Thursday, November 05, 2026

Gajab RAAF(2026)-ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் திரில்லர்) @நெட் பிளிக்ஸ்










திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட் பிளிக்ஸ் ஓடி டியில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி இருக்கும் க்ரைம் திரில்லர் படம் இது.




கமல் நடித்த சண்டியர் பட டைட்டில் குறிப்பிட்ட ஜாதியைத்தாக்குவதாக டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவிக்க அது விருமாண்டியாக டைட்டில் மாற்றப்பட்டு வெளியானது.அதே போல் இந்தப்படத்துக்கும் முதலில் வைக்கப்பட்ட டைட்டில் Ghooskhor Pandat.அது ஒரு ஜாதியைத்தாக்குவதாக பிரச்சனை ஆனதால் கஜப் ராத் என டைட்டில் மாற்றப்பட்டது.டைட்டிலுக்கு அர்த்தம் அற்புத ராத்திரி.






ஸ்பாய்லர் அலெர்ட்


கதைக்களம் டெல்லி.




நாயகன் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். பணம் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய வில்லன் கேரக்டர்.


மாமூல் சரியாகத்தராமல் ஏமாற்றி வரும் ஒரு லாட்ஜூக்கு ரெய்டு போகிறான்.பலர் மாட்டுகிறார்கள்.அதை வைத்து லாட்ஜ் ஓனரை மிரட்ட ஐடியா.


அப்போது ஒரு சம்பவம் நடக்கிறது.பப்ளிக் ரோட்டில் ஒரு காரிலிருந்து ஒரு பெண் உடல் முழுக்கக்காயங்களுடன் குதிக்கிறாள்.இது செல் போனில் படமாக்கப்பட்டு வைரல் ஆகி விட்டது.




நாயகனுக்கு மேலிடத்தில் இருந்து பிரஷர்.அந்தக்கேசை கவனிக்க சொல்லி ஆர்டர்.


நாயகன் அந்தப்பெண்ணைப்பற்றி விசாரிக்கும்போது ஒரு சி பி ஐ ஆபீசர் வந்து இந்தக்கேசை நான் டேக் ஓவர் பண்ணிக்கறேன் என்கிறார்.




அதே போல் என் ஐ ஏ ஆபீசர் என்று சொல்லிக்கொண்டு இன்னொருவர் வருகிறார்.




இந்தக்கேசில் ஏதோ பெரிய கை சம்பந்தப்பட்டிருக்கிறது என நாயகன் யூகிக்கிறான்.




அந்தப்பெண் தான் நாயகி.ஆபத்தான நிலைமையில் ஐ சி யூ வில் அட்மிட் செய்யப்படுகிறாள்.




ரூ 5 கோடி தருகிறோம்.அவளைத்தீர்த்து விடு என்று நாயகனுக்கு ஆபர் வருகிறது.




பணத்துக்காக எதையும் செய்யத்தயாராக இருக்கும் நாயகன் நாயகியைக்கொல்லத்தீர்மானிக்கிறான்.


இதற்குப்பின் நிகழும் அதிரி புதிரி சம்பவங்கள் என்ன?நாயகி உண்மையில் யார்?இந்த அரசாங்கத்தையே புரட்டிப்போடும் ரகசியம் என்ன?என்பதெல்லாம் மீதித்திரைக்கதை.




நாயகனாக மனோஜ் பாஜ்பாய் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ரெய்டு வந்த இடத்தில் ஒரு அழகியிடம் கடலை போடுவது ,ஹாஸ்பிடலில் ஒரு மலையாள நர்ஸ் உடன் நட்பாவது என கலகலப்புக்குப்பஞ்சமில்லை.


நாயகியாக ,ஜர்னலிஸ்ட்டாக நஸ்ராத் பரூச்சா கச்சிதமாக நடித்திருக்கிறார்.




மனித உரிமைக்கமிஷன் ஆபீசராக திவ்யா தத்தா ஆர்ப்பாட்டமாக நடித்திருக்கிறார்.நதியா போல் கண்ணியமான உடையில் வலம் வருபவர் திடீர் என ஒரு கட்டத்தில் கயாடு லோஹர் மாதிரி கிளாமர் டிரஸில் வருவது அதிர்ச்சி.




சிபி ஐ ஆபீசராக அக்சய் ஓபராய் கம்பீரம் காட்டி இருக்கிறார்.என் ஐ ஏ ஆபீசராக சகிப் சலீம் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஷ்ரத்தா தாஸ் ஒரு முக்கிய ரோலில் வருகிறார்.


மற்ற அனைவருமே அவரவருக்குத்தந்த ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.


நீரஜ் பாண்டே,தீபக் வெங்கடேசன் ,ஆகிய இருவருடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் ரிதேஷ் ஷா.


நீரஜ் பாண்டே தான் தயாரிப்பாளர்.




பரபரப்பாக ஓடும் படத்தை 123 நிமிடங்கள் ரன்னிங்க் டைமாகக்கச்சிதமாக எடிட்டிங் செய்திருக்கிறார்கள்.




ஒளிப்பதிவு ,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.






சபாஷ் டைரக்டர்.




1 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் ஓப்பனிங்க் சீனில் வரும் லாட்ஜ் ரெய்டு சீன் அல்டிமேட் பிரம்மாண்டம்.காமெடிக்குக்காமெடி ,விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை.




2 நாயகனின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ,நடிப்பு ,உடல் மொழி ,டாமினேஷன் அனைத்தும் பிரமாதம்.


3 முதல் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.வந்தே பாரத் ஸ்பீடு ஸ்க்ரீன்ப்ளே.










ரசித்த வசனங்கள்




1 சார்,சொன்னா நம்புங்க,உள்ளே யாரும் இல்லை,ஒண்டிக்கட்டையா இருக்கேன்.


அம்மணக்கட்டையா இருந்தாதான் பயப்படனும்.




2 பெரிய கனவு காணும் பெரிய மனுசங்க பெரிய மனுசத்தனமா நடந்துக்க மாட்டாங்க.




3 அய்யோ,சும்மா நடக்கும்போதே நெளியறாளே?


4 சாதிக்கறவனும் ஒரு நாள் சறுக்கி விழுவான்.


5 நான் போடற பிட்டை என்கிட்டேயேவா?




6 சார்,ஒரு டீ வாங்கிக்கொடுங்க




டேக் திஸ்...இவனுக்கு 2 பிஸ்கெட் போடுங்க.


7 மனுசன் எதுல இருந்து வேணா பாடம் கத்துக்கலாம்.




8 யானையைக்கொன்னு தந்தத்தை எடுக்கும் முன் வீரப்பன் யானை கிட்டே சாரி கேட்பானாம்.நன்றி சொல்வானாம்.


9 கறிக்கடை பாய்க்கு வாக்கப்பட்டு வந்த பொண்ணு ஆரம்பத்தில் அந்த. ஸ்மெல் தெரியாம இருக்க செண்ட் அடிச்சாளாம்.அதுவே பின் அவளுக்குப்பழகிடுச்சு




10 மன்னா,உங்க எல்லா எதிரிகளையும் கொன்னுட்டேன்.




ஒரே ஒரு ஆள் பாக்கி,இந்த சூப்பைக்குடி...


11. நீ சர்கார் தானே?


நீங்க?


நீ அனுப் சர்கார் ,நான் பாரத் சர்கார்.


12. நல்லவங்களும் ,கெட்டவங்களும் பூமில சரிசமமா இருக்காங்க, நாம் நல்லவங்களை மட்டும் கொன்னுட்டே இருந்தா பேலன்ஸ் ஆகாது.




லாஜிக் மிஸ்டேக்ஸ்




1 சத்யராஜ் நடித்த நடிகன் ,பிரம்மா படங்களில் வருவது போல் அந்த சஸ்பென்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது


2 கெட்டவனாக இருக்கும் நாயகன் 100 கோடி ஆபர் வந்தும் சொன்ன வேலையை செய்யாமல் நல்லவனாக மாறுவது ஏன்?என்பதற்குக்காரணம் சொல்லப்படவில்லை.


3 ஹோம் மினிஸ்டர் ரேஞ்சில் இருக்கும் அந்த லேடி சாதாரண போலீஸ் எஸ் ஐ இடம் கெஞ்சிக்கொண்டிருப்பது நம்ப முடியவில்லை.


4 முதல் பாதியில் எழுதப்பட்ட பலரது கேரக்டர் டிசைன் பின் பாதியில் சரிவர எழுதவில்லை.






அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்
. 16+




CPS கமெண்ட் - பரபரப்பான ,விறுவிறுப்பான முதல் பாதி ,மர்மங்கள் விலகும் பின் பாதி என நல்ல ஒரு க்ரைம் திரில்லர். ரேட்டிங்க். 3/5