர வேறு யாருக்கும் நம்பிக்கையே கிடையாது. இதுக்கு முன்னாடி 25 முதல் 30 கதைகள் பண்ணிட்டேன். உதவியாளர்கள்கிட்ட சொல்லுவேன், நல்லாயிருக்குனு சொல்லுவாங்க. ஆனா ஷூட்டிங் போக மாட்டேன். இந்தக் கதையையும் அப்படித்தான் நம்பியிருக்காங்க. ஏன்னா, இந்தக் கதை அவ்வளவு நுட்பமா இருக்கும் கதை கிடையாது. அடுத்த அடுத்த நிமிடங்களோட சுவாரசியம்தான் படம். நிறைய சவால்க ளோட படப்பிடிப்பை முடிச்சிட்டு, இப்போ படம் பார்க்குறப்போ அவ்வளவு திருப்தி. இந்தப் படத்தோட பலம் நகைச்சுவை. சீன் பை சீன் சிரிக்கலாம். 


கதையே இல்லாமல் படமா? எப்படி சாத்தியம்?

 
அதுதான் புதுமை. வழக்கமான கதையே இல்லாமல் ஒரு படம் எப்படி அப்படிங்கிறது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அதுதான் புதுமையான விஷயம். 


கதை இல்லாத படத்திற்கு எதுக்கு ஆர்யா, விஷால், அமலா பால், தப்ஸி? 


 
சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பா எடுத்துட்டு போறதுக்கு நிறைய நடிகர்கள் தேவைப்பட்டாங்க. படம் ஒரு இயக்குநரின் பார்வையில் இருக்கும். அவர் எப்போ எல்லாம் கதை சொல்றாரோ, அப்போ எல்லாம் காட்சியா நடிகர்கள் வருவாங்க. நடிகர்கள் வந்துட்டு போறது ரொம்ப அத்தியாவசியமா இருக்கும். 



நிறைய புதுமுகங்கள், 5 இசையமைப்பாளர்கள்… நிறைய புதுசா ட்ரை பண்றீங்க போல? 


 
படத்துல 7 புதுமுகங்களை அறிமுகப்படுத்துறேன். மூணு பெண்கள். நாலு ஆண்கள். தம்பி ராமையா முக்கியமான பாத்திரத்துல நடிக்கிறாரு. அவரை வைச்சு நிறைய காமெடி காட்சிகள் வைச்சிருக்கேன். புதுமுகங்கள் எல்லாருமே கம்மியா வந்தாலும் லேசா மனசை உலுக்கிடுவாங்க. 



தமன், விஜய் ஆண்டனி, சரத், அல்போன்ஸ் ஜோசப், சத்யானு 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றி இருக்காங்க. ஆங்கில படங்கள் மாதிரி பின்னணி இசைக்கு மட்டும் ஒருத்தர்னு புதுசா ட்ரை பண்ணி யிருக்கேன். 15 பின்னணிப் பாடகர்கள் பாடியிருக்காங்க. நகுல், சாந்தனு எல்லாம் பாடியிருக்காங்க. 


முன்னணி நடிகர்களை அணுகினப்போ, அவங்களோட அணுகுமுறை எப்படி இருந்தது? 


 
விஜய் சேதுபதிகிட்ட இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கு, ஒரே ஒரு சீன் மட்டும்தான்னு சொன்னேன். அவரு உடனே என்ன சார் சீன் அப்படின்னு கேட்டார். நாளைக்கு எப்போ சார் வரணும்னு கேட்டார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எல்லாருமே அவங்களுக்கான திறமைகளோட இருக்காங்க. இந்த படத்துல விஷயம் இருந்தது, அதனால நடிச்சாங்க. ஆர்யாவிற்கு ஷூட்டிங் வந்து, வசனம் சொல்ற வரைக்கும் என்ன கேரக்டர்னு சொல்லவே இல்லை. அவரும் கேட்கவில்லை. ஏன்னா நம்பிக்கை. எல்லாருமே சின்னச் சின்ன பாத்திரங்கள் பண்ணியிருந்தாலும் ஒரு தனித்துவம் இருக்கும். 

 

ஏன் முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணவே இல்லை? 


 
எனக்கு ஒரு நாள் கால் மேல் கால் போட்டுக்கிட்டு, ரொம்ப ரிலாக்ஸா ஸ்டார்ட் ஆக் ஷன் சொல்லணும்னு ஆசை. அது, இதுவரைக்கும் நடக்கவே இல்லை. சினிமாவிற்கு வந்து 20 வருஷத்திற்கு மேல ஆச்சு. எல்லா படமுமே கஷ்டப்பட்டுதான் பண்றேன். அது மாறுகிற மாதிரி, அடுத்து ஒரு பெரிய நடிகரோட படம் பண்ணலாம். இந்த படம் பண்ணும்போது ஆர்யா, விஷால் இரண்டு பேருமே சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க. நான் இதுவரைக்கும் அவங்ககிட்ட இதைப் பற்றி பேசல. 



விஜய்யோட ‘நண்பன்' நான் பண்ணியிருக்க வேண்டிய படம். என்கிட்ட பேசி, சம்பளம் எல்லாம் முடிவாயிடுச்சு. எனக்கு ஒரு சின்ன குழப்பம் இருந்தது. இந்தப் பாத்திரம் விஜய்யைவிட சூர்யாவிற்குதான் நல்லாயிருக்கும். ஆமிர் கான் வேற விஜய் வேற. ஆனா என்னை பரிந்துரை செய்ததே விஜய்தான். சூர்யா இருந்தா நல்லாயிருக்கும்னு நான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் ஷங்கர் சார் வர்றார்னு சொன்ன உடனே, அது பெரிய காம்பினேஷன். சினிமா அப்படிங்கிறதே பெயர்களை விற்பனை செய்வதுதான். ஷங்கர் - விஜய் - 3 இடியட்ஸ் அப்படின்னாலே அதுக்கு ஒரு பெரிய வியாபாரம் இருக்கு. எனக்கு ஒரு ரீமேக் படத்தை விஜய்யை வைத்து பண்ணுவதில் விருப்பமில்லை. என்னோட படம் அப்படிங்கிறது என்னோட படமாதான் இருக்கும். 



இனிமேலாவது முன்னணி நாயகர்களை வெச்சு படம் பண்ணலாமே... 


 
பெரிய ஹீரோ வைச்சுக்கிட்டு ரொம்ப ரிலாக்ஸா ஒரு படம் பண்ணலாம்னு இப்போ தோணுது. நிறைய விஷயங்கள் ஒத்து வரணும் இல்லயா? ஒத்து வரும்போது கண்டிப்பா, பெரியா ஹீரோவிற்கான மரியாதையோடு அந்த படம் இருக்கும். சூர்யாவை சந்திக்கும்போதெல்லாம் படம் பற்றி பேசிக்கிட்டுதான் இருக்கேன். அவர் ஒப்பந்தமாகி இருக்கிற படங்கள் எல்லாம் முடிச்சுட்டு பண்ணலாம். 



மகள் கீர்த்தனா இயக்கம் மீது ஆசை அப்படின்னு சொல்லியிருந்தாங்க. இந்த படத்துல இருக்காங்களா? 


 
அவங்க இல்லாமலா? படைப்பில் பங்களிப்பு அப்படினு அவங்க பேர் வரும். அடுத்த வருடத்தில் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமான விஷயம் என்னவென்றால் அவங்களுக்கு ரெண்டு, மூணு தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க. என்கிட்டயே வந்து “சார்.. நீங்க வேண்டாம், கீர்த்தனா மேடம் படத்தை நான் தயாரிக்கிறேன்”னு சொல்றாங்க. அவங்க யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. எனக்கும் கீர்த்தனாவுக்குமான வித்தியாசம் இதுதான். 

மிஸ்டர் ரஜினி! ஏன் இந்த முரண்பாடு?

1. பூச்சூடிய பெண்கள் கொள்ளை அழகு! கூந்தலில் பூச்சூடி விடும் ஆண்கள் மனம் கவர் அழகு!


====================


2 காலையில் நீ சாலையில் செல்கையில் பிகர் துப்பினால் சஞ்சலம் வேண்டாம்.அது பல் துலக்கும் பிகராகவும் இருக்கலாம்



====================


3 படையப்பனின் டைரியிலிருந்து - உன் வீட்டுக்கு வந்தேனா.வந்தனம் சொல்லவில்லையே வந்தனா!


==================


4  டிபன்பாக்ஸ்ல தனக்கு மட்டும் 3 ஆனியன் தோசை வெச்சுக்கிட்டு , எனக்கு சாதாதோசைவெச்ச சம்சாரம் நான் அதை மாத்திட்டதை மத்தியானம்தான் பாக்கும்.கிகி


சம்சாரத்திடம் இருந்து sms.நீங்க மாத்துனதை நான் மாத்திட்டேன்.வாழ்க்கை ஒரு வட்டம் # அடங்கோ


==================


5 வெள்ளை ரோஜாவை்சூடும்போது கான்ட்ராஸ்ட் கலர் கனகாம்பரம் ,வாடாமல்லி வைக்காமல் அதே வெள்ளை மல்லிகை வைப்பவர்கள் மேட்சிங் சென்ஸ் இல்லா மேனகாக்கள்



===================

6  பஸ் ல ஒரு புருசன் போன்ல அவன் சம்சாரம் கிட்டே " நான் வர்றவரை அமைதியா இரு"ங்கறான்.இவர் போன பின் ஆடுவாரோ கிகி



==================


 7 உங்க ஆபீஸ் சிஸ்டம் கீ போர்டு அடிக்கடி மாத்த வேண்டி வந்தா நீங்க டைப்பிஸ்ட் விரல் நகத்தை கவனிங்க.முடிஞ்சா வெட்டி விட்ருங்க (நகத்தை)


======================


8  ஆபீஸ் டேமேஜரை கடுப்பேற்ற சிறந்தவழி ஏன் சார் இன்னைக்கு கோபமா இருக்கீங்க? என தினமும் அவர் லேடி கூட பேசும்போது கேட்பதே



===================



 9 அன்பே! உன் வீட்டுக்கு நானோ என் வீட்டுக்கு நீயோ வந்தா அதுவும் ஒரு மினி ட்வீட்டப்பே!


===================


10 அன்னையர் தினத்தை முன்னிட்டு அவங்கவங்க அம்மா போட்டோவை DPயா வெச்ச பெண்கள் இப்போ அவங்கவங்க டிபியே வைக்கவும்.சைட் அடிக்க சங்கடமா இருக்கு


===================


11 பூனம் பான்டே ட்வீட் போட யோசிக்கவே தேவை இல்லை.குளிக்கும்போது ,யோகா செய்யும்போது ,டிரஸ் மாத்தும்போது எடுத்த போட்டோவா போட்டுட்டு இருக்கு



==================



12 ட்வீட்டப் வராட்டியும் எல்லா பெண் ட்வீட்டர்களும் அவங்கவங்களுக்குப்பழக்கமானவங்க கிட்டே "என்னைப்பத்தி என்ன பேசுனாங்க?" கேட்டிங் # தமிழச்சிடா


====================


13 டேமேஜர் பாரீன் லேடி பையர் முன் சீன் போட்டுட்டு இருந்தாரு.சார்.எப்பவும் சுகர் இல்லா டீ தானே குடிப்பீங்க? இப்போ சுகர் கன்ட்ரோல்டு?


==========================

14 ஆபீஸ் ல புதுசா கல்யாணம் ஆன பொண்ணு புருசன் கிட்டே போன் ல " ஏன் எனக்கு 30 மெசேஜ் தான் அனுப்புனீங்கங்குது.ஏம்மா.அவரு வேலையே செய்யவேணாமா?



========================


15 நாம் போகும் ட்வீட்டப்பில் பெண் ட்வீட்டர் யாரும் வரவில்லை எனில் நாம் ட்வீட்டப் போய் என்ன பயன்? # திருவள்ளுவர் ட்விட்டரில் இருந்தால்


======================



16  அன்பே! ஊடல் ஏன்? ஜோடி மாறிய சிம்பு -நயன் கூட தங்கள் பழைய காதலை புதுப்பித்துக்கொள்ளும்போது மாறாத அன்பு கொண்ட நாம் ஏன் இணையக்கூடாது?




=====================



17 தேர்தல் முடிவு கணிப்பு.பிஜேபி 250+ .பிரதமர் = மோடி. தமிழகம் .அதிமுக 30 ,திமுக =5 ,பிஜேபி கூட்டணி =5 # ஜெ மோடிக்கு ஆதரவு அளிப்பார்   12 5 14


=======================


18 உயர் அதிகாரிகளே! உங்களுக்குக்கீழ்ப்படிந்து நடப்பதால்,உங்களுக்குக்கீழே பணி புரிவதால் நாங்கள் கீழானவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்க



===================



19  ஆஃபீஸ் சாவி கையில் இருந்தால் யாரையாவது வரச்சொல்லிட்டு சவுகர்யத்துக்கு ஓ டி இருக்குனு அடிச்சு விட்டு கில்மா டியூட்டி பார்ப்பான் தமிழன்



=======================


20 ரஜினி - பார்த்தாயா? என் ரத கஜ துர பதாதிகளை?

 ஏனுங்க்ணா? சிங்கம் சிங்கிளாதான் வரும்னு சிவாஜில பஞ்ச் டயலாக் சொன்னீங்க?இப்போ ஏன் பல்டி?



================================

Friday, May 30, 2014

அப்சரஸ் - சினிமா விமர்சனம் 32+ , 34 + , 36 +


  அலைகள் ஓய்வதில்லை நாயகி ராதா  தன்  அலை ஓய்ந்தாலும்  தன் வாரிசு கள் அலை ஓயக்கூடாதுன்னு  முடிவு பண்ணி   கார்த்திகாவை  மலையாளத்தில்  முதல் முதலாக அறிமுகப்படுத்திய படம் தான் மகர மஞ்சு . இதை அப்படியே தமிழ் ல வெளியிட்டா    மகர ராசி மஞ்சு வா?ன்னு  தமிழன் நாக்கு மேல பல்லைப்போட்டு கேட்டுடுவான், அதனால கொஞ்சம்  கிளுகிளுப்பை சேர்த்து அப்சரஸ் அப்டிங்கற  டைட்டில்ல தமிழ் ல டப் பண்ணி இருக்காங்க .

ஓப்பன் பண்ணினதும்  நமக்கு  2 அதிர்ச்சி காத்திருக்கு . இது  ஓவியர்  ரவிவர்மாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு. கிட்டத்தட்ட உண்மைக்கதை . அடுத்து படத்தோட  ஹீரோ  மணிரத்னத்தின்  பிராண்ட் ஒளிப்பதிவாளர்  சந்தோஷ் சிவன்  தான் ஹீரோ ,  மது அம்பாட் தான் படத்துக்கு  கேமரா மேன்


படத்தோட  கதை  என்ன ? ஓவியர் ரவி வர்மா உலகத்தில் வரைய 1008    இயற்கை காட்சிகள்  இருந்தாலும் ,  கோடிக்கணக்கில் ஆம்பளைங்க  இருந்தாலும்  அதை  எல்லாம் கண்டுக்காம  பொண்ணுங்களா தேடிப்பிடிச்சு வரையறாரு. எதுக்குன்னா  ஓவியம்  வரையும்  போது   முகத்தை  இப்படி வை , முந்தானையை அப்டி  சொருகு அப்டினு கரெக்சன் பண்றேன்கற பேர்ல   பிகரை கரெக்ட் பண்ணிடலாம் பாருங்க . இந்த மாதிரி  உயர்ந்த லட்சியத்தோட   அண்ணன்  ஓவியம் வரையறாரு. 




 இவர்  ஓவியம் வரைய மாடலா எந்தப்பொண்ணு வருதோ அந்தப்பொண்ணு  கூட குடும்பம் நடத்தி அந்தப்பொண்ணை  குடும்பப்பொண்ணா ஆக்கிடும் நல்லவர் . ஆனா  மேரேஜ் மட்டும் பண்ணிக்க மாட்டார் . ஏன்னா மேரேஜ் பண்ணீனா சம்சாரத்துக்கு சமைச்சுப்போடனும் , சம்பாதிச்சுத்தரனும், ஆஃபீஸ் ல டிராப் பண்ணனும் . இத்தனை பிக்கல்  பிடுங்கல்  இருப்பதால்  அண்ணன்  வந்தமா  ஓவியம் வரைஞ்சமா ,  ஒரு டைம்  குடும்பம், நடத்துனமா  போனமா , அடுத்த  பிராஜெக்ட்  ரெடி பண்ணமா? அப்டினு   இருக்காரு . 

இந்த  மாதிரி அவர்  3 பொண்ணூங்களை கரெக்ட் பண்ணினது  எப்படி? என்பதே  கதை .  இது என்ன  ஒரு மாதிரி  கதையா இருக்கேனு யாரும்   சொல்லிடக்கூடாதுன்னு   ஒரு வரலாற்றுக்கதையை   ஹீரோயினுக்கு  சொல்வது  போல்   சொல்லி சமாளிச்சு இருக்காங்க . 


ஹீரோவா சந்தோஷ் சிவன் .  மனுசன்  ரொம்ப சந்தோசமா  நடிச்சிருப்பார் போல . இவருக்கு   3 பேர்  கூடவும்  குஜாலா  இருக்கவே நேரம்  போதல . எங்கே போய்  நடிக்க ?  அப்டியே நடிச்சாலும்   யார் பார்க்கப்போறாங்க ? 




 நாயகிகள்  3 பேர் . அடர்த்தியான   புருவ அழகி  நித்யா மேனன் . இவர்  தான் ஓப்பனிங்க் பவுலிங்க் விமன் .  முன் பின் அறிமுகமே இல்லாத   ஓவியர்   சேலையை அட்ஜஸ் பண்ணி அப்புறம் என்ன என்னமோ செய்யும்போது  கூட தடுக்காம ஜஸ்ட் வெட்கம் மட்டும் படும் நல்ல கேரக்டர்  ரோல் . சிறப்பா  செஞ்சிருக்கார் . கேரளா  ஜரிகைகாட்டன் சேலையில்  இவர்   தேவதை மாதிரி  இருக்கிறார் 


 அடுத்தது   பவுர்ணமி அன்னைக்குப்பார்த்தாலும் சரி , அமாவாசை அன்னைக்குப்[பார்த்தாலும் சரி  பரி பூரண அழகு கொட்டும் உதட்டழகி  பூரணா . இவருக்கு காட்சிகள்  கொஞ்சமே . தமிழன்  புரிஞ்சுக்குவான் என நினைக்கிறேன் 

 கடைசியா   க்ளைமாக்ஸ் கோல்  போடுவது  வில் போன்ற  இயற்கையா? செயற்கையா? என கணிக்க முடியாத  அபூர்வ  புருவ அழகி கார்த்திகா . இவர் வரும்  காட்சிகள்  எல்லாம்  ஒளிப்பதிவாளர்   கேமராவை  க்ளோசப்பில் இடையில் ஸ்டேண்ட்  போட்டு  நிறுத்தி  விடுகிறார் . 





 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. மது அம்பாட்டின்    ஒளிப்பதிவு  தான்   படத்துக்குப்பெரிய  தூண் . பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அந்தக்கால கட்டத்தை   கண் முன் கொணரும்  இயற்கை அழகுடன் பெண்கள் , ஆறு , கட்டிடங்கள் , ஓடைகள்  என கேமராவுக்கு  தீனி  போடும் வாய்ப்பு 


2  போஸ்டர்  டிசைனில்  3 நாயகிகளைப்போட்டு  தமிழனைக்குழப்பாம்ல்   கார்த்திகாவை மட்டுமே டார்கெட்டாக  வைத்தது 


3   திரைக்கதைக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்   அசால்ட்டா  , ரொம்ப லைட்டா  கதை  சொன்னது 


4  ரசிகர்களின்  பொறுமையை   ரொம்ப  சோதிக்காம   ஒண்ணே   முக்கால் மணீ நேரத்தில் படத்தை  முடித்தது  


5  இது  ஏதோ கலைப்படம் , உலகப்ப்டம்னு எல்லாரையும்  நம்ப  வெச்சு கால்ஷீட் வாங்கிய சாமார்த்தியம் . இது  கிட்டத்தட்ட  ஒரு கில்ம்பாப்படம்  தான்

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  அந்நியன்   விக்ரம்  மாதிரி கார்த்திகா  2 வேறு  பர்சனாலிட்டில   கேள்வி கேட்டு பதில் சொல்லும்  காட்சியில்  உப்பு சப்பு  உரைப்பு 1 %  கூட இல்லை . சம்பளம் தர்லையா? 


2 உலகத்தில்  வேறு ஆண்களே  இல்லாத மாதிரி எல்லாப்பொண்ணுங்களும் ரவி வர்மா  மேல வந்து வந்து  விழுவது ஏனோ ?  ( ஸ்டொமக் பர்னிங்க்  தான் ) 


3  சீதை , சரஸ் வதி  போன்ற   சாமி ஓவியங்கள்   விதவை , தாசி  , வேசி இவங்களை மாடலாக  போட்டு  வரையப்பட்டவை தான்  என்பது  போன்ற வசனங்கள் இந்துக்கள் மனதைப்புண் படுத்துமே , எப்படி சென்சார்  ல விட்டாங்க  ? 


4 அந்த  லேடிக்கு  விதிக்கப்ட்ட சாபப்படி    ஹீரோ வை மின்னல் வெளிச்சத்தில்  நிர்வாணமா பார்த்தா   தேவலோகத்துக்கு  ட்ரான்ஸ்ஃபர்  கிடைக்கும் . இது  பாப்பாவுக்கு தெரிஞ்சும் ஆல்ரெடி பல டைம் இருட்டுல  பார்த்த  ஹீரோவை மின்னல் வெளிச்சத்தில்  ஏன் அந்த பர்ட்டிகுலர்  ப்ளேஸ் ல பாக்கனும் ? அது  என்ன  லிங்கா  படமா?  


 

 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஒருவரோட  மரணம் நிச்சயிக்கப்பட்டதுன்னா அது எப்படி  நடக்கும் ? என்பதும் ஆல்ரெடி நிச்சயிக்கப்பட்டிருக்கும் 


உனக்கு வரையத்தெரியும்  , எனக்கு  வியாபாரம் தெரியும் , நாம ரெண்டு  பேரும் சேர்ந்தா   சம்பாதிக்கலாம்


3 இந்தியக்கலாசாரம் மாறாத  எத்தனையோ  பெண்களைப்பார்த்த ஒரே ஆள் நீங்க  தான் 






படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. புருவ அழகி கார்த்திகா வின் மகர மஞ்சு ( அப்சரஸ்) ,தாராபுரம் பெண் இயக்குநர் ன் பூவரசம்பீப்பி # இன்றைய டார்கெட் @ திருச்சி ி

2. ரவிவர்மன் உண்மைக்கதை னு டைட்டில் போடறாங்க.அய்யய்யோ .அப்போ இது சைவப்படமா? மாட்டிக்கிட்டமா? # மகரமஞ்சு (அப்சரஸ்)

3. ஹீரோயின் நித்யா மேணன் மல்லிகைப்பூச்செடில இருந்து 36 உதிரி மல்லிகையை 10 நிமிஷமா பறிச்சுட்டே இருக்கு.இது ஆர்ட் பிலிமா? ஏதாவது குறியீடு ?

4. ஓவியர் ரவிவர்மர் ஓவியம் வரையறதைத்தவிர மத்த எல்லா வேலையும் செய்யறாரு # மகரமஞ்சு

5. ஹீரோயின் மழைல நனைஞ்சுக்கிட்டே ஹீரோ வீட்டுக்கு வருது.அது கைல ஒரு டர்க்கி டவல் கொடுத்தா போதாதா? ஹீரோவே துவட்டி விட்டுட்டு இருக்காரு 


6. கார்த்திகா இன்ட்ரோ.புருவத்தை புல்லா ஷேவிங் பண்ணி ஐ டெக்ஸ் மையால வரஞ்சி வெச்சிருச்சோ?

7. நடு நிசி 12 மணிக்கு பேய் மாதிரி ஹீரோ வீட்டுக்கு வரும் நாயகி " உங்களுக்குப்பிடிக்கலைனு சொன்னா நான் திரும்பிப்போய்டறேன்"குது

8. படம் போட்டு ஒரு மணி நேரம் ஆகுது.இப்போ தியேட்டர்க்குள்ளே ஒரு காதல் ஜோடி.ஏன் லேட்? னு கேட்கலாமா ?

9. ஒளிப்பதிவு மது அம்பாட்.ஆனா ஒரு பய கேமரா வை கவனிக்கலை

10 முதல் மரியாதை ல ராதா வை ரசிச்ச அதே கண்ணால ராதா மகள்கள் கார்த்திகா ,துளசியை யும் எந்த சங்கோஜமும் இல்லாம ரசிப்பவன் தான் தமிழன்






சி பி கமெண்ட் -மகர மஞ்சு ( அப்சரஸ் ) - மலையாளம் = 3 நாயகிகள் நடிச்ச கிட்டத்தட்ட ஒரு கில்மாப்படம் - ரேட்டிங்க் =2.25 / 5 ( 0.75 * 3 = 2.25)


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40 ( இதுக்கு நோ விமர்சனம்)





குமுதம் ரேட்டிங்க் = ok


திருச்சி ஊர்வசி




திருச்சி ஊர்வசி
Embedded image permalink
a




டிஸ்கி -

பூவரசம்பீப்பி - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/05/blog-post_6603.html

அதிகாரிகளை உத்வேகப்படுத்தும் மோடியின் 3 விஷயங்கள்: பிரதமரின் முதன்மைச் செயலர் நிரிபேந்திர மிஸ்ரா பேட்டி

பிரதமரின் முதனமைச் செயலர் நிரிபேந்திர மிஸ்ரா.|
 
 
தேச நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி வகுத்துள்ள டாப் 10 முன்னுரிமைகள் என்னவென்பது இன்று வெளியாகும் என பிரதமரின் முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நிரிபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார். 


'தி இந்து - பிஸினஸ் லைன்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில்; "தேச நலனுக்காக பிரதமர் மோடி வகுத்துள்ள டாப் 10 முன்னுரிமைகள் சரியான கால இடைவெளியில் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். பிரதமர் அலுவலகம், பிரதமரின் எண்ணங்களையும், அவரது தனித் தன்மையையும், பொறுப்புகளையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். பிரதமர் அலுவலகம் பிரதமரின் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் துடிப்புடன் செயல்படும்" என்றார். 


நிரிபேந்திர மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டது ஆச்சர்யமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. காரணம், மிஸ்ரா இதற்கு முன்னதாக மோடிக்காக பணியாற்றியதும் இல்லை ஏன் அவரை சந்தித்ததும் கூட இல்லை என்பதே. 


1967-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மிஸ்ரா, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். 


புதிய தலைமையின் கீழ் பிரதமர் அலுவலகத்தை ஒரு முக்கிய அதிகார மையமாக தான் பார்ப்பதாக கூறுகிறார் மிஸ்ரா. 


பிரதமர் அலுவலகம் ஆற்ற வேண்டிய மூன்று முக்கிய கடமைகள் இருக்கின்றன. அதன்படி, செயலாக்கம், அமைச்சரவைகளுக்குள் எழும் விவகாரங்களை சீர் செய்வது, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியனவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் கூறுகிறார். 


உட்கட்டமைப்பு, கொள்கை சீரமைப்பு போன்ற விவகாரங்களில் பிரதமர் அலுவலக அணுகுமுறை எந்த மாதிரியானதாக இருக்கும் ? 

 
இது தொடர்பாக பிரதமரே இறுதி முடிவு எடுப்பார். இருப்பினும், தனிப்பட்ட முறையில் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அவை, மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தும் ஏன் மின் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை? தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டபடி சாலை பணிகளை ஏன் முடிக்க முடியவில்லை? இயற்கை வளங்கள் மிகை மிஞ்சியிருந்தாலும் தாது ஏற்றுமதியில் வருமானம் இலலி, நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது, என்பனவே ஆகும். 


அரசியல் தலைவர்கள் எடுக்கும் சில முடிவுகளால் சர்ச்சைகளில் சிக்கி நீதிமன்றத்திற்கு அலைய வேண்டுமே என்ற அச்சத்தாலேயே பல அரசு உயர் அதிகாரிகள் கொள்கை முடிவுகளை எடுக்காமல் தவிர்க்கின்றனர். அரசு அதிகாரிகள் மத்தியில், நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்?

 
குஜராத்தில் மோடியின் தலைமையை உதாரணமாக சொல்ல விரும்புகிறேன். மோடி, அதிகாரிகளை உத்வேகப்படுத்த மூன்று விஷயங்களை கடைபிடித்தார். நன்றாக பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை அவர் வகிக்கும் பொறுப்பில் தொடர வழிவகை செய்வார், புதிய திட்டங்களை கொண்டு வர அதீத சுதந்திரம் அளிப்பார். இவை தவிர அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் தானே பொறுப்பேற்றுக் கொள்வார். எனவே, அரசு அதிகாரிகள் புதிய அத்தியாயத்துக்கு ஆயத்தமாகி விட்டனர் என்றார். 


சுகாதாரம், கல்வி போன்ற சமூக உட்கட்டமைப்புகளை புதுப்பிப்பது தொடர்பான திட்டங்கள் என்ன?


 
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது முதன்மையான லட்சியமாக இருந்தாலும். அரசு இயந்திரங்களால் மட்டுமே இதை முழுமையாக முடித்துவிட முடியாது. சுகாதாரத் துறையில் தனியார் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். 


நரேந்திர மோடி கூடுதல் நேரம் பணியாற்றக் கூடியவர். அதே வேளையில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் கூடுதல் அதிகாரம் அளிப்பார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 
இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது அவருக்கு சாத்தியமாகிறது. 


பிரதமரின் முதன்மை செயலராக எப்படி தேர்வுசெய்யப்பட்டீர்கள்?

 
அது எனக்கே மிகப் பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. குஜராத் பவனில், நரேந்திர மோடியை சந்திக்குமாறு கூறினர். மே 25-ல், பிரதமரின் முதன்மை செயலராக பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 


டிராய் சேர்மனாக இருந்த பின்னர், பிரதமரின் முதன்மைச் செயலராக பொறுப்பேற்றது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். 


தமிழில்: பாரதி ஆனந்த்
Keywords: 
 
  • Shahul Hameed at GRANITES from Salem
    மோடி ஜி ஒரு வேதம்..அது மக்களுக்கு மிக மிக அவசியம் ஒன்று..நாட்டுக்கும்...நாடு மக்களுக்கும்..ஆண்டவன் இப்போது மோடி ஜி உருவத்தில்..தர்மம் தலை காக்கும்.
    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • gopalakrishnan  
    பிரதம மந்திரி அவர்கள் வளர்ச்சிக்கான துடிப்பான முடிவுகளை எடுக்க முனைந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். விலைவாசி உயர்வுக்கான காரணங்களை கண்டுபிடித்து - உதாரணமாக மூல பொருள்கள் விலைவாசியை குறைத்தால், முக்கியமாக அத்தியாவசியமான பொருள்கள் பால், மருந்து, தண்ணீர் இவைகளுக்கு டீசல் வரியில்லாமல் ,குறைந்த, கட்டுப்பாடு விலையில் அரசே கொடுக்கலாம். கவனம் கொண்டால் எதுவும் சத்தியமே. நன்றி. -கோபால், திருச்சி.
    about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Anuradha Krishnan  from Chennai
    இனிதே ஆரம்பம்
    about 24 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • Mohan Ramachandran at I am doing my own business from Bangalore
    நல்ல தொடக்கம் .
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • p  from Hosurந்
    புதிய தலைமையின் கீழ் பிரதமர் அலுவலகத்தை ஒரு முக்கிய அதிகார மையமாக தான் பார்ப்பதாக கூறுகிறார் மிஸ்ரா என்கின்ற வரி குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி நேர்மையான அணுகுமுறையுடன் கூடிய அனுபவஸ்தர்கள் தான், நமது பிரதமருக்குத் தேவையான முதன்மை ஆலோசகர்கள்... தொடரட்டும் தங்களின் மகத்தான பணி...
    a day ago ·   (8) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • p  from Hosur
    புதிய தலைமையின் கீழ் பிரதமர் அலுவலகத்தை ஒரு முக்கிய அதிகார மையமாக தான் பார்ப்பதாக கூறுகிறார் மிஸ்ரா என்கின்ற வரி குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி நேர்மையான அணுகுமுறையுடன் கூடிய அனுபவஸ்தர்கள் தான், நமது பிரதமருக்குத் தேவையான முதன்மை ஆலோசகர்கள்... தொடரட்டும் தங்களின் மகத்தான பணி...


    நன்றி-த இந்து