Friday, January 22, 2016

AIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )

கக்கன், காமராஜர் மாதிர் தியாகத்தலைவர்கள் வாழ்ந்த தேசம் இது. தமிழ் இனத்தின் தலைவலிகள் , புரட்டுத்தலைவிகள் தான் இப்போ நம்மநாட்டில் அதிகம் இருக்காங்க.  ஒரு தலைவனா இல்லாம சாதா மனிதனா  ஒரு தனி மனிதன் நாட்டுப்பற்று , மனித நேயம்  கொண்டு நடத்தும் சாகசம் தான் கதை.இது ஒரு உண்மைச்சம்பவமாம்கதைக்களம் குவைத். 1990 ஆகஸ்ட் ல நடக்குது.

 ஹீரோ ஒரு பிஸ்னெஸ்மேன், பேசிக்கலா இந்தியன் ஆனா வாழ்விடம் குவைத்ல . எப்படி இத்தாலியை தாய்நாடா கொண்டிருந்தாலும் மருமகளா இந்தியா வந்து கட்சியை , சொத்தை ஆக்ரமிச்சு இந்தியாவிலேயே தங்கிட்டாங்களே அந்த மாதிரி இல்லாம நேர்மையான ஆள்.


குவைத்ல ஹீரோ குடும்பத்தோட இருக்கும்போது திடீர்னு சதாம் உசேனின் ஈராக் படைகள் நகரத்தைச்சூழந்து தாக்குது.


தன் கிட்டே இருக்கும் வசதியை வெச்சு அவர் நினைச்சிருந்தா தனியா தப்பி இருக்க முடியும் , ஆனா ஆயிரக்கணக்கான இந்திய மக்களை சதாம் உசேனின்  படைகளிலிருந்து எப்படிக்காப்பாத்தி இந்தியா கூட்டிட்டு வர்றார் என்பதே கதை. 


ஹீரோ , தன் மனைவி , குழந்தை மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள்  இவங்களைக்காப்பாத்தனும்.அவர் எப்படிக்காப்பாத்தறார் என்பதே பரபரப்பான திரைக்கதை ஹீரோவா அக்சய் குமார் . அட்டகாசமான நடிப்பு . பிரமாதமான பாடி லேங்குவேஜ் , டூயட் , ஃபைட் என கமர்ஷியல் ஐட்டம் இல்லாமலேயே விறு விறுப்பான திரைக்கதை இருந்தால் போதும் என சமீபத்திய ஃபார்முலாப்படி வந்த வ்ழக்கமான ஃபார்முலாவில் இருந்து மாறுபட்ட படம் 


ஹீரோயினா நிர்மத் கவுர்  இயல்பான நடிப்பு . கிளாமர் காட்டும் வாய்ப்பு இல்லை, ஆனா தன் கணவனுக்காக பரிந்து பேசி அவர் தியாகத்தை உணர வைக்கும் ஒரு விஜய்காந்த் தனமான டயலாக் சீனில்  கலக்கிட்டார்.

படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை . ஒரு சீன் கூட போர் அடிக்காமல் க்ரிஸ்பாக  கொண்டு போய் இருக்காங்க மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  பிஸ்னெஸ் தனி.பிரெண்ட்ஷிப் தனி.ரெண்டையும் குழப்பிக்கக்கூடாது.அப்போதான் நட்பில் தெளிவு இருக்கும் LIFT்

2 அசாதாரணமான அமைதி ஒரு இடத்தில் இருந்தா அங்கே ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் #,AIR LIFT


3 குவைத்ல போர்க்கால சூழல் ஏற்பட்ட இந்தியா என்ன செஞ்சுது?

வழக்கம் போல வேடிக்கை தான் பார்த்ததா? LIFT


4 வெற்றிகரமான மனிதன் தனக்கு இது நினைவில்லை மறந்துட்டேன்னு எதையும் சொல்ல மாட்டான்.ஞாபக சக்தி தான் வெற்றிக்கு முதல் தகுதி LIFT


5 தன்னுடைய பாதுகாப்புக்காக தன் பொறுப்பைத்தட்டிக்கழிப்பவன் நல்ல தலைவனா பரிமளிக்க முடியாது # AIR LIFT


6 விருப்பமானவரின் மரணம் நம் கண் முன் நிகழ்வது மரணத்தை விட கொடிய வலி LIFT


7 பகல் ல ஏன் சரக்கு அடிக்கறே?

மோசமான மன நிலைல இருக்கறவனுக்கு பகல் இரவு பாகுபாடு கிடையாது LIFT

8 தன்னோட பாதுகாப்பை விட தன்னோட குடும்பத்தோட பாதுகாப்புக்கு பாடுபடுபவன் தான் இந்தியன் # AIR LIFT


9 இந்தியர்களை எதுவும் செய்யக்கூடாதுன்னு சதாம் ல எழுதப்படாத விதி இருக்கு.அதனால இந்தியர்கள் பாதுகாப்புக்கு பயம் இல்லை # AIR LIFT


10 என் வீடு என் குடும்பம்னு குறுகிய வட்டத்துல என்னால இருக்க முடியாது.என் நாடு என் மக்கள் னு பொதுவாத்தான் பார்ப்பேன் # AIR LIFT


11 அதைப்பத்தி என்னால யோசிக்கவே முடியல.
உனக்குத்தேவையான பணம் கொடுத்துட்டா யோசிக்க முடியுமில்ல?, LIFT


12 தலைவர் பதவி என்பது சாதாராணமானது அல்ல.எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் #,AIR LIFT
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

போர்ப்பின்னணி யில் எடுக்கப்படும் படத்துக்கு ஒளிப்பதிவு ,பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் முக்கியமான படம் AIR LIFT

2 பலதரப்ப்பினரின் பாராட்டைப்பெற்று  வரும் AIR LIFT (2016) ஹிந்திப்படம் 2012 ல் வெளிவந்த ARGO  எனும் ஹாலிவுட் படத்தின் சாயலில் வந்த படமாம்

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

 1 ஹீரோவுக்கு ஓபனிங் சாங், ஓப்பனிங் ஃபைட் எல்லாம் எதுவும் வைக்காம [படத்தோட முதல் ரீலிலேயே நேரடியா கதைக்கு வந்தது


2  குவைத் பெண்ணின் பாத்திரப்படைப்பு , அந்தப்பெண்ணுக்காக ஹீரோ   செய்யத்துணியும் சாகசம் அப்ளாஸ் அள்ளிய காட்சி3  அரசியல் கலந்த அநாயசமான கூர்மையான வசனங்கள் படத்துக்குப்பெரிய பலம்

4  பின்னணி இசை  செம . பல இடங்களில்  டெம்ப்போ ஏற பிஜிஎம் ஒரு காரணம்

5 ஒளிப்பதிவு  ஒரு லேடி . வெரிகுட் பர்ஃபார்மென்ஸ்.இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  படத்தில்  முக்கியமான காட்சி பஸ்சில் பலர் ஏறிட்டாங்க . இந்தியா கிளம்பப்போகுது. அப்போ ஒரு ஆள் மட்டும்  குவைத் பொண்ணு வர அனுமதிக்க மாட்டேன், செக்கிங்க் ல இந்தியர்களை விட்டுடுவாங்க , குவைத் ஜென்மப்பகைஅதனால அவங்களோட சேர்ந்து நாமும் மாட்டிக்குவோம்கறாரு.அப்போ ஹீரோ அந்த குவைத் லேடியை பஸ் சிலிருந்து இறக்கி  தன் கார்ல கூட்டிட்டுப்போறார், இது எவ்ளவ் அபாயம்? பஸ் சில் 60 பேரில்  ஒருவராக குவைத் லேடி இருந்தா தெரியாது , சமாளிச்சுடலாம்


ஆனா கார்ல ஹீரோ ஹீரோயின் குவைத் லேடி 3 பேர் தான் , செக்கிங்க் வந்தா மாட்டிக்க பஸ் சை விட கார் பயணத்தில் தானே ரிஸ்க் அதிகம்.

 அப்போ ஹீரோ என்ன பண்ணி இருக்கனும்? ஆட்சேபம் தெரிவிச்ச அந்த ஆளை மட்டும் தன் கார்ல வரச்சொல்லிட்டு அந்த குவைத் லேடியை பஸ்லயே வர வெச்சிருக்கலாமே?


2  செக்கிங்க் ல குவைத் லேடி மாட்டுனதும்  5 வீரர்கள்  ஹீரோ வைத்தாக்க வற்றாங்க. அப்போ ஒரு ஆள் மட்டும் துப்பாக்கி யை யூஸ் பண்றாரு, அது ஒர்க் ஆகலை. போர்க்காலத்தில்  வீரனின்  துப்பாக்கி எப்படி ஒர்க் ஆகாம இருக்கும்? அதென்ன போலீஸ் ஸ்டேஷன்ல செக்யூரிட்டிக்கு நிற்கும் டம்மி போலீஸ் கன்னா?


3  சுற்றி வளைத்த 5 போலீசில் மீதி ஆட்களிடம் ஏன் துப்பாக்கி  இல்லை ?


4 க்ளைமாக்சில்  வில்லன்  ஹீரோயினை துப்பாக்கி முனையில் மிரட்டி ஹீரோவை பணிய வைக்கிறார்,அப்போ பஸ்சில் இருந்து ஜனங்க எல்லாம் திரளா வர்றாங்க. அப்போ வில்லன் அதே மிரட்டலை கண்ட்டிநியூ பண்ணி தப்பி இருக்கலாமே? ஹீரோயின் அவன் பிடில தானே இருக்கு ?
 ?

5 ஆபத்தான சமயம் வந்தப்போ ஹீரோயின் உங்களை விட்டுட்டு நான் தனியாப்போகமாட்டேன்னு சொல்லுது,. ஓக்கே,ஆனா குழந்தையைப்பாதுகாப்பா அனுப்பி இருக்கலாமே? ரிஸ்க் எதுக்கு?ஏன் குழந்தையையும் தன் கூடவே வெச்சிருக்கு?
சி  பி  கமெண்ட் -AIR LIFT (HINDI)- குவைத்தில் நடந்த உண்மை சம்பவம்.போர்ச்சூழல் பின்னணியில் .ஏ சென்ட்டர் ரசிகர்களுக்காக.- ரேட்டிங் =3.5 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 46குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= நன்று


திருவனந்த புரம் பத்மனாபா வில் பார்த்தேன்
 ரேட்டிங்
ஒவ்வொரு படம் பார்த்துட்டு வரும்போதும் பலருக்கும் பல விதமான எண்னங்கள் தோணும், ஆனா இந்தப்படத்தைப்பார்த்தா பலருக்கும் ஒரே விதமான எண்ணம் தான் தோணும்.  வசதி வாய்ப்புக்காக ஃபாரீன் போய் பின் அகதியா அலையக்கூடாது சொந்த மண்ணில் வாழனும், சொந்த மண்ணில் சாகனும். அது தான் படத்தின் இயக்குநருக்குக்கிடைத்த வெற்றி

டிஸ்கி = இந்தப்பட டயலாக்சை ட்விட்டரில் அப்டேட்டும்போது படம் தமிழ் ல டப் ஆகி வந்திருக்கா? சப் டைட்டில் இங்க்லீஷ் ல போடறாங்களா? என பலரும் கேட்டாங்க. எல்லாத்துக்கும் ஒரே பதில் தான் . நோ. நான் ஹிந்தில எம் ஏ என்பதை தன்னடக்கத்தோட பகிர்ந்துக்கறேன், அதே போல் மலையாளம், தெலுங்கு  படங்கள் பார்த்தா வசனங்கள் புரியும். அவையும் அப்டேட்டப்படும்

1 comments:

Unknown said...

என்ன நீயும் பகல்லேயே தண்ணி அடிக்க ஆரம்பிச்சிட்ட?
சதாம் இரவு பகல், மனைவி சகோதரிங்கிற வித்தியாசத்தை எல்லாம் இல்லாம பண்ணிட்டான் airlift நேற்று இரவு பார்த்தேன் சிபாரிசுக்கு நன்றி!