Monday, November 02, 2026

ஹைகூ (2026)- தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா)

 


காதலியால் கைவிடப்பட்ட  நாயகன் ,சைக்கோக்காதலனின் டாக்சிக் நடவடிக்கைகளால் காதலனைப்பிரிந்த நாயகி இருவருக்கும் ஏற்படும் காதல் கை கூடியதா?இல்லையா?என்பது தான் படத்தின்  ஒன் லைன்.



நாயகன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்.சக நண்பர்கள் செய்த கலாட்டா சதியால் தவறுதலாக காலேஜில் இருக்கும் லேடீஸ் டாய்லெட்டில் தவறுதலாக நுழைந்து விடுகிறார்.இதனால் காலேஜ் நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்கிறது.


வேறு எந்தக்காலேஜிலும் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை.அப்போது ஒரு லேடீஸ் காலேஜில் அவருக்கு சீட் கிடைக்கிறது.ஆண் ,பெண் இரு பாலரும் படிக்கும் கோ எட் ஆக அந்த காலேஜ் அந்த வருசம் தான் மாறி இருக்கிறது.அதனால் நாயகன் தான் அந்தக்காலேஜில் இப்போதைக்கு ஒரே ஒரு ஆண்.


அங்கே நாயகிக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது.ஈகோ பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிகிறார்கள்.


காலேஜ் படிப்பு முடிந்து நாயகன் ஒரு ஐ டி கம்பெனியில் உயர் அதிகாரியாகப்பணிபுரிகிறார்.அங்கே நாயகியை சந்திக்கிறார்.நாயகிக்கு ஒரு கடந்த காலக்காதல் முதலில் இருந்தது.ஆனால் அவன் டாக்சிக் ஆக டார்ச்சர் செய்பவனாக இருப்பதால் பிரிந்து விட்டார்.


இப்போது நாயகன் ,நாயகி இருவரும் காதலிக்கிறார்கள்.முதல் காதல் அனுபவத்தால் நாயகன் சர்வ ஜாக்கிரதையாக நாயகியிடம் பழகுகிறான்.இது நாயகிக்குப்பிடிக்கவில்லை.இயல்பாக இரு  என்கிறார்.


சில பிரச்சனைகளால் இருவரும் பிரிகிறார்கள்.நாயகி நாயகனின் முன்னாள் காதலியை சந்திக்கிறார்.

இதற்குப்பின் நாயகன் யாருடன் சேர்ந்தார் என்பது க்ளைமாக்ஸ்

நாயகனாக ஏகன் நடித்திருக்கிறார்.கோழிப்பண்ணை  செல்லத்துரை படத்தின் அறிமுக நாயகன் இவர்.முதல் பாதியில் ஒரு வித நடிப்பு பின் பாதியில் மெச்சூர்டான நடிப்பு என கலக்குகிறார்.

காலேஜில் படிக்கும் காதலியாக ஸ்ரீதேவி குடும்பப்பாங்கான முகம்.நல்ல நடிப்பு.

நாயகியாக வரும் பெமினா  ஜார்ஜ் அசத்தலான நடிப்பு.மின்னல் முரளி என்ற மெகா ஹிட் மலையாளப்படத்தில் நடித்தவர் இவர்.

அதிர்ச்சி அருண் காமெடி செய்கிறார். ஒரு எமோஷனல் சீக்வன்சும்  இவருக்கு உண்டு.


இரு நாயகிகளின் நடிப்பும் நாயகனின் நடிப்பை தூக்கி சாப்பிட்டு விடுகின்றன.

ஒரு பாடலுக்கு மட்டும் பிரிகிடா டான்ஸ் ஆடி இருக்கிறார்ம்


இசை சித்து குமார்.பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை கலக்கல் ரகம்.

ஒளிப்பதிவு பிரியேஷ் குருசாமி.இரு நாயகிகளையும் அழகாகக்காட்டி இருக்கிறார்.


அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி காதலர்களுக்கு எமோஷனல் கனெக்ட் கொடுக்கும் விதத்தில் நான் லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.


சபாஷ் டைரக்டர்

1 இரு நாயகிகளின் காதல் எதிர்பார்ப்பும் ஒன்று தான்.அது காதலன் தனக்கு மரியாதை தர வேண்டும் என்று நினைப்பது. அதை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

2 முதல் காதலில் தோல்வி அடைந்த ஒருவன் தனது இரண்டாவது காதலில் முழுமையாகத்தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல் தவிப்பதை சொன்ன விதம் குட்.

3 படத்தின் பின் பாதியில் நாயகனின் கேரக்டர் டிசைன் மாறுவது குட்.

4 இரு நாயகிகளின் லவ் போர்சன்ஸ் ரசிக்க  வைக்கிறது.




லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஒரு ஆண் என்ற வித்தியாசமான கான்செப்ட் பிரித்விராஜ் நடித்த சாக்லெட்(2007) என்ற மலையாளப் படத்தில் இருந்து உருவி இருக்கிறார்கள்.

2 காட்சிகள் பல மிகவும் நீளம்.10 நிமிடங்கள் ,7 நிமிடங்கள் ,5 நிமிடங்கள் என நீண்ட காட்சிகள் வருவது போர்.

3 முதல் பாதியில் பல காட்சிகள் யூகிக்க முடியாத அளவில் இருந்தன.ஆனால் பின் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் எளிதில் யூகிக்க முடிகிற து.


4 படத்தின் பெரிய பலம் இசை.பின்னணி இசையில் 96 படத்தில் நமக்குத்தந்த அனுபவத்தை இதுவும் தருகிறது.

5 க்ளைமாக்சை இன்னமும் வித்தியாசமாக சொல்லி இருக்கலாம்.



ரசித்த வசனங்கள்


1 காதல்,கண்களைப்பார்த்துப்பேச வைக்கும்,எல்லைக்கோடுகளை எதிர்த்து நிற்கும்,புதிய திசைகளைத்திறந்தும் வைக்கும்,மெய் தொட்டுப்பயில வைக்கும் ,பொய்யாய் பாராட்டவும் வைக்கும்


2 காதல் ஆரம்பத்தில் சொதப்ப வைக்கும் ,சொதப்ப சொதப்ப சொல்லிக்கொடுக்கும்

3 மொத்தத்தில் காதல் என்றால் சொல்ல ஒன்றுமில்லை,காதல் இல்லை என்றால் சொல்ல ஒன்றுமே இல்லை.


4 சத்தியமா உன் கிட்டே அவங்க எதுவுமே சொல்லலையா?இது விமன்ஸ் காலேஜ்டா

அப்போ இந்த க்ளாஸ்ல நான் மட்டும் தான் பையனா!?

டேய் முட்டாள்,இந்த மொதக்காலேஜ்லயும் நீ ஒருத்தன் தாண்டா பையன்.


5 என்னைகிஸ் பண்ணும்போது யாரை நினைச்சுக்கிஸ்   செய்வே?வேற யாரையோ நினைச்சுக்கிட்டு என்னைக்கிஸ் பண்ணினா எப்படி இருக்கும்?

6. ஒரு பொண்ணு நம்மை லவ் பண்ணும்போதே அவங்களை நல்லாப்பார்த்துக்கனும்.ஒன்ஸ் அவங்க நம்மை விட்டுப்போகனும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் நாம காலில் விழுந்து கெஞ்சினாலும் வர மாட்டாங்க.

7 எப்படி இருக்கு?

எங்க வீட்டில் சாப்பிடுவது மாதிரி இருக்கு

உங்க வீட்டில் இப்படிக்கேவலமாதான் சாப்பிடுவீங்களா?

வாட்?

8
காதலில் விட்டுக்கொடுத்தல் முக்கியம்,அதே சமயம் சுயமரியாதையை விட்டுக்கொடுப்பது காதல் அல்ல 


9   காதல் என்பது ஒருவருக்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்வது அல்ல.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+



CPS  கமெண்ட் - காதலர்களுக்கு நன்றாக கனெக்ட்  ஆகும் நல்ல காதல் கதை தான்.முதல் பாதி அருமை,பின் பாதி சுமார்.ரேட்டிங்க். 2.5/5