Monday, April 28, 2014

இளைய ராஜா ஒரு கோடியை டச் பண்ண முடியாது-னு யார் சொன்னது?

1. கை சின்னத்தில் போட்டியிட்டுத் தோல்வி அடைவதும் பெருமைக்குரிய விஷயம்தான்:-GKவாசன் # 40 தொகுதிலயும் பெருமைக்குரிய விசயம் நடக்க வாழ்த்து்================
2 PM ஆகும் வாய்ப்பை எட்டி உதைச்சுட்டார் ஜெ-தா.பாண்டியன் # அதிமுக அமைச்சர்களுக்கும் அதிர்ஷ்ட தேவதைக்கும் கூட வித்யாசம் தெரியாம போயிடுச்சா?
====================
3 கருணாநிதி கொடுத்த டிவி பெண்களை அழவைக்கிறது… நாஞ்சில் சம்பத் # ஜெ தான் கரன்ட்டை கட் பண்ணிடறாரே.அதான் சீரியல் பாக்கமுடிலைன்னு அழறாங்க போல
================
4 ஓ.பி.எஸ் ஒரு பக்கோடா பார்ட்டி... நாங்களும் அனுபவப்பட்டிருக்கிறோம்: வைகோ # துக்கடா பார்ட்டினு நாங்க நினைச்சது தப்போ?
==================5 ஒரு கன்னியும் 3 களவாணிகளும் படத்தைப்பார்த்து விஜய் வானளாவப்புகழ்ந்தார் - # அடுத்த பட டைரக்டர் படம், தலைவா வை வேற புகழந்தாரு,தானிக்குதீனி
=====================நள்ளிரவிலும் வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரிக்கலாம் - தேர்தல் ஆணையம் # கதவைத்தட்டிட்டு வாங்கய்யா , தமிழன் ஏடாகூடமா இருப்பான்
=======================
சொன்னத செய்யல.. பெண்டு எடுத்துருவேன்...!- தே.மு.தி.க. வேட்பாளரை கலாய்த்த விஜயகாந்த் # ம்க்கும், கலாய்ச்சுட்டாராம் , ஹே ஹே ஹே 

=======================
செலவுக் கணக்கு உச்சவரம்பை மீறினால் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் செல்லாது: தமிழகத் தேர்தல் தலைவர் பிரவீண்# ஒரு பய கூட ஜெயிக்க முடியாதா?
==================வங்கி கடன் வாங்க வந்தவர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த பொதுத்துறை வங்கி  மேலாளர் மீது வழக்கு # லோன் குடுன்னா லோன் வாங்கி இருக்காரு,ஷப்பா

=======================
10 மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் ரூ.1 லட்சம் பணம் திருட்டு. # கழக உடன் பிறப்பாத்தான் இருக்கும்

========================
11 காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மோடி  # சோனியாகாந்தி , பிரியங்காகாந்தி, மேனகாகாந்தி எல்லாம் சேஃப்டியாத்தானே இருக்காக
=====================
12 எம்.எச்.370: கருப்புப் பெட்டியை கடலுக்கு அடியில் தேடும் பணி தொடங்கியது # கல்யாணப்பொண்ணையே தொலைச்சாச்சாம்,நெத்திச்சுட்டியைத்தேடுனாங்களாம்

==========================
13 எம்மதமும் சம்மதம் என்று சொல்வது காங்கிரஸ் மட்டுமே: ஜி.கே.வாசன் # அதாவது  ஓட்டுப்போடும் இளிச்சவாயன் எந்த மதமா இருந்தாலும் சம்மதம் ?

========================
14 SBகணக்கில் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் - தனியார் வங்கிகள் # ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் லயே மைனஸ்ல வெச்சிருப்பான் தமிழன்

======================
15 குஜராத்-ன் வெண் தாடி வேந்தர்  மோடி - விஜயகாந்த் # அப்போ ராகுல் கறுப்புத்தாடி கார்த்திக்கா?என்ன கேப்டன் கலர் கலரா ரீல் வீடறீங்க?
==========================
16 என்னுடைய தேர்தல் அறிக்கையை பலர்காப்பியடித்துவிட்டனர்! - கார்த்திக்  # காப்பி அடிக்கறதே தப்பு, போயும் போயும் உங்களுதைக்காப்பி அடிச்சா!


==============

==========================
17 இன்று முதல் இளையராஜா ஃபேன் கிளப்... ஒரு கோடி உறுப்பினர்களுடன் ஆரம்பம்!  # சம்பளத்துலதான் கோடியை டச் பண்ணமுடியலை, இதுலயாவது.....====================


18  ஜெ' ஜாதகத்தில் என்ன உள்ளது ? யாருக்காவது  தெரியுமா? - ஆதீனம்  # இருங்க, கரண்ட் வந்ததும் பார்த்துச்சொல்றேன்=======================


19  கட்சியினர் ஒவ்வொருவரும்,ஒரு ஓட்டு ஒவ்வொருவராலும் ஒரு ஓட்டு'என்பதை மறவாமல் பணியாற்ற வேண்டும்.-கருணாநிதி # சூசகமா கள்ள ஓட்டுப்போடுன்றாரா?==========================


20 வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் படத்தை தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பது ஏன்? # கேப்டன் கைங்கர்யமாக்கூட இருக்கும்
================================

0 comments: