Monday, April 14, 2014

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்

1. ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வேணும் என்பதால்தான் நிமிர்ந்து நில் படம் நடிச்சேன்! - ஜெயம் ரவி # அந்தப்படத்துல சமுத்திரக்கனி வசனம் தானே ஹீரோ?


==================

2 2ஜி ஊழல் குறித்து பேசுவதை ஜெ. நிறுத்த வேண்டும் - மு.க # சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிப்பேசுவதை நீங்க நிறுத்தனுமாம்.தானிக்குதீனி=================


கம்யூனிஸ்ட்டுகளை
ஜெ ஏமாற்றிவிட்டார் EVKS் இளங்கோவன் புகார்# ஒன்று பெற்றால் ஒளிமயம்னுஜெ சொன்னாரு.சண்டை வேணாம்னா 2னு இவங்க சொன்னாங்க


====================

4 கொடுங்கோல் ஆட்சியை அகற்றுங்கள்… சங்கரன்கோவிலில் ஜெ.பிரச்சாரம் # திமுக ல சேர்ந்துட்டாரா? சேம் சைடு கோல் போடறாரு?


=====================


5 எல்லாரும் எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் - விஜயகாந்த் # எத்தனை மொழி தெரிஞ்சாலும் தெரியாட்டியும் அன்பா 
 பேசனும்.கோபப்படக்கூடாது


======================

6 திரிசா ஆக்சன் படங்களில் நடிக்க தீவிர முயற்சி. # டைட்டில் - ஒரு தரம் 2 தரம் 3 தரம் ?ஓ.அது auctionனா?


================


7


6 பாலா - சசிகுமார் இணையும் 'தாரை தப்பட்டை' # டைட்டில் தாறுமாறு.படம் எப்டியோ?


=================

7 ரிஷிகேஷ் போன நயன்தாரா… ருத்ராட்ச மாலை அணிந்து வழிபாடு # முற்றும் துறந்த முனிவர்கள் ,சாமியார்கள் எல்லாம் ஆட்டோகிராf கேட்டிருப்பாங்ளே?


==================

8 விவேகானந்தர் 100பேரை கேட்டார்,ஜெ 40 பேரை தான் கேட்கிறார்-பாத்திமாபாபு# அவர் கேட்டதெல்லாம் முத்து மாரி.இவர் கேட்பதெல்லாம் மொள்ளமாரி


===============


9 விருதுநகரில் என்னைத் தோற்கடிக்க ராஜபட்சே சதி : வைகோ.# லோக்கல் சதிக்கே வேலை இல்லை.ஆட்டோமேடிக்கா தோல்விதான்.இன்ட்டர்நேசனல் சதி எதுக்கு?


===================

10 ஊழல் பற்றி ஜெ. பேசுவது 'சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது: கருணாநிதி # சீனியரே கமுக்கமா இருக்கும்போது ஜுனியர் தையதக்கானு குதிக்கலாமா?


===============


11 திமுகவின் 2ஜி ஊழல் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது-ஜெயா# கேள்வி எல்லாம் ஜான்சி ராணி மாதிரி.நடந்துக்கறது வாய்தா ராணி மாதிரி


===============


12 தமிழ்நாட்டில் நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது - ப.சிதம்பரம் # விட்டா தமிழனுக்கு அண்ணாமலையைத்தான் தெரியும் ,இமயமலை தெரியாதும்பார் போல


================

13 குஜராத் சென்று பார்த்தேன்,எங்குமே மதுக்கடைகள் இல்லை-விஜயகாந்த்# அடடா! அப்புறம் எங்கே தான் வாங்குனீங்க?


================

14 திமுக,தலைவர்,தளபதி இல்லை என்றால் சந்தில்தான் நிற்க வேண்டும்-டி.ஆர்.பாலு # சந்துன்னா ட்விட்டர் சந்துங்களா? முட்டுச்சந்துங்களா?


=================


15 பாமக வராவிட்டால் அதற்குரிய இடங்களில் பாதியை அழகிரிக்குக் கொடுக்க பாஜக திட்டம்? # இதுக்காகவே டாக்டர் அய்யா ரிட்டர்ன் வந்துடுவாரு


==================


16   பாஜக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது-வைகோ # நானும் , என் சம்சாரமும் ஒத்துமையாதான் இருக்கோம்,ஆனா நான் திண்ணைல தான் படுத்துக்குவேன்கற மாதிரி===================


17 திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திற்கு'ரஜினி முருகன்' என டைட்டில் # குக்கூ ஹிட் ஆனா ராஜூ முருகன்?


===================


18 வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்தை கலாய்க்கும் காமெடி வேடத்தில்  ராஜகுமாரன். # ஓஹோ,இதுக்கு முன்னால சீரியஸ் ரோல் செஞ்சாரா?


=================


19 ஜெயலலிதா ஆட்சியில் தமிழக வளர்ச்சி 4.2% ஆக சரிவு, உருப்படுமா?: ராமதாஸ்  # பாமக் ஓட்டு வங்கியில் சரிவா? மொத்தமாவே நமக்கு 4% தானே?அய்யா?


=================


20   தமிழ் தமிழ் என கூறி மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி - கேப்டன் # ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணினு நீங்க சொல்லிட்டு இப்போ மாறிட்டீங்களே அது போல=====================

0 comments: