Monday, April 28, 2014

தருமபுரியில் 81% வாக்குப்பதிவின் பின்னணி. என்ன?

தருமபுரியில் 81% வாக்குப்பதிவின் பின்னணி.. பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் 

 

தமிழகத்தில் தருமபுரி நாடாளு மன்ற தொகுதியில்தான் அதிக பட்சமாக தோராயமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 


பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரைக் கொண்ட தருமபுரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததன் பின்னணி யில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. 


காங்கிரஸ் மீதான வெறுப்பு, மோடி குறித்த எதிர்பார்ப்பு, புதிய வாக்காளர்கள், தருமபுரி மாவட்டத்தில் நடந்த கலவர சம்பவங்களின் தாக்கம், கட்சியி னரின் தீவிர பிரச்சார பணிகள், ஆளும் தரப்பு இறுதி நேரத்தில் வாக்காளர்களை கவனித்த விதம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் தருமபுரி தொகுதியின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதாக கருதப்படு கிறது. 


மத்திய அரசு மீதான வெறுப்பு 

 
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீதான ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒருவித கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.


பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் தருமபுரி மாவட்ட மக்கள் பின்தங்கியிருந்தாலும், அரசியல் நடவடிக்கைகளை ஓரளவு உற்று கவனிப்பவர்களா கவே இருந்துள்ளனர். 


எனவே தங்கள் வெறுப்பை பதிவு செய்யும் வாய்ப்பாக வாக் காளர்கள் தேர்தலை நினைத்த தால் ஏற்பட்ட விளைவும் இங்கு வாக்குப்பதிவு அதிகரிக்கக் காரணமாகக் கருதப்படுகிறது. 


மோடி மீதான எதிர்பார்ப்பு 

 
ஊடக விளம்பரங்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பங்கு, கூட்டணி கட்சியினர் தொகுதி முழுக்க மோடி மற்றும் குஜராத் மாநிலம் குறித்து பிரச்சாரத்தில் முன்வைத்த தகவல்கள் ஆகிய வையும் மோடி மீது வாக்காளர் களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த முறை தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளும் புதிய வாக்காளர்கள் இடையேயும் மத்தியில் ஆட்சிமாற்றம் குறித்த சிந்தனைகள் வலுவாக இடம் பெற்றிருந்ததும் வாக்குப்பதிவு அதிகரிப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. 


கலவர சம்பவங்களின் தாக்கம் 

 
தருமபுரியில் கடந்த 2012-ம் ஆண்டு காதல் கலப்பு திருமண விவகாரத்தில் 3 கிராமங்கள் கொளுத்தப்பட்டன. 


இது இரு பெரும் சமூகத்தினரி டமும் பரஸ்பரம் நீருபூத்த நெருப் பாக வெறுப்புணர்வை ஏற் படுத்தி வைத்திருந்தது. வெளிப்படையாக தெரியா விட்டாலும், இரு சமூகத்தினரும் இப்பிரச்சினையை சவாலாக எடுத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டன. 


தேர்தலுக்கு இரண்டு நாட் களுக்கு முன்னதாக கட்சிகள் மூலம் தொகுதியின் 70 சதவீத வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததும் வாக்குப்பதிவு அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது. 


தருமபுரியைச் சேர்ந்த கல்வி யாளர் ஹரிகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், 2011ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தருமபுரி மாவட்டம் கல்வியில் தமிழக அளவில் 32வது இடத்தில் இருந்தது. 


தொழில்வாய்ப்பு, பொருளா தார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை குறித்த ஏக்கம் தொகுதி மக்களிடம் பெரிய அளவில் இருந்தது. அந்த முன்னேற்றத்தை விரும்பும் மக்களின் தாக்கம்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்றார்.  • subramanian  
  தர்மபுரி தர்மர் போல வாக்களித்து இருக்கிறார்கள் பொது மக்கள்.கடமை தவறாத நல்ல மக்கள்.அவர்கள் தொகுதி தமிழ்நாட்டில் நம்பர் ஒன்னாக வாழ்த்துகிறேன்.
  about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • ssm  from Hyderabad
  ஹா ஹா கட்டுரையாளர் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் மிக அற்புதமாக முடிச்சு போடுகிறார் காசு பணம் துட்டு money money மற்றும் ஜாதிய வெறிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு voting இது என்பது சிந்திக்க தெரிந்த எல்லோருக்கும் நன்றாக தெரியும் ஆகவே காதுல பூ சுற்ற முயற்சிக்க வேண்டாம்
  about a month ago ·   (1) ·   (1) ·  reply (0)
 • indiran  from Vellore
  வாக்குப்பதிவு கூடியதர்கு காரணம் ஒரு சமூகத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்டுவதற்கு ஜனநாயகவாதிகள் ஒருங்கிணைந்து மே ற்கொண்ட நடவடிக்கையே.
  2 months ago ·   (4) ·   (0) ·  reply (0)
  Er.Babu/Qatar   Up Voted
 • திருநாவுக்கரசு  
  தயவு செய்து பின்தங்கிய மாவட்டம் என்று குறுப்பிடதீர்கள் முறையான கல்வி கட்டமைப்பை உருவாக்காத அரசாங்கமே பின்தங்கிய அரசாங்கம் ஓட்டு போட பயந்த சென்னை வாசிகளே பின்தங்கியவர்கள்
  2 months ago ·   (19) ·   (0) ·  reply (0)
 • Durai  
  dharmapuriyil nadandha kalavaramthan idharku karanam.
  2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • D.Thirumalai kumar  from Mumbai
  மத்திய அரசின் வேலை என்ன ,மாநில அரசின் வேலை என்ன என்று theriyatha makkal vendumanal இந்த பொய் கருத்தை நம்புவர்.
  2 months ago ·   (4) ·   (0) ·  reply (0)
  rafi   Up Voted
 • மணி  
  அன்புமணிக்கு ஆதரவாக விழுந்த வன்னியர் வாக்குகளும் எதிராக விழுந்த தலித் வாக்குகள் தான் வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம்.
  2 months ago ·   (3) ·   (0) ·  reply (0)
 • மணி  
  இதில் என்ன ஆச்சரியம். மோடி அலை என்பது ஒரு பச்சை பொய். அன்புமணிக்கு ஆதரவான மற்றம் எதிர்ப்பு ஓட்டுகளாள் தான் வாக்கு பதிவு அதிகரித்துள்ளது.
  2 months ago ·   (2) ·   (0) ·  reply (0)
 • Venkat Venky  
  எங்க மாவட்டம் கல்வி அறிவில் வேண்டுமானால் பின் தங்கி இருக்கலாம்... ஆனால் வாக்கு அளித்ததில் தமிழ் நாட்டிலே முதல் மாவட்டம்.. இது மற்ற கல்வி அறிவு படைத்த மாவட்டங்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க போகிறது இந்த மாவட்டத்தை சேர்த்தவன் என்பதால் நான் பெருமை கொள்கிறேன்......
  2 months ago ·   (2) ·   (1) ·  reply (0)
 • Praveen Kumar Managing Director at Business man from Kumar
  சாதி பிரச்சன இருத்தாலும்..பணம் தான் மக்களை ஓட்டு சாவடி நோக்கி வற வச்சது
  2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • Venkat Venky  
  தருமபுரியில் பணம் கொடுத்த அரசியல் கட்சியினர்.... வாக்காளர் அனைவரையும் கட்டயமாக வோட்டு போட வைத்தனர்....
  2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • samy  from Singapore
  ////மத்திய அரசு மீதான வெறுப்பு/////மோடி மீதான எதிர்பார்ப்பு/////இந்த நிருபருக்கு என்ன ஆகி விட்டது?. இது உண்மையாக இருந்தால் மற்ற எல்லா தொகுதியிலும் 80% தாண்டி இருக்க வேண்டும். தமிழகம் முழுவதுமே மொத்தமே 73% தான். தருமபுரியில் மட்டும் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. தருமபுரியில் அன்புமணிக்காக விழுத்த அதரவு ஓட்டும், எதிரான ஓட்டும் தான் வாக்கு சதவீதம் அதிகரித்ததுக்கு காரணம். அப்படி இருக்கையில் மோடி அலை என்பது வீண் கற்பனை.
  2 months ago ·   (15) ·   (3) ·  reply (0)
  Antony Thirese · ssm   Up Voted
 • R.M.Manoharan  from San Ramon
  தருமபுரி தொகுதியில் 2 நாட்களுக்கு முன்னதாகவே 70% வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அமைக்கப்பட்ட 7000 குழுக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். பணம் பட்டுவாடா தர்மபுரியில் மட்டும் நடந்ததா அல்லது அனைத்து தொகுதிகளிலும் நடந்ததா? தேர்தல் அதிகாரியின் கறார் நடவடிக்கை வெறும் கண் துடைப்புதானா? திட்டமிட்டபடியே ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் நடந்துவருகிறது என்று எதிர் கட்சிகள் சொன்னவை எல்லாம் உண்மைதானா? சும்மா ஒப்புக்காக தமிழ் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டதா? ஆர்.எம்.மனோகரன்
  2 months ago ·   (0) ·   (1) ·  reply (1)
  • Arivarasu  from Chennai
   அனைத்து தொகுதியிலுமே பண பட்டுவாடா நடந்தது...ஆளும் கட்சி சார்பில் 200 உம , முக்கிய எதிர் கட்சி சார்பில் 50 உம பட்டுவாடா செய்யப்பட்டது...தர்மபுரியில் ஒரு ஓட்டுக்கு 1000 வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல்....
   2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • Mettur San M C R Technical Engineer at Lotus News 
  ஜாதி என்னும் ஆயுதம் முலம் பட்டை திட்டி விட பட்டு உள்ளது அவர்கள் ஜாதியல்.ஒரு ஆய்வு செய்து பார்த்தல் சிலர் அணைத்து கட்சி இருந்து விலகி பா.ம.க இணைத்து இருப்பார்கள் மோடி தொலைகாட்சி , வலைத்தளம் மாயா பிம்ம்மம் எதுவே அன்புமணி வெற்றிக்கு காரணமாக அமைய போகிறது......
  2 months ago ·   (2) ·   (0) ·  reply (0)
 • haroon  
  நான் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவன்தான்.ஆதியிலிருந்தே வன்னியர் வகுப்பை சேர்ந்தவர்கள்தான் எந்த கட்சியில் நின்றாலும் வெல்ல முடியும்.ஆகவே ஜாதிய வோட்டும்,சமிபத்தில் நடந்த கலவரத்தின் காரணமாக வன்னியருக்கு எதிராக விழுந்த தலித்துகளின் வோட்டுமே சதவீத அதிகரிப்புக்கு காரணமாக இருக்க முடியும்.பண பட்டுவாடா மாமுலான ஒன்றுதான்.
  2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • சூர்யா  from Dharmapuri
  அன்புமணி அவர்களுக்கு அளித்த வாக்குகள்தான் அதிகம்...
  2 months ago ·   (2) ·   (1) ·  reply (0)
 • சூர்யா  from Dharmapuri
  தர்மபுரியில் அன்புமணி அவர்களுக்கு அளித்த வாக்கு தான் அதிகம்....
  2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • Sundaram  
  தர்மபுரி திராவிடம், தேசியம் ,சமுக உணர்வு, இடதுசார்பு மனப்போக்கு இவைகள் காரணமாக இன்வூர் மக்கள் பொதுவாகவே அரசியல் உணர்வு கொண்டவர்கள் மருத்துவ கல்லுரிஇகு வித்திட்டவர் மருத்துவர் ஐயா. பொறியில் கல்லுரி, வர அம்மா காரணம் ரயில் போகுவரதுகளில் தருமபுரி முக்யத்வம் பெற திமுக காரணம் .அமைதியான சகலமக்களும் சமத்துவம் பேணும் தருமபுரி அதிக வாக்கு பதிவில் முக்கியத்வம் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் அள்ளிகாமல் சமுக நல்லின்னக்கம் பேணும் ஆதியமான், ஔவையார் வாழ்ந்து சிறந்த தருமபுரி ஆகும் .அதிக ஓட்டுபதிவு வியப்பு இல்லை ..மீடியா ,அரசு, காவல் துறையினர் பாரட்டுக்கு உரியவர்கள் -சுந்தரம்
  2 months ago ·   (1) ·   (2) ·  reply (0)
  rambo   Down Voted
 • பார்த்திபன்  from New Delhi
  மோடி மீதான எதிர்பார்ப்பு என்பது பச்சை அயோக்கியத்தனம்
  2 months ago ·   (53) ·   (32) ·  reply (1)
  niki  · இனியன்   Up Voted
  Mannan Mannen  Down Voted
  • Tamilian  from Chennai
   தமிழகத்திலும் மோடியிடம் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது உண்மை.
   2 months ago ·   (0) ·   (1) ·  reply (0)
 • sekar  
  கல்வி மற்றும் அரசு பணியில் இன்று அதிகம் முன்னிலையில் உள்ள மாவட்டம் தர்மபுரி பாருங்கள் தெரியும்
  2 months ago ·   (3) ·   (0) ·  reply (0)
 • கார்த்திக்  
  இந்த அளவு வாக்குபதிவுக்கு காரணம் வன்னியர்கள் ஆர்வம்தான், தருமபுரி தொகுதியில் வன்னியர்கள் தொகை அதிகம் என்பதால் வாக்குபதிவு 80% விழுகாடு அடைந்தது. -------------------- கார்த்திகேயன் - வேலூர்
  2 months ago ·   (11) ·   (4) ·  reply (0)
  Logan   Down Voted
 • S Murugesan  from New Delhi
  தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டதும், சாதிக் கலவரத்தின் தாக்கம் காரணமாக இரு பெரும் சமூகத்தினரின் அதிகப்படியான பங்களிப்பும் பிரதானக் காரணம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் இடைவிடாத வாக்கு சேகரிப்பு விதமும் வாக்குப் பதிவு அதிகரிக்க காரணமாக இருந்துள்ளது. எஸ்.முருகேசன், ஹைதராபாத்
  2 months ago ·   (7) ·   (1) ·  reply (0)
  விமலா   Up Voted
 • Jeyam Ramachandran  
  முக்கிய காரணம் பணம் தான் .
  2 months ago ·   (6) ·   (0) ·  reply (0)
 • N krishnamoorthy  from Thiruvarur
  தஞ்சையைப் போல அதிக்கரிகளின் ஒத்துழைப்பு இருந்ததா?
  2 months ago ·   (1) ·   (1) ·  reply (0)
 • N krishnamoorthy  from Thiruvarur
  தஞ்சையைப் போல அதிக்கரிகளின் ஒத்துழைப்பு இருந்ததா?
  2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • Mookiah  from Karaikal
  தயவுசெய்து கல்வியாளர்களிடம் கருத்துகேட்காதீர்கள் அவர்கள்எதிலுமேயதார்த்தத்தை பிரதிபலிக்கமாட்டார்கள் அவர்கள் கற்றல் குறைபாடுள்ளவர்கள்
  2 months ago ·   (19) ·   (1) ·  reply (1)
  kannan   Up Voted
  Harikrishnan   Down Voted
  • Harikrishnan  
   பல்வேறு அரசியல், சமூக காரணங்கள் பிரதானமாக இருக்கின்றது. அதனை நாங்கள் மறுக்கவில்லை. இருந்தாலும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறித்த ஏக்கமும் மக்களிடம் உள்ளது. 2011வது ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரப்படி தருமபுரி மாவட்டம் கல்வியில் 32வது இடம்(கடைசி இடம்) வகிக்கிறது. எங்கள் மாவட்டத்தில் மேற்கண்ட பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் நாங்கள், எங்களைப்போல ஒடுக்கப்பட்ட மாவட்ட மக்களின் குரல்வளையை நசுக்கவும், இருக்கவும் முயற்சிக்காதீர் தோழரே...
   2 months ago ·   (3) ·   (0) ·  reply (0)
   Harikrishnan   Up Voted
 • விமலா  from Salem
  பல வெளிபடையாக சொல்லப்பட முடியாத காரணங்கள் உள்ளன- அது சாதிய சக்திகளின் மௌன காரியங்கள்- அதை புரிந்து கொள்ள முடியும் -- ஆனால் விரிவாக பேச முடியாது- இரண்டு சாதிகளின் மௌன போராட்டம்- அப்படியே இருக்கட்டும் --விமலா வித்யா
  2 months ago ·   (56) ·   (3) ·  reply (2)
  Abdul Lukman · Mannan Mannen · kannan  · Siva  · ESWARAMOORTHI .  Up Voted
  chandrasekar chandra  Down Voted
  • SHAN  from Karaikal
   என்ன சொல்ல வரிங்க?
   2 months ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Kalaimani Muthusamy Owner at Civil Engineering 
   இதில் பெரியதாக புரிந்து கொள்ள என்ன இருக்கு ஊர் அறிதந்த ரகசியம் நாளை விடை தெரியும்


   நன்றி - த இந்து

0 comments: