Saturday, April 26, 2014

அருமையான சாம்பார் வழங்கும் ஆட்சி எது ?

1.நாடு முழுவதும் மோடி அலை எதுவும் வீசவில்லை: கி.வீரமணி...# இந்த அரிய கண்டுபிடிப்பை பீச் ல வாக்கிங் போகும்போது கடல் அலையைப்பார்த்து?=================
2 இந்தியாக்கு வருகிறது பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டு.# இதை எப்டி நாங்க கண்டுபிடிக்க? பிரின்ட்டட் இன் பாகிஸ்தான் னு இருக்குமா?
================
3 முதலாளிகளின் எடுபிடி மோடி: சிதம்பரம் தாக்கு # நீங்க தொழிலாளிகளின் , சிறு வியாபாரிகளின் கெடுபுடி ஆச்சே?
===================
4 அமேதி தொகுதி நடிகர்களை பார்த்து வெறுத்துவிட்டது: குமார் விஸ்வாஸ்.# கிளாமர் நடிகைகளை களம் இறக்கினா வாக்காள்னுக்கு கிளுகிளுப்பா இருக்கும்
===================
5 BJP க்குஅழிவுக்காலம் ஆரம்பம்: காங் # உங்க கப்பல் கவுந்துட்டிருக்கு.அதைக்காப்பாத்த வழியைப்பார்க்காம மேலே பறக்கும் விமானத்தைகுறை சொன்னா?
================6 ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் டெல்லியில் ஆட்சியை பிடிப்போம்: மம்தா சூளுரை..# =கிடைச்சவரை லாபம் ,சுருட்டிய வரை போகம்-இதானே?
================7 BJPஆட்சிக்கு வந்தால் 180 நாளில்் விலைவாசி குறைக்கப்படும்: ராஜ்நாத் சிங்.. # 6 மாதம் கழித்து ஏன் குறைக்க முடியலை?னு க்சரணம் சொல்லப்படும்
===================
8 ஜெ தமிழகத்திலேயே இருக்க எனக்கு வாக்களியுங்கள்: தயாநிதி மாறன். # அவர் கொடநாட்லயே இருக்க நாங்க யாருக்கு வாக்களிக்க?
=================
9 தொழில் புரிவோருக்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது: ஜெ # யுபிஎஸ்,எமெர்ஜென்சி லைட், மெழுகுவர்த்தி தொழில் தானே?
===============
10 அஜித் ன் புதிய படத்தில் அர்விந்த்சாமி யும் ,அருண் விஜய்யும் வில்லன் # இவங்க லேட்டஸ்ட் ஹிட்ஸ் முறையே கடல் ,மாஞ்சா வேலு. ரைட்டு ;-))
===================
11 நான் சொல்றேன் அம்மா பிரதமர் ஆகிட்டாங்க -ராமராஜன் // நான் சொல்றேன்.நீங்க பகல் கனவு கண்டு பிதற்றிட்டு இருக்கீங்க
================
12 காங்கிரஸ் தலைவர்களிடம் நிஜம் இருக்கிறது! - கார்த்திக் # தேர்தல் முடிவு வரட்டும்.நிஜார் கூட மிஞ்சாதுங்க்ணா
=====================13 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கிறோம்! - கார்த்திக் # வெச்சுக்கவா உன்னை மட்டும் கட்சிக்குள்ள? சத்தியமா கூட்டணியில் யாருமில்ல
==================14 பேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்கு ரத்தை எதிர்த்த மத்திய அரசின் மனு தள்ளுபடி! # இது தான் காங்கிரஸ்க்கு ஏப்ரல் fool day==============
15 நான் பலவீனமான பிரதமரல்ல என்பதை விரைவில் நிரூபிப்பேன்! - மன்மோகன்சிங்.#. ஜிம் முக்குப்போயா?காம்ப்ளான் ,பூஸ்ட் குடிச்சா ?==================


16 விஷாலுடன் மட்டுமல்ல.எந்த ஹீரோவுக்கும் லிப் கிஸ் குடுத்து நடிக்கத்தயார் - லட்சுமிமேனன் # ஆஹா! என்ன ஒரு லட்சியம்.இனி லட்சுமிகடாட்சம் தான்


======================


17 வைகோவுக்கு வாக்கு கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது: விஜயகாந்த் # பம்பரத்தை மறக்காத சின்னக்கவுண்டருக்கு குடை பிடிப்போம்


=================


18 அருமையான சாம்பார் வழங்கும் ஆட்சி அம்மா ஆட்சிதான்-ராமராஜன். # மின்சாரத்தை ஒழுங்கா வழங்கச்சொல்லுங்க முதல்ல.சட்னி், சாம்பார் நாங்களே வெச்சுக்குவோம்
==================

19 ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பிடித்துக்கொடுங்கள் -செய்தி # பிடிச்சுக்குடுத்தா எவ்ளவ் சன்மானம் தருவீங்க்னு கேட்டிருப்பானே மறத்தமிழன்


=================


20 மோடியை தோற்கடிப்பதே என் லட்சியம்: கெஜ்ரிவால் ஆவேசம். # தொகுதி மக்களுக்கு நல்லது பண்ணிடாதீங்க.உங்க பர்சனல் பழியைதீர்த்துக்குங்க.போதும்


==========================

0 comments: