Tuesday, November 03, 2026

Dhoomakethu(2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( டைம் லூப் ரொமாண்டிக் காமெடி டிராமா)@நெட்பிளிக்ஸ்


 சிம்பு நடித்த மாநாடு பட பாணியில் அமைந்த டைம் லூப் கதையான இந்தப்படம் 25/9/2026 ல் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.இப்போது நெட் பிளிக்ஸ் ஓடிடி யில்  23/10/2026 முதல் தமிழ் டப்பிங் கில் காணக்கிடைக்கிறது.



வாழை படத்தில் நடித்த நிகிலா விமல் நாயகியாக நடித்திருப்பதால் தமிழ் ஆடியன்ஸ் விரும்பிப்பார்ப்பார்கள்.


ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு முதிர்கண்ணன்.பல வருடங்களாகப்பெண்ணே கிடைக்காமல்  இப்பொதுதான் திருமணம் கை கூடி வந்திருக்கிறது.பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான்.

காலை எட்டு மணிக்கு நாயகன் விழிக்கிறான்.ரெடி ஆகி மணவறையில் அமர்கிறான்.அப்போது ஒரு சின்ன விபத்தில் ஒரு ஆளுக்குக்காலில் அடிபடுகிறது.அடுத்ததாக இடி சத்தம் கேட்டு அதிர்ச்சியில் மண்டபத்திலேயே ஒரு பெரியவர் இறக்கிறார்.

இந்த இரண்டு அபசகுனங்களால் கல்யாணம் நடக்குமா? நடக்காதா?என்ற சந்தேகத்தில் நாயகன் பயத்துடன் இருக்கிறான்.எப்படியோ திருமணம் நடக்கிறது.


முதல் இரவு.நாயகன் ஆசையாக நாயகியுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.அப்போது மாஸ்க் போட்ட மர்ம நபர் வந்து நாயகனை அடித்துப்போட்டு விட்டு நாயகியை அழைத்து செல்கிறான்.


டக் என்று நாயகன் விழித்து எழுகிறான்.

இந்த சம்பவம் டைம் லூப்பில் மாட்டிக்கொண்டு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.நாயகன் தன் நண்பனுடன்  இணைந்து இந்த சிக்கலுக்குத்தீர்வு காண முயல்கிறான்.

நாயகியின் ஊருக்குப்போய் அவளைப்பற்றி விசாரிக்கிறான்.அவளுக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா?என்று பார்க்கிறான்.இதற்குப்பின் நாயகன் கண்டுபிடித்தவை என்ன?நாயகனுக்கு முதல் இரவு நடந்ததா?என்பது மீதித்திரைக்கதை.


நாயகன் குட்டன் கேரக்டரில் சஜின் கோபு காமெடியாக நடித்திருக்கிறார்.முதலிரவை நடத்த விடாமல் வரும் இடர்கள் சிரிக்க வைக்கின்றன.


நாயகி ஷர்மிலாவாக நிகிலா விமல் அழகு தேவதையாக வருகிறார் படம் முழுக்க புடவை கட்டிய புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கிறார்.இப்போதெல்லாம் நாயகிகளை கண்ணிய உடையில் காண்பதே அரிதாகி விட்ட சூழலில் இவர்  புடவையில் அடக்க ஒடுக்கமாக வருவது ரசிக்க வைக்கிறது.


நாயகனின் நண்பனாக கணபதி எஸ் பொடுவாள் காமெடி செய்திருக்கிறார்.

வில்லனாக நாயகியை விரும்பும் சைக்கோவாக சைன் டாம் சாக்கோ பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


மற்ற அனைவரும் அவரவருக்குத்தரபட்ட ரோலில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

அங்கித் மேனன் இசையில் 5 சின்ன சின்னப்பாடல்கள்.பின்னணி இசை கச்சிதம்.ஜிண்ட்டோ ஜார்ஜின் ஒளிப்பதிவில் நாயகி அழகாக மிளிர்கிறார்.

விவேக் ஹர்சன் எடிட்டிங்கில்  படம் 120 நிமிடங்கள் ஓடுகிறது.

 
சோனி பாபு ஆண்ட்டனி. +மனு மதுசூதணன் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத சுதி மாடிசன் இயக்கி இருக்கிறார்.


சபாஷ் டைரக்டர்


1 படத்தின் முதல் பாதி முழுக்க ஒரே சம்பவம் தான் .நான்கு முறை ரிப்பீட் மோடில் வருகிறது.சலிப்பு ஏற்படாமல் காமெடி கலந்து சொன்ன விதம் குட்

2 முதல் பாதிக்கு சம்பந்தமே  இல்லாமல் பின் பாதியில் சைக்கோ வில்லன் டார்லிங் டார்லிங் டார்லிங் பட கே பாக்யராஜ் மாதிரி பப்பி லவ்வர் கேரக்டரில் ஜமாய்த்த விதம்.


3. நாயகனுக்கு ஏன் பல ஆண்டுகளாகத்திருமணம் ஆகவில்லை என்ற பிளாஸ்பேக்


4 நாயகியைப்பற்றி விசாரிக்க நாயகன் போன இடத்தில் ஷர்மிளா ரசிகர் மன்றம் செய்யும் அடாவடி...காமெடிப்பட்டாசு

5 கல்யாண மண்டபத்தில் நாயகியின் அழகை சிலாகித்து சமையல் கலைஞர்கள் அடிக்கும் ஜாலி கமெண்ட்சால் நாயகன் கடுப்பாவது...





ரசித்த வசனங்கள்


1 இப்போதான் குளிச்சேன்,டீயை மேல ஊத்திட்டே...


சாரி..நான் பார்க்கலை....


அதை வேற பார்க்கனுமா?


2 தம்மாந்துண்டு உயரம் இருந்துட்டு  தம் அடிக்கிறான் பாரு

3. ப்ரோ,ஒரு உண்மையை சொல்லவா?பார்க்க சப்பையா இருக்கீங்க.


4 சின்ன வயசுல இருந்தே மேரேஜ்னா எனக்கு நினைவு வருவது பர்ஸ்ட் நைட் தான்.

,5  இவன் கடைசி வரை பேசிட்டு தான் இருப்பான் போல.முதல் இரவை நடத்த மாட்டான்.

,6. நான் செத்துட்டேன்னா. மண்டபத்தில்  மேரேஜ்ல பார்ப்போம்,சாகலைன்னா காலைல வீட்டில் பார்ப்போம்.


7. யமஹா ஸ்வாஹா

8  ஏதாவது உடனே பண்ணனும்


ஹூம்,அவன் தான் பண்ணுவான்


9 ஏண்டி ,16 வருசம் என் தூக்கத்தைக்கலைச்சுட்டு இப்போ தூக்கத்தில் உளறி இருப்பேன்னு சொல்றியா?

10.  என் கதைல நான் தோற்கவே கூடாது.

லாஜிக் மிஸ்டேக்ஸ்



1 வில்லன் நாயகியின் கன்னத்தில் திடீர் முத்தம் தரும்போது நாயகி பெரிதாக எதிர்ப்புத்தெரிவிக்கவே இல்லையே?

2 அழகுப்பதுமையாக இருக்கும் இளவயது நாயகி தடிமுண்டம் மாதிரி இருக்கும் வயதான நாயகனைக்கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தது எப்படி ?


3 டைம் லூப்பில் நடக்கும் கதையில் முதல் முறை மாஸ்க் போட்ட ஒரு ஆள் வருவது ,இரண்டாம் முறை இரண்டு ஆட்கள் ,மூன்றாம் முறை மூன்று ஆட்கள் வருவது ,நான்காம் முறை நான்கு ஆட்கள் வருவது என்ன கணக்கு ?



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


CPS  கமெண்ட். - டைம் லூப் காமெடிப்படத்தை ரசிப்பவர்கள்  பார்க்கலாம்.நிகிலா விமல் அழகை ரசிக்கும் ஆண்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5/5