Thursday, April 24, 2014

ஜெயா டி வி ல சீமானாட ,மயிலாட!!!

1. தொண்டையில் ரத்தக்கசிவால் சரத்குமார் பிரச்சாரம் நிறுத்தம்# கத்தி ப்பேசுனா ஆபத்து! ரத்தத்தின் ரத்தமே! உணர்ச்சிவசப்படுவது குத்தமே!==================
2 அம்மா ஆட்சிக்கு வந்தா ஹெலிஹாப்டர்ல போய் மீன் பிடிக்கலாம்-விந்தியா# விண்மீன் பிடிக்க வரும் WINமீனே! பேனர் ரெடி
==================
3 தன்னடக்கம் கொண்டவர் அம்மா-குயிலி# அதிமுக கட்சியே தனக்குள் அடக்கம் என நினைக்கும் செருக்கு தான் தன் அடக்கமா?
=====================
4 தமிழகத்தில் அமைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணியே-GK வாசன் # கூட்டணி அமைக்க நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கலைன்னா இப்டி மத்தவங்களைத்தூற்றனும்
================
5 நடிகை ராக்கி சாவந்த்தின் புதிய கட்சியின் பெயர் ‘ராஷ்டிரிய ஆம்’.. # கட்சி ஆபீசுக்குப்போனா தினசரி ஒரு குத்தாட்டம் ஆடி மகிழ்விப்பாரா?
===================
6 மற்ற கட்சிகளுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காதீர்கள்-ஜெ# ஓக்கே மேடம்.உங்க கட்சிக்கே வாக்களித்து வீணாப்போறோம்
====================
7 பெண்கள் கம்ப்யூட்டர் படித்தால் கெட்டுவிடுவார்கள்-கொங்கு ஈஸ்வரன்# ஈஸ்வரோ ரட்சித்.
====================
8 அம்மா கொடுத்த ஆடு,மாடுகள் குட்டி போடும். கலைஞர் கொடுத்த TVி குட்டி போடுமா ? -ராமராஜன் # F tvஆன் பண்ணா ஏகப்பட்ட குட்டிங்க வாக் போகும்ங்க்ணா===============
9 இந்தி சரளமாக தெரிந்தால் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருப்பேன்: ப.சி#"இங்க்லீஷ் தெரிஞ்சிருந்தா ஒபாமாவை எதிர்த்துப்போட்டி இட்டிருப்பார் போல
================

10 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல்
#,ஏப்ரல் பூல் தினத்தை இப்டிக்கொண்டாறாங்க போல


===============


11 நான் ஒரு பாரம்பரியமான மட சாமி... மதுரை ஆதீனம்! # நல்ல வேளை.மடச்சாம்பிராணினு சொல்லலை


===================

12 ஜெ.இனிமே புரட்சித்தலைவி இல்லை வறட்சித்தலைவி- ஸ்டாலின் # எப்படியோ உங்க வாயால புரட்சித்தலைவி னு உச்சரிச்ட்டீங்க


-----------------


13 நான் உலகம் பூரா சுத்தி பார்த்திருக்கேன் -விஜயகாந்த்# தீபாவளி வரை வெயிட் பண்ணுங்கண்ணா.உலகம் பூரா கத்தி பார்க்கலாம் - விஜய்


===================


14 சகாப்தம் படத்தில் மகனுடன் களமிறங்கும் விஜயகாந்த்! # ஒரே படத்துல 2 கேப்டனா? கப்பல் கவிழாம இருந்தா சரி


================


15 நான் உலகம் பூரா சுத்தி பார்த்திருக்கேன் -விஜயகாந்த்# எல்லா ஊர்ல யும் சுத்தி(யல்) ஒரே மாதிரி இருந்துதுங்களா? வெவ்வேற டிசைன்ல இருந்ததா?


==================


16 இனி அரசியல் இல்லை: நடிகர் வடிவேலு புது முடிவு.. # தெனாலிராமன் ஊத்திக்கிட்டா இனி சினிமா இல்லைம்பாரா? ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதையா?


==================


17 ஹெலிஹாப்டர்ல அம்மா ஸ்டைலா வர்றதை பார்த்து எல்லாருக்கும் பொறாமை-நிர்மலா# அநேகமா இவங்களுக்குத்தான் பொறாமை போல


===================

18 கல்விசேவையை போல அரசியல்சேவை செய்ய வந்திருக்கிறேன்-பச்சமுத்து# அதையே ஒழுங்காப்பாருங்கண்ணா.ஏகப்பட்ட புகாரு அதுலயே


==================


19 அதிமுகவுக்கு ஆதரவாக நான் களமாட போகிறேன் -சீமான்# ஜெயா டி வி ல சீமானாட ,மயிலாட நிகழ்ச்சி நடத்துவீங்களா?


================


20 மோடியை மக்கள் ஏற்க மாட்டார்கள்: க.அன்பழகன்... # உங்க தானைத்தலைவரின் மக்களில் மூத்தவர் அழகிரியே ஏத்துக்கிட்டாரே?


==========================


0 comments: