Sunday, April 06, 2014

விஷாலுக்கும் லட்சிமிமேணனுக்கு என்ன கசமுசா?

1. காங்கிரசுக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது-சிதம்பரம் # அப்படி நிஜமாவே  இருந்தா எங்க தலைவர் கலைஞர் உங்களை நட்டாத்துல விட்டிருக்கமாட்டாரே? =====================


சோனியாவை எதிர்த்து போட்டியிட மாட்டேன்: ஆம் ஆத்மி தலைவர் அறிவிப்பு # மோடியை எதிர்ப்பேங்கறீங்க, ஆனா லேடியை எதிர்க்க மாட்டேன்கறீங்க? ஏன்?


==================

\3 தலைவரே!BJPல கூட முஸ்லீம்க்கு போட்டி இட வாய்ப்பு தராங்க, நீங்க ஏன் DMKல பிராமணர் போட்டி இட வாய்ப்பு தர்லை? 


கலைஞர் - ஜெ ஒரு பிராமணர் தானே?


====================


4  தமிழகத்தில் கூட்டணிக்கு பாஜகதான் தலைமை வகிக்கும்: முரளிதர ராவ்#ரேஷன் கார்டுல குடும்பத்தலைவர் நாந்தானுங்க,ஆனா முடிவெல்லாம் சம்சாரம் கைலங்க=====================


செவ்வாய்கிரகத்தில் இருந்து வந்தவர்போல பேசுகிறார் ராகுல்-மோடி தாக்கு # அது தேவலை, சோனியா சனி கிரகத்துல இருந்து வந்தவர் போல் நடந்துப்பாங்க======================================


விஜயகாந்துடன் மேடை ஏறமாட்டேன் - டாக்டர் ராமதாஸ் # ஒரே வீட்ல குடி இருந்துட்டு சம்சாரம் கூட பேசாம எப்டி இருக்கறது டாக்டர்? ====================


 ஸ்டார் ஹோட்டலில் மீடியாவை பார்த்து நைசாக எஸ்கேப்பான ஆர்யா, அனுஷ்கா# இரண்டாம் உலகம் வெற்றியைக்கொண்டாட வந்திருப்பாங்க. =======================

நான் தேர்தலில் போட்டியிடவில்லை! - நாராயணசாமி # 15 நாள் டைம் எடுத்துக்குங்க.யோசிச்சு சொல்லுங்க உங்க முடிவை====================


9 எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் தமிழ்நாட்டில் உள்ளது-ஜெ#் வரிப்பணத்துல இலவசத்தை அள்ளி இரைச்சுட்டு அந்த சுமையை மக்கள் தலையில் மறைமுகமாய்====================


10 நான் மிகவும் நேர்மையானவன் - ராகுல்... # ஹமாம் சோப் போட்டுக்குளிக்கறீங்கங்கறதுக்காக ஓட்டெல்லாம் போட்முடியாதுங்க========================


11 பாஜக தேமுதிக பேச்சுவார்த்தை தொடர்கிறது#கேப்டன்: # சட்டுபுட்டுனு பேசி முடிங்க.அடுத்து சம்முவப்பாண்டி படத்தை வேற தயாரிக்கனும்=======================


12 இந்தியாவைகாப்பாற்றவேசிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்-திருமா # ப சிதம்பரம் தொகுதில ப சிதம்பரமே தோத்துடுவாரு.நீங்க ஏன் அங்கே நிக்கறீக?=====================


13 ஜேம்ஸ் கேமரூன் கோச்சடையான் பார்க்க இந்தியா வருகிறாராம் # படத்தைப்பார்த்து அப்டியே ஸ்டன் ஆகிடுவாரு.பேச்சே வராது பாருங்க=======================

14  நம்மை யாரும் அசைக்கவோ வீழ்த்தவோ முடியாது,- கருணாநிதி .# 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் ஏதோ ஒரு பணியுடன் இருக்கும் தலைவா! பணிவுடனும்!


==========================
15 BJP,DMDKகூட்டணியைபார்த்து, ஜெவிற்கும்,மு கவுக்கும் பயம்  - கேப்டன் # 12%க்கே இந்த தெனாவெட்டுன்னா  42% க்கும்,38% க்கும் எவ்ளவ் இருக்கும்?
======================
16 'நாளைக்குள் தொகுதிகளை முடிவு செய்யாவிட்டால்...': பா.ஜ.,வுக்கு விஜயகாந்தின் இறுதி கெடு # நாளை மறுநாளுக்குள் முடிவு செய்யுங்க, ஹி ஹி


==========================
17 மின்வசதி, தொழில்வளர்ச்சி ஆகியவை என் ஆட்சியில் அதிகரித்துள்ளது - ஜெ. #,எல்லாருக்கும் பிடிச்சதே " என்" ஆட்சி தான்
========================


18  கட்சியில் வாரிசுகளுக்கு சீட் இல்லை ஏன்: கருணாநிதி விளக்கம் # தன் சொந்தப்பையன்கள் ல ஒருவருக்கே சீட் தராத தியாகிய்யா எங்க தலைவரு========================19  . நீலகிரி மக்களுக்கு நான் எந்த வாக்குறுதியையும் அளிக்கப்போவதில்லை. -ஆ ராசா # ஓஹோ! அவங்க என்ன அந்தளவு ஏமாந்த சோணகிரிகளா? ========================20 நான் சிகப்பு மனிதன் ஷூட்டிங்க் கில் லட்சுமிமேனனைப்பார்க்க விஷால் என்னை விடவே இல்லை - விஷ்ணு # லாங்க் ஷாட்ல கூடவா பார்க்க முடியல? 
==========================

0 comments: