Friday, April 18, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18 4.2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை


1.தெனாலிராமன் - நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு தடை கோரிய மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. பழந்தமிழர் மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலர் வீரக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தெனாலிராமன் படத்தில், விஜயநகர சாம்ராஜ்யத்தில் பேரரசரான கிருஷ்ணதேவராயர் வேடத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ளார். அவர் கோமாளியைப் போன்று வேடமணிந்து பார்த்தாலே சிரிப்பு வருவது போன்று நடித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது, கிருஷ்ணதேவராயர் மிகச்சிறந்த அரசர், இஸ்லாமியர்களின் படையெடுப்பில் இருந்து தென்னிந்தியாவைப் பாது காத்தவர், அவர் ஆட்சிக் காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள், மிகச் சிறந்த போர் வீரனாகவும், மிகச்சிறந்த நகரமைப்பைக் கொண்ட தலைநகரத்தை நிறுவியவர் என்றும் பாடத்தில் படித்திருக்கிறோம்.

ஆனால், இந்த படத்தில் அவரை கோமாளியாக சித்தரித்துள்ளனர். கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவிகள், 52 குழந்தைகள் என்றும் படத்தில் காண்பிக்கின்றனர். பெருமை கொண்ட கிருஷ்ண தேவராயரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வரலாற்றை திரித்துப் பேரரசரை நகைச்சுவையாகக் காட்டி யுள்ளனர். வருங்கால தலைமுறையினர் பாடப்புத்தகத்தில் கிருஷ்ணதேவராயர் பற்றி படிக்கும்போது அவரை கோமாளியாக நினைக்கத் தோன்றும். எனவே தெனாலிராமன் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எழிலரசு ஆஜராகி, வரலாற்றை திரித்துப் படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது. மக்கள் மத்தியில் சினிமா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். அப்போது நீதிபதிகள், வரலாற்றை அப்படியே சினிமாவாக எடுக்க வேண்டும் என எந்த சட்டத்திலும் கூறவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவரது உண்மையான வரலாறு கூறப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஈரோடு தேவி அபிராமி, சண்டிகா , அண்ணா,விஎஸ்பி 

2    டமால் டுமீல் -அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்கும் படம் ‘டமால் டுமீல்’. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 5,10 லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான்.


இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனை தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பது முடிவு.


கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்க, தமன் இசையமைக்கிறார். ஆர்.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது ’டமால் டுமீல்’ படம்.


ஈரோடு ஆனூர்3 கற்பவை கற்றபின்'. அகவொளி பிலிம்ஸ், பட்டுராம் புரொடக்ஷன் சார்பில் அகவொளி கார்த்திகேயன், பட்டுராம் செந்தில் தயாரிக்கும் படம் 'கற்பவை கற்றபின்'. இதில் நாயகனாக மது நாயகியாக அபிநிதா நடிக்கின்றனர். சந்தீப், தருணா, சிங்கம்புலி, வாசுவிக்ரம், தேனிமுருகன், விசித்திரன், அம்மு, சிந்து குமாரி, யுவான் சுவாங் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பட்டுராம் செந்தில் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும் போது, தேசத்துக்காக ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை முடிவல்ல. இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் எழுகிறது என்பது கதை என்றார்.

இப்படத்தில் இடம் பெறும் பாயும் தீ மழையில் வேகும் தோழமையை காக்க யாரும் இல்லையே என்ற பாடல் காட்சி பார்ப்போர் மனதை உருக வைக்கும் என்றும் அவர் கூறினார். ஆந்திராவில் மலைப் பகுதியில் அரங்கு அமைத்து பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஒளிப்பதிவு: கே.வி.கணேஷ், இசை: இந்திரவர்மன், எடிட்டிங்: துரைராஜ்.4 தலைவன்- சென்னை:ரூ.1.20 கோடி மோசடி புகாரில், சசிகலா அக்கா மகனும், நடிகருமான பாஸ்கரனை வைத்து, "தலைவன்' படத்தை தயாரித்த, சித்திரை செல்வனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில், பாஸ்கரன் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

சென்னை, தி.நகர், மேட்லி சாலையை சேர்ந்தவர் பிரகாஷ், 56; ரியல் எஸ்டேட் அதிபர். சினிமாவும் தயாரித்து வந்தார். சிவசங்கரன் என்பவர் மூலம், சினிமா தயாரிப்பாளர், சித்திரை செல்வன் அறிமுகம், பிரகாசுக்கு கிடைத்தது.
தென் கொரியா பயணம்

கடந்த, 2007ல், "லாலி' என்ற படத்தை சித்திரை செல்வன் தயாரித்தார். இந்த படத்துக்கு தேவையான, துணை நடிகர்கள், படப்பிடிப்பு உதவியாளர்கள் என, 40 பேரை ஏற்பாடு செய்து, தென் கொரியாவுக்கு அழைத்து வருமாறும், அதற்கான பணத்தை தந்து விடுவதாகவும் சித்திரை செல்வன், பிரகாஷிடம் கூறினார். இதற்காக, ஒப்பந்தமும் போடப்பட்டது.

படப்பிடிப்பு முடிந்ததும், தெரிந்தவர்கள் மூலம், 40 பேருக்கும் தென்கொரியாவிலேயே, தகுதிக்கேற்ற வேலை வாங்கி தருவதாகவும், சித்திரை செல்வன் கூறினார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை.
படப்பிடிப்புக்காக, அவர்களை தென்கொரியாவுக்கு அழைத்து, சென்று வந்ததற்கான, செலவுத் தொகை, 70 லட்ச ரூபாயையும் தரவில்லை. இதுகுறித்து, பிரகாஷ் கேட்டபோது, "தந்து விடுகிறேன்' என, சித்திரை செல்வன் கூறியுள்ளார்.

"தலைவன்' படம்
இந்நிலையில், சசிகலாவின் அக்கா வனிதாவின் மகன், பாஸ்கரனை வைத்து, "தலைவன்' என்ற படத்தை தயாரிக்க இருப்பதாகவும், நார்வேயில் நடைபெறும் படப்பிடிப்பிற்கு, 40 பேரை ஏற்பாடு செய்யுமாறும், பிரகாஷிடம், சித்திரை செல்வன் கூறினார்.

அதற்கு பிரகாஷ், "ஏற்கனவே, 70 லட்ச ரூபாய் தர வேண்டியுள்ளது. அதை கொடுத்தால் தான், ஆட்கள் ஏற்பாடு செய்வேன்' என, கண்டிப்புடன் தெரிவித்தார். இதையடுத்து, சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன், பிரகாஷை அழைத்து, "பணத்துக்கு நான் பொறுப்பு; ஆட்களை ஏற்பாடு செய்யுங்கள்' என, கூறவே, அவரும் ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும், விவரங்களுக்கு, சித்திரை செல்வனின் நண்பர், மதியழகனை தொடர்பு கொள்ளுமாறும், பாஸ்கரன் கூறியுள்ளார். இதையடுத்து, பிரகாஷ், மதியழகனை தொடர்பு கொண்டபோது, படப்பிடிப்பு குழுவினருடன், நாசிக் வந்து விடுமாறு கூறியுள்ளார்.

ரூ.1.20 கோடி மோசடி
அதன்படி, பிரகாஷ், படப்பிடிப்பு குழுவினருடன் நாசிக் மற்றும் டில்லிக்கு சென்று, 20 நாட்களுக்கு மேல் தங்கினார். ஆனால், நார்வே செல்வதற்கான, எந்த நடவடிக்கையும், மதியழகன் எடுக்கவில்லை. அதன் பின், பிரகாஷ், அவர்களுடன் சென்னை திரும்பினார்.

புதிய படத்திற்கு, 40 பேரை அழைத்து சென்றதற்கான பயணச் செலவு, 50 லட்சம் ரூபாய் மற்றும் ஏற்கனவே தரவேண்டிய, 70 லட்சம் ரூபாய் என, 1.20 கோடி ரூபாயை, கடந்த மாதம் சித்திரை செல்வனிடம், பிரகாஷ் கேட்டார்.

அவர் மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பிரகாஷ் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதனை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சித்திரை செல்வன், பாஸ்கரன், மதியழகன் மீது, வழக்கு பதிந்து, சித்திரை செல்வனை கைது செய்தனர்; மதியழகன் தலைமறைவாக உள்ளார்.
பாஸ்கரன் மீது "குண்டாஸ்?'

இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, பாஸ்கரன், ஏற்கனவே, இரண்டு வழக்குகளில் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் மீது மூன்றாவது வழக்கு பாய்ந்துள்ளது.

தொடர்ச்சியாக, வழக்கு பாய்வதால், விரைவில் குண்டர் சட்டத்தின் கீழ், பாஸ்கரன் சிறையில் அடைக்கப்படலாம் எனவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சித்திரை செல்வன் யார்?
மன்னார்குடி, மன்னை நகரை சேர்ந்த, சித்திரை செல்வன், சென்னை திரைப்பட கல்லூரியில், ஒளிப்பதிவு தொழில்நுட்பம் படித்துவிட்டு, பிரபல சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான, ஆபாவாணனிடம், ஏழு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

பின், 2005ல், ஜெயா "டிவி' சேனலில், தொடர் ஒன்றை இயக்கியதாகவும், கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயா "டிவி' நிர்வாகத்தில் பொறுப்பு வகித்த, பாஸ்கரனும், சித்திரை செல்வனும், ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பு ஏற்பட்டுள்ளது.

அந்த நெருக்கத்தில் தான், பாஸ்கரனை வைத்து, சித்திரை செல்வன், "தலைவன்' என்ற பெயரில், திரைப்படம் தயாரித்துள்ளார்.மூன்றாவது வழக்கில் கைது செய்யப்பட உள்ள பாஸ்கரன், வேலூர் சிறையில் உள்ளார். அவரை கைது செய்வதற்கான உத்தரவை (பிடிவாரன்ட்), போலீசார், வேலூர் சிறை அதிகாரிகளிடம் இன்று கொடுக்கின்றனர்.

erode krishnaOn one hand you could probably call 2 States better than most of Chetan Bhagat based movies, because it has a nifty concept. On the other (more accurate) hand you could probably call 2 Statesworse than most of Bhagat’s flicks, because it takes such a potentially clever concept and does nothing with it but involve stereotype jokes, lame romance, and really limp melodrama
. As Kai Po Che proved, in the hands of a talented filmmaker 2 States could have been a classic little rom com drama. With director Abhishek Verman the 2 States we've been presented with feels like a fairly fun rom com drama that's been overtaken by uninspired acting, generic plotting, overlong running time and a lethargic pace. The plot is precisely what you expect, point by isolated point – guy and girl (Arjun and Alia) meet at IIM-A, fall in both lust and love, are trying to get married, and face a Herculean task because they’re from ..2 different states. It’s an interesting concept for a comedy but unfortunatelyit’s all premise and no plot.We get some puppy-love romance, a handful of scenes which showcase the modern free spirited sexually liberated desi youth, one dozen music montages that give a respite from the banal exchanges between the leads and an unapologetically happy ending to keep the target audience appeased.
 Image from IBN-Live Alia Bhatt and Arjun Kapoor in the film. Image from IBN-Live This is supposed to be a feel good family entertainer, and on that front 2 States is targeted towards its audience with an ultra precision sniper. There’s plenty of dynamics between South vs North India, and daddy issues to keep the target audience on their tenterhooks. There is a ton of ladai-jhagda between the in-laws to pander to the cultural mismatch between Chennai and Delhi. But the observations are clichéd and simplistic, and there’s a paper-thin superficiality throughout which makes the film a Swiss cheese layer. There are key scenes where the guy impresses the girl’s parents, and vice versa. And there are key scenes where the cultural gaffes of both the South and North, like general pretentiousness and dowry are established. The latter is when you notice the slipshod tonal shifts that Verman employs while desperately aiming to pad the screenplay with every cliché under the sun. Thanks to the tonal shifts 2 States goes from light romance to simplistic social issue pandering with no consistency.We never really get to see the defining moments of the guy and the girl’s blossoming romance, which is both odd and silly because we never really care for them to remain together. Content detailing their love for one another is shown in music-montages, yet huge chunks of running time are dedicated to emotional wrangling. It is also jarring to see the film dabble in broad, obvious, and unflattering caricatures of its characters. I'm not saying Delhi-ites and Madrasis have no sense of humour, but if you're going to bomb us with stereotypes it's probably better to do so with some creativity or wit. Banana leaf and Punjabi daroo offer a few stray giggles but 2 States never comes close to being creative or witty. It's just a goofy impersonation of both cultures, not a classy roast of them. We’re also meant to take the melodrama as sincere and effective, but it just comes across as manipulative. So the equation is this - spend one hour mildly chuckling as limp campus romance between Arjun and Alia is paraded, and then spendthe other one and a half hour getting weepy-eyed as Arjun and Alia try to turn a hallmark greeting card into something with actual heart and soul. And the actors certainly don't help matters. Aside from Alia’s occasionally fiery performance there's the virtually complete ineptitude of ArjunKapoor’s puppy faced good guy shtick. The bloke just doesn’t emote in any scene, and can neither pull off the charming lover nor the frustrated punching bag stuck between both sides. Alia’s role here is not as well defined as in Highway, and her performance clearly shows that she’s a director’s actor. She does the occasional South twang, thankfully without overdramatising it, but spends most of the film doing a cutesy smile. She does the cutesy smile even in a scene where her fiancé tells her the biggest emotional conflict of his life. Weird. The parents are actually sort of good – Shiv Kumar and Revathy are subtly effective, despite being stereotypical. There’s also Amrita Singh’s stereotypical North Indian mother, and the stereotypical North Indian drunkard father played by Ronit Roy. The latter manages to smoke everyone else out of every single scene, mostly because he’s played the character for the third time in a row. Dharma’s trademark visual style and a few moments of comedy aside, 2 States is mostly a chore and periodically infuriating. The filmmakers had a chance to go against all odds and make a classic and they blew it. Critical appreciation might not be the film’s target anyway, because it’s been marketed well enough to make a truckload of money.

6.TARZAN 3D


Tarzan and Jane Porter face a mercenary army dispatched by the evil CEO of Greystoke Energies, a man who took over the company from Tarzan's parents, after they died in a plane crash. 

1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாப் படத்தையும் சொல்லிவிட்டீர்கள்....

தெனாலி ராமன் பார்க்க வேண்டும்...