Sunday, April 27, 2014

நமீதா தென் சென்னையில் எம் பி ஆனா தமிழன் என்ன செய்வான்?

1. சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி # சோனியா அகர்வாலுக்கே 90 கோடி சொத்து இருக்கும்போது இதை ஒரு பய நம்பமாட்டான்


=================


2 வைகோவுக்கு வாக்கு கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது: விஜயகாந்த # நீங்க வாழ்க்கைல செஞ்ச உருப்படியான காரியம் என்ன?னு கேட்டா இதை சொல்லிக்கலாம்


=================


3 முதல்வர் ஜெயலலிதாவே பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா?: கருணாநிதி # 2 பேருமே தான் மன்னா !


=================


4 நாமக்கல் லில் நடக்கும் அதிமுக கூட்டத்துக்குப்போனா 2 வேளை சாப்பாடு ,200 ரூபா சேலை இலைவசம்.சாரி இலவசம் # செய்வீர்களா ?பயணம் செய்வீர்களா?


================


5 மனைவியை முறைப்படி விவாகரத்து செய்தார் ரஷ்ய அதிபர் புடின் # குழந்தைங்க இருந்தா டைவர்ஸ் பண்றதே முறை இல்லையே?


=====================


6 நான் ஏன் இந்த வயதில் 2வது முறை திருமணம் செய்தேன்?: ஊர்வசி விளக்கம் # அடுத்து ராதிகா மேடை ஏறி தன்னிலை விள்க்கம் அளிப்பார்


=====================
7நானும்வைகோவும் சிங்கங்கள்- விஜயகாந்த் # ஒரு காட்டுக்கு ஒரு சிங்கம் தான் இருக்கனும் அது நானாத்தான் இருக்கனும்னு டாக்டர் அய்யா சொல்வாரே?


===============


8 தி.மு.க.வுக்கு ஆதரவாக அலை வீசுகிறது: மு.க.ஸ்டாலின் # வெற்றிக்கரையைத்தொடாத ,தொட முடியாத அலைகள்


=================

9 ஜெ பிரதமரானால் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்: மதுரை ஆதீனம்.# முதல்ல இங்கே இருக்கும் மின் வெட்டை ஒழிக்க வழி பாருங்க


===============


10 இளைஞர்களுக்கு கவுரவமான வேலை-அதிக சம்பளம்: ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை.. # எல்லாரையும் விவசாயத்தொழிலுக்கு மாத்த முடியுமா?


===============


11காங்கிரஸ் இந்தியாவின் ஆன்மா-அதை அழிக்க முடியாது: ஜெய்ஸ்வால். # தீய சக்திகளை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது.பாடுபடனும்


================


12 ஆம் ஆத்மியிடம் பா.ஜ.க.-காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: கெஜ்ரிவால். # நாமளே நம்மைப்பத்தி பெருமையா சொல்லிக்கக்கூடாதுங்க்ணா்


=================


13 மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியது ஏன்?: கருணாநிதி விளக்கம் # வர இருக்கும் கொஞ்ச நஞ்ச ஓட்டை இழக்க விருமபாததால்

======================


14 காங்கிரஸ் தன்மானத்தோடு தேர்தலை சந்திக்கிறது-.வாசன் # கூட்டணிக்கு வேணாம்னு எல்லாக்கட்சியும் கழட்டி விட்ட அவமானத்தோடு னு சரியாச்சொல்லுங்க்ணா


===============

15 dmkவில் இருந்து மட்டும்தான் நீக்கமுடியும் மகன் இல்லையென நீக்கமுடியுமா?: அழகிரி #,இவரை யாராவது கடத்தி எலக்சன் முடியற வரை ஒளிச்சு வைங்கப்பா


=================

16 வைகோ - விஜயகாந்த் சந்திப்பு. # நெருப்புத்தமிழனும் ,கறுப்பு எம் ஜி ஆரும்


=================


17 ஜெயலலிதாவை நம்பி ஏமாந்தவர் வைகோ - விஜயகாந்த்
# இவர் மட்டும் காலம் பூரா ஒரே கூட்டணில இருந்துட்ட மாதிரி


=================


18 தென் சென்னையில் நடிகை நமீதாவை வேட்பாளராக களமிறக்க காங். பகீரத முயற்சி! # தமிழன் குத்து குத்துனு குத்தித்தள்ளிடமாட்டான்?


==================

19 ஆர்த்தி அதிமுகவில் கணவர் கணேஷ்கர் பாஜகவில் # 2 கட்சியும் தேர்தல் முடிவுக்குப்பின் இணையப்போகுதுனு இந்த இணை ஸிம்பாலிக்கா சொல்லுதோ?


==================


20 BJPஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் விவகாரத்திற்கு தீர்வு- உமாபாரதி # எந்த விவகாரமா இருந்தாலும் அதை ஒரு பொண்ணு தான் தொடங்கி வைக்கும்


=================

0 comments: